"எழுத்துகளையும் தாண்டி எனக்கென்று ஒரு உலகம் உண்டு; நான் எழுதுபவற்றை மட்டுமே வைத்துக் கொண்டு, என்னை எடை போடுபவர்களை எப்பொழுதும் என் எண்ணங்கள் வியப்பில் ஆழ்த்திக் கொண்டே இருக்கும்....."
- நண்பன்

Wednesday, January 03, 2007

In The Name of Honor - Muktharan Mai

In The Name of Honor - Muktharan Mai

முன்பு தஸ்லிமா நஸ்ரின் ‘லஜ்ஜா’ என்ற நாவல் எழுதினார். அதற்கு முன்னர் சல்மான் ருஷ்டி ‘சாத்தானிக் வெர்ஸஸ்’ என்ற நாவலை எழுதினார். இஸ்லாமிய உலகில் பெரும் எதிர்ப்பை இந்த புத்தகங்கள் எதிர் கொண்டன. அவை புனைந்து எழுதப்பட்டவை.

முக்தரன் மாய் எழுதிய புனைவல்லாத ‘இன் த நேம் ஆஃப் ஹானர்’ என்ற புத்தகம் அத்தகைய எதிர்ப்புகளைச் சந்திக்கவில்லை. ஆனால் அந்தப் புத்தகங்களின் உள்ளடக்கத்தை விட யதார்த்த உலகில் நின்று வலுவான கேள்விக் கணைகளை முக்தரணின் புத்தகம் வாசகனின் மனசாட்சியின் முன் வைக்கிறது.

தஸ்லிமா புனைவு தளத்தில் எழுதிய பொழுது, அது மனதைப் புண்படுத்தியதாக உணர்ந்தவர்கள் - ஒரு வாழ்க்கை சரித்திரம் வந்த பொழுது, அது குறித்து சிறிய அளவில் கூட விவாதம் செய்ய முன்வராதது வியப்பாகத் தான் இருக்கிறது.

The misguided Salman Rushdie அவதூறு எழுதிய பொழுது, கொதித்து எழுந்த மதவாதிகள், முக்தரன் முன்வைக்கும் கேள்விகள், பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதிகள் குறித்து பேச முன்வராதது வருத்தமே.
இந்த புத்தகம் முன் வைக்கும் கேள்வி மிக சிக்கலானது.
‘பெண்கள் தான் ஆண்களின் கௌரவம் என்றால், அந்த கௌரவத்தை பாலியியல் பலாத்காரம் மூலம் சிதைப்பது ஏன்?’ ஒரு கட்டத்தில், ஆண்களை நோக்கி நேரிடையாக வைக்கப்பட்ட கேள்வியாக இது இருந்தாலும் - புத்தகம் முழுக்க இழையோடும் கேள்வி - ‘ஒரு பெண் பாலியியல் கொடூரத்துக்கு ஆளாகி நீதி கேட்டு எவ்வாறு நிரூபிப்பாள் தனக்கு நிகழ்ந்த கொடூரத்தை?’

ஆண்கள் தன்னை வன்புணர்ந்ததைக் கண்ட நான்கு சாட்சிகள் கொண்டு வர வேண்டும். இல்லையென்றால், திருமண எல்லை தாண்டி உறவாடிய குற்றத்துக்கு ஆளாகி, அவளுடைய புகாரையே ஆதாராமாகக் கொண்டு தண்டிக்கப்படுவாளென்ற விதியினால், பெண்கள் தங்களுக்கு இழைக்கப்படும் பாலியியல் கொடூரங்களை வெளியே சொல்ல முடியாத அடிமைகளாக வாழவேண்டிய இக்கட்டான சூழ்நிலை.

ஒரு பெண் மீது அவதூறு குற்றச்சாட்டு வைப்பவர்கள் அதற்கான நான்கு சாட்சிகளை அழைத்து வரவேண்டுமென்ற விதி பெண்களின் பாதுகாப்பிற்காக ஏற்படுத்தப்பட்டது. ஒரு பெண் மீது அபாண்டமாக குற்றச்சாட்டு சுமத்துபவர்கள் அதற்கான நிரூபணத்தையும் தர வேண்டிய பொறுப்பேற்க வேண்டும் என்பதன் மூலம் கண்ணியமான பெண்கள் மீது அவதூறு இழைப்பதை தடுப்பதே அதன் நோக்கம்.

ஆனால் தங்கள் அதிகார வரம்பே நீதியின் வரம்பாக கொண்டு செயல்படும் இனக்குழுக்கள் - தாங்கள் சார்ந்த மதத்தின் மாண்பை விட - தங்கள் சுயநலத்தை முன்னிட்டு - இனப்பெருமை மாயையில் வகுத்த வழிமுறைகளை, வலுவிழந்த இனத்தின் மீது சுமத்தி அவமானப்படுத்தி ஒடுக்குவதற்கு பாதுகாப்பாக மாற்றிக் கொண்டுவிட்டனர்.

இதைக் கொண்டே முக்தரனுக்கு நீதி மறுக்கப்பட்டது. அவர் குஜார் இனத்தைச் சார்ந்த ஒரு ஏழை விவசாயின் மகள். அவர் எதிர் கொண்டவர்களோ வலிமை மிக்க மஸ்டோய் இனத்தைச் சார்ந்த நிலச்சுவன்தார்கள்.

மனித உரிமை அமைப்புகள், பெண்ணியவாதிகள், சர்வதேச பத்திரிக்கைகள், மேற்கத்திய அரசுகள் கொடுத்த அழுத்தம் இவற்றைக் கொண்டே அவர் போராட முடிந்தது. ஆனால், இத்தனை துணைகளும், உதவியும் கிடைத்திராவிட்டால், அவரால் இத்தனை காலம் போராட முடிந்திருக்குமா என்பது சந்தேகமே.

இந்த அழுத்தங்கள் கொடுத்த விளைவு - முஷரப் - ஒரு சிறு திருத்தத்தை முன் வைத்தார் - தனக்கு நிகழ்ந்த பாலியியல் கொடூரத்தை வெளியில் சொல்லும் பெண், அதை நிரூபிக்க இயலாத பட்சத்தில், adultery என்ற குற்றம் சுமத்தப்பட மாட்டாளென்ற திருத்தம் கொண்டு வந்தார். அதன் நோக்கம் - குற்றமிழைக்கப்பட்ட பெண்கள் தங்களுக்குள்ளே புழுங்கிப் போய்விடாமல், அதை வெளியில் சொல்லவாவது முன் வருவார்கள் என்பது தான்.

பெண்களால் வெளியில் சொல்ல முடியும் - நீதி கேட்டு வாய் திறக்க முடியும் என்பதே - இந்த பாலியியல் கொடுமை இழைப்பதை தடுக்கும் ஒரு சிறு அரணாக இருக்கும் என்பதனால் தான். It would act as a deterrent to the future rapists.

ஆனால் அதற்கு கிளம்பிய எதிர்ப்பு திகைக்க வைக்கிறது. தங்களது ஆணாதிக்க சிந்தனைகளுக்கு இடம் கொடுப்பவர்கள் மட்டுமே ஆட்சியில் இருக்க முடியும் என்று நிர்த்தாட்சண்யமாக நிரூபித்திருக்கின்றனர். இஸ்லாமிய சட்ட விதிகளில் காலத்தின் தேவைக்கேற்ப சிறிய ஒத்திசைவுகள் என்று முனைபவர்களை இத்தனை மூர்க்கமாக எதிர்க்கும் இவர்கள் - அதே இஸ்லாத்தில் அங்கம் வகிக்கும் பெண்கள் மீது ஏவப்படும் வன்முறைகளைக் கண்மூடி பாராதிருப்பது - அதுவும் தன் பாதுகாப்பிற்காக தான் வாசிக்கும் குரானை மார்போடு அணைத்து வந்த ஒரு பெண்ணை வன்புணர்ந்தது - இது அநியாயம் - இஸ்லாத்தில் இவ்வாறு செய்ய இடமில்லை என்று அறிவுறுத்திய பள்ளி இமாமை புறக்கணித்து வெளியேற்றியது - இவர்கள் இஸ்லாத்தின் மீது கொண்ட அக்கறையை விட, தாங்கள் வலுவிழந்த சமுதாயத்தை ஒடுக்குவதற்கு உபயோகப்படுத்தும் ஒரு வழிமுறையை இழக்கப் போகிறோமே என்ற ஆத்திரமும், தங்களின் போகப்பொருளாகவே மட்டும் உபயோகப்படுத்தப்பட்ட பெண்களின் ஒரு குறிப்பிட்ட அளவிற்கான எழுச்சிக்காவது இது வித்திட்டு விடுமே என்ற அச்சமும் கூட காரணமாக இருக்கலாம்.

உதாரணமாக, கற்பழிப்புக்கு ஆளான, டாக்டர் ஷாஸியா காலித், தன்னை பாலியியல் பலாத்காரம் புனைந்தவனை குற்றவாளிக் கூண்டில் ஏற்ற முடியவில்லை. மாறாக, கணவனுடன் நாடு துறந்து லண்டன் சென்று விட்டார். காரணம், அரசின் நேரிடையான, எதிர்மறையான மிரட்டல்கள். நாடு விட்டுச் செல்வதற்கு, கணவனுக்கும், மனைவிக்கும் தான் அனுமதி கிடைத்தது. பள்ளியில் படிக்கும் அவர்களது மகனை பாக்கிஸ்தான் அரசாங்கம் அனுமதிக்கவில்லை. அவன் தான் அரசின் துருப்புச் சீட்டு. ஷாஸியா, தன் துயரத்தை சர்வதேச பத்திரிக்கையாளர்களுக்கு சொல்வாராயின், அவரது மகனுக்குப் பாதுகாப்பில்லை. இது ஒரு அரசு செய்யும் பயங்கரவாதம். வன்புணர்ந்தவன் ஒரு ராணுவ வீரன்.

சமூகத்தில் ஒரு பெண் எந்த நிலையில் இருந்தாலும் - படித்திருந்தாலும், பாமரச்சியாக இருந்தாலும், ஒரு ஆண் விரும்பினால், அந்தப் பெண்ணை பலாத்காரப்படுத்தி விட்டு, எந்த வித தண்டனையுமின்றி போய்விடலாம் என்பதே நிலைமை.

இந்த அரசு பயங்கரவாதத்தைப் பற்றி, அப்படி கூட இருக்குமா என்று சந்தேகப்படுபவர்களுக்கு - முஷரப் நேரிடையாக உத்தரவிட்டார் - to keep Mukhtharan under state exit control list. அனைத்துப் பத்திரிக்கைகளிலும் வெளியான செய்தி. கூடுதலாக பாதுகாப்பு என்ற பெயரில் கண்காணாத இடத்தில் சிறை வைப்பு வேறு. சர்வதேச பத்திரிக்கைகள் கூக்குரல் எழுப்பியதும் தான் விடுதலை செய்தனர். இல்லையென்றால் பாக்கிஸ்தான் என்பது ஒரு காட்டுமிராண்டி நாடு என்ற பெயர் வந்து விடும். சர்வதேச உதவிகள் தடைபடும் என்ற இக்கட்டான சூழல் தான் காரணம் - முக்தரண் விடுவிக்கப்பட.

முக்தரனுக்குப் போராட இயன்றது. காரணம் - அவரிடத்தில் இழப்பதற்கு எதுவுமில்லை. ஆனால் மற்ற பெண்களுக்கு...???

இந்த இடத்தில் Khaleej Timesல் டிசம்பர் 26 அன்று, 34 பக்கத்தில் வெளியான ஒரு செய்தியையும் சொல்ல வேண்டும். அது, கணவனையன்றி பிற ஆண்களுடன் உறவு கொள்ளும் பெண்ணைத் தண்டிப்பதற்காக இந்திய அரசு, ஒரு பிரேரணையை முன் வைத்தது. சட்டப் பிரிவு 497ல் திருத்தம் கொண்டு வர தேசிய பெண்கள் சம்மேளனம் மறுத்து விட்டது. (The National Commission for Women). அந்தப் பெண் மோசம் செய்யப்பட்டவளாக - வஞ்சிக்கப்பட்டவளாக மட்டுமே கருதப்பட வேண்டும் - குற்றம் செய்தவளாக அல்ல என்று பரிந்துரைத்திருக்கின்றது. It has stated that the law has to consider the relatively socially disempowered position of women and not to prosecute her.

இந்தியப் பெண்களை விட பாக்கிஸ்தானியப் பெண்கள் ஒன்றும் - socially empowered creatures அல்ல. அப்படி இருக்கும் பொழுது அந்தப் பெண்களுக்கும் சட்டம் ஒரு பாதுகாப்பைத் தரவேண்டும். ஒரு பெண்ணின் மீது பிறர் அவதூறு சொல்வதைத் தடுக்க ஏற்படுத்தப்பட்ட ஒரு சட்ட விதியைக் கொண்டு, அந்தப் பெண்ணே தன் சுயகௌரவம், நற்பெயர் இவற்றிற்கு உண்டாக்கும் களங்கம் பற்றிய அச்சத்தை மீறி ஒரு புகார் கொடுக்கும் பொழுது, நான்கு சாட்சிகளைக் கூப்பிடுவதை விட, அறிவியலைத் துணைக்கழைப்பது நன்றாகும். மருத்துவப் பரிசோதனை நிரூபித்து விடும் ஒரு பெண் பலாத்காரம் செய்யப்பட்டாளா, இல்லையா என்பதை. மரபணு பரிசோதனை மூலம், உடலுறவு கொண்ட ஆணை அடையாளம் காண இயலும். ஆனால், இவற்றையெல்லாம் ஏற்றுக் கொள்ள மாட்டோம் என்று அடம்பிடிப்பதும், இந்தப் பரிசோதனைகள் நடந்தாலும் நான்கு சாட்சிகள் அவசியம் என்று கூறுவது எந்த வகையில் நியாயம்?

இந்தப் புத்தகம் முன் வைக்கும் இத்தகைய கேள்விகள், மனசாட்சியுள்ள மனிதனின் மனதைக் குடையும்.

Yes, This would haunt forever the conscience of the man following the faith - atleast me.

43 comments:

எழில் said...

மிகச்சிறந்த பதிவு

வாழ்த்துக்கள்.

நன்றி

அரவிந்தன் நீலகண்டன் said...

நம்ம இரண்டு பேருக்கும் ரொம்ப விசயத்துல அதலபாதாள கருத்து வேற்றுமை உண்டுங்க. ஆனால் உங்களோட நட்பார்ந்த அறிவார்ந்த விவாதம் சாத்தியம் என்று நம்ப வைக்குதுங்க இது போன்ற பதிவுகள். மதம் எதுவாயிருந்தாலும் மனுச பிரச்சனைகள் ஒன்ணுதானுங்க. அகத்தேடலுக்குன்னு நம்பிக்கைகளை வைச்சுக்கிட்டு புறவாழ்க்கைக்கு அதன் அனைவருக்கும் பொதுவான மதிப்பீடுகளை எடுத்துட்டு அறிவியலை ஏத்துக்கிறதுதான் நல்ல வழியாக இருக்கும். எந்தமதத்து காரங்களாக இருந்தாலும் சிந்திக்க வைக்கிற நேர்மையான சுயபரிசோதனைக்கு தூண்டக்கூடிய நல்ல பதிவுக்கு நன்றிங்க.

இப்னு ஹம்துன் said...

நண்பன்,
வழக்கம்போல் உங்கள் முத்திரை மிளிரும் பதிவு.

ஆனால் ஒரு அடிப்படைத் திருத்தம்:
பாதிக்கப்பட்ட ஒரு பெண், ஒரு ஆணின் மீது வன்புணர்ச்சிக் குற்றச்சாட்டு சுமத்தும் போது, அவள் நாலு சாட்சிகளைக் கொண்டுவரத் தேவையில்லை. அவளுடைய ஒற்றை சாட்சியமும் அதை உண்மை என்று உறுதிப்படுத்தும் ஒரு சான்றுமே போதும். இக்காலத்தில் மரபணு பரிசோதனை.

நாலு சாட்சி என்பது ஒரு பெண்ணின் மீது பிறர் குற்றம் சுமத்தும் போது தான்.ஒரு பெண்ணைப் பற்றி யாரேனும் அவதூறு சொன்னால், தான் சொன்ன குற்றத்தை அவதூறு சொன்னவர் நான்கு சாட்சிகளைக் கொண்டு நிரூபிக்க வேண்டும்.

மற்றபடி, பாக்கிஸ்த்தானில் நடப்பதை வைத்து அடிப்படையை தீர்மானிக்க வேண்டியதில்லை.

பதிவுக்கு நன்றி.

கவிமதி said...

இப்னுவின் திருத்தம் நாம் திரும்பத்திரும்ப சப்பைக் கட்டு கட்டுவதிலேயே இருக்கிறோம் என்பதியே காட்டுகிறது.

பொதுவான ஒரு மதத்தில், ஒரு சட்டம் நிறைவேற்றப்படுகிறதென்றால் அது அந்த குறிப்பிட்ட மதத்தைச் சேர்ந்த ஒட்டு மொத்த மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டு நடைமுறைபடுத்தப்படும் போது உறுதிசெய்யப்படுகிறது. அப்படியிருக்க பாகிஸ்தான் என்ன! வேறுநாடுகள் என்ன!

இப்னு என்ன சொல்லவருகிறார். இஸ்லாத்திலும் நிறைய பிரிவுகள் உண்டு. இந்தியா,இலங்கை,பாகிஸ்த்தான்,அரபுநாடுகள் என ஒவ்வொரு பகுதிக்கு ஒரு சட்டம் என்றா!...

நான் ஒரு நான்கு நண்பர்களை துணைக்கு அழைத்துக்கொண்டு எனக்கு பிடிக்காத ஒரு பெண்ணை சபையில் பழிக்கூறுகிறேன். சட்டப்படி அந்த பெண்ணுக்கு தண்டணை கொடுத்துவிடலாமா?

அப்ப நாம் கூறும் பெண் விடுதலை???.
அந்த நான்கு பேரும் முஸ்லீம்களாகதான் இருக்கனுமா?
என்று பல கேள்விகள் எழலாம்.

சரி அப்படியெனில் ஒருவன் தன்னை பாலியல் பலாத்காரம் செய்தான் என்பதற்கு அந்த பெண் தரப்பில் நான்கு சாட்சிகள் போதுமே! பின் எதற்கு மரபணுசோதனை?

இவையெல்லாம் நடைமுறைக்கு சாத்தியப்படுமா?

நாம் மீண்டும் மீண்டும் பெண்கள் குறித்தான சட்டங்களையே கிளறி எப்படியாவது பெண்ணை அடக்கவேண்டும் என்றே பார்க்கிறோம்.

அதே வேலையில் விபச்சாரம் செய்யும் ஆண்களை சட்டப்படி தண்டித்ததாக இதுவரை தெரியவில்லை.

இப்படியே போனால் நிறைய கேள்விகள் எழலாம்.. விடுவோம் முரண்பாடுகள் எல்லா மதத்திலேயும் உண்டு என்பது தான் உண்மை.

நண்பன் said...

நன்றி எழில்

நண்பன் said...

நீலகண்டன்,

கருத்து வேற்றுமை இருப்பதில் எந்தத் தவறுமில்லை. ஆனால், அதைத் தெரிவிக்கும் முறையில் உள்ள நாகரீகம், நாசுக்கு இவற்றினால் மட்டுமே வேற்றுமையிலும் இணக்கமான சூழ்நிலையில் உரையாட முடியும். என் எழுத்துக்களுக்கு வரும் பின்னூட்டங்களுக்கு நான் பொறுப்பில்லை என்று இல்லாத மனிதர்கள் பெயரில் பின்னூட்டங்களை அனுமதிப்பதினால், நான் உங்கள் தளங்களில் கருத்துரைப்பதில்லை. ஆனால் வாசிக்கிறேன் என்பது உண்மை தான்.

மதம் எதுவாயிருந்தாலும் மனித பிரச்சினைகள் ஒன்று தான் என்பது வரை சரி.

ஆனால், ஒரு மதத்தின் பயன்பாடே மக்களை நல்வழி காட்டி, ஓரு முழுமையான வாழ்க்கை வாழ தேவையான கொள்கைகளை வகுத்து கொடுப்பதும் மதத்தின் கடமையாகிறது.

அந்த வகையில் பார்க்கப் போனால், தோன்றிய அனைத்து மதங்களிலும் யதார்த்த வாழ்க்கைக்கு மிக அருகாமையில் வருவது இஸ்லாம் தான். ஆன்மீகம், அரசியல், பொருளாதாரம், வாழ்வியல் என்று அனைத்து துறைகளிலும் வழிகாட்டல் உண்டு.

இஸ்லாம் தோற்றுவிக்கப்பட்ட காலத்தைக் கருத்தில் கொண்டு, இன்றும் அதே புரிந்துணர்தலைக் கொண்டு, சட்டங்களைப் பிரயோகிப்பதை விட, இந்தக் காலத்தின் தேவைக்கேற்ப அவற்றை reinterpret செய்வதில் தவறில்லை. இதற்கு முன்னர் மாறும் காலத்திற்கேற்ப மறுவாசிப்புகளும் மறுவிசாரணைகளும் தொடர்ந்து கொண்டு தானிருந்தன.

ஆனால், இப்பொழுது அதில் ஒரு தேக்க நிலை உண்டாக்கி விட்டதோ என்ற ஐயமும் உண்டு. அரசியல் ரீதியாக, இஸ்லாம் ஒரு மறுமலர்ச்சி காலத்தைத் தொட்டுக் கொண்டு இருக்கின்றது என்பது உண்மை தான். அந்த மறுமலர்ச்சி ஒவ்வொரு இல்லம் தோறும், ஒவ்வொரு ஆண் பெண் அனைவருக்குமானதாக மாற வேண்டும் என்பதே கனவு.

கனவுகள் விடிவதற்கு வெகு தூரமிருக்கிறது.

உங்கள் வருகைக்கும் பண்பான மொழி நடைக்கு மிக்க மகிழ்ச்சியும் நன்றியும்

நண்பன்.

நண்பன் said...

இப்னு ஹம்துன்,

//மற்றபடி, பாக்கிஸ்த்தானில் நடப்பதை வைத்து அடிப்படையை தீர்மானிக்க வேண்டியதில்லை.//

பாக்கிஸ்தான் நமது ஆன்மீக வழிகாட்டி அல்ல என்பதை தெளிவாகக் குறிப்பிட்டீர்கள். ஆனால் நடைமுறையில் அவ்வாறில்லை என்பதே எனது எண்ணம். ஒரு இஸ்லாமிய பெண்ணின் விவாகரத்து வழக்கு ஒன்றிற்காக ஒரு (இஸ்லாமிய) வழக்கறிஞரை சந்திக்கச் சென்ற பொழுது, பேச்சினூடே இஸ்லாமிய வழக்குகள் எவ்வாறு வாதிடப்படுகின்றன என்று தன்னுடைய தடிமனான புத்தகங்களின் சில பக்கங்களைத் திறந்து வாசிக்கக் கொடுத்தார்.

என்ன ஆச்சரியம்!!!

வழக்கறிஞர்கள் பலரும் இஸ்லாமிய நாடுகளில் நடைபெறும் பல வழக்குகளை முன் மாதிரியாக வைக்கின்றனர். உதாரணம் காட்டுகின்றனர். மாடலாக காட்டுகின்றனர்.

ஏன் அப்படி என்று அவரிடம் கேட்ட பொழுது அவர் சொன்னார் - இஸ்லாமிய ஹுதூத் சட்டங்கள் முழுமையான இஸ்லாமிய சமூகத்திற்குப் பொருத்தமானது - உலகளாவியது - It is universal in nature - அதனால், இஸ்லாமிய தனிச்சட்டங்கள் மூலம் ஒரு வழக்கு வாதிடப்படும் பொழுது, பல்வேறு நாடுகளில் நடைபெற்ற வழக்குகள் எடுத்தாளப்படுகின்றன. இந்தியாவில் பெரும்பாலான வழக்கறிஞர்கள் எடுத்தாள்வது பாக்கிஸ்தானிய முன்மாதிரிகளைத் தான்.

அதனால் பாக்கிஸ்தானில் என்ன நிகழ்கிறது என்பதை ஒதுக்கி விட முடியாது. அங்கு ஓரு தவறான நீதி வழங்கப்பட்டால், அதுவே இங்கும் ஒரு முன்மாதிரியாக ஆகிவிடலாம்.

மேலும்.......

நண்பன் said...

இப்னு ஹம்துன்,


//ஆனால் ஒரு அடிப்படைத் திருத்தம்:
பாதிக்கப்பட்ட ஒரு பெண், ஒரு ஆணின் மீது வன்புணர்ச்சிக் குற்றச்சாட்டு சுமத்தும் போது, அவள் நாலு சாட்சிகளைக் கொண்டுவரத் தேவையில்லை. அவளுடைய ஒற்றை சாட்சியமும் அதை உண்மை என்று உறுதிப்படுத்தும் ஒரு சான்றுமே போதும். இக்காலத்தில் மரபணு பரிசோதனை.//

மகிழ்ச்சியாக இருக்கிறது.

