"எழுத்துகளையும் தாண்டி எனக்கென்று ஒரு உலகம் உண்டு; நான் எழுதுபவற்றை மட்டுமே வைத்துக் கொண்டு, என்னை எடை போடுபவர்களை எப்பொழுதும் என் எண்ணங்கள் வியப்பில் ஆழ்த்திக் கொண்டே இருக்கும்....."
- நண்பன்

Friday, November 14, 2008

நன்றி : காவிக்குழுவினருக்கு.....

நவம்பர் 11.

தேச கல்வி தினம்.

அபூல் கலாம் ஆசாத் அவர்களின் பிறந்த நாள்.

இப்படியெல்லாம் சொன்னால் எல்லோருக்கும் தெரியுமா என்று தெரியவில்லை. ஆனால், இந்தியாவின் – premiere institute என்று சொல்லப்படும், IITக்களைத் தோற்றுவித்த மூல கர்த்தா என்று சொன்னால் தெரியுமில்லையா?






ஐ.ஐ.டி என்ற கல்வி நிலையங்களால் பெரும் பயனுற்ற எவராலும் இந்த கல்வி நிலையங்களைத் தோற்றுவித்தவர் எவர் என்ற தகவல் வெளியில் சொல்லப்படுகிறதா என்றால், நிச்சயமாக இல்லையென்றே சொல்லப்பட வேண்டும். இன்றைய நடைமுறையில், எந்த ஒரு விஷயத்திற்கும் ஆதரவு தேவைப்படுகிறதென்றால், அதை இரண்டு வழிகளில் பெற முடியும்.

#1. தங்கள் கருத்துகளை நேராகக் கூறி, கிடைக்கக் கூடிய நன்மைகளை நேரிடையாகச் சொல்லி, அதனால் ஆதரவு கோருவது. An optimistic outlook.

#2. நிகழ சாத்தியமற்ற ஆபத்து கூறுகளைப் பட்டியலிட்டு, அச்சமூட்டி, அதனால், எங்களை
ஆதரித்து விடு என வற்புறுத்துவது. The pessimistic and negative view.

இதில் இன்று உலகம் முழுக்க இந்த எதிர்மறை பிரச்சாரங்களைப் பரப்பித் தான் அரசு எந்திரங்கள் தங்களுக்கு ஆதரவைக் கோருகின்றன. அமெரிக்க அரசியல் தலைமை தான் முதன்முதலாக இந்த எதிர்மறை பிரச்சார உத்திகளை மேற்கொண்டு, அதன் மூலம் மனித உரிமைகள் என்ற தத்துவத்திற்கு ஆதரவு கோரியது. கம்யூனிஸத்தை ஒரு பயங்கரவாத பிசாசாக தொடர்ந்து கட்டமைத்தது. அதைத் தடுக்க வேண்டுமென்றால்,முதலாளித்துவத்தைத்
தொடர்ந்து தூக்கிப் பிடிக்க வேண்டும் என்ற மற்றொரு பயங்கரத்தை முன்நிறுத்தி ஆதரவு வேண்டியது. இந்த வகையான பிரச்சாரம் நல்ல பலனைக் கொடுக்கிறது என்ற தவறான புரிதலின் பயங்கரம் இன்று வெளிப்பட்டுக் கொண்டிருக்கிறது - முதலாளிகள் வாழ, தொழிலாளிகள் ஒழியட்டும் என்ற பூனை இன்று பையிலிருந்து குதித்து ஓடிக்கொண்டிருக்கிறது அங்குமிங்கும்.

அமெரிக்காவின் இந்த உத்தியை, இன்று மிக லாகவமாக தன் வசப்படுத்திக் கொண்டிருக்கின்றனர், பரிவார்கள். இந்துக்களை - மதத்தின் உள் பலவீனங்களையும் மீறி, ஒன்று படுத்தி ஓட்டு வங்கியாக மாற்ற முனைவதற்காக, அவர்கள் முன் வைக்கும் எதிர்மறை பிரச்சாரம் தான் - முஸ்லிம், கிறித்துவ மதங்கள் இந்து மதத்தை விழுங்கி விடும் என்ற பூதத்தைக் காட்டி பயமுறுத்தி, மற்றவர்களைத் தங்கள் அணிக்கு வரவழைப்பதற்கான
முயற்சி.

