பயங்கள்....
பயங்கள். . . . . . .
வெளிச்சமற்ற இரவில்
சில நிழல்கள்
தொடர்கின்றன
இருக்காது என்றே
அமைதிப் படுத்தி
நடக்கிறேன்
நிழல்கள்
நடந்து நடந்து
சப்தமெழுப்புகின்றன -
திரும்பிப் பார்க்கச் சொல்லி.
நின்று
திரும்பிப் பார்த்து
நிழல்களை
கண்டிக்க ஆசைதான்.
எத்தனை
கோணத்தில் திரும்பினாலும்
நிழல்களை மட்டும்
காணமுடியவில்லை.
நிழல்களின்
சப்தம் மட்டும்
கேட்டுக் கொண்டே தான்
இருக்கின்றது -
மனதினுள்.
2 comments:
aiiyyoo ninatchalae bayamma irukku
நன்றி திரு கார்த்திக் குமார் அவர்களே,
ஆனால்,பயப்படுத்தும் கவிதை இல்லை, அது.
மனதில் எழும் இச்சைகளும், அதைத் தொடர்ந்து நிகழும், மனப்போராட்டங்களும் தான் அந்தக் கவிதை.
மீண்டும் படித்துப் பாருங்கள், புரியும்...
நட்புடன்
நண்பன்
Post a Comment