"எழுத்துகளையும் தாண்டி எனக்கென்று ஒரு உலகம் உண்டு; நான் எழுதுபவற்றை மட்டுமே வைத்துக் கொண்டு, என்னை எடை போடுபவர்களை எப்பொழுதும் என் எண்ணங்கள் வியப்பில் ஆழ்த்திக் கொண்டே இருக்கும்....."
- நண்பன்

Tuesday, September 27, 2005

இறப்பதினால் ஆய பயன்....

நண்பனே நாமிருவரும்
எப்பொழுதாவது
சந்தித்துக் கொண்டிருக்கிறோமா?

நமக்குள்
தீர்க்கவியலாத சிக்கல்கள்
ஏதுமுண்டா?

என்னை கொல்வதற்கு
உனக்கு
என்ன காரணங்கள் உண்டு?

உனக்கென நியாயங்களிருக்கலாம்.

உன் குழந்தைகள்
ஏதோ ஒரு வீதியுத்தத்தில்
என் நாட்டு குண்டுகளில்
வீழ்ந்திருக்கலாம்.

உன் மனைவியை
என் நாட்டின்
யாரோ ஒரு வீரன்
பாழ்பண்ணியிருக்கலாம்.

உன் அழகிய வீட்டின் சுவர்கள் மீது
கரி பூசியிருக்கலாம்
வெடித்துச் சிதறிய குண்டுகள்.

உன் இனிமையான தோழன்
ஒருவனின் கால்களை
என் நாட்டு டாங்கிகளேறி
சிதைத்திருக்கலாம்.

உன் எல்லாத் துயரங்களின்
அடையாளமாக என்னை
இருத்தி வைத்திருக்கிறாய்.

உன் கையிலுள்ள துப்பாக்கியில்
எத்தனை எதிர்பார்ப்புகள்
மரணிக்கப் போகின்றன தெரியுமா?

மகன் திரும்பப்பிரார்த்திக்கும்
ஒரு தாயின் பிரார்த்தனைகள்
தோல்வியடைந்துவிடும்

இரவில் குட்டிக் குட்டிக் கதைகள்
கேட்கக் காத்திருக்கும்
என் சிறு குழந்தைகள்
இனி ஒருபோதும்
தேவதைக் கதைகளை
கேட்கவே போவதில்லை.

இரவின் மௌனத்தில்
காதலின் மொழி பேசிய
என் மனைவியின் அன்பு
இனி உறைந்து போய்விடலாம்.

இதெல்லாம் எனது வருத்தமில்லை
நண்பனே.
என் பரிதாபத்தைப் படமெடுத்து
நான் சார்ந்த அனைத்தையும்
அவமானப்படுத்துகிறாயே
அதை மட்டும் நிறுத்திக் கொள்

சுட்டு விடு.
ஒரே குண்டில்
ஒரே துளைத்தலில்
நான் சாகும்படி சுட்டுவிடு.

நண்பனே
எந்தக் கணக்கானாலும்
என் மரணத்துடன்
நீ சமாதானமாகி விடு.
இல்லையெனில் என்ன பயனுனக்கு
நான் சாவதால்?

4 comments:

Anonymous said...

இன்னிதேதிக்கு இந்தமாதிரி எழுதிட்டு கவிதைன்னு ஒத்தக்காலுல படுத்தின்னு நிக்கிற ஒவ்வொருத்தனையும் புடிச்சு ஒத்தக்குண்டில ஒரே துளைத்தலில சாகாமலே சுட்டு நான் ஒங்க கவிதையால பட்டுக்கிட்டிருக்கிற சித்திரவதையைப் பட வைக்கமுடியுமுன்னா, நண்பனே எந்தக் கணக்கானாலும்
உன் சித்திரவதையுடன்
நான் சமாதானமாகி விடுவேன்.
இல்லையெனில் என்ன பயனெனக்கு
நீ சித்திரவதைப்படுவதால்?

வர வர டீவி com·pere அம்மணிங்களோட தொல்லையிலும் விட computerல கவிதைன்னு எழுதுறவன் தொல்லை கொசுத்தொல்லை நுளம்புத்தொல்லையா ஆகிப்போச்சு. யேய், ஒங்க மனசுல என்னதான் நெனைச்சுக்கிட்டிருக்கீங்கடா? கம்பியூட்டரை ஒங்களோட காலின்னு நெனைச்சுப் புடிச்சுக் கெஞ்சுறேன். ப்ளீஸ் கவிதைன்னு படுத்தாதீங்கடா. தாங்கமுடியல்ல சாமி. கம்பியூட்டரோட plug க இழுத்து மூடிவைங்கடா.

நண்பன் said...

தன் பெயரை அறியாதவனுக்கும் மிருகத்துக்கும் எந்த வித்தியாசமும் இருக்கப் போவதில்லை. அநாமதேயமாக வந்து போகும் ஒரு மிருக ஜீவனிடமிருந்து எத்தகைய பண்பட்ட கருத்தையும் எதிர்பார்க்க இயலாது தான்.

யுத்தம் என்ற பெயரில் வாழ்க்கையை இழந்து தவிக்கும் பல ஆயிரக்கணக்கான மக்களின் சோகமும், எதிர்வினை என்ற பெயரில் மாற்றானை பிணைக்கைதியாக்கும் ஒருவனிடம் சிக்கிக் கொள்வது என்று யுத்தத்தின் இருமுனைகளிலும் அப்பாவிகளே அவதியுறுகிறார்கள். இந்த அடிப்படை மனித தன்மையைப் புரிய இயலாத ஒரு ஜந்துவிடம் விவாதிக்க என்ன இருக்கிறது?

எனதருமை .....,

அடுத்த முறை உள் வரும் பொழுது மனிதனாக வா. விவாதிப்போம் கவிதை என்றால் என்னவென்று.

கீதா said...

«Õ¨ÁÂ¡É ¸Å¢¨¾. ¸¡ðº¢¸û ¸ñÓý§É Ţâó¾É. ¿ýÈ¢.

நண்பன் said...

நன்றி கீதா...

தொடர்ந்து வாசித்து வாருங்கள்.

நண்பர்கள் சொல்கிறார்கள்

CSM - உலகச் செய்திகள்

GF - உலகச் செய்திகள்