Trial By bloggers
Trial By Bloggers
நாற்பத்தெட்டு மணி நேரங்களைத் தொடப் போகும் இந்த யுத்தத்தில், இன்னமும் நிலைமை தெளிவடையவே இல்லை. ‘முடிந்து விட்டது’ என்று உற்சாகக் குரல் எழுப்பிய ஒரு நிமிட இடைவெளிக்குள், அதிகாரிகள், ‘என்கவுண்டர்’ இன்னமும் முடிவடைய இல்லை, விலகுங்கள்’ என்று அறிவிக்கத் தொடங்கிவிட்டனர். ஆனால், அதற்கு முன்னரே வெற்றி குரல்களும், பாராட்டு குரல்களும் ஒலிக்கத் தொடங்கி விட்டன.
It’s spontaneous.
தேவையான ஒன்றும் கூட.
தங்கள் பணியை எந்த சார்புமற்ற பொதுமக்கள் உற்சாகக் குரல் கொண்டு ஆதரிக்கிறார்கள் என்பது தங்கள் உயிரையும் பொருட்படுத்தாது பணிபுரிந்த வீரர்களுக்கு நிச்சயமாக உற்சாகத்தைக் கொடுக்கும். ஒவ்வொருவருமே தங்கள் பணிக்காக வெறும் சம்பளத்தை மட்டும் கொண்டே திருப்தியுறுவது கிடையாது.
Appreciation is an important motivation.
இந்தத் தாக்குதல் பற்றி, பலவகை எண்ணங்களும் கருத்துகளும் வலைத்தளத்தில் வந்து கொண்டு இருக்கிறது. ஒவ்வொருவரும் தத்தமது பார்வையில் கருத்துகளை வைத்திருக்கின்றனர். ஒவ்வொருவருக்கும் தனது கருத்துகளை சுதந்திரமாக வைக்க உரிமை இருக்கிறது. ஒவ்வொரு இடத்திலும் பின்னூட்டமிடவில்லையென்பதால், அவற்றைப் பற்றிய எனது எண்ணங்களை மொத்தமாக ஒரே பதிவாக எழுதி விடுகிறேன்.
‘இந்தத் தீவிரவாதம், கஜினி முகமது, கோரி முகமது வந்த பொழுதே வந்துவிட்டது’என்ற நகைச்சுவையுடன், ஒரு முழுநீள காமெடியுடன் இட்லிவடை தளம் ஆரம்பிக்கின்றது. புஷ்ஷின் உறுதியான தலைமையாலேயே மீண்டும் அங்கு ஒரு தீவிரவாத செயல் நிகழவில்லை என்றும் வாதிடுகிறார்..
‘அமெரிக்கர்களின் நலனை உலகம் முழுவதும் தாக்குவோம்’ என்ற அல்-கொய்தாவின் நிலைபாட்டையொட்டி, அமெரிக்கர்கள் இயங்கும் ஈராக், ஆஃப்கானிஸ்தான், பாக்கிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்களை நடத்தத் தான் செய்கின்றனர் - அதை எதிர்த்துத் தான் அவர்களும் யுத்தத்தை தொடர்ந்து நடத்துகின்றனர் நேர்மையற்ற வழிகளில் என்பதைப் புரிந்து கொள்ள இயலாதவர்களைப் பற்றி என்ன சொல்வது? புஷ்ஷின் இந்தத் தோல்வி தான்,சமீபத்தில் நடந்த தேர்தலில் அகோரமான தோல்வியை அவரது கட்சிக்கும், நண்பருக்கும் பெற்று கொடுத்ததும் என்பதுவும், 'மிக மோசமான அதிபர்' என்ற பெயருடனும், பெருத்த அவமானத்துடனும் தான் அவர் பதவி விலகுகிறார் என்பதும் தெரியாதவர்களாக இவர்கள். இல்லை, நாங்கள் கண்ணை மூடிக் கொண்டிருக்கிறோம் அதனால் உலகம் இருண்டுவிட்டது என்று நாங்கள் சொல்லும் உண்மையை ஏற்றுக் கொள்ளுங்கள் என்கின்றனர். அவர்களது வாதத்தின் 'அதிபுத்திசாலித்தனம்' குறித்து நகைக்க வேண்டியிருக்கிறது. இறுக்கமான சூழ்நிலையைக் குறைக்கத் தேவையான காமெடி நடிகர்களின் பணியைச் செய்திருக்கின்றனர்.
ஒரு காலத்தில் தங்களுக்கு அடைக்கலம் கொடுத்த பாக். அரசைக் குறி வைத்துக் கூட தீவிரவாதத்தைத் தொடர்கின்றனர் என்ற பொழுது, அல்-கொய்தாவிற்கு யாரும் பொருட்டில்லை. இவர்களை ‘நல்லது / கெட்டது’ என்ற எல்லைக்குள் வைத்து மட்டும் தான் பார்க்க வேண்டுமே தவிர, வேறு எந்த சித்தாந்தாங்களுடன் இணைக்க முடியாது. தன்னிச்சையாக இயங்கும் ஒரு Evil force மட்டுமே இவர்கள். அதை நியாயப்படுத்த அவர்கள் எந்த ஒரு தத்துவத்தையும் இழுத்து வந்து தங்களுக்கு அரணாக நிறுத்தி வைக்க முடியும். Counter terrorism என்ற வகையில், தாங்கள் நீதி வழங்கப் போவதாக எண்ணிக்கொண்டு, தீவிரவாதத்தை கையிலெடுத்த சில அமைப்புகளைப் போன்றதே இந்த அமைப்பும். counter terrorism என்பது ‘ரா’வின் வேலை என்று சொல்லி மற்றொரு நகைச்சுவையாளர் ஒருவர் தனது தேசபக்தியையும் வெளியிட்டிருந்தார்.
அத்துடன், இவர்களையெல்லாம் ஒடுக்குவதற்கு நரேந்திர மோடி தான் சரி என்ற தீர்வையும் முன்வைக்கிறார். டோண்டுவும் கூட அந்த கருத்தைத் தான் வைக்கிறார். இந்தத் தீவிரவாதத்தை ஒழித்துக் கட்ட இஸ்லாமியர்கள் அனைவரையும் படுகொலை செய்து விடுவது ஒன்று தான் வழி என்ற இனஒழிப்பை ஆதரிக்கும் இவர்களால் வேறு நற்சிந்தனைகளை முன் வைக்க முடியாது. இஸ்லாமியர்களை அழித்து ஒழித்த பின்பு, வேறு எவரைக் குறித்த counter terrorism குண்டுகளை சங் பரிவார்கள் தங்கள் தொழிற்சாலைகளில் தயாரிக்கப் போகிறார்கள் என்பது ஒரு interesting question! அல்லது தங்கள் தொழிற்சாலைகளை மூடிவிடப் போகிறார்களா என்பதுவும் தெரியவில்லை. மூடிவிட மாட்டார்கள். அழித்தொழிப்பிற்கு, அவர்களது மேலாண்மையை எதிர்க்க பலர் இருக்கின்றனர்.
மறுபுறம் பல கேள்விகளை எழுப்பி, இந்தத் தீவிரவாதிகளை இந்துத்வத்தின் முகமாகப் பார்க்க முனைகிறது – சத்தியமார்க்கம். அந்தத் தீவிரவாதிகள், தங்கள் கைகளில் சிவப்புக் கயிற்றை அணிந்திருந்தார்கள் என்ற சாதாரண விஷயத்தை வைத்துக் கொண்டு, ஒரு முடிவுக்கு வருவது எத்தனை சரியாகும்?
என்றாலும், சத்தியமார்க்கம் எழுப்பிய முக்கியமான கேள்விகளில் ஒன்று – ஏன் ஹேமந்த் கர்கரே கொலை செய்யப்பட்டார்? Counter terrorism என்ற பெயரில் சட்டத்தைத் தங்கள் கையில் எடுத்த சில அமைப்புகளைக் குறித்த தகவலை வெளிக்கொணர்ந்தார் – அவர்கள் சங் பரிவார் சித்தாந்தத்தில் வந்தவர்கள் தான் என்ற தகவலை வெளிக்கொண்டு வந்ததன் மூலம், சங் பரிவார்களும், அதன் அரசியல் முகமான பிஜேபி-யும் இனியும் தீவிரவாத துருப்புச் சீட்டை எடுத்ததெற்கெல்லாம் வீசியெறிய முடியாது என்ற இக்கட்டான நிலைமைக்கு கொண்டு வந்த ஆத்திரம் இருந்தது. அதனால், தீர்த்துக் கட்டி விட்டார்கள் என்ற கருத்தை முன்வைத்தது.
ஆரம்பத்தில் அப்படித் தான் ஒவ்வொருவரையும் நினைக்க வைத்திருக்கும். ஆனால், தொடர்ந்து ஊடகங்கள் வெளிக்கொணர்ந்த நிலையின் உக்கிரம் அந்த எண்ணத்தை மாற்றியிருக்கிறது. இது குறித்து நான் பண்புடன் தளத்தில் 27/11/08 (http://groups.google.com/group/panbudan/browse_thread/thread/0a509464b1ee8136#) தளத்தில் எழுதியிருந்தேன் இவ்வாறு:
// ஹேமந்த கர்கரே - தானாகத் தான் அங்கு சென்றிருக்கிறார். அவரைக் கொல்வது தான்
உத்தேசம் என்றால், அவர்கள் இந்த வழியைத் தேடியிருக்க மாட்டார்கள். உயர் அதிகாரிகள் முன்னணியிலிருந்து சண்டையிடுவார்கள் என்று எவருமே எண்ணிப்பார்த்திருக்க முடியாது. அவரது பதவியின் தன்மையைக் கொண்டு பார்த்தால், அவர் பின்னால் நின்று கொண்டு, தனது கான்ஸ்டபிள்களை முன் அனுப்பி இருக்கலாம். ஆனால் அவர் அவ்வாறு செய்யவில்லை. மாறாக முன்னணிக்குச் சென்று தானே தீவிரவாதிகளை எதிர் கொண்டிருக்கிறார் என்ற பொழுது அவரது தீரம் பிரமிக்க வைக்கிறது. //
இது போன்று ஒரு உயர் அதிகாரியே துப்பாக்கியை எடுத்து வந்து, தனது படையினருடன் தோளாக தோள் நின்று போரிடுவார் என்று எந்த இயக்கமும் நம்பி திட்டம் தீட்டியிருக்க முடியாது. அதிகாரிகள் பெரும்பாலும் responsible for taking the decision – not for executing it themselves in the field. அவர் முன்னணிக்குச் சென்று யுத்தமிட்டது தீரம் என்றாலும், இன்று இழப்பு நமக்கு தான். இதையே என்றென்றும் அன்புடன் பாலாவும் தனது தளத்தில் தெரிவித்திருக்கிறார்.
சத்தியமார்க்கம் முன்வைத்த தியரி ஒத்துவருமா என்று தெரியவில்லை.
இந்த மாதிரி ஒருநிலை சார்பான கருத்துகளை ஒதுக்கி வைத்து விட்டு, பிற தளங்களின் கருத்துகள் என்று எடுத்துக் கொண்டால், தமிழரங்கம், ராயகரன் எழுதிப் பதிவிட்ட, பம்பாய் பயங்கரவாதம் ஆளும் வர்கங்களால் உற்பத்தி செய்யப்பட்டது என்ற கட்டுரை படிக்க வேண்டும்.
// அரச பயங்கரவாதமும், மனித விரோதக் கூட்டத்தின் குறுகிய நலன்களும் தான் 'பயங்கரவாதத்தை" உற்பத்தி செய்கின்றது. இந்தப் பூமியில் சக மனிதனாக வாழமுடியாத நிலைமைதான் 'பயங்கரவாதத்தின்" வெளிப்பாடு. எப்படி மனிதன் இந்த உலகில் வாழமுடியாது அதிருப்தியுற்று தற்கொலை செய்கின்றானா, அப்படித்தான் 'பயங்கரவாதம்" எதிர் தாக்குதலாகின்றது. //
பயங்கரவாதத்தின் உற்பத்தி மூலத்தைத் தொட்டிருக்கிறார், இராயகரன்.
// சட்டம், நீதி, ஜனநாயகம், சுதந்திரம் என்பது அனைவருக்கும் மறுக்கப்பட்டு, அது சில சமூகங்களுக்கும் தனிமனிதர்களுக்கும் சிறப்பாக அடைபடும் போது, அதன் எதிர்வினை தான் 'பயங்கரவாதம்".//
என்று அது எவ்வாறு வளர்கிறது என்பதையும் பொதுப்படையாகவே சொன்னவர்,
// பம்பாய் தாக்குதல் கடந்த காலத்தில் முஸ்லீம் மக்களுக்கு எதிராக, இந்து பயங்கரவாதம் நடத்திய கொடூரத்தின் மொத்த விளைவாகும். //
என்று இந்த இரு தின யுத்தத்தை இந்து பயங்கரவாதத்தின் எதிர்வினையாகப் பார்க்கிறார். இந்தத் தாக்குதல், இந்து பயங்கரவாதத்திற்கு எதிரான பின்வினை என்பதை என்னால் ஏற்றுக் கொள்ள இயலவில்லை.
இன்றைய தினத்தில் நடந்த பம்பாய் தாக்குதல் குறி வைத்தது – அமெரிக்க, பிரிட்டிஷ், மற்றும் இஸ்ரேல் மக்கள். அயோத்தி சம்பவத்திற்குப் பின், முஸ்லிம்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்காகத் தாக்குதல் தொடுத்தவர்கள் – இப்படி ஒரு selected targetஐ குறிவைத்து இயங்கியிருப்பார்கள் என்று நான் நினைக்கவில்லை. அவர்களுக்கு இந்திய எதிர்ப்பு ஒன்று மட்டும் தான் குறியாக இருந்திருக்க வேண்டும். ஆனால், இங்கு நிகழ்ந்தது – குறி வைக்கப்பட்டவர்களில் எவரும் இந்தியர்களாக இல்லை.
இறந்து போனவர்களில் இந்தியர்கள் இருக்கக்கூடும் – அது, crossfireல் மாட்டிக்கொண்டவர்கள் தான். குறிப்பாக ஊழியர்கள். தாஜ் ஊழியர்கள்.
அதனால், இந்த மும்பை தாக்குதல், வெறுப்படைந்த இந்திய முஸ்லிம்கள் செய்திருப்பார்கள் – அதற்கான நியாயம் அவர்களுக்கிருக்கிறது என்ற கண்ணோட்டத்தை மறுக்கிறேன்.
மேலும் ஊடக உலகைப் பற்றிய குறைகள் எங்கும் எழுதப்பட்டிருக்கிறது. அவர்கள் அதை ஒரு வன்முறையாகச் செய்கிறார்கள் என்ற கருத்தும் முன் வைக்கப்பட்டிருக்கிறது. சித்தாந்தே திணிப்புகளே – செய்திகளை தங்கள் நலனுக்குகந்ததாக மாற்றிப் பேசவைப்பதே – ஊடக வன்முறைகளாக மாறுகிறது. ஆனால், இங்கு எந்த சித்தாந்த திணிப்புமின்றி, காட்சிகளை அது நிகழும் வகையில் அப்படியே காட்டுவது என்பதை வன்முறையாகப் பார்க்க முடியாது. அதிலும், சில காட்சிகளை அவர்களே தவிர்த்துவிட்டார்கள் என்பதுவும் தெரிய வந்தது. இங்கே குறிப்பிடத்தக்க அம்சம் எந்த ஒரு ஊடகமும், எந்த ஒரு முடிவையும் செய்யாமல், நாலு ‘எக்ஸ்பர்ட்டுகளைக் கூப்பிட்டு’ தாங்கள் கண்டுபிடித்த முடிவைச் சொல்லி, கருத்து கேட்காமல் இருந்ததே ஒரு ஆறுதல்.
அதை பின்னர் செய்யக்கூடும். ஆனால், அதை செய்யாது நிகழ்வை அப்படியே படம் பிடித்துக் காட்டுவதை குறை கூற முடியாது. இது குறித்து நான் எழுதியது:
// மேலும் ஒரு முழு இரவு முழுக்கவும் விழித்திருந்து - 12:30 லிருந்த்து காலை 10:00 மணி வரைக்கும் தொடர்ந்து பார்ர்த்த பொழுது - ஒரே ஒரு வார்த்தை கூட 'islamic terrorist' என்ற வார்த்தைப் பேசப்படவே இல்லை. முதன் முதலாக ஒரு செய்தியை அச்சத்துடனும், பதட்டத்துடனும் பாராமல், ஒரூ இந்தியன் என்ற உணர்வுடன் பார்க்க வைத்தது. இப்பொழுது கூட, terrorist என்று மட்டுமே சொல்லிக்கொண்டிருக்கின்றனர்.
இனி, இஸ்லாமியத் தீவிரவாதம் என்று சொல்வதில் எந்த அர்த்தமும் இல்லை -மாறாக அவர்களை கெட்டவன் என்ற நோக்கை மட்டும் கொண்டே பார்க்க வேண்டும் என்ற புரிதலுக்கு வந்திருக்கின்றனர்ர். முதன்முதலாக, அத்வானி அரசைக் குறை கூறாமல், மன்மோகன்சிங் குடன் மும்பை வருவதற்கு தயாராகியிருக்கிறார். தீவிரவாதத்திற்கு எதிராக, ஒருமித்த குரல்
ஒன்றாக எழுந்திருக்கிறது. அதைவரவேற்கத் தயாராகுங்கள்.//
தீவிரவாதம் குறித்த பார்வையில் மாற்றம் வேண்டும். ஒரு மதத்துடன் அதை இணைப்பதினால், தீவிரவாத ஒழிப்பு என்ற பாதையை விட்டுவிலகி மததுவேஷம் என்ற பாதையிலே மட்டும் தான் பயணம் செய்வோம். தீவிரவாதத்தை GOOD Vs EVIL என்ற பார்வையைக் கொண்டு மட்டுமே பார்க்க வேண்டும்.
பின் எவர் தான் செய்திருப்பார்கள் என்ற கேள்வியை trial by media ஆவாக எவரும் செய்ய வேண்டியதில்லை. அதற்கான துறைகள் விசாரித்து, முறைப்படியான தகவல்களைக் கொடுக்கட்டும் என்று பொறுத்திருக்கத் தான் வேண்டும். இல்லையென்றால், ஊடக வன்முறைகள் என்று புலம்பும் பிளாக்கர்கள், தாங்கள் செய்யும் ‘வன்முறையைக்’ காண கண்ணில்லாதவர்களாகிவிடுவார்கள்.
Trial by media என்பது போய் trial by bloggers என்ற தளத்திற்குப் போய்விடுவோம்
அனைவரும், தீவிரவாதம் குறித்த பார்வையில் ஒரு மாற்றத்திற்குத் தயாராக வேண்டும் – including trial by blogs.
35 comments:
நண்பன் சொன்னது .....
//தீவிரவாதம் குறித்த பார்வையில் மாற்றம் வேண்டும். ஒரு மதத்துடன் அதை இணைப்பதினால், தீவிரவாத ஒழிப்பு என்ற பாதையை விட்டுவிலகி மததுவேஷம் என்ற பாதையிலே மட்டும் தான் பயணம் செய்வோம். தீவிரவாதத்தை GOOD Vs EVIL என்ற பார்வையைக் கொண்டு மட்டுமே பார்க்க வேண்டும்.//
**
?????
ஒரு தனி மனிதன் இஸ்லாத்திற்கு வருகிறான் என்றால் அது நல்ல மார்க்கம் அதானாலேயே வருகிறான் என்றும், அதற்கு முன் வந்தவர்களின் பட்டியலையும் வெளியிடமுடிகிறது.
ஏன் அப்போது மட்டும் நல்லவன் கெட்டவன் என்று மட்டும் பார்க்க முடியவில்லை?
**
ஒரு தனி மனிதன் இஸ்லாத்தில் இருக்கும்போது தவறான செயல்கள் செய்தால் அதற்கும் இஸ்லாத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்ற தொனியிலும் பேச முடிகிறது.
**
திருந்த நினைப்பவனை மட்டும் மதவழியாக பார்த்து, கொண்டாட அழைப்பு விட முடிகிறது. அதே சமயம் அதே மதத்தின் பெயரால் கெட்டது நடக்கும் போது எப்படி மதத்தை விலக்கிப் பார்க்கச் சொல்ல முடிகிறது உங்களால்?
எப்படி இதெல்லாம் ....??
**
ஒருவன் நல்லவனாக இருப்பதற்கும் கெட்டவனாக இருப்பதற்கும் மதம் காரணம் அல்ல. என்று சொல்ல முடியுமா உங்களால்?
அப்படிச் சொல்ல முடிந்தால் மதங்களை நல்லது /கெட்டதுகளில் தொடர்பு படுத்தாமல் விட்டுவிடலாம்.
################################
சிலுவைப்போர் தொடங்கி, நேற்று நடந்த இந்து துறவியின் பங்களிப்பு உள்ளதாக சந்தேகப்படும் குண்டுவெடிப்பு முதல் , இன்று நடக்கும் பம்பாய் போர்க்களம் வரை மதம் என்ற சாக்கடையே மூல காரணம்.
**
மதங்கள் அனைத்தும் நாசமத்துப் போகட்டும்.
**
மதங்களின் மூத்திரச் சந்துகளின் வழியாக வரும் கோர்வையற்ற நாற்றம்
http://kalvetu.blogspot.com/2007/12/blog-post.html
//...இவைகள் நடக்கும்போதெல்லாம் , மதவாதிகள் "இது தனிமனிதனின் அல்லது குழுவின் செயல்" என்று விலகிப் போய்விடுவார்கள். தனிமனிதனுக்கு சமுதாயத்தில் இணைந்து வாழும் அடிப்படை ஒழுங்கை/தகுதியைக்கூட கற்றுத்தராத மதம் என்ன மதம்? அதனால் என்ன பயன்?
