"எழுத்துகளையும் தாண்டி எனக்கென்று ஒரு உலகம் உண்டு; நான் எழுதுபவற்றை மட்டுமே வைத்துக் கொண்டு, என்னை எடை போடுபவர்களை எப்பொழுதும் என் எண்ணங்கள் வியப்பில் ஆழ்த்திக் கொண்டே இருக்கும்....."
- நண்பன்

Monday, April 16, 2007

அன்புடன் நண்பர் அர்விந்த நீலகண்டனுக்கு

அன்புடன் நண்பர் அர்விந்த நீலகண்டனுக்கு

நண்பனின் திறந்த மடல்,


// TOR is an add on to the firefox browser. By enabling TOR, you can hide your IP address. The IP packets will travel through different computers around the world and will reveal someone else's IP. //

யாருடைய முதுகிலோ சவாரி செய்து வருவேன் - அதைக் கேட்கக் கூடாது - எவனோ மாட்டிக் கொண்டு சாகட்டும் - ஆனால், என்னுடைய கருத்து மட்டும் வாழட்டும் - வசதியான ஒரு சந்தில் இருந்து வரும் கருத்துகள் மதிக்கப்பட வேண்டும். இது தான் உங்கள் தார்மீகமா?

சில எல்லைகளைக் கடந்தும் சிலரை நண்பர்களாக வரித்துக் கொண்டு, ஒரு மதிப்பு வைத்திருந்தேன் - சிலருடைய பதிவுகளை வாசித்து ஒரு சிநேகப்பூர்வமான தூரத்திலும், மேலும் ஒரு சிலரை வாசித்து கருத்தாட முயன்றும் - ஒரு கண்ணியமான இடைவெளியுடன் மதிப்பு வைத்திருந்தேன்.

அதிலும் நீங்கள் உங்களுடைய கூடுவிட்டு இருந்து வெளிவர தொடங்கி, பிற நண்பர்களைச் சந்திக்க ஆரம்பித்த பொழுது, வெளிப்படையாக நீங்கள் இயங்க ஆரம்பித்து விட்டீர்கள் என்றே மகிழ்ந்தேன்.

ஆனால், கடந்த இரண்டு நாட்களில், வெளியான சில பதிவுகள் அதை சிதைத்துக் கொண்டு வருகின்றன. மேற்கண்ட வரிகளை வாசித்த பின்பு - an intellect on the other bank - என்று உங்கள் மீது வைத்திருந்த நம்பிக்கை சிதையும் பொழுது,

உங்களிடம் கேட்கத் தோன்றுகிறது - YOU too Arvind?

உங்கள் மனசாட்சியைக் கேளுங்கள் - நான் சொல்வதை எதிரொலிக்கும்.


Google Reader இருப்பதால் நீங்கள் எழுதுபவற்றை வாசிக்க இயலும். சிலர் எழுதுவதை எதிர்க்க வேண்டுமென்பதற்காகவே வாசித்து வருகிறேன் - அதாவது I hate to Love you or Love to hate you என்ற வகை. எப்படி எடுத்துக் கொள்வது என்பது உங்களது சௌகரியம். ஏனென்றால், தாந்தோன்றித்தனமாகத் திரிந்து கொண்டிருந்த என்னை ஒரே அடியில் மாற்றிப் போட்டு, என் மதத்தைப் பற்றிய ஆய்வைத் தொடங்க வைத்த நண்பர்கள் நீங்கள் தானே?

தருமியுடனான எனது உரையாடலைப் படித்துப் பாருங்கள் - நண்பன் அடுத்த உரையாடலை எப்போ ஆரம்பிக்கலாம் - I am Game என்று எழுதி ஆவலுடன் காத்திருக்கிறார். ஏன் நீங்கள் ஆதரவளிக்கும் நண்பரால் அது முடியாமற் போயிற்று?

