பசுவதை
கட்டாக்காலி மாடு
நடுவீதியில் -
இரைமீட்டிக் கழிக்கும்.
பிளாட்பாரத்து வாசி
வாழ்க்கையைப் போல.
மடிவற்றிய மாடுகள்
நடுத் தெருவில் சோரமுற்று
சுமந்து கொண்டு வந்தால்
வீட்டுக்குள் அன்பாக சேர்ப்பு.
மடியில் கனமுள்ள மாடுகள்
நன்றாகக் கவனிக்கப் படும் -
சத்து ஊசிகள் குத்தப் பட்டு.
இல்லையென்றால் -
அனாதை ஜீவனம்.
சுவரொட்டி உரித்து...
பந்தக்கால் வாழை திருடி...
எச்சில் தொட்டியில் பிச்சையெடுத்து...
ஏதோ ஓர் வகையில்
வாழ்க்கை ஜீவனம்...
இங்கு....
பசுவதையென்பது
கழுத்தை அறுப்பது
மட்டும் தான்.
7 comments:
i am touched by this, what you say is indeed very true,
raj
நன்றி திரு ராஜ் அவர்களே...
நன்றி மூர்த்தி....
அப்புறம், அந்த வெப்சைட் தொடங்குவது பற்றி ஒன்றும் தகவலில்லையே....
அன்புடன்
நண்பன்
மிகவும் அருமை அண்ணா!!
தொடர்ந்து உங்கள் படைப்புக்களை தாருங்கள்.
நன்றி சுவேதாராஜா,
தேடிப்பிடித்து வாசித்து வாழ்த்துச் சொன்ன உன் நல்ல உள்ளத்திற்கு...
அன்புடன்
மிக்க நன்றி மூர்த்தி.
இப்பொழுது இதழ் வடிவமைப்பில் முழு மூச்சாக இறங்கியுள்ளோம். முழுமையாக வடிவமைத்ததும் தெரிவிக்கிறேன். என்றாலும் பழைய இதழ்களை வாசிக்க இயலும்.
மிக்க நன்றி
Post a Comment