ஆனால், இதை எங்கே படித்தீர்கள் என்று சொன்னால், அந்தப் புத்தகத்தை வாங்கி வாசிப்பதற்கும், என் நூலகத்தில் வைத்து கொள்வதற்கும் வசதியாக இருக்கும்.

நான் படித்த வரை இவ்வாறு வாசிக்கவில்லை. எங்குமே பெண்ணின் ஒற்றைச் சாட்சியம் ஏற்றுக் கொள்ளப்படும் என்று தெரியவில்லை. இரண்டு பெண்களின் சாட்சியமே ஒரு சாட்சியாகத் தான் கருதப்படும்.

நிற்க,

இதைப் படியுங்கள் -

http://www.gulf-times.com/site/topics/article.asp?cu_no=2&item_no=35506&version=1&template_id=41&parent_id=23

............While Pakistan recently introduced legislation to outlaw honour killings, it has still to review Islamic hudud laws governing rape. Bakhtiar hopes there will be changes soon.
'Our main focus is on the part where 'zina' (adultery) is involved,' she explained. 'When a woman goes to the police station to report a rape case, if she does not have four (male) witnesses ... she is put behind bars for adultery.'

After running into stiff resistance from leaders of Pakistan's feudal rural communities over the law on honour killing, Bakhtiar knows she faces a stiffer battle over the hudud ordinance.
Noeleen Heyzer, executive director of the UN Development Fund for Women (UNIFEM), said enlightenment must prevail if women are to be given a chance of justice, and they must translate greater political representation into real influence.
'If we don't look at the power structure we won't end impunity,' Heyzer said, advocating quotas like those in place in Pakistan to give women a greater say. - Reuters
Published: Thursday, 5 May, 2005, 12:14 PM Doha Time

பாக்கிஸ்தானில் என்ன சட்டம் என்பதல்ல - ஹூதூத் சட்டம் என்ன என்பதைத் தான் திருமதி பக்தியார் தெளிவாக்கியிருக்கிறார்.

முக்தரன் மாய் எழுதிய புத்தகம் நெடுகிலும் இது பிரதிபலிக்கிறது.

Breaking the Silence என்ற அத்தியாயத்தில், பக்கம் 65ல் எழுதுகிறார்....The Government has set up a special court at the five -county level, however, where the crime can be considered - most unusually - before an antiterrorism tribunal. This works in my favour: I won't have to provide four eyewitnesses to prove that I was raped, which has already been established by the medical examination.

நான்கு சாட்சியங்கள் தேவையில்லை என்பதில் ஏற்பட்ட நிம்மதியைப் பேசுகிறார். அவர் கற்றறிந்த பெண்மணியல்ல. ஆனால், ஒரு புத்தகத்தை சர்வதேச சந்தையில் வெளியிடும் பதிப்பகத்தார் அறியாமல் செய்வதில்லை.

தீவிரவாத தடுப்பு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை மேல்ம்முறையீட்டுக்காக லாஹுர் கோர்ட்டுக்குச் செல்கின்றனர் - குற்றவாளிகள். அங்கு குற்றவாளிகளின் வழக்கறிஞர் முழங்குகிறார் - Muktharan is telling a lie. No one committed zina-bil-jabar - forcible sexual relationship - with ... Muktharan....

The defence tries to make me (Muktharan) to prove that a crime was committed, which I must do. According to Islamic law, there are two ways to obtain the proof: either through the complete confession of the guilty party or parties before a competent court (which never happens), or the testimony of four adult Muslim men known for their piety and considered honourable by court. (பக்கம் 71)

முக்தரனுக்கு வழக்கறிஞர்கள் உண்டு, அவர்களும் முஸ்லிம்கள் தான். இந்தப் புத்தகத்தைப் படித்திருப்பார்கள். இத்தனை தெளிவாக முரண் எழுத அனுமதித்திருக்க மாட்டார்கள்.

போகட்டும் - லாஹூர் நீதிமன்றம் என்ன சொல்லியது?

Dishonour என்னும் அத்தியாயத்தில் பக்கம் 134ல் லாஹூர் நீதிமன்றம் சொன்னதை எழுதுகிறார் -

' My testimony is full of contradictions, and not supported by sufficient evidence to prove that a gang rape occurred'.

புத்தகத்தை முழுதாக வாசித்தவர்களுக்குப் புரியும் - லாஹூர் நீதிமன்றம் என்ன சொல்கிறது என்று. முக்தரனின் வாக்குமூலத்தைப் பல்வேறு போலீஸ் அதிகாரிகள் பதிவு செய்தனர். தேதிகளைத் தவறாகக் குறித்தார்கள். இவர் சொல்லச் சொல்ல அவர்கள் வேறு எதையோ அவர்கள் விருப்பப்படி எழுதிக் கொண்டனர். வெற்று பேப்பரில் ரேகையைப் பதிவு செய்து கொண்டனர். வழக்கு ஆபத்தான பாதையை நோக்கித் திரும்பினால், இந்த குளறுபடிகளைக் காரணம் கொண்டு குற்றவாளிகளைத் தப்பச் செய்யலாம்.

இறுதியில் அது தான் நடந்தது. 'Sufficient Evidence' என்று சொன்னது எதை? மரபணு சோதனையை அது முற்றிலுமாக கண்டு கொள்ளவே இல்லை.

தீர்ப்பு என்ன?

அனைவரும் விடுதலைச் செய்யப்பட்டனர் - ஒரே ஒருவரைத் தவிர. அவருக்கும் ஆயுள் தண்டனை மட்டுமே.

All because of insufficient evidence. லாஹுர் நீதிமன்றம் ஒன்றும் விவரமில்லாத மன்றம் அல்ல. இந்தத் தீர்ப்பைப் பற்றியும், தான் பலாத்காரம் செய்யப்பட்டதை நிரூபிக்கக் கூறிய நீதிமன்றத்தின் Sufficient Evidence - போதுமான சாட்சியத்தை முன்வைக்கக் கோரிய தீர்ப்பைப் பற்ற்றியும் கோபம் உமிழ, முக்தரன் எழுதுகிறார் -

I was fighting not only for myself, but also for every woman scorned or abandoned by a law that requires four male eyewitnesses to prove a rape! As if rapists worked in public!

This court is trying to restore their so-called lost honour to the Mastois by adopting the defence's arguements, word for word, and by turning me into the defendent: the investigation was botched, the rape has not been proved.

லாஹுர் நீதிமன்றம் ஹுதூத் சட்டங்களை நிச்சயமாக அறிந்திருக்கும். அதன் தீர்ப்பு - போதுமான சாட்சியங்கள் - 4 ஆட்களின் சாட்சியம்...

இப்பொழுது உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நிற்கின்றது.

இதற்கிடையில் தான் முஷரஃப் முயற்சித்தார்... ஒரு சிறிய திருத்தத்தை... பெண்களை பேச வைப்பதற்கு...

மற்றபடி நீங்கள் சொல்கிற படி சட்டம் செயல்படுகிறதென்றால் - அது பற்றி மேலும் தெரிந்துகொள்ள ஆவலாக இருக்கிறேன்...

தெரிவியுங்கள்...

அன்புடன்....

அபூ முஹை said...

பாதிக்கப்பட்டப் பெண்ணின் தன் நிலை சாட்சியே போதும் என்பதற்கு இஸ்லாத்தின் ஆதாரங்களில் இந்தப் பதிவில் விளக்கப்பட்டுள்ளது

அன்புடன்,
அபூ முஹை

அபூ முஹை said...

சகோதரர் ஷாஜஹான் அவர்களுக்கு, பதிவுக்கு நன்றி!

நான் ஏற்கெனவே சொல்லி வருவதுதான். இஸ்லாத்தின் சட்டங்களை முஸ்லிம்கள் நிறைவேற்றி வர வேண்டும். அப்படி முஸ்லிம்கள் இஸ்லாத்தின் சட்டங்களைக் கடைபிடிக்கவில்லையெனில் அது இஸ்லாத்தின் குற்றமாகக் கருதக்கூடாது. முஸ்லிம்கள், முஸ்லிம்களின் ஆட்சி அதிகாரங்கள் செய்யும் தவறுகளை இஸ்லாத்தை நோக்கித் திருப்பக்கூடாது, அது நேர்மையுமில்லை.

மதவாதிகள் செய்யும் தவறை எடுத்து மதத்தை நோக்கி வீசக்கூடாது. பலவந்தப் படுத்தப்பட்டப் பெண் உடனடியாக சம்பந்தப்பட்டவர்களிடம் புகார் செய்தால் அவர் பலவந்தப் படுத்தப்பட்டுள்ளார் என்பதற்கு அவரிடமே தடயங்கள் இருக்கும். குற்றவாளியை அடையாளம் காட்டினால் தண்டிப்பதற்கு அதுவே போதும். வன்புணர்வுக்கு நிர்ப்பந்திக்கப்பட்டப் பெண், அதை நிரூபிக்க நான்கு சாட்சிகளைக் கொண்டு வர வேண்டும் என்று இஸ்லாம் எந்த இடத்திலும் சொல்லவில்லை!

மாறாக பலவந்தப் படுத்தப்பட்டப் பெண் சுட்டிக் காட்டிய குற்றவாளிக்கு தயவு தாட்சணையின்றி மரண தண்டனை வழங்கிய செய்திதான் இஸ்லாத்தின் வரலாற்றில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. அதற்கான சுட்டியை முந்திய மறுமொழியில் காண்க நன்றி!

(முந்திய மறுமொழியில் முழுசாக சொல்ல முடியாமல் அவசரமாக வெளியே செல்ல நேர்ந்தது. அதில் சொல்ல வந்ததை இங்கு சொல்லியிருக்கிறேன்)

அன்புடன்,
அபூ முஹை

Anonymous said...

//ஆனால், ஒரு புத்தகத்தை சர்வதேச சந்தையில் வெளியிடும் பதிப்பகத்தார் அறியாமல் செய்வதில்லை.//

//முக்தரனுக்கு வழக்கறிஞர்கள் உண்டு, அவர்களும் முஸ்லிம்கள் தான். இந்தப் புத்தகத்தைப் படித்திருப்பார்கள். இத்தனை தெளிவாக முரண் எழுத அனுமதித்திருக்க மாட்டார்கள்.//

அயர்ச்சியைத் தருகிறது சகோதரர் நண்பன் ஷாஜஹானின் நவீன பொருளாதார உலகின் ஊடக பதிப்பகங்களின் மீதும் மேம்போக்காக கூட இஸ்லாத்தை அறியாத சில முஸ்லிம்களின் மீதும் வைத்திருக்கும் அதீத நம்பிக்கைப்பார்த்து.

சகோதரர் அபூ முஹை அவர்களின் பதிவைப் படித்த பின் உள்ள சகோதரர் ஷாஜஹானின் கருத்துக்களுக்காக காத்திருக்கிறேன்.

அன்புடன்
இறை நேசன்

நண்பன் said...

அன்புமிகு இறைநேசன்,

உங்கள் வருகை மிக்க மகிழ்ச்சியைத் தருகிறது.

//அயர்ச்சியைத் தருகிறது சகோதரர் நண்பன் ஷாஜஹானின் நவீன பொருளாதார உலகின் ஊடக பதிப்பகங்களின் மீதும் மேம்போக்காக கூட இஸ்லாத்தை அறியாத சில முஸ்லிம்களின் மீதும் வைத்திருக்கும் அதீத நம்பிக்கைப்பார்த்து.//

நவீன பொருளாதார உலகை முற்றிலுமாகப் புறக்கணிக்க முடியாது. நாம் அந்த உலகினுள்ளே தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

நிற்க,

நான் அதைக் கொண்டு, எந்தக் கருத்துகளையும் நிறுவ முயலவில்லை.

ஒவ்வொன்றாக சொல்லிக் கொண்டே வந்து பின்னர் லாஹுர் நீதிமன்றத்தைப் பற்றி விரிவாக எழுதியிருக்கிறேன்.

ஏழு வரிகளில் நவீன பொருளாதார உலகத்தைப் பற்றிய எழுதியதைக் கண்டு அயர்ந்து போகும் நீங்கள், 40 வரிகளுக்கும் மேலாக எழுதிய லாஹுரை ஏன் விட்டு விட்டீர்கள்.?

ஷாரிஅ.த் சட்டங்களை அரசியல் சட்டமாகக் கொண்டுள்ள பாக்கிஸ்தானின் உயர் நீதிமன்றம் லாஹுர். அந்த நீதிமன்றத்தில் வழங்கப்பட்ட தீர்ப்பைப் பற்றி எழுதி இருக்கிறேன். லாஹுர் நீதிமன்றம் மேம்போக்கான இஸ்லாமியர்களால் நிர்வகிக்கப்படுகிறது என்று நீங்கள் சொன்னால், மேற்கொண்டு எதையுமே என்னால் பேச இயலாது.

I am zapped!!!

மேலும் அபூ முஹையின் இணைப்பு குறித்து....

நட்புடன்
நண்பன்

நண்பன் said...

அன்பின் அபூ முஹை,



// நான் ஏற்கெனவே சொல்லி வருவதுதான். இஸ்லாத்தின் சட்டங்களை முஸ்லிம்கள் நிறைவேற்றி வர வேண்டும். அப்படி முஸ்லிம்கள் இஸ்லாத்தின் சட்டங்களைக் கடைபிடிக்கவில்லையெனில் அது இஸ்லாத்தின் குற்றமாகக் கருதக்கூடாது. முஸ்லிம்கள், முஸ்லிம்களின் ஆட்சி அதிகாரங்கள் செய்யும் தவறுகளை இஸ்லாத்தை நோக்கித் திருப்பக்கூடாது, அது நேர்மையுமில்லை.


மதவாதிகள் செய்யும் தவறை எடுத்து மதத்தை நோக்கி வீசக்கூடாது. //


பெண்களை அடிமைப்படுத்தும் வகையில் சட்டங்களைத் தங்களுக்கு சாதகமாக மாற்றிக் கொள்ளும் ஆணாதிக்க அகம்பாவத்தைக் குறித்து தான் கேள்வி. ஷாரிஅ.த் சட்டங்கள் ஆண்களுக்கான பாதுகாப்பை மட்டுமே கொடுக்கும் என்றில்லையே? பெண்களுக்கான பாதுகாப்பை எப்படி தரப் போகிறது என்பது தானே முன்வைக்கப்படும் கேள்வி.


அதற்கான பதிலைத் தான் நாம் தேட வேண்டும்.


- முஸ்லிம்கள் செய்யும் தவறுகளுக்கு இஸ்லாம் பொறுப்பேற்காது.

- முஸ்லிம் ஆட்சியாளர்களுக்கு இஸ்லாம் பொறுப்பேற்காது.

- மதவாதிகளுக்கு இஸ்லாம் பொறுப்பேற்காது.


அப்படியானால்....? நீங்கள் முன் வைக்கும் வாதம் என்ன?


குற்றவாளிகள் இஸ்லாத்தின் பெயரால் தான் தப்பித்துக் கொள்கிறார்கள். ஷாரிஅ.த் சட்டங்களைக் கொண்டு தான் வாதாடுகிறார்கள். அதன் நுட்பமான பிரிவுகளில், ஆண்களென்பதால் தங்களுக்குக் கிடைக்கும் சந்தர்ப்பங்களைக் கொண்டு தான் தப்பித்துக் கொள்கிறார்கள்.


தான் ஒரு முஸ்லிம் என்பதினால் தானே ஷாரிஅ.த் சட்டங்களை மேற்கோள் காட்டுகிறான். அவனை மடக்கிப் பிடிக்க சட்டங்களில் அவன் பயன்படுத்திய வழித்தடங்களைத் தேடிப்பிடித்து அடைக்க முயற்சிக்காமல், அவன் செய்கைகளுக்கு இஸ்லாம் பொறுப்பேற்காது என்று தட்டிக் கழிப்பது எப்படி முடிகிறது?


அவனது செயல்களுக்குப் பொறுப்பேற்காது இஸ்லாம் என்றால், இஸ்லாம் தரும் பதுகாப்பை மட்டும் அவனுக்கு முஸ்லிம் என்பதினால் ஏன் கொடுக்க வேண்டும்? அவனை மற்ற எல்லா மனிதர்களுக்கும் பொதுவான ஒரு சட்டத்தின் கீழ் விசாரித்து விட்டுப் போய்விடலாமே?


சட்டம் எந்த ரூபத்தில் வடிவமைக்கப்பட்டதோ, அதை மாற்றி, தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொள்வதை கேட்கவே கூடாது என்கிறீர்களா? நோக்கமும் குறிக்கோளும் மாறிப் போன பின்னர், அதை மீண்டும் மீட்டெடுத்து அதன் பழைய பெருமிதத்தையும் உன்னதத்தையும் அடைய வேண்டுமென்றால், அதன் உண்மையான நோக்கத்திலிருந்து பிறழச் செய்யும் வாதங்களைத் தடுப்பது முக்கியமில்லையா?


எல்லோரும் உண்மையான பக்தியுடனும், இறை அச்சத்துடனும் வாழத்தொடங்கும் வரையிலும், மனமுவந்து தன் குற்றங்களை ஒப்புக் கொண்டு, பாவமன்னிப்புத் தேடும் காலம் வரும் வரையிலும், அதிகாரத்தின் துணை கொண்டு தான் சட்டங்களை நடைமுறைப்படுத்த முடியும். அப்பொழுது ஆட்சியாளர்கள், அந்த சட்டங்களை முறைப்படி இயங்கச் செய்ய அல்லது அதன் உண்மையான நோக்கத்தை அடையும் பொருட்டு, சில அதிகாரங்களை மேலும் ஏற்பாடு செய்து கொண்டால், அதில் தவறு இருக்க முடியுமா? என்ன?


அடிப்படை நோக்கம் எதுவோ, அதை நோக்கி சட்டத்தை மேலும் ஆற்றலுடன் செயல்பட, நடைமுறைப்படுத்த ஒரு ஆட்சியாளன் சில அதிகாரங்களை எடுத்துக் கொள்ளக் கூடும் - வேண்டும், அத்தகைய ஆட்சியாளன் முன்வைக்கும் சிறு அதிகார கோரல்களை ‘எங்கள் பொறுப்பில்லை’ என்று தட்டிக் கழித்தால், பின் எவருக்காக அந்தச் சட்டங்கள்? ஒரு சட்டம் குற்றவாளிகள் தண்டிக்கப்படுவதை தடுக்க இயலவில்லை என்றாலும், அந்த சட்டத்தை மட்டுமே வைத்துக் கொள்ள வேண்டும்- வேறு எந்த வகையிலும், அந்த சட்டத்தை வலுவாக்கக் கூடாது என்பது இங்கு வாதிக்கும் நமக்குள் இருக்கும் அகம்பாவத்தைத் தான் காட்டுகிறது. மாறாக சட்டத்தின் மீதுள்ள ஒப்புதலை அல்ல.

ஷாரிஅ.த் சட்டங்கள் குறித்தான கேள்விகள் அல்ல இவை. இன்னும் அவற்றை வலுவாக நடைமுறைப்படுத்த ஆவல். பல ஹதீதுகளுக்கும் பல இமாம்கள் எழுதிய விரிவுரைகளைப் படித்தவர்களுக்குத் தெரியும், எத்தனை வகையான கருத்து வேறுபாடுகள் இருக்கின்றன என்று. விவாதங்களையும் தர்க்கங்களையும் இஸ்லாம் என்றுமே வரவேற்கிறது.

அதைப்பற்றியும் - அபூ முஹையின் இணைப்புத் தகவல் பற்றியும்...

சல்மான் said...

////எல்லோரும் உண்மையான பக்தியுடனும், இறை அச்சத்துடனும் வாழத்தொடங்கும் வரையிலும், மனமுவந்து தன் குற்றங்களை ஒப்புக் கொண்டு, பாவமன்னிப்புத் தேடும் காலம் வரும் வரையிலும், அதிகாரத்தின் துணை கொண்டு தான் சட்டங்களை நடைமுறைப்படுத்த முடியும். அப்பொழுது ஆட்சியாளர்கள், அந்த சட்டங்களை முறைப்படி இயங்கச் செய்ய அல்லது அதன் உண்மையான நோக்கத்தை அடையும் பொருட்டு, சில அதிகாரங்களை மேலும் ஏற்பாடு செய்து கொண்டால், அதில் தவறு இருக்க முடியுமா? என்ன? ////

யோசிக்கும் விதமாக எழுதியிருக்கிறீர்கள் நண்பரே.

சமூக அறியாமை மற்றும் ஆணாதிக்கம் இவற்றால் பாதிக்கப்படும் பெண்களின் நிலைக்கு என்ன காரணம்?, இதற்கான தற்காலிக தடுப்பான்கள் என்ன?, இதில் ஒவ்வொரு முஸ்லிமின் பங்கு என்ன? என்ற கோணத்தில் ஆராயவது இந்த பதிவுக்கு நல்ல பலன் அளிக்கும்

நம்முடைய மதிப்புக்கும் அன்புக்கும் நன்றிக் கடனுக்கும் எல்லாரையும் விட மும்மடங்கு உரித்தானவர் தாய் என இஸ்லாமால் சிறப்பிக்கப்பட்ட தாய்மையை தாங்கிய பெண்களுக்கு பாதுகாப்பும் உரிமைகளும் மேலும் அதிகபடுதல் வேண்டும்.

அதற்கான முயற்சியை நாமே முன்னெடுத்துச் செல்ல வேண்டும்

நண்பன் said...

அபூ முஹை,


இறுதியாக நீங்கள் கொடுத்த தொகுப்பிற்கு வந்து விட்டேன்.


நீங்கள் சொல்வது -


“ஒரு பெண் தன்னைக் கற்பழித்தவனாக ஒருவரை அடையாளம் காட்ட, அதை ஏற்றுக் கொண்ட நபிகள் அம்மனிதனுக்குத் தண்டனை விதித்து விட, அதைப் பொறுக்காத நிஜக்குற்றவாளி தானாக மனமுவந்து முன்வந்து தன் குற்றத்தை ஒப்புக்கொண்டு, தண்டனையை தான் ஏற்றுக் கொண்டு கல்லடிபட்டு மரணமடைகிறான். அப்பெண், குற்றமற்றவளாகிறாள்.”


நீங்கள் சொன்னதை நான் சரியாகப் புரிந்து கொண்டுவிட்டேனா?


சரி, இந்த வரலாறை நான் எங்கேயும் படித்ததில்லை. ஆனால், நீங்கள் சொல்வதால், இது நடந்த சரித்திரமாக ஏற்றுக் கொண்டே பேசுகிறேன்.


நான் பெற்ற முதல் தாக்கம் - Is AbuMuhai so naive?


மேற்கொண்டு, உங்கள் வாதத்தைத் தொடும் முன் மற்றுமொரு நிகழ்வு. கடந்த ஒரு வருடத்திற்குள் நிகழ்ந்த ஒரு சம்பவம் - மீண்டும் பாக்கிஸ்த்தான்.


http://archive.gulfnews.com/articles/06/12/17/10090260.html


Towards more rights for Pakistani women

By Abdullah Al Madani, Special to Gulf News

Dr Abdullah Al Madani is an academic researcher and lecturer on Asian affairs

“Bibi, a blind girl, was prosecuted for zina (adultery) after she failed to prove rape, while Mai, an illiterate 33-year-old woman, was subject to a gang rape on the orders of a village council to punish her younger brother for having an affair with a girl from another tribe.”

ஒரு குருட்டுப் பெண் தான் பாலியியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்ட பொழுது, அதை நிரூபணம் செய்ய முடியாததினால், அவள் ஜினா - கள்ள உறவு கொண்டாள் என்று குற்றம் சுமத்தப்பட்டு, விசாரணைக்குட்படுத்தப்பட்டாள்.

இப்பொழுது சொல்லுங்கள் - அபூமுஹை, Are you living in an utopian land?

சட்டமென்றால், அது அனைவருக்கும் பொது. ஊனம் இங்கு கணக்கில் எடுத்துக் கொள்ளப்படாது என்று கறாராக செயல்பட்ட நீதிமன்றங்கள் பாக்கிஸ்தானில் உண்டு. அந்த நீதிமன்றங்களின் அடிப்படை என்ன? எந்த சட்டங்கள்?

இந்த விவாதத்திற்கு வருமுன், மீண்டும் நீங்கள் சொல்லிய வரலாற்றிற்கு வருவோம். அதில் எனக்கு முதலில் தெளிவாகிய செய்தி ::
#1. மனப்பூர்வமாக குற்றத்தை ஒருவர் ஒப்புக் கொள்ளும் பொழுது சாட்சியங்கள் தேவையில்லை.
#2. பாதிக்கப்பட்ட நபர் என்பதனால், அவருடைய ஒற்றைச் சாட்சியத்தைக் கொண்டு நீதி வழங்க முற்பட்டால், அதன் மூலம் தெரிந்தோ, அல்லது தெரியாமலோ, ஒரு நிராபராதி தண்டனைக்குள்ளாக்கப்படக் கூடும்.
#3. குற்றவாளி காணப்பட்டு, தீர்ப்பு வழங்கப்பட்டதால், அப்பெண்மணி குற்றத்திலிருந்து விடுவிக்கப்படுகிறாள்.