//
//எந்த மதமும் நல்ல குடிமகனை உருவாக்குவதை குறிக்கோளாகக் கொண்டது இல்லை. நல்ல மதவாதியை மட்டுமே உருவாக்குகின்றன. ஒரு நாட்டிற்குத் தேவை நல்ல குடிமகன்களே தவிர , மதவாதிகள் அல்ல. மதங்களின் பின்னால் அணிவகுப்பவர் யாரும் நல்ல மனிதராக இருக்கவே முடியாது.ஒரு மதத்தை சார்ந்தவன் அடுத்த மதத்தை "சகித்துக்"கொள்ளமுடியுமே தவிர போற்ற முடியாது. மதங்களுக்கு இடையே "சகிப்புத்தன்மை" என்பதே, பிடிக்காத ஒன்றை அல்லது ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்றை "சகித்துக்கொள்" என்றுதான் அர்த்தம் வரும். சகித்துக்கொள் என்பது , சுயமிழத்தல் என்பதாகும். சாவும்,உயிரின் இருப்பும் ஒரே சமயத்தில் ஒரு உடலின் அடையாளமாக இருக்க முடியாது.//
XXXX மதம் கெட்ட மதம் அதனால் கொலையாளிகளும் இங்கு உள்ளார்கள்
.....என்று சொல்லமுடியுமா?
**
அப்படிச் சொல்லமுடியாவிடில்...
தனி மனித நற்பண்புகளுக்கும் மதம் காரணம் அல்ல.
தனி மனித தீயகுணக்களுக்கும் மதம் காரணம் அல்ல.
...என்று சொல்லலாம்.
**
ஒன்றுக்கு (நல்லது) மதம் காரணம் என்றால் மற்ற ஒன்றுக்கும்(கெட்டது) அதேதான் பொறுப்பு ஏற்கவேண்டும். சரியா நண்பா?
கல்வெட்டு,
இந்தப் பதிவை சிரமம் பாராமல் படித்து விடுங்கள்.
http://groups.google.com/group/panbudan/browse_thread/thread/cbd54716906fabe0/32c8fb03d846f03e
(இரண்டாவது பக்கத்தில் உள்ள பதிவு. 39)
அதைப் படித்து விட்டேன் என்று ஒரு வார்த்தை சொல்லுங்கள். பின் பதில் எழுதுகிறேன் - கண்டிப்பாக.
(மேலும் ஒரு முழு நாள் காத்திருக்க வேண்டும். நாளை இரவு தான் இனி எழுத நேரம் வாய்க்கும்...)
நண்பன்,
நீங்கள் கொடுத்த சுட்டியில் உள்ள உரையாடல்களை வாசித்துவிட்டேன்.
அதுபோல உங்களின் பதிவையும் மேலும் ஒரு முறை வாசித்துவிட்டேன்.
***
மதத்தைப்பின்பற்றும் யாரும் (இணைய உலகில்) வெட்டு ஒன்று துண்டு இரண்டாக இந்தக் கேள்விக்குப் பதில் சொன்னது இல்லை.
***
நான் சொல்ல வருவது இதுதான்.
தனி மனித நற்பண்புகளுக்கும் மதம் காரணம் அல்ல.
தனி மனித தீயகுணங்களுக்கும் மதம் காரணம் அல்ல.
ஒன்றுக்கு (நல்லது) மதம் காரணம் என்றால் மற்ற ஒன்றுக்கும்(கெட்டது) அதேதான் பொறுப்பு ஏற்கவேண்டும்.
***
ஒருவர் மதம் XX ல் இருக்கும் வரை நிம்மதியாய் இல்லை. மதம் YY க்கு வருகிறார் . இந்த YY மதத்தின் பெருமையை கொண்டாடுவோம் வாருங்கள் என்று சொல்கிறீர்கள். அது உங்கள் உரிமை.
அதே சமயத்தில் நீங்கள் இதையும் செய்யவேண்டும்.
குண்டுபோடும் /கொலை செய்யும் ஒருவர் இந்த மதத்தில்தான் இன்னும் இருக்கிறார். இவ்வளவு நாள் இருந்தும் இவனைத் திருத்தாத மதத்தை சாடுவோம் வாருங்கள் என்றும் சொல்ல வேண்டும்.
நண்பன்@ Nov 28, 4:07 am
http://groups.google.com/group/panbudan/browse_thread/thread/cbd54716906fabe0/3c37b3636de2a55d
//ஒரு செயலுக்கு அடிமைப்பட்டுப் போவதைத் தான் இஸ்லாம் கண்டிக்கிறது. அது தான்
எனக்குப் பிடித்தது. Don’t get carried away by anything என்பது தான் பிடித்தது. ஒரு செயலைக் கண்டு பரவசப்பட்டுப் போகாமலும், அதே சமயத்தில் அதை வெறுக்காமலும் பார்க்க முடிகிறது. //
Don’t get carried away by anything என்பதில் மதமும்/அந்த மதம் காட்டும் கடவுளும் ஒரு அங்கமே. சரியா?
***
ஆன்மீகத் தேடலின் முடிவைக் கடவுளாக்கி, கடவுளை மததிற்குள் புகுத்தி, மதங்களை புனிதமாக்கி,புனிதத்தை அரசியலாக்கி அதற்குப் பக்கத்திலேயே ஒரு குடிசையை போட்டு ஒக்காந்துகொண்டு வியாக்கியானம் பேசும்போதுதான் , குடிசைகளுக்கு இடையா யார் பெருசு என்று சண்டையே வருகிறது.
சாலைவிதிகள்கூட புத்தகமாக உள்ளது. அதற்காக யாரும் அதைப் புனிதமாகக் கொள்வது இல்லையே? வாழ்க்கையை எப்படி வாழ்வது என்று ஒரு புத்தகம் இருக்குமானால் அதைப் படித்துவிட்டு அதுபடி வாழ்ந்தால் தவறே இல்லை. அதையே புனிதமாக்கி மற்ற ஒரு பூகோளப்பரப்பில் இருக்கும் கொள்கைகளுடன் ஒப்பிட்டு யார் பெருசு , அதுக்கு இது இணையா ? போடு சண்டை என்றுவரும்போதுதான் இரத்தக்களரி ஆகிறது.
**
Execellent Post! Naan ithuvarai padita blogukalil unmaiyileye arputamaana pativu!
கல்வெட்டின் பின்னூட்டங்களை வழிமொழிகிறேன்.
http://news.bbc.co.uk/1/hi/world/south_asia/7753876.stm
If reports that the gunmen specifically looked for American and British citizens to take hostage are true, it would suggest that this terrorist spectacular had little to do with the prejudice and discrimination many Muslims do encounter in India.
Sumantra Bose is Professor of International and Comparative Politics at the London School of Economics. He is the author of Contested Lands: Israel-Palestine, Kashmir, Bosnia, Cyprus, and Sri Lanka, published by Harvard University Press.
நண்பன் சொன்னது -
// இன்றைய தினத்தில் நடந்த பம்பாய் தாக்குதல் குறி வைத்தது – அமெரிக்க, பிரிட்டிஷ், மற்றும் இஸ்ரேல் மக்கள். அயோத்தி சம்பவத்திற்குப் பின், முஸ்லிம்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்காகத் தாக்குதல் தொடுத்தவர்கள் – இப்படி ஒரு selected targetஐ குறிவைத்து இயங்கியிருப்பார்கள் என்று நான் நினைக்கவில்லை. அவர்களுக்கு இந்திய எதிர்ப்பு ஒன்று மட்டும் தான் குறியாக இருந்திருக்க வேண்டும். ஆனால், இங்கு நிகழ்ந்தது – குறி வைக்கப்பட்டவர்களில் எவரும் இந்தியர்களாக இல்லை.
இறந்து போனவர்களில் இந்தியர்கள் இருக்கக்கூடும் – அது, crossfireல் மாட்டிக்கொண்டவர்கள் தான். குறிப்பாக ஊழியர்கள். தாஜ் ஊழியர்கள்.
அதனால், இந்த மும்பை தாக்குதல், வெறுப்படைந்த இந்திய முஸ்லிம்கள் செய்திருப்பார்கள் – அதற்கான நியாயம் அவர்களுக்கிருக்கிறது என்ற கண்ணோட்டத்தை மறுக்கிறேன். //
கல்வெட்டு,
நீங்கள் கேட்ட கேள்விகள் அனைத்திற்குமான பதிலை நான் ஏற்கனவே எழுதிவிட்டேன். அதனாலயே அந்த இணைப்பைத் தந்தேன். ஆனால், நீங்கள் அதை மிக வேகமாக, வாசித்து விட்டு, பதில் எழுதி விட்டீர்கள். பரவாயில்லை. இப்பொழுது நீங்கள் கேட்டவற்றிற்கும், நான் எழுதிய பழைய பதிவிலிருந்தே பதில்களும்:
// ஒரு தனி மனிதன் இஸ்லாத்திற்கு வருகிறான் என்றால் அது நல்ல மார்க்கம் அதானாலேயே வருகிறான் என்றும், அதற்கு முன் வந்தவர்களின் பட்டியலையும் வெளியிடமுடிகிறது. ஒரு தனி மனிதன் இஸ்லாத்திற்கு வருகிறான் என்றால் அது நல்ல மார்க்கம் அதானாலேயே வருகிறான் என்றும், அதற்கு முன் வந்தவர்களின் பட்டியலையும் வெளியிடமுடிகிறது.
ஒரு தனி மனிதன் இஸ்லாத்திற்கு வருகிறான் என்றால் அது நல்ல மார்க்கம் அதானாலேயே வருகிறான் என்றும், அதற்கு முன் வந்தவர்களின் பட்டியலையும் வெளியிடமுடிகிறது. //
நல்ல மார்க்கம், கெட்ட மார்க்கம் என்ற எண்ணத்தையோ, வார்த்தைகளையோ நான் பயன்படுத்தவில்லை. மாறாக அதை ஒரு செய்தியாக, சமூக செய்தியாகத் தான் பார்க்கச் சொல்லியிருந்தேன். மீண்டும் அந்த வரிகள் உங்களுக்காக –
// அவர் ஒரு நல்ல இஸ்லாமியனாக வாழ வேண்டுமென்ற கட்டாயத்தை ஒரு போதும் அவர்
மீது திணிக்க மாட்டேன். நல்ல இஸ்லாமியன், கெட்ட (அ) பாமர இஸ்லாமியன் என்ற
கோட்பாடுகளை நான் ஏற்பதில்லை. ஒருவன், இஸ்லாமிய கோட்பாடுகளை எந்த
அளவிற்குப் பின்பற்றுகிறான், பின்பற்றவில்லையென்பது, ஒருவனது தனிப்பட்ட
விருப்பம். அது அவனுக்கும், இறைவனுக்கும் இடையில் உள்ள பிரத்யேகமான உறவு.
அது குறித்து நான் பேசவே போவதில்லை. //
இதுவே உங்களுடைய மற்றொரு கேள்விக்கும் பதில் அளித்திருக்கும். ஒருவன் வந்தால், நல்ல மதம் என்று சொல்வேன் என்ற கேள்விக்கான பதில் மேலே கிடைத்திருக்கும். MJ வந்ததை நான் மதம் சார்ந்ததாகப் பார்க்கவில்லை. அவரை நல்லவனாக இஸ்லாம் மாற்றிவிடும் என்று நான் எழுதவில்லை. அத்தகைய சிந்தனையைக் கூட நான் முன் வைக்கவில்லை. அவர் எப்படியோ, அப்படியே அவரை ஏற்றுக் கொள்வேன். அவர் எத்தகைய பக்திமானாக இருக்கிறார் என்பது அவருக்கும், இறைவனுக்கும் உள்ள தனிப்பட்ட உறவு என்றிருக்கிறேன்.
இதில் எங்கிருந்து மத எண்ணங்கள் அல்லது சிந்தனைகள் வந்தன?
ஒரு மனிதன், தன் விருப்பத்தின் பேரிலேயே, நல்லவனாகவும் கெட்டவனாகவும் இருக்க முடியும் என்பதைத் தான் அழுத்தம் திருத்தமாகச் சொல்லியிருக்கிறேன். எப்படி வாழ்வது என்பது அவனது தனிப்பட்ட விருப்பம் என்று சொன்னதன் பின், மதத்தை எவ்வாறு இங்கு இழுத்து வருகிறீர்கள் என்று எனக்குப் புரியவில்லை. மீண்டும் ஒரு முறை நிதானமாக வாசித்துப் பாருங்கள். ஒரு நல்ல மனிதனாக வாழ்வதற்கான முன்னுதாரணங்களையும் சொல்லியிருக்கிறேன்.
மற்றபடிக்கு இது ஒரு செய்தி.
// இந்த வகையான செய்திகளை ஒதுக்குவதன் மூலம், இந்த உலகில் ஒவ்வொரு மூலையிலும், ஒரு ஒடுக்கப்பட்ட இனம், மேலாண்மைமிக்கதாகத் தங்களைக் கருதிக் கொள்ளும் ஒரு சமூகத்திடமிருந்து, எத்தகைய கொடுமைகளை, இன்னல்களை ஏற்க
வேண்டியதிருக்கிறது என்ற வரலாற்றையும் மறந்து விட வேண்டிய சூழலில்
இருப்பவர்களாகி விடுவோம். //
செய்தியை உள்வாங்க முடியா விட்டால், அதன் பின் ஏன் ஒருவர் தான் இருக்கும் வழியை விட்டு விலகி, மாற்றுப் பாதைகளைத் தேட வேண்டும் என்பதன் அடிப்படை காரணத்தைப் புரியாமலே போயிருக்கும்!
// இவ்வாறு செய்திருக்காவிட்டால், யாருக்குமே மால்கம் X என்பவர் யார், கறுப்பின மக்களுக்காக அவர் கொண்ட போராட்டத்தின் இறுதியில், தன்னை இஸ்லாமிற்கு மாற்றிக் கொண்ட வரலாறு தெரிந்திருக்கவே வாய்ப்பில்லை //
// ஒலிம்பிக்கில் குத்துச்சண்டையில், தங்கம் வென்ற அவரை, அமெரிக்கா எப்படி வரவேற்றது தெரியுமா? க்ளேயின், மூதாதையரில், எங்கோ ஓரிடத்தில், வெள்ளை ரத்தம் கலந்து விட்டிருக்கிறது – அதுவே காரணம் என்றது. பழக்கப்பட்ட வாக்கியமாகத் தோன்றுகிறதா? அது தான் உண்மை. ஆத்திரம் பொங்க, தான் வாங்கிய
தங்கத்தை, மிஸ்ஸிஸிப்பி ஆற்றில் விட்டெறிந்தார். தன்னை, சமமானவாக மதிக்கும் ஒரு புதிய பாதையைத் தேடினார்.//
சமூகத்தின் ஏளனப் பார்வைக்கு ஆளாக்கப்பட்ட இனத்தைச் சார்ந்தவர்கள் இவர்கள். ஏன் ஏளனத்திற்கும், ஒடுக்குதலுக்கும் இவர்கள் உள்ளாக்கப்பட்டார்கள்?
இந்தச் செய்திகளை மூடி மறைத்து வைப்பதினாலோ, அல்லது திரும்பவும் வாசிக்க மறுப்பதினாலோ, எந்த நியாயத்தை வழங்கி விட முடியும்? இவர்கள் இறை வழியை மட்டுமே தேடவில்லை. தங்களை ஒடுக்குவதினின்றும் விடுதலை அடையத் தான் வழி தேடினார்கள்.
இதை மறுக்க அல்லது மறைக்க மட்டுமே, இதை மதமாற்றமாகப் பார்க்கிறார்கள். ஆனால், இதை ஒரு செய்தியாகப் பார்த்தால், அவர்கள் மனதில் இயல்பாகவே எழும் – ஏன் இவர்கள் ஒடுக்குதலுக்கும், ஏளனத்துக்கும் உள்ளானார்கள் என்று! அப்படியானால், அது எவ்வகையான சமூகம் என்று!
// மீத வாழ்க்கைக்காக, அலைபாயும் மனதுடன் தவித்த கணங்களே, அவரை இறைவனைத்
தேடச் சொல்லித் தூண்டியது. அவர் முதலில் தியானம் செய்தார். சைவத்திற்கு மாறினார். பிற மதங்களின் நூல்களைத் தேடித்தேடி படித்தார். புத்தம், ஜென், ஐ சிங்க்,
எண் கணிதம், டாரோட் கார்ட், ஜோதிடம் என சகல தளங்களிலும் தேடினார். //
கடவுளை வேறு ஒரு தளத்தில் தேடிய காட் ஸ்டீவன்ஸ், பலவகையான பாதைகளையும் தேடியிருக்கிறார் என்பதையும் குறிப்பிட்டிருக்கிறேன். சைவ உணவிற்கு மாறியது முதல.
கொண்டாடப்பட வேண்டியவர்கள் என்று நான் குறிப்பிட்டதும் கீழே உள்ளவாறு தான். நீங்கள் நினைப்பது போல், அவர்கள் இஸ்லாத்திற்கு வந்துவிட்டார்கள் என்ற காரணத்தினால் அல்ல.
// ஏதோ சாகச ஹீரோக்கள் போல, ஒஸாமா, ஜாவேரி போன்றவர்களைக் கருதக்கூடாது – அவர்களுக்கு மாற்றாக, உண்மையாகவே நாயகனாகத்தக்க கொண்டாடவென, சாதனை செய்தவர்களை, மனித வாழ்வை முன் நிறுத்தத் தான் செய்ய வேண்டும். //
// குற்றங்களுடன் இணைத்துப் பேசுபவர்களைக் குறித்து மனசஞ்சலம் அடைய வேண்டாம். அதையும் மீறி வெற்றி கொண்டவர்களைப் பாருங்கள், இந்த சமயத்தில்
என்பது தான் இங்கு அடிக்கோடிடப்பட வேண்டிய வரிகளாகும். //
இதில் நீங்கள் எந்த குறையையும் காண முடியாது. எந்தவித உள்நோக்கத்தையும் காண முடியாது.
Media by trial என்பதை மட்டுமே நான் எதிர்க்கிறேன். The vindictive attitude of the media. The guess work as the final truth. Let them present the proven truth as it is – No objection. இந்த செய்தியைத் தான் மீண்டும், மீண்டும் வற்புறுத்துகிறேன். அதையே தான் இந்த செய்தியிலும் பார்க்கிறேன் என்பதைத் தெளிவு படுத்தி இருக்கிறேன்.
// இன்று பகிரங்கமாகவே இஸ்லாத்திற்கு எதிரான கொடுமையான தீவிரவாதம் என்ற
கருத்தாக்கம் வைக்கப்பட்டு, தினம் தினம் வகை வகையாக, விதம் விதமாக பிரச்சாரம் செய்யப் படுகையில், அதையும் மீறி, அவர் இணைந்தார் என்பது அவரது சமூகத்தில், இஸ்லாத்தின் மீது வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளை மறுபரிசீலனை செய்ய இது ஒரு வாய்ப்பாக அமையும். அந்த வகையில் இது ஒரு முக்கிய செய்தியாக விளங்கும். இது தான் நான் இந்த செய்தியை முக்கியப்படுத்துவது. அவ்வளவே! //
// இது ஒரு trial by the media அவ்வளவு தான்.
ஊடகவன்முறைகளையும், கருத்துப்
பலாத்காரத்தையும் எப்பொழுதுமே எதிர்த்தே வந்திருக்கிறோம். Trial by the media எத்தனை அலங்கோலமாக முடியும் என்பதை சமீபத்திய இந்திய
குண்டுவெடிப்பு விசாரணைகள் சந்தி சிரிக்க வைத்து விட்டன. //
// நான் சொல்ல வருவது இதுதான்.
தனி மனித நற்பண்புகளுக்கும் மதம் காரணம் அல்ல.தனி மனித தீயகுணங்களுக்கும் மதம் காரணம் அல்ல.// (கல்வெட்டு)
ஒருவனை நல்லவனா, கெட்டவனா என பார்ப்பதற்கு மதம் அவசியமில்லை என்பதை ஒரு கேள்வியாக நீங்கள் வைக்குமுன்னே நான் தெளிவுபடுத்தியிருக்கிறேன்.
// MJயைப் பற்றித் தீர்மானிக்க எவராலும் முடியும். மதங்களின் துணை தேவையில்லை. இஸ்லாமிய சிந்தனையோ, பற்றோ, அல்லது அந்த மதத்தைச் சார்ந்தவனாக இருக்க வேண்டுமென்பதே இல்லை. நியாய சிந்தனையுள்ளவனாக
இருந்தாலே போதும். இந்தப் பதிவையும் நான் அந்தத் தளத்திலே நின்று தான் எழுதிக் கொண்டிருக்கிறேன். //
(இங்கு MJ என்ற மனிதனை மாற்றிவிட்டு, அங்கு எவர் பெயரை வேண்டுமானாலும் போட்டுக் கொள்ளலாம். )
How a soceity coould hound a man out of his surroundings – என்பதை மட்டுமே முன்னிலைப்படுத்தி எழுதியிருக்கிறேன்.
