"எழுத்துகளையும் தாண்டி எனக்கென்று ஒரு உலகம் உண்டு; நான் எழுதுபவற்றை மட்டுமே வைத்துக் கொண்டு, என்னை எடை போடுபவர்களை எப்பொழுதும் என் எண்ணங்கள் வியப்பில் ஆழ்த்திக் கொண்டே இருக்கும்....."
- நண்பன்

Thursday, April 05, 2007

இலங்கை ஏமாற்றியதா?

கடைசிப் பந்து.

எல்லோரும் நகத்தைக் கடித்துக் கொண்டு இருக்கின்றனர்.

ரவி போப்ரா, தன்னைத் தயார் படுத்திக் கொள்கிறார் - எதிர் முனையில், மெஹ்மூத். இருவரும் பேசிக் கொள்ளவில்லை.

ஆனால், இலங்கை அணியினர், கூடி நிற்கின்றனர். கலந்து பேசுகின்றனர். எக்ஸ்ட்ரா மட்டுக் கொடுக்காதே - அறிவுரைகள்.

தேறாது என்ற நிலையில் இருந்து, வெற்றியை முகரும் தூரத்திற்கு தன் அணியைத் தூக்கி வந்த போப்ரா - தயார்.

இலங்கையின் தில்ஹாரா, தன் அணியினரின் அறிவுரை எல்லாம் கேட்டுக் கொண்ட பின்னர் - ஓடி வருகிறார்.

இரு அணி என்ற நிலை மாறி - இப்பொழுது இருவர் மட்டுமே - வெற்றிக்கும் தோல்விக்கும் நடுவே.

தில்ஹாரா - போப்ரா.

இருவருமே தங்கள் மீது போர்த்தப்பட்டிருக்கும் அழுத்தத்தை உணர்கிறார்கள். தோற்றால், அதில் அணியின் பங்கு எத்தனையோ - அத்தனை பங்கு இந்த இருவருக்கும் உண்டு.

ஆட்டம் போட்டுக் கொண்டிருந்த ரசிகர்கள், தவிப்போடு நிலைமையக் கூர்ந்து கவனித்துக் கொண்டிருக்க, டிவியில் பார்த்துக் கொண்டிருந்தவர்களுக்கும் அதே நிலைமை தான்.


தில்ஹாரா ஓடினார் - ஓடினார் - பந்தை விடாமல் பிடித்துக் கொண்டே ஒடினார். எதிரில் இருந்த போப்ரா சற்றே குழப்பத்துடன் - பிறகு திரும்பி ஒரு சுற்று. மீண்டும் தயார் நிலையில்.

இது சரியா?

இருவருமே அழுத்தத்தின் உச்சத்தில் இருக்கும் பொழுது, பந்து வீச்சாளர் மட்டும் தன் ஓட்டத்தை ஓடி, ஒரு ஒத்திகைப் பார்த்துக் கொண்டு, பாட்ஸ்மேனின் அழுத்தத்தை எகிற வைத்து - அடுத்த பந்தைப் போட்டு, பாட்ஸ்மேனைத் தவறிழைக்க வைத்தது சரியா?

ஆட்ட விதிகள் படி, பந்தை வீசாதது தவறில்லை எனலாம்.

என்றாலும், அந்த கடைசி பந்தை வீசுவதாகப் பாவனை செய்து, வீசாமல் போனது - இறுதியில் ஏமாற்றி விட்டார்களோ என்று தான் எண்ண வைக்கிறது....

இது சரியா?

விதிகளின் படி வென்றிருக்கலாம் - ஆனால், பாராட்டத் தோன்றியது இங்கிலாந்தையும் - ரவி போப்ராவையும் தான்..

18 comments:

Anonymous said...

First impression would be something like you said but these last minute pulling out of bowling stride happened before.

Dilhara has been a more of a stock bowler with less control on his bowling(I have been watching him from the day he made his debut)than a strike bowler.he was sweating and was much tensed today.Normally he doesn't bowl at death because his of his lack of variation like slower bowl and yorkers he tends to give away runs easily.When was young he used be an expensive bowler thats why u wouldn't have seen him in the team often(with injuries too).

So I guess its the tension that got better of him.Anyway batsman should have been prepared to face any circumstances.

U may have noticed that batsmen used to pull out at the last sec and annoy the bowler espcially if he is a fast bowler.

