"எழுத்துகளையும் தாண்டி எனக்கென்று ஒரு உலகம் உண்டு; நான் எழுதுபவற்றை மட்டுமே வைத்துக் கொண்டு, என்னை எடை போடுபவர்களை எப்பொழுதும் என் எண்ணங்கள் வியப்பில் ஆழ்த்திக் கொண்டே இருக்கும்....."
- நண்பன்

Friday, July 06, 2007

ஆல்பங்கள்

ஆர்வமற்ற எத்தனத்துடன்
புகைப்பட ஆல்பங்களை
தழுவிப் பார்க்க அனுமதிப்பதில்லை
விரல்களின் தொடுபுலனை.


சேமித்த நினைவுகளுடனே
மறக்க விரும்பிய தருணங்களும்
கட்டவிழ்க்கப்பட்டுவிடுகின்றன
சில மருத்துவ சிகிச்சைகளின்
பெரும் பக்கவிளைவுகளைப் போல்.

தாள்களற்ற உள்வெளிப் பிரவாகங்களில்
பின்னிக் கிடந்து புணரும்
சாரைகளாய் நெளிகிறது
குறுக்கும் நெடுக்குமாய் சிதறிக் கிடக்கும்
சித்திரமற்ற பிம்பத் தொகுப்புகள்

சர்ப்ப மூச்சுகள்
சற்றே அமைதியடைகையில்
எத்தனை புகைப்பட
ஆல்பங்களைப் புரட்டினாலும் புரிவதில்லை
என்ன இருக்கிறது பார்ப்பதற்கு
அங்கென்று.

3 comments:

நளாயினி said...

சேமித்த நினைவுகளுடனே
மறக்க விரும்பிய தருணங்களும்
கட்டவிழ்க்கப்பட்டுவிடுகின்றன
சில மருத்துவ சிகிச்சைகளின்
பெரும் பக்கவிளைவுகளைப் போல்.

unmai thaan.

சர்ப்ப மூச்சுகள்
சற்றே அமைதியடைகையில்
எத்தனை புகைப்பட
ஆல்பங்களைப் புரட்டினாலும் புரிவதில்லை
என்ன இருக்கிறது பார்ப்பதற்கு
அங்கென்று.

நீங்கள் சொன்னதன் பின் கொஞ்சம் யோசிக்கிறன்.

Unknown said...

/சேமித்த நினைவுகளுடனே
மறக்க விரும்பிய தருணங்களும்
கட்டவிழ்க்கப்பட்டுவிடுகின்றன /

சரியா சொன்னீங்க...

நண்பன் said...

நன்றி - நளாயினி, அருட்பெருங்கோ.

புகைப்படங்கள் இனிமையான நினைவுகளை மட்டுமே கிளறிவிடுபவை அல்ல. அந்த இனிமையுடன், இனிமையற்ற நினைவுகளையும் பல சமயங்களில் கிளறிவிடத் தான் செய்கின்றது.

புலம் பெயர்ந்து வாழும் பலருக்கும் இந்த அனுபவம் கிடைத்திருக்கும்.

அதைத் தான் இந்தக் கவிதையாக்கினேன். ஊரிலிருந்து, துபாய்க்கு திரும்பி வந்த மறுநாளன்று.

நன்றி, எண்ணங்களைப் பகிர்ந்து கொண்டமைக்கு.

அன்புடன்
நண்பன்.

நண்பர்கள் சொல்கிறார்கள்

CSM - உலகச் செய்திகள்

GF - உலகச் செய்திகள்