// ஆனால், இங்கு பிரபலத்தை மறந்து விட்டு, மத மாற்றத்தை மறந்து விட்டு, பார்த்தால்,
சமூகத்தால் வன்முறைக்குள்ளாக்கப்பட்டவன், வேட்டையாடத் துடிக்கும் வன
விலங்குகளிடமிருந்து தப்ப முயலும் ஒரு எளிய பிராணியைப் போன்று தப்பியோட நினைக்கின்ற வகையில் தான் இன்னமும் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கின்றான் என்பது புரியும். அதுவே செய்தியும் கூட. அவனது பிரபலமும் சரி, அவனது
சமூகத்தின் மற்ற நிறுவனங்களும் சரி, அவனுக்கு எந்த ஒரு பாதுகாப்பையுமே தரவியலவில்லை என்பதே உண்மை. இந்த நிலைமையில், அங்கிருந்து விலகுவது ஒன்று தான் வழி என்பதே செய்தி. இந்த விலகலுக்குத் துணை போனதும் அந்த ஊடகவன்முறையே. அவை தோற்கும் பொழுதெல்லாம், அதைப் பற்றிப் பேச வேண்டியது
அனைவரது கடமையும் கூட. அது ஒன்றே, ஊடகவன்முறையாளர்களை ஒரு ஒழுங்கிற்குள் நிற்க வைக்க உதவும். //
// இந்திய தலித்கள் சில இடங்களில் மதம் மாறியதை வெளிக்கொணரவில்லையென்பதும்
இந்த வகை ஊடக மோசடியே. அந்தவித மதமாற்றங்களை தொடர்ந்து வெளியிடுவதால்,
ஏன் அவ்வாறு மதம் மாறுகிறார்கள் என்று கேட்கத் தூண்டும். தங்கள்
செயல்களைக் குறித்து ஒரு உள்கட்ட விசாரணைக்காக, தங்கள் செயல்களைக் குறித்த ஒரு மறு ஆய்வுக்காக உதவும். மதகுருமார்களுக்கு ஒரு அழுத்தம்
கொடுக்கும். இதை தடுத்து நிறுத்த ஏதாவது செய்யுங்கள் என்ற ஒரு
அழுத்தத்த்தைக் கொடுக்க இயலும். ஏற்கிறார்கள், ஏற்கவில்லையென சொல்வது அவர்களது உரிமை.//
ஆக,
// சில இடங்களில் வலிக்கலாம். வலி என்பது, உணர்வது. செய்திகளை உணர வேண்டிய
வலி. உணர்வதை தவற விட்டால், அட, இதிலென்ன இருக்கிறது என்று தான் தோன்றும். இங்கே உணர வேண்டிய வலி – எத்தனை தான் முன்னோக்கிப் போகும் மனித
சமூகமென்றாலும், அங்கும் வேறுபாடுகளைத் தோற்றுவித்து, மனிதர்களைப் பிரித்துப் பார்க்கும் வேடிக்கை மனநிலை இருக்கிறதென்றும், அதற்கு மாற்றாக, மனிதர்கள் மாற்று வழியைத் தேடி அலையும் நிலையில் நிறுத்தி
வைக்கப்படும் வலியையும், ஒருவனின் தனிநபர் உரிமையான மதங்களை(ப் பின்பற்றுவதை) தங்களுக்குப் போட்டியாகக் கருதி, அதன் மீது சேறு வாரியிறைக்கும் சமூகங்களாகத் தான் மனிதன் தன்னை இன்னமும் வளர்த்துக்
கொண்டிருக்கும் வலியையும் உணர முடியும். அந்த வகையில், MJ தனது வழியை மாற்றிக் கொள்ள எடுத்த முடிவை வரவேற்பதில் எந்தத் தவறுமில்லை. //
உணர வேண்டிய செய்தி, ஒவ்வொரு சமூகமும், தன் அங்கத்தினர் சிலர் மீது வன்முறையைத் தொடுக்கிறது. இங்கு எந்த சமூகத்தையும் குறிப்பிடாமல், அனைத்து சமூகங்களையும் சேர்த்தே தான் சொல்லியிருக்கின்றேன்.
அது போல, அவர் இஸ்லாத்தில் இணைந்ததால், இப்படி இருக்க வேண்டும், அப்படி இருக்க வேண்டும் என்ற நிர்ப்பந்தங்களையும் நான் முன்வைக்கவில்லை. ஒருவர் விரும்பினால், அவர் நல்லவனாக, நம் மனம் விரும்பியவனாக வாழ முடியும் என்ற எனது எண்ணத்தைத் தான் முன்வைத்திருக்கிறேன்.
// அவர் எத்தகைய முஸ்லிமாக இருக்கப் போகிறார் என்பது குறித்து
எந்தக் கவலையும் கொள்ளவேண்டிய அவசியமில்லை. அவர் நடப்பதற்கு
முன்னோடியாகப் பலர் இருக்கின்றனர். நாம் அவர்களைக் கொண்டாடுவதன் மூலம்,
சிறந்த மனிதர்களாக, உலகிற்கு எடுத்துக் காட்டும் அளவிற்கு ஒரு நல்ல வாழ்க்கையை வாழ முடியும். அவ்வாறு பின்பற்றுகிறாரா, அல்லது ஒரு சாதாரண வாழ்வை வாழ்ந்து விட்டுப் போகிறாரா என்பது அவரது தனிப்பட்ட வாழ்க்கை. அந்த வாழ்க்கை நல்ல விதமாக அமைந்தால், பின்னர் அதையும் கொண்டாடலாம்.
இப்பொழுது, அந்தச் செய்தியின் முக்கியத்துவத்தை மட்டும் உணர்ந்து
கொள்வோம். //
நீங்கள் இன்னமும் பலமுறை அந்தப் பதிவை வாசிக்க வேண்டும். முழு இழையையும் வாசித்தால், அந்தப் பதிவு, ஒரு செய்திப் பதிவு என்பதை உணர்வீர்கள். உங்கள் மனதில் எழுந்த பல கேள்விகளுக்கும் விடை அளிக்கும். ஆனால், அதை வாசிக்க மறுத்து, தன் கருத்தை மட்டுமே அழுத்தமாகக் கூறி கொண்டிருக்க வேண்டும் என்ற அவா கொண்டால், பின் நான் அதில் தெளிவு படுத்த எதுவுமிருக்காது.
மிக்க நன்றி, கல்வெட்டு. இன்னமும் சில பதில்கள் பாக்கி இருக்கின்றன. அதைப்பற்றியும் எழுதுவேன்...
அன்புடன்
நண்பன்
ஷங்கர், வால்பையன்
உங்கள் வருகைக்கும், கருத்திற்கும் நன்றி.
நண்பன்,
நான் கேட்பது ஒற்றைவரி கேள்விகள். உங்களின் பதிவை பலமுறை படித்தாலும் எனக்கான விடை அதில் இல்லை. நான் புரிந்து கொள்ள முடியாதவனாகவே இருந்தாலும் என்னை உறுத்துவது இதுதான்.
//.....மற்றபடிக்கு இது ஒரு செய்தி. //
நக்மா-வை வைத்து ஒரு கிறித்துவக்கூட்டம் நடந்தது. அதை நீங்கள் வரவேற்கவில்லை , ஆனால் வேறுசிலர் வரவேற்றார்கள். இப்போது ஜாக்சனுக்காக நீங்கள்.
ஜாக்சன் புத்த மதத்திற்குப்போனால் கொண்டாட நீங்கள் அழைப்பு விடுவீர்களா? மாட்டீர்கள். உங்கள் அளவில் நீங்கள் நம்பும் ஒன்று மற்றவற்றைவிட உயர்ந்தது என்ற எண்ணம் உள்ளதால்தான் அவ்வாறு பேச முடிகிறது.
இப்படி நினைப்பதுதான் மதம் மனிதனுக்கு கற்றுக்கொடுக்கும் முதல் விசயம்.
எந்த ஒரு மதத்தையும் பின்பற்றும் யாராலும் மற்ற ஒரு மதத்தை சகித்துக் கொள்ளமுடியுமே தவிர இணையான ஒன்றாக ஏற்றுக் கொள்ளவே முடியாது.
உங்களுக்கு இஸ்லாம் பிடித்தமைக்கு காரணமாக Don’t get carried away by anything என்பதைச் சொன்னீர்கள்.
Don’t get carried away by anything என்பதில் மதமும்/அந்த மதம் காட்டும் கடவுளும் ஒரு அங்கமே , அதனாலும் carried away ஆகாமால் இருக்க வேண்டும்.
நான் சொன்னதையே சொல்வதாக வைத்துக் கொண்டாலும் எனக்கான பதில்கள் உங்கள் பதிவில் இல்லை.
இதையெல்லாம் ஒரு மெல்லிய நகைப்புடனெயே ஒதுங்க முடியும், தீவிரவாத்தில் மதம் சம்பந்தம் இல்லை என்று நீங்கள் சொல்லாமல் இருக்கும்வரை. அப்படிச் சொல்லும் போது மறுக்க வேண்டியது உள்ளது.
தீவிரவாதத்தை மதம் கொண்டு பார்க்கக்கூடாது என்று நீங்கள் சொன்னதால் எனது கருத்தைச் சொன்னேன். பிரிவினைகளின் முக்கியமான ஊற்றுக்கண் மதம்.
//மிக்க நன்றி, கல்வெட்டு. இன்னமும் சில பதில்கள் பாக்கி இருக்கின்றன. அதைப்பற்றியும் எழுதுவேன்...//
உங்களின் பதில்கள் எப்படி இருந்தாலும்,குறைந்த பட்சம் உங்களிடம் இந்த அளவிற்காவது உரையாட முடிகிறது. அந்தவகையில் மகிழ்ச்சியே. மிக்க நன்றி
கல்வெட்டு,
ஒரு செய்தியின் பின்புலத்தில் இருக்கும், சொல்லப்படாதவற்றை நீங்கள் வாசிக்க முனைகிறீர்கள்.
அதனாலயே, நீங்கள் ஒரு ஒப்பீட்டு அளவிளான ஏற்றத்தாழ்வுகளைப் பார்க்கிறீர்கள்.
நான் அவ்வாறு பார்க்க இயலவில்லை.
'நக்மா'வை நான் follow-up செய்துகொண்டிருக்கவில்லை.
ஆனால், நான் MJ. Cat Steevans, Beatles இவர்களைப் பற்றி நான் தெரிந்து வைத்திருந்தேன் - எழுதினேன்.
உலகில் நடப்பவற்றையெல்லாம், கணக்கிலெடுத்துக் கொண்டு, நீ இதைப் பற்றி எழுதினாயா? அதைப் பற்றி எழுதினாயா? என்று கேட்டுக் கொண்டிருக்க முடியாது.
காட் ஸ்டீவன்ஸ் எத்தனை முயற்சிகளை எடுத்தார் என்று எழுதியிருந்தேன். அதே போல, இந்திய கலாச்சாரத்தில், ஈடுபாடு கொண்டு, இந்தியாவிற்கே வந்து, மகரிஷி மகேஷ் யோகியின் ஆசிரமத்தில் தங்கி வாழ்ந்த காலத்தைப் பற்றி எழுதியிருந்தேன்.
ஒன்றிலிருந்து, மற்றது உயர்ந்தது என்று மட்டும் பேச வேண்டுமென்றிருந்தால் இதையெல்லாம் நான் குறிப்பிட்டிருக்க வேண்டிய அவசியமுமில்லை. தேவையுமில்லை.
// தலித் மக்களுக்கு எப்படி, பௌத்தம் ஒரு வழியாகுமென அம்பேத்கர் நம்பினாரோ, அது போன்ற ஒரு நம்பிக்கை தான் இது. பின் அவர் இஸ்லாத்தைப் பற்றி நன்கு ஆராய்ந்து, அதையே தன் மக்களுக்கும் சொன்னார்.//
ஆம் - கல்வெட்டு, அம்பேத்கர், பௌத்தத்திற்கு மாறிய செய்தியையும் நான் கொண்டாடத் தான் செய்தேன். உங்களுக்குத் தான் அது தெரியாமற் போயிற்று. ஏனென்றால், அதை தெரிந்து கொள்ள விருப்பமில்லை.
அது மட்டுமல்ல, தொடர்ந்து அதைப் பற்றியும் பேசி வருகிறேன். பெளத்ததிற்கோ, அல்லது ஒருவன் இந்து மதத்திற்கோ வந்தால் கூட அதைப் பற்றி நான் பேசத்தான் செய்வேன். ஏன் ஒன்றிலிருந்து மற்றொன்றிற்குப் போகிறார்கள் என்பதை. ஏனென்றால் அந்த செய்தி முக்கியமானது. ஏற்கனவே தாங்கள் நல்ல உயர்ந்த இடத்திலிருக்கிறோம், இனி நாம் எந்த செய்தியையும் உள்வாங்க வேண்டிய அவசியமில்லை என்ற நிலைபாடில்லை.
ஆகையால், எழுதப்பட்ட செய்தியை வைத்துக் கொண்டு, அந்த செய்தியின் பின்னணியில் இருக்கும் - ஒருவன் ஒன்றிலிருந்து சில சமூக காரணிகளால் வெளியேற்றப்படுகிறான் - என்பதை வாசித்துப் புரிந்து கொள்ளத் தவறிவிட்டு, ஏன் இதை எழுதவில்லை என்று கேட்டால், நான் என்ன செய்வது?
நான் எழுதத் தான் செய்தேன் - உங்களால் தான் அதை வாசிக்கவியலாத மனத் தடை இருக்கிறது.
Don't get carried away by anything என்பதைப் பற்றியும் எழுதுவேன். அவசரப்படாதீர்கள்.
(நீங்கள் கேட்கும் கேள்விகள் ஒற்றைவரி கேள்விகளா? :-))
நண்பன் சொன்னது .....
//'நக்மா'வை நான் follow-up செய்துகொண்டிருக்கவில்லை.
ஆனால், நான் MJ. Cat Steevans, Beatles இவர்களைப் பற்றி நான் தெரிந்து வைத்திருந்தேன் - எழுதினேன்.
உலகில் நடப்பவற்றையெல்லாம், கணக்கிலெடுத்துக் கொண்டு, நீ இதைப் பற்றி எழுதினாயா? அதைப் பற்றி எழுதினாயா? என்று கேட்டுக் கொண்டிருக்க முடியாது.
//
நண்பன்,
ஒரு செய்தி ஏன் ஒருவருக்கு முக்கியமாகப்படுகிறது? வேறு சிலருக்கு முக்கியமாகப்படவில்லை என்பதைச் சொல்லவே அந்த உதாரணம்.
உங்களுக்கு ஜாக்சன் முக்கியமாகப் பட்டதற்கான ஒரே காரணம் மதம்.
உங்களையோ அல்லது யாரையுமே உரையாடலில் அதற்கு ஏன் பதிவு போடவில்லை, இதற்கு மட்டும் போட்டாய் என்று கேட்பது நோக்கம் அல்ல.
ஆனால், ஒரு செய்தி (ஜாக்சன்)உங்களுக்கு முக்கியமாகப்பட உங்களின் சில நம்பிக்கைகள் காரணம். நக்மா விசயத்தில் மற்றவர்களுக்கு அவர்கள் நம்பிக்கைகள் காரணம் என்பதைச் சொல்லவே.
// ஒரு செய்தி (ஜாக்சன்)உங்களுக்கு முக்கியமாகப்பட உங்களின் சில நம்பிக்கைகள் காரணம். நக்மா விசயத்தில் மற்றவர்களுக்கு அவர்கள் நம்பிக்கைகள் காரணம் என்பதைச் சொல்லவே.//
நக்மாவும், ஜாக்ஸனும் ஒரே விகிதத்தில் அனைவராலும் அறிந்திருக்கப்பட வேண்டும். இல்லையென்றால், உங்கள் தனிப்பட்ட நம்பிக்கையால், நீங்கள் ஜாக்ஸனை தெரிந்து வைத்திருக்கிறீர்கள். உங்கள் நம்பிக்கைக்குள் நக்மா இல்லையென்பதால், அவரைப் பற்றி நீங்கள் எழூதவில்லை என்கிறீர்கள்.
Great.
இந்த விதமான வாதத்தை கல்வெட்டு முன்வைப்பார் என்பதை இப்பொழுது தான் புரிந்து கொண்டேன்.
ஜாக்ஸன், பீட்டில்ஸ், காட் ஸ்டீவன்ஸ், போன்றவர்களின் celebrity status அளவிற்கு நக்மாவின் celebrity status இருக்கிறது என்பதை நக்மாவின் hard core fans கூட நம்ப மாட்டார்கள். ஆனால், கல்வெட்டு அவ்வாறு நம்புகிறார்.
முப்பது வருடங்களுக்கும் மேலாக, பாடல்களைப் பாடியவர்கள் அல்லது பாடிக்கொண்டிருப்பவர்கள் இவர்கள். இவர்கள் இருந்தாலும் சரி, இல்லையென்றாலும் சரி, அவர்கள் பாடிய பாடல்கள் ஒலித்துக் கொண்டே இருக்கும்.
நக்மா திரையை விட்டு விலகியதும், அந்த இடத்தை வேறொரு நக்மா வந்து எடுத்துக் கொள்வார். நினைவில் வைத்துக் கொள்ளுமளவுக்கு எந்த ஒரு performanceஐயும் அவர் கொடுத்திருக்கவில்லை. அவருடைய பிரபலத்தின் ஆயுள், அவருடைய மார்க்கெட் சரிந்ததுமே போய்விட்டது. அவர் செய்த non-descriptive rolesஐத் தொடர்ந்து செய்ய, வேறு வேறு பெண்கள் வந்து கொண்டே இருக்கிறார்கள். இருப்பார்கள். இவர்களில் எவரும் தனித்து நிற்கப் போவதில்லை.
இத்தகைய நக்மாக்களை பீட்டீல்ஸ், காட் ஸ்டீவன்ஸ், மைக்கெல் ஜாக்ஸன் அளவிற்குத் தெரிந்து வைக்காததற்கு, எனது நம்பிக்கைகள் தான் காரணம் என்று சொன்னால், அதைவிட நகைச்சுவை வேறெதுவுமில்லை.
நடிகைகளைப் follow-up பண்ணும் வயதைத் தாண்டி,இருபது வருடங்களுக்கும் மேலாகிவிட்டது, கல்வெட்டு. அதாவது நான் கல்லூரியை விட்டு வெளிவந்து. நடிகைகளைப் பற்றிய பேச்சுகளில் நான் எங்கும் கலந்து கொண்டதுமில்லை. பேசியதுமில்லை.
ஆனால், இன்றும் மாதாமாதம், இசைத்தட்டுகளை வாங்கிக் கொண்டு தான் இருக்கிறேன். ஒரு காலத்தில் இசைத்தட்டுகளை வாங்க இயலாத சூழலில், தவறவிட்ட கலைஞர்களையெல்லாம் இப்பொழுது தேடித்தேடி வாங்கிக் கொண்டிருக்கிறேன். அத்துடன், புதியவர்களையும்.
தயவு செய்து, என் ரசனையை மட்டப்படுத்தாதீர்கள். நடிகைகளை நான் எடை குறைத்து மதிப்பிடுவதாக நினைக்க வேண்டாம். இத்தகைய நடிகைகளின் பெயர் சொல்லி வாங்கிச் சேர்க்குமளவுக்கு எதுவுமில்லை. அதனால் அவர்கள் இருக்கிறார்களா இல்லையா என்பதை நினைத்துக் கொண்டிருப்பதில்லை. அவ்வளவு தான்.
இந்த follow up லிஸ்டில், பிரபலங்கள் இந்த ஒன்றிலிருந்து மற்றதற்கு மாறிய வகையில் எனக்குத் தெரிந்து, Richard Gereயும் உண்டு. புத்தத்திற்கு மாறிய அவரைக் குறித்தும் எழுதியிருப்பேன். ஆனால், பெருமைப்படத் தக்க சமூகத்திற்குகந்த எதையும் செய்துவிடவில்லை - ஒரு எய்ட்ஸ் விழுப்புணர்வு மேடையில், ஷில்பா ஷெட்டியை முத்தமிட்டதைத் தவிர. இதை ஒரு உதாரணமாக எழுதச் சொல்கிறீர்களா? அதை எழுதியிருந்தால், புத்த மதத்திற்கு அதைவிட ஒரு பெரிய disservice வேறெதுவும் இருக்க முடியாது.
மனிதன் வளர வளர, அவனுடன் அவனது ரசனையும் வளரும். வளரவேண்டும். It should not get stuck with the hips of the girls.
Thanks.
நண்பன்,
//Great.
இந்த விதமான வாதத்தை கல்வெட்டு முன்வைப்பார் என்பதை இப்பொழுது தான் புரிந்து கொண்டேன். //
ஒன்றைச் சொல்லிவிட்டு , இப்படித்தான் வாசிக்க வேண்டும். வார்த்தைகளுக்கு இடையே அர்த்தம் தேடாதீர்கள் என்றெல்லாம் சொல்லமாட்டேன். எனவே எப்படியும் புரிந்து கொள்ளலாம்.
**
இரசனை குறித்து...
//தயவு செய்து, என் ரசனையை மட்டப்படுத்தாதீர்கள். //
உங்கள் இரசனையை நான் மட்டப்படுத்துவதாகச் சொல்வது நகைப்பிற்கு உரியது.
தான் செய்வது உயர்ந்தது என்னை குறைத்துச் சொல்லாதே என்று உங்களைச் சொல்ல வைப்பது எது?
//
நடிகைகளைப் பற்றிய பேச்சுகளில் நான் எங்கும் கலந்து கொண்டதுமில்லை. பேசியதுமில்லை.
ஆனால், இன்றும் மாதாமாதம், இசைத்தட்டுகளை வாங்கிக் கொண்டு தான் இருக்கிறேன்//
கலை சம்பந்தமான இரசனைகளில் உயர்ந்தது தாழ்ந்தது என்று ஏதும் இல்லை. தெருவில் கரகாட்டம் ஆடும் பெண்ணை இரசிப்பதும் சபாவில் பரதம் ஆடும் பெண்ணை இரசிப்பதும் வாய்ப்பு,வாழ்க்கை முறை சார்ந்தது. ஒன்றைவிட ஒன்று உயர்ந்ததும் இல்லை தாழ்ந்ததும் இல்லை.
***
//மனிதன் வளர வளர, அவனுடன் அவனது ரசனையும் வளரும். வளரவேண்டும். It should not get stuck with the hips of the girls.//
மனிதன் வளர வளர அவனின் மதம் சம்பந்தமான புரிதல்கள் மாறவேண்டும். It should not get stuck with a book or single man's philosophy. If you stuck there then it is called belief. It can not grow like you said in your own words மனிதன் வளர வளர ...
***
கேட்ட நேரடிக் கேள்விகளுக்கு இதுவரை பதில் இல்லை.