இதை நீங்கள் மறுக்கவில்லை தானே?

இப்படித்தான் எல்லா இஸ்லாமியர்களும் இருக்க வேண்டுமென்று நீங்கள் எதிர்பார்த்தீர்கள் என்றால், நீங்கள் கண்களை இறுக மூடிக் கொண்டிருக்கிறீர்கள் என்று அர்த்தம். எந்த ஒரு இஸ்லாமியனும், ஒரு பெண்ணை பலாத்காரம் செய்து விட்டு, வேட்டியை மடித்துக் கட்டிக் கொண்டு, நேராக போலீஸ் நிலையத்திற்குச் சென்று, இந்த முகவரியில், ஒரு பெண்ணைக் கெடுத்து விட்டு வந்திருக்கிறேன். எப்பொழுது என்னை கல்லெறியப் போகிறீர்கள் என்று கேட்பான் என்று எதிர்பார்த்தீர்கள் என்றால் - உங்களுக்கு என்ன ஆயிற்று என்று நான் கவலைப்படுவேன்.

எந்த ஒரு நிரூபணமும் இல்லாமல், ஒரு பெண் கை காட்டியவனை, நபிகள் தண்டிக்க முனைந்தார் என்பதை ஏற்க மறுக்கிறது என் மனம். இஸ்லாமிய சட்டங்கள் இப்படி செயல்படுவதில்லை. பின் எப்படி?

கீழ்க்கண்ட ஹதீதைக் காணுங்கள்:
Sahih Muslim : Kitab Al-aqdiyya : Chapter DCXC - Judgement is to be pronounced on evidence, and one who is eloquent in his plea (May win the case):

No: 4247 : UmmSalaama reported Allah’s Messenger (may peace be upon him) as saying: You bring to me for (judgement) your disputes, some of you perhaps being more eloquent in their plea than others, so I give judgement on their behalf according to what I hear from them. (Bear in mind, in my judgement) if I slice off anything for him from the right of his brother, he should not accept that, for I sliced off for him a portion from the hell.

அதாவது, தீர்ப்புகள் சமர்ப்பிக்கப்படும் சாட்சியங்களினாலும், (சட்டங்களைக் கொண்டு) திறமையாக வாதிடுவதினாலுமே அமைகிறது. அத்தகைய தீர்ப்பில், ஒரு சகோதரனின் உரிமையிலிருந்து ஒரு பகுதியை நான் வெட்டி எடுத்து உங்களுக்குக் கொடுத்தால், அதை ஏற்காதீர்கள். ஏனென்றால், நரகத்தில் ஒரு பெரும்பகுதியை உங்களுக்காக நான் வெட்டி வைப்பேன்.

ஆக, நீதி, சாட்சியமும், வாதமும் தான். அதில் நேர்மையாக நடக்காமல், பிறரின் உரிமைகளை உங்களுக்குக் கிடைக்குமாறு, சாட்சியங்களையும், வாதங்களையும் முன் வைத்தீர்கள் என்றால், நீங்கள் பறித்துக் கொண்ட உரிமையைப் போல பல மடங்கு நரகத்தை அனுபவிப்பீர்கள்.

இன்று உலகம் முழுவதிலுமுள்ள தீர்ப்புகள் இவ்வாறு தான் வழங்கப்படுகின்றன. சாட்சியங்கள், வாதத்திறமை.

( அடுத்தவன் உரிமை, நரகம் இதையெல்லாம் இன்று யாரும் பெரிதாகக் கவனத்தில் வைத்துக் கொள்வதில்லை. எப்படியாவாது, தீர்ப்பை தனக்கு சாதகமாக்கிக் கொள்ள வேண்டும் - பொய் சொல்லி, ஏமாற்றி என்று எந்த வகையிலாவாது, இது உலக நடைமுறை. இதில் இறை அச்சம் கொண்டு செயல்படக்கூடியவர்கள் என்று சொன்னால், அது வெகு வெகு சொற்ப தொகை மக்களே. அவர்கள் விதி விலக்கே.)

சட்டங்களைக் கொண்டு வாதித்து, ஆதாராங்களை தாக்கல் செய்து அதை பரிசீலனைக்குட்படுத்தித் தான் நீதி வழங்கவேண்டும் என்ற காலகாலத்திற்கும் பொருத்தமான ஒரு நடைமுறையை ஏற்படுத்திக் கொண்ட இஸ்லாம், குற்றம் சாட்டப்பட்ட ஒருவனுக்கு இத்தகைய உரிமைகளை வழங்காமல், தீர்ப்பளிக்காது.

இப்பொழுது மீண்டும் உங்கள் வரலாற்றிற்கு வருவோம்.

ஒருவன் குற்றத்தை ஒப்புக் கொள்கிறான். அதற்கு மேல் அங்கு விசாரணை, வாதம் எதுவும் தேவையில்லை என்று சொல்கிறீர்களா?

இல்லை. இஸ்லாம் ஒருவனின் ஒப்புதல் வாக்குமூலத்தை அப்படியே ஏற்றுக் கொள்வதில்லை. பின் எப்படி?

அத்தியாயம் - DCLXXXII - No:: 4196. Narrator: Abu Huraira.

ஹதீது நீளமென்பதால், சுருக்கமாக::

ஒரு மனிதன் அல்லாஹ்வின் தூதரிடம் வந்து, நபியே, நான் ஒரு பெண்ணைப் பலாத்காரம் செய்து விட்டேன், என்னை மன்னியுங்கள் என்று வேண்டிக் கொண்ட பொழுது, நபிகள் தன் முகத்தைத் திருப்பிக் கொள்கிறார். அவன், மீண்டும் நபிகளின் முகத்திற்கெதிராகத் தோன்றி, மீண்டும் தன் குற்றத்தைக் கூறி, மன்னிப்பு கோருமாறு வேண்டுகிறான். மீண்டும் நபிகள் தன் முகத்தைத் திருப்பிக் கொள்கிறார். அவன் மீண்டும் அந்தப் பக்கமாக.. .. இப்படியாக நான்கு முறை அவன் நபிகளின் முகத்தை நோக்கிக் கூறிய பின், நபிகள் அவனிடம் கேட்கிறார் - உனக்குப் பைத்தியாமா என்று. அவன் இல்லை என்று கூறியதும், உனக்குத் திருமணமாகிவிட்டதா என்று கேட்டு, அவன் உறுதி செய்ததும், பின்னர் அவனுக்கான தண்டனையை வழங்குகிறார்.

மேற்கண்ட இந்த ஹதீதில் இருந்து சில விஷயங்கள் புரிகின்றன. (இந்த விஷயங்கள் அடிக்குறிப்புகளாக எண்கள் இடப்பட்டு, இமாம்களால் விளக்கமளிக்கப்பட்டுள்ளது. என்னுடைய விளக்கமல்ல.) அந்த குறிப்புகள் - விஷயங்கள் வருமாறு:

#1. நான்கு முறை ஒப்புக் கொண்டது என்பது - நான்கு சாட்சியங்களுக்கு ஒப்புதலானது.
#2. ஒருமுறையேனும் அவன் தண்டனைக்கு அஞ்சியோ அல்லது வேறெந்த காரணங்களினாலோ, தன் ஒப்புதல் வாக்குமூலத்திலிருந்து பின் வாங்கினாலோ அவனுக்குத் தண்டனை கிடையாது. ஏனெனில், நான்கு சாட்சியங்கள் என்ற நிபந்தனை அவ்வாறு பின்வாங்கிய காரணத்தினால் நிறைவேறாமல் போய்விடுகின்றது. நான்கு சாட்சியங்கள் இல்லையென்றால், தண்டனை இல்லை. இந்த சந்தேகத்தின் பலன் குற்றவாளிகளின் நலனுக்காக.

#3 மேலும் ஒப்புதல் வாக்குமூலம் தருபவன் சரியான மனநிலையில் இருக்க வேண்டும், புத்திசுவாதீனமுற்றவனாக இருக்கக் கூடாது. அவன் புத்தி சரியான நிலைமையில் இருக்கிறதா என்பதை விசாரித்து அறிய வேண்டும். ஒப்புதல் வாக்குமூலம் நிர்ப்பந்தத்தினால் எழக்கூடாது. (இன்று ஒப்புதல் வாக்குமூலத்தை அடித்து உதைத்து வாங்கும் நவீன உலக நடைமுறையை இஸ்லாம் ஏற்கவில்லை. மனித உரிமைகளைப் பற்றி அடித்துக் கொள்பவர்கள் - கவனிக்கவும். மனித உரிமைகளைப் பேணுவதில் இஸ்லாம் பல நூறு ஆண்டுகளுக்கு முன்பாகவே நடைமுறைக்குக் கொண்டு வந்து விட்டது. மனித உரிமைகளும் இஸ்லாமும் பற்றி பிறிதொரு சந்தர்ப்பத்தில் மற்றுமொரு தனிப்பதிவில் விவாதிக்கலாம்.)

#4. தண்டனை பெற்ற மனிதனை நபிகள் சபிக்கவில்லை. மாறாக அவனது ஜனாஸா தொழுகையை நபிகளே முன்னின்று நடத்தினார்கள். அவனது இறுதி சடங்கு உரிமைகளை அவர்களே மரியாதையுடன் நடத்தினார்கள். தவறு செய்வதும் தண்டனை பெறுவதும் மனித வாழ்வில் நடக்கக்கூடியதே. அதனால் அவனை இழிவு செய்வதை நபிகள் அனுமதிக்கவில்லை. அதே சமயம் தன் ஆளுமையைப் பயன்படுத்தி அவனை விடுவிக்கவுமில்லை.

#5. ஒருவன் தண்டனையின் கொடூரம் தாங்காமல் ஓட முயற்சித்தால், என்ன செய்வது என்பது குறித்து இமாம்களிடையே இருவித கருத்துகள் உண்டு. ஓட விடாமல் தடுத்து தண்டனையை முழுதாக நிறைவேற்றிக் கொள்வது அல்லது ஓடும் விடும் பொழுது விட்டு விடுவது. என்றாலும் பெரும்பான்மையினரின் கருத்து தண்டனையை முழுமையாக நிறைவேற்ற வேண்டுமென்பதே.

மேற்கூறியவற்றிலிருந்து, ஒருவன் மனமுவந்து ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்தால் கூட, அதை நான்கு முறை, சுயபுத்தியிலிருந்து, ஒருமுறையேனும் தன் மீதே சந்தேகம் கொள்ளாமல், மனம் ஒப்பி தருவதே நான்கு சாட்சியங்களுக்கு இணையாகக் கருதப்பட்டு, தண்டனைக்குரியதாக ஏற்றுக் கொள்ளப்படும்.

இப்படி இருக்கும் பொழுது, ஒற்றைச் சாட்சியம் என்பது கண்டிப்பாக இஸ்லாத்தினால் ஏற்றுக் கொள்ளப்படாது.

நான்கு சாட்சியங்கள் என்ற நிபந்தனை - ஒருவன் சுய வாக்குமூலம் கொடுத்தாலும் கூட நான்கு முறை அதை உறுதிப்படுத்த வேண்டும். மறுத்தால் - குற்றம் சாட்டியவர், குற்றம் நிகழ்ந்ததற்கான நான்கு சாட்சியங்களைத் தர வேண்டும்.

இதைத்தான் லாஹ¤ர் நீதிமன்றம் கோரியது - No Sufficient Evidence available to prove the rape had taken place. லாஹ¤ர் நீதிமன்றம் மேம்போக்கான முஸ்லிம்களால் நடத்தப்படும் வலைப்பூத் தளம் அல்ல. ஷாரிஅ.த் சட்டங்களின் முழுவீச்சையும் பரிமாணத்தையும் அறிந்த நீதிமான்களைக் கொண்டது. அவர்களின் தீர்ப்பு சரியா தவறா என்று தனியாக விவாதிக்கலாம். ஆனால், இங்கு இப்னு ஹம்துன் கூறிய ‘ஒற்றை சாட்சியம்’ என்பது அடிப்படையே இல்லாதது. அபூமுஹை காட்டித் தந்த இணைப்பு இன்னமும் வலுவில்லாதது.

தன்னை பலாத்காரம் செய்தவன் முகத்தைக் கூட அறிய இயலாத ஒரு பெண்ணை, நீதி கேட்ட ஒரே காரணத்திற்காக, கள்ள உறவு என்று கூறி விசாரணைக்கு உட்படுத்தியதற்கு காரணம் - நான்கு சாட்சியங்களை அவளால் தர இயலாதது.

அவளை விட்டுவிடலாமே - பாவம் தானே?

முடியாது!!! ஏன்?

அந்தப் பெண்ணே வாக்குமூலம் கொடுத்திருக்கிறாள் - தான் (விரும்பியோ அல்லது விரும்பாமலோ என்பதூ வேறு) புணரப்பட்டேன் என்று. ஒப்புதல் வாக்குமூலம்!!!

பிறகென்ன? தண்டிக்க வேண்டியது தானே?

அப்படியானால்?

பலாத்காரம் செய்யப்பட்டால், புகார் கொடுக்காதீர்கள் - அல்லது நான்கு சாட்சியங்களைத் தயார் செய்து கொள்ளுங்கள். அதுவும் முடியவில்லை என்றால், தற்கொலை செய்து கொள்ளுங்கள்.

இதற்கு விடிவு? - இந்தச் சமுதாயம் உண்மையான இறை அச்சத்துடன் நடந்து கொள்ள வேண்டும். மனித நாகரீகத்தைப் பேண வேண்டும். அதாவது உண்மையான, நபிகள் தோற்றுவித்த இஸ்லாம் எத்தனை தூய்மையானதோ, அத்தனை தூயவர்களாக, குற்றம் புரிந்தால், அதை நடுநிலையோடு ஒப்புக் கொண்டு, இறைவனிடம் தன்னை சமர்ப்பிப்பவர்களாக மாற வேண்டும். மனசாட்சியுடன் சொல்லுங்கள் - அது சாத்தியமா?

இல்லை !

அது இயலாத பட்சத்தில் பெண்களை ஆண்களுடன் புழங்க விடாதீர்கள். வீட்டிற்குள் வைத்து அடை காத்து கொள்ளுங்கள் - இன்று நாம் அதைத்தான் செய்து கொண்டிருக்கிறோம் - இல்லையா?

சரி, மரபணு பரிசோதனையை இஸ்லாம் ஏற்கிறதா? இல்லை. அதைப் பற்றி மேலும்.. ..

நண்பன் said...

ஹதீத் எண் 4194 :


அப்துல்லா பின் அப்பாஸ் கூறியது:


... ... ... குரானில் கல்லெறியப்படும் தண்டனை இல்லையே பிறகு எதற்காக நாம் அச்சப்படவேண்டுமென்று வழி தவறிப் போகும் வாய்ப்புகள் உண்டு, கல்லெறியும் தண்டனைகள் அல்லாஹ்வின் புத்தகத்தில் கடமையாக்கப்பட்டுள்ளது - திருமணமாகிய ஆண் / பெண் கள்ளஉறவில் ஈடுபடும் பொழுது, அவை சாட்சியங்களால் நிரூபிக்கப்பட்டால், அல்லது கர்ப்பம் உண்டானால் அல்லது ஒப்புதல் வாக்குமூலம் தந்தால், அவர்களுக்கு அத்தண்டனை நிறைவேற்றப்பட வேண்டும்.


இந்த ஹதீத் நிறைய விஷயங்களைத் தெளிவுபடுத்தி விடுகின்றது. முதலில், கல்லெறியும் தண்டனை குரானில் நேரடியாகக் கூறப்படவில்லை. அது நபிகள் கடைப்பிடித்த வழிமுறை. குரானில் இல்லாத ஒரு விஷயத்தை ஏன் நபிகள் செய்ய வேண்டும்.? காரணம் - இவ்வாறு தரப்படும் தண்டனை - இதற்கு முன் இறைவனால் அருளப்பட்ட வேதங்களில் காணப்படுகிறது. அவைகளையும் – இறைவனால் அருளப்பட்டதால் – வாழ்க்கை நடைமுறைக்கு உகந்ததாகக் கருதி, அவற்றில் கூறப்பட்ட தண்டனைகளை வழங்கினார்.


From the Old Testament::


“And the man that committeth adultery with another mans’s wife, even he that committeth adultery with his neighbour’s wife, the adulterer and the adulteress shall surely be put to death” (Leviticus, 20 : 10)


“If a damsel that is a virgin be betrothed upon a husband, and a man find her in the city, and lie with her; then ye shall bring them both out into the gate of that city and ye shall stone them with stones that they die” (Deuteronomy, 22: 23)


Apart from the Bible, the other classical works on Christianity state:


“The mode of execution varied with the standing of the woman; a guilty wife was to be put to death, i.e., strangled along with her paramour; while a betrothed woman who was seduced was to be stoned” (Hastings, Dictionary of the Bible, Vol III p 273).


“ In the law the only recognized form of capital punishment is by stonings... ... it fell to the witnesses to cast the first stone” (Cheyne and Black’s Encyclopaedia Biblica, c 2722)



ஆக, குரானில் கல்லெறிதலைப் பற்றி கூறப்படாவிட்டாலும், “அல்லாஹ்வின் புத்தகங்கள்” என்று குறிப்பிடப்படும் பொழுது அது பைபிள், தோரா, போன்ற வேதங்களையும் சேர்த்தே கணக்கிலெடுத்துக் கொள்ள வேண்டும். அந்தக் காலத்தில் மரண தண்டனை என்பதே “சாகும் வரையில் கல்லெறிதல்” தான் என்பதை கிறித்தவ ஆராய்ச்சியாளர்கள் ஒப்புக் கொண்டுள்ளனர். இதையே இன்று நவீனப்படுத்திக் கொண்டுள்ளனர். மாறாக மரணதண்டனையை ஒழித்து விட வில்லை. கல்லெறிதலில் மரணம் சற்று தாமதமாக வரும். நவீன வழிமுறைகளில் அது சற்று வேகமாக நெருங்கி விடும். ஆனால் தண்டனை என்று கூறிக் கொண்டு, உயிரைப் பறிப்பதில் அனைத்து தேசங்களும் ஒன்று படும் பொழுது, இஸ்லாத்தில் மட்டும் தான் இத்தண்டனைகள் நிறைவேற்றப்படுவதாகக் கூறுவது அறியாமை.


மீண்டும் ஹதீதிற்கு வருவோம்.


கர்ப்பம் கள்ள உறவிற்கு சான்றாகுமா? இது பற்றி இமாம்களிடையே விவாதங்களும் தர்க்கங்களும் நிகழ்ந்துள்ளது. ஹஜ்ரத் உமர் அவர்கள் திருமணமாகாத பெண் கர்ப்பமானால், அதை ஆதாரமாகக் கொள்ளலாம் என்று கருதினார். மாலிக் அவ்வாறே கருதினார். ஆனால், மற்ற இமாம்கள் எவரும் அவ்வாறு கருதவில்லை.


.. .. the majority of the jurists does not subscribe to this opinion and asserts that mere pregnancy (without witnesses or confession on her part) does not make a woman liable to such a severe punishment. The spirit of Shari’ah shows that the benefit of doubt goes to the offender even if it is very slight.


According to this law of the Shari’ah, the pregnancy of an unmarried woman (without witnesses). Though it provides some reason for her committing the offence of adultery, it alone cannot establish her offence beyond any shadow of doubt. Some margin of doubt is left to plead her innocence. There is a chance - even though quite remote – that the sperm of a male finds its way into the womb of female without cohabitation. Even this remote and far distant possibility is enough to save her from this severe punishment prescribed for committing adultery.


ஒரு ஆணுடன் நேரிடையான உடலுறவு இல்லாமல் கூட ஒரு பெண் கருத்தரிக்க வாய்ப்புண்டு என்றே கருதினார்கள் - 1300 வருடங்களுக்கு முன்பு. அவர்கள் அதற்கு முன்னோடியாகக் கருதியது - கன்னி மேரியின் கர்ப்பம் - இயேசுவின் பிறப்பு. இயேசுவின் பிறப்பை நியாயப்படுத்துகிறது குரான். அதை குற்றமாகக் கருதுவது தவறு. அதனால், கர்ப்பம் ஆவது எவ்வகையிலும் சான்றாகாது. ஒரு ஆணுடன் உறவில்லாமலும் கூட கர்ப்பம் சாத்தியம் என்னும் பட்சத்தில், அதை ஆதாராமாக கொள்ள முடியாது.


இன்று விஞ்ஞானம் அதை மெய்ப்பித்திருக்கிறது. செயற்கை முறை கருத்தரிப்பின் மூலம் அது சாத்தியம் என்று நிறுவப்பட்டிருக்கிறது. அதனால் கர்ப்பம் மட்டுமே சாட்சியாகாது. பிற சாட்சியங்களும் ஆதாரங்களும் இருக்கும் பட்சத்தில் மட்டுமே, கர்ப்பம் ஆதாரமாகும்.


பல வகை சிந்தனைகளுக்கும், தர்க்கங்களுக்கும் இடங்கொடுத்து அதையும் மீறி நிலைத்து நிற்கும் வாய்ப்பு பெற்றது தான் ஷாரிஅ.த் சட்டங்கள். கர்ப்பம் குற்றமாகும் என்று சட்டம் அமைந்திருந்தால், இன்று பல குழந்தையற்ற தம்பதியினர் - செயற்கை முறை கருத்தரிப்பு என்ற முறையில் குழந்தை பெற்று கொள்ள வாய்ப்பே இல்லாது போயிருக்கும்.


இவ்வாறு இருக்கும் பொழுது, மரபணு சோதனைகளின் முடிவை மாத்திரமே ஒரு தனித்த ஆதாராமாக ஏற்றுக் கொள்ள இயலாது. இதைத் தான் லாஹ¤ர் நீதிமன்றமும் உறுதிப்படுத்தியது. மற்ற சான்றுகளுடன் சேர்த்தே இதை ஒரு ஆதாராமாகக் கொள்ள முடியுமே தவிர, இதை மாத்திரமே ஒரு ஆதாரமாக ஏற்றுக் கொள்ள முடியாது. நீதிமன்றங்கள் எப்பொழுதுமே எழுதப்பட்ட சட்டங்களை மட்டுமே வைத்துக் கொண்டு வாதாடும். நான்கு சாட்சியங்கள் அல்லது ஒப்புதல் வாக்குமூலம் இவை இரண்டுமே இல்லாத பொழுது மரபணு பரிசோதனைகளை மட்டும் வைத்துக் கொண்டு மற்றவர்களைக் குற்றவாளிகள் என தீர்ப்பளிக்க இயலாது.


எல்லாவற்றையும் மீண்டும் ஒருமுறை திரும்பிப் பாருங்கள் - ஒரு பெண் மீது கள்ள உறவு என்று ஒருவர் குற்றம் சாட்டினால் ஷாரிஅ.த் சட்டங்கள் எவ்வாறு செயல்படும்?


- முதலில் அந்தப் பெண்ணின் ஒப்புதல் வாக்குமூலம்

- அல்லது நான்கு சாட்சியங்கள்

- அந்தப் பெண் கர்ப்பமுற்றிருப்பதை மட்டுமே (கணவன் இல்லாத பொழுதும்) ஆதாராமாக ஏற்றுக் கொண்டு, தண்டனை வழங்க மறுக்கும். (அதாவது மரணதண்டனை - கல்லெறிந்து கொல்லப்படுதல்)


This is the best possible protection for a woman against the slander. பழிச்சொல்லிலிருந்து மிகச் சிறந்த பாதுகாப்பு ஒரு பெண்ணுக்கு. இத்தனை பாதுகாப்பு மிக்க ஒரு சட்டத்தின் பின் தான் சில மிருகங்கள் ஒளிந்து கொண்டு, பாலியியல் பலாத்காரம் செய்துவிட்டு, சாட்சியங்கள் இல்லை என்ற பெயரில் தப்பித்து கொண்டு விடுகிறார்கள்.


ஆனால், தான் வன்புணர்ச்சிக்கு ஆட்படுத்தப்பட்டேன் என்ற அந்தப் பெண்ணின் புகாரே, பலமுறை திரும்பத் திரும்ப வலியுறுத்தப்படுவதால், ஒப்புதல் வாக்குமூலமாகக் கருதப்பட்டு, அவள் தண்டனைக்குரியவளாக்கப்படுகிறாள்.


சட்டங்களைத் தங்களுக்குச் சாதகமாக, மேம்பட்ட வர்க்கத்தினர் தவறாக உபயோகப்படுத்துகின்றனர் என்பதில் எவருக்குமே சந்தேகமில்லை. ஆனால், ஒரு வழக்கு என்று நீதிமன்றம் போகும் பொழுது, எந்த சட்டத்தை அந்த நாட்டு அரசு பயன்பாட்டில் வைத்திருக்கிறதோ, அதன் மூலம் மட்டுமே வழக்கு ஆராயப்படும், வாதாடப்படும், நீதி வழங்கப் படும். இதை தெளிவாகப் புரிந்து கொண்ட ஆண்கள் இந்த சட்டத்தைக் கொண்டு, கீழ்வர்க்க மக்களை அவமானப்படுத்தி, அடக்கி ஆள பயன்படுத்துகிறார்கள் -உதாரணம் முக்தரன் மாய். அல்லது தங்களது காமவெறிக்குப் பெண்களைப் பலி கொள்கிறார்கள் - உதாரணம் - டாக்டர் ஷாஸியா காலித்.


