"எழுத்துகளையும் தாண்டி எனக்கென்று ஒரு உலகம் உண்டு; நான் எழுதுபவற்றை மட்டுமே வைத்துக் கொண்டு, என்னை எடை போடுபவர்களை எப்பொழுதும் என் எண்ணங்கள் வியப்பில் ஆழ்த்திக் கொண்டே இருக்கும்....."
- நண்பன்

Thursday, November 27, 2008

மும்பையில் கொடிய மிருகங்களுடன் ஒரு யுத்தம்....

நம்ப முடியவில்லை.

மும்பையின் சத்ரபதி சிவாஜி நிலையம், தாஜ் கொலாபா, ட்ரைடண்ட், காமா மருத்துவமனை என ஒரே சமயத்தில் தாக்குதல் தொடுத்திருக்கின்றனர், தீவிரவாதிகள். தாக்குதலின் பரப்பளவும், உக்கிரமும் அதிர்ச்சியடைய வைத்திருக்கிறது. கிட்டத்தட்ட ஒரு ராணுவ படையெடுப்புப் போன்றிருக்கிறது. தொடர் ஒளிபரப்பாக NDTV சொல்வதை விழித்திருந்து பார்க்கும் பொழுது, அதிர்ச்சியையும் தலைகுனிவையும் ஏற்படுத்துகிறது. பத்து இடங்களில் தாக்குதல் நடந்திருந்ததாக முதல்வர் தேஷ்முக் அறிவித்திருக்கிறார்.

தாஜ், ட்ரைடண்ட் போன்ற நட்சத்திர விடுதிகளைத் தேர்ந்தெடுத்தது, பரவலான பார்வையைத் தங்கள் மீது திருப்பும் - விளைவிக்கப்போகும் மரணங்கள் - இந்தியர்களாக மட்டுமே இருக்கக் கூடாது - ஆனால், உலகின் பல பாகங்களிலிருந்துமிருந்து வந்தவர்களாக இருக்க வேண்டும். அதன் மூலம் தங்களை அனைவரும் நோக்க வேண்டுமென்ற வெறியுடன் இயங்கியிருக்கிறார்கள், வெறியர்கள்.

டெக்கான் முஜாஹிதீன் என்ற அமைப்பு பொறுப்பேற்றிருக்கிறது.

மும்பையின் தலை சிறந்த போலிஸ் அலுவலர்கள் இறந்திருக்கின்றனர். ATS Chief Hemant Karkere, Mumbai ACP Ashok Kamte, Cop Vijay Salaskar கொல்லப்பட்டிருக்கின்றனர். மொத்தம் 11 போலிஸினர் - 4 - 5 அதிகாரிகள் உட்பட கொல்லப்பட்டிருக்கின்றனர்.

மும்பை முழுவதும் ராணுவம் அனுப்பட்டிருக்கிறது. 5 Columns of army and 200 NSG commondos have been called. படகுகளின் மூலம் தீவிரவாதிகள் வந்திருக்கக் கூடும் - அது ஒன்றே பத்து இடங்களில் நிகழ்ந்த தாக்குதலை - geographically explaining.

பள்ளிகள், கல்லூரிகள், அலுவலகங்கள் அனைத்தும் விடுமுறை அறிவிக்கப்பட்டிருக்கின்றன.

தாஜ் ஹோட்டலின் உள்ளே - அனைத்து ஊடகங்களின் முழு பார்வையும் பதிந்திருக்கும் பொழுதே -ஐந்து வெடிகுண்டுகளை வீசியிருக்கிறார்கள். சில பாகங்களில் தீ பிடித்து எரிகின்றது. அடிபட்டு விழுந்தவர்களை தூக்கிக் கொண்டு, இழுத்துக் கொண்டு ஓடுகிறார்கள்.

இதுவரையிலும் குண்டுகளை ஒளித்து வைத்து விட்டு ஓடிப்போனவர்கள், இந்த முறை நேருக்கு நேராக மோதத் துணிந்திருக்கிறார்கள். அப்பாவிகள் அதிகம் கூடியிருக்கும் - அதிலும் வெளிநாட்டினர் அதிகமிருக்க வாய்ப்புள்ள இடங்களைத் தேர்ந்தெடுத்து கண்ணை மூடிக் கொண்டு சுட்டுத் தள்ளியிருக்கிறார்கள்.

