"எழுத்துகளையும் தாண்டி எனக்கென்று ஒரு உலகம் உண்டு; நான் எழுதுபவற்றை மட்டுமே வைத்துக் கொண்டு, என்னை எடை போடுபவர்களை எப்பொழுதும் என் எண்ணங்கள் வியப்பில் ஆழ்த்திக் கொண்டே இருக்கும்....."
- நண்பன்

Saturday, April 07, 2007

நண்பன் .... (தருமியும் படிக்கலாம்...)

தட்டுங்கள் திறக்கப்படுமென்று
கூவிக்கொண்டே
கூடியவர்களின் வரிசை
நீண்டுகொண்டேயிருக்கிறது.

இல்லையென மறுக்கமாட்டானென
வான்நோக்கியுயர்த்திய
கைகளால்
வெளிச்சம் தேய்ந்துகொண்டேயிருக்கிறது.

உண்டென்றும் இல்லையென்றும்
வாத பிரதிவாதங்களின் குரலில்
பிரபஞ்சமே ஊமையாகின்றது

எம்மை ஏன் கைவிட்டீரென
அழுகின்ற குரலின்
குற்றச்சாட்டொன்றும் வீசப்படுகிறது

யானைப்படை விரட்டியடித்த
அபாஃபீல்கள்
எங்கே போயினவென்ற
ஏளனமொன்றும் எழுந்து நடக்கிறது.

எல்லோருக்கும் ஏதோவொரு
அதிசயமொன்று வேண்டியதிருக்கிறது
அவனிடமிருந்து.

ஏதும் கிடைக்காதென்று
அலுப்படைந்தவர்கள்
உறுதியாக மறுக்கின்றனர்
அவன் இல்லையென்று.

மளிகைப் பட்டியல் நீளம்
கோரிக்கைகளுடன்
தேடித்தேடி அலைகின்றனர்
பல வழிகளினூடாகவும் -
அவன் இருப்பை நம்புபவர்கள்.

ஏதோவொரு
எதிர்பாராத தருணத்தில்
எதிர்பட்டுவிட்ட
அவன் கேட்டான் -
எடு பட்டியலை
கொடுக்கிறேன் கேட்டதை

ஏதுமில்லை.
நமக்குள் கேட்பதும்
கொடுப்பதுவுமெதற்கு
ஏதோ ஒரு பரவசத்தில்
இயல்பாய் பிறந்த சொற்கள்
என்னிடமிருந்து.

அவனே திகைத்த பொழுது
நமக்குள்
நன்றியும் மன்னிப்பும்
கிடையாது
போய் வா

ஒரு துளி திகைப்பு
புன்னகையாக
மலர்ந்திறங்கும் வேளையில்
மறைந்து போனான்

யாரிடத்திலும்
சொல்லப்போவதில்லை
அவன் வந்ததையும்
போனதையும்
புன்னகைத்ததையும்.

4 comments:

Unknown said...

அவன் சொன்ன மனிதனாய்
வாழ்ந்தால்
நமக்கும் அபாபீல்கள் வரும்
கடல் பிளந்து வழி தரும்

விரும்பியபடி வாழ்ந்து
ஏதிலிக்கு
சிலுவையும்
ஆசாமியான சாமியும்
குளிக்க மறந்த தேசிகளும்

எவனுக்கும் வராது
நமக்கும்தான்
அவன் சொன்ன மனிதனாய்
மண்ணில் விளையும் வரை...

அவன் நீ பார்க்க
இறங்குவதில்லை
அவனைப்பார்க்க
நீயேறு
சுலபம்தான்
முயற்சிக்க!

வருகிறதே!
தருகிறதே!
வருவதும்
தருவதும்
உறைக்கிறதே!

நண்பன் said...

Dear Sultan,

Lovely.

Continue to write....

Thanks

Nanban

தருமி said...

தருமியும் படித்தான்......
படித்ததில் இது பிடித்தது:

ஏதுமில்லை.
நமக்குள் கேட்பதும்
கொடுப்பதுவுமெதற்கு
ஏதோ ஒரு பரவசத்தில்
இயல்பாய் பிறந்த சொற்கள்
என்னிடமிருந்து.

அவனே திகைத்த பொழுது
நமக்குள்
நன்றியும் மன்னிப்பும்
கிடையாது
போய் வா

நண்பன் said...

Dharumi

Thank you very much. I will write in detail once I reinstall eKalappai.

This acknowledgement is for the time being.!!!

Thanks

Nanban

நண்பர்கள் சொல்கிறார்கள்

CSM - உலகச் செய்திகள்

GF - உலகச் செய்திகள்