நீங்கள் மட்டும் அல்ல எந்த ஒரு மதத்தைச் சார்ந்தவராலும்
Don’t get carried away by anything என்பதில் மதமும்/அந்த மதம் காட்டும் கடவுளையும் சேர்த்துப் பார்க்க முடியாது. சும்மா எழுத வேண்டுமானல் முடியும்.
உண்மையிலேயே நீங்கள் அப்படி இருந்தால் எந்த ஒரு மதத்தையும் சாராத ஒரு மனிதனாக இருப்பீர்கள்.
##################################
உங்களால் முடிந்தால் இதற்கு பதில் சொல்லலாம். இல்லையென்றால் பாதகம் ஒன்றும் இல்லை.
------
* தனி மனித நற்பண்புகளுக்கும் மதம் காரணம் அல்ல.
* தனி மனித தீயகுணக்களுக்கும் மதம் காரணம் அல்ல.
*ஒன்றுக்கு (நல்லது) மதம் காரணம் என்றால் மற்ற ஒன்றுக்கும்(கெட்டது) அதேதான் பொறுப்பு ஏற்கவேண்டும்.
சரியா தவறா?
######################
// இது போன்ற (விதண்டா) வாதங்களை நான் பதிவுலகில் தினசரி பார்த்து வருகிறேன். சட்டக் கல்லூரி வன்முறையைக் கண்டித்தால் கீழ் வெண்மணியை ஏன் கண்டிக்கவில்லை என்று கேட்பது, கருணாநிதி ஆட்சியைக் குறை கூறினால் ஜெயலலிதா ஆட்சியை ஏன் குறை கூறவில்லை என்று கேள்வி எழுப்புவது, தற்போதைய காங்கிரஸ் ஆட்சியை விமர்சித்து எழுதினால் சென்ற பா.ஜ.க ஆட்சியின் போது தூங்கிக் கொண்டிருந்தாயா என்று சாடுவது. இது போன்ற எல்லா விவாதத்துக்கும் சாதி/மதப் பூச்சு வேறு!
அரசியல் மட்டுமல்ல. அனைத்து தளத்திலும் இதே வாதம் தான். நடிகர் விஜய்யை விமர்சனம் செய்யும் ஒரு பதிவில் ரஜினியை ஏன் விமர்சனம் செய்யவில்லை என்ற கேள்வி எழுகிறது. சரியென்று ரஜினியையும் விமர்சனம் செய்தால் எம்.ஜி.ஆர் மட்டும் என்ன புனிதமா என்ற கேள்வி மற்றொரு பக்கமிருந்து. எம்.ஜி.ஆரை பற்றியும் எழுதி விட்டால் பிரச்சனை தீர்ந்து விடுமா என்றால் அதுவும் கிடையாது, எம்.ஆர்.இராதா பற்றியும் எழுதினாலே ஆயிற்று என்றொரு கூட்டம். ஆக ஒரு சினிமா விமர்சனத்தை அரசியலாக மாற்றியாகி விட்டது.//
நன்றி:: மணி(யின்) ஓசை
http://manioosai.blogspot.com/2008/11/blog-post.html
அன்பின் கல்வெட்டு,
// கலை சம்பந்தமான இரசனைகளில் உயர்ந்தது தாழ்ந்தது என்று ஏதும் இல்லை. தெருவில் கரகாட்டம் ஆடும் பெண்ணை இரசிப்பதும் சபாவில் பரதம் ஆடும் பெண்ணை இரசிப்பதும் வாய்ப்பு,வாழ்க்கை முறை சார்ந்தது. ஒன்றைவிட ஒன்று உயர்ந்ததும் இல்லை தாழ்ந்ததும் இல்லை.
உங்கள் இரசனையை நான் மட்டப்படுத்துவதாகச் சொல்வது நகைப்பிற்கு உரியது.
தான் செய்வது உயர்ந்தது என்னை குறைத்துச் சொல்லாதே என்று உங்களைச் சொல்ல வைப்பது எது? //
என்ற உங்களின் இந்தக் கேள்விக்கு நான் ஏற்கனவே இவ்வாறு பதில் சொல்லிவிட்டேன்.
// நக்மா திரையை விட்டு விலகியதும், அந்த இடத்தை வேறொரு நக்மா வந்து எடுத்துக் கொள்வார். நினைவில் வைத்துக் கொள்ளுமளவுக்கு எந்த ஒரு performanceஐயும் அவர் கொடுத்திருக்கவில்லை. அவருடைய பிரபலத்தின் ஆயுள், அவருடைய மார்க்கெட் சரிந்ததுமே போய்விட்டது. அவர் செய்த non-descriptive rolesஐத் தொடர்ந்து செய்ய, வேறு வேறு பெண்கள் வந்து கொண்டே இருக்கிறார்கள். இருப்பார்கள். இவர்களில் எவரும் தனித்து நிற்கப் போவதில்லை. //
An appreciation of the art arises from the “performance” and not from the “person”. ஒரு பெண் தெருவில் ஆடுகிறாளா, அல்லது அரங்கில் ஆடுகிறாளா என்பதல்ல அளவுகோல். இதைத் தான் நான் குறிப்பிட்டேன் – அவர் எந்த ஒரு performanceஐயும் தந்திருக்கவில்லை. அவர் செய்ததெல்லாம் non-descriptive roles என்று.
இதையெல்லாம் வசதியாக மறந்து விட்டு, மேல்தட்டு, கீழ்தட்டு என நீங்களாக தொடர்ந்து எழுதிக் கொண்டிருக்கிறீர்கள்.
எந்த ஒரு performanceஐயும் தரவேண்டிய அவசியமில்லை. ஒரு நடிகை, ஒரு ஆட்டக்காரி என்று சொல்லிக் கொண்டு வந்துவிட்டாலே அந்தப் பெண்ணை ரசித்தே தீர வேண்டும். அதுவே நல்ல ரசனை. இல்லையென்றால், உங்களை மேல்தட்டு, கீழ்தட்டு என்ற எல்லைக்குள் கொண்டு போய் நிறுத்தி விடுவேன் என்பது சற்றும் எதிர்பாராதது. திறமை என்பதை விடவும், ஒரு பெண் என்பதே போதும் ரசிப்பதற்கு என்பது உங்கள் பார்வையில் உயர்ந்த ரசனையாக இருக்கலாம். நான் அதை மறுக்கவில்லை. ஆனால், அதையே ரசனை என்று தட்டையாகச் சொல்லி, வர்க்கங்களை உண்டாக்காதீர்கள்.
உங்கள் ரசனையை நான் விமர்சிக்கப் போவதில்லை.
நக்மாவின் ‘திறமை’ மைக்கெல் ஜாக்ஸன், பீட்டில்ஸ் இவர்களைப் போன்றது – அவர்களைக் கவனித்தது போல இவர்களைக் கவனிக்காததற்கு, உனது மதம் தான் காரணம் என்று தான் நீங்கள் என்னைப் பார்ப்பேன் என்றீர்கள் என்றால், அது உங்கள் பார்வையே தவிர, எனதல்ல.
பீட்டில்ஸ் எனது மதமல்ல. ஆனால் அவர்கள் இசை என்னைப் பொறுத்தவரைக்கும் தனித்துவம் வாய்ந்தது. அவர்களது ஆல்பங்களை – அது எத்தனை பெயரில் வந்தாலும் நான் வாங்கத் தான் செய்வேன். நக்மாவின் ஆடல்களைத் தொகுத்து இலவசமாகவே தந்தாலும் அதை வாங்கப் போவதில்லை.
இதை சிறப்பாக விளக்க மணி(யின்) ஓசை என்ற பதிவில் காணப்பட்ட சில வரிகளே போதுமென்று நினைக்கிறேன். அதில் வேறு எதுவும் உள்நோக்கமில்லை.
நக்மாவை ரசிக்கத் தெரியாத உன் ரசனையெல்லாம் ஒரு ரசனையா என்று நகைத்து விட்டுப் போங்கள். அதில் நான் வெட்கப்படுவதற்கு ஏதுமில்லை. ஏனென்றால், அவர் பசி ‘ஷோபா’ போன்று ஒரு நடிப்பையோ, அல்லது நந்திதா தாஸ், சீமா பிஸ்வாஸ் போன்ற ஒரு நடிப்பையோ ஒரு போதும் தரமுடியாதவர். ஷப்னா அஸ்மியையும் சொல்ல விரும்புகிறேன். ஆனால், அவரையும் நீங்கள் எனது மதம் சார்ந்தவராகப் பார்த்து, அதனால் அவரை உயர்ந்தவர் என சொல்கிறாய் என்று சொல்லிவிடுவீர்கள் என்ற அச்சத்தினால், அவரைத் தவிர்த்து விட்டேன்.
நக்மா பற்றிய விவாதத்தை இத்துடன் முடித்துக் கொள்ளலாம்.
மற்ற விஷயங்களை விவாதிக்கலாம்.
நண்பன்.நல்ல ஒரு கட்டுரை. உலகம் முழுவதும் இஸ்லாமியர்களை தீவிரவாதி என்ற கண்ணோட்டத்திலேயே பர்ப்பது கண்டிக்கத்தக்கது தான். ஆனால் அதற்கு முழுக்க முழுக்க காரணம் ஊடகங்களும், இஸ்லாமிய எதிர்ப்பாளர்களும் மட்டும் தான் என்று நினைக்கிறீர்களா?!
என்னுடைய நெருங்கிய நண்பர்கள் அனைவருமே இஸ்லாமியர்கள் தான். இந்தியா - பாகிஸ்தான் கிரிக்கெட்டில் இந்தியாவை சப்போர்ட் செய்தால் தான் இந்திய குடிமகன் என்பதில் ஆரம்பித்து, நேற்றைய மும்பை கலவரத்தின் போது மறைந்தவர்களுக்காக சிறப்பு தொழுகை நடத்தியது வரை அவர்களை நான் நன்கு அறிவேன். சுனாமியின் போது எத்தனை பேர் ஜாதி மதம் பார்க்காமல் உதவிக்கரம் நீட்டினார்கள்?!
ஆனால்.. ஆனால்... என்னுடைய மற்றொரு நண்பன் (இஸ்லாமியர் அல்ல) கூறியது போல, "தமிழ் (தமிழக) முஸ்லீம்கள் (மட்டும் தான்) நல்லவங்க" என்ற கருத்து தான் ரொம்பப் பேரிடம் இருக்கிறது என்பதை அறிவீர்களா?
நம் தமிழ் வலைப்பூக்களையே எடுத்துக் கொள்ளுங்கள். மும்பை கலவரத்தைக் கண்டு "ஐயையோ இப்படி நடந்த்து விட்டதே" என்று கவலை கொண்டு பதிவிட்டவர்கள் எத்தனை பேர்? அவசரகோலமாக 'மாலேகான் விசாரணையின் காரணமாக' சங்பரிவார் - பிஜேபி தான் இந்த தாக்குதலை நிகழ்த்தியிருக்கும் என்று அவசர அவசரமாக எத்தனை பேர் எழுதினார்கள்? இதே ரீதியில் பார்க்கப் போனால், 'இஸ்லாமிய தீவிரவாதம்' என்று ஊடகங்கள் வாய் திறக்கின்றன என்று குற்றம்சாட்டும் தார்மீக உரிமையைக் கூட இழந்து விடுகிறோம் என்ற அடிப்படை விஷயத்தைக் கூட மறந்து விட்டார்கள் பாருங்கள்.
மறைந்த மாவீரனின் தந்தை தனது மகனின் இறப்பை அலட்சியம் செய்த ஒரு மாநில முதலமைச்சரை திட்டுகிறார். 'அவரோட பையன் சாகலைன்னா ஒரு நாய் கூட அவரோட வீட்டுக்கு போயிருக்காது' என்று அந்த முதலமைச்சர் கூறுவதைக் கூட சப்பைக்கட்டு கட்ட முடிகிறது ஒரு சில ஆசாமிகளால். நான் கூட முதலில் அந்த முதலமைச்சரும் ஏதோ பதில் கோபத்தில் பிதற்றியிருக்கிறார் என்று நினைத்தேன். ஆனால் அவருக்கு மதானியோடு தொடர்பு உண்டு என்றெல்லாம் ஒருவன் எழுதிய பிறகு கோபம் தான் வந்தது.
மனசாட்சியை தொட்டுச் சொல்லுங்கள். உங்களைப் போல நிதானமாக சிந்திப்பவர்கள் எத்தனை பேர் இருக்கிறார்கள்?
மாலேகான் விசாரணையின் போது எத்தனை எத்தனை பதிவுகள் வந்தன? அவற்றை எழுதிய பதிவர்களெல்லாம் எங்கே இப்போது?
என்ன சொல்ல வருகிறேன் என்றால், அவர்கள் அப்படித் தான். அவர்களைத் திருத்த முடியாது. (இரண்டு பக்கமும் தான் சொல்கிறேன்). அவர்களுக்கு அட்வைஸிப்பதை விட்டு விட்டு நம்மால் முடிந்ததைச் செய்வோம்.
**
நீங்கள் சொன்னது...
"...தயவு செய்து, என் ரசனையை மட்டப்படுத்தாதீர்கள். ..."
பதிலாக நான் சொன்னது ..
"....கலை சம்பந்தமான இரசனைகளில் உயர்ந்தது தாழ்ந்தது என்று ஏதும் இல்லை. தெருவில் கரகாட்டம் ஆடும் பெண்ணை இரசிப்பதும் சபாவில் பரதம் ஆடும் பெண்ணை இரசிப்பதும் வாய்ப்பு,வாழ்க்கை முறை சார்ந்தது. ஒன்றைவிட ஒன்று உயர்ந்ததும் இல்லை தாழ்ந்ததும் இல்லை.
நீங்கள் சொல்வது....
"...ஒரு பெண் என்பதே போதும் ரசிப்பதற்கு என்பது உங்கள் பார்வையில் உயர்ந்த ரசனையாக இருக்கலாம். நான் அதை மறுக்கவில்லை...."
"...நக்மாவை ரசிக்கத் தெரியாத உன் ரசனையெல்லாம் ஒரு ரசனையா என்று நகைத்து விட்டுப் போங்கள்...."
****
நான் நக்மாவின் இரசிகன் என்று சொல்லவே இல்லை. நக்மாவை ஒரு கூட்டம் கொண்டாடுகிறது என்றே சொன்னேன்.
இரசனைகளில் எனக்கு உயர்வு தாழ்வு இல்லை என்று சொல்ல கரகாட்டம்,பரதம் பற்றிச் சொன்னேன்.
***************
//இது போன்ற (விதண்டா) வாதங்களை நான் பதிவுலகில் தினசரி பார்த்து வருகிறேன். //
இது எனக்காகச் சொன்னதா???
நான் செய்வது விதண்டவாதமாகப்பட்டால் தயவு செய்து பதில் ஏதும் சொல்ல வேண்டாம். நானே எனது விதண்டவாதங்களை அழித்துவிடலாம். ஆனால் நான் விதண்டவாதம் செய்தேன் என்று நீங்கள் சொல்வதை உறுதிப்படுத்த,எனக்கு எப்போதும் நினைவில் வைத்துக் கொள்ள, எனக்கு எச்சரிக்கையாக எனது பின்னூட்டங்கள் இருக்கட்டும்.
***
உரையாடலாக இருக்க வேண்டும் என்று விரும்பினேன்.
நீங்கள் பதிவுலகில் பார்த்து வரும் பல விதண்டவாதங்களில் என்னுடையதும் ஒன்றாக இருந்துவிட்டுப் போகட்டும்.
**
மதத்தை பின்பற்றும் யாருடைய பதிவிலும் நேரடியாகச் சென்று மதம் சார்ந்த அவர்களின் நம்பிகைகள் குறித்து உரையாடுவது இல்லை நான்.
***
தீவிரவாதத்திற்கும் மதத்திற்கும் சம்பந்தம் இல்லை என்ற தொனியில்
".....தீவிரவாதம் குறித்த பார்வையில் மாற்றம் வேண்டும். ஒரு மதத்துடன் அதை இணைப்பதினால், தீவிரவாத ஒழிப்பு என்ற பாதையை விட்டுவிலகி மததுவேஷம் என்ற பாதையிலே மட்டும் தான் பயணம் செய்வோம். தீவிரவாதத்தை GOOD Vs EVIL என்ற பார்வையைக் கொண்டு மட்டுமே பார்க்க வேண்டும்.... "
நீங்கள் சொன்னதலாயே நான் இங்கு உரையாட நேர்ந்தது.
GOOD க்கு காரணமான ஒரு மதம் EVIL க்கும் காரணம் என்று சொல்ல நேர்ந்தது.
***
இறுதியாக நீங்கள் சொல்லியது....
மற்ற விஷயங்களை விவாதிக்கலாம்.
**
நான் பேசுவதே விதண்டவாதம் என்று சொல்லிக்காட்ட ஏதோ ஒரு சுட்டியைக் கொடுத்துவிட்டீர்கள். மேலும் வாதம் செய்வோம் என்கிறீர்கள்.
விவாதம் என்பது, "தான் சரியென்று நம்புவதை அடுத்தவனை ஏற்றுக் கொள்ளவைக்கும் முயற்சி".
உரையாடல் என்பது, தனது நிலையை மட்டும் சொல்லிவிட்டு அடுத்தவர் பேசுவதைக் கேட்பது. தெரியாதவற்றை நேரடிக் கேள்விகள் மூலம் கேட்டு பதில் பெற்று , எந்த நிர்ப்பந்தமும் இல்லாமல் மேலும் உரையாடலை வளர்ப்பது.
***
இடமளித்து நேரம் ஒதுக்கியமைக்கு நன்றி!
பிரிதொரு நாள் சந்திக்கலாம்.
நான் கேட்ட மதம் சார்ந்த கேள்விளுக்கு நீங்கள் பதில் சொல்ல விருப்பம் இருந்தும் நான் கேட்கவில்லை. மேலும் விதண்டவாதங்கள் செய்தும் உங்களின் இரசனையைக் குறைத்து மதிப்பிடவும் செய்துவிட்டேன். விதண்டவாதம் செய்து விலகிவிட்டேன். நானே காரணம்.
ப்ரியங்களுடன்...
ஒரு பெண் என்பதே போதும் ரசிப்பதற்கு என்பதும், அதுவே உயர்ந்த ரசனை என்பதும், மேலும் அதையே ரசனை என்று தட்டையாகச் சொல்லி, வர்க்கங்களை உண்டாக்கும்
கல்வெட்டு.
தமிழக முஸ்லிம்கள் மட்டும் தான் நல்லவர்கள் – இது பார்த்து பழக வாய்ப்பு கிடைப்பதால் ஏற்படும் உணர்வு என்றே தோன்றுகிறது.
ஒருமுறை லண்டனில் ஒரு ஓட்டெடுப்பு எடுத்த பொழுது, மக்கள் சொன்னார்கள், நாங்கள் நேரிலே பார்த்த முஸ்லிம்கள் எல்லாம் நல்லவர்கள் – ஆனால், தொலைகாட்சியில் காட்டப்படும் இஸ்லாமியர்கள் எல்லாம் கெட்டவர்கள் என்றார்கள். This is the prejudice created against a particular people by the media. அதே மீடியாவின் பண்புகள் ஒவ்வொருத்தருக்குள்ளும் இருக்கத் தான் செய்கிறது.
மீடியா மட்டுமே காரணமல்ல என்பது ஒரு அளவிற்கு உண்மையாக இருக்கலாம். ஆனால், செய்திகளைத் திரிப்பது என்பதில் அதற்குரிய பங்கை மறுக்க முடியாது. ஊடகங்களின் செயல்பாட்டைப் பற்றி, நோம் சோம்ஸ்கி முன்வைத்த கருத்துகளைக் குறித்து ஏற்கனவே நான் எழுதியிருக்கிறேன். ஊடகங்கள் எப்பொழுதுமே சில சார்பு நிலைகளை எடுத்தே எழுதி வருகின்றன. அது தன் நலன்களை முன்வைப்பதில், காரணங்கள் இருக்கின்றன.
ஆனால், பிளாக்கர்களுக்கு அத்தகைய நிர்ப்பந்தங்கள் இல்லை. அவர்கள் முன் வைக்கும் சார்பு நிலை – அதன் நலன் முழுவதும் அவர்களுடைய சொந்த விருப்பு வெறுப்பு பேரிலே தான் வருகின்றன. தன் சொந்த விருப்பு வெறுப்புகளைத் தவிர்த்த ஒரு நிலையை எத்தனை பேரால் எடுக்க முடியும் என்பது கேள்வியே. இந்த நிலையில், ஒவ்வொருவரும் தாங்கள் சார்ந்திருக்கும் அரசியல் சார்ந்து தங்களுடைய தியரிகளை முன் வைக்கின்றனர். நான் தேர்ந்தெடுத்து பேசியவர்கள் அனைவரும் நன்கு அறியப்பட்டவர்கள். ஆனால், பலர், தங்கள் அடையாளங்களை வேண்டுமென்றே மாற்றித் தோற்றம் தரும் வகையில் அமைத்துக் கொண்டு, ஆதரவு குரல் போன்று விஷமங்களைப் பரப்புகின்றனர். படிப்பவர்கள் தான் யாரைப் படிக்க வேண்டும், யாரைப் படிக்கக் கூடாது என்ற நிலையையும், எவருடைய கருத்துகளை எடுத்துக் கொள்ள வேண்டும், எவரை எடுத்துக் கொள்ளக் கூடாது என்ற புரிதலையும் வரவழைத்துக் கொள்ள வேண்டும்.
நன்கு அறியப்பட்ட பதிவர்கள், அவர்கள் அடையாளத்துடன் எழுதியவற்றைப் பாத்தாலே தெரியும் – எந்த வகை நியாயத்துடன் எழுதுகிறார்கள் என்று. இந்த வகையில், சில அறியப்பட்ட பதிவர்கள் தங்கள் நம்புபவற்றைப் பற்றி எழுதுவதை, அது அவர்களுடைய கருத்து என்ற வகையில் ஏற்பதோ, மறுப்பதோ வாசிப்பவரின் மனநிலையை ஒத்தது. ஆக, வாசிப்பவருக்கும் ஒரு கடமை என்று ஒன்று இருக்கிறது. எப்படி, சில ஊடகச் செய்திகளை நாம் ஏற்பதில்லையோ, அது போலவே இவர்களுடைய நிலைபாட்டை ஏற்பதுவும், மறுப்பதும் அமைகிறது. இதை வைத்துக் கொண்டு ஒட்டுமொத்தமாக அத்தனை பதிவர்களையும் மறுப்பது சரியல்ல என்றே தோன்றுகிறது.
