ஒரு புல்லாங்குழலின் மரணம் - தமிழ்ச்செல்வனுக்கொரு கவிதை
கூராயுத வீச்சில் முறிக்கப்பட்ட
மூங்கில் துளைகள் வழியூதப்பட்டு
காற்றில் மிதக்கிறதுபிரிவாற்றாமையின் துயரம்
ஒரு குச்சியின்
துளையாகக் கண்களும்
உயிர் சுண்டும்
ஒலியாக காதுகளும்
புலன் சுவைக்கின்றன
மூங்கிலை
காட்டு வாழ்விடங்களில்
திமிறியொலித்து முட்டி மோதி
வெடித்துச் சிதறிப் பற்றியெழும்
தீயுள் காத்திருக்கும் மரணத்தை
தேடித்திரியும் சிற்றுயிரென்பர்
இருளின் வெளிச்சமறியாதவர்கள்.
புல்லாங்குழல்
முறையீடுகளின் கூச்சலோடு
இணைந்தரற்றுகின்றனர்
உடைந்து சிதறிய உள்ளத்தினர்
புலப்பெயர்ச்சியில் மறக்கடிக்கப்பட்ட
வேர்களைத் தேடியலையும் ஏக்கத்துடிப்பில்
உயிர் அரற்றிக் கொண்டிருக்கிறது
தூரிலிருந்து
முளைத்துக் கொண்டிருக்கும் புதுப்புல்
காற்று வாங்கி ஒலியெழுப்பி
காடெங்கும் தேடித் திரிகிறது
வெட்டி முறித்தெறியப்பட்ட
ஒரு சகோதரனின் குரலை.
7 comments:
நன்றி
arumaiyaana kavithaanjali
ஒரு மரணத்தின் வலியை இப்படி இதுவரை யாரும் அத்தனை ரணங்களையும் கண்ணீர் சுமந்து இப்படி சொன்னது கிடையாது என்றே நினைக்கிறேன்.
நன்றி - கானா பிரபா, ஓசை செல்லா, நளாயினி.
நல்ல கவிதை. நன்றி.
மிக்க நன்றி, சபேஸ்
நல்ல வரிகள்.
Post a Comment