"எழுத்துகளையும் தாண்டி எனக்கென்று ஒரு உலகம் உண்டு; நான் எழுதுபவற்றை மட்டுமே வைத்துக் கொண்டு, என்னை எடை போடுபவர்களை எப்பொழுதும் என் எண்ணங்கள் வியப்பில் ஆழ்த்திக் கொண்டே இருக்கும்....."
- நண்பன்

Sunday, February 26, 2006

பாராட்டுகள் இராமநாதன்

// ஆணிவேர் எங்கேயிருக்கிறது என்று அனைவருக்கும் தெரியும். பாலஸ்தீனத்திலும், ஆப்கானிலும், ஈராக்கிலும் என்று சொல்லிக்கொண்டே போகலாம். பயனொன்றுமில்லை. அதெல்லாம் உண்மை தான். அமெரிக்கா செய்வது தவறுதான். அதை பல பெரும்பான்மை ஐரோப்பிய, ஆசிய மக்களும் வெகுஜன பத்திரிகைகளும் (அமெரிக்காவில் உட்பட) மிகவும் தீவிரமாக எதிர்த்துவருகின்றன். வலுவான எதிர்ப்பு இருக்கிறது. ஜனநாயக முறையில் அமைதியாக தெரிவிக்கப்படுகின்றது. அதை செவி மடுக்காமல் இருப்பது அமெரிக்காவின் அராஜகம். இதிலெல்லாம் மறுபேச்சே கிடையாது. ஆனால் கேட்டதற்கும் இதற்கும் என்ன சம்பந்தம்? ஏனென்றால் எங்குதான் வறுமையும் சாவும் அடக்குமுறையும் இல்லை? அதற்கு பதிலடியாக கடவுளின் பெயரால் ஆயுதம் தூக்குவது விநோதமாகப் படுவதாலேயே முக்கியத்துவமும் கிடைக்கிறது ஊடகங்களில். //


உங்களின் எழுத்துகளைப் பார்த்ததும் அசந்து போய்விட்டேன். இது நீங்கள் தான் எழுதினதா? அல்லது மிகுந்த உணர்ச்சி வசப்படுதலால், நண்பனை மடக்க வேண்டும் - என்ற ஒரே ஆவல் உந்தித் தள்ள மதி மயக்கத்தில் எழுதி விட்டீர்களோ என்ற சந்தேகம். அதனால தான் உங்களிடம் இந்தக் கேள்வியைக் கேட்டேன்.

// ராமநாதன் - இது நீங்கள் எழுதியது தானே? சந்தேகமில்லையே? எங்கு தான் வறுமையும் சாவும் அடக்குமுறையும் இல்லை? இது நீங்கள் எழுதியது தானே? இது வரையிலும் இது எங்குமே விவாதிக்கப்படாமல், இப்பொழுது எங்கிருந்து வந்தது இது? இதைப் பற்றி விவாதிக்கலாமா? அல்லது நான் வேறு எதையாவது பிடித்துத் தொங்குகிறேன் :-) என்று சொல்வீர்களா? இந்தத் தீவிரவாதிகள், வறுமையினாலும், சாவினாலும், அடக்குமுறையினாலும் தான் போராடுகிறார்கள்என்றா சொல்ல வருகிறீர்கள்? முதலில் அதை சொல்லுங்கள். இது தான் உங்கள் வாதம் என்றால், உங்கள் தீவிரவாதப் பார்வை முற்றிலும் தவறானதாக இருக்கிறது.

பிறகு மீண்டும் நாம் ஆதியிலிருந்து விவாதிக்க வேண்டும் - தீவிரவாதம் என்றால் என்னவென்று. என்ன செய்வது? But no comments on the poor igonorant souls:-) பின்லேடன் வறுமையை எதிர்த்து ஆயுதம் ஏந்துகிறான் என்று சொல்லிய முதல் ஆள் நீங்கள் தான் ராமநாதன். சொல்லுங்கள் - நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள் என்று? //

வார இறுதியில் பதில் சொல்வதாகக் கூறி சென்றீர்கள். உங்கள் பதிலைப் பார்த்த பின் தான் வேறு வேலையே செய்வது என்று முடிவு கட்டிக் கொண்டு, எதுவும்செய்யாமல், இரண்டு வாரங்களாகக் காத்திருந்தது தான் மிச்சம்.