மேலும், இங்கே பதிவர்கள், எந்த ஒரு செய்தியையும் நுணுக்கமாக ஆராயும் வாய்ப்பு அமையப் பெறாதவர்கள். அவர்கள் வைக்கும் ஒவ்வொன்றும் அனுமானமே. அதனாலும், அவை வெறும் கருத்துகள் மட்டுமே. எந்தப் பின்னணி செய்தியுமின்றி, தாங்கள் வாசிப்பதைக் கொண்டு, அனுமானிப்பது ஒன்றே அவர்களால் செய்ய இயலும் பொழுது, தீர்மானமாக இவர்கள் தான் குற்றவாளி என்று எழுத கூடாது. ஏன், எப்படி, எதனால் என்ற கேள்விகளைக் குறித்துப் பேசலாம். ஆனால், இவர்கள் தான் செய்தார்கள் என்ற தீர்விற்கெல்லாம் வந்துவிட முடியாது. கூடாது. சில தியரிகள் பிரமிக்க வைக்கிறது. அதிலும், இஸ்ரேல் தான் இந்தத் தாக்குதல்களைத் தொடுத்தது என்பதெல்லாம், இப்படி கூட யோசிக்க முடியுமா என்று தோன்ற வைக்கிறது.
என்ன ஒன்று என்றால், அரசு எந்திரங்கள் நேர்மையாக செயல்பட வேண்டும். அவர்களும், ஒரு சார்பாக, யார் மீதாவது இந்தக் குற்றத்தைச் சாட்டிவிட்டுப் போய்விடலாம் என்ற நிலைபாட்டை மேற்கொண்டால், அதனால், மேலும் சந்தேகங்களே விளையும். தீவிரவாதத்தை முற்றிலுமாக ஒழிக்க இயலாது. மேலும் இது இருவேறு சமூகங்களுக்கிடையே அவநம்பிக்கைகளை மாத்திரமே விளையச் செய்யும்.
இறுதியாக, எவருக்கும் அறிவுரை கூறுவது வேண்டாம் என்பதை ஏற்கிறேன். ஆனால், தான் எதை வாசிக்க வேண்டும், எதற்கு எதிர்வினை செய்யவேண்டும் என்பது ஒருவரின் தனிப்பட்ட விருப்பமே. சில போலி பதிவர்களின் நிலைபாட்டைக் கொண்டு, பரவலான அறியப்பட்ட பதிவர்களின் நோக்கம் குறித்து ஐயப்பாடு கொள்வது அவசியமற்றது என்று நினைக்கிறேன்.
மாயவரத்தான், நன்றி – ஒரு நல்ல பின்னூட்டத்திற்கு.
கல்வெட்டு,
நான் எழுதியது Trial by media என்பது போய் trial by bloggers என்ற சூழலுக்குத் தள்ளப்பட்டிருக்கிறது என்பதையே.
ஆனால், நாம் இருவரும் பேசியது அதைப் பற்றியதே அல்ல.
அதிலும் நக்மாவையும், பின்னர் கரகாட்டக்காரிகளைப் பற்றியும் பேச்சு திரும்பியதே தேவையற்றதாகப் பட்டது எனக்கு. ஒன்றைப் பற்றித் தெரிந்து கொண்டவர், ஏன் மற்றதைப் பற்றித் தெரிந்து கொள்ளவில்லை என்ற தொனியில் முன்வைக்கப்பட்ட வாதங்கள் தேவையற்றது என்றே தோன்றியது. இந்த நிலையில், மணியின் ஓசை என்ற தளத்தைப் படித்த பொழுது, அங்கு அவரும் இதே நிலையை முன் வைத்திருந்தார். அது நாம் இருவருக்கும் பொருந்தும் என்பதினால் மட்டுமே அங்கு வைத்தேன்.
எழுதியவரே – அது குறித்து சற்றுப் பொறுமையாக, ஒரு பிராக்கெட்டிற்குள் வைத்து தான் எழுதியிருந்தார். அந்த பிராக்கெட்டிற்குள் இருப்பதை நான் எடுத்திருக்கலாம் தான் – ஆனால், அது எனக்குத் தேவையானவற்றை மட்டும் வைத்துக் கொண்டு, மற்றவற்றை மறைத்தது போலாகும் என்பதினால், அதை வெட்டவில்லை. பின்னர் நான் எழுதிய பொழுது, அதில் உள்நோக்கம் எதுவுமில்லை என்பதையும் குறிப்பிட்டிருந்தேன்.
மீண்டும் –
MJவைப் பற்றி நான் தனியாகவே பதிவு எழுதியிருந்தேன் – அங்கேயே மதங்களைப் பற்றிய விவாதத்தைச் செய்திருக்கலாம். ஆனால், இங்கே அதை செய்தது ஏன் என்று எனக்குப் புரியவில்லை. எந்த நோக்கத்தில் ஒரு பதிவு எழுதப்பட்டது என்பதையே இது மூடி மறைத்து விட்டது.
பின்னர் விவாதித்த MJயைப் பற்றிய பதிவுகளும், அது எந்த நோக்கத்தில் எழுதப்பட்டது என்பதை விடுத்து, மதங்களைக் குறித்தானதாக மட்டுமே இருந்தது.
மதங்களைக் குறித்த கசப்புணர்வு உங்களிடத்திலே இருக்கலாம். அது குறித்து நான் பலமுறை விவாதித்து இருக்கிறேன் – வேறு பதிவர்களுடன். இங்கே நீங்கள் குறிப்பிட்டிருக்கும், மதமே அனைத்து இழிவுகளுக்கும் காரணம் என்பதை நான் முற்றிலுமாக மறுக்கிறேன். மதம் என்பது ஓப்பியம் போன்றது என்று சொன்ன கம்யூனிஸ்ட்களால், எந்த சிறந்த ஆட்சியையும் தர முடிந்ததா, இல்லையே? மதங்கள் இல்லாத இடங்கள் எல்லாம் சொர்க்க பூமியாக ஒன்றும் மாறிடவில்லை. அப்படி இருக்கும் பொழுது, மதங்கள் தான் அனைத்து இழிவுகளுக்கும் காரணம் என்று எப்படி சொல்ல முடியும்?
மதம் என்பது ஒரு தனிமனிதனாக அனுசரிக்கும் பொழுது வேறாகவும், ஒரு சமூகமாக அனுஷ்டிக்கும் பொழுது வேறாகவும் இருக்கின்றது. இதுவே அனைத்து தத்துவங்களுக்கும் பொருத்தமாக இருக்கின்றது. ஒருவன் எத்தனை நல்லவனாக இருந்தாலும், ஒரு குழுவாக இணையும் பொழுது, அந்தக் குழுவின் பண்புகளைக் கொண்டே தன்னை நடத்திக் கொள்கிறான். இங்கு மதத்தை விடவும், அவன் இணைந்திருக்கும் குழுவே அவனது பண்புகளைத் தீர்மானிக்கிறது. அந்தக் குழுவே தனது நலன்களை ஒட்டி, பல்வேறு அரசியல் நிலைபாடுகளை மேற்கொள்ள வைக்கிறது. அந்த குழு – தனது நலனாக, ஒரு ஒற்றைப் பண்பைக் கொண்ட ஒரு கூட்டமாக இருக்கக்கூடும், அல்லது, பல பண்புகளையும், ஒரு புள்ளியில் இணைத்த ஒன்றாகவும் இருக்கக் கூடும். இதில் மதம், மொழி, தேசியம் என்ற பலவும் அடங்கும்.
மதங்கள் மட்டும் மோசம் என்று சொன்னால், மொழி, தேசியம் என்பதுவும் மனிதர்களிடையே பகைமை உணர்வையும், மற்றும் மூத்திரச் சந்துகளையும் தோன்றச்செய்யும் வல்லமை கொண்டது தான். இவையெல்லாவற்றையும் விட்டுவிட்டு, மதமாக ஒன்றை மட்டுமே அனைத்து தீயவற்றிற்கும் ஒற்றைக் காரணமாக நீங்கள் சொல்ல முனைந்தால், உங்கள் வாதத்தை நான் இவ்வாறு திருப்பி வைக்க முடியும் – உங்கள் மீது:
// உண்மையிலேயே நீங்கள் அப்படி இருந்தால் எந்த ஒரு மதத்தையும் சாராத ஒரு மனிதனாக இருப்பீர்கள். //
நீங்கள் ஒரு தேசம் சாராதவராக, மொழி சாரதவராக, எந்த ஒரு பண்டிகையும் கொண்டாடதவராக… என்று மனித சமூக வாழ்க்கை அனைத்தையும் முற்றிலும் ஒழித்துக் கட்டிவிட வேண்டிய ஒரு தளத்தில் இருப்பீர்கள். மனித சமூகம் என்ற ஒன்றையே மறுத்து, விலங்குகள் என்ற இனத்தில் ஒன்றாக மட்டுமே இருக்க முனைந்திருப்பீர்கள். ஆடை, மற்றும் சமைத்த உணவுகள் என்ற வகையில் அனைத்தையும் துறந்து, இயற்கையோடு இணைந்து போயிருப்பீர்கள். இந்த வகையில் பேசிக்கொண்டிருப்பீர்கள். மனிதன் என்ற belief இருப்பதினால் மட்டுமே தான் நீங்களும் இயங்கிக் கொண்டிருக்கிறீர்கள். ஆக, எந்த ஒரு தத்துவத்தையும், அதன் தேவையை மீறிய ஒரு தளத்திற்குள் எடுத்து செல்லும் பொழுது, அங்கு மனிதன் என்ற ஒரு நிலைபாடே இருக்க முடியாது. சமூகங்கள் என்ற கட்டமைப்பு இருக்க முடியாது. மனிதன் என்ற intellectural animal ஒன்று இல்லை என்ற நிலைமையை ஏற்றுக் கொண்டிருக்க வேண்டும்.
ஏன் அவ்வாறில்லை? எப்படி அனைத்தையும் சகித்துக் கொண்டு, ஒரு சமூகத்தை கட்டமைக்கிறீர்கள் – மதமாக, மொழியாக, தேசிய இனங்களாக, இறைவனற்ற ஒரு கூட்டமாக, ஒரு cult societyஆக என பல்வேறு நிலைகளில் ஏதாவது ஒன்றில் ஒன்றைத் தேர்ந்தெடுத்து ஏற்றுக் கொள்கிறீர்கள்?
அவ்வாறானவற்றில் ஒன்று தான் மதம். மற்றெல்லாவற்றையும் போல. இறைவனைக் குறித்தான ஒரு அக்கறையைத் தருவதினால், அதுவே ஒரு குறையாகக் கொள்ள முடியாது.
மனிதனின் ஒவ்வொரு செயலையும் இறைவன் தான் தீர்மானிக்க வேண்டுமா? மதங்கள் மூலம் தான் தீர்மானிக்கப்படுமா?
//Islam, ….involves the keen perception that life cannot forever be kept in leading strings; that in order to achieve full self-consciousness man must finally be thrown on his own resources.
(Muhammed and the Quran – Rafiq Zakaria)
வாழ்க்கை எப்பொழுதுமே வழிகாட்டி என்ற தும்பில் கட்டப்பட்டு உழல்வதாக
இருக்க முடியாது. அவன் தனது சுயத்தின் முழுவடிவையும் கண்டுணரும் வகையில் அவன் அவனது அறிவின் ஆதாரங்களுடன் தனித்து விடப்பட வேண்டும். //
இதையும் நான் முன்னரே எழுதிய ஒரு பதிவிலிருந்து தான் எடுத்து எழுதுகிறேன். மதம் என்பது ஒரு குறிப்பிட்ட வழியைத் தான் காட்ட முனையுமே தவிர, தன்னுடன் இணைந்து விட்டதினாலே, அவன் நல்லவன் என்பதற்கும், நல்ல காரியங்களைச் செய்பவனாக மாறிவிடுகிறான் என்பதற்கும் எந்தவித உத்திரவாதமும் கொடுத்து விடுவதில்லை.
நல்லது, கெட்டது இவற்றை உணர்ந்து செயல்பட தூண்டுகிறது என்பதைத் தவிர, மதங்கள், எந்த ஒரு மனிதனின் ‘intellectual capability to analyze and behave’ என்ற நிலைபாட்டிற்குள் செயல்படுவதில்லை.
தன்னுடைய ஆறாவது அறிவைச் செயல்படுத்துவதில், அந்த மனிதன் தான் தீர்மானிக்க வேண்டும் - தான் எத்தகையவனாக வாழ வேண்டும் என்பதை.
// தனி மனித நற்பண்புகளுக்கும் மதம் காரணம் அல்ல.
தனி மனித தீயகுணக்களுக்கும் மதம் காரணம் அல்ல.
...என்று சொல்லலாம். //
இது இப்பொழுது உங்களுக்குத் தெளிவாகியிருக்கும். எந்த ஒரு மதமும், தன்னுள் வந்து இணைந்து கொள்வதினால், நல்லவனாகவோ, கொடியவனாகவோ ஆகிவிடுவாய் என்று சொல்வதில்லை. அதனாலயே, இஸ்லாம் – ஒவ்வொரு மனிதனின் நற்செயலுக்கும், தீச்செயலுக்கும் ஏற்ற வகையில் இறைவன் கூலியைக் கொடுப்பான் என்கிறது. அதாவது, எது நன்மை, எது தீமை என்று தேர்ந்தெடுப்பதில், ஒரு மனிதனே தனது அறிவைக் கொண்டு செயல்பட வேண்டும் என்பதே இஸ்லாத்தின் நிலைபாடு. (probably by all religion – அதானாலே, அவை பாவ புண்ணியங்களைப் பற்றிப் பேசுகின்றன. இறைத்தண்டனை பற்றிப் பேசுகின்றன. ஏதோ, இந்தக் கொள்கையை நீங்களே கண்டுபிடித்த மாதிரி முன்வைக்காதீர்கள்.)
அதே போன்று, இந்த மனிதனின் நற்குணங்கள் / தீக்குணங்கள் என்பதற்கு இந்த உலகின் வேறெந்த தத்துவமும் உரிமை கொண்டாட முடியாது. மதமற்ற வேறெதன் அடிப்படையிலும் அமைக்கப்பெற்ற வேறெந்த சமூக காரணிகளும் உரிமை கொண்டாட முடியாது. அப்படி உரிமை கொண்டாடும் என்று நீங்கள் சொல்வதனால், பின் நீங்கள் எழுதியதை நீங்களே நம்பவில்லையென்றாகிவிடும்.
Islam, ….involves the keen perception that life cannot forever be kept
in leading strings; that in order to achieve full self-consciousness
man must finally be thrown on his own resources – இங்கு இஸ்லாம் என்பதை மாற்றி வேறெந்த மதத்தின் பெயரையும் போட்டுக்கொள்ளலாம். அப்படியானால், மதங்களுக்கென்று எந்த பயன்பாடும் இல்லையா?
மனிதனை நல்வழிப்படுத்த அவை முயற்சிக்கவில்லையா என்ற கேள்வியை அடுத்ததாக தொடங்குவீர்கள் என்பது தெரியும் என்பதால், அதனையும் சொல்லிவிடுகிறேன்.
ஒவ்வொரு மதமும், தன் பார்வையில், எது நல்ல செயல், எது தீய செயல் என்பதையும் சொல்லிவிடுகிறது. தன் சகமனிதனைக் குறித்து, எவ்வாறு நடத்தப்பட வேண்டும் என்பதையும், ஒவ்வொரு சமூகமும் எதன் அடிப்படையில் நிர்மாணிக்கப்படும் என்பதையும் பேசுகிறது.
அந்த வகையில், இஸ்லாம், தன் சமூகத்தைக் கட்டமைக்கும் பொழுது, ஒவ்வொரு சகமனிதனையும் ஒரு சகோதரனைப் போல் என்கிறது. மனிதனுள் ஏற்றத் தாழ்வுகள் கிடையாது என்கிறது. இறைவனின் பார்வையில், அனைவரும் சமம் என்பதை சொல்கிறது. அதையே கிறித்துவமும் முன் வைக்கிறது. ஒரு சமூகமாக ஒரு மத அடிப்படையில் கட்டமைக்கும் வேளையில், அனைவரும் சமம் என்பதை அடிப்படையாகக் கொண்டு, அதன் மீது தான் சமூகம் கட்டமைக்கப்படுகிறது. யூதமும் தன் மத சமூகத்திற்குள் எந்த வேறுபாடுகளையும் கட்டமைக்கவில்லை. இந்து மதம், மனிதர்கள் அனைவரும், ஒரே தரம், ஒரு சகோதரர்கள் என்ற பார்வையை முன்வைக்கவில்லை. அதனால், இங்கு ஏற்றத் தாழ்வுகள் இறைவனின் பெயராலயே ஏற்படுத்தப்படுகின்றன. இப்பொழுது, ஒரு மனிதன் ஒரு மதத்தின் அடிப்படையில் நடந்து கொண்டால், எங்கு போவான் என்பது தெளிவு. மனிதர்களுக்குள் ஏற்றத் தாழ்வு பார்க்கையில், ஒரு இடத்தில் அது தர்மமாகவும், மற்றொரு இடத்தில், அது தீயதாகவும் பார்க்கப்படும். மனிதனை அவனது அறிவைக் கொண்டு செயல்பட அனுமதிக்கும் பொழுது, சில எல்லைகளையும் சொல்லித் தருகிறது. அதன் வழியாக பயனிக்காத பொழுது, அவனது செயல் நல்லது, தீயது என பார்க்கப்படுகிறது. ஆக, நல்லது, தீயது எது என நிர்ணயிப்பதில் மட்டுமே மதம் செயல்படுகிறது. அதை கடைபிடிப்பதில் / நடைமுறைப்படுத்துவதில் மனிதன் தான் செயல்பட வேண்டும்.
நீங்கள் கேட்ட கேள்விக்குப் பதில் சொல்ல பெரிய முயற்சிகள் தேவையில்லை. சொன்னதை சொன்னவாறு வாசித்தால் மட்டுமே போதும். அதை பலமுறை நான் தெளிவாகச் சொல்லிவிட்ட பின்பும், மீண்டும், மீண்டும் பதில் எங்கே என நீங்கள் கேட்பது, புரிந்து கொள்வதில் உள்ள சிரமங்கள் குறித்தானதாக இருக்கலாமே தவிர, நான் பதில் சொல்லவில்லை என்பதனால் அல்ல.
MJ ஒரு நல்ல முஸ்லிமா, இல்லையா, நல்லவரா, கெட்டவரா என்பதைப் பற்றியெல்லாம் பேசத் தேவையாயில்லை. அது அவருடைய தனிப்பட்ட விருப்பம் என்று சொன்னது – நான் மேலே குறிப்பிட்ட ஆங்கில மேற்கோளைக் கொண்டே. ஒருவன் தனது அறிவைப் பயன்படுத்தி, நல்லது, கெட்டது என்பவற்றை அறிந்து கொள்ள வேண்டும் என்பதே இஸ்லாத்தின் நிலைபாடாக இருக்கின்றது.
அந்தப் பதிவில், நான் எழுதியதெல்லாம் –
ஒடுக்கப்பட்ட சமூகங்களிலிருந்து ஒரு மனிதன் வெளியேற விரும்புகிறான்
அவன் எத்தகையவனாக ஒரு மதத்தினுள் வாழ வேண்டும் என்ற நிர்ப்பந்தங்களை விதிக்காதீர்கள்
அவன் நடைமுறையில் பின்பற்றக் கூடிய உதாரண வாழ்க்கையாக இவர்களைப் பாருங்கள்
தீவிரவாதிகளை ஒரு icon ஆக ஏற்றுக் கொள்ளாமல், நல்ல வாழ்க்கை வாழ்ந்த இந்த நபர்களை முன்மாதிரியாகக் கொள்ளுங்கள்.
இவை மட்டும் தான். இவற்றில் எதுவுமே மத சம்பந்தப்பட்டவை அல்ல. ஆனால், இந்த நன்னோக்குகளையெல்லாம் பின் தள்ளிவிட்டு, என்னை ஒரு மதவாதியாக நிலைநிறுத்த நீங்கள் மேற்கொண்ட முயற்சிகள் தவறானவை.
இத்தனை விளக்கத்திற்குப் பின்பும், நான் ஒரு மதவாதி, என்றால், மதங்களைக் குறித்த தவறான புரிதலால், உங்களுக்கு ஏற்படும் எரிச்சல் என்று மட்டுமே எடுத்துக் கொள்ள் முடியுமே தவிர, அறிவுப் பூர்வமாக நீங்கள் செயல்படுகிறீர்கள் என்றல்ல.
Don’t get carried away என்று சொன்ன contextஐக் குறிப்பிடாமல், அதை வைத்துக் கொண்டு பேசுவது எத்தகைய தவறான முன்னுதாரணம்!
நான் அதை எழுதியது – இறைவன் பெயரால், சொல்லப்படும் அனைத்து கற்பிதங்களையும் கேட்டு, தடுமாறாதீர்கள் என்பதற்காகவே. Amusement and play என்ற நூலைப்பற்றி விவரிக்கும் பொழுது, அவற்றில் சில எனக்கு உடன்பாடானதாக இருக்கிறது. சிலவை எனக்கு உடன்பாடில்லை.