இந்துக்கள் அனைவரும் ஒன்றுபட வேண்டும் என்ற முயற்சி - அனைவரையும் சமமான
தளத்திற்குள் கொண்டு வருவோம் என்ற முயற்சியாக நேரிடையாக பிரச்சாரம் செய்யப்படும் கருப்பொருளாக அமைந்திருந்தால், அதை விட மிக்க மகிழ்ச்சியான செய்தி வேறெதுவும் இருக்க முடியாது. ஆனால், அதை செய்ய அவர்கள் விரும்பவில்லை. ஏனென்றால், பல சாதிக்கூறுகளாகப் பிரிந்து கிடக்கும் இனங்களையெல்லாம் ஒன்று கூட்டி, இடைப்பட்ட தடைக்கோடுகளை அழித்தெடுக்கும் எண்ணமெல்லாம் அவர்களிடத்தில் இல்லை. அதனால், இந்துக்களை ஓரணியில் ஒன்று திரட்ட வேண்டுமென்ற முனைப்பு, அதன் உட்பிரிவின் கணங்களிலே அமிழ்ந்து முழுகிப் போய்விடும். இந்துக்களை ஒன்று திரட்ட, அதன் உட்பிரிவுகளின் அகோர முகத்தை ஒழிப்பதைக் காட்டிலும், இந்து மதத்திற்கு அழிவு என்ற
பூச்சாண்டியை வெளியில் இருப்பவர்களைக் காட்டிச் செய்வதன் மூலம் எளிதாக முடித்து விடலாம் என்ற திடமான நம்பிக்கைக்கு வந்து விட்டனர். அதற்கான எளிய வழி -
அமெரிக்காவின் பிரச்சார மாடல்கள். Rather than being an optimist and
wait for the day to arrive, go the pessimist way and rummage through
by the negative propaganda.

இதற்குண்டான எளிய வழி, இஸ்லாம், முஸ்லீம் மற்றும் பிற சிறுபான்மை மத, இன, மக்களின் பங்களிப்பைக் கொஞ்சம் கொஞ்சமாக மக்களின் நினைவாற்றல்களிலிருந்து அழித்தொழிப்பது, அவர்களை எதிரிகளாகச் சித்தரித்துக் காட்டுவது, அவர்கள் மீது தேச துரோக குற்றங்களைச் சாற்றுவது, பிற சமூகங்களிலிருந்து தனிமைப்படுத்துவது, கல்வி வேலை வாய்ப்பு உரிமைகளைப் பறிப்பது என்ற தொடர் தாக்குதல்கள்.

பட்டியலிட்டால் கணக்கிலடங்காமல் போகும் அளவிற்கு உண்டு.

குறிப்பிட்டுச் சொல்ல ஒன்றிரண்டு.

ஆங்கிலேயர்களை எதிர்த்துப் போராடிய திப்பு சுல்தானை அவர்கள் religious bigot என்ற பட்டம் சூட்டி வரலாற்றைத் திரிக்க முனைந்தது, உலக வரலாற்றிலேயே முதன்முதலாக ராக்கெட் தொழில்நுட்பம் கொண்டு ஏவுகணை ஆயுதத்தைப் பயன்படுத்தியதன் மூலம், ஒரு விஞ்ஞான அறிவுப் பாதையைத் தொடங்கி வைத்தது - இவற்றையெல்லாம் சுத்தமாக மறைத்ததைக் குறிப்பிடலாம்.

இன்று திப்பு சுல்தானுக்கு அங்கீகாரம் கொடுத்தது அமெரிக்காவின் நாசா நிறுவனம் தான். அவர்கள் அலுவலக வரவேற்பறையில் திப்பு சுல்தானின் மிகப்பெரிய ஓவியப்படம் இருக்கிறது - ராக்கெட் தொழில்நுட்பத்தைத் தொடங்கி வைத்தவர் என்பதற்கான மரியாதையின் நிமித்தம்.

ஆனால், இந்தியாவில் எங்காவது ஓரிடத்தில், எவராவது ஒருவர் திப்பு சுல்தானுக்கான அங்கீகாரத்தை வழங்கியதுண்டா? ஏன் இந்தியாவின் முதல் குடிமகனாக இருந்த கலாம் அவர்கள் கூட இதை எங்கும் குறிப்பிட்டதாக எனக்குத் தெரியவில்லை.

இது போலவே இந்தியாவின் வலுவான விஞ்ஞான தொழில் நுட்ப அறிவிற்கு அடிகோலிய
ஐ.ஐ.டி கல்வி நிலையங்களை நிறுவியவரே ஆசாத் அவர்கள் தான் என்பதே இப்பொழுது
தான் பொதுவிற்கு வருகிறது. இதைப் பற்றியெல்லாம் பேச விரும்பாத, தேசபக்தர்கள், இத்தனை நாளும் ஜல்லியடித்துக் கொண்டிருந்தார்கள் - இஸ்லாமியத் தீவிரவாதம் என்று. ஆனால், இன்று அந்தப் பிரச்சாரமே கேள்விக்குறியாகி நிற்கின்றது. நாட்டில் வெடித்த அனைத்து வெடிகுண்டுகளும் இஸ்லாமிய குண்டுகள் மட்டும் தானா? ஆர்.எஸ்.எஸ் குண்டுகள் அவற்றில் எத்தனையோ? தாங்களே குண்டுகளை வைத்து விட்டு, அவற்றை இஸ்லாமியர்கள் மீது வெறுப்பை அள்ளி வீசும் வகையில் பிரச்சாரம் செய்யும் உத்தியா இது?

எந்த ஒரு தத்துவமும் எப்படி தன் தவறுகளின் கணத்தினாலே வீழ்ந்து விடுகிறதோ - அது போலவே, இன்று இந்துத்வா தத்துவமும் தன் தவறுகளின் கணத்திலே வீழ்ச்சியடையத் தொடங்கி விட்டது. பூச்சாண்டிகளைக் காட்டுவதன் மூலம் 'நிச்சயிக்கப்பட்ட நிலங்களை' எவராலும் அடைய முடியாது என்பதே இன்றைய நிதர்சனம்.

