வாடகைத் தாய் - மற்றொரு கோணம்
தமிழ் சர்க்கிளின் சிந்தனையைத் தூண்டிய தாய்மையை விலை பேசும் உலகமயம் என்ற அருமையான ஒரு பதிவு.
அதன் மற்றொரு கோணம் தான் இது.
எந்த ஒரு நல்ல விளைவும், யார் கையில் போய்ச் சேருகிறதோ, அதைப் பொறுத்தே, அதன் பயன்பாடும், நன்மைகளும் தீமைகளும் அமைகின்றன. அதே போல் தான், குழந்தை பெற்றுக் கொள்ள வாய்ப்பில்லாத தம்பதியினருக்கு, ஒரு நல்வரமாக அமைய வேண்டிய ஒரு அறிவியல் படைப்பு, இன்று வியாபாரிகளின் கையில் போய்ச்சேர்ந்து, பெண்களைச் சுரண்டிப் பிழைக்கும் வஞ்சகர்களுக்கு ஒரு தொழில் வாய்ப்பாகப் போய்விட்டது.
வாடகைத் தாய், உண்மையான தேவையுள்ளவர்களுக்கு அனுமதிக்கப்பட வேண்டிய விஷயம். இப்பொழுதும், அநேகமாக குழந்தையற்ற தம்பதிகளே இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ள முனையும் பட்சத்தில், வாடகைத் தாய்கள் கண்டிப்பாகத் தேவைப்படத் தான் செய்வார்கள். ஆகையால், இதை முற்றிலுமாகத் தடுக்க வேண்டும் என முயல்வதை விட, அதை சரியான சட்ட திட்டங்களுடன் முறைப்படுத்த வேண்டும் என்பதே சரியாக இருக்கும்.
இப்பொழுது வாடகைத் தாய் என்று பெயரிட்டு அழைப்பதை, பழைய காலத்தில், இத்தேவைகளுக்காகத் திருமணமே செய்து கொண்டார்கள். ஆனால், அவ்வாறு செய்வதால், வாழ்நாள் முழுவதும், ஒரு பெண்ணிற்குத் தேவையான செலவுகள் அனைத்தையும் கொடுக்க வேண்டும், அத்துடன் அப்பெண்ணிற்குரிய சமூக அந்தஸ்தையும் கணவனே கொடுக்க வேண்டும். அதனால் திருமணம் என்ற அந்தஸ்தை, மரியாதையைப் பெண்ணிற்குக் கொடுக்காமலே, அவளது உடலால் விளையக்கூடிய நன்மையைப் பெற்றுக் கொள்ள முடியும் கொஞ்சம் காசு கொடுத்து என்னும் பொழுது, அது அப்பட்டமான சுரண்டல். அதை விட, அந்தப் பெண்ணைத் திருமணம் செய்து கொண்டே விடுவது உத்தமமாகும்.
இரண்டாவதாக, ஒரு ஆண் தகுதியுள்ளவனாக இருந்து, அவனது மனைவி தகுதியற்றவளாக இருக்கையில் தான் ஆண்கள் இந்த வாடகைத் தாய் முறையை விரும்பி ஏற்றுக் கொள்கிறார்கள். இதுவே, ஆண் தகுதியற்றவனாக இருந்து, மனைவி, தகுதியுடையவளாக இருக்கையில், ஒரு வாடகைத் தந்தையை - விந்து தானம் செய்யும் தந்தையை ஏற்றுக் கொள்வார்களா? நிச்சயம் மாட்டார்கள்!!! அதாவது, ஆண்கள் தங்களுக்குச் சௌகரியப்படும் பொழுது இந்த வாடகைத் தாய் முறைமைய ஏற்றுக் கொள்வார்கள் - காரணம் அது அவர்களது ஆண்மையை திருப்திப் படுத்தும் வகையில் அமைகிறது. ஆனால், தகுதியுடைய மனைவி, இன்னொருவனின் விந்தால், கருவுறுவது ஆண்களுக்கு ஏற்புடையாதாயிருக்காது.
ஆக, இந்த வாடகைத் தாய் முறைமை - மனைவிக்கும், கருவை சுமக்கும் பெண்ணிற்கும் இழைக்கப்படும் அநீதியாகத் தான் முடியும். ஆக, சுரண்டப்படும் இருவருமே பெண்கள் தான்.