Anonymous said...

இங்கிலாந்தின் ஆட்டம் சிறப்பானது. ஆனால் அதைவிட இறுதிவரை தளராத போராடும்/போராடிய இலங்கையணியின் ஓர்மம் பாராட்டக்கூடியது.
.....
அவுஸ்திரேலியா அணி செய்யும் 'அழுகுணி' ஆட்டங்களிற்கு முன், கடைசிப்பந்தில் டில்கார பெனாண்டோ செய்தது எதுவுமேயில்லை. விளையாட்டு முடிந்தபின்னும் இங்கிலாந்து வீரர்களோ அல்லது commentatorsஓ இந்தச் சம்பவத்தைப் பெரிதாய் குறிப்பிட்டு உரையாடியதாய்க் கேட்கவுமில்லை. எல்லா அழுத்தங்களோடும் விளையாடுவதுதான் விளையாட்டு :-). வெல்வது தோற்பதை விட சுவாரசியமாய் முடியும்வரை விளையாட்டு இருப்பதுதான் -என்னைப்போன்ற- இரசிகர்களுக்கு வேண்டியது.

Anonymous said...

duppuku......... india kavalai innum pokaliya.. pavam sir neenkal

Naufal MQ said...

நண்பரே,

அப்படியா நடந்தது? நேற்றைய போட்டியை நான் பார்க்கவில்லை.

விதிமுறைகளின் படி தவறில்லை என்றாலும். இலங்கையின் (டில்ஹாராவின்) சில்லரைத்தனம். வேறென்ன சொல்ல?

மணிகண்டன் said...

//இலங்கையின் (டில்ஹாராவின்) சில்லரைத்தனம்//

உண்மையான வரிகள். இதே மாதிரி இந்தியா இலங்க தொடர் நடந்தப்போ நாலாவது போட்டில ஷேவாக் ரன் எடுக்க ஓடிட்டு கடைசி அடிகளை நடந்து போனப்ப சங்கக்கரா பந்தை பவுலர் சைட் ஸ்டம்புல அடிச்சு ரன் அவுட்டாக்கினாரு. பேட்ஸ்மென்கள் ரன் எடுக்கும் பொழுது சிலசமயம் கடைசி அடிகளை நடந்து போறது சகஜம். அசாருதின்,இண்சமாம் இது மாதிரி அடிக்கடி பண்ணுவாங்க. இலங்கையின் ரனதுங்கா முக்கால்வாசி நேரம் இப்படி நடந்து தான் ரன் எடுப்பாரு. அப்பல்லாம் எதிரணி கீப்பர்கள் அடிச்சிருந்தா பத்துக்கு ஒன்பது முறை ரனதுங்க ரன்வுட் ஆயிருப்பாரு. ஷேவாக் அவுட் பத்தி யாரும் அப்ப எதுவும் சொல்லலை. இருந்தாலும் அதுவும் பக்கா சில்லரைத்தனம் தான். திறமையால் மட்டும் ஜெயிக்க முடியாது, இது மாதிரி மொள்ளமாறித்தனமும் வேணும்னு இலங்கை நினைக்குதோ என்னவோ.

Bobby said...

Bowler was experiencing the same pressure as the batsman.

'Fast Bowler',
I was expecting a mature comment from you. I believe you must have cricket playing experience as a bowler.

As "Raaj" says we cannot consider Dilhara as an accurate bowler like Vaas.

I wonder how come you guys don't appreciate the success from a genuine effort.

Do not mix up your cheap politcal views with the simple enjoyment of a good game.

Bopara did an excellent job as he was the man of the match.

வினையூக்கி said...

நண்பன் சார்,
இதைப்பற்றி எழுதவேண்டும் என்று நினைத்துக் கொண்டிருக்கும்போது உங்கள் பதிவை பார்க்க முடிந்தது. தில்ஹார அப்படி செய்ததை தவிர்த்து இருக்கலாம்.

நண்பன் said...

பதில் எழுதிய நண்பர்கள் அனைவருக்கும் நன்றி.