இன்று தீவிரவாதிகளை எந்த ஒரு மதத்திடனும் அடையாளப்படுத்தக் கூடாது என்று
குரல்கள் எழுகின்றன.

நன்றி.

இத்தனை நாளும் நாங்கள் மட்டுமே அதற்கான போராட்டத்தை நடத்தி வந்தோம். இன்று பெரும்பான்மையானவர்களும் அதையே பேச ஆரம்பித்திருக்கின்றனர். தவறான அச்சுறுத்தல்களை விலக்கி விட்டு, உண்மையைப் பேசினால் மட்டுமே தீவிரவாத
எதிர்ப்பு வலுவுள்ளதாக இருக்கும் என்ற புரிதல் வருவதற்கு இந்துத்வவாதிகளே காரணம் என்ற வகையில், மீண்டும் ஒரு நன்றி.

இனியாவது, இஸ்லாமியர்கள் இந்தியாவிற்கு ஆற்றிய நற்பணிகளைப் பற்றி, நன்றியுடன் நம் சமூகம் பேச முன் வருமா?

இந்தக் கேள்விக்கான பதிலின் மூலம் மட்டுமே, இந்து முஸ்லீம் நல்லிணக்கமும், பொதுவான நல்லிணக்கமும் சாத்தியப்படும், இந்தியாவில்.

( அபுல் கலாம் ஆசாத் அவர்களின் பிறந்த நாளைக் குறிப்பிட்டு, கட்டுரை எழுதிய நீடுர் ஆன்லைன்.காம், மற்றும் அதை பண்புடன் குழுமத்தில் மேலும் விரிவாகப் பேசிய ஆசாத், ஆசாத் அவர்களுக்கும் நன்றி. )

10 comments:

Unknown said...

//இந்தியாவின் முதல் குடிமகனாக இருந்த கலாம் அவர்கள் கூட இதை எங்கும் குறிப்பிட்டதாக எனக்குத் தெரியவில்லை.//
எனக்குத் தெரிந்து அப்துல் கலாம் இதை ஒரு தொலைக்காட்சி பேட்டியில் சொன்னார்.

Anonymous said...

ஆசாத் அவர்களின் பங்களிப்பு உங்களுக்கு இன்றுதான் தெரியும்
என்று அதற்கு யார் என்ன செய்ய
முடியும்.

Anonymous said...

'இனியாவது, இஸ்லாமியர்கள் இந்தியாவிற்கு ஆற்றிய நற்பணிகளைப் பற்றி, நன்றியுடன் நம் சமூகம் பேச முன் வருமா? '

ஆசாத் அவர்களை இஸ்லாமியர்
என்று பிரித்துப் பார்க்கும் நோக்கம்
நேருவிற்கும் இல்லை.அவர் பணியை
அங்கீகரிக்கும் பலருக்கும் இல்லை.
ஜாகிர் உசேன்,அப்துல் கலாம் ஆசாத்
போன்றவர்களை அனைவரும் மரியாதையுடன் நினைவு கூறுகிறார்கள்.அவர்கள் இந்தியர்கள்
என்ற உணர்வில்.

யூதர்கள் உலகிற்கு
ஆற்றியுள்ள பங்களிப்பை அங்கீகரிக்கும் மனப்பான்மை
முஸ்லீம்களிடம் இருக்கிறதா?
கேள்வியை உங்களுக்கு நீங்களே
கேட்டுக் கொள்ளுங்கள்.

நண்பன் said...

உமையணன்,

இந்தியாவில் நான் இல்லாததால், அதைப் பார்த்திருக்கக் கூடிய வாய்ப்பு அமையாமல் போயிருந்திருக்கலாம். அப்படி அவர் பேசியிருந்தால், அதற்காக அவருக்கு நன்றி கூற கடமைப்பட்டிருக்கிறேன்.

உங்கள் தகவல்களுக்கு மிக்க நன்றி...

நண்பன்

Anonymous said...

//ஐ.ஐ.டி கல்வி நிலையங்களை நிறுவியவரே ஆசாத் //

ஆஸாத் இந்திய கல்வியமைச்சராக இருந்த காலத்தில் தேசிய கல்விதிட்டத்தை கொண்டு வந்தார் என்று தெரியும். அவருடைய முக்கிய பங்களிப்பு UGC என்று சொல்லப்படும் பல்கலைகழக மான்ய குழுவிற்கு அடிகோலியது.

பின்னாட்களில் இந்திய அரசாங்கம் நிறுவிய தன்னாட்சி தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்கள் கொண்டு வர இவை முன்னோடியாக இருந்தன.

மற்றபடி ஒரே வரியில் அவரை 'நிறுவனர்' நிலைக்கு குறிப்பிடுவது சரியாக வருமா என்று தெரியவில்லை.

நண்பன் said...