இவர்கள் தங்களை ஒரு நல்ல இஸ்லாமியர்களாகக் கருதினால், அடுத்த பெண்களைப் பார்ப்பதினின்றும் தங்கள் பார்வையைத் தவிர்ப்பார்கள். ஆனால், இவர்கள் அடுத்த பெண்களைப் பார்ப்பதில் மட்டுமல்ல, அவர்களைப் பாலாத்காரத்தினால் அடைந்து விடும் அளவிற்கு பாழ்பட்டு நிற்கிறார்கள். இவர்கள் மனதில் துளி கூட இறையச்சம் இல்லை. இந்த நிலையில், இவர்களை ஏன் ஷாரிஅ.த் சட்டத்தின் மூலம் பாதுகாக்க வேண்டும். அதனால், பெண்களை பலாத்காரம் செய்யும் இந்த ஈனர்களை விசாரிக்க ஷாரிஅ.த் தைப் பயன்படுத்தக் கூடாது. வேறு சட்டங்கள் - மரபணு சோதனைகளை ஏற்றுக் கொள்ளும் வகையிலும், மற்ற மருத்துவ பரிசோதனைகளை ஏற்றுக் கொள்ளும் வகையிலும் சட்டம் கொண்டு வரப்படும் என்று பெண்கள் இயக்கம் மற்றும் மனித உரிமகைள் போராடுகின்றன. அத்துடன், குற்றம் சாட்டியவளையே குற்றவாளியாக்கும் கொடுமையையும் நிறுத்த வேண்டும். அவளுக்குத் தண்டனை ஏதும் கொடுக்கப்படக் கூடாது. அப்பொழுது தான் பாதிக்கப்பட்ட பெண்கள் புகார் தர முன் வருவார்கள். இதையெல்லாம் கணக்கிலெடுத்துக் கொண்டுதான் - இந்தப் போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரும் வைத்த கோரிக்கை - பெண்கள் மீதான பாலியியல் கொடுமைகளை மட்டும் ஷாரிஅ.த் சட்டத்தின் கீழ் விசாரிக்க வேண்டாம் - மாற்ற வேண்டும் என்று கோரவில்லை. அந்த சட்டத்தைப் பயன்படுத்த வேண்டாம் என்று தான் போராடுகின்றனர்.


இதன் தொடக்கமாகத் தான் - ஜென்ரல் முஷர•ப் முன்வைத்தது - புகார் தரும் பெண்கள் தண்டிக்கப்பட மாட்டார்கள் என்ற ஒரு ஷரத்தை. இது சட்டமாக்கப்பட்டால் தான், நீதிமன்றங்கள், அதை அமுல் படுத்த முடியும். இது போராடி வரும் பெண்களுக்கான ஒரு வெற்றி. இத்தகைய ஒரு மாற்றத்தை எதிர்த்து தான் அத்தனை வன்முறைகள் நிகழ்ந்தன பாக்கிஸ்தானில்.


ஷாரிஅ.த் சட்டங்களைத் திருத்த வேண்டாம். திருத்த வேண்டிய அவசியமுமில்லை. ஆனால், பாலியியல் கொடுமைகளை ஷாரிஅ.த் சட்டத்தின் மூலம் விசாரிக்காமல், மருத்துவ பரிசோதனைகளை ஒரு absolute evidence ஆக ஏற்றுக் கொள்ளும் வகையில் உருவாக்கப்பட்ட சட்டம் மூலம் விசாரிக்க வேண்டும். அதாவது ஒரு பொது சட்டத்தின் மூலம்.


இது ஒன்றே முக்தரண்மாய் போன்ற பெண்களுக்கு நீதி வழங்க முடியும்.

நண்பன் said...

சல்மான்

மிக்க நன்றி.

"தற்காலிகத் தடுப்பான்கள்" ஒரு நல்ல சொற்றோடர்.

அன்புடன்

நண்பன்

நண்பன் said...

இப்னு ஹம்துன் எவ்வாறு ஒரு ஒற்றை சாட்சியம் போதும் என்ற கருத்தை வலியுறுத்தினார் என்று மேலும் மேலும் தேடியதில்:

ஒற்றைச் சாட்சியம் ஏற்றுக் கொள்ளப்படுகிறது - ஒரு கணவன் தன் மனைவியின் மீது புகார் தரும் பொழுது. அப்பொழுது வேறு சாட்சியங்கள் இல்லாத பொழுது, அவன் நான்கு முறை, பிரம்மாணம் (நிய்யத்) செய்து ஐந்தாவது முறை தான் செய்வது பொய்யாக இருக்குமானால், இறைவனின் தண்டனைக்கு ஆட்படுத்தப்படுவேன் என்று சாபமிட்டு, கூறும் பொழுது, அது விசாரணைக்கு ஏற்கப்படுகிறது. மனைவி ஒப்புக் கொண்டால், அவளுக்குத் தண்டனை தரப்படும்.

மனைவி மறுத்து விட்டால், அவளுக்கும் இறைவன் பெயரால் உறுதிமொழி செய்து அதை நான்கு முறை மறுக்கவும், ஐந்தாவது முறை இறைவனின் தண்டனை என்னும் சாபத்தை தன் மீது உறுதி செய்து மறுத்தால் அவளுக்குத் தண்டனை கிடையாது.

இதில் இருவருக்குமே தண்டனை ஏதுமில்லை. ஆனால், அது அவர்களது மணமுறிவுக்குக் காரணமாகிவிடுகிறது. It would automatically lead to their divorce.

அவர்களில் ஒருவர் பொய் சொல்கிறார் என்பது உறுதி என்றாலும், தண்டனையை இறைவன் மறுமையில் நிறைவேற்றுவான் என்று விட்டு விடப்படுகின்றனர். அவர்கள் கணவன் மனைவி என்ற தகுதியினால், இந்த விசாரணை மட்டும். மற்ற எவருக்கும் இத்தகைய ஒற்றைச் சாட்சியம் ஏற்றுக் கொள்ளப்படுவதில்லை.

இஸ்லாம் எல்லா வகையான சூழலுக்கும் பொருத்தமான சட்டங்களைக் கொண்டுள்ளாலும், ஒவ்வொருவருக்குள்ளும் இஸ்லாமியன் என்ற அடிப்படை இருந்தால் மட்டுமே இது மிகச் சிறந்த சட்டங்களாக விளங்க முடியும். மாறாக, பிறப்பினால் இஸ்லாமியன் மற்ற வகையில் இஸ்லாமின் மாண்பினை அறியாத மடையன் என்ற வகையில் தவறாக செயல்படும்பொழுது, இஸ்லாத்தை அறியாதவனாக நடந்து கொள்ளும் பொழுது, நிச்சயமாக அவர்கள் இஸ்லாத்திற்கு கெட்டபெயரைத் தேடித் தருகிறார்கள் என்பதில் மாற்று கருத்து இல்லை.

இனி, மற்றவர்கள் இது குறித்து தங்கள் கருத்துகளைத் தெரிவிக்கட்டும். குறிப்பாக, எனது கருத்துகளுக்காகக் காத்திருப்பேன் என்று கூறிய சகோதரர் இறைநேசன், தங்கள் தரப்பு வாதங்களை முன்வைத்த சகோதரர்கள் இப்னுஹம்துன், அபூமுஹை அவர்களையும், மற்றும் வலைப்பூக்கள் எழுதிக் கொண்டிருக்கும் மற்ற சகோதரர்களையும் அழைக்கிறேன் - தங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ள.

நண்பன் said...

கவிமதி,

உங்கள் கருத்திற்கு நன்றி.

நிறையப் படிக்கவும், எழுதவும் செய்து கொண்டிருந்த பொழுது, நடுவே வந்த உங்கள் கருத்துகளைக் கவனிக்கவில்லை.

உங்கள் கருத்திற்கும், வருகைக்கும் நன்றி.

தொடர்ந்து வாசியுங்கள்.

அன்புடன்
நண்பன்

அபூ முஹை said...

சகோதரர் ஷாஜஹான் அவர்களுக்கு,
முஸ்லிம்களின் தவறுகளுக்கு இஸ்லாம் விமர்சிக்கப்படுவது சரியல்ல என்பதைத்தான் நான் சொல்லியிருந்தேன். வலைப்பதிவில் அதுதான் நடந்து கொண்டிருக்கிறது. மற்றபடி இஸ்லாத்தின் பெயரால் அரங்கேற்றப்படும் தவறுகளைத் தட்டிக் கேட்கக்கூடாது என்பதல்ல.

//அத்தியாயம் - DCLXXXII - No:: 4196. Narrator: Abu Huraira.

ஹதீது நீளமென்பதால், சுருக்கமாக::

ஒரு மனிதன் அல்லாஹ்வின் தூதரிடம் வந்து, நபியே, நான் ஒரு பெண்ணைப் பலாத்காரம் செய்து விட்டேன், என்னை மன்னியுங்கள் என்று வேண்டிக் கொண்ட பொழுது, நபிகள் தன் முகத்தைத் திருப்பிக் கொள்கிறார். அவன், மீண்டும் நபிகளின் முகத்திற்கெதிராகத் தோன்றி, மீண்டும் தன் குற்றத்தைக் கூறி, மன்னிப்பு கோருமாறு வேண்டுகிறான். மீண்டும் நபிகள் தன் முகத்தைத் திருப்பிக் கொள்கிறார். அவன் மீண்டும் அந்தப் பக்கமாக.. .. இப்படியாக நான்கு முறை அவன் நபிகளின் முகத்தை நோக்கிக் கூறிய பின், நபிகள் அவனிடம் கேட்கிறார் - உனக்குப் பைத்தியாமா என்று. அவன் இல்லை என்று கூறியதும், உனக்குத் திருமணமாகிவிட்டதா என்று கேட்டு, அவன் உறுதி செய்ததும், பின்னர் அவனுக்கான தண்டனையை வழங்குகிறார்.//

... நீங்கள் குறிப்பிட்டுள்ள இந்த நபிமொழியில் பலாத்காரம் செய்து விட்டேன் என்றிருக்கிறதா? அல்லது உங்கள் கவனக்குறைவா? என்பதை உறுதி படுத்தி விடுங்கள்!

//தன்னை பலாத்காரம் செய்தவன் முகத்தைக் கூட அறிய இயலாத ஒரு பெண்ணை, நீதி கேட்ட ஒரே காரணத்திற்காக, கள்ள உறவு என்று கூறி விசாரணைக்கு உட்படுத்தியதற்கு காரணம் - நான்கு சாட்சியங்களை அவளால் தர இயலாதது.//

''தன்னை பலாத்காரம் செய்தவன் முகத்தைக் கூட அறிய இயலாத ஒரு பெண்ணை,'' - இதில் யாரைச் சொல்லியுள்ளீர்கள்? என் பதிவில் குறிப்பிட்டுள்ள நபிமொழியில் பலவந்தப்படுத்தப்பட்ட பெண்ணையா? அல்லது நீங்கள் குறிப்பிட்டுள்ள சம்பவத்தில், கண் தெரியாத பெண்ணையா? தெளிவு படுத்துங்கள்
நன்றி!

//ஒரு ஆணுடன் நேரிடையான உடலுறவு இல்லாமல் கூட ஒரு பெண் கருத்தரிக்க வாய்ப்புண்டு என்றே கருதினார்கள் - 1300 வருடங்களுக்கு முன்பு. அவர்கள் அதற்கு முன்னோடியாகக் கருதியது - கன்னி மேரியின் கர்ப்பம் - இயேசுவின் பிறப்பு. இயேசுவின் பிறப்பை நியாயப்படுத்துகிறது குரான். அதை குற்றமாகக் கருதுவது தவறு. அதனால், கர்ப்பம் ஆவது எவ்வகையிலும் சான்றாகாது. ஒரு ஆணுடன் உறவில்லாமலும் கூட கர்ப்பம் சாத்தியம் என்னும் பட்சத்தில், அதை ஆதாராமாக கொள்ள முடியாது.//

இம்ரானின் மகள் மரியம் (அலை) ஆண் துணையின்றி ஈஸா (அலை) அவர்களைப் பெற்றெடுத்ததை தமது அத்தாட்சிகளில் ஒன்றாக இறைவன் கூறுகிறான்.

ஒரு ஆணிடம் நேரிடையாக உறவு கொள்ளாமல் ஒரு பெண் கரித்தரித்ததை எதைக் கொண்டு உறுதி செய்வது?

அன்புடன்,
அபூ முஹை

நண்பன் said...

அன்பின் அபூமுஹை,

(உங்களிடம் ஷாஹிஹ் இமாம் இருப்பதாக அறிகிறேன். அதிகமாக வாசிப்பவர்களை எனக்கு மிகவும் பிடிக்கும்)

// ... நீங்கள் குறிப்பிட்டுள்ள இந்த நபிமொழியில் பலாத்காரம் செய்து விட்டேன் என்றிருக்கிறதா? அல்லது உங்கள் கவனக்குறைவா? என்பதை உறுதி படுத்தி விடுங்கள்! //

ஆங்கிலத்திலிருந்து தமிழில் மொழி பெயர்க்கப்பட்டது. ஆங்கிலத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது - I committed adultery என்று.

மொழி பெயர்க்கும் பொழுது, அதை எவ்வாறு மொழி பெயர்ப்பது. adultery என்று பொதுவாக சொல்லப்படுகிறதா, அல்லது வேறு எந்த வகை உறவையும் குறிப்பிட்டுச் சொல்கிறார்களா என்பது விளங்கவில்லை.

பாலியியல் தவறுகள் மூன்று வகையாகப் பிரிக்கப்படுகின்றது -

#1. Consensual sexual relationship between a married man and a married woman - adultery.

#2. Consensual sexual relationship between unmarried man and unmarried woman - fornication

#3. Forcible sexual relationship where the consent of the affected party is not sought. - rape.

இந்த மூன்று வகைகளுக்கும் தண்டனைகளில் வித்தியாசம் உண்டு. நபிமொழியில் கொடுக்கப்பட்ட தண்டனையைக் கருத்தில் கொண்டு, அந்த மனிதன் மணமானவனாக இருக்க வேண்டும் என்றும், பெண் விசாரிக்கப்படாததினால் அவள் குற்றமற்றவள் என்றும் கருதினேன் - மொழி பெயர்ப்பில், பலாத்காரம் என்று எழுதினேன்.

இல்லையென்றால், நிச்சயமாக யாராவது ஒருவர் இந்தக் கேள்விகளை எழுப்பக் கூடும் என்று எதிர்பார்த்து தான் மொழி பெயர்ப்பின் போது எல்லா வகை தர்க்கங்களுக்கும் பொருந்தக் கூடிய ஒரு சொல்லை உபயோகித்தேன்.

இது மொழி பெயர்ப்பவர்களுக்கு நேரக்கூடிய சிரமம். வார்த்தைக்கு வார்த்தை அப்படியே மொழி பெயர்ப்பது என்பது எப்பொழுதும் சரியாக வராது. ஒரு வார்த்தையின் சூழல் தான் அதன் பொருளை நிர்ணயிக்கிறது.

// ''தன்னை பலாத்காரம் செய்தவன் முகத்தைக் கூட அறிய இயலாத ஒரு பெண்ணை,'' - இதில் யாரைச் சொல்லியுள்ளீர்கள்? என் பதிவில் குறிப்பிட்டுள்ள நபிமொழியில் பலவந்தப்படுத்தப்பட்ட பெண்ணையா? அல்லது நீங்கள் குறிப்பிட்டுள்ள சம்பவத்தில், கண் தெரியாத பெண்ணையா? தெளிவு படுத்துங்கள் //

இதில் குறிப்பிட்டுள்ள பெண் - பாக்கிஸ்தானைச் சார்ந்த பெண்.

// ஒரு ஆணிடம் நேரிடையாக உறவு கொள்ளாமல் ஒரு பெண் கரித்தரித்ததை எதைக் கொண்டு உறுதி செய்வது? //

Sahih Imamல் என்ன விளக்கத்தை இமாம்கள் சொல்லி இருந்தார்களோ அதை மொழி பெயர்க்காமல், அப்படியே ஆங்கிலத்தில் எழுதிவிட்டேன். இது உங்களுக்குள் ஒரு கேள்வியாய் எழுந்தால், அந்தக் கேள்விக்கான பதிலாய், சோதனைக் குழாய் குழந்தைகளைப் பற்றியும் சொல்லி இருக்கிறேன். இப்படி ஒரு சட்டம் இல்லையென்றால் அது குழந்தையற்ற பல இஸ்லாமிய தம்பதிகளுக்கு நிரந்தரமான ஒரு கதவடைப்பாக இருந்திருக்கும். இப்பொழுது ஜினா என்ற குற்றத்திற்கு ஆளாகாமல் நிம்மதியாக செயற்கை முறை கருத்தரிப்பின் மூலம் குழந்தை பெற்றுக் கொள்ள முடியும். விந்தணுக்கள் - கணவனுடையதாக இருக்க வேண்டுமென்ற அவசியம் இல்லை.

மேலும், வருங்காலத்தில், குழந்தை பெறுவதற்கு உடலுறவு என்பது தேவையற்றதாகக் கூடிய சந்தர்ப்பங்கள் நிறைய வரக்கூடும்.

#1. செயற்கை முறை கருத்தரிப்பு. - இப்பொழுது நடைமுறையில் சர்வ சாதாரணமாகப் பயன்படுத்தப்படுகிறது. இங்கு ஆணுடன் கூட வேண்டிய அவசியமே இல்லை. கள்ள உறவு என்ற குற்றத்திற்கும் ஆட்படுத்தப் பட மாட்டார்கள்.

#2. க்ளோனிங் - ஒரு பிரதியிலிருந்து இன்னொரு பிரதியை அச்சு அசலாக, உயிர்ப்புடன் உருவாக்க முடியும். இதிலுள்ள தார்மீக பிரச்சினைகளைப் பேசித் தீர்த்துக் கொண்டால், இம்முறையில் உருவாக்கப்படும் உயிர்களைப் பலவகைகளில் பயன்படுத்த முடியும். ஒரே கேள்வி - Who has got more rights - the original or the duplicate? By chance, the duplicate had overpowered the original and usurped his life as his own, what would happen? இதெற்கெல்லாம் பதில் சொல்ல மனிதன் கற்றுக் கொண்டால், தனக்குத் துணையைத் தன்னிலிருந்தே தேடிக் கொள்வான் மனிதன். (ஏவாளை ஆதாமின், விலா எலும்பிலிருந்து உருவாக்கினான் இறைவன் என்று சொன்னால் கேலி செய்தவர்கள் இனி, பிரதி எடுக்கும் க்ளோனிங் முறையை எப்படி எதிர் கொள்வார்கள்?)

#3. Brain Stem Cell Research : மனிதன் எதிர்கொள்ளும் தார்மீக நெறிமுறைகளைப் பரிசோதிக்கப் போகும் மற்றுமொரு ஆராய்ச்சி. இரண்டு வார கருவிலிருந்து உருவாக்கப்படும் செல்களைப் பல்கிப் பெருகச் செய்து, மனித உடலின் பல பாகங்களையும் பழுது பார்த்துக் கொள்வது அல்லது புதிதாகவே பிரதிகள் எடுத்துக் கொள்வது. எங்கேயோ படித்த ஞாபகம் - குரானில் செல் செல்லாக மனிதன் வடிவம் பெறுவதையும், கரு ஒரு குறைந்த பட்ச வளர்ச்சி பெற்ற பின்னே அதனுள் தனி உயிர் ஊட்டப்படுகிறதென்றும் சொல்லி இருப்பதாக. (இனி மேல் தான் அது குறித்து தேட வேண்டும்.) அது உண்மை என்றால், இந்த ஆராய்ச்சி குறித்து இஸ்லாமியர்கள் எதிர்ப்புக் குரல் கொடுக்கவே கூடாது. One should learn to use science as a tool to reach God - not as a curtain to hide him.)

இப்பொழுது சொல்லுங்கள் - குழந்தை பெறுவதற்கு உடலுறவு தேவையா?

இல்லை.

இனி வருங்காலத்தில், ஆணுக்குப் பெண்ணும், பெண்ணுக்கு ஆணும் கூட தேவையற்றுப் போய்விடக் கூடும்.

Professor Bryan Sykes என்பவர் எழுதிய Adam's Curse - A future without men என்ற புத்தகத்தை வாசித்துப் பாருங்கள். (Bantam press edition - 2003 / Corgi edition published 2004) நான் இன்னமும் முழுமையாக வாசிக்கவில்லை. ஆனால், ஒரு காலத்தில் ஆண்கள் முழுமையாக இவ்வுல்கிலிருந்து அழிந்தொழிந்து விடுவார்களென்றும், இவ்வுலகம் முழுக்க முழுக்க பெண்களால் நிர்வகிக்கப்படும் என்றும், அது குறித்த விஷயங்களைப் பற்றியும் விவாதிக்கிறது புத்தகம். அது பற்றி பின்னர்.

ஆனால், வருங்காலத்தில், உடலுறவு என்பது குழந்தை பெறுவதற்காக நிகழாது.

Intercourse would be celebrated for the plesure and sake of Intercourse - not as a means to have babies!

பெண்கள் தங்கள் முழுவிடுதலையையும் உணரும் காலமாக அது அமையக் கூடும்.

அன்புடன்
நண்பன்

நண்பன் said...

ஒரு சிறு திருத்தம்:

pleasure என்பதில் ஒரு a விட்டுப் போச்சு. திருத்தி இவ்வாறு வாசியுங்கள்:

Intercourse would be celebrated for the pleasure and sake of Intercourse - not as a means to have babies!

- நண்பன்

-/பெயரிலி. said...

good post & good defence.
Thanks

அபூ முஹை said...

அன்பின் சகோதரர் ஷாஜஹான் அவர்களுக்கு,

//ஆங்கிலத்திலிருந்து தமிழில் மொழி பெயர்க்கப்பட்டது. ஆங்கிலத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது - I committed adultery என்று.//

ஆங்கிலத்தில் எப்படியோ இருந்து விட்டுப் போகட்டும்.

மூலமொழியில் பலாத்காரம் செய்து விட்டேன் என்று இல்லை! சொல்லியிருப்பது:

''ஓ அல்லாஹ்வின் தூதரே! நான் விபச்சாரம் செய்து விட்டேன்'' என்று கூறினார். மேலும் ''என்னை மன்னித்து விடுங்கள்'' என்ற வாசகமெல்லாம் இல்லை. வேறு அறிவிப்புகளில் ''என்னைத் தூய்மைப் படுத்துங்கள்'' என்று இடம் பெற்றிருக்கின்றன.

விபச்சாரம், பலாத்காரம் இவை இரண்டும், இணைக்க முடியாத வெவ்வேறு செயல்கள். விபச்சாரம் செய்தவர் தனக்கு மட்டும் தீங்கிழைத்துக் கொள்கிறார். பலாத்காரம் செய்தவர் தனக்கு தீங்கிழைத்துக் கொள்வதோடு, பிறர் உரிமையில் பலவந்தமாக அநீதி இழைக்கிறார்.

''நான் பலாத்காரம் செய்து விட்டேன்'' என்று சொன்னவரைப் பார்க்காமல், நபி (ஸல்) அவர்கள் முகத்தைத் திருப்பிக் கொண்டார்கள் என்பது, இன்னொருவருக்கு அநீதி இழைக்கப்பட்டிருக்கிறது என்று தெரிந்தும் நடவடிக்கை எடுக்காமல் முகத்தைத் திருப்பிக் கொண்டார்கள் என நபி (ஸல்)அவர்களின் மீது தவறான கருத்தை நிறுவுகிறது.

மேலும், பல கருத்துக்களை சொல்லியுள்ளீர்கள். உங்களின் சில கருத்துக்கள் மிகப் பலத்த சத்தத்துடன் திருக்குர்ஆன் வசனத்தோடு மோதுகிறது அதில் ஒன்று: ''அல்லாஹ் தான் நாடியவர்களுக்கு ஆண் குழந்தையைத் தருகிறான். தான் நாடியவர்களுக்கு பெண் குழந்தையைத் தருகிறான். தான் நாடியவர்களுக்கு ஆண் குழந்தையையும், பெண் குழந்தையையும் சேர்த்துத் தருகிறான். இன்னும் தான் நாடியவரை மலடாக்கி விடுகிறான்'' என்று இறைவன் கூறுகிறான்.

