"எழுத்துகளையும் தாண்டி எனக்கென்று ஒரு உலகம் உண்டு; நான் எழுதுபவற்றை மட்டுமே வைத்துக் கொண்டு, என்னை எடை போடுபவர்களை எப்பொழுதும் என் எண்ணங்கள் வியப்பில் ஆழ்த்திக் கொண்டே இருக்கும்....."
- நண்பன்

Thursday, September 22, 2005

என்னைத் தேடி

பல முகங்கள் தேடி
தன் முகம்
இழந்து விடுவேனோ
பயம் தான் விரட்டுகிறது

தன் முகம் தேடி
அவ்வப்போது அலைச்சல்

வைத்த இடத்தில்
கண்ட பழைய முகத்தில்
வைரத்தின் ஜொலிப்பு
கொஞ்சம் குறைந்ததாய்
அடிக்கடி ஒரு குடைச்சல்

சொந்த முகத்திற்கு
பட்டை தீட்ட
சில பழைய முகங்களும்
பல பக்க முகங்களும்
தேவைதான்

சொந்த முகம்
பட்டை தீட்டிய பின்னும்
நம் முகமாய் இருக்குமென்றால்

4 comments:

Anonymous said...

Nanraaha irukirathu..

நண்பன் said...

மிகவும் நன்று நண்பரே....

பெயரையும் தொடர்பு கொள்ளுவதற்கு ஒரு முகவரியையும் விட்டுச் சென்றிருக்கலாமே!

நண்பன்

johneyharolds51948738 said...

i thought your blog was cool and i think you may like this cool Website. now just Click Here

நண்பன் said...

நன்றி நண்பரே...


முடிந்த பொழுது வருகை தருகிறேன். ஆனால் பாவம் அங்கேயும் நான் தமிழில் தான் எழுதுவேன் - பரவாயில்லையா?

நண்பர்கள் சொல்கிறார்கள்

CSM - உலகச் செய்திகள்

GF - உலகச் செய்திகள்