அநாநி,

// ஆசாத் அவர்களின் பங்களிப்பு உங்களுக்கு இன்றுதான் தெரியும்
என்று அதற்கு யார் என்ன செய்ய
முடியும்.//


எனக்குத் தெரிந்ததினாலோ, அல்லது, உங்களுக்குத் தெரிந்ததினாலோ மட்டுமே, அனைவருக்கும் தெரிந்து விட்டதாக ஆகிவிடாது.

1958ல் இறந்து போனவருக்கு, நின்று நிதானமாக சமீபத்தில் தான் ஏதாவது செய்ய வேண்டும் என்று தோன்றி, அவரது பிறந்த நாளை தேசிய கல்வி தினமாக அறிவித்திருக்கிறார்கள்.

ஒரு அங்கீகாரம் என்பதற்கே - அதுவும் அவர்களை நாங்கள் இஸ்லாமியர்கள் என்று பார்க்கவில்லை - சிறந்த இந்தியர்களாகவே பார்க்கிறோம் என்று சொல்லிக் கொள்பவர்களால் தரப்படுவதற்கு இத்தனை நாட்கள் ஆகிவிட்டதே என்பதைத் தான் குறிப்பிட்டேன்.

எனக்கு என்ன தெரிகிறது என்பதைக் கொண்டு, இங்கு யாரும் ஒரு மனிதரைப் பற்றி தெரிந்து கொள்ளப் போவதில்லை.

எனக்குத் தெரிந்தால், அது அனைவருக்கும் தெரிந்த மாதிரி என்று சொல்லிக் கொள்வதற்கு நான் ஒன்றும் சூப்பர்ஸ்டார் இல்லையே?

நண்பன் said...

// பின்னாட்களில் இந்திய அரசாங்கம் நிறுவிய தன்னாட்சி தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்கள் கொண்டு வர இவை முன்னோடியாக இருந்தன //

பின்னாட்களில் அல்ல, நண்பரே, அவர் வாழ்ந்த நாட்களிலே அவரால் உருவாக்கப்பட்டவை தாம் அவை.

அவரைப் பற்றிய தகவலைக் கீழே கொடுத்துள்ளேன். முற்றிலுமாக ஆங்கிலத்திலிருக்கிறது. மொழி பெயர்த்துக் கொண்டிருக்க எனக்கு நேரமில்லை. நீங்களே வாசித்து தெரிந்து கொள்ளுங்கள்.

On the technical education side, he strengthened the All Indian Council for Technical Education (AICTE). The Indian Institute of Technology, Kharagpur (IIT-K) was established in 1951 followed by a chain of IIT's at Bombay, Madras and Kanpur and Delhi. The School of Planning and Architecture (SPA) came into existence at Delhi in 1955.

தொழில்நுட்ப கல்விசாலைகள் மட்டுமே அவர் செய்த பணி அல்ல. இந்தியாவின் சிறப்பு மிக்க கலை, இலக்கிய துறைகளுக்கான அவரது பணியும் சொல்லி முடியாதது தான் -

Among the new institutions he established were the three National Academies viz the Sangeet Natak Academy (1953), Sahitya Academy (1954) and Lalit Kala Academy (1954), the Indian Council for Cultural Relations having been established by him earlier in 1950.
மொத்த கட்டுரையும், சுட்டியும் கீழே...


A normal human tendency is to forget the past and march ahead. If one looks down upon those who had helped them when they confronted challenges, an educational reformer proved to be different.

He had to face challenges in advocating a National System of Education. Infact, a recent circular of the Government of India to commemorate the birthday of Maulana Abul Kalam Azad on November 11, as National Education Day has raised many eyebrows in the country to re-organize the grim educational situation.

But if we look back to the historical developments of education in India, a man of enormous tastes, rated high in the realm of education, Maulana Abul Kalam Azad has all along played a prominent role in keeping the movement of education alive in this country.

Packed with several achievements, Maulana Azad oversaw the establishment of a national education system with free primary education and modern institutions of higher learning.

The very recent decision of the Union Ministry of HRD, Government of India to declare his birthday as National Education Day is a treatise on the live, struggle, and contribution of the great educationist of the country. It would, hopefully, be of immense interest and inspiration for all the citizens, scholars, students, teachers, and academicians, to imbibe his sprit of educational ideas among the current posterity of the nation.

The country's educationist has to learn from his outstanding contributions and policies. Maulana Abul Kalam Azad was the first to raise the issue of the National System of Education which is today the bed-rock of the National Policy on Education (1986) updated in 1992. The concept implies that, up to a given level, all students, irrespective of caste, creed, location or sex have access to education of a comparable quality.

All educational programmes, he stressed, must be carried out in strict conformity with secular values and constitutional framework. He stood for a common educational structure of 10+2+3 throughout India.

If Maulana Azad were alive today he would have been the happiest to see the Right to Free Education Bill and national flagship mission mode projects getting a Cabinet approval for the approval of Parliament. The Right to Education Bill seeks to make free and compulsory education a fundamental right.