அமைப்பு ரீதியாக இயங்க வேண்டும், காவல் துறை, நீதித் துறையை முறைப்படி அணுக வேண்டும் என்ற வரிகளைப் பற்றியா விமர்சனங்கள் - ஆஹா, எத்தனை அழகு.!!!

இந்த மூன்றும், தங்களுக்கென ஒரு அமைப்பை நிறுவுதல், காவல்துறை, நீதிதுறையை அணுகுதல், இவை எல்லாம் ஒரு மனிதனின் அடிப்படை உரிமை அல்லவா? அல்லது இந்திய இறையாண்மை இந்த அடிப்படை உரிமைகளை இஸ்லாமியர்களுக்கு மறுக்கிறதா?

நண்பன் ஒரு தீவிரவாதி என்ற ரேஞ்சுக்கு எழுதியவர்கள் - சற்று காலம் பின்னோக்கிப் பார்க்கட்டும் - நேசகுமாரும், இஸ்லாமிய இனதுரோகிகளும் என்ற பதிவை எழுதியதும், என்ன என்ன பேசினீர்கள்? எழில் என் பதிவிற்கு சுட்டி கொடுத்து, நண்பன் ஷாஜஹானின் சிறப்பான பதிவு என்று ஒரு பதிவு போட்டு, அகமகிழ்ந்தீர்களே - அதில், நான் (நேசகுமார்) அங்கு வந்து கருத்து சொன்னால், அது அவருக்கு (நண்பனுக்கு) ஒரு நெருக்கடியைக் கொடுக்கும் அதனால் எழுதவில்லை என்றல்லவா சொன்னார்.

ஆஹா! இதல்லவோ நாடகம்!!!

இன்றும் நான் மாறவில்லை. என் போக்கிற்கு, நியாயம் என்று பட்டதைத் தொடர்ந்து எழுதி வருகிறேன். ஆனால், இன்று மட்டும் அடி வயிறு கலங்கிப் போனதேன்?

விடாது கருப்பை எதிர்த்து ஒரு கருத்து சொல்லிவிட்டவுடன், ஒடோடி வந்து, அகமகிழ்ந்தவர்கள் எல்லாம் எங்கே?

ஆக, எனக்கு சாதகமானவற்றை பேசிக் கொண்டு, நாங்கள் வழங்குபவற்றை கையேந்தி வாங்கிக் கொண்டு, இணங்கி நடந்தால் உனக்கும் ஒரு வாழ்வு அளிப்போம். அவ்வாறின்றி என் உரிமை, சுதந்திரம், கருத்து என்றெல்லாம் பேசினால், உன் மீது சகல வித குற்றங்களையும் அள்ளி வீசி, அழிச்சாட்டியம் செய்து அழித்து விடுவோம் என்பது தான் உங்கள் தார்மீகமா?

இது தான் இந்துத்வம் இல்லையா?.

தன்னை அம்மணம்மாக்கிக் கொண்டு, அவலட்சணமாக நிற்கும் அருவெறுக்கத் தக்க இந்துத்வம்.

தங்களுக்கு சௌகரியப்படும் பொழுது தூக்கி தலையில் வைத்துக் கொண்டு கொண்டாடுவது - இல்லையென்றால் காலில் போட்டு மிதிப்பது

இதைத்தானே அனைவரும் எதிர்க்கின்றனர்!

சிந்தியுங்கள். தமிழ்மணத்தை விட்டு வெளியேறுவது தற்காலிகமாக ஒரு பாதுகாப்பு என உணர்ந்தீர்கள் என்றால், செய்யுங்கள். இல்லையேல், இந்த முடிவை தவிர்த்து விட்டு, வெளிப்படையாக இயங்குங்கள்.

எதை வேண்டுமானாலும் விமர்சியுங்கள். ஆனால், குறைந்தபட்ச மனித மாண்புகளை மீறாமல் செய்யுங்கள். ஆக்கபூர்வமான விமர்சனங்களுக்கு என்றுமே பதில் சொல்வோம் - பதிலை தேடுவோம் - தேடுவதில் கற்றுக் கொள்ளுவோம்.