// I wonder how come you guys don't appreciate the success from a genuine effort. //

Bobby,

இந்தியா, பாக்கிஸ்தான் வெளியேறிய பிறகு, நாங்கள் மனபூர்வமாக விரும்புவது - இலங்கை இந்த உலகக் கோப்பையை வெல்ல வேண்டும் என்பதே. வெகு சிறப்பாக ஆடிக்கொண்டிருக்கும் இலங்கை - அதே sportmanshipபுடன், இந்தக் கடைசி பந்தையும் அணுகி இருக்கலாம் என்ற ஆதங்கம் தான் இந்தப் பதிவை எழுத வைத்ததே தவிர, இதில் வேறு எந்த உள்நோக்கமோ, அல்லது அரசியலுமோ காரணம் கிடையாது.

தென் ஆப்பிரிக்காவுடன் - லசித் மலிங்கா எடுத்த அந்த நான்கு விக்கெட்களை மறக்க முடியுமா, என்ன? இன்னும் சொல்லப்போனால், தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து இந்த இரண்டு மாட்ச்சுகளும் தான் - இந்த உலகக்கோப்பையின் highlight ஆக இருக்கும்.

Anonymous said...
// duppuku......... india kavalai innum pokaliya.. pavam sir neenkal //

அநாநி - இந்த உலகக் கோப்பையில், விளையாட வந்தது இந்திய அணி அல்ல. அது பாலிவுட்டில் இருந்து வந்த ஒரு கூத்தாடி கும்பல். அவர்களுக்கு, இனிமேல், லைட்டிங், ரிஃபெளக்டர்ஸ், காமிரா, ஸ்டார்ட் / கட் சொல்ல ஒரு டைரக்டர், ஒரு ஷாட் முடிந்ததும், ஆப்பிள் / ஆரஞ்ச் இத்யாதி ஜூஸ் வகைகள் என்றெல்லாம் இருந்தால் தான் ஆட முடியும் என்று நினைக்கிறேன்.
இனி, இந்தியா, கிரிக்கெட்டில் வெற்றி பெற வேண்டுமென்றால், அமீர்கான் எடுத்த லகான் மாதிரி, யாராவது இவர்களைப் போட்டு, படமெடுத்தால் உண்டு.

ஆக, இந்தியா தோற்றதைப் பற்றிய கவலை எனக்கில்லை. இப்பொழுது தான் எந்த டென்ஷனும் இல்லாமல், விளையாட்டுகளை அனுபவித்துப் பார்க்க முடிகிறது, நண்பரே.
// these last minute pulling out of bowling stride happened before.//

Raaj இருந்திருக்கலாம் - நான் சொல்ல வந்தது - ரசிக்கும்படியாக இல்லை என்பதை தான்.

DJ

// அவுஸ்திரேலியா அணி செய்யும் 'அழுகுணி' ஆட்டங்களிற்கு முன், கடைசிப்பந்தில் டில்ஹாரா பெர்னாண்டோ செய்தது எதுவுமேயில்லை. //

ஆஸ்திரேலியா அழுகுணி ஆட்டங்களுக்கெல்லாம் காரணம் - அவர்கள் மரபணுவில் இன்னமும் தங்கி இருக்கும் பாரம்பரியம் தான் - அந்த அளவிற்கெல்லாம் ஒப்பிடாதீங்க.

Fast Bowler.

// நேற்றைய போட்டியை நான் பார்க்கவில்லை. //

இந்த மாதிரி மாட்ச்சையெல்லாம் தவற விடுவீங்களா, என்ன? இருந்தாலும் அதிகாலை இரண்டு மணிக்கெல்லாம் உட்கார்ந்து கொண்டு, ஆட்டம் பார்ப்பது சற்று சிரமம் தான் - அதுவும் மறு நாள் வேலை பார்க்க வேண்டுமென்றால்.


மணிகண்டன்,


// திறமையால் மட்டும் ஜெயிக்க முடியாது, இது மாதிரி மொள்ளமாறித்தனமும் வேணும்னு //

கிட்டத் தட்ட, அனைத்து குழு ஆட்டங்களும், இந்த நிலைமைக்கு வந்து விட்டன என்றே தோன்றுகிறது.

நீங்கள் கால்பந்து பார்ப்பீர்களா?

அந்த -Hand of God; - கோல் உங்களுக்குத் தெரியுமா?


வினையூக்கி,

// நண்பன் சார்,//

எந்தத் தயக்கமுமின்றி, நண்பன் என்றே கூப்பிடுங்கள், பக்கத்தில் சார் என்ற விளி எல்லாம் வேண்டாம்.