அப்பொழுது தான் தோன்றியது.

தான் நம்புவதை உறுதிபட தெரிவிப்பவர் ஏன் மறுக்க வேண்டும்? நான் தான் தவறுதலாகக் காத்துக் கிடக்கிறேனோ?

அட ராமா!!! புரிந்து விட்டது ராமநாதன்.

பாராட்டுகள் ராமநாதன்.

உங்கள் நண்பர்கள் கூறியது தவறு. விவாதமெல்லாம் சரிப்பட்டு வராது உங்களுக்கு என்று உங்கள் நண்பர்கள் கூறியது தவறு.

வறுமையை எதிர்த்து தான் தீவிரவாதிகள் - பின்லேடன் & கோ ஆயுதமேந்துகிறார்கள் என்று கூறிய முதல் ஆள் நீங்கள் தான்.

இத்தனை பெரிய விஷயத்தை நீங்கள் ஏதோ தவறாகக் கூறிவிட்டீர்கள் என்று எண்ணித் தான் திருத்தி விடுங்கள் ராமநாதன் என்று கேட்டுக் கொண்டேன். இரண்டு வாரங்களாகியும் அதை மறுக்க உங்களுக்கு விருப்பமில்லை என்பதை அறிந்து கொண்டதும், உங்கள் வாதத்திறமையின் துணிச்சலைக் கண்டு புளகாங்கிதம் அடைகிறேன். ஏனென்றால் - என்னைப் போன்ற hardcore இஸ்லாமிய நம்பிக்கையாளர்கள் கூட தீவிரவாதி பின்லேடனின் சொல்லையும், செயலையும் ஏற்றுக் கொள்ள மறுக்கும் பொழுது, அந்த எண்ணத்திற்கு முற்றிலும் மாறான ஒரு விஷயத்தை எத்தனை அலட்சியமாக, உறுதியாக கூறிவிட்டீர்கள்.!!!

பாராட்டுகள் !

பாராட்டுகள் !!

பாராட்டுகள் !!!

3 comments:

rv said...

/ பின்லேடன் & கோ ஆயுதமேந்துகிறார்கள் என்று கூறிய முதல் ஆள் நீங்கள் தான்.
//
மற்றும் இப்பதிவு....

அய்யா நண்பரே,
I am in AWE!

அதெப்படி வறுமையை மட்டும் பிடித்துக்கொண்டீர்கள்? வாழ்க வளர்க!

மிச்ச விஷயங்கள் கண்ணில் படவில்லை இல்லையா? anyway, got tired அதான் பதிலளிக்கவில்லை. இப்படியும் என் கருத்துக்களை திரித்து பதிவொன்று போடுவீர்கள் என்று தெரிந்திருந்தால் உடனேயே பதிலளித்திருப்பேன். அது என் தவறே. பதிலில்லாமல் இல்லை. உங்கள் பாராட்டுகளும் பதில்களும் so pseudo. if only u realize it! jeez. is this funny or is this funny?!!

regards
இராமநாதன்

rv said...

இப்படி ஒரு பதிவு போட்டப்புறமும் பதில் அளிக்காமல் இருந்தால் நன்றாக இருக்காது.

விரைவில் பதில் போடுகிறேன். நன்றி

அன்புடன்,
இராமநாதன்

நண்பன் said...

தெரு கோணல்னு சொல்ல வர்ரீங்களா, ராமநாதன்....!!!

நண்பர்கள் சொல்கிறார்கள்

CSM - உலகச் செய்திகள்

GF - உலகச் செய்திகள்