"எழுத்துகளையும் தாண்டி எனக்கென்று ஒரு உலகம் உண்டு; நான் எழுதுபவற்றை மட்டுமே வைத்துக் கொண்டு, என்னை எடை போடுபவர்களை எப்பொழுதும் என் எண்ணங்கள் வியப்பில் ஆழ்த்திக் கொண்டே இருக்கும்....."
- நண்பன்

Friday, September 14, 2007

பயணத்தின் தொடக்கம்.

பயணத்தின் தொடக்கம்.

தொடர்ந்த சன்னல் திறப்புகளினூடே

பயணித்துப் பயணித்து

மீண்டும் மீண்டும் போய் விழுகிறது

சிறு சிறு வெளிகளுனுள்ஒன்றுடன் ஒன்றைத் தொடர்புபடுத்த

மீண்டும் மீண்டும் சன்னகல்ளைத் திறந்து

தொடர் பயணம் செய்கையில்

ஐயுறுகிறது பெருவெளி அடைந்தோமாவெனபெருவெளிக்கான திறப்பின் சன்னல்

மாயச்சுவற்றில் இருப்பின் தடமற்று

ஒளிந்திருக்கின்றது

மொழிகளற்ற புன்னகை சிந்திஎதைத் தடவி

எதைத் திறந்தோமென அறியாதிருக்கையில்

ஒவ்வொரு சிறுவெளியும்

ஒரு பெருவெளியாக உருத்தோற்றமெடுக்கையில்

சிறுவெளியினுள் ஐக்கியமாகிறது பயணம்

அந்தம் அடைந்துவிட்டதாக

No comments:

நண்பர்கள் சொல்கிறார்கள்

CSM - உலகச் செய்திகள்

GF - உலகச் செய்திகள்