The wealth of the nation, according to Maulana Azad, was not in the country's banks but in primary schools. Maulana was also a great votary of the concept of Neighborhood schools and the Common School System. Maulana Abul Kalam Azad is one of those rare personalities through whom the distinctions of the 20th century can be recognized and possibilities of the 21st century determined.

He stood for a learning society through liberal, modern and universal education combining the humanism of Indian arts, a society where the strong are just and the weak secure, where the youth is disciplined and the women lead a life of dignity - a non-violent, non-exploiting social and economic order.

He was free India's first Education Minister and guided the destinies of the Nation for eleven years.

At the age of 20 he went on a tour of Iraq, Syria and Egypt and met the young Turks and Arab nationalists including Christians. The tour proved very useful to Azad to crystallize his thoughts on the neo-colonialists who were exploiting those countries and how India could help them.

On return he started a journal in Urdu named 'Al Hilal' in 1912. It was this journal where he aired his liberal views, 'Rationalist in outlook and profoundly versed in Islamic lore and history'.

Writes Nehru in his 'Discovery of India'. The Maulana interpreted scriptures from the rationalist point of view. Soaked in Islamic tradition and with many personal contacts with prominent Muslim leaders of Egypt, Turkey, Syria, Palestine, Iraq and Iran, he was profoundly affected by political and cultural developments in these countries.

He was known in Islamic countries probably more than any other Indian Muslim.

The journal 'Al-Hilal' became extremely popular and in two years its circulation rose to 30,000. The inevitable happened when in 1914 the British Government confiscated the press and banned the journal under the Defence of India Act. Azad was arrested and sent to Ranchi jail where he suffered untold hardships. Released from jail he resumed his educational writings. He spoke in a new language, writes Nehru.

It was not only a new language in thought and approach, even its texture was different, for Azad's style was tense and virile though sometimes a little difficult because of its Persian background. He used new phrases for new ideas and was a definite influence in giving shape to Urdu language as it is today. The older conservative Muslims did not react favorably to all this and criticized Azad's opinion and approach.

Yet not even the most learned of them could meet Azad in debate and argument, even on the basis of scriptures and tradition, for Azad's knowledge of these happened to be greater than theirs. He was a strange mixture of medieval scholasticism, eighteenth century rationalism and modern outlook. There were a few among the older generation who approved of Azad's writings, among them being Shibli and Sir Sayyaid of Aligarh University.

Among the new institutions he established were the three National Academies viz the Sangeet Natak Academy (1953), Sahitya Academy (1954) and Lalit Kala Academy (1954), the Indian Council for Cultural Relations having been established by him earlier in 1950.

The Maulana felt that the cultural content in Indian Education was very low during the British rule and needs to be strengthened through curriculum. As Chairman of the Central Advisory Board of Education, an apex body to recommend to the Government educational reform both at the center and the states including universities, he advocated, in particular, universal primary education, free and compulsory for all children upto the age of 14, girls education, vocational training, agricultural education and technical education.

He established the University Grants Commission (UGC) in 1956 by an Act of Parliament for disbursement of grants and maintenance of standards in Indian universities.

His greatest contribution, however, is that in spite of being an eminent scholar of Urdu, Persian and Arabic he stood for the retention of English language for educational advantages and national and international needs. However, primary education should be imparted in the mother-tongue.

On the technical education side, he strengthened the All Indian Council for Technical Education (AICTE). The Indian Institute of Technology, Kharagpur (IIT-K) was established in 1951 followed by a chain of IIT's at Bombay, Madras and Kanpur and Delhi. The School of Planning and Architecture (SPA) came into existence at Delhi in 1955.

Maulana Abdul Kalam Azad, a Muslim theologian of international repute, was one of the earliest to join the nationalist movement and to lead it steadfastly, arousing the ire of his communal-minded co-religionists. He was perhaps the only one among our leaders who was jailed during both World Wars I (1914-1918) and II (1939-45) for campaigning for Swaraj.

During the most fateful days of the national struggle, he was the President of the Indian National Congress. Personally unwilling to accept the principle of the two-nation theory, he too, like Gandhiji, reluctantly reconciled himself to India's partition in 1947. He took active part in the agitation, joined the secret societies and revolutionary organization, and came in contact with Sri Aurobindo Ghosh and Shyam Sundar Chakravarty.

Maulana Azad was a prolific writer with books in Urdu, Persian and Arabic notably amongst which is 'India Wins Freedom', his political biography, translated from Urdu to English. Maulana's translation of Quran from Arabic into Urdu in six volumes published by Sahitya Akademy in 1977 is indeed his 'Magnum Opus".

Since then several editions of 'Tarjaman-e-Quran' have come out. His other books include 'Gubar-e-Khatir', 'Hijr-o-Vasal', 'Khatbat-I-Azad', 'Hamari Azadi', 'Tazkara'. He gave a new life to Anjamane-Tarrqui-e-Urdu-e-Hind'. During the partition riots when the 'Anjamane-Tarrqui-Urdu suffered, its Secretary Maulvi Abdul Haqq decided to leave for Pakistan alongwith the books of the Anjaman. Abdul Haqq had packed the books but Maulana Azad got them retrieved and thus saved a national treasure being lost to Pakistan. He also helped the Anjaman to revive by sanctioning a grant of Rs.48,000 per month from the Ministry of Education.