ஆனால் நீங்கள், ஒருவன் மலடாக இருந்தாலும் பரவாயில்லை அடுத்தவனின் உயிரணுவை தன் மனைவியின் கர்ப்பப் பையில் வைத்து பிள்ளைப் பெற்றுக் கொண்டு, அந்தப் பிள்ளையைத் தன் மகன், மகள் என்று சொல்லிக் கொள்ளலாமென மிகத் தாராளமாகவேத் தீர்ப்பு வழங்கியுள்ளீர்கள், லாகூர் நீதிமன்ற நீதிமான்களின்(!?) ஆதாரமற்றத் தீர்ப்பைப் போல.

முடித்துக் கொள்கிறேன் நன்றி!

அன்புடன்,
அபூ முஹை

நண்பன் said...

பெயரிலி,

மிக்க நன்றி உங்கள் வருகைக்கும், கருத்திற்கும்.

தொடர்ந்து வாசியுங்கள்

அன்புடன்
நண்பன்

ரவி said...

என்ன ரொம்ப நாளா ஆளைக்கானோம் ?

Anonymous said...

Offence of Zina

see the relevant portions...

4. Zina
A man and a woman are said to commit 'Zina' if they wilfully have sexual intercourse without being 5[] 5 married to each other.
Explanation: Penetration is sufficient to constitute the sexual intercourse necessary to the offence of Zina.


8. Proof of zina 8[] 8 liable to hadd.
Proof of zina 9[] 9 liable to hadd shall be in one of the following forms, namely:- (a) the accused makes before a Court of competent jurisdiction a confession of the commission of the offence; or
(b) at least four Muslim adult male witnesses, about whom the Court is satisfied, having regard to the requirements of tazkiyah al-shuhood, that they are truthful persons and abstain from major sins (kabair), give evidence as eye-widnesses of the act of penetration necessary to the offence:
Provided that, if the accused is a non-Muslim, the eye-witnesses may be non-Muslims.


17. Mode of execution of punishment of stoning to death
The punishment of stoning to death awarded under section 5 16[] 16 shall be executed in the following manner, namely :-
Such of the witnesses who deposed against the convict as may be available shall start stoning him and, while stoning is being carried on, he may be shot dead, whereupon stoning and shooting shall be stopped.

21. Presiding Officer of Court to be Muslim.
The Presiding Officer of the Court by which a case is tried, or an appeal is heard, under this Ordinance shall be a Muslim:
Provided that, if the accused is a non-Muslim, the Presiding Officer may be a non-Muslim.

நண்பன் said...

செந்தழல் ரவி,

மிக்க நன்றி.

வேலைப்பளு அதிகம். வியாழன் இரவு தான் எழுத முடியும்.

அதுவரை காத்திருக்க வேண்டுகிறேன்.

அன்புடன்
நண்பன்

நண்பன் said...

அனானி,

நன்றி - நான் சொல்லியவற்றையே வலியுறுத்துகின்றது நீங்கள் கொடுத்துள்ள தகவல்களும்.

வியாழன் இரவு விரிவாக எழுதுகிறேன்.

அன்புடன்
நண்பன்

நண்பன் said...

//அன்பின் சகோதரர் ஷாஜஹான் அவர்களுக்கு,

//ஆங்கிலத்திலிருந்து தமிழில் மொழி பெயர்க்கப்பட்டது. ஆங்கிலத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது - I committed adultery என்று.//

ஆங்கிலத்தில் எப்படியோ இருந்து விட்டுப் போகட்டும்

மூலமொழியில் பலாத்காரம் செய்து விட்டேன் என்று இல்லை! சொல்லியிருப்பது: //

ஆங்கிலத்தில் எப்படியோ இருந்து விட்டுப் போகட்டும். மூல மொழியில் அப்படி இல்லை என்கிறீர்கள். ஆனால், எத்தனை பேரால், மூல மொழியைக் கற்றுக் கொண்டு, அதன் நுட்பங்களைப் புரிந்து விளங்கிக் கொள்ள இயலும்? மூல மொழியை அறிந்து கொள்வது இஸ்லாத்தில் கட்டாயமில்லை. தேவையுமில்லை. குரான் வாசிப்பதற்கு தேவையான அளவு அரபு தெரிந்திருந்தால் போதுமானது. ஆனால், அதன் இன்ன பிற இலக்கியங்களை அறிந்து கொள்ள எந்த மொழியும் போதுமானது. அந்த வகையில் ஆங்கில மொழி பெயர்ப்பை வாசிப்பதில் எந்த தவறுமில்லை.


// ''ஓ அல்லாஹ்வின் தூதரே! நான் விபச்சாரம் செய்து விட்டேன்'' என்று கூறினார்...... விபச்சாரம், பலாத்காரம் இவை இரண்டும், இணைக்க முடியாத வெவ்வேறு செயல்கள். //

விபச்சாரம், பலாத்காரம் என்ற இரண்டிற்கும் வித்தியாசங்கள் உண்டு. ஆம். அதே போல விபச்சாரம் என்ற செயலை adultery என்று எவரும் மொழி பெயர்க்க மாட்டார்கள். அத்தனை பலவீனமான ஆங்கில அறிவுள்ள நபர்கள், இத்தகைய நுட்பமான பணியை மேற்கொள்ளப் போவதில்லை.

மேலும் விபச்சாரம் என்பது ஒருவரின் தனிப்பட்ட குற்றம் மட்டுமல்ல. இருவர் இணைந்து செய்யக் கூடிய குற்றம். ஒருவர் தன்னந்தனியே பாலியியல் செய்கை ஒன்றை செய்யமுடியுமென்றால், அது masturbation தான். அதெற்கெல்லாம் கல்லெறிந்து கொல்லமாட்டார்கள்!!! நான் ஏற்கனவே சொன்னது - ஒரு தர்க்கத்தின் போது இத்தகைய கேள்விகளெல்லாம் எழக்கூடும். விபச்சாரத்தில் ஈடுபட்ட ஆணின் துணை எங்கே? ஏன் அவருக்கு தண்டனை அளிக்கப்படவில்லை என்ற தேவையற்ற கேள்விகள் எழக்கூடும்.

சரி, நீங்கள் பேசப்பட வேண்டிய விஷயத்தை விட்டு விட்டு, மீண்டும் மீண்டும் மொழி பெயர்ப்பு போன்ற மேலோட்டமான விஷயங்களையே தொட்டு விட்டு செல்கிறீர்கள். அதை விட்டு விலகி, விஷயத்துக்கு வருவோமா?



// பலாத்காரம் செய்தவர் தனக்கு தீங்கிழைத்துக் கொள்வதோடு, பிறர் உரிமையில் பலவந்தமாக அநீதி இழைக்கிறார்.//

இறுதியாக நான் பேச முனைந்ததைப் புரிந்து கொண்டுவிட்டீர்கள். பிறர் உரிமையில் பலவந்தமாக அநீதி இழைக்கிறார். ஆமாம். அதை எப்படி சரி செய்வது? பாதிக்கப்பட்ட நபரின் உரிமையை எப்படி நிலை நாட்டுவது? அதைத் தானே இத்தனை நேரமும் விவாதம் செய்து கொண்டிருக்கிறோம்!

நீதிமன்றத்திற்குப் போனால், (அது தானே ஒரே இடம்..!) அங்கு நடைமுறையில் இருக்கும் சட்டத்தின் துணை கொண்டு தான் வாதிட வேண்டும். பரிதாபத்திற்குரிய கதைகள் எல்லாம் எடுபடாது. குற்றவாளிகளாக நிறுத்தப்பட்டிருப்பவர்களுக்கும் வாதிட வாய்ப்புகள் கொடுக்கப்பட வேண்டும். அதைத்தான் லாஹுர் நீதிமன்றமும் நடைமுறைப்படுத்தியது. லாஹுர் நீதிமன்றத்திற்கு புகழ் பெற்ற முக்தரன் மாயோ அல்லது உயர் சாதி மஸ்டோய்களோ ஒரு பொருட்டல்ல. நீதிமன்றத்திற்கு தேவையானது நடைமுறையில் இருக்கும் சட்டங்களை செயல்படுத்துவது தான். அதை மீறி அதற்கென்று எந்த ஒரு தேவையும் இல்லை.

என்ன சட்டங்கள் என்பதை மேலே குறிப்பிட்டிருக்கிறார் - பாக்கிஸ்தான் அரசியல் சாசனப்படி zina என்ற குற்றம் எப்படி விசாரிக்கப்பட வேண்டும் என்ற விவரம் இருக்கிறது. Zina என்ற பொதுவான சொல்லாக இருந்தாலும், அது பல பொருட்களில் விளங்கிக் கொள்ளப்படும். பலாத்காரம் என்று சொன்னாலும், முதலில் அது பலாத்காரமாக நிறுவப்பட வேண்டும். அவ்வாறு நிருபிக்கவே நான்கு சாட்சிகள் வேண்டும். அவர்களும் பக்தி நிறைந்தவர்களாக இருக்க வேண்டும். அவர்களின் சாட்சியத்திற்குப் பின்னர் தான் மற்ற சாட்சியங்கள் - ஆதாரங்கள் எல்லாம்.

இதைக் கருத்தில் கொண்டு தான் லாஹுர் நீதிமன்றம் அனைவரையும் விடுதலை செய்தது. இருக்கும் சட்டத்தின் படி குற்றம் நிருபிக்கப்படவில்லை. No rape had been proved as committed. என்று சொன்னது. லாஹுர் நீதிமன்றம் செயல்பட்டது. அதற்கு மேல் அது செயல்பட வேண்டுமென்றால் - சட்டங்கள் திருத்தப்பட வேண்டும் - ஒன்று ஹத் சட்டங்களை விட்டு விட வேண்டும் அல்லது அத்துடன் பெண்களைப் பாதுகாக்க சில திருத்தங்களை அவசியம் இணைக்க வேண்டும். பின்னர் தான் நீதி மன்றங்களின் செயல்பாடுகளைப் பற்றி விமர்சிக்க இயலும். கண்களில் கறுப்புத் துணியைக் கட்டிக் கொண்டு, தனக்கு முன்னிற்பது ஆணா, பெண்ணா, ஏழையா, பணக்காரனா, என்றெல்லாம் அறியாமலே, வாதிடப்பட்ட வாதங்கள், சமர்ப்பிக்கப்பட்ட சாட்சியங்கள், ஆதாரங்கள் போன்றவைகளைக் கொண்டு தான் தீர்ப்பளிக்க முடியும்.

மன்றங்களை அநாவசியமாக சாடுவது தவறு. - சட்டங்களை சரி படுத்துவது தான் இப்பொழுதைய அத்தியாவசியத் தேவை...!!! Its an absolute necessity to make the law straight!!!

நண்பன் said...

// ''நான் பலாத்காரம் செய்து விட்டேன்'' என்று சொன்னவரைப் பார்க்காமல், நபி (ஸல்) அவர்கள் முகத்தைத் திருப்பிக் கொண்டார்கள் என்பது, இன்னொருவருக்கு அநீதி இழைக்கப்பட்டிருக்கிறது என்று தெரிந்தும் நடவடிக்கை எடுக்காமல் முகத்தைத் திருப்பிக் கொண்டார்கள் என நபி (ஸல்)அவர்களின் மீது தவறான கருத்தை நிறுவுகிறது. //

சொல்ல வரும் விஷயங்களைத் தவிர்த்து தொடர்ந்து கவனத்தைத் திசை திருப்பும் விதமாகவே எழுதுகிறீர்கள். நான் வாசித்த ஹதீதை அதில் சொல்லப்பட்டிருந்ததை தமிழில் எழுதினேன். ஆனால், சொல்லப்படும் கருத்தை விலக்கி விட்டு, என்னுடைய மொழி பெயர்ப்பையும், மொழி நடையையும் மட்டுமே எடுத்துக் கொண்டு, ஒரு மெல்லிய அச்சுறுத்தலுடனே எழுதிகிறீர்கள்.

நபி (ஸல்) அவர்களின் மீது தவறான கருத்து தோன்றும் வகையில் எழுதுகிறேன் என்கிறீர்கள். குரானுடன் மோதுகிறேன் என்கிறீர்கள். நான் கூறிய கருத்துகளை விவாதிப்பதை விட, you are more interested in silencing me by subtly diverting my argument either towards ideas which I don’t intend to mean or towards things which many Muslims would feel hurt.

பரவாயில்லை. அபூமுஹை தானே? கோழி மிதித்து குஞ்சு செத்து விடுமா என்ன?

ஷாஹிஹ் இமாமில் adultery பற்றி விவாதிக்கும் ஹதீதுகள் பல இருக்கின்றன. எண் 4191ல் தொடங்கி, 4225 வரை இருக்கின்றன. இந்த 34 ஹதீதுகளில் நாம் விவாதிக்கும் மெய்ஸ் பின் மாலிக் என்ற அந்த மனிதனைப் பற்றிய ஹதீதுகளை கூறியவர்கள் பலர். உபாதா பின் அஸ்ஸமீத், அப்துல்லா பின் அப்பாஸ், அபூஹ¤ரைரா, ஜாபிர் பின் ஜமூரா, இப்னு அப்பாஸ், அபூ ஸாய்த், தாவூத், ஸ¤லைமான் பின் புரைடா, அப்துல்லா பின் புரைடா, இத்தனை நபர்கள் இந்த ஹதீதுகளின் விவரணையில் ஒன்றுக்கொன்று எத்தனை முரண்பாடுகள் இருக்கின்றன தெரியுமா? அப்படி இருந்தும், இந்த இமாம்கள் திருத்தி, ஒருமித்த வகையில் வார்த்தைகளைக் கோர்த்து அந்த சம்பவத்தை விவரிக்காமல், கேட்டதை கேட்டவாறே பதிவு செய்துவைத்து விட்டுப் போக வேண்டியதன் காரணம்? அவர்களுக்கு அதை மாற்ற வேண்டியதன் அவசியமில்லை. மாறாக - பல திசைகளிலிருந்தும் அறிந்து ஒரு சம்பவத்தை உறுதி செய்து கொண்டார்களே தவிர, சொல்பவரின் வார்த்தைகளை, நடையை, உத்திகளைக் கேள்வி கேட்டுக் கொண்டிருக்கவில்லை. மாறாக சொல்லப்பட்ட தகவல் உறுதிப்படுத்தப்படுகிறது. உண்மையாகிறது.

நபிகள் தங்கள் முகத்தைத் திருப்பிக் கொண்டார்கள் என்று சொல்வது அந்த மனிதன் மீதுள்ள அருவெறுப்பினாலோ, அல்லது கோபத்தினாலோ அல்ல. அவ்வாறு அவர்கள் செய்ததன் காரணம் - நான்கு சாட்சியங்களுக்கு ஒப்பாக, நான்கு முறை ஒப்புதல் வாக்குமூலம். மேலும் இது குறித்து, இமாம்கள் எழுதிய அடிக்குறிப்பு - The Holy Prophet (May peace be upon him) turned him away, thinking that he might reflect over the consequences as to what he was confessing. ஒரு குற்றவாளிக்கு எத்தனை வாய்ப்புகள் - நபிகள் தங்கள் முகத்தைத் திருப்பிக் கொண்டதன் மூலமும், திருப்பி அவனை அனுப்பி வைத்ததன் மூலமும் - he is actually discouraging him from making a confession at the height of self-pity and emotion. அவ்வளவு தான். இன்னொருவருக்கு அநீதி இழைக்கப்பட்டிருக்கிறது என்று தெரிந்து தன் முகத்தைத் திருப்பிக் கொண்டார் என்பது உங்களுடைய அதீத கற்பனை. மாறாக, நீதி என்ற பெயரில், அவசரப்பட்டு, ஒருவனை தண்டிப்பதை விட, அவனுக்குப் பலமுறை வாய்ப்புகள் வழங்கப்படுகின்றன என்பதே உண்மை.

மேலும் மன்னித்து விடுங்கள் என்று கூறவில்லை, தூய்மைப்படுத்துங்கள் என்று தான் கேட்டான் என்கிறீர்கள். இதிலென்ன பிரச்சினை? கடைசியில் கல்லால் அடித்துக் கொல்லப்பட்டானா இல்லையா? மையத்தை விட்டு விட்டு, விளிம்பிலே பயணிக்கிறீர்களே, ஏன்? எத்தனை பேர் அந்த சம்பவத்தை விவரித்திருக்கிறார்கள்? அத்தனை பேரும் ஒன்று போலவா சொன்னார்கள்? இல்லை!! ஒருவர் தூய்மைப்படுத்துங்கள் என்று கேட்டான் என்கிறார். அதற்கு நபிகள் அவனை திருப்பி அனுப்பி வைக்கிறார் (திருப்பி அனுப்பினார் என்பதை ஏற்றுக் கொள்கிறீர்களா?) இறைவனிடம் மன்னிப்பு கேள் என்கிறார். அதவாது, seek forgiveness from God என்று கூறி அனுப்பி வைக்கிறார். அவன் திரும்பவும் வந்து தன்னால், இயலவில்லை என்கிறார். இப்படியாக நான்கு முறை தொடர்கிறது. பிறகு தான் அவனுக்குத் தீர்ப்பாகிறது - கல்லடி பட்டு மரணம் என்ற தண்டனை.

இங்கு “purify” “forgiveness” என்ற இந்த இரண்டு வார்த்தைகளுமே - used interchangeably. மீண்டும் ஆங்கிலத்தில் என்னவோ இருந்துவிட்டுப் போகட்டும். ஆனால் மூலமொழியில் என்ன சொல்லி இருக்கிறது என்றெல்லாம் திசை மாறிப் பயணிக்க வேண்டாம் இந்த தர்க்கம்.

சொல்லப்பட்ட விஷயம் - பாலியியல் குற்றம் (எதுவாக இருந்தாலும்) - அது நிரூபிக்கப்பட கீழ்க்கண்ட விஷயங்கள் தேவை:

#1. நான்கு சாட்சிகள் - நல்லொழுக்கம் மிக்க, நாணயமிக்க நபர்களாக இருக்க வேண்டும் அந்த சாட்சிகள்.
#2. They should bear witness for having seen with their own eyes the physical insertion of penis into vagina. வேறெந்த செயல்களும் இந்த வகைத் தண்டனைக்குரிய குற்றமாகாது. அதாவது, கட்டிப் பிடித்தல், முத்தமிடுதல், or otherwise general flirting with ladies. அதாவது சராசரியான உணர்ச்சி வசப்படுத்தலுக்கெல்லாம் இஸ்லாம் தண்டனை தரமுற்படுவதில்லை. மாறாக, காமத்தின் உச்சத்தில், கிளர்ந்தெழுந்த புணர்ச்சிக்குத் தான் இத்தண்டனை.
#3. ஒப்புதல் வாக்குமூலம் கொடுப்பவன் தன் சுயபுத்தியில் கொடுப்பவனாக இருக்க வேண்டும். வற்புறுத்தி வாங்கப்பட்ட வாக்குமூலம் செல்லாது.
#4. புத்தி கெட்ட வகையில் இருப்பவனிடம் ஒப்புதல் வாக்குமூலம் வாங்கக் கூடாது – மது, கஞ்சா போன்ற போதையில் இருப்பவன் தரும் வாக்குமூலம் செல்லாது.
#5. நான்கு சாட்சியங்கள் இல்லாத பொழுது, ஒரு பெண்ணின் கர்ப்பம் zina என்ற குற்றத்தின் கீழ் வராது. அதனால் அதை ஒரு absolute evidence ஆகக் கொள்ள முடியாது. அது ஒரு corroborative evidence தானே தவிர, அதுவே முழுமையான சாட்சியம் ஆகாது.
#6. இஸ்லாமியர்கள் அல்லாதவர்களை அவர்கள் சமயவிதிகளின்படி தண்டிக்கவேண்டுமே தவிர, இஸ்லாமிய விதிகளின்படி அல்ல.
#7. குற்றம் சாட்டுபவர் அதற்கான நிருபணத்தையும் தரவேண்டும். இல்லையென்றால், அதற்கான தண்டனையை அவர் பெற வேண்டும். ( இதைத்தான் பெண்களுக்கு எதிராகப் பயன்படுத்துகிறார்கள்.குற்றம் சாட்டினாயல்லவா, நிரூபி, அல்லது தண்டனை பெற்றுக் கொள் - அப்பொழுது தான் அடுத்த முறை வேறெந்த பெண்ணும் வந்து குற்றம் சொல்ல மாட்டாள் )
#8. சாட்சியம் சொன்னவர் பொய் சொல்கிறார் என்று தெரிந்தால் அவருக்கும் தண்டனை உண்டு.

ஒரு பெண்ணின் மீது எவராலும் அவதூறு சொல்லிவிட்டு தப்பிப் போக முடியாது. அதே சமயம், அவளாலும் இந்த சட்டத்தின் துணை கொண்டு, ஆண் மிருகங்களிடமிருந்து தன்னை தற்காத்துக் கொள்ள முடியாது. இந்த சட்டத்தை அதன் உண்மை வடிவத்தில் உபயோகப்படுத்தப்பட இயலாமல் போய்விட்டது. இதை பயன்படுத்தி, ஒரு பெண் தன்னைத் தற்காத்துக் கொள்ள - அந்த சட்டத்தின் மூல பயன்பாட்டை அடைய, அந்த சட்டத்தை மேலும் வலுவாக்க வேண்டும். தேவை - சில திருத்தங்கள். Its an absolute necessity to make the law straight further.
.

அபூ முஹை said...

சகோதரர் ஷாஜஹான் அவர்களுக்கு,
நீங்கள் என்ன எழுதியிருக்கிறீர்களோ அதில் தான் நான் குறுக்கீடு செய்துள்ளேன். நான் சம்பந்தமில்லாமல் எழுதவில்லை!

மொழி ஒரு முக்கியமில்லை, எந்த மொழியையும் அதே மொழியில் படித்தே விளங்க வேண்டுமென்ற அவசியமும் இல்லை. மூலமொழியிலிருந்து நேரடியாகத் தமிழுக்கு மொழி பெயர்த்தவர்கள் விபச்சாரம் என்று மொழி பெயர்த்துள்ளார்கள். அதுவே, மூலத்திலிருந்து ஆங்கிலம், ஆங்கிலத்திலிருந்து தமிழ் என்று மொழி பெயர்த்தால் விபச்சாரம், பலாத்காரமெனத் தவறானக் கருத்ததைத் தருமென்றால், தவறானக் கருத்தைச் சொல்லும் அந்த ஒரு வார்த்தைக்கு இடைமொழி பெயர்ப்புத் தேவையில்லையென்று சொல்கிறேன். அதற்காக எந்த மொழி பெயர்ப்பும் தேவையில்லை என்பது என் நிலைப்பாடல்ல.

ஒரு மொழியில் சொல்லப்பட்ட வார்த்தையை இன்னொரு மொழிக்கு பெயர்க்கும் போது கண்டிப்பாக கருத்தின் பொருள் மாறக்கூடாது. சட்டம் சம்பந்தப்பட்ட வார்த்தைகளில் அப்படி மாறுமேயானால் அது சிக்கலை உருவாக்கும்.

உதாரணமாக: விபச்சாரக் குற்றத்திற்கு திருமணமாகாதவர்கள், திருமணமானவர்கள் என்று இருவகையான தண்டனைகளை வகைப்படுத்தியிருக்கிறது இஸ்லாம். ஆனால் பலாத்காரத்திற்கு அந்த அளவுகோல் இல்லை! விபச்சாரத்தை, பலாத்காரம் என்றும் சொல்லலாமென்றால் நீங்கள் குறிப்பிட்டுள்ள நபிமொழியில் ''உமக்குத் திருமணம் ஆகி விட்டதா''? என்று கேட்டு உறுதி செய்யப்படுகிறது. இது விபச்சாரக் குற்றம் என்பதையேத் தெளிவுபடுத்துகிறது. மணமானவர், மணமாகதவர் யாராக இருந்தாலும் பலவந்தம் செய்தவருக்கு ஒரே தண்டனைதான், மரண தண்டனை.

// ''நான் பலாத்காரம் செய்து விட்டேன்'' என்று சொன்னவரைப் பார்க்காமல், நபி (ஸல்) அவர்கள் முகத்தைத் திருப்பிக் கொண்டார்கள் என்பது, இன்னொருவருக்கு அநீதி இழைக்கப்பட்டிருக்கிறது என்று தெரிந்தும் நடவடிக்கை எடுக்காமல் முகத்தைத் திருப்பிக் கொண்டார்கள் என நபி (ஸல்)அவர்களின் மீது தவறான கருத்தை நிறுவுகிறது. //- அபூ முஹை
//நபிகள் தங்கள் முகத்தைத் திருப்பிக் கொண்டார்கள் என்று சொல்வது அந்த மனிதன் மீதுள்ள அருவெறுப்பினாலோ, அல்லது கோபத்தினாலோ அல்ல. அவ்வாறு அவர்கள் செய்ததன் காரணம்// - நண்பன்
சொல்வதை முதலில் நன்கு விளங்கிக் கொள்ளுங்கள். அப்படி விளங்கவில்லையென்றால் மீண்டும் கேட்டுத் தெளிவு பெற்றுக் கொள்வதில் தவறில்லை!