இந்த வாடகைத் தாய் முறைமையால், ஒர் ஆண் தன் தந்தை இடத்தைத் தக்க வைத்துக் கொள்ள இடமிருக்கிறது. ஆனால், பெண்ணிற்கு இடமில்லை. அவள் தாயாக முடியாது. மாறாக, அவள் வளர்ப்புத் தாயாக மட்டுமே இருக்க முடியும். இது இன்னொரு பெண்ணினுடைய கரு முட்டையுடன் கணவன் விந்து அணுக்கள் கலப்பது என்ற நிலையில் மட்டுமல்ல, அவளது கருமுட்டைகளே, கணவனின் விந்துஅணுக்களோடு கலக்கச் செய்து, வேறொரு பெண்ணின் கருப்பையில் சேர்க்கப்படுகையில் கூட, கருப்பை உறவே தாய் என்ற உறவைத் தீர்மானிக்கும். தன் குழந்தைக்கு பாலூட்டும் பேறு பெறாதவள் என்றுமே தாயாக முடியாது
இதிலே, மற்றுமொரு கோணத்தையும் காணவேண்டும் - அதாவது கருவுறுவதை தவிர்த்து விட்டு தங்களுக்கென குழந்தைகள் தேடும் பெண்கள் - இந்த வாடகைத் தாயைப் பயன்படுத்திக் கொள்ள பலத்த வாய்ப்புகள் உள்ளன. இதுவும் ஏமாற்று வேலையே. அதே போல, நாளை ஓரினச் சேர்க்கையாளர்கள் கூட, தங்களுக்கென குழந்தைகளை உண்டாக்கிக் கொள்ள முடியும்! இத்தகைய பந்தம் உடைய இவர்களிடத்தில் குழந்தைகள் போய்ச் சேர்ந்தால், அவர்களது மன உளைச்சலுக்கு யார் பொறுப்பேற்பார்கள்?
இறுதியாக, இந்த தம்பதியினர், நாளை பிரிந்து போனால், அவர்கள் இணைந்து இன்று செய்த முடிவு நாளை என்ன ஆகும்?
நிறையக் கேள்விகளை எழுப்பும், இந்த வாடகைத் தாய் வழக்கத்தை முறையாக ஆராய்ந்து, இவ்வாறு குழந்தை வேண்டுவோரின் பின்புலம் பற்றி தீர விசாரித்து, வாடகைத் தாயாக தங்கள் உடலையும், மன எழுச்சிகளையும் விற்கும் பெண்களுக்கு முழுமையான பாதுகாப்பிற்கான ஏற்பாடுகள் செய்து, இவ்வாறு பெறப்படும் அந்தக் குழந்தைகளின் எதிர்கால வாழ்க்கைக்கான உத்தரவாதமும் கிடைக்கச் செய்து, பின் இதைப் பின்பற்றுதல் முறையாக இருக்கும்.
மற்ற சமூக ஒவ்வாமை, மத ஒவ்வாமை, மன உளைச்சல்களை, வாடகைத் தாயாகப் போகும் பெண்களுக்கு முற்றிலுமாக விளக்கிச் சொல்லி, முறைப்படியான counseling கொடுத்து, தாங்கள் செய்யும் செயல் இன்னதென்று, விளங்கிக் கொண்டு, முழு மனதுடன் அந்தப் பெண்கள் விரும்பினால் மட்டுமே அனுமதிக்க வேண்டும்.
அந்நிய செலவாணி மூலம் பன்மடங்காகப் பெருக்கப்பட்ட பணத்தை இறைப்பதன் மூலம் சாதித்துக் கொள்ள முடியும் என்ற சுரண்டல் முறையை முற்றிலுமாக நீக்கி விட்டு, தேவையுடையவர்களுக்கு இதை அனுமதிப்பதே நலம்.
சட்டரீதியான வழிகாட்டுதல்களும், அரசின் கண்காணிப்பும் இன்றி, இதை தனியார் துறைகளிடம் அனுமதித்தால், it will be amounting to the rape of the innocent women of our society by these foreigners.