அனைவருக்கும் நன்றி.

அன்புடன்,
நண்பன்.

வல்லிசிம்ஹன் said...

நீங்காள் சொல்வதை அப்படிய்ஏ ஆமோதிக்கிறென் நண்பன்.

விளையாட்டுதான்.
இருந்தாலும் நியாயமும்
பார்க்கவேண்டும்.

ஆதிபகவன் said...

//இந்தியா இலங்க தொடர் நடந்தப்போ நாலாவது போட்டியில ஷேவாக் ரன் எடுக்க ஓடிட்டு கடைசி அடிகளை நடந்து போனப்ப சங்கக்கரா பந்தை பவுலர் சைட் ஸ்டம்புல அடிச்சு ரன் அவுட்டாக்கினாரு. பேட்ஸ்மென்கள் ரன் எடுக்கும் பொழுது சிலசமயம் கடைசி அடிகளை நடந்து போறது சகஜம். அசாருதின்,இண்சமாம் இது மாதிரி அடிக்கடி பண்ணுவாங்க. இலங்கையின் ரனதுங்கா முக்கால்வாசி நேரம் இப்படி நடந்து தான் ரன் எடுப்பாரு. அப்பல்லாம் எதிரணி கீப்பர்கள் அடிச்சிருந்தா பத்துக்கு ஒன்பது முறை ரனதுங்க ரன்வுட் ஆயிருப்பாரு. ஷேவாக் அவுட் பத்தி யாரும் அப்ப எதுவும் சொல்லலை.//

அது உங்க தப்பு. நடந்து வர்ற பாட்ஸ்மனை அவுட்டாக்காமல் வேடிக்கை பார்த்தது யார் பிழை?

டில்ஹர செய்தது சரியா பிழையா என்பது ஒரு புறமிருக்க, இதே சூழ்நிலையில இந்தியா என்ன செய்திருக்கும்???

சேட்டன் சர்மாவின் கடைசிப் பந்தில் ஜாவேட்மியான்டாட் சிக்ஸர் அடித்ததை
மறந்து விட்டீர்களா?

இங்கு ஜெயிப்பதுதான் முக்கியம். ஜெயிப்பது மட்டுமே முக்கியம்.

விளையாட்டு விதிமுறைகளை மீறாமல் எதைச் செய்தாலும் சரி.

இலங்கையிடம் இந்தியா தோற்றதால்தான் இந்தக்கேள்வி இங்கு வந்திருக்கிறது.

டில்ஹர இப்படி எதுவும் செய்யாமல்தானே இந்தியா தோற்றது.

உலகக்கோப்பை போட்டியில் இந்தியாவை அதிகமுறை இலங்கை ஜெயித்துள்ளது என்பதும் கவனிக்க வேண்டிய விஷயம்.

Anonymous said...

Sorry to write in English again.மணிகண்டன் said that Ranatunga and Inzamam used to walk their last paces and because of the "sportsmanship" showed by their opponents they get away.

I have read and enjoyed your cricket related posts and comments during last few weeks but to say the truth you are just another emotional fan from sub continent and who just ignores the facts.

""இலங்கையின் ரனதுங்கா முக்கால்வாசி நேரம் இப்படி நடந்து தான் ரன் எடுப்பாரு. அப்பல்லாம் எதிரணி கீப்பர்கள் அடிச்சிருந்தா பத்துக்கு ஒன்பது முறை ரனதுங்க ரன்வுட் ஆயிருப்பாரு.""

Ranatunga and Inzamam were two big guys who made it a custom of walking instead of actual running between wickets.Ranatunga was a notorious walker; actually runs few yards and walks(if its a single or the second run)while checking the whereabouts of the ball and once he sees the ball gets returned he hurries and completes his run. He does it mainly to "conserve" his energy and to irritate the fielders. Shane Warne and Aussies would confirm it.

I started to pay more attention when he was running bec of the oppertunities of getting run out and it is entertaining but sometime would irritate even the fans. So many times fielders would return the ball to the wicket-keeper quickly for a remote chance of running him out whenever they see him walking towards the crease.

If u have seen the batsmen who "walk", they keep an eye on the ball all the time when they are supposedly "walking" and ground their bat on time.