Likewise he increased the grants of Jamia Millia Islamia (JMI), Aligarh Muslim University (AMU) in their days of financial crisis and formulated several central legislations in education.

I do not mean to say that everybody has to be like Maulana Azad to represent that composite culture. There are many representatives of it in various parts of India; but he, in his own venue, in Delhi or in Bengal or Calcutta, where he spent the greater part of his life, represented this synthesis of various cultures which have come one after another to India, rivers that had flowed in and lost themselves in the ocean of Indian life, India's humanity, affecting them, changing them, and being changed themselves by them.

So spoke Prime Minister Jawaharlal Nehru at the 1st Maulana Azad memorial lecture on 11th November, 1959. "The Maulana was a great religious scholar, journalist, writer, poet, philosopher and above all, a great political leader whose services and sacrifices in the freedom struggle will be long remembered along with his matchless contribution as free India's first Education Minister."

He used to read late into the night in dim candle-light, early in the morning, and sometimes even missed his meals. He often spent his money on books. He mentioned: "People pass their childhood in playing but I, at the age of twelve or thirteen, used to pick up a book and slip into a remote corner trying to hide myself from people's looks."

As for his writing, a great scholar wrote: "Like Somerset Maugham (an eminent English writer) Maulana Azad learnt writing as a fish learns swimming or a child learns breathing."

A unique quality about him was that he always remained much ahead of his age, in years, in many fields. He was running a library, a reading room, a debating society before he was twelve! He was teaching a class of students, most of whom were twice his age, when he was merely fifteen.

He edited a number of magazines between thirteen and eighteen years of age and himself brought out a magazine of high standard at the age of sixteen. The power of his writings shaped in no small measure, the pattern of thought and political values of the Indian youth of his day.

Maulana's Tarjuman-al-Quran is a classic in Muslim religious literature. According to one of his biographers, S.G. Haider, Urdu-speaking people once invited a 'learned scholar', whose writings they had read with admiration, to address a national-level conference in 1904.

Throughout his life he stood for the chords of cordiality between Hindus and Muslims and the composite culture of India. He stood for modern India with secular credentials, a cosmopolitan character and international outlook. A man like Maulana Azad is born rarely. Throughout his life he stood for the unity of India and its composite culture. His opposition to partition of India has created a niche in the hearts of all patriotic Indians.

There he stands with Khan Abdul Ghaffar Khan, his senior an Ashfaqullah his junior. In the words of Iqbal:

"Hazaron sall Nargis apni benoori par roti hai,
Bari Mushkil sey hota hai chaman mein deeda var paida".

(For a thousand years the Narcissus weeps for her blindness, With great difficulty is born in the garden a man with vision).

Apart from his countless contributions in the field of education, Azad rose to prominence through his work as a journalist, publishing works critical of the British Raj and espousing the causes of Indian Nationalism Azad became a leader of the Khilafat Movement during which he came into close contact with Indian leader Mahatma Gandhi. Azad became an enthusiastic supporter of Gandhi's ideas of non-violent civil disobedience, and worked actively to organise the Non cooperation Movement in protest of the 1919 Rowalts Acts.

Azad committed himself to Gandhi's ideals, including promoting Swadeshi (Indigenous) products and the cause of Swaraj (Self-rule) for India. He would become the youngest person to serve as the President of the Indian National Congress in 1923.

Abul Kalam Azad was one of those geniuses whose names are written with golden letters in the pages of history. All of them contributed their energies in various ways. They not only structured the syllabi but also formulated the policies in order to carry the light of education in the remotest rural areas. They also chalked out programmes for the training of teachers to make them abreast of the developments taking place in the world of education.

The 'National Education Day' is of course a day to pledge to work on various initiatives taken under the Sarva Shiksha Abhiyan (SSA) in setting up model schools in secondary education; on the various initiatives taken in higher secondary education; and in vocational and higher education sectors by the Central Government on its own; and in partnership with state governments, as well as through private public partnership for the re-organization of present system of education in the country.

The questions remains which, the educational strata has to answer. Have we as a Nation achieved our Universal enrolment as the half of the century has cross over? Have we as a nation achieved the Universal education besides advocating policies and central legislation at the centre?

The National Education day is a goodwill gesture for our policy makers to re-thing of change in India's present system of education which is not at par with the desires of its children.

At this moment, the nation is in need of a vital agenda to reach the hitherto uncovered populace with a new education policy with thrust on values and skills.

The country's policy makers need to wake up and pledge on this day for revolutionary changes in the system.

By - Sadaket Malik


( http://indiaedunews.net/In-Focus/November_2008/Maulana_Abul_Kalam_Azad_-_The_Builder_of_Modern_India_6559/)

நண்பன் said...

// யூதர்கள் உலகிற்கு
ஆற்றியுள்ள பங்களிப்பை அங்கீகரிக்கும் மனப்பான்மை
முஸ்லீம்களிடம் இருக்கிறதா?
கேள்வியை உங்களுக்கு நீங்களே
கேட்டுக் கொள்ளுங்கள்.//

உங்களுடைய கேள்வியும், சிந்தனையும் மொத்தமாகவே தவறு.

