"எழுத்துகளையும் தாண்டி எனக்கென்று ஒரு உலகம் உண்டு; நான் எழுதுபவற்றை மட்டுமே வைத்துக் கொண்டு, என்னை எடை போடுபவர்களை எப்பொழுதும் என் எண்ணங்கள் வியப்பில் ஆழ்த்திக் கொண்டே இருக்கும்....."
- நண்பன்

Wednesday, September 19, 2007

பசி விடும் நேரம்





மசூதியைச் சூழவும்
பசிகள் அமர்ந்திருக்கின்றன
நொடிகளைத் தள்ளிக் கொண்டு
நிமிடங்கள் அவசரமில்லாமல்
நகர்ந்து கொண்டிருக்கின்றன

பெரும் வாகனங்களில்
வந்திறங்குகிறது
கஞ்சியும், பிரியாணியும்

விரும்புவதை செலவிடச் சொல்லிய
இறைவன் கட்டளைக்காக
தர்மம் செய்ய முனைந்தவரின்
வீடொன்றிலிருந்து
பணிக்கப்பட்ட கூலிகளின்
அநிச்சையான உழைப்பிலிருந்து

தாம்பாளத் தட்டுகளில் விளம்பப்படுகிறது
மூவருக்கு ஒரு தட்டாய்
பகிர்ந்துண்ணும் பண்பாட்டையொட்டி

ஆர்ப்பாட்டமில்லாத
அரவமில்லாத விளம்பல்கள் முடிகின்றன
தொண்டர்களின் பொறுப்புணர்வினால்


பசிகள் விடைபெற்றுக் கொள்ள
பாங்கொலிப்பது மட்டுமே பாக்கி
பசியாற்ற
கறித்துண்டுகளை அனுப்பியவரை
எங்குமே காணவில்லை
பசிகளுடன் அமர்ந்திருக்க

மினாராக்களின் மாடங்களில்
புறாக்களும் தான்

3 comments:

Unknown said...

நல்ல கவிதை நண்பன்.

//பசிகள் விடைபெற்றுக் கொள்ள
பாங்கொலிப்பது மட்டுமே பாக்கி
பசியாற்ற
கறித்துண்டுகளை அனுப்பியவரை
எங்குமே காணவில்லை
பசிகளுடன் அமர்ந்திருக்க//

அங்கே பசியுடன் அமர்ந்திருந்த
பதினொன்றில்
பத்தாவது தலை அவருடையதாம்
சொன்னார்கள்.

நண்பன் said...

மிக்க நன்றி, சுல்தான்.

மு மாலிக் said...

நண்பன்,

அருமையான கவிதை. நோன்பு காலத்தில் அதிக இறைஉணர்வுடன் உள்ளீர்கள்

நண்பர்கள் சொல்கிறார்கள்

CSM - உலகச் செய்திகள்

GF - உலகச் செய்திகள்