மற்றவை உங்கள் விருப்பத்திற்கு,

அன்புடன்,
நண்பன்

7 comments:

Anonymous said...

Anna

இது தான் இந்துத்வம் இல்லையா?.

I used visit your blogs and intersted read you blogs. I am just reader.

But now I can see whats your point of view....This is your level....

Please donot take it as advise but we are expecting higher standards from you....

Hope do ....

-Muthu
A Typical Hindu who is having view with higher standards of human.

நண்பன் said...

அன்புடன் முத்து தம்பிக்கு,

இது தான் இந்துத்வமா என்று கேள்வி எழுப்பியதில் என்ன தவறு இருக்கிறது என்பதைக் குறிப்பிடவில்லையே?

பிறகு எப்படி நான் தெரிந்து கொள்வது - நீங்கள் எதைக் குறித்து கவலைப்படுகிறீர்கள் என்று.

இது இந்துத்வம் இல்லை - அனைவரையும் நேசிப்பதே இந்துத்வம் என்று உங்களால் கூட எழுத முடியாமல் போயிற்று பார்த்தீர்களா?

பின் நான் மட்டும் எப்படி நீங்கள் விரும்பியவாறு எழுத முடியும்?

என்றாலும், அண்ணா என்று விளித்த அன்பிற்கு நன்றி. இந்த நேசம் தொடரட்டும்.

அன்புடன்
நண்பன்

நண்பன் said...

அரவிந்த் நீலகண்டனின் அகப்பயணத்தில்
எழுதிய பின்னூட்டம்:

// If you think the feeling of letting down is mutual you are wrong...//

There is no such feeling as mutual let down. Its only my opinion.

And Glad to know, there is no such feeling from your end.

If only, such a feeling exists from the other side, then it would be a loss.

And you can have whatever opinion about me and my writings - I had never let anything affecting my writing so far. And it would be so in the future too....

Regards & take care.

Thanks

Nanban

Anonymous said...

நண்பரே,

தங்களது பதிவினைக்கண்டேன். எனக்கு முழுவதுமாக புரியவில்லை (பல பழைய சம்பவங்களை கோர்த்து எழுதியதாக மட்டுமே புரிந்தது).

உங்களுக்கும் அரவிந்தனுக்கும் உள்ள பிரச்சனைகளில் ஏன் இந்துத்துவத்தை நுழைக்கிறீர்கள்....அவர் மட்டுமல்ல இந்துத்துவம்....தங்களது மனக்குமுறல்களில் தார்மிகம் இருக்கலாம், ஆனால் தங்களது வார்த்தைப் பிரயோகம் (இதுதான் இந்துத்துவமா?) என்பது மனதை என்னவோ செய்கிறது....

இப்படி இருமதத்தவரும் லாவணி பாடுவதில் என்ன உபயோகம் இருக்க முடியும்?.தயவுசெய்து சிந்திப்பீர்.

சுல்தான் said...

அன்பின் நண்பன்,
பழங்கதையொன்று!.

நாங்கள் துபைக்கு வந்த புதிதில், என் நண்பர் ஊரிலிருந்த எங்களின் நலம் விரும்பி ஒருவருக்கு
"இங்கு நாங்கள் மிகுந்த துன்பத்தையும் துயரத்தையும் அனுபவிக்கிறோம். துபை நாங்கள் நினைத்தது போல் இல்லை" என்று மடல் எழுதினார்.

அதற்கு, அந்த எங்கள் நலம் விரும்பியவர்
"துபை எப்போதும் போல்தான் இருக்கிறது. நீங்கள் தவறாக நினைத்தது உங்கள் குற்றம்தான்"
என்று மறுமொழி எழுதினார்.