யூதர்களுக்கும், இஸ்லாமியர்களுக்கும் எந்தத் தகராறும் இல்லை. தகராறு - யூதர்களுக்கும், அரபிகளுக்குமிடையிலே தான். அதுவும் - நிலத் தகராறு மட்டுமே. வேறு எந்த சிந்தாத்த தகராறும் கிடையாது. ஆபிரஹாமிய மதங்கள் என்று சொல்லப்படும் - யூத, கிறித்துவ, இஸ்லாமிய மதங்களை எடுத்துக் கொண்டால், தாங்கள் தோன்றீய தருணத்திலிருந்த சூழலை தக்க வைத்துக் கொண்டவை யூதமும், இஸ்லாமும் மட்டுமே. அவை மட்டுமே ஏக இறைவணக்கத்தை ஏற்று, சிலை வைப்பை இன்று வரையிலும் மறுத்து வந்திருக்கின்றன.

மத சித்தாந்த வடிவில் யூதம் கிறித்துவத்துடன் மோதுவது போல் இஸ்லாத்துடன் மோதுவது இல்லை. தேவகுமாரனாக அறிவிக்கப்பட்டு, பின்னர் இறைவனாக உயர்த்தப்பட்டதை இந்த இரு மதங்களும் ஏற்றுக்கொள்ளவில்லை. அதுபோல, யூதர்களைக் காட்டிக் கொடுத்த வம்சமாகக் கருதி, அவர்கள் மீது - இன்றளவும் தீராத வன்மம் கொண்டிருப்பவர்கள் கிறித்துவர்கள் மட்டுமே. அதுவே அவர்களது படுகொலைகளுக்கும் ஆதாரமானது.

யூதர்கள் எங்கெங்கும், கிறித்துவ ஆட்சியாளர்கள் துன்புறுத்தப்பட்ட வரலாறுகளின் போது, அவர்களை அரவணைத்து ஆதரவளித்தது இஸ்லாமிய ஆட்சியாளர்களே என்பது வரலாறு.

இரண்டாம் உலகப்போருக்குப் பின்பு, அவர்களை மொத்தமாக பாலஸ்தீனத்தில் இறக்கிவிட்டு, அரபிகளின் நிலத்தை ஆக்கிரமிக்க துணை இருப்பவர்களால் உருவாக்கப்பட்ட பிரச்சினை ஒன்று தான் இன்னமும் நீண்டு கொண்டே இருக்கிறது.

அது தவிர, அவர்களுக்கிடையில் எந்தவிதமான பிரச்சினையுமில்லை. 'The book of the people' என்று அழைக்கப்படும் அவர்களுடன் திருமண உறவிற்குக் கூட அனுமதியுண்டு.

சரி, யூதர்களின் பங்களிப்பு எதையும் இஸ்லாமியர்கள் மறுத்திருக்கிறார்கள் என்று எதை வைத்து சொல்கிறீர்கள். அப்படி எதுவும் இல்லை.

சொட்டு நீர் பாசனத்தின் மூலம், பாலைவனத்தைக் கூட சோலை வனம் ஆக்க முடியும் என்று யூதர்கள் செய்து காட்டிய விவசாய முறைகளை அரபிகள் ஏற்றுக் கொண்டு செயல்படுத்தியும் வருகின்றனர்.

இஸ்ரேலில் தயாரிக்கப்படும் பல பொருட்களை அரபிகள் பயன்படுத்துகிறார்கள். சவுதி மருத்துவ மனைகளில், பயன்படுத்தப்படும் பல உபகரணங்கள் இஸ்ரேலில் தயாரிக்கப்பட்டவை தான். அரசியல் காரணங்களுக்காக, அவை நேரிடையாக இறக்குமதி செய்யப்படுவதில்லை. மாறாக, கிரேக்கத் தீவுகள் சிலவற்றிற்கு எடுத்துச் செல்லப்பட்டு, ரீ-பேக்கிங் செய்யப்பட்டு, உள்ளே வருகிறது.

இந்த வியாபாரத்தின் மதிப்பு 400 கோடி ரியால்களுக்கும் மேல். இஸ்ரேல், அது உருவாக்கப்பட்ட எல்லைகளுக்குத் திரும்பிவிட்டாலே, மத்தியக் கிழக்குப் பிரச்சினை தீர்ந்து விடும்.

ஆனால் அதை தீர்ப்பதற்கு சுயநலமிக்கவர்களால் தடை இருந்து கொண்டேயிருக்கும்.

Muslims and Jews: a historical perspective that reveals surprises

Once upon a time, a widely circulated Jewish document described Islam as "an act of God's Mercy".

Also, Jews in the near East, north Africa and Spain threw their support behind advancing Muslim Arab armies.

No, these aren't fairy tales or propaganda. The relationship between Muslims and Jews really was that cooperative and marked by peaceful coexistence.