மாயிஸ் இப்னு மாலிக் (ரலி) வந்து, ''நான் பலாத்காரம் செய்து விட்டேன்'' என்று சொல்லியிருந்தால் நபி (ஸல்) அவர்கள், அவரைத் திரும்ப அனுப்பியிருக்க மாட்டார்கள். அதாவது அவர் பிடிக்கப்பட்டு, அவர் மீது நடவடிக்கை எடுப்பது அவசியமாகிறது. என்ற அர்த்தத்திலேயே சொல்லியிருந்தேன்.

அபூ முஹை said...

அடுத்து...

//மேலும் மன்னித்து விடுங்கள் என்று கூறவில்லை, தூய்மைப்படுத்துங்கள் என்று தான் கேட்டான் என்கிறீர்கள். இதிலென்ன பிரச்சினை?//

பிரச்சினை இருக்கிறது என்பதாலேயே நபிமொழியில் இல்லாததை இருப்பதாக நீங்கள் வாசிப்பதை மறுத்து வருகிறேன்.

எத்தனை அறிவிப்புகள் இருந்தாலும், அத்தனையிலும் நபித்தோழர் மாயிஸ் இப்னு மாலிக் (ரலி) நபியை நோக்கி ''என்னை மன்னித்து விடுங்கள்'' என்று சொல்லவில்லை. இதை ஒப்புக் கொள்ள மனமில்லாமல் எவ்வளவு நீளமாக நீங்கள் எழுதினாலும் சொல்லாதது சொன்னதாகி விடாது.

மனிதனுக்கு மனிதன் செய்யும் தீங்குகளுக்காகவே தீங்கிழைத்தவர், தீங்கிழைக்கப்பட்டவரிடம் வருந்தி மன்னிப்புக் கேட்டுக் கொள்ள வேண்டும். விபச்சாரத்தைப் பெரும் பாவத்தின் பட்டியலில் இஸ்லாம் சேர்த்திருக்கிறது. பாவங்களை மன்னிக்கும் அதிகாரம் எவருக்கும் இல்லை - நபிக்கும் இல்லை! இறைவன் ஒருவன் மட்டுமே பாவங்களை மன்னிப்பவன், அவனிடமே பாவமன்னிப்புக் கோர வேண்டும் என்று திருக்குர்ஆன் சொல்கிறது.

விபச்சாரமென்ற பாவத்தைச் செய்து விட்டு, கேட்காத மன்னிப்பை நபியிடம் சென்று கேட்டார் என்று சொல்வது திருக்குர்ஆன் மற்றும் வேறு நபிமொழிகளுக்கும் முரண்படுகிறது.

பாவத்தில் விழுந்தவர், பாவத்திலிருந்து தன்னைச் சுத்தப்படுத்திக் கொள்ள பரிகாரம் நாடியே, நபி (ஸல்) அவர்களிடம் வந்து ''என்னைத் தூய்மைப்படுத்துங்கள்'' என்று கேட்கிறார். இதை விளங்கிக் கொண்டால் ''என்னைத் துய்மைப்படுத்துங்கள்'' என்பதை ''என்னை மன்னியுங்கள்'' என்று கருத வாய்ப்பில்லை!

//இறைவனிடம் மன்னிப்பு கேள் என்கிறார்.// - இது எப்படி நபியிடம் மன்னிப்புக் கேட்டார் என்றாகும்!

அபூ முஹை said...

abudawud
Book 38, Number 4366:
Narrated Wa'il ibn Hujr:

When a woman went out in the time of the Prophet (peace_be_upon_him) for prayer, a man attacked her and overpowered (raped) her.

She shouted and he went off, and when a man came by, she said: That (man) did such and such to me. And when a company of the Emigrants came by, she said: That man did such and such to me. They went and seized the man whom they thought had had intercourse with her and brought him to her.

She said: Yes, this is he. Then they brought him to the Apostle of Allah (peace_be_upon_him).

When he (the Prophet) was about to pass sentence, the man who (actually) had assaulted her stood up and said: Apostle of Allah, I am the man who did it to her.

He (the Prophet) said to her: Go away, for Allah has forgiven you. But he told the man some good words (AbuDawud said: meaning the man who was seized), and of the man who had had intercourse with her, he said: Stone him to death.

He also said: He has repented to such an extent that if the people of Medina had repented similarly, it would have been accepted from them.

எனக்கு ஆங்கிலம் தெரியா விட்டாலும் - இது இணைப்பில் நான் எழுதியிருந்த ஒரு பெண் பலாத்காரம் செய்யப்பட்டது சம்பந்தமாக, அபூ தாவூவுதில் அறிவிக்கப்படும் நபிமொழியின் ஆங்கில மொழி பெயர்ப்பு. - வன்புணர்ச்சி எப்படி மொழி பெயர்க்கப்பட்டுள்ளது என்பதற்காகவே இங்கு இதைக் குறிப்பிடுகின்றேன். மற்றபடி நீங்கள் நம்ப வேண்டும் என்பதற்காக அல்ல.

இப்படிக்கு
வெகுளி+கோழி=வெகுளியான கோழி

நண்பன் said...

// லாகூர் நீதிமன்ற நீதிமான்களின்(!?) ஆதாரமற்றத் தீர்ப்பைப் போல. //


'லாஹுர் நீதிமன்ற நீதிமான்களின் ஆதாரமற்றத் தீர்ப்பைப் போல..'

ஆஹா!

லாஹுர் நீதிமன்றத் தீர்ப்பு மிக தவறானது. அது திருத்தி எழுதப்பட வேண்டும் என்றுதானே நானும் சொல்கிறேன்!!! அப்படியானால், நீங்களும் ஒத்துக் கொள்கிறீர்கள் - முக்தரனுக்கு வழங்கப்பட்ட தீர்ப்பு திருத்தி எழுதப்பட்டு, நீதி காக்கப்பட வேண்டும் என்று.

வேறுபாடு வருவது ஓரிடத்தில் மட்டுமே.

எந்த சட்டங்களின் அடிப்படையில் தீர்ப்பைத் திருத்தி எழுதுவது? இருக்கும் சட்டங்களைக் கொண்டு, தீர்ப்பு திருத்தி எழுதப்பட முடியாது. நீங்கள் குறிப்பிட்ட, ஒற்றைச் சாட்சியம் (அதுவும் சுய சாட்சியம்) மற்றும் மருத்துவ பரிசோதனையை முழுமையான சாட்சியமாக ஏற்றுக் கொள்ளுதல் எதன் அடிப்படையில் என்று தெரியவில்லை. அதற்கான அடிப்படையை, எங்கு அவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது என்று தெரியப்படுத்த வேண்டும்.

'நான் ஏற்கெனவே சொல்லி வருவதுதான். இஸ்லாத்தின் சட்டங்களை முஸ்லிம்கள் நிறைவேற்றி வர வேண்டும்.' என்று மட்டுமே சொல்கிறீர்களே தவிர, அதன் மூலம் என்ன என்று தெரியப்படுத்தவில்லை.

மேலும்,

நண்பன் said...

// ஆனால் நீங்கள், ஒருவன் மலடாக இருந்தாலும் பரவாயில்லை அடுத்தவனின் உயிரணுவை தன் மனைவியின் கர்ப்பப் பையில் வைத்து பிள்ளைப் பெற்றுக் கொண்டு, அந்தப் பிள்ளையைத் தன் மகன், மகள் என்று சொல்லிக் கொள்ளலாமென மிகத் தாராளமாகவேத் தீர்ப்பு வழங்கியுள்ளீர்கள் ஸ//

இது ஒரு ஆணிற்குள்ள பிரச்சினை. தன் மனைவியின் கர்ப்பத்தில் இன்னொருவனின் வித்து. இது ஒரு இஸ்லாமியனுக்கு மட்டுமுள்ள பிரச்சினையா என்ன? இல்லை. எந்த ஒரு ஆணாலும் ஜீரணிக்க முடியாத விஷயம்.

// ஒரு ஆணிடம் நேரிடையாக உறவு கொள்ளாமல் ஒரு பெண் கரித்தரித்ததை எதைக் கொண்டு உறுதி செய்வது? // நீங்கள் கேட்ட இந்த hypothetical கேள்விக்குப் பதிலாக, பலவகை சாத்தியங்களையும் பதிலாக எடுத்து வைத்தேன். ஒரு பெண்ணின் பிறப்புறுப்பில், ஆணுடைய விந்தணு போவதற்கு, உடலுறவு இல்லாத சாத்தியதைகள் இருக்கின்றன என்று இமாம்கள் ஒப்புக் கொண்டதால், அது ஜினா என்ற குற்றத்தின் வராது என்றேன்.

கணவனல்லாத பிறன் ஒருவனின் விந்துவைச் சுமந்து குழந்தை பெறுவதை இஸ்லாம் ஏற்கிறதா இல்லையா என்பதைப் பற்றி நான் எந்தக் கருத்தும் கூறவில்லை. ஏனென்றால், அது இந்தப் பதிவின் நோக்கமே அல்ல. இந்த வரிகளை மறுப்பதற்கு நீங்கள் பல காரணங்களைக் கூறியிருக்கலாம். ஆனால், தன் மனைவியின் கர்ப்பத்தில் மற்றொருவனின் குழந்தை என்ற ஆண் மனபாவத்தைக் குறிப்பிட்டு அசூயை அடைந்திருக்கிறீர்கள். அது எல்லா ஆண்களுக்கும் பொதுவானது.உடலுறவில்லாத குழந்தை பெறுவதற்கான சாத்தியதைகளில், ஒன்று விடுபட்டு போனது - அது தான் வாடகைத் தாய்! (Surrogate mother.)

இவற்றில் எவற்றை இஸ்லாம் ஏற்கிறது? எவற்றை மறுக்கிறது? செயற்கை முறை கருத்தரிப்பை இஸ்லாம் ஏற்றுக் கொள்கிறது - ஒரு நிபந்தனையுடன்.

கணவன், மனைவியின் உயிரணுக்களாக மட்டுமே இருக்க வேண்டும். மூன்றாம் நபர் இதில் இருக்கக் கூடாது. திருமணம் நடைமுறையில் இருக்க வேண்டும். (விவாக ரத்து
அல்லது மரணம் திருமணத்தை முறித்து விடும்.) மருத்துவர், மருத்துவமனையின் நம்பகத்தன்மையை விசாரித்து அறிந்திருக்க வேண்டும். (விந்தணுக்களை மாற்றி செலுத்தி விடாமல் இருக்கத் தான்.) வாடகைத் தாய் விஷயத்திலும் இதே. ஆனால், வாடகைத் தாய் விஷயத்தில், குழந்தையின் உண்மையான தாய், வாடகைத் தாய் தான். தந்தை விந்துவின் உரிமையாளன். இந்த ஏற்பாட்டின் மூலம், ஆணின் வம்சாவளி காக்கப்படுகிறது. மனைவி வெறும் வளர்ப்புத் தாயாக மட்டுமே இருக்க முடியும்.

கணவனால், எந்த வகையிலும் சந்ததி உண்டாக்க இயலாது என்ற பின்னும், வேறொருவனின் விந்துவின் மூலம் கர்ப்பம் தரித்து பெண்ணிற்குரிய தாய்மை என்ற உரிமையை வழங்கக் கூடாது?
காரணங்கள் -

#1. கணவனின் வம்சாவளியை இது பாதுகாக்காது.
#2. சொத்துரிமையை இது பாதிக்கும் - ஒருவனின் சொத்து, பல பங்குகளாகப் பிரிக்கப்பட்டு, தாய், தந்தை, மனைவி, மகன், மகள், சகோதரன், சகோதரி என்று பலருக்கும் பல விகிதங்களின் படி வழங்கப்படுகிறது. இது ரத்த உறவுகள் மட்டுமே பங்கேற்கக் கூடிய சொத்துரிமை. ரத்த உறவல்லாத ஒரு நபர் அந்த குடும்ப அங்கத்தினராக முடியாது.
#3. “Biological father” மட்டுமே, ஒருவனின் உண்மையான தந்தையாக முடியும். மற்றபடி எத்தனை தான், ஊட்டி ஊட்டி வளர்த்தாலும், பாசம் கொட்டி வளர்த்தாலும், சொந்த ரத்தத்தில் உதிக்கவில்லை என்றால், அவன் ஒரு அந்நியனே. ஒரு அந்நிய ஆண் வீட்டிற்குள் நுழையும் பொழுது, என்ன என்ன வழிமுறைகளைக் கடை பிடிக்க வேண்டுமோ அத்தனையும் அவன் கடைப்பிடித்தாக வேண்டும்.
#4. வளர்ப்புத் தந்தையின் பெயரை தன் பெயருடன் சேர்த்துக் கொள்ளக் கூடாது.
#5. தந்தை எவர் என்ற உறுதி இல்லாத பொழுது, நாளை அதே தந்தைக்குள்ள ஒரு மகனுடனோ அல்லது மகளுடனோ திருமணம் செய்து கொள்ள நேரிட்டால், அது தகாத உறவாகிவிட வாய்ப்புகள் உண்டு. இதை ஒழிக்கும் ஒரு முன்னேற்பாடாகவும், இத்தகைய கர்ப்பங்களை மேற்கொள்ளக்கூடாது.

அந்தக் காலத்தில் இருந்த தத்தெடுத்தல் முறையை ஒழித்த பொழுது, ஏற்படுத்தப்பட்ட சட்டங்கள் இவை. விவாகரத்து செய்யப்பட்ட பெண்களுக்கு, குழந்தைகள் மீதான உரிமை மறுக்கப்படுவதும் இதன் காரணமாகத் தான். மறுமணம் செய்யும் பொழுது, இந்தக் குழந்தைகள் புதிய கணவன் வீட்டிற்குச் செல்லும் பொழுது, அந்நியர்களாகவே கருதப்படுவார்கள். அவ்வாறே அவர்களும் நடந்து கொள்ள வேண்டும். இதன் காரணமாகவே அந்தக் குழந்தைகள் கணவனிடத்தில் ஒப்படைக்கப்பெறுகின்றன. இந்த விதிகளை எல்லாம் அழுத்தம் திருத்தமாக விளங்க வைக்க - தத்தெடுத்த குழந்தை ஒரு அந்நியனே என்பதை நிரூபிக்க இறைவன் விரும்பிய திருமணம் தான் - ஜைனப்பின் திருமணம். மற்றெந்த வகையிலும் இந்த தத்தெடுத்தலைப் பற்றிய சந்தேகங்களைத் தீர்க்க முனைந்தாலும் அது மீண்டும் மீண்டும் விவாதத்திற்குட்படுத்தப் படும் என்பதாலேயே நபிகளை முன்மாதிரியாக வைத்து இவ்வகை தத்தெடுத்தலை தடை செய்யப்பட்டது. இல்லையென்றால் - சொத்துரிமை சிக்கல்களால், பல இஸ்லாமியர்கள் நீதிமன்றங்களில் ஏறி நிற்க வேண்டியதிருக்கும்.

நவீன கால தத்தெடுப்பில் கூட சிக்கல்கள் உண்டு. பெற்றவர், வளர்ப்பவர் ஒப்புதல் வேண்டும். அது ஒரு நீண்ட சட்ட சிக்கல் நிறைந்த அடிப்படை. பண பரிமாற்றம் கூட நிகழ்கின்றன. பெற்றவர் - பிள்ளை என்ற உறவே பொருளின் அடிப்படையில் நிகழ்கிறதென்றால், அங்கு என்ன பாசம் வந்துவிடும்? கொடுத்தவர் நாளை மனம் மாறி என் குழந்தையைத் திருப்பிக் கொடு என்று கேட்டால், அது மீண்டும் ஒரு பலத்த சட்டசிக்கலிலும், சர்ச்சையிலும் முடியக்கூடும். Madonna, Angelina Jolie போன்ற பணம் படைத்த தாய்மார்கள் - adoption - தத்தெடுத்தலை எத்தனை கேலிக்குரியதாக மாற்றிக் கொண்டார்கள் - கண்டத்திற்கு ஒரு பிள்ளை வேண்டும், வண்ணத்திற்கு ஒரு பிள்ளை வேண்டும் - அது குறித்தான சர்ச்சைகள் எத்தனை?

இந்த தத்தெடுத்தலை தடை செய்து ஏற்படுத்தப்பட்ட திருமணத்தை சிலர் குறிப்பாக கிறித்தவ நிறுவனங்கள் மிகத் தீவிரமாக எதிப்பது ஏன்? காரணம் - அது கிறித்துவ தத்துவமான - தேவகுமாரன் என்ற கருத்தியலை முற்றிலுமாக மறுக்கிறது. தந்தை மகன் உறவு, ரத்த சமபந்தத்தால் மட்டுமே நிகழும் - கணவன் மனைவிக்குள் நிகழ்ந்த உடலுறவின் பயனாய், பிறக்கும் குழந்தையே தந்தையின் மீது உரிமை கொண்டாட முடியும் என்ற நிலையை இஸ்லாம் முன்வைத்த பொழுது, இறைவனின் மகன் என்ற நிலைக்கு உயர்த்தப்பட்ட தேவகுமாரன் என்ற நிலைபாட்டை முற்றிலுமாக இஸ்லாம் நிராகரித்து விட்டது. ஜைனப்பின் திருமணத்தை கிறித்துவர்கள் ஏற்றுக் கொண்டால், அவர்கள் தங்கள் தேவகுமாரன் கொள்கையிலிருந்து பிறழ வேண்டும். அதனால், அந்தத் திருமணத்தை - கேலி செய்வதன் மூலம் - by ridiculing the marriage of Zainab with the Prophet - தங்களின் சொந்தப் படைப்பான - கி.பி.325ல் ஒரு மன்னனால் முன்மொழியப்பட்டு இறைகுமாரனாக இன்றளவும் பெருமளவில் வணங்கப் பட்டு வரும் தேவகுமாரனைப் பாதுகாக்க முடியும். இன்று பெருமளவில், இயேசு மூன்று நூற்றாண்டுகள் வரையிலும் ஒரு சிறப்புமிக்க இறைத்தூதராக மட்டுமே இருந்தார் என்பது ஏற்கப்பட்டுவிட்டது - கிறித்தவர்களாலேயே.

இத்தனை விவகாரங்கள் நிறைந்த “bioligical father” விவகாரத்தைக் குறிப்பிட்டு, நீங்கள் மறுத்தீர்களென்றால் நான் சந்தோஷப்பட்டிருப்பேன். ஆனால், நீங்கள் வெறுமனே ஒரு ஆணின் மனோபாவத்தை மட்டுமே குறிப்பிட்டு மறுத்தது, உங்கள் கருத்தை உறுதிப்படுத்துகிறது - நீங்கள் இப்படிக்கு என்று கூறிய உங்கள் கருத்தை.

அப்படியானால், இந்த செயற்கை கருத்தரிப்பை மறுக்கிறேன் என்கிறீர்களா? ஆம், இல்லை என்ற பதிலுக்கு முன், ஒரு பெண்ணின் பார்வையிலிருந்து இந்த மூன்றாவது நபரின் குழந்தையைப் பார்த்து விடுவோம் - அது குறித்து.. ..

நண்பன் said...

// மேலும், பல கருத்துக்களை சொல்லியுள்ளீர்கள். உங்களின் சில கருத்துக்கள் மிகப் பலத்த சத்தத்துடன் திருக்குர்ஆன் வசனத்தோடு மோதுகிறது அதில் ஒன்று: ''அல்லாஹ் தான் நாடியவர்களுக்கு ஆண் குழந்தையைத் தருகிறான். தான் நாடியவர்களுக்கு பெண் குழந்தையைத் தருகிறான். தான் நாடியவர்களுக்கு ஆண் குழந்தையையும், பெண் குழந்தையையும் சேர்த்துத் தருகிறான். இன்னும் தான் நாடியவரை மலடாக்கி விடுகிறான்'' என்று இறைவன் கூறுகிறான். //


நீங்கள் குறிப்பிடும் இந்த வசனம் - 42:49-50. சரி இதனுடைய முழுமையான விளக்கமென்ன? தான் நாடியவர்களுக்கு என்று குறிப்பிடும் பொழுது அது ஆண் மட்டும் தானா? அல்லது பெண் மட்டும் தானா? அல்லது இருவரையும் சேர்த்து, குடும்பம் என்ற பந்தத்தை நோக்கி சொல்கிறானா?

குடும்பம் என்ற பந்தத்தை நோக்கி அல்ல. தனி மனிதர்களைக் குறித்து தானே அது? அது ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும் ஒரு தனி நபரைக் குறித்து தானே அது? அப்படியானால், அவன் விரும்பிய ஆணை மலடாகவோ அல்லது ஜீவசக்தியுள்ள மனிதனாகவோ செய்யலாம். அது போலவே ஒரு பெண்ணையும் ஜீவசக்தியுள்ள பெண்ணாகவோ அல்லது மலடியாகவோ செய்யலாம் இல்லையா? அது இறைவனின் நாட்டம். அவனது விருப்பம். அதை மீறி நம்மால் எதுவும் செய்ய இயலாது. ஆனால், ஒரு ஆணும் பெண்ணும் இணைந்து செய்த திருமணத்தையே மலடாக்கிவிடுவேன் நான் நாடினால் என்று இறைவன் சொல்லவில்லை அல்லவா? இறைவன் ஆயிரத்து நானூறு ஆண்டுகளுக்கு முன்னர் குரானை இறக்கித் தந்த பொழுது, வாழ்வின் பல உன்னதங்கள் நமக்குத் தெரியாது. ஆணும் பெண்ணும் குழந்தை உண்டாகும் வாய்ப்புள்ளவர்களா என்று அறிந்து கொள்ளும் வசதிகளற்ற காலத்தில், இந்த வசனத்தை அது குரானில் காணப்படுவதின் காரணமாக, இறைவன் அறிவித்துவிட்ட காரணத்திற்காக மட்டுமே ஏற்றுக் கொண்ட பொழுது, இந்த வசனம் ஆய்வுக்கு உட்படுத்தவில்லை. ஆனால், இன்று உடல்ரீதியாக தங்களுக்கு குழந்தை பெறும் வாய்ப்புள்ளதா என்று அறிந்து கொள்ளும் வசதிகள் இருக்கும் பொழுது, இந்த வசனத்தை மீண்டும் நோக்கிப் பாருங்கள் - இந்த வசனத்தின் பொருளில் ஏதாவது மாற்றம் தெரிகிறதா?

இஸ்லாத்தில், திருமணம் என்பது ஒரு ஒப்பந்தம் மட்டுமே. சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்டதாகவோ, அல்லது இறைவன் போட்ட முடிச்சாகவோ நாம் கருதுவதில்லை.

ஒப்பந்தம்.

அதுவும் நாமே பார்த்து முடிவு செய்து கொண்ட ஒரு ஒப்பந்தம்.

உங்களுக்கு Contract Law பற்றி தெரியுமல்லவா? ஒப்பந்தத்தின் பல சரத்துகளையும் உற்று நோக்கி ஆய்வு செய்து, திருப்தியான பின்னரே கையெழுத்திட்டு நடைபெற வேண்டும். அதனால் தான் நாம் மணமக்களின் கையெழுத்தையும், சாட்சிகளின் கையெழுத்தையும் பதிவு செய்கிறோம். அப்படியானால், ஆண், பெண் இருவருமே தங்களுக்கிடையேயான எல்லா தகவல்களையும் உண்மையாகப் பரிமாறிக் கொள்ளலாமே? அல்லது விசாரித்து தெரிந்து கொள்ளலாமே? அதைச் செய்யாமல், பின்னர் அதை இறைவனின் நாட்டம் என்று சொல்லி தங்களைத் தாங்களே சமாதானப்படுத்திக் கொள்வது எந்த வகையில் நியாயம் என்று சொல்லுங்களேன்? அறிவியல் முழுமையாக வளராத காலத்தில், ஒரு மனசாந்திக்காக, இறைவசனங்களை ஓதி, மனதை ஆற்றிக் கொள்ளலாம் - அதுவும் பெண்களுக்கு மட்டுமே விதிக்கப்பட்டது. ஆண்கள், மேலும் மூன்று மனைவியரைக் கட்டிக் கொண்டு, அவர்களையும் மலடிகளாக்கி விட்டு, பிறகு எல்லோருமாக சேர்ந்து, தங்கள் மனசாந்திக்காக, இறைவன் தான் நாடியவர்களுக்கு தருகிறான் என்று சமாதானப்படுத்திக் கொண்டார்கள். ஆனால், அது அறிவியல் வசதிகளற்ற காலம்.

ஒரு இறைவேதம், இறக்கப்பட்ட காலத்திற்கு மட்டும் தான் சொந்தமில்லை. அது காலம் கடந்து, தன் பொருளிலிருந்து மாறாமல், தொடர்ந்து மக்களை வழிகாட்டி நடத்திச் செல்ல வேண்டும். அவ்வாறின்றி, அந்த வசனங்களை மீண்டும் மறுவாசிப்புக்கு உட்படுத்தாமல், அதன் விளக்கங்கள் மொழியப்பட்ட காலத்திலே உறையவைத்து, இன்றைய தேவைகளுக்கும் அன்றைய விளக்கங்களைக் கொண்டே வழிகாட்டுதல் பெறவேண்டுமென்பது விதி அல்ல.