// இறைவனை மறக்கச் செய்யும் போதையூட்டும் ஆட்டங்களில், செயல்களில் ஈடுபடாதீர்கள் என்பது ஒன்று தான் எல்லையாகச் சொல்லப்படுகிறது. ஒரு
செயலுக்கு அடிமைப்பட்டுப் போவதைத் தான் இஸ்லாம் கண்டிக்கிறது. அது தான்
எனக்குப் பிடித்தது. Don’t get carried away by anything என்பது தான் பிடித்தது. ஒரு செயலைக் கண்டு பரவசப்பட்டுப் போகாமலும், அதே சமயத்தில் அதை வெறுக்காமலும் பார்க்க முடிகிறது. // என்று எழுதிய பொழுது, அதன் அடிப்படையான காரணம் – ஒரு செயலை ஆராய்ந்து, எதனால் அவ்வாறு சொல்லப்பட்டது என்பதைப் புரிந்து கொண்டு, அதனையொட்டிய முடிவுகளை மேற்கொள்ள வேண்டுமே தவிர, பாரம்பரியமாக, வாய்வழியாக சொல்லிக் கொடுக்கப்பட்ட முன்முடிவுகளைக் கொண்டு தடுமாறிக் கொண்டிருக்கக் கூடாது என்பதைத் தெளிவுபடுத்தவே.
ஒரு சூழலில் நான் எழுதிய ஒரு வாக்கியத்தை அதன் சுற்றுபுற சூழலிலிருந்து உருவியெடுத்துக் கொண்டு வந்து தனிமையில் நிறுத்தி, பின் அதை மற்றொரு சூழலுக்கு நகர்த்துவது, உண்மையிலேயே ஒரு அரசியல் செயல்பாடாக இருக்கிறது.
உரையாடல்கள் உரையாடல்களாக இருக்கட்டும். அரசியலாக மாற வேண்டாம்.
இதைப் புரிந்து கொள்ள முடியாமல், எனது ரசனைகள் வரை கேள்விக்குறியாக்கிவிட்டதில் எந்த நியாயமும் இல்லை.
உரையாடல்கள் என்பது, குறிப்பிட்ட இடத்தில், குறிப்பிட்ட பதிவையொட்டி நடக்க வேண்டும் என்ற எனது எதிர்பார்ப்பே – நான் மேற்கோளாக எடுத்து வைத்த மற்றொரு பதிவரின் எழுத்துகள். அவற்றில் சிலவற்றை நீக்க வேண்டும் என்பது எனக்கு உடன்பாடில்லாததால், அதுவே உங்களது வருத்ததிற்குக் காரணமென்றால், வருத்தமே – மன்னிக்க வேண்டுகிறேன்.
நண்பர், ரொம்ப அருமையான பதிவு. நல்ல நோக்கத்தில் சரியானா கோணத்தில் எழுதியிருக்கிறீர்கள் வாழ்த்துக்கள். கல்வெட்டு -க்கும் உங்களுக்கும் நடக்கும் வாதம் கூட தரம் நிறைந்ததாக இருக்கிறது. அதற்கு இருவருமே காரணம் தான். வலையில் விவாதிப்பவர்கள் பலர் நிதானம் தவறி விடுவார்கள். நீங்கள் இருவரும் அப்படி இல்லை. இன்னும் நிதானமாக படித்து விட்டு மறு படி வருகிறேன். நன்றி -மெச்சு
மிக்க நன்றி, அநாநி.
நாகரீகமாக உரையாடிக் கொள்ள இருவர் வேண்டும்.
அந்த வகையில், இந்த பாராட்டுதலில், பாதி கல்வெட்டுக்கும் சேரும்.
நண்பன்,
மதம், அரசியல், நல்லவை கெட்டவை, கடவுள், அரசியல், சாதி/மத/சமூக அடையாளங்கள்.. அனைத்தும் குறித்தாக நாம் இருவருமே விரிவாக பேசமுடியும்.
உங்களின் பதிலைப் படித்தேன். நேரம் எடுத்து உங்களின் தரப்பை சொன்னமைக்கு நன்றி. பலமுறை உங்களுக்கு பதில் சொல்லும் நோக்கில் விரிவாக(மிக விரிவாக) எழுதி எழுதி ..அழித்துவிட்டேன்.
என்னதான் சுருக்கினாலும் இதுவும் விரிவாகப் போய்விட்டது :-((
***
சாதி/மதம் இல்லாத எனக்கு, அல்லது அதில் இருந்து விடுவித்துக்கொண்ட எனக்கு, அல்லது இடைவிடாமல் விடுவித்துக் கொள்ளும் முயற்சியிலேயே இருக்கும் எனக்கு, நிறைய சந்தோசத்தை தருவதுமாயும் அதே சமயத்தில் பிறருக்கு பயன்படும் வகையிலும், எந்த துன்பத்தையும் விளைவிக்காத, எனக்கான தனி அடையாளங்களை என்னால் உருவாக்கிக் கொள்ளமுடிகிறது.
எந்தக் கட்டுப்பாடும் இல்லாமல் மரங்கள் சூழ்ந்த ஒரு அதியிச நிலப்பரப்பில் தனியனாக நின்று ஆசுவாசப்படுத்திக் கொள்ளமுடிகிறது. அதுவே பிடித்தும் போய்விட்டது. அதேசமயம் எல்லாக் கொண்டாட்டங்களிலும் (பிறரின் மதம் சார்ந்த ஒன்றாக இருந்தாலும்) எந்த மனத்தைடையும் இல்லாமல் கலந்து கொள்ளமுடிகிறது.
தனியாகவோ அல்லது குழுவாகவோ இருந்து, பஜனையும் பூசையும் பிராத்தனையும், புனிதப் புத்தகங்களைப் படிப்பதற்கும் எனக்கு நேரம் இருக்குமானால்... அந்த நேரத்தில், அதற்குப்பதிலாக தெருவில் உள்ள குப்பையைக்கூட்டிச் சுத்தம் செய்யத்தான் நான் போவேன்.
ஓராயிரம் முறையோ மந்திரத்தைச் சொல்வதும் அல்லது அதிகாலையில் எழுந்து அடுத்தவர் எழுதிவைத்தைப்படித்து கூப்பாடுபோடும் சாத்திர/சம்பிரதாய/மதம் வழி கடவுள் ஆராதனைகளைவிட அந்த நேரத்தில் ....தெருக்குப்பையைக் கூட்டிவிட்டு அல்லது தெருக்குழந்தைகளுக்கு எதையாவது செய்து மகிழ்ச்சிப் படுத்திவிட்டு ..அப்படியே ரோட்டோரம் உள்ள டீக்கடையில் டீயடித்துவிட்டு அக்கடா என்று தெருவின் விளக்குக் கம்பத்துக்கு கீழே உட்கார்ந்து உலகை நோக்கும் சுதந்திர நிலைதான் பிடித்து இருக்கிறது.
இதை ஏன் சொல்கிறேன் என்றால், எனக்குத் தேவையான மன நிம்மதியும் , நான் எப்படி நேரத்தைச் செலவிட வேண்டும் என்பதும், எனது அன்றாட வாழ்க்கையும் மதப்புத்தகங்களின் வழிகாட்டுதல் இல்லாமலேயே என்னளவிள் சிறப்பாக நிம்மதியாக உள்ளது என்று சொல்லவே.
மதவழியில் இருந்துகொண்டே இதை வேறுயாராவது செய்யலாம்.ஆனால் மதம் சார்ந்த பிரச்சனை /போட்டி/ சண்டை என்று வரும்போது அவர்களின் சமுதாயப் பார்வை மாறிவிடுகிறது.
நீங்கள் இஸ்லாமியராக இருக்கும் பட்சத்தில் உங்களால் முகமதுவைப் போலவே(சமமாக) புத்தனும் ஒரு சமுதாயப் போராட்டக்காரன்தான் என்றும், இஸ்லாம் காட்டும் அல்லாவைப் போலவே (சமமாக) கருவேலங்காட்டு நொண்டிச் சாமியும் எல்லாம் வல்ல இறைவன்தான் என்று நினைக்கமுடியுமா?
அப்படி நீங்கள் நினைத்துவிட்டால் நீங்கள் இஸ்லாமியர் அல்ல சரியா?
ஏன் நினைக்கவேண்டும் என்று நீங்கள் கேட்கலாம். "எனது தாயைப் போலவே உங்களின் தாயும் உயர்ந்தவர், கடின உழைப்பாளி, குழந்தைகள் நாலம் பேணுவதற்காக தியாகங்களைச் செய்யபவர் என்று என்னால் மனமுவந்து சொல்லமுடியும். ஏன் எனது தாயின் தியாகங்களைவிட உங்களின் தாயாரின் தியாகங்கள் சிறந்தவை என்று சொல்லமுடியும்".
ஒரு குழுவின் கடவுளை (கடவுள் நம்பிக்கியை/புனித புத்தகத்தகத்தை) எனக்குச் சமமாககூட நினைக்காதே , பாராட்டாதே என்று சொல்லும் இஸ்லாத்தின் அடிப்படை நம்பிக்கையின் வெளிப்பாடே உலகில் தற்போது நடக்கும் இஸ்லாமிய அடிப்படைவாத குற்றங்களுக்குக் காரணம்.
***
தனிமனித குணக்களுக்கு(நல்லது/கெட்டது) மதம் காரணமல்ல என்பது நான் கண்டுபிடித்த(invent) ஒன்று அல்ல , மாறாக நான் தெரிந்துக்கொண்ட(discover) ஒன்று அவ்வளவே.
**
என்னால் உங்களின் மதம் சம்பந்தமான எந்த கருத்திலும் அல்லது மதத்தை இணைத்துப் பேசும் எந்த கருத்திலும் உடன்படமுடியவில்லை. கடவுள்/மதம் அனைத்தையுமே புனைவாகப் பார்க்கும் என்னால் நீங்கள் சொல்லும் கடவுள்/மதம் சார்ந்த கருத்துகள் அனைத்தையுமே நிராகரிக்கத்தான் தோன்றுகிறது.
கடவுளும்/மதமும் தனிமனிதனின் சந்தோசத்திற்கும் அவன் சார்ந்த குழுவிற்கும் மகிழ்ச்சியைத்தரலாம். ஆனால், ஒட்டுமொத்த மனித இனத்திற்கு அது கேடுதான் செய்கிறது.
நாடு,மொழி, இன்னபிற அடையாளங்களைவிட கடவுள்/மதம் சம்பந்தமான குழு அடையாளங்களும் அது சார்ந்த அரசியலும் மனித இனத்தைக் கெடுக்கிறது. என்பதே எனது இன்றைய நிலை.
மீண்டும் ஒருமுறை உங்களை வழிமொழிகிறேன் கல்வெட்டு.
Dreaming the Utopian என்று சொல்வார்கள். அது போலவே இருக்கிறது உங்கள் பதிவும். பள்ளிமாணவர்களுக்கு சமுதாய சிந்தனைக் கருத்துகளை உண்டாக்க கட்டுரைப் போட்டி வைப்பார்கள் – நான் நாளை இந்த நாட்டின் பிரதமரானால், என்ன செய்வேன் என்பது போன்று. உடன் அனைவரும் எழுதுவார்கள் – நான் லஞ்சத்தை ஒழித்துக் கட்டி விடுவேன்; வறுமையைப் போக்கி விடுவேன்; சாதிமத பேதங்களை ஒழித்துக் கட்டிவிடுவேன் என்பது போன்று அவரவர் பார்வையில் எது பிரதானமாகத் தோன்றுகிறதோ அதைக் குறிப்பிட்டு கட்டுரை எழுதி வைப்பார்கள். அதில் ஒன்றை சிறப்பானதாகத் தேர்ந்தெடுத்து பரிசளித்து விடுவார்கள். எவரும் அவை யதார்த்தத்தை ஒட்டாத கற்பனைகள் – அவை பரிசளிப்பிற்குகந்தல்ல என்று எவரும் தர்க்கம் செய்வதல்ல. அது போல இது தான் நான் என்று நீங்கள் வரையறுத்ததைக் குறித்து செய்வது தேவையில்லாதது. அந்த வரையறைக்குள் – இது யதார்தத்திற்குட்பட்டது தானா என்ற கேள்வியை எழுப்பாமலே, நீங்கள் சொன்னவற்றை வைத்தே ஏற்றுக்கொள்கிறேன் – சாதி, மதங்களைக் கடந்த நிலையை நீங்கள் அடைந்து விட்டீர்கள் என்பதை. இந்த புரிதலுக்கப்பாற்பட்டே, இனி விவாதிப்போம்.
ஒரு தனிமனிதனாக நான் நல்லவன் என்ற வரையிலான தர்க்கம் என்றால், அது குறித்து ஏற்கனவே பேசிவிட்டோம். ஒரு மனிதன் தன்னளவில் நல்லவனாக இருப்பதற்கும், கெட்டவனாக இருப்பதற்கும் அவன் மட்டுமே காரணம் – அவனது நம்பிக்கைகள் அதில் குறுக்கீடு செய்வதில்லை என்று. ஆக, நீங்கள் குறிப்பிட்ட ‘நான் சாதி/மதம் அற்றவன்’ என்ற நிலைபாடு உங்கள் தனிப்பட்ட விருப்பம் என்ற அளவிலும், அதை நடைமுறைப்படுத்துகிறேன் என்ற அளவிலும் உங்களைப் பாராட்டுகிறேன். ஆனால், அதே வேளையில், இறைவன் மீது நம்பிக்கை வைத்ததினால், உன்னால் அல்லது எவராலும் இப்படியெல்லாம் வாழ முடியாது என்று சொல்வது நீங்கள் சொன்ன அனைத்தையுமே கேள்விக்குள்ளாக்கிவிடுகிறது என்று தான் சொல்வேன்.
Spiritualism is an intense personal experience of one's self with his own beliefs, conviction and finally with the truth he believes. நீங்கள் இப்பொழுது தான் டிஸ்கவர் செய்திருக்கும் விஷயத்தை நான் எப்பொழுதோ உணர்ந்து கொண்டேன். இதில் மதம், நம்பிக்கை எவையும் குறுக்கிடவில்லை.
நீங்கள் இங்கு ஒப்பீடு செய்திருப்பதில் எந்த நியாயமுமில்லை. ‘நான்’ என்ற தனிமனிதனையும், ‘இஸ்லாம்’ என்ற மதத்தையும் ஒப்பீடு செய்கிறீர்கள். இது முற்றிலும் தவறானது. ‘கல்வெட்டு’ என்ற தனிமனிதனை ஒப்பீடு செய்வதாக இருந்தால், ‘நண்பன்’ என்ற தனிமனிதனோடு ஒப்பிடுங்கள். இஸ்லாமை ஒப்பீடு செய்வதாக இருந்தால், இந்து, கிறித்துவம் என்ற மதங்களோடு ஒப்பீடுங்கள். நீங்கள் செய்யும் ஒப்பீடும், நீங்கள் இஸ்லாத்தைக் குறித்து முன்வைக்கும் கருத்துகளும் எத்தனை தவறு என்று தெரிய வரும்.
ஒப்பீடு என்ற எல்லைகளுக்குள் போகமல், இஸ்லாம் மட்டும் நீங்கள் முன் வைத்த கருத்துகளைப் பார்ப்போம்.
// நீங்கள் இஸ்லாமியராக இருக்கும் பட்சத்தில் உங்களால் முகமதுவைப் போலவே(சமமாக) புத்தனும் ஒரு சமுதாயப் போராட்டக்காரன்தான் என்றும், இஸ்லாம் காட்டும் அல்லாவைப் போலவே (சமமாக) கருவேலங்காட்டு நொண்டிச் சாமியும் எல்லாம் வல்ல இறைவன்தான் என்று நினைக்கமுடியுமா? //
இதிலே இரண்டு விஷயங்களைப் பற்றிப் பேசுகிறீர்கள். ஒன்று நபியைப் பற்றியது. மற்றொன்று, இறைவனைப் பற்றியது. இஸ்லாமின் அடிப்படைத் தகுதியும் இந்த இரண்டைப் பற்றியதும் தான்.
முதலில் நபிகளைப் பற்றிப் பேசுவோம். முகமதுவைப் போலவே புத்தனும் ஒரு போராட்டக்காரன் தான் என்று சொல்ல முடியுமா என்று கேட்கிறீர்கள். முதலில், எப்பொழுது இஸ்லாம் இதை இல்லையென்று சொல்லியது என்று உங்களால் சொல்ல முடியுமா? இஸ்லாம் சொல்கிறது – ஒரு லட்சத்து இருபத்து நான்காயிரம் இறைத்தூதர்களை மனிதர்களை நல்வழிப்படுத்த அனுப்பி வைத்தோம் என்று. நீங்கள் இருவரைப் பற்றி மட்டுமே குறிப்பிட்டீர்கள். இஸ்லாம் இன்னமும் கூடுதலாக – 1,23,998 நபிமார்களைப் பற்றியும் பேசுகிறது. அவர்களை மரியாதையுடன் நடத்துமாறும் கோருகிறது. அதனால், இஸ்லாம் மதத்தின் நபிகளைப் போன்றே பிற நபிகள் மீதும் மரியாதையும், அன்பும் நேசமும் வைக்கப்படுகிறது. இதை நீங்கள் மறுக்கலாம். அதற்குக் காரணம் இஸ்லாத்தைப் பற்றி நீங்கள் அறிந்திருக்கவில்லை என்பது தான். எந்த ஒரு இறைத்தூதரைப் பற்றியோ, அல்லது, வழிகாட்டிகளைப் பற்றியோ, அவதூறாகப் பேசுவதை இஸ்லாம் தடை செய்திருக்கிறது. நீங்கள் இன்னும் சற்றே இஸ்லாத்தின் அடிப்படைகளைப் பற்றி அறிந்து கொள்ள வேண்டும். ‘இஸ்லாம் இது தான்’ என கட்டமைக்க படாதபாடுபட்டுக் கொண்டிருக்கும் நபர்கள் சொல்வதைக் கொண்டு, பேசுவது கூடாது. யார் வேண்டுமானாலும், என்ன வேண்டுமானாலும் சொல்லலாம். ஆனால், இஸ்லாம் என்ன பேசுகிறது அதன் ஆதாரக் கருத்துகள் என்ன என்பதைக் குறித்து தான் வாதங்கள் எழுப்பவேண்டுமே தவிர, இவர்கள் இன்ன பேசுகிறார்கள், அதனால், இஸ்லாம் தவறானது என்பது நேர்மையான வாத நியாயங்களுக்குட்பட்டது அல்ல. இஸ்லாம் பேசாத ஒன்றை பேசியதாகக் குறிப்பிடுவது தவறானது.
முகமது நபிகளைப் போன்ற ஒரு வழிகாட்டியே புத்தர் என்பதை ஏற்பதற்கு எந்தவித தயக்கமும் இல்லை. இது குறித்து இஸ்லாம் எந்த மாற்றுக் கருத்தும் கொண்டிருக்கவில்லை.
// இஸ்லாம் காட்டும் அல்லாவைப் போலவே (சமமாக) கருவேலங்காட்டு நொண்டிச் சாமியும் எல்லாம் வல்ல இறைவன்தான் என்று நினைக்கமுடியுமா? //
முதலில் சில அடிப்படையான விஷயங்களைப் பற்றித் தெளிவு படுத்தி விடுவோம். அல்லாஹ் என்பது அரபு மொழியில் – கடவுள், இறைவன் என்ற சொற்களுக்கு இணையான ஒரு பதம். அரபு மொழி தெரிந்தவர்கள் – அதில் பரிச்சயம் உள்ளவர்கள் ‘அல்லாஹ்’ என்கின்றனர். தமிழ் மொழி அறிந்தவர்கள் – கடவுள், இறைவன் என்கின்றனர். ஆங்கிலம் தெரிந்தவர்கள் – God என்கின்றனர். ஆக, அல்லாஹ், கடவுள், God என்பதெல்லாம் ஒவ்வொரு மொழியின் vocabulary. அந்த வார்த்தை எவ்வித பண்புகளையும் குறிப்பிடவில்லை. இஸ்லாத்தின் வழி இறைவனின் பண்பாக அந்த வார்த்தையின் மீது ஏதும் ஏற்றிக் குறிப்பிடப்படவில்லை.
எப்படி ஒரு மொழியின் கலைச்சொற்களைக் கொண்டு, இறைவனை அளவெடுக்க முயல்கிறீர்கள்? Oh God, கடவுளே, யா அல்லாஹ் எல்லாம் பொதுவான ஒரு இறைவனைக் குறித்தான விளிச்சொற்கள் மட்டுமே. ஆனால், கருவேலங்காட்டு நொண்டிச் சாமி ஒரு கலைச் சொல் அல்ல. இந்த இரண்டையிம் ஒப்பிட்டு சமம் என்று நினைக்க முடியுமா, முடியாதா என்பது இப்பொழுது உங்களுக்குத் தெளிவாகியிருக்கும்!
என்றாலும், நீங்கள் பேசும் context எனக்குப் புரிகிறது. இஸ்லாம் இறைவன் என்று கற்பித்துத் தரும் ‘இறை’யின் மீது நீங்கள் கொண்டிருக்கும் பக்திக்கு சமமாக, பிற மதங்கள் கற்பித்துத் தரும் ‘இறை’யை இஸ்லாமியர்கள் ஏன் ஏற்றுக் கொள்வதில்லை என்ற கேள்வியைத் தான் கேட்டதாக நினைக்கிறேன். I mean, you are talking about the concept of God, not the vocabulary of a language. சரிதானே?
ஆக, நாம் விவாதிக்க வேண்டியது - இறைக் கொள்கையை.
முதலில், இஸ்லாம் சொல்வது, there is no god, but god, அதாவது, இறைவனைத் தவிர வேறு இறைவன் கிடையாது என்று. இது பலருக்கு இன்னமும் பிடிபடாத தத்துவமாகத் தான் இருக்கின்றது.