Professional cricket(or any sport)doesn't allow anybody to lax or to show unnecessary sportsmanship. I would rather call it lack of energy or cricketing brain.

For the Sanagakara running out Sehwag incident, it is the laziness that cost him the wicket.

He was sleep walking and its the quick thinking of the keeper to be appreciated because the ball is alive and batsman is short of his crease. Its cricket 101,even a street cricket playing kid would know how important to complete your run.

Umpire would be watching whether the batsman actually completes the run all the time and u may have seen batsmen failing to touch the crease getting denied of the "run" even in international matches.

Sehwag either was lazy or forgot the 101. Anyway he wouldn't have even got the run had he survived.There is no room for error in professional cricket.
I would just say sangakara was smart and quick enough that time.

For more info check the video of the match(Sangakara-Sehwag) goto 1:25 min of the video Youtube video

And the commentry to make your own judgement Cricinfo commentry

And those who want to watch the last over from Dilhara Click Here

நண்பன் ,thank you for the space...

Anonymous said...

This is a usual behaviour of Srilankans. They have been doing this to tamils for 3 decades. Now they extend it to cricket also. I suprise how a tamil can support sri lankan cricket team on the basis of sub continental team. Can you support Pakistan if they would have selected?

நண்பன் said...

// I suprise how a tamil can support sri lankan cricket team on the basis of sub continental team.//

ஹல்லோ டியர் அநாநி,

கிரிக்கெட்டை கிரிக்கெட்டா மட்டுமே பாருங்கள். இலங்கை அணி வெற்றி பெற வேண்டும் என்ற சொன்ன பொழுது, அது ஒரு resourceful team மற்றும் இறுதி பந்து வரைக்கும் போராடுகிறார்கள் என்பதினால் தான்.

இருக்கின்ற அணிகளில் ஒன்று வெற்றி பெற வேண்டும் என்ற பொழுது, அதில் ஒன்றாக இந்த அணி இருந்தால் என்ன தவறு?

பாக்கிஸ்தானை ஆதரிப்பதில் எந்த தவறும் இல்லை.! இன்னும் சொல்லப் போனால், பாப் உல்மர் மரணம் - தொடர்ந்து அடுத்த ஆட்டத்தில் வெற்றி பெற்று கண்ணீர் மல்க, தனது ஒருநாள் பந்தய வாழ்க்கையை முடித்துக் கொண்ட, இன்சமாமை நினைத்து வருந்தாத ஒரு கிரிக்கெட் ரசிகன் இருக்க முடியாது.

' ஆட்டத்திலிருந்து வெளியேற்றப்பட்டால், உயிருக்கே ஆபத்து என்ற நிலையை உருவாக்கினால், அப்புறம் யாராலும் நாட்டிற்காக விளையாட முடியாது - என்று தன் நாட்டு பத்திரிக்கைகளை விளாசித் தள்ளிய பொழுது, அதை இந்திய ரசிகர்களும் தங்கள் நடத்த்தையின் மீது கூறப்பட்ட விமர்சனமாகத் தான் எடுத்துக் கொண்டனர்.

கிரிக்கெட் என்பது நாடுகளின் எல்லை கடந்தது.

அதை குறுகிய நோக்கத்தோடு பார்ப்பதும், எழுதுவதும் மிக தவறு. தயவு செய்து உங்கள் அணுகுமுறையை மாற்றிக் கொள்ளுங்கள் நண்பரே

நண்பன் said...

வல்லி சிம்ஹன், ஆதிபகவன் உங்கள் வருகைக்கும், கருத்திற்கும் மிக்க நன்றி.

ராஜ், "walking" "running" என்ற அளவிற்கெல்லாம், கூர்ந்து கவனிப்பதில்லை. பெரும்பாலும் ரன்ரேட்டைப் பார்ப்பதில் தான் ஆர்வம் இருக்கும். ரொம்ப நெருக்கமாக, எந்தப் பக்கம் வேண்டுமென்றாலும் ஆட்டம் திசை திரும்பலாம் என்ற நிலை ஏற்பட்டால் மட்டுமே அமர்ந்து பார்ப்பது வழக்கம். இல்லையென்றால், கிடையாது.