திருமணங்கள் எதற்காக விதிக்கப்பட்டன? சந்ததி வளரவும். குடும்பம் என்ற அமைப்பு உறுதியாக இருக்கவும் தான். இத்துடன் மனிதனின் - ஆண் பெண் இருவரின் உடலின் தேவைகளும் நியாயமான விதிகளுக்குட்பட்டு, இல்லற இன்பத்தை அனுபவிக்கவும் தான். கணவன் மனைவியருக்கிடையிலான இன்பத்தை இஸ்லாம் மறுக்கவில்லை. இன்னும் சொல்லப் போனால், அதிலிருந்து விலகி நடந்தால், அதைக் காரணம் காட்டி, திருமண முறிவு கூட கோரலாம். இப்படி, குடும்பம் தழைக்க, சந்ததி பெருக, செய்யப்படும் ஒரு ஒப்பந்தத்தை அது நிறைவேற வாய்ப்பிருக்கிறதா என்று தெரிந்து கொள்ளாமலேவா திருமணம் செய்து கொள்வார்கள்?

இன்று மருத்துவ பரிசோதனைகள் மூலம் - நிச்சயமாகத் தெரிந்து கொள்ளலாம் - ஒரு ஆண் அல்லது பெண் குழந்தை பெறும் தகுதி உடையவர் தானா என்று. அந்த வசதிகள் இருக்கும் பொழுது, அதை பயன்படுத்திக் கொள்ளாமல், பின்னர் அதை இறைவனின் நாட்டம் என்று சொல்லும் பொழுது, தகுதியற்ற ஒருவர் மூலம் தகுதியுடைய ஒருவரையும் சேர்த்தல்லவா, பாதிப்படையச் செய்கிறார்கள்? இறைவன் நாடிய ஒருவரையும் கூடச் சேர்த்துக் கொண்டல்லவா மலடாக்குகிறார்கள்? ஆண் தனக்குள்ள வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு, இறைவன் தன்னை நாடியவனா என்று பரிசோதித்துக் கொள்கிறான் - மறுமணம் செய்து கொண்டு! ஒன்றல்ல, இரண்டல்ல, நான்கு வரை செய்து கொண்டு, தன் மீது இறைவன் கொண்ட நாட்டத்தை நிரூபிக்கும் பொழுது, ஒரு பெண்ணிற்குரிய வாய்ப்புகள் என்ன? திருமண முறிவு பெற்று வேறு ஒரு திருமணத்தின் மூலம் தான் அவள் தன்னை இறைவன் நாடியவளாக நிரூபிக்க முடியும் இல்லையா? ஆனால் ஒவ்வொரு பெண்ணுக்கும் இதுதானா வழி? அல்லது பெண்ணுக்குத் தான் அத்தனை எளிதில் மணமுறிவு கிடைத்து விடுமா என்ன? இறைவன் நாடினாலும், அதை ஒரு ஆண் தன் இயலாமையினால் மறுப்பதேன்?

சற்று முன்னேற்பாட்டுடன் சில மருத்துவ பரிசோதனைகள் மூலம் தெளிவுபடுத்திக் கொண்டு, திருமண ஏற்பாடுகள் செய்து கொண்டால், பிறகு இந்த AITP, IVF, Surrogate Mother, போன்ற விவாதங்களே தேவையற்றுப் போயிருக்கும். இதைத் தான் இறைவன் முன் அறிவிப்பு செய்கிறான் குரானில். ஒவ்வொரு காலத்திலும் இருக்ககூடிய வசதிகளைக் கொண்டு, குரானைப் புரிந்து கொள்ள வேண்டுமே தவிர, இந்த அறிவியல் வசதிகள் வளர்ச்சி பெறாத காலத்தில் வழங்கப்பட்ட விளக்கங்களை வைத்துக் கொண்டு, தன்னைத் தானே இழப்பிற்குள்ளாக்கிக் கொள்வது எந்த வகையில் சரி?

ஒரு பெண்ணின் கடமையாக இஸ்லாம் சொல்லுவது - குடும்பம் என்ற அமைப்பை வளர்ப்பது - குழந்தைகளை வளர்ப்பது என்கின்றது!. அதற்கான வாய்ப்பே கொடுக்காமல், எப்படி இந்த கடமைகளைச் செய்வது?

இப்பொழுது சொல்லுங்கள் - என் கருத்து எந்த வகையில் குரானுடன், பலத்த சப்தத்துடன் மோதுகிறது.? ஒரு ஒப்பந்தத்தைத் தவறாக செய்து கொண்டு, பின் அதிலிருந்து விடுபடுவதற்கான வழிமுறைகளை ஆராய்ந்தால், அது பலத்த சப்தத்துடன் மோதுவதாக ஆகாது. இறைவனின் எச்சரிக்கையை ஏற்றுக் கொண்டு, அதை முதலில் சரியாக செயல்படுத்தாமல் - தவறு செய்ததை சரி என்பதால் - அது மட்டும் மெல்லிய முனகலுடனாவது இறைவனுடன் மோதுவதாக ஆகாதா?

நண்பன் said...

// மொழி ஒரு முக்கியமில்லை, எந்த மொழியையும் அதே மொழியில் படித்தே விளங்க வேண்டுமென்ற அவசியமும் இல்லை. மூலமொழியிலிருந்து நேரடியாகத் தமிழுக்கு மொழி பெயர்த்தவர்கள் விபச்சாரம் என்று மொழி பெயர்த்துள்ளார்கள். அதுவே, மூலத்திலிருந்து ஆங்கிலம், ஆங்கிலத்திலிருந்து தமிழ் என்று மொழி பெயர்த்தால் விபச்சாரம், பலாத்காரமெனத் தவறானக் கருத்ததைத் தருமென்றால், தவறானக் கருத்தைச் சொல்லும் அந்த ஒரு வார்த்தைக்கு இடைமொழி பெயர்ப்புத் தேவையில்லையென்று சொல்கிறேன். அதற்காக எந்த மொழி பெயர்ப்பும் தேவையில்லை என்பது என் நிலைப்பாடல்ல. //


Adultery என்ற சொல்லை தமிழ்ப்படுத்தும் பொழுது அதை விபச்சாரம் என்று மொழி பெயர்க்க வேண்டும் என்று உங்கள் பதிவை படித்துத் தான் தெரிந்து கொண்டேன்.


Entry: adul•tery
Pronunciation: &-'d&l-t(&-)rE
Function: noun
Inflected Form(s): plural -ter•ies
Etymology: Middle English, alteration of avoutrie, from Anglo-French avulterie, from Latin adulterium, from adulter adulterer, back-formation from adulterare
: voluntary sexual intercourse between a married man and someone other than his wife or between a married woman and someone other than her husband; also : an act of adultery


prostitution
One entry found for prostitution.


Main Entry: pros•ti•tu•tion
Pronunciation: "prயூs-t&-'tற்-sh&n, -'tyற்-
Function: noun
1 : the act or practice of engaging in promiscuous sexual relations especially for money
2 : the state of being prostituted : DEBASEMENT

பலாத்காரம் என்று எதனால் எழுதினேன் என்று ஏற்கனவே சொல்லி விட்டேன்.

Adultery என்பதன் பொருள் விபச்சாரமல்ல என்பது என் கருத்து. Adultery என்ற சொல்லை நானும் மொழி பெயர்த்துப் பார்த்தேன் - திருமண எல்லை தாண்டிய உறவு என்று கூட எழுதினேன். ஒரு சிறிய சொல்லுக்கு, இத்தனை நீளமான வார்த்தையா என்று விட்டுவிட்டேன். கள்ளத் தொடர்பு என்று எழுதினால், அது ஏதோ தினத்தந்தியின் பரபரப்பு செய்தித் தலைப்பு போல் இருக்கிறது என்பதனால் அதையும் தொடரவில்லை.

ஆக, இனி நான் adultery என்றே எழுதி விடுகிறேன் - நீங்கள் அதை உங்களுக்கு சௌகரியப்பட்டபடி வாசித்துக் கொள்ளுங்கள். எனக்கு ஆட்சேபணை இல்லை. ஆனால், விபச்சாரம் என்ற மொழி பெயர்ப்பையும் நான் ஏற்க மாட்டேன்.

adultery என்பது இச்சையுடன் மனம் ஒப்பி இருவர் செய்யும் பாலியியல் உறவு. ஆனால், விபச்சாரத்தில் - வியாபாரத்தில் பொருள் கைமாறுகிறது. இருவரும் இச்சையுடன் இருக்க வேண்டும் என்பதல்ல. பணத்திற்காக, தன் உடம்பை வழங்குபவர், அந்த உறவில் கிடைக்கும் சுகத்தில் பங்கெடுத்துக் கொள்ள வேண்டும் என்ற கட்டாயமில்லை.

முதலில், இஸ்லாத்தில் மரணதண்டனை மூன்று குற்றங்களுக்கு மட்டுமே வழங்கப்படுகிறது. அது

#1. A murderer - கொலை செய்தவர் - உயிருக்குப் பதில் உயிர் என்று. இறந்தவரின் உறவினர் மன்னிக்க விரும்பினால், விட்டுவிடப்படுகிறார் தண்டனையின்றி.
#2. A married adulterer - (மொழி பெயர்க்க வேண்டாம்..)
#3. An apostate - இஸ்லாமிய மார்க்கத்தையும், சமூகத்தையும் கைவிடுபவர்.

இங்கு நம் விவாதத்தில் உள்ளது இரண்டாவது மட்டும் தான். மற்றவைகள் இங்கு பொருத்தமில்லாதது என்பதனால் இப்பொழுது வேண்டாம்.

Adultery என்பது அத்தனை பெரும் குற்றமா? எதனால்?

திருமணம் என்பது குடும்பம் என்ற அமைப்பை வலுப்படுத்த உண்டாக்கப்பட்டது. அந்த குடும்பம் என்ற அமைப்பு செழித்து தழைக்க வேண்டுமானால், அதை நிறுவி, நில¨பெறச்செய்யும் முக்கிய அங்கத்தினர்கள் ஒருவருக்கொருவர் உண்மையாக இருக்க வேண்டும். அர்ப்பணிப்புத் தன்மை இருக்க வேண்டும். இது சிலருக்கு சிரமமாக இருக்கலாம். கல்வி, வாழ்க்கைத் தரம் இதெல்லாம் இருந்தாலும் கூட, எத்தனை பண்பட்ட குடும்பம் வழியாக வந்திருந்தாலும் கூட, இந்த அர்ப்பணிப்பை, ஒருவருக்கொருவர் விசுவாசமாக இருப்பதை புறக்கணிப்பவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள் - உதாரணம் - சார்லஸ் - டயானா. ‘My marriage is too crowded’ என்று சொன்னவர் தானே டயானா?

வளர்ப்பு முறை, குடும்ப பின்னணி, கல்வித் தகுதி, சமூக அந்தஸ்து இத்தனை இருந்தும் வேலி தாண்டுகிறார்கள் என்றால் அதை நிறுத்த வலுவான தண்டனையைக் கொடுத்தால் மட்டுமே முடியும். தண்டனை அனைவரையும் திருத்துவதாக அமைய வேண்டும்.

இந்த zina என்ற குற்றத்தில் ஈடுபட்ட அனைவருக்கும் இந்தத் தண்டனையா? இல்லை.
முதலில் இந்த zina என்ற பொதுவான சொல், பல பாலியியல் குற்றங்களையும் குறிக்கும் ஒரு ஒற்றைச் சொல். அதனுள்ளே தான் வகைப்படுத்த வேண்டும். ஏற்கனவே அது பற்றி குறிப்பிட்டிருக்கிறேன். மீண்டும் வேண்டாம்.

ஆனாலும் ஒரு சிறு விளக்கம் - Islam do not recognize adultery and rape as different. Both are one and the same unless otherwise proved with witnesses conclusively that force had been used to achieve penetration, both are one and the same. (அடல்டரி மற்றும் பலாத்காரம் - இரண்டுமே இஸ்லாத்தைப் பொறுத்தவரைக்கும் ஒன்று தான் - சாட்சிகளின் மூலம், ஐயமற, வன்முறை உபயோகத்தினால், ஆண் உறுப்பு பெண்ணிற்குள் செலுத்தப்பட்டதை நிரூபிக்கும் வரை - அது பலாத்காரம், கள்ளத் தொடர்பு அல்லது கள்ள உறவு, பாலியியல் தொழில், என்று எத்தனை பெயர் சொல்லிக் கொண்டாலும், இஸ்லாம் அதை immoral activity என்ற தண்டனைக்குரிய செயலாகத்தான் பார்க்கிறதே ஒழிய, வேறுவகையில் அல்ல.)
ஒரு பிரச்சினையின் தீர்வு, முதலில் அந்தப் பிரச்சினை என்ன என்பதை அடையாளம் காண்பதில் தான் இருக்கின்றது. அதை மூடி மறைப்பதில் இல்லை.


எல்லோருக்கும் தண்டனை - மரணம் தானா? இல்லை. குடும்பம் என்ற அமைப்பை தகர்க்கும் விதமாக செய்யப்படும் குற்றங்களே மரணதண்டனைக்குரிய குற்றமாக இருக்கும். திருமணமாகிய இருவர், தங்கள் துணைவர்களை விட்டு விட்டு, பாலியியல் குற்றத்தில் ஈடுபடும் பொழுது, அது இருவரது குடும்பங்களையும் தகர்த்து விடுகிறது. இத்தகைய செயலில் ஈடுபடுபவர்களின் நோக்கம் - தங்கள் காம இச்சையைப் பூர்த்தி செய்யும் பொருட்டு, ஒருவர் மற்றவருக்காக, உடலால் மட்டுமன்றி, மனதாலும் ஏக்கத்துடன், காம இச்சை முற்றி, தங்கள் திருமணத் துணைவர்களிடம் காட்ட வேண்டிய, பெற வேண்டிய திருப்தியை மனநிறைவை வேறொருவரிடம் கிடைக்கும் உடல் சுகத்தால் பெறுவதால் குற்றமாகிறது. ஏனென்றால், திருமணப்பந்தத்திற்குள் கிடைக்க வேண்டிய இவ்வின்பம், வெளியே கிடைத்துவிடுவதால், இவர்கள் தங்கள் திருமணத்தை மதிக்காமல் போகக்கூடும். அல்லது தங்கள் துணைவருக்கு தரவேண்டிய இன்பங்களை மறுக்கக்கூடும். அவமானப்படுத்தக் கூடும். அல்லது எவற்றிலுமே பங்கேற்காமல் போகக் கூடும். இவையெல்லாம் மணமுறிவுக்கே அழைத்துச் செல்லும். இப்படி சிதைவுகளுக்குக் காரணமாக அமைந்து விடும் திருமணமாகி நெறிமுறைகளைத் தாண்டிச் செல்லும் நபர்களுக்கு மரணதண்டனை விதிக்கப்படுகிறது. திருமணமாகிய இவர்கள், அந்தப்பந்தத்திற்குள்ளாகவே, தங்கள் உடற்தேவையை நிறைவேற்றிக் கொள்ள வாய்ப்புகள் இருக்கும் பொழுது, அவற்றை மீறி செயல்பட்டதனால் மரணம் தண்டனையாகக் கொடுக்கப்படுகிறது.

ஆனால், திருமணமாகதவர்கள், இத்தகைய தவறு செய்யும் பொழுது, அதற்கு சிறிய தண்டனை தான். காரணம் அவர்களுக்கு முறைப்படி தங்கள் உடற்தேவைகளைத் தீர்த்துக் கொள்ள வாய்ப்புகளற்ற காரணத்தால், அவர்கள் இத்தகைய அநீதியான செயலில் ஈடுபட வேண்டியதாயிற்று. அதனால் அவர்களுக்கு மரணதண்டனை கிடையாது. மேலும் இந்த திருமணமாகதவர்கள் எந்த திருமணத்தையும் தகர்க்கப் போவதில்லை.

அதே சமயம், ஒருவர் திருமணமாகியும் மற்றவர் ஆகாதிருந்தால், திருமணமாகியவருக்கு மரணமும், மற்றவருக்கு கசையடியும் தண்டனயாகின்றன.

ஆனால், பாலியியல் தொழில் செய்பவர்களை இந்த வகையில் - ஒரு குடும்பத்தைத் தகர்க்கும் நபர்களாகப் பார்க்க முடியுமா? இல்லையென்றே தோன்றுகிறது. அவர்கள் தங்கள் மனத்தை உறவில் ஈடுபடுத்துவதில்லை. உடலை மட்டுமே தருகிறார்கள் அதற்கான கூலியைப் பெற்றுக் கொண்டு. அதுபோல தங்களுடைய வாடிக்கையாளர்களையும் உடலுடன் மனதையும் இணைத்து உறவாடக் கோருவதில்லை. வியாபாரம் முடிந்ததும் அவர்கள் பிரிந்து போய்விடப் போகிறார்கள். மீண்டும் மீண்டும் சந்தித்து மனதையும் உடலையும் ஈடுபடுத்தி செய்யும் தவறல்ல அது. ஒரு குடும்ப அமைப்பு எவ்வாறு இதில் தகர்ந்து போகப் போகிறது? தொடர்ந்து ஒருவன், ஒரே பெண்ணிடம் செல்வது, அவளை தன் பொறுப்பில் வைத்துக் கொள்வது - போன்றவைகள் மட்டுமிருந்தால் மட்டுமே குடும்பம் என்ற அமைப்பு தகர்வதற்கான வாய்ப்புகள் அமையக் கூடும். ஆனால் பாலியியல் தொழிலில் அத்தகைய தொடரும் உறவுகள் மிகக் குறைவே.

இஸ்லாம், பாலியியல் தொழிலை ஏற்காமல் இருக்கலாம் - ஏன் எந்த மதமும் கூடத்தான் ஏற்பதில்லை. ஆனால், இந்த மதக்கருத்தியல்களை, மதம் தாண்டிய எல்கைக்குள் பிரயோகிப்பதை நாம் நிறுத்திக் கொள்ள வேண்டும். மதங்களுக்கு வேண்டுமானால், இந்த தொழில் ஒரு பாவகரமான தொழிலாக இருக்கலாம் - ஆனால், இன்று பொதுவான - secular என்றழைக்கப்படும் மதம் கடந்த வெளிகளில், விபச்சாரம் என்று கூறும் பாலியியல் தொழில் - ஒரு தொழிலாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இவர்கள் செய்வது மதவாதிகளின் பார்வையில் கல்லெறிந்து கொல்லப்பட வேண்டிய குற்றமாக இருக்கலாம். ஆனால் சமூகம் இவர்களை ஏற்றுக் கொண்டுவிட்டது. இன்னமும் அவர்களைத் தொடர்ந்து அவமானப்படுத்திக் கொண்டிருக்க வேண்டும் - தண்டிக்க வேண்டும் என்ற கருத்தியல்கள் எடுபடாது. எல்லோரையும் போல ஏதோ ஒரு வகையில் அவர்களும் உழைக்கிறார்கள் - அது உங்களுக்குப் பிடிக்கிறதா இல்லையா என்பது வேறு விஷயம். ஒரு மதத்தின் கருத்தியலின் படி ஏற்படுத்திக் கொண்ட சில பிரயோகங்களை அனைவருக்கும் பொதுவான ஒரு சொல்லாக - அவமானப்படுத்தும் அளவீட்டில் பயன்படுத்துவதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்ற கொள்கை உடையவன்.

Adultery என்ற சொல்லை விபச்சாரம் என்று மொழி பெயர்ப்பது மிகப்பழமைவாதம் – தமிழில் நீங்கள் படித்த புத்தகங்களை எந்த வருடம் எழுதினார்கள்? கண்டிப்பாக இந்த வார்த்தை பிரயோகத்தை நான் பயன்படுத்தப் போவதில்லை - உங்களுக்குப் பிடித்திருக்கிறதா இல்லையா என்பது என் கவலையல்ல. இது போலவே - மேலும் சில வார்த்தைகள் , நம்மைப் பொறுத்தவரைக்கும் மிகச் சாதாரணமாகத் தோன்றும் இந்த வார்த்தைகள், இஸ்லாம் தாண்டி வெளியே போகும் பொழுது அது பிறரை அவமதிப்பதாக மாறிவிடுகிறது என்பதை உணர வேண்டும் - குறிப்பாக - இந்த kaffir என்ற வார்த்தை மாற்று மதத்தினரை நோக்கிச் சொல்லும் பொழுது. பிறப்பினால் இஸ்லாமியனாக இருந்து மேற்கொண்டு நம்பிக்கைகள் ஏதுமற்று விளங்கும் நபரை வேண்டுமானால், kaafir என்று அழைத்துக் கொள்ளலாம் - ஏனென்றால் அவன் ஒரு இஸ்லாமியன். ஆனால், மாற்று மதத்தினரை ‘நம்பிக்கையற்றவர்’ என்று அழைப்பதை ஒரு அவமரியாதையாகவே கருதுகிறேன். அவர்கள் வாழ்க்கையை நம்பிக்கையற்று நகர்த்திக் கொண்டிருக்கவில்லை. அவர்களுக்குள்ளும் நம்பிக்கைகள் உண்டு. அவை நம்முடன் ஒத்துப் போகவில்லை என்பதால், நம் கருத்தியலைக் கொண்டு, எடை போட்டு, kaffir என்று அழைப்பதை தவிர்க்கலாம் என்பதே என் கருத்து - என் தனிப்பட்ட கருத்து. ஏற்றுக் கொள்வதும் ஏற்றுக் கொள்ளதாதும் உங்கள் விருப்பம்.

என்றாலும் - adultery என்பதை விபச்சாரம் என்று சொல்வதை நான் ஏற்கவில்லை.

அபூ முஹை said...

சகோதரர் ஷாஜஹான் அவர்களுக்கு,
யானையைப் பிடித்து ஒரு பானைக்குள் அடைத்து விடும் அவசரம் உங்களிடமுள்ளது. உங்களையறிமலேயே, நீங்கள் ஏற்கெனவே வைத்தக் கருத்துக்கு எதிரானக் கருத்தின் பக்கம் சாய்ந்து விடுகிறீர்கள்!

//லாகூர் நீதிமன்ற நீதிமான்களின்(!?) ஆதாரமற்றத் தீர்ப்பைப் போல.// - அபூ முஹை

//ஆஹா! லாஹுர் நீதிமன்றத் தீர்ப்பு மிக தவறானது. அது திருத்தி எழுதப்பட வேண்டும் என்றுதானே நானும் சொல்கிறேன்!!! அப்படியானால், நீங்களும் ஒத்துக் கொள்கிறீர்கள்// - நண்பன்

லாஹுர் நீதிமன்றத்தின் தீர்ப்புத் தவாறனது என்று நீங்களும் சொல்கிறீர்கள் நானும் சொல்கிறேன். அப்படியானால்...

//மன்றங்களை அநாவசியமாக சாடுவது தவறு.// - நண்பன்

மன்றங்களை சாடுவது யார்..? நீங்களா, நானா?

//செயற்கை முறை கருத்தரிப்பின் மூலம் குழந்தை பெற்றுக் கொள்ள முடியும். விந்தணுக்கள் - கணவனுடையதாக இருக்க வேண்டுமென்ற அவசியம் இல்லை.// -நண்பன்

மனைவியின் செயற்கைக் கருத்தரிப்பிற்கு கணவனுடைய விந்தணுக்களாக இருக்க வேண்டிய அவசியமில்லை என்று நீங்கள் எழுதியதைத்தான் நான் எதிர்த்தேன். இஸ்லாம் அதைத் தடை செய்கிறது. ஆனால் கணவனின் விந்தணுக்களைக் கொண்டு செயற்கை முறையில் மனைவியை கருத்தரிக்கச் செய்வதை இஸ்லாம் தடை செய்யவில்லை என்பது என் தரப்பு. ஆனால்...

//கணவன், மனைவியின் உயிரணுக்களாக மட்டுமே இருக்க வேண்டும். மூன்றாம் நபர் இதில் இருக்கக் கூடாது. திருமணம் நடைமுறையில் இருக்க வேண்டும்.// -நண்பன்

முதல் நாள் கணவனின் விந்தணுக்களாக இருக்க வேண்டிய அவசியமில்லை என்று சொல்லிவிட்டு, மறுநாள் கணவன் மனைவி உயிரணுக்களாக மட்டுமே இருக்க வேண்டுமென்று சொன்னால் உங்களின் நிலைப்பாடு புரியாதப் புதிராக இருக்கிறது.

உங்களால் வட்டத்திற்குள் நின்று பேச முடியவில்லை! மாறாக எங்கெங்கோ பயணித்து இறுதியில் காஃபிர் என்ற வார்த்தையில் வந்து நிற்கிறீர்கள். காஃபிர் என்றோ ஸைனப் என்றோ இந்தப் பதிவின் பின்னூட்டங்களில் எங்கும் நான் எழுதவில்லை. அப்படியிருக்க சொன்ன இடத்தில் சொல்லாமல் இவற்றைத் தேவையில்லாமல் இங்கு ஏன் எழுத வேண்டும்?