இந்த பதிவைப் படித்ததும்,
எனக்கு அதுதான் நினைவுக்கு வருகிறது.

Anonymous said...

நண்பரே......

ஆர்.எஸ்.எஸ்-ஸில் இருந்தாலே இஸ்லாமிய எதிர்ப்பு என்பது இயல்பாகவே வரும்படி மூளைச்சலவை செய்யப்படும். அமைப்பு மூலமாக நடவடிக்கை எடுக்க முயற்சி செய்யப்போவதாக சொன்ன உங்கள் மேல் தீவிரவாதி என்ற பிம்பத்தை உருவாக்க நினைத்த மனமுரடன்,அரைவிந்தன் சுயரூபம் வெளிவந்து நீண்ட நாட்களாகின்றன.

நண்பன் said...

// உங்கள் மேல் தீவிரவாதி என்ற பிம்பத்தை உருவாக்க //

ஆடுபவர்கள் ஆடட்டும், நண்பரே.

பின்னால் சொந்த செலவில் சூன்யம் வைத்துக் கொண்டோம் என்று தெரியவரும் பொழுது வருத்தப்படுவார்கள்.

அப்பொழுது மன்னிப்பெல்லாம் கிடைக்காது.

ஏதோ இஸ்லாமிய அமைப்புகள் மட்டும் தான் என்று நினைத்துக் கொண்டிருக்கின்றனர்.

அனைத்து அரசியல் கட்சி அமைப்புகளையும் - அதிமுக உட்பட அனைத்து கட்சிகளையும் அணுகுவேன் - தேவைப்பட்டால்.

அந்த கட்சிகளின் அமைப்பில் இருக்கும் நண்பர்களை தொடர்பு கொண்டிருக்கிறேன். உதவுவதாக வாக்களித்து இருக்கின்றனர்.

நடப்பவை அனைத்தையும் உன்னிப்பாகக் கவனித்து வருகிறோம்.

கவனமாக எழுதுங்கள் என்ற எச்சரிக்கையைத் தவிர, இப்போதைக்கு வேறு எதுவும் என்னால் சொல்ல இயலாது.

நீண்ட பதிவுகளையும், தன்னிலை விளக்கத்தையும் தவிர்க்கும் படி சொல்லி இருக்கிறார்கள். அதே சமயம் ஒரு எச்சரிக்கையையும் - ஏனென்றால், நண்பர்களே தவறாக எழுதி மாட்டிக் கொண்டு விடக் கூடாது என்பதால், பொதுவாக ஒரு எச்சரிக்கை மட்டும் கொடுக்கச் சொன்னார்கள். எது காழ்ப்புணர்ச்சி, எது விமர்சனம் என்பதைக் குறித்து, எந்த மன்றங்களிலும் தீர்மானித்துக் கொள்ளலாம். இங்கு எதையும் எழுதாதீர்கள் - நீங்களாக ஒரு முடிவுக்கு வந்து விஷயத்தை முடித்துக் கொள்ளும் வரை - என்றிருக்கின்றனர்.

ஆக, நான் அமைதியாக இருக்கிறேன் என்று தப்பர்த்தம் செய்து கொண்டு விடாதீர்கள்.

விஷயம் எதுவரையிலும் போய் இருக்கிறது என்று தெரிந்து கொள்ள ஆசைப்படுபவர்கள், தனி மடலில் தொடர்பு கொள்ளுங்கள். தேவைப்பட்டவர்களுக்கு விளக்கம் அளிப்பேன்.

அடுத்த ஒரு வாரத்திற்கு, மாற்றுத் தடங்கள் என்ற வலைப்பதிவில், சினிமாவைப் பற்றி எழுதுகிறேன்.

வாரூங்கள்.

Fly high, friends.

அன்புடன்,

நண்பன்.

நண்பர்கள் சொல்கிறார்கள்

CSM - உலகச் செய்திகள்

GF - உலகச் செய்திகள்