மதம் என்ற எல்லைக்குள் போகாமலே, இந்த இறைவனின் ஏகத்துவம் எப்படி விளக்கப்படுகிறது – அதன் பண்புகள் என்ன என்று பார்த்துவிடுவோம். இவ்வுலகில் இறைவனைத் தவிர வேறு இறைவன் இல்லை என்று சொல்லும் பொழுது இறைவனின் ஒருமை – ஏகத்துவம் – monotheism பேசும் இறைவனின் பண்புகள் –
Theists believe that reality's ultimate principle is God — an omnipotent, omniscient, goodness that is the creative ground of everything other than itself. Monotheism is the view that there is only one such God. God's knowledge is identical with his power, and both are identical with his being
இறைவனது பண்புகளுக்கு இணையானதாக வேறெதுவுமில்லை. இப்பொழுது மதங்களின் எல்லைக்குள் வருவோம். எல்லா மதங்களும் தோற்றுவிக்கப்பட்டதே, இந்த ஒருமைப் பண்பை முன்வைத்து – கற்பிதங்களுக்கப்பாற்பட்ட யாராலும் தோற்றுவிக்கப்படாத, தோற்றுவிக்கப்பட தேவையற்ற நிலையில் ஆதியிலிருந்தே இயங்கிக் கொண்டிருக்கும் இறைவனைப் பற்றிய தெளிவை மக்கள் முன்வைப்பதே ஆகும். இறைவனின் ஒருமை குறித்த கருத்துகள் மிக எளிமையானவை. ஆனால், மதங்களை ஒட்டி, சமூகங்களை அமைத்த மனிதர்கள், இறைவன் ஒருவனே – யாராலும் தோற்றுவிக்கப்பட முடியாதவன் என்ற கருத்தை முன்வைக்கவில்லை. அப்படி முன்வைத்தால், எவருடைய கட்டுப்பாட்டினுள்ளும் அடைபடாத ஒரு நிலையில் உள்ள இறைவனிடத்தில் அனைவரும் சமம் என்ற கருத்தியலுக்கு ஆட்பட வேண்டிய அவசியம் உண்டாகிறது. அனைவரும் சமம் என்னும் பொழுதில், அங்கு இறைவனுக்கும், மனிதனுக்கும் – the support and the supporter, or the cerator and the created உள்ள உறவு வேறொரு நிலையை அடைந்து விடும். இடைத்தரகர்கள் ஒழிந்து போய்விடுவார்கள். The elite and the ordinary என்ற கட்டமப்பை உருவாக்க முடியாது போய்விடும். மனிதர்களுள் தங்களை உயர்ந்தவர்கள் என்ற தளத்திற்குள்ளும், பிறரை தங்கள் அடிமைகளாக – இறைத்தத்துவத்தின் பேராலயே அடிமைப்படுத்தி வைத்திட முடியாது போய்விடும். அதனால், இறைத்தத்துவத்தையும், சமூக கட்டமைப்புக்கேற்ற வகையில் ஏற்ற இறக்கத்திற்குட்படுத்தியாக வேண்டியதாக சூழலை உருவாக்கி, இறைவனின் ஒருமைத்தன்மையை பன்முகப்படுத்தி, அவ்வாறு உருவாக்கப்பட்ட பன்மைத்தன்மையினுள் சமூக அந்தஸ்திற்கேற்றவகையில், இறைவனையும் பல்வேறு கூறுகளாக வேற்றுமைப்படுத்திவிட வேண்டும் என்ற நோக்கத்திலே தான் இறைக் கொள்கையை நீர்த்துப் போக செய்து, பல்வேறு கடவுளர்கள் உருவாக்கப்பட்டனர்.
// கடவுள்/மதம் அனைத்தையுமே புனைவாகப் பார்க்கும் என்னால் நீங்கள் சொல்லும் கடவுள்/மதம் சார்ந்த கருத்துகள் அனைத்தையுமே நிராகரிக்கத்தான் தோன்றுகிறது //
நீங்கள் குறிப்பிட்ட கடவுளை புனைவாகப் பார்க்கிறேன் என்பது, இறைவனக் குறித்தான புனைவாக மனிதர்களால் தோற்றுவிக்கப்பட்ட புனைவாக கருதினால், அவை வடிவங்களாகவும், குறியீடுகளாகவும் தன் சமூகத்தைக் கட்டமைத்து, தனது இருப்பைத் தக்க வைக்க முனையும் மனிதர்களால் தோற்றுவிக்கப்பட்ட ‘பிம்பங்கள்’ மட்டும் குறித்தான கருத்து மட்டுமே தவிர, இறைவனைக் குறித்தான கருத்து அல்ல. மனிதனால் தோற்றுவிக்கப்பட்ட இந்த வகை இனத்திற்குள் வருவது தான் நீங்கள் குறிப்பிட்ட புனைவு - கருவேலங்காட்டு நொண்டிச் சாமி. எப்படி இந்த புனைவையும், the ultimte truth of God இரண்டையும் ஒன்றுபடுத்தி சமமாக ஏற்றுக் கொள்ளச் சொல்கிறீர்கள்?
அடுத்து இஸ்லாம் மட்டும் தான் இந்த ஏகத்துவத்தைப் பற்றிப் பேசுகிறதா? அனைத்து மதங்களுமே ஏதாவது ஒரு வகையில் இந்த ஏகத்துவத்தை – வெவ்வேறு கலைச் சொற்களைப்பயன்படுத்தி பேசவே செய்கின்றன. இஸ்ரவேலரின் யெஹ்வெஹ், கிறித்துவத்தின் ட்ரினிடி, இஸ்லாத்தின் அல்லாஹ், என பேசுகின்றன. இவற்றில் மற்ற மதங்கள் தங்கள் தோற்றுவிப்பாளர்களை இறைவனாக உயர்த்திக் கொண்ட பொழுது, இஸ்லாம் மட்டும் இன்னமும், தனது தோற்றுவிப்பாளரை இறைவனாக உயர்த்திக் கொள்ள விடாது மறுத்து, தன் ‘பூர்ணத்துவ இறைக்கொள்கையை’ உறுதியுடன் பற்றிப் பிடித்துக் கொள்கிறது. இந்த தர்க்கத்தை இந்து மதத்தின் சில பிரிவுகளுக்கும் உட்படுத்தலாம். கீழே உள்ளதைப் படியுங்கள்.
The Shri Vaishnavas provide another example of a monotheism that is “tainted” by elements apparently in tension with it. The Shri Vaishnavas identify Vishnu with the Brahman. According to Ramanuja, Brahman is personal. Indeed, he is the supreme person (paratman), creator and Lord, who leads souls to salvation. Far from having no (positive) attributes, as some Vedantins maintain, Brahman is the sum of all “noble attributes” — omniscient, omnipotent, omnipresent, and all-merciful. He is also advitya (without rival). Shiva, Brahma, and the other gods of the Hindu pantheon are Brahman's agents or servants, created and commissioned by him. (They have the same status, in short, that angels have in the western religious traditions.)
“The entire complex of intelligent and non-intelligent beings (souls and matter [prakriti]) … is real and constitutes the form, i. e., the body of the highest Brahman” (Ramanuja 1962: 88). The space-time world with all it contains is thus related to God as our bodies are related to our souls. A soul-body relationship, according to Ramanuja, is a relationship between (1) support and supported, (2) controller and controlled, and (3) “principal” and “accessory.” (Images of the last relationship are provided by the relations between a master and his “born servant” or an owner and his disposable property.) A body is “entirely subordinate” to its soul, having no independent reality or value. If the space-time world is Vishnu's body, then, it is absolutely dependent on Vishnu, and has little or no value in comparison with him. The Shri Vaishnava picture of reality is thus clearly monotheistic.
ஆம். இத்தனை தான்.
ஏதோ ஒரு நிர்ப்பந்தத்தில், ஒவ்வொரு மதமும் சமரசம் செய்து கொள்ளும் பொழுது, இஸ்லாம் தனது இறைக்கொள்கையில் எந்த சமரசமும் செய்து கொள்ளவில்லை. அதற்காக, அதை குறையாகக் கருதினால், குறைபாடு எங்கிருக்கிறது என்பது எனக்குத் தெளிவாகப் புரிகிறது. அது இஸ்லாத்தில் இல்லை. இஸ்லாத்தைக் குறித்து, கேள்விப்பட்டவைகளைக் கொண்டே அதை ஆராய முயல்கிறீர்களே தவிர, இஸ்லாம் என்ன எனபதைக் குறித்து தெரியும் ஆர்வமின்மையைத் தான் பார்க்கிறேன்.
ஒரு பரிபூரணமாகிய உண்மையைக் கைவிட்டு, அதற்கு கீழான ஒரு நிலைமைய ஏற்றுக் கொள் என்பது – totally contrary to the intellectual quality of mankind.
இஸ்லாம் சொல்லும் இறைப் பண்புகளுடன் எந்த விதத்திலும் ஒட்டாத, கற்பிதங்களால் ஸ்தாபிக்கப்பட்ட வடிவங்களைச் சமமாகப் பாவிக்க வேண்டும் என்பது against all senses.
அப்படியானால், பிற மனிதர்களை ஏற்றுக் கொள்ள மாட்டவே மாட்டீர்களா என கேட்டால், அதற்கும் பதில் உண்டு. அம்மனிதர்களை ஏற்றுக் கொள்வோம். ‘இறைவனின் பாதையில் எவரையும் நிர்ப்பந்திக்காதீர்கள்’ என்றே இஸ்லாம் போதிக்கிறது. ‘லகும் தீனுக்கும் வலியதீன்’ என்ற பிரபலமான குரானின் வாசகம் ஒன்று உண்டு. நமது முன்னாள் குடியரசுத் தலைவர் அடிக்கடி உபயோகிக்கும் வாக்கியம் அது. என் வழி எனக்கு, உன் வழி உனக்கு என்ற வாக்கியமே அது. இங்கு வழி என்ற சொல்லை எடுத்துவிட்டு, அங்கு மதம் / கொள்கை என எதையும் போட்டுக் கொள்ளுங்கள் – பொருள் ஒன்றும் மாறிவிடப் போவதில்லை. ‘There is no compulsion to deny a relation with people who are less enlightened about the absolute truth of God’ அவர்களை அவர்களது இயல்புடன் ஏற்றுக்கொள்வதில் எந்த இடர்பாடுகளும் இல்லை. ஆனால், அவர்களது கடவுளையும் ஏற்றுக் கொள் என்னும் பொழுது, நீங்கள் குறிப்பிட்ட புனைவையும் ஏற்றுக் கொள் என்பதாகிவிடுகிறது. அதைத் தவிர்க்கிறோம். அவ்வளவே.
// சாதி/மதம் இல்லாத எனக்கு, அல்லது அதில் இருந்து விடுவித்துக்கொண்ட எனக்கு, அல்லது இடைவிடாமல் விடுவித்துக் கொள்ளும் முயற்சியிலேயே இருக்கும் எனக்கு//
மதத்தைப் பற்றி விவாதித்து விட்டாகிவிட்டது. சாதி? எங்கிருக்கிறது இஸ்லாத்தில்? நீங்கள் உங்கள் intellectual capablityஐப் பயன்படுத்தி, தோற்றுவிக்கப்பட்ட சாதியத்தின் எல்லைக்குள்ளிருந்து மீண்டுவிட்ட நிலையை அல்லது மீளும் நிலையை அடைய முயற்சிக்கிறீர்கள் என்பது வரையில், ஒரு நேர்மையான, சமூக அக்கறையுள்ள எழுத்துகளைப் படிக்க முடிந்தது என்ற வகையில் மிகுந்த சந்தோஷமாகவிருக்கிறது. பாராட்டுகள். (உங்கள் பதிவைப் படித்த நண்பர் முத்துகுமரனும் உங்களை வெகுவாகப் பாராட்டினார். ஒருவரின் பதிவில் மற்றொருவர் கருத்தைப் பதிவதில்லை என்பதால், அதை இங்கு அவர் எழுதவில்லை. நேராகவே பேசிக்கொள்ளும் வகையில் ஒரே அறையிலிருப்பதால், இந்த ஒப்பந்தம்). ஆனால், நீங்கள் முயற்சித்து செய்யும் இச்செயலை, ஒவ்வொரு இஸ்லாமியனும், எவ்வித முயற்சியுமேயின்றி தனது மதத்தின் கொள்கையால் கடைபிடிக்கிறான் என்பதை ஏன் ஒப்புக் கொள்ள மறுக்கிறீர்கள்? எனக்கு எந்த வித பிரயத்தனங்களும் தேவையாயிருக்கவில்லை – சாதிகளைக் கடப்பதற்கு.
//..அப்படியே ரோட்டோரம் உள்ள டீக்கடையில் டீயடித்துவிட்டு அக்கடா என்று தெருவின் விளக்குக் கம்பத்துக்கு கீழே உட்கார்ந்து உலகை நோக்கும் சுதந்திர நிலைதான் பிடித்து இருக்கிறது.// இதைச் செய்வதற்கு, கடவுள் மறுப்பு என்ற தளத்திற்குள்ளே போக வேண்டிய அவசியமேயில்லையே? நாங்கள் அன்றாடம் செய்யும் செயல் தானே இது.
கல்வெட்டு, நீங்கள் முன்வைக்கும் செயல் சிலவை – is based on the hearsay. அதல்ல இஸ்லாம். இஸ்லாத்தைப் பற்றி விவாதிக்க பின்னூட்டம் / பதிவு என்ற சிறு எல்லை போதாது தான். என்றாலும், என்னால் முடிந்தளவு தெளிவாகச் சொல்லிவிட்டேன் என்றே நினைக்கிறேன். நீங்கள் இஸ்லாம் குறித்து இன்னமும் விரிவாக வாசிக்க வேண்டும். இஸ்லாம் பற்றி நீங்கள் கேள்விப்படுபவை எல்லாமே வெறும் அரசியல் மட்டுமே. ஊடகப்பிரச்சாரங்கள் மட்டுமே.
// உங்களின் பதிலைப் படித்தேன். நேரம் எடுத்து உங்களின் தரப்பை சொன்னமைக்கு நன்றி. பலமுறை உங்களுக்கு பதில் சொல்லும் நோக்கில் விரிவாக(மிக விரிவாக) எழுதி எழுதி ..அழித்துவிட்டேன்.
என்னதான் சுருக்கினாலும் இதுவும் விரிவாகப் போய்விட்டது :-(( //
இதிலென்ன வருத்தம் இருக்கிறது. நீங்கள் எத்தனை பெரிதாகவும் விரிவாகவும் எழுதினாலும், அதைப் படித்துப் பதில் சொல்ல நான் தயங்க மாட்டேன். ஆக்கபூர்வமாக விவாதம் செல்கிறது என்னும் பொழுதில், விரிவான தர்க்கங்களையே நானும் எதிர்பார்க்கிறேன். மேலும், நானே கொஞ்சம் விரிவான சிந்தனைத் தளத்தில் இயங்குபவன் என்பதாலும், விரிவான எழுத்துகளையும், பின்னூட்டங்களையும் படிப்பதில் ஆர்வம் உள்ளவனே. அதனால், தயங்க வேண்டாம்.
அழித்து, அழித்து எழுதியது தெளிவாகச் சொல்ல வேண்டுமென்ற முனைப்பினால் என்றால், it’s alright. நீண்டதாகப் போய்விட்டதே, சுருக்கிவிடுவோமென்றால், நீங்கள் அஞ்சத் தேவையில்லை. நான் மகிழ்வுடனே வாசிப்பேன்.
நன்றி, கல்வெட்டு.
இடையினில் சிறிது சறுக்கியதாகத் தோன்றினாலும், அழகாக எடுத்துச் செல்லப்படும் இவ்விவாதம் மிகுந்த மனநிறைவைத் தருகிறது.
//விவாதம் என்பது, 'தான் சரியென்று நம்புவதை அடுத்தவனை ஏற்றுக் கொள்ளவைக்கும் முயற்சி'.
உரையாடல் என்பது, தனது நிலையை மட்டும் சொல்லிவிட்டு அடுத்தவர் பேசுவதைக் கேட்பது. தெரியாதவற்றை நேரடிக் கேள்விகள் மூலம் கேட்டு பதில் பெற்று, எந்த நிர்ப்பந்தமும் இல்லாமல் மேலும் உரையாடலை வளர்ப்பது.//
இவை எனக்கு புதுமையாகத் தோன்றுகிறது.
ஒரு பொருளில் இருவருக்குள் ஏற்படும் சந்தேகங்களை விவாதித்து நிவர்த்தி செய்து கொள்ள முயற்சிக்கிறோம். விவாதத்தில் இருவரில் ஒருவர் ஏற்றுத்தானாக வேண்டுமென்ற கட்டாயமில்லாமல் அவரவர் கருத்துக்களை வெட்டியும் ஒட்டியும் பேசி அறிந்து கொள்கிறோம். நல்ல விவாதமும் கெட்ட விவாதமும் அதில் ஈடுபடுபவர்களைப் பொறுத்து அமையும் என்பது எனது கருத்து.
நண்பன்,
The ultimate truth of God என்ற ஒன்று இல்லை என்பதுதான் எனது நிலை.
எந்த மொழியில் அல்லது எப்படி சொன்னாலு கடவுள் என்ற நிர்மாணமே /நம்பிக்கையே தவறு/இல்லை என்பதே எனது நிலை.
இறைவன் /ஏக இறைவன் /the ultimte truth of God என்று ஒன்றும் இல்லை.
அப்படி ஒன்று இருந்தால் இருந்துவிட்டுப் போகட்டும்.
அதுபற்றிய சிந்தனைகளோ அதன் இருப்பு குறித்தான புனிதப்புத்தகங்களின் விளக்கங்களோ எனக்கு இதுவரை தேவையாகத் தோன்றவில்லை.
வறண்ட பாலைவனத்தில் உலகின் ஏதோ ஒரு மூலையில் நான் வாழ்வதாகவே வைத்துக் கொள்ளுங்கள். என்னிடம் 'அமேசான் உலகில் பெரிய ஆறு' என்று நீங்கள் சொன்னால் , அதனால் என்ன? என்பதுதான் எனது பதிலாக இருக்குமே தவிர எனக்கு உதவாத எதையும் வணங்கி/தொழுது கொண்டு இருக்க முடியாது.
குறிப்பிட்ட காலங்கள் வரை நானும் இறை என்ற ஒன்று (ஏக இறைவன் ) உள்ளதாகவே நம்பவைக்கப்பட்டேன். (சமூகத்தால்/பெற்றோரால்/..) ஆனால் ஒரு நிலைக்குமேல் என்னால் நடிக்க முடியவில்லை.
கடவுளின் தேவை என்ன? மதத்தின் தேவை என்ன? என்று தீர ஆராய்ந்து எடுத்த முடிவு. எனவே கடவுள்/மதம் கண்டுவிலகிப்போகவே விரும்புகிறேன்.
கடவுளாலோ, மதத்தாலோ என்ன பயன் என்று என்னால் புரிந்துகொள்ளவே முடியவில்லை. Ultimte truth of God என்று ஆரம்பித்த மத அரசியல் இன்று நிஜ வாழ்க்கையில் கேடுகளை மட்டும் செய்கிறது.
**
ஆகச் சிறந்ததாக நீங்கள் நம்பும் (அல்லது வேறொடுவர் நம்பும்) கடவுள் / மதம் இல்லாமலேயே, என்னாலும் யாருக்கும் துன்பம் இல்லாமல், சிலருக்கு நன்மைபயக்கும் வகையிலும், இதே உலகத்தில் வாழ முடியும்போது நான் எதற்கு கடவுள்/புனிதர்கள் என்று நான் யாரையும் அண்ணாந்து பார்க்க வேண்டும்?
******************
நீங்கள் சொன்னது ....
// ‘லகும் தீனுக்கும் வலியதீன்’ என்ற பிரபலமான குரானின் வாசகம்...... என் வழி எனக்கு, உன் வழி உனக்கு என்ற வாக்கியமே அது. இங்கு வழி என்ற சொல்லை எடுத்துவிட்டு, அங்கு மதம் / கொள்கை என எதையும் போட்டுக் கொள்ளுங்கள் – பொருள் ஒன்றும் மாறிவிடப் போவதில்லை. ‘There is no compulsion to deny a relation with people who are less enlightened about the absolute truth of God’ அவர்களை அவர்களது இயல்புடன் ஏற்றுக்கொள்வதில் எந்த இடர்பாடுகளும் இல்லை. ஆனால், அவர்களது கடவுளையும் ஏற்றுக் கொள் என்னும் பொழுது, நீங்கள் குறிப்பிட்ட புனைவையும் ஏற்றுக் கொள் என்பதாகிவிடுகிறது. அதைத் தவிர்க்கிறோம். அவ்வளவே//
எனது கேள்வி.....
எதை வைத்து இஸ்லாத்தைப் பின்பற்றாதவர்கள் less enlightened about the absolute truth of God என்று சொல்கிறீர்கள்?
What is the tool for measuring the enlightenment referring to the absolute truth of God?
**
எங்கோ ஆரம்பித்து எதிலோ முடிந்து விட்டது. ஆனால் நீ்ங்கள் செய்வதே more enlightened ..ஆகச் சிறந்தது என்று நீ்ங்கள் இன்னும் சொல்கிறீர்கள். :-(((
நான் ஏதாவது ஒரு மதத்தைப் பின்பற்றுபவனாக இருந்தால் மாற்றுக் கருத்து வைக்கலாம். இஸ்லாம் மற்ற மதக் கோட்பாடுகளைவிட ஆகச்சிறந்தது என்று நீங்கள் சொன்னால், "அதனால் என்ன?" என்று கேட்டுவிட்டுத்தான் செல்ல முடிகிறது.
****
மதங்களின் அடிப்படை நம்பிக்கைகள் மக்களை அடித்துக் கொள்ளச்செய்கிறது என்பதே எனது கருத்தாக உள்ளது இன்னமும்.
இந்த உலகிற்கு கடவுளோ மதமோ நல்லதைத் தரவில்லை.
எல்லாம் அவன் செயல் என்றால் பெண்ணைப்படைப்பவனும் அவனே (The ultimate truth of God ) வண்புணர்வனும் அவனே(The ultimate truth of God ),குண்டைக் கண்டுபிடித்தவனும் அவனே (The ultimate truth of God ), குண்டுவைப்பனும் அவனே(The ultimate truth of God ) என்றும் சொல்லப் பழகவேண்டும் சரியா?