//பலவந்தப் படுத்தப்பட்டப் பெண் உடனடியாக சம்பந்தப்பட்டவர்களிடம் புகார் செய்தால் அவர் பலவந்தப் படுத்தப்பட்டுள்ளார் என்பதற்கு அவரிடமே தடயங்கள் இருக்கும். குற்றவாளியை அடையாளம் காட்டினால் தண்டிப்பதற்கு அதுவே போதும்.// - அபூ முஹை

இதற்கு சான்றுகளை நான் வைக்க வேண்டியதிருக்கிறது. திருக்குர்ஆன் வசனங்களின் ஆதாரங்களுடன் என் பதிவில் சொல்லிக் கொள்கிறேன்.

''வலா தக்ரபூஸ்ஸினா'' - விபச்சாரத்திற்கு நெருங்காதீர்கள் (017:032)

இப்படித்தான் 2005ம் ஆண்டு பதிப்புவரையுள்ள திருக்குர்ஆன் தமிழ் மொழியாக்கங்களில் அறிஞர்கள் மொழி பெயர்த்துள்ளார்கள். தமிழ் நபிமொழி நூல்களிலும் ''ஸின'' என்பதை விபச்சாரம் என்றே மொழி பெயர்த்திருக்கிறார்கள்.

''கள்ள உறவிற்கு நெருங்காதீர்கள்'' என்று மொழி பெயர்த்தால், அப்போ காசு கொடுத்து போகலாம் என்று விளங்காதவர்கள் தவறாகப் புரிந்து கொள்வார்கள். (அடிமைகளைத் தவிர) திருமண பந்தமின்றி உறவு கொள்ளும் எல்லா உடலுறவுகளையும் தமிழில் விபச்சாரம் என்பதே சரி என்பது என் தனிப்பட்டக் கருத்து!

விபச்சாரத்தால் பெறும் காசையும் உண்ணக்கூடாது என்றும் இஸ்லாம் தடை விதிக்கிறது.

நன்றியுடன் விடை பெற்றுக் கொள்கிறேன்.

அன்புடன்,
அபூ முஹை

நண்பன் said...

சகோதரர் ஷாஜஹான் அவர்களுக்கு,
// யானையைப் பிடித்து ஒரு பானைக்குள் அடைத்து விடும் அவசரம் உங்களிடமுள்ளது. உங்களையறிமலேயே, நீங்கள் ஏற்கெனவே வைத்தக் கருத்துக்கு எதிரானக் கருத்தின் பக்கம் சாய்ந்து விடுகிறீர்கள்! //

அபூ முஹை - நீங்கள் சற்று பொறுமையுடன் கூர்ந்து கவனித்தால், நான் என் கருத்துகளை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன் என்பதை உணர்வீர்கள். Artificial Insemination by Third Party என்பதைப் பற்றி நீங்கள் மறுக்க முன் வைத்த வாதம் - அய்யே! தன் மனைவியின் கர்ப்பத்தில் மாற்றான் ஒருவனின் வித்து-ஆ! என்பது தான். அதில் ஒரு ஆண் மனபாவத்தின் அசூயைத் தான் வெளிபடுகிறது. எந்த ஒரு மார்க்கமும் ஒரு மனிதனின் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளுக்காக வடிவமைக்கப்பட்டால், அது மக்களின் ஆதரவை இழந்து விடும். ஆதலால், இஸ்லாம் எதனால் மறுக்கிறது என்பதற்குரிய காரணங்களை நானே எடுத்து வைத்தேன். ஒன்றை சரி என பிடிவாதமும் முரண்டும் பிடிப்பது எனது வழக்கமல்ல. ஒரு வாதத்தின் இருபக்கங்களையும் உணர்ந்தவனால் தான், தொடர்ந்து வாதத்தில் தாக்குப் பிடிக்க முடியும். நீங்கள் சொல்ல வேண்டிய விஷயங்களை நானே சொல்லிவிட்டு, பின்னர் 'இப்படியெல்லாம் நீங்கள் சொல்லி இருந்தால் நான் சந்தோஷப்பட்டிருப்பேன்' என்று எழுதி இருந்தேன். அது எப்படி நான் எதிரான திசையில் சாய்கிறேன் என்று சொல்லிவிட்டீர்கள்?

மேலும் இந்த விவாதத்தில், அபூமுஹையை எதிர்த்து நான் வெற்றி பெற வேண்டும் என்பதல்ல எனது நோக்கம். நீங்கள் சொல்லும் விதத்தில், பாதிக்கப்பட்ட பெண்ணின் ஒற்றைச் சாட்சியமும், சில மருத்துவ பரிசோதனைகளும் போதுமானவை என ஷாரிஅ.த் நீதிமன்றங்கள் ஏற்றுக் கொண்டு, பெண்களுக்கு நீதி வழங்க முற்பட்டால் அதைவிட வேறு என்ன மகிழ்ச்சி இருக்கப் போகிறது எனக்கு? அதாவது இந்த விவாதத்தில், உங்கள் வாதத்தின் முன் தோற்றுப் போவதில் எனக்கு மிக்க மகிழ்ச்சியே!

ஆனால், துரதிர்ஷ்டவசமாக, இஸ்லாமிய ஷாரிஅ.த் நீதிமன்றங்கள் அவ்வாறு செயல்படுவதில்லை. நான் சொல்வது போல அவை நான்கு சாட்சியங்களை - தரமுடியாத - நான்கு சாட்சியங்களை கேட்கிறது. அவ்வாறு முடியவில்லையென்றால், சுயசாட்சியமாக, அவள் கொடுத்த வாக்குமூலத்தை அவளுக்கு எதிராக திருப்பி தண்டனை கொடுக்கிறது.

இஸ்லாத்தின் குறைபாடுகளை எழுத வேண்டும் என்பதல்ல எனது நோக்கம். ஆனால், அதே சமயத்தில் அபூமுஹை சொல்கிறார் என்பதற்காக கண்ணை மூடிக் கொண்டு, நம்மிடையே இருக்கும் குறைபாடுகளை களைய முயற்சிக்காமல், மௌனம் காப்பது என்பதும் எனக்கு ஒப்பான விஷயமில்லை. பெண்களுக்குப் பாதுகாப்பாக இந்த சட்டம் செயல்படும் என்பதில் எனக்கு எந்த சந்தேகமில்லை. ஆனால், அதே சமயம், அவளாலும் புகார் சொல்ல முடியாத நிலைமையில் தான் அவளை வைத்திருக்கிறது. மீறினால், அவள் கதி அதோகதி தான்.

முஷாரஃப் முயற்சித்தது போல், புகார் கூறிய பெண்ணை, பழி வாங்கும் விதமாக, இந்த வழக்குகளை நடத்த வேண்டாம் - நிரூபிக்க முடியாத பட்சத்தில், அவள் மீது வழக்கு தொடர வேண்டாம் - என்ற இந்த ஒரு சின்ன திருத்தத்தைத் தான் கோருகிறேன். பழமைவாத சிந்தனைகளை ஒதுக்கி விட்டு, முஷாரஃப்பின் ஆட்சியின் நல்லது கெட்டதுகளை எல்லாம் ஆராய்ந்து கொண்டிருக்காமல், அவர் எடுத்த இந்த முயற்சியை ஆதரிக்க வேண்டும் என்று கோருகிறேன்.

ஆனால், நீங்கள் ஏனோ இந்த ஒரு விஷயத்தை மட்டும் ஒதுக்கி விட்டு, மற்ற விஷயங்களை எல்லாம் பேசுகிறீர்கள் - பிறகு என்னை வட்டம் தாண்டி போகிறேன் என்கிறீர்கள். ஒரு வட்டத்திற்குள் அடங்கிப் போக என்னால் இயலாது என்றே நான் நினைக்கிறேன். வட்டங்களைத் தாண்டி சிந்திக்க உங்களுக்கு சிரமமிருக்கலாம் - என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால், சில நவீனங்களை கண்மூடி ரசியுங்கள். அல்லது கண்டும் காணததுமாய் விட்டு விடுங்கள். குடி முழுகிப் போய்விடாது.

மேலும்,

சுட்டுவிரல் said...

நண்பரே,
"இஸ்லாம் ஓர் சிறந்த மார்க்கம். அதைப் பின்பற்றுவதில் முஸ்லிம்கள் மோசமானவர்கள்" என்று அறிஞன் G.B. ஷா சொன்னதை உங்களுடைய இந்தப் பதிவும், உங்களுக்கும் அபூமுஹைக்கும் இடையே நிகழும் பின்னூட்ட பரிவர்த்தனைகளும் உணர்த்துகின்றன.

1). லாஹூர் நீதிமன்றத் தீர்ப்பு தவறானது என்பதிலோ, அவசியம் திருத்தப்படவேண்டும் என்பதிலோ உங்களுக்கும் அபூமுஹைக்குமிடையே கருத்து வேற்றுமை இல்லை.!


2). இஸ்லாமிய ஹதீஸ் நூல்களான அபூதாவூதிலிருந்தும், திர்மதியிலிருந்தும் சரியான வழிகாட்டுதலை அபூமுஹை எடுத்துவைத்து அதன்படி தவறான இத்தீர்ப்பு திருத்தப்படவேண்டும் என்கிறார்.
நீங்களோ, முஷாரப் வைத்த திருத்தம் ஏற்றுக்
கொள்ளப்பட வேண்டும் என்கிறீர்கள். அடிப்படையிலேயே வழிகாட்டல் தெளிவாக இருக்கிறது என்கிறார் அபூ முஹை.

உங்களுக்கு ஒரு விஷயத்தைச் சுட்ட விரும்புகிறேன்.
தவறான புரிதலால், ஷரியாவை தவறாக விளங்கிக்கொண்டு தீர்ப்பளிப்பது என்பது முஸ்லிம்களிடையே வழமையில் இருந்து வருகிறது என்பதற்கு பல உதாரணங்களைச் சொல்ல முடியும்.ஒருபோதும் நியாயப்படுத்த இயலாது என்ற போதும் .
இப்போது மீண்டும் G B ஷா நினைவுக்கு வருகிறார். 'இஸ்லாம் ஓர் சிறந்த மார்க்கம்......

'தலாக்' விஷயத்தில் கூட ஒரே சமயத்தில் முத்தலாக் செல்லாது என்கிற தெளிவை மிகச் சமீபத்தில் தான் (20ம் நூற்றாண்டின் இறுதியில்) அகில இந்திய முஸ்லிம் தனியார் சட்ட வாரியம் ஏற்றுக்கொண்டது. (இன்னமும், பாகிஸ்தானில் எப்படியோ?!)
ஒரு உதாரணத்துக்காகத் தான் சொல்கிறேன். இன்னமும் இதில் பிணக்குக்கொள்ளும் 'மார்க்க அறிஞர்களும்' இருந்துக்கொண்டு தான் இருக்கிறார்கள். மறுக்க இயலாது. ஆராய்ச்சி அறிவு, மார்க்க அறிவு, சமூக சூழல், போன்றவற்றால் நாட்டுக்கு நாடு, அறிஞருக்கு அறிஞர் இத்தகைய வேற்றுமைகள் இருக்கத்தான் செய்கின்றன.

தவறான தீர்ப்புகளால் பெண்களும், ஆண்களும் - முஸ்லிம்கள் - பாதிக்கப்படுகிறார்கள் என்பதையும், அதற்காக முழு சமுதாயமும் போராடத்தான் வேண்டும் என்பதையும் ஏற்கிறேன். அத்தகைய விழிப்புணர்வைத் தருகிற உங்கள் பதிவுக்கு நன்றி.

நீங்களும் அபூமுஹையும் ஒரே கருத்தில் இருப்பதை உணராமல் இருக்கிறீர்களோ என்று தோன்றியதால் தான் எழுதுகிறேன்.

இதே விஷயத்தை வைத்து நானும் பதிவிட்டிருக்கிறேன்.
(இப்பின்னூட்டத்தை அங்கும் வைக்கிறேன்). நன்றி

நண்பன் said...

சுட்டுவிரல்,

வாருங்கள்.

உங்கள் பதிவைக் கண்டேன். ஏற்கனவே, இங்கு ஒரு விவாதம் நடப்பதால், அதே விஷயத்தை அங்கும் எழுதவேண்டாம் என்று எழுதவில்லை.


// லாஹூர் நீதிமன்றத் தீர்ப்பு தவறானது என்பதிலோ, அவசியம் திருத்தப்படவேண்டும் என்பதிலோ உங்களுக்கும் அபூமுஹைக்குமிடையே கருத்து வேற்றுமை இல்லை.! //

தீர்ப்பு தவறானது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இதில் அபூமுஹையும், நானும் ஒன்றுபடுகிறோம் என்பதிலும் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை.

ஆனால், எதனால் தீர்ப்பு தவறாகிப் போனது என்பதில் வேறுபாடுகள் இருக்கின்றன. அபூமுஹையின் இஸ்லாமிய ஞானத்தைப் பற்றி எந்தக் கேள்வியும் கேட்கவில்லை. ஆனால், அவர் குறிப்பிடும் அபூதாவூத் மற்றும் திர்மிதி போன்றவற்றில் (நான் இவர்களை வாசிக்கவில்லை. என்னிடம் இருப்பது முஸ்லிம் மட்டும் தான். புஹாரியைக் கேட்ட பொழுது, இல்லை என்று சொல்லி விட்டார்கள். திர்மிதி ஒரு தொகுதி இருக்கின்றது. ஆனால், அவை பெருமானாரைப் பற்றிய தனித்திரட்டு. அவற்றில் சட்டம் பற்றி எதுவுமில்லை.) அபூமுஹை இருக்கிறது என்று சொல்வதால், அதை ஏற்றுக் கொள்வதில் எனக்கு எந்த சந்தேகமும் கிடையாது. ஆனால், உலகம் முழுக்க முழுக்க வழங்கப்படும் ஷாரிஅ.த் தீர்ப்புகள் - நான்கு சாட்சியங்களைக் கோருகின்றன. ஒரு முஸ்லிமின் உயிரைப் பறிக்க வேண்டுமென்றால், அதில் எத்தனை கவனமாக இருக்க வேண்டுமென்று ஒரு ஹதீது இருக்கிறது. ஒரு எள்முனை சந்தேகம் தோன்றினாலும், சந்தேகத்தின் பலனை குற்றம் சாட்டப்பட்டவருக்கு அளித்து, அவரை விட்டுவிடுங்கள் என்று அறிவுறுத்துகிறது. இப்படிபட்ட வழிமுறைகளை வைத்துக் கொண்டுள்ள இஸ்லாம், அபூமுஹை சொல்வது போல எளிய நடைமுறை இருந்தால், அவற்றை ஏன் ஏற்றுக் கொள்ளவில்லை. ஏற்றுக் கொள்வதில் சிரமம் இருந்தால், அதை ஏன் விவாதிக்கவில்லை.

நான்கு சாட்சியங்கள் கோரி, அதை நிறுவ முடியாததால், தண்டனை அடைந்த பெண்கள் ஏராளமாக உண்டு. பழங்காலத்தில் அல்ல. 1990 தொடங்கி உதாரணம் கொடுக்க முடியும். அவற்றை எல்லாம் எடுத்து எழுதி நேரததை வீணடிக்காமல், கீழ்க்கண்ட தள முகவரியில் வாசித்துப் பாருங்கள்.

எதனால், நான் இன்னமும் திறந்த மனதுடன், சல்மான் சொன்னது போல 'தற்காலிக தடுப்பான்களை' அமுல் படுத்த வேண்டுமென்று உங்களுக்குப் புரியும்.

http://www.religioustolerance.org/isl_adul1.htm

2001-SEP: Nigeria: ஒரு இளம்பெண் பாரியா இப்ராஹிம் மகஸு தன் தந்தையின் துணையோடு தன்னை மூவர் கற்பழித்து விட்டதாகக் கூறினார். ஆனால், அவள் வாக்குமூலத்தை ஒப்புதல் வாக்குமூலமாகக் கருதி, அவளுக்கு 180 கசையடிகள் கொடுத்து, அதை எதிர்த்து யாரும் போராட சந்தர்ப்பம் கொடுக்கக் கூடாது என்பதற்காக அந்த தண்டனையும் உடனே நிறைவேற்றிவிட்டது. நல்லவேளையாக திருமணமாகாததால், அவளுக்கு மரண தண்டனை தரப்படவில்லை. தண்டனை தரப்பட்டதற்குக் காரணம் - திருமணத்திற்கு முந்தைய உறவு - மற்றும் பொய் வழக்கு தொடர்ந்தார் என்பதனால்.

2001-OCT: Nigeria: ஷபியா ஹுஸ்ஸைனி என்ற 30 வயது கர்ப்பிணிப் பெண் ஒரு மனிதன் தன்னைக் கெடுத்து விட்டதாக ஷாரிஅ.த் கோர்ட்டில் முறையிட, அவளை கல்லெறிந்து கொல்லும் தண்டனையைக் கொடுத்து விட்டார்கள்.

குற்றம் சாட்டப்பட்டவன் சாட்சியங்கள் இல்லை என்பதால் விடுதலை செய்யப்பட்டான். மேல்முறையீட்டில் குற்றம் நிகழ்ந்ததாகக் கூறப்பட்ட காலத்தில் ஷாரிஅ.த் சட்டம் அமுலில் இல்லாததால், இந்தத் தண்டனையை நடைமுறைப் படுத்த இயலாது என்று கூறி, விடுதலை செய்தனர்.

இது தான் நடைமுறையில் உள்ள சட்டம். அதுவும் கர்ப்பத்தை சாட்சியமாக ஏற்றுக் கொள்ளும் மாலிக்கி சிந்தனையைப் பின்பற்றுபவர்கள் - நைஜீரியர்கள்.

அதனால் தான் சொல்கிறேன் - அபூமுஹை சொல்வது போல், சட்டங்கள் அத்தனை எளிமையானது அல்ல.

இந்த சட்டங்களைக் கொஞ்சம் மாற்றி அமைத்துக் கொள்வதில் தவறில்லை. இல்லையென்றால் - மரணதண்டனை விதிக்கும் ஹத் சட்டங்களை மொத்தமாகக் கைவிட்டுவிடலாம். இந்த சட்டங்களைப் பின்பற்றாது நாடுகளும் உள்ளது. உ-ம் எகிப்து, சிரியா, ஜோர்டான், துருக்கி...

நண்பன் said...

// abudawud
Book 38, Number 4366:
Narrated Wa'il ibn Hujr:

When a woman went out in the time of the Prophet (peace_be_upon_him) for prayer, a man attacked her and overpowered (raped) her.

She shouted and he went off, and when a man came by, she said: That (man) did such and such to me. And when a company of the Emigrants came by, she said: That man did such and such to me. They went and seized the man whom they thought had had intercourse with her and brought him to her.

She said: Yes, this is he. Then they brought him to the Apostle of Allah (peace_be_upon_him).

When he (the Prophet) was about to pass sentence, the man who (actually) had assaulted her stood up and said: Apostle of Allah, I am the man who did it to her.

He (the Prophet) said to her: Go away, for Allah has forgiven you. But he told the man some good words (AbuDawud said: meaning the man who was seized), and of the man who had had intercourse with her, he said: Stone him to death.

He also said: He has repented to such an extent that if the people of Medina had repented similarly, it would have been accepted from them.

எனக்கு ஆங்கிலம் தெரியா விட்டாலும் - இது இணைப்பில் நான் எழுதியிருந்த ஒரு பெண் பலாத்காரம் செய்யப்பட்டது சம்பந்தமாக, அபூ தாவூவுதில் அறிவிக்கப்படும் நபிமொழியின் ஆங்கில மொழி பெயர்ப்பு. - வன்புணர்ச்சி எப்படி மொழி பெயர்க்கப்பட்டுள்ளது என்பதற்காகவே இங்கு இதைக் குறிப்பிடுகின்றேன். மற்றபடி நீங்கள் நம்ப வேண்டும் என்பதற்காக அல்ல.//

அபூமுஹை,

நீங்கள் மேலே குறிப்பிட்டுள்ள இந்த ஹதீது தான், ஒற்றைச் சாட்சியத்திற்கு அத்தாட்சி என்றால், அது மிகத் தவறு. ஏனென்றால், இங்கு வழங்கப்பட்ட தீர்ப்பு, ஒரு மனிதனின் சுய ஒப்புதல் வாக்குமூலம் தானே தவிர, அந்த பெண்ணின் சுயசாட்சியமல்ல.

..When he (the Prophet) was about to pass sentence...

அல்லாஹ்வின் கிருபையால், நபிகள் தீர்ப்பு வழங்கி விடவில்லை. இல்லையென்றால் - ஒரு பெண்ணின் சொல் கேட்டு, ஒரு தவறான தீர்ப்பை வழங்கிய குற்றத்திற்காக ஆளாக நேரிட்டிருக்கும்.

ஆனால், அதற்குள் உண்மையில் குற்றமிழைத்தவன் எழுந்து ஒப்புக் கொண்டதினால், தவறு செய்வதிலிருந்தும், பெருமானார் அவர்கள் காக்கப்பட்டனர். மேலும் "about to pass sentence...." என்பது ஏற்கப்பட இயலாது. ஏனென்றால், இது ஹதீதை மொழிந்தவர்களின் மொழியாகத் தான் இருக்கின்றதே தவிர, பெருமானாரின் வாயிலிருந்து வந்த வார்த்தைகளோ, அல்லது அவரால் நிகழ்த்திக் காட்டப்பட்ட செயலோ அல்ல. எதுவுமே நிகழாமல், எதுவுமே கூறப்படாமல், இந்த செயலைக் கவனித்துக் கொண்டிருந்தவர், தனக்கு அடுத்து நிலையிலிருப்பவருக்கு இந்த ஹதீதை மொழிந்த பொழுது கொடுத்த விவரணை தானே தவிர, நபியின் சொல்லோ செயலோ அல்ல. அதனால் இந்த "about to pronounce..."
என்ற பீடிகையை, எந்த ஒரு சட்ட வல்லுநரும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். நீதிமன்றம் நிச்சயமாக ஏற்காது. இதைக் குறிப்பிட்டு தான் இத்தனை நாளும் என்னிடம் வாதிட்டுக் கொண்டிருந்தீர்களா?

இது நிச்சயமாக சட்டமே அல்ல. வேறு ஏதாவது ஹதீதைக் கூறுங்கள்.

மேலும் வன்புணர்ச்சியை எப்படி மொழி பெயர்க்க வேண்டும் என்று நீங்கள் கூறியதை வாசித்து, மீண்டும் அந்த மொழி பெயர்ப்பை வாசித்தேன் -

நல்ல நகைச்சுவை - attacked her and overpowered (raped) her.

attacked + overpowered = rape
did such and such = rape
intercourse with her = rape
assaulted her = rape

// வன்புணர்ச்சி எப்படி மொழி பெயர்க்கப்பட்டுள்ளது என்பதற்காகவே இங்கு இதைக் குறிப்பிடுகின்றேன். //

வன்புணர்ச்சியை இப்படித்தான் மொழி பெயர்க்க வேண்டும் என்று சொல்கிறீர்களா?

சார், உலகம் போற வேகத்திலே, இன்னமும் இப்படியான சிந்தனையிலே உட்கார்ந்து கொண்டிருந்தால், நம்மை விட்டு மற்றவர்கள் நூற்றாண்டுகளுக்கு அப்பால் போய்விடுவார்கள் சார்....

// மற்றபடி நீங்கள் நம்ப வேண்டும் என்பதற்காக அல்ல //

விஷயம் இதுவல்ல. நீங்கள் கூறினால், அதை கண்டிப்பாக நம்புவேன்.

உங்களிடத்திலிருந்து நான் வேறுபடுவது, ஒரு செய்தியை அல்லது தகவலை வாசிப்பதில் உங்களுக்கும் எனக்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது. மேற்கொண்டு எழும் சிந்தனைகளிலும்.

ஏனென்றால் வாசித்தலிலும், அதை புரிவதிலும் வித்தியாசப் படும் பொழுது தொடரும் சிந்தனைகளிலும் வித்தியாசங்கள் வரத் தான் செய்யும். ஆனால், அவைகள் நம்பிக்கைகளைத் தகர்க்காது. கவலைப்படாதீர்கள்.

நீங்கள் இதை முன்னம் தமிழில் எழுதி இருந்த பொழுது, அல்லது சொன்ன பொழுது அத்தனை வித்தியாசமாகத் தோன்றவில்லை. ஆனால், ஆங்கிலத்தில் நீங்கள் கொடுத்த மொழி பெயர்ப்பைப் படித்த பொழுது, எதனால் இஸ்லாமிய நீதிமன்றங்கள் நீங்கள் சொன்னவாறு இந்த ஹதீதை வாசிக்க வில்லை என்று புரிகிறது. ஒரு சராசரி அறிவே உள்ள என்னாலேயே அதை ஏற்றுக் கொள்ள முடியாத பொழுது, குரானையும், ஹதீதுகளையும் கரைத்துக் குடித்த சட்ட வல்லுநர்கள் கண்டிப்பாக ஏற்க மாட்டார்கள்

அன்புடன்.
நண்பன்

நண்பர்கள் சொல்கிறார்கள்

CSM - உலகச் செய்திகள்

GF - உலகச் செய்திகள்