"எழுத்துகளையும் தாண்டி எனக்கென்று ஒரு உலகம் உண்டு; நான் எழுதுபவற்றை மட்டுமே வைத்துக் கொண்டு, என்னை எடை போடுபவர்களை எப்பொழுதும் என் எண்ணங்கள் வியப்பில் ஆழ்த்திக் கொண்டே இருக்கும்....."
- நண்பன்

Monday, October 01, 2007

கனியின் பழங்கதை...

கனியின் பழங்கதை...








மண்ணையுருட்டிப் பிசைந்து

உயிர்மூச்சு ஊதியுண்டாக்கியவனின் கரங்கள்

பிடித்தமுக்கியது தொண்டையை

மிச்ச மீதிக்கனியைப் பிடுங்கி

வீசியெறிந்தது இலக்கற்ற வெளியில்

விரைந்து பறந்த கனியின் எச்சில்

ஒட்டிக் கொண்டது அவளுடம்பில்

உண்ட கனி கிடந்த இடத்தின் மேலாக


படைப்புக் கரங்களையும் மீறிப்பீறிட்ட ஆவல்

தவிப்பிலாழ்த்திக்கொண்டேயிருந்தது அவனை

எப்படியாவது மிச்சத்தையுமெடுத்து

உண்ண வேண்டுமென்ற இலக்குடன்

அலைச்சலுறுகிறான் அமைதியற்று

அந்தக் காலம் தொட்டு.



எட்டாக்கனியாக வைத்திருப்பதன்

அவசியமுணர்ந்தவளாய் அவளும்

பொதுவெளிகளில் மூடித்திரிகிறாள்

தன் கனிகளின் காந்தவெளிகளை.


என்றாவது கிடைக்குமொரு அவகாசத்தில்

பிரத்தியேக வெளிகளின் இருள் திரைகளுக்கப்பால்

அவனுக்குத் தருகிறாள்

பிய்த்தெடுக்க முடியாத தனது கனிகளை

தன் குரலுக்குச் செவி சாய்த்த

பழங்கதைகளை

மீண்டும் ஞாபகமூட்டிக்கொண்டே

2 comments:

நளாயினி said...

அடடா..!

நண்பன் said...

நன்றி, நளாயினி.

நண்பர்கள் சொல்கிறார்கள்

CSM - உலகச் செய்திகள்

GF - உலகச் செய்திகள்