என்றாலும், நடந்து போவது என்பது, ஓடுபவர்களுக்கும், பந்திற்கும் இடைப்பட்ட தூரத்தைப் பொறுத்தது. ஸ்டம்பை அடுத்து நிற்கும் ஒருவர் கையில் பந்து வந்துவிட்டது என்றால், அவர் கண்டிப்பாக விக்கெட் எடுக்கத் தான் முனைவர். அது யாராக இருந்தாலும். இந்த விஷயத்தில் யாரும் குறை கூற முடியாது.

ரன் எடுப்பவர் - பந்து வந்து சேருமுன் அவர் வந்து சேர்வது தான் உத்தமம். அல்லது வெளியேற வேண்டியது தான்.

Bobby said...

நண்பனின் கூற்றை அப்படியே வழிமொழிகிறேன்.
As Sangakkara says in one of his cricinfo articles, "In Sri Lanka, the general public seem to have a more easy-going perspective. Yes, most Sri Lankans are passionate about sport, especially cricket, but we also seem to understand that sport is sport. I am not sure whether that *more balanced attitude is the product of two decades of civil war, or merely reflects the more happy-go-lucky style of an island nation*."
http://content-www.cricinfo.com/extracover/content/story/287539.html

Power play முடிஞ்சு போய் கன நேரமாயிட்டுது!
சின்ன வட்டத்திலிருந்து வெளியே வந்து திறந்த மனதுடன் விளையாட்டை ரசிப்போம் :-)

மணிகண்டன் said...

//I have read and enjoyed your cricket related posts and comments during last few weeks but to say the truth you are just another emotional fan from sub continent and who just ignores the facts//

Raaj, i agree that i am an emotional sub-continent cricket fan as many. Its true that batsmen used to keep an eye on the ball, but i have seen many times they walk the last few steps to the crease even when the ball is with the keeper (unfortunately i don't have any video links) and it is practised by many senior players. Definitely an experienced, mature player will not use that as an opportunity to pick a wicket. I hope you still remember Walsh incident in 1987 worldcup. In recent days, hunger to win has killed sportsmanship in the game.

Naufal MQ said...

//Bobby said...
Bowler was experiencing the same pressure as the batsman.

'Fast Bowler',
I was expecting a mature comment from you. I believe you must have cricket playing experience as a bowler.
//
நண்பர் Bobby,
நான் சொன்னதை நீங்கள் எனது காழ்ப்புணர்வாக எடுத்திருந்தீர்களானால் என்னுடைய தவறல்ல. ஆனால், டில்ஹாரா செய்தது வேண்டுமென்றே செய்த செயல் என்று நண்பன் இப்பதிவில் கூறுவதால்தான் (நான் அந்த போட்டியை பார்க்கவில்லை) நான் அவ்வாறு கூறினேன். அவர் மன அழுத்தம் காரணமாக அவ்வாறு செய்திருக்க வாய்ப்பில்லை என்றே இப்பதிவை படித்தவுடன் புரிந்து கொண்டேன். அதனால், இம்மாதிரி செயல் சிறுபிள்ளைத் தனம் தானே? நான் ஒரு ஆஸ்திரேலிய அணியின் ரசிகன். அவர்கள் ஆட்டத்திற்கு மட்டுமே. அவர்கள் அவ்வப்போது அரங்கேற்றும் அசிங்க செயல்களுக்கல்ல.

கிரிக்கெட் தன் புனிதத்தை இழந்து நெடுநாளாகிறது நண்பரே. ஆனால், அதற்காக அசிங்கத்தை அசிங்கம் என்று சொல்லாமல் வேறென்ன சொல்வது?

பாரதிய நவீன இளவரசன் said...

//விதிகளின் படி வென்றிருக்கலாம் - ஆனால், பாராட்டத் தோன்றியது இங்கிலாந்தையும் - ரவி போப்ராவையும் தான்..// Nanbarey! you are absolutely right! thats why Ravi Bopra was rightly awarded the Player of the Match. Sportsmanship is lacking every where, and in every sport. This situation is no exception. Few months ago, when runner Muralitharan went to congratulate his partner on century, unfortunately he was ran out by the KIWIS who politely told that the game never ends when one batsman completes his century. Two decade ago, in the world cup 1987, remember COURTNEY WALSH displaying the best sportsmanship, which resulted in his teams loss, ultimately.

நண்பர்கள் சொல்கிறார்கள்

CSM - உலகச் செய்திகள்

GF - உலகச் செய்திகள்