Just ask Khalid Siddiqi of the Islamic Education and Information Center in San Jose, California where he also teaches Islamic Studies and Arabic at Chabot College and Ohlone College.

Siddiqi notes that the first quote above is from S. D. Goitein's book Jews and Arabs. The second is from Merlin Swartz's 'The Position of Jews in Arab lands following the rise of Islam' (reprinted from The Muslim World. Hartford Seminary Foundation LXI1970).

Swartz also says the Muslim Arab conquest marked the dawn of a new era. Those forces that had led to the progressive isolation and disruption of Jewish life were not only checked they were dramatically reversed.

In an interview with Sound Vision, Siddiqi gave numerous examples of Jews flourishing under Muslim rule in places like Spain, Morocco, North African in general and various parts of the Middle East.

Siddiqi points out that Islam as a religion has given specific guidelines for the followers of Islam to base their relationship with any non-Muslim. These include People of Scripture, like the Jews, people who belong to other religions, and even atheists. Non-Muslims must be treated on the basis of Birr (kindness) and Qist (justice), as referred to Surah 60 verse 8 of the Quran.

It started at the time of the Prophet Mohammad (peace and blessings be upon him)

The peaceful coexistence of Muslims and Jews began at the time of the Prophet.

Siddiqi notes that the Jews welcomed the Prophet when he arrived in Madinah at the time of Hijrah (migration), along with the rest of the city's inhabitants.

But the Prophet had begun the step towards good relations with Jewish and other communities in Madinah even before getting there.

After receiving an invitation to Madinah from one of the city's tribes that had accepted Islam, the Prophet signed treaties with the city's Jewish, Christian and polytheist tribes before he arrived there.

These treaties clearly laid out responsibilities of each of the parties. It was based on these that the Prophet established the Mithaq al Madinah, the constitution of Madinah.

Siddiqi says this was the first constitution of the world and one of the greatest political documents ever prepared by any human being. It is the oldest surviving constitution of any state.

Under this constitution, any Jew who followed the Muslims was entitled to their assistance and the same rights as anyone of them without any injustice or partisanship.

It said the Jews are an Ummah (community of believers) alongside the Muslims. The Jews have their religion and the Muslims theirs. As well, it noted that each will assist one another against any violation of this covenant.

Jews during the Muslim era

Despite this early breach of contract, there are still numerous examples from Muslim history of Muslim-Jewish cooperation and coexistence.

Siddiqi gave examples of how Muslim Spain, which was a "golden era" of creativity and advancement for Muslims was also one for Jews.

While Europe was in its Dark Ages and Jews were reviled there, Muslims in Spain during the same period worked side by side with Jews in developing literature, science and art.

Together, they translated classical Greek texts into Arabic. This task later helped Europe move out of the Dark Ages and into the Renaissance.

Jews flourished under Muslim rule in Egypt as well, where they achieved very high positions in government.

Siddiqi quotes some lines from an Arab poet of that time, to illustrate: 'Today the Jews have reached the summit of their hopes and have become aristocrats. Power and riches have they and from them councilors and princes are chosen'.

Today: the forced expulsion of Palestinians from their homeland has destroyed good Muslim-Jewish relations

So what happened?

Although not the only cause, a large part of the deterioration in Muslim-Jewish relations comes from the emergence of Zionism, the forced expulsion of Palestinians from their homeland by Zionist Jews and British colonizers, as well as their continuing oppression.

Siddiqi says, "while this reaction results in anti-Jewish feeling it must be seen in its proper historical context. It must be remembered that anti-Jewish sentiments in so far as it is to be found in the contemporary Arab world is strictly a modern phenomenon and one that runs counter to the time honored Islamic tradition of fraternity and tolerance.

"The very widespread popular notion that present day Arab-Jewish hostility is but another chapter in a long history of mutual animosity is totally false. If there is one thing the past makes clear it is precisely that Arabs and Jews can live together peacefully and in a mutually beneficial relationship. History also makes it very clear that they are the heirs to the Islamic tradition of openness and tolerance."

The key to reestablishing good relations between Muslims and Jews again is justice, notes Siddiqui. This principle is foreign to neither Islam nor Judaism.

In Islam, standing up for justice, he points out, must be done even if it is against ourselves, our parents, our kin, the rich or the poor. This is clearly mentioned in the Quran (4:135).

Siddiqi points out that the emphasis on justice is also mentioned in Jewish scripture in the prophecies of Michael in chapter three: "Zion shall be redeemed with justice and by those who will come to her with righteousness."

நண்பன் said...

மேலே குறிப்பிட்ட தகவலுக்கான சுட்டி:


http://www.soundvision.com/Info/politics/jewhistory.asp

மஸ்தூக்கா said...

போகிற போக்கில் புழுதி வாரித்தூற்றி விட்டுப் போக நினைத்த யாரோ ஒரு அநாமதேயத்துக்குக்கூட பொறுப்புடன் விரிவாக பதில் அளிததற்காக தங்களைப் பாராட்டுகிறேன்.

நண்பர்கள் சொல்கிறார்கள்

GF - உலகச் செய்திகள்

Error loading feed.