சுல்தான்,
விவாதம் (Argument) என்பது 'தான்' நம்பியவற்றை அடுத்தவரை நம்ப வைக்க, அல்லது அடுத்தவர் நம்பியதை இல்லை என்று நீரூபணம் செய்ய பயன்படும் முறை.
விவாதமுடிவில் ஒருவருக்கு வெற்றி உண்டு.
*
உரையாடல் (Conversation/Discussion) )என்பது தெரிந்தவற்றைச் சொல்லிச் செல்வது. யாரும் யாரையும் எதையும் ஏற்றுக் கொள்ள நிர்ப்பந்தம் இல்லை.
உரையாடலில் யாருக்கும் வெற்றி இல்லை.பங்களிப்பு மட்டுமே உண்டு.
நபிகள் குறித்து...
வரலாற்றில் முகம்மது என்ற ஒருவர் இருந்திருக்கிறார். அவர் உங்களையும் என்னையும் போல அந்தக் காலத்தில் வாழ்ந்து இருக்கிறார். நிகழ்கால பாபாக்கள் போல வரும் அப்போது ஆன்மீகம் குறித்தான ஒரு தேடலில் தான் அறிந்ததைச் சொல்லியிருக்கிறார்.... .....என்ற அளவுக்குமேலே என்னால் எந்த புனித கருத்துக்களையும் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.
நீங்கள் சொன்னது.....
//..1,23,998 நபிமார்களைப் பற்றியும் பேசுகிறது. அவர்களை மரியாதையுடன் நடத்துமாறும் கோருகிறது..//
(உங்களுக்கான கேள்வி 1)
இந்த எண்கள் வளர வாய்ப்பு உள்ளதா?
(உங்களுக்கான கேள்வி 2)
எதற்காக முகம்மது தான் இறுதியான் நபி என்று ஏற்றுக் கொள்ளவேண்டும்?
இது முகமதுவின் தனிமனிதரின் அரசியல். எனக்கடுத்து யாரும் இல்லை என்று சொல்வது ஏற்றுக் கொள்ளமுடியாத ஒன்று.
கூகிள்தான் தேடல் பொறியில் சிறந்தது (நிகழ்காலம்)என்று சொன்னால், அதை ஏற்றுக் கொள்ளலாம். இதுவே இறுதியான வடிவம் என்றால் அதை ஏற்றுக்கொள்ள முடியாது.
**
(உங்களுக்கான கேள்வி 3)
இன்றுவரை முகம்மதுவைப்போல ஒருவர் வரவில்லை. எதிர்காலத்தில் வர வாய்ப்பு உள்ளது என்றாவது உங்களால் நம்ப முடியுமா?
அப்படி நம்பினால் நீங்கள் இஸ்லாமியர் அல்ல (இறுதித் தூதர் கோட்பாடு) இப்படி ஒரு சாதரண சிந்தனைக்கே தடைபோடும் இவர் கருத்துகள் எனது பார்வையில் ஏற்புடையது அல்ல. அதே நேரத்தில் இதுவே பல மதப் பூசல்களுக்கும் வன்முறக்கும் காரணம்.
என்னைவிடச் சிறப்பானவர்களும் இருக்கலாம், இல்லாவிடில் இனிமேலும் வரலாம். என்று முகம்மது சொல்லி இருப்பாரேயானால். இந்த இறுதித் தூதர் கருத்து அடிபட்டுப்போய் மாற்றங்களை எதிர் கொள்ளும் மனப்பான்மை வர வாய்ப்பு இருந்து இருக்கும்.
***
நீங்கள் சொன்னது.....
//..Dreaming the Utopian என்று சொல்வார்கள். அது போலவே இருக்கிறது உங்கள் பதிவும். பள்ளிமாணவர்களுக்கு சமுதாய சிந்தனைக் கருத்துகளை உண்டாக்க கட்டுரைப் போட்டி வைப்பார்கள்...//
எனது கருத்துகள் உங்களுக்கு பள்ளி மாணவனின் கட்டுரை போல இருக்கலாம்.புனிதப் புத்தகங்களில் இருந்தே எல்லாவற்றிற்கும் விளக்கமும் வழிகாட்டுதலும் தேடினால், புதிதாக ஏதும் அறிந்து கொள்ள முடியாது.
நான் சொல்வது 'அப்துல் கலாம்' சொல்லும் கனவுகள் அல்ல மாறாக நான் வாழும் முறை.
எனக்கு நீங்கள் சொல்லும் இறைக்கொள்கை புனைவாகத் தெரிவது போல எனது கருத்துகள் உங்களுக்கு கனவுக் கட்டுரையாகத் தெரியலாம்.
(உங்களுக்கான கேள்வி 4)
என்னிடம் சொல்வதுபோல முகம்மதுவின் கருத்துக்களை விமர்சனம் செய்ய முடியுமா?
என்னுடன் உரையாடும்போது உங்களுக்கு கேள்விகள் வருகிறது. முகம்மது சொல்லி இருக்கும் கொள்களில்/கோட்பாடுகளில்/வழிகாட்டுதலில்... எத்தனை வியசங்கள் உங்களுக்கு ஏற்புடையதாக இல்லை.
(உங்களுக்கான கேள்வி 5)
இந்த இந்த கருத்துகளில் முகம்மதுவிடம் நான் மாறுபடுகிறேன் என்று சொல்ல முடியுமா?
இதைத்தான் நான் பல இடங்களில்(பதிவுகளில் பின்னூட்டங்கள் மூலம்) கேள்வி கேட்கமுடியாத புனிதத்திற்கு ஒப்புக்கொடுக்கும் இரசிக மனம் என்று சொல்லியிருப்பேன்.
இவ்வளவு உரையாடல்களிலும் நான் சொல்ல வருவது
மதத்தால் தனிமனிதனின் பண்புகள் மாறுவது இல்லை.
***
நீங்களே இப்படிச் சொல்லி உள்ளீர்கள்
//நல்லது, கெட்டது இவற்றை உணர்ந்து செயல்பட தூண்டுகிறது என்பதைத் தவிர, மதங்கள், எந்த ஒரு மனிதனின் ‘intellectual capability to analyze and behave’ என்ற நிலைபாட்டிற்குள் செயல்படுவதில்லை.
தன்னுடைய ஆறாவது அறிவைச் செயல்படுத்துவதில், அந்த மனிதன் தான் தீர்மானிக்க வேண்டும் - தான் எத்தகையவனாக வாழ வேண்டும் என்பதை. //
(உங்களுக்கான கேள்வி 6)
அது என்ன... உணர்ந்து?
அப்படி என்றால் குண்டு வைப்பவனை அவனது மதம் அது தவறு என்று உணரச்செய்யவில்லையா?
(உங்களுக்கான கேள்வி 7)
இது மதத்தின் தோல்வி இல்லையா?
**
இறுதியாக ஆறாவது அறிவுதான் முடிவு எடுக்கிறது என்றால் முதற்கண் எதற்கு கடவுள்/மதம்?.
என்னிடம் இஸ்லாத்தைப்படி என்று சொல்கிறீர்கள்.
இஸ்லாத்தில் இறைக்கொள்கை சிறப்பாக உள்ளது என்றும் சொல்கிறீர்கள்.
அதைப் படித்தால்தான் புரியும் என்றும் சொல்கிறீர்கள்.
எவனாவது இஸ்லாத்தின் பெயரைச் சொல்லி குண்டுவைத்தால் அவன் உண்மையாண முஸ்லீம் அல்ல என்றும் சொல்கிறீர்கள்.
இவ்வளவு சொல்லும் நீங்கள், ஒரு குழந்தை (அந்த மதத்தை பின்பற்றும் தம்பதியர்களுக்கு) பிறந்தவுடனே இஸ்லாமியராக அறியப்படுவது ஏன் என்று கேள்வி கேட்பது இல்லையே?
பிறப்பினால் வரும் சாதியும் சரி மதமும் சரி பகுத்தறிவிற்கு ஒவ்வாதது.
A: குழந்தைகளை குழந்தைகளாக வளருங்கள்.
B: உலகில் எல்லாப் புனித புத்தகங்களையும் படிக்கச் சொல்லுங்கள்.
C:உணவு உடை எதிலும் கட்டுப்பாடு (மதம் சார்ந்த) விதிக்காதீர்கள்.
D:18 வயதில் குரானில் தேர்வு வைத்து, உறுதிமொழி எடுத்து அவனை அவனின் உண்மையான இஸ்லாம் புரிதல்களுடன் அவன் விரும்பும் பட்சத்தில் மட்டும் இஸ்லாமியராக அறிவிக்க தயாரா?
இப்படி நடந்தால் அது அவர்களின் தேர்வு. இல்லையென்றால் திணிப்பு.
வளர்ந்தபின்னாலும் சிந்திக்கமுடியாமல் மழுங்கச் செய்யும் புத்தி சார்ந்த திணிப்பு.
நீங்கள் வாழும் பகுதியில் உள்ள எல்லா இஸ்லாமியரும் ஒன்று கூடி வருடதிற்கு ஒருமுறை யார் யார் எப்படி வாழ்கிறார்கள் என்று ஆராய்ந்து இஸ்லாம் கொள்கைப்படி வாழாதவர்களை விலக்க முடியுமா?
***
இஸ்லாத்தைக் குறித்தானதாக இருந்தாலும் எல்லா மதங்களுக்கும் இது பொருந்தும்.
ஒரு மேற்கோள் எனது பழைய பதிவில் இருந்து....
...அனுபவங்களையும், இசங்களையும், தத்துவங்களையும் இன்னபிற விசயங்களையும் கேள்விக்கு உட்படுத்தி அதனை மேலும் ஆராய்வதே பகுத்தறிவு. கப்பல் பயணைத்தில் கிடைத்த அனுபவ அறிவு பாலைவனப் பய்ணத்திற்கு அப்படியே பயன் படாது.
முன் முடிவுகள் இல்லாமல் அனைத்தையும் கேள்விக்கு உட்படுத்தி அதன் மூலம் தனக்கென ஒரு புரிதலை அடைவதே பகுத்தறிவு. அந்த பகுத்தறிவின் மூலம் புதிய தீர்வுகள் கண்டறியப்படவேண்டும்.
அனுபவம் (கற்றல்,கேட்டல்,உணர்தல்..) + அவற்றை கேள்விக்கும் பரிசோதனைக்கும் உட்படுத்துதல் + சுய புரிதல் = பகுத்தறிவு.
....
நீங்கள் 5 வயதில் பகுத்தறிந்த ஒன்றை 50 வயதிலும் பகுத்தறிய தயாராக இருக்க வேண்டும். தொடர்ச்சியாக கேள்விகளுக்கு உட்படுத்திக் கொள்வது அறிவியல்.
அதாவது "." டன் (முற்றுப் புள்ளியுடன் ) நிற்காமல் , அடுத்த தலைமுறையும் தொடர்ந்து சிந்திக்கும் வண்ணம் "," வைப்பது. உதாரணமாக இதுதான் இறுதி இறை வேதம் அல்லது இறுதி அவதாரம் அல்லது தூதர் என்று சொன்னால் அங்கே "." வந்து விடுகிறது. அறிவியல் அப்படி அல்ல.......
கம்யூனிசம்-காந்தியம்-நாடி ஜோதிடம் மற்றும் பக்கவாட்டு நவீனத்துவம்
http://kalvetu.blogspot.com/2007/10/blog-post_26.html
*************
மதம் என்பது குலக்கல்வி!
நண்பன்,
புனிதப்புத்தகங்கள் சிறந்தது.
நான் பின்பற்றும் இறைக்கோட்பாடு சிறந்தது என்று சொல்கிறீர்கள்.
புத்தகத்தை படித்தால் எனக்கு பித்தம் தெளியும் என்று நினக்கிறீர்கள். :-))
**
உங்களுக்கு கல்விக்கும் குலக்கல்விக்கும் வித்தியாசம் தெரியும். சரியா ?
1 ஆம் வகுப்பில் இருந்து 10 ஆம் வகுப்பு வரை கல்வி கற்று கொடுக்கப்படுகிறது.
மொழி,கணிதம்,சரித்திரம்,பூகோளம்.... இன்னபிற ( Spiral learning )கற்றுத்தரப்படுகிறது.
11 ஆம் வகுப்பில் மாணவன் இதுவரை தான் அறிந்தவற்றில் (கற்பிக்கப்பட்ட) இருந்து தனக்கான சில குறிப்பிட்ட பாடங்களை மட்டும் தெரிவு செய்து அதில் மேலும் அறிய முயலுகிறான்.
கல்லூரியில் அவனது பாடங்களின் தேர்வு ஒரு புள்ளியை அடைகிறது.
இந்த முறையில் அவனுக்கு தேர்ந்தெடுக்கும் வாய்ப்பு வாழங்கப்படுகிறது.
மதம் ...
ஒரு குழந்தை பிறந்தவுடன் அதற்கான மத உரிமை பறிக்கப்பட்டு பெற்றோரின் மதம் என்ற சட்டை மாட்டப்படுகிறது.
(உங்களுக்கான கேள்வி 8)
உங்கள் குழந்தகளுக்கு அவர்களுக்கான மதத்தை தேர்ந்தெடுக்கும் சுதந்திரத்தை குழந்தைப் பருவத்தில் இருந்து வழங்கி உள்ளீர்களா?
(உங்களுக்கான கேள்வி 9)
நீங்கள் பின்பற்றும் புனித புத்தகத்தை குலக்கல்வியாக அவர்களுக்கு கொடுக்கிறீர்களா?
இரசனை,பரந்தவெளி என்று பேசும் நீங்கள், மதம்மும் புனித புத்தகங்களும் நல்லவை என்று நம்பும் நீங்கள்... அதுதான் வழிகாட்டி என்று நம்பும் நீங்கள்...
(உங்களுக்கான கேள்வி 10)
உங்கள் குழந்தைகளுக்கு மதத்தை குலக்கல்வியாக இல்லாமல் அனைத்து மதங்களையும் படித்து அறியும் வாய்ப்பை குழந்தைப் பருவத்தில் இருந்தே கொடுக்க முடியுமா?
(உங்களுக்கான கேள்வி 11)
அவர்களை இஸ்லாம் சாயல் இல்லாமல வெறும் குழந்தைகளாக வளர்த்து, பதின்ம வயதில் வர்கள் விரும்பினால் மட்டும் , அதுவும் புனித புத்தகத்தில் தேர்ச்சி பெற்றால் மட்டும் அவர்களாக எந்த மதத்திலும் சேர்ந்து வளரும் வாய்ப்பை கொடுக்க முடியுமா?
அவர்கள் வளர்ந்த பிறகு எதுவாகவும் மாறட்டும் என்று சொல்ல வேண்டாம்.
பரந்த வெளிகளில் இயங்கும் நீங்கள் , தெளிவாக இதை ஏன் உங்கள் குழந்தைகளிடம் இப்போதே சொல்லி அவர்களின் குழந்தைப்பருவ மத அடையாளங்களை கிழித்து எறிந்து, பிற்காலத்தில் அவர்களாகவே தேர்ந்தெடுக்கும் அவர்களின் உரிமையை இப்போதே அவர்களுக்கு உணர்த்தக்கூடாது?
****
சேர்ந்து வாழும் சமூகப்பரப்பில் , குடும்ப சூழ்நிலையில் நான் சொன்னவை எல்லாம் செய்ய முடியாது. சிலவற்றை முயற்சிக்கலாம். அதுதான் உண்மை.
ஆனால், இப்படி குழந்தைகளுக்கு மதம் என்ற குலக்கல்வி கொடுத்து அவர்களை கெடுக்கிறோம், அவர்களின் எதிர்கால உரிமையில் கருத்து திணிப்பு செய்கிறோம் என்ற குற்ற உணர்ச்சியாவது உங்களிடம் உள்ளதா?
அதுவும் இல்லை என்றால்....
எனது பார்வையில் நீங்கள் மதவாதி. :-))
ஆனால் அது உங்களுக்கு புரியா வண்ணம் உங்கள் மூளை செரிவு செய்யப்படுள்ளது.
கல்வெட்டு,
// எனது பார்வையில் நீங்கள் மதவாதி. :-)) //
நான் இயல்பாக, மிக கவனமாக யாரையும் புண்படுத்தா வண்ணம் எழுத வேண்டும் என்ற முனைப்புடன் பதில் எழுதிக் கொண்டிருக்கிறேன்.
ஆனால், உங்கள் பார்வை அத்தகையதாக இல்லை.
நீங்கள் மீண்டும், மீண்டும் மதவாதி என்று என்னை அழைத்துவிட வேண்டும் என்ற முனைப்புடன் எழுதுவதைப் போன்றே தோன்றுகிறது. நீங்கள் ஒரு முன்முடிவுடன் பேசிக் கொண்டிருக்கும் பொழுது, அதை தொடர்ந்து அனுமதித்துக் கொண்டிருப்பது தேவையற்றதாகப் படுகிறது.
மதவாதி என்றால், உங்கள் மொழியில் என்ன பொருள் என்பதை சற்றே தெளிவுபடுத்தி விடுங்கள். எந்த நோக்கில் என்னை மதவாதி என்கிறீர்கள் என்பதை சொல்லுங்கள். மதவாதி என்ற சொல் எத்தகைய பொருளில் பயன்படுத்தப்படுகிறது என்பது உங்களுக்குத் தெரியாமல் இருக்காது. இருந்தும், அத்தகைய வார்த்தைகளை அள்ளி வீசத்தான், இத்தனை உரையாடல்களும் என்றால், நான் தவறான ஒரு நபருடன் உரையாடிக்கொண்டிருந்தேன் என்ற வருத்தத்திற்குத் தான் ஆளாவேன்.
மதவாதி என்றால் - தீவிரவாதி? குண்டு வைப்பவன்? கொலைகாரன்? அல்லது என்னவென்று சொல்லிவிடுங்கள்!
நான் மதத்தை பின்பற்றாமல், எப்படி நல்லவனாக வாழ்கிறேன் பார் என்று சொல்லும் பொழுது, அதைவிட பலமடங்கு சிறப்பாக என்னாலும் வாழ முடியும் - வாழ்கிறேன் - மதத்தையும், இறைவனையும் ஏற்றுக் கொண்டே!
நீங்கள் சொல்லிக் காட்டுகிறீர்கள். நான் யாரிடமும் போய் பார் நான் எத்தனை நல்லவன் என்று சொல்லிக் கொண்டிருப்பதில்லை.
ஆனால், நான் உங்களைக் குறித்த எந்த ஒரு கருத்தையும் விமர்சனமாக வைக்காத பொழுது, அதென்ன எனக்கு மட்டும் மதவாதி? உங்கள் நிலைபாட்டை ஏற்றுக் கொண்டே, அதைப் பற்றி எந்த ஒரு விமர்சனமும் இன்றியே, நான் எழுதிக் கொண்டிருக்கிறேன்.
அத்தகைய புரிதல் எதிரில் இருப்பவரிடத்தில் இல்லாதிருந்தும், ஒருவர் மீது மற்றவருக்கு பரஸ்பர மதிப்பில்லாத பொழுதும்ம், எப்படி நீங்கள் உங்கள் வாழ்க்கையை அத்தனை புளகாங்கிதமாக சொல்லிக் கொள்கிறீர்கள்? இது தான் சிறந்தது என்று.
கொஞ்சம் விளக்கி விடுங்கள்.
மேலும், வருடாந்திர விடுமுறைக்காக நாளை இந்தியா செல்லவிருப்பதால், பதில்கள் கொஞ்சம் நிதானமாகத் தான் வரும்.
நான் எத்தகைய வாழ்க்கையை வாழ்கிறேன் என்பதைக் குறித்து யாருக்கும் எதையும் நிரூபிக்க வேண்டிய அவசியமுமில்லை. என்னைச் சுற்றியிருப்பவர்ர்கள் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறார்கள். நான் எப்படிபட்டவன் என்று.
மதவாதி என்று நிருவ முயற்சிக்கும் உங்கள் போக்கை ஏற்கனவே சொல்லி விட்டேன். உள்நோக்கங்களோடு உரையாடுவது மிகசிரமம்,கல்வெட்டு.
முதலில் ஒருவர் மீது மற்றவர் மரியாதை கொள்வோம். பின் தான் உரையாடல் நிகழ முடியும்!
இறைவனை நம்புவதாலும், ஒரு மதத்தின் வழிமுறைகளைப் பின்பற்றுவதாலும், ஒருவனை மதவாதி என்று அழைக்கிறீர்களா? அல்லது மதவாதி என்ற பெயரில், தீண்டத்தகாதவனாக சொல்லிவிட முனைகிறீர்களா?
இறைவனை நம்பாதிருப்பது தான் புனிதம் என்று நீங்கள் சொல்வது வேடிக்கையாக இருக்கிறது. எது எப்படியிருந்தாலும், இந்த உலகம் 99% சதவிகிதத்தினர் மதங்களின் வழி நடந்து இறைவனை அடைபவர்களே.
அப்படியானவர்கள் அனைவருமே ஏதோ தீண்டத் தகாதவர்களாகவோ, தீவிரவாதிகளாகவோ நீங்கள் நினைத்தால், தவறு எங்கிருக்கிறது?
உங்கள் கலைச்சொற்களில், மதவாதி என்பது என்ன?
இந்தியாவிலிருந்து பதில் எழுதுவேன்.
(என்ன, என்னுடன் கூடவே நான் வாசித்துக் கொண்டிருக்கும் புத்தகங்களையும் கூடவே எடுத்துப் போக முடியாது. பரவாயில்லை. நீங்கள் கேட்ட கேள்விகளுக்கு, நான் எற்கனவே பதில் சொல்லியிருக்கிறேன். நீங்கள் வாசிக்கவில்லை. மீண்டும் அதையே விளக்கி எழுதுவேன்...)
அன்புடன்
நண்பன்
Post a Comment