இந்தத் தாக்குதலின் தீவிரத்தை விவரித்த NDTVயின் பாசு, இது காஷ்மீரத்தில் நிகழ்ந்த யுத்தம் போலிருக்கிறது என்கிறார்.

மரணித்தவர்களின் எண்ணிக்கை 80ஐத் தாண்டி விட்டது. 9 பேர் வெளி நாட்டினர். இன்னமும் தாஜ் ஹோட்டலின் உள்ளே துப்பாக்கி சூடு நடந்து கொண்டிருக்கிறது என்கிறார்கள்.

9 தீவிரவாதிகள் உயிருடன் பிடிக்கப்பட்டிருக்கிறார்கள். 2 பேர் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கின்றனர். இன்னமும் 2 நபர்கள் உயிருடன் பிடிபடாதிருக்கின்றனர்.3 பேர் தப்பித்து ஓடியிருக்கின்றனர். அகற்றப்படாத உடல்கள் தாஜ் உள்ளே கிடப்பதாக வெளியேறியவர்கள் சொல்லியிருக்கின்றனர். இன்னமும் மரணங்களின் எண்ணிக்கை அதிகமாகக் கூடும்.

சிலரை பிணயக் கைதிகளாகப் பிடித்து வைத்திருப்பதாக சொல்கிறார்கள் - ட்ரைடண்ட் ஹோட்டலிலும், காமா மருத்துவ மனையிலும். இன்னமும் நிலைமை கட்டுக்குள் வரவில்லையென்று மகாராஷ்ட்ரா முதல்வர் நிருபர்கள் கூட்டத்தில் சொல்லியிருக்கிறார் - ட்ரைடண்ட் ஹோட்டலிலும், காமா மருத்துவ மனையிலும்.

தீவிரவாதிகள் யாராக இருந்தாலும், அவர்களைப் பிடித்து மரணங்களை விதைத்தது போன்று அவர்களையும் மரணத்தின் மூலமாகவே தண்டிக்கப்பட வேண்டும்.

இந்த சூழலில், தீவிரவாதிகளுடன் யுத்தம் புரிந்து இறந்து போன அந்த போலிஸ் அதிகாரிகளுக்கு - A Salute to you all Officers.

No amount of words would express our gratitude.

May God give the strength to your family to bear the losses.

மொத்த இந்தியாவுமே, உங்களின் தீரம் குறித்து பெருமிதம் கொண்டிருக்கிறது.

21 comments:

யாழவன் said...

//இந்த சூழலில், தீவிரவாதிகளுடன் யுத்தம் புரிந்து இறந்து போன அந்த போலிஸ் அதிகாரிகளுக்கு - A Salute to you all Officers.

No amount of words would express our gratitude.

May God give the strength to your family to bear the losses.

மொத்த இந்தியாவுமே, உங்களின் தீரம் குறித்து பெருமிதம் கொண்டிருக்கிறது.//

அந்த வீரர்களின் தியாகத்திற்கு ஈடு ஏது. தலை வணங்குவோம்.

SurveySan said...

Mumbai will survive.

நண்பன் said...

இந்தியாவின் 9/11?

எந்திர துப்பாக்கிகள், வெடிகுண்டுகள், அத்துடன் தீவிர பயிற்சி, மரணத்தை ஏற்க உறுதியெடுத்த சித்தாந்தம் என ஒரு முழுமையான தீவிர வாத கும்பலின் அத்தனை அறிகுறிகளையும் ஏந்தி தாக்குதல் தொடுக்கிறார்கள்.

ஒரு இரவு முழுவதையும் நாச வேலையில் ஈடுபட்டவர்கள் இன்னமும் அடங்கவில்லை. ராணுவம், கம்மாண்டோஸ் என அழைத்தும் இன்னமும் அவர்களுடனான யுத்தம் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

இதுவரையிலும் கொடுக்கப்பட்ட கணக்கின் படியே -20க்கும் அதிகப்பட்டவர்கள் என தெரிகிறது.

என்ன தான் அவர்களது நோக்கம்? வர்த்தக்த்தலைநகரத்தை நிலைகுலைய வைப்பதன் மூலம், இந்தியாவைக் குறித்த அச்சத்தை உலகிற்கு எழுப்பி, சீர் குலைப்பதென்பதா?

இல்லையென்றால், வெளிநாட்டவர் புழங்கக் கூடிய இடங்களில் ஏன் தாக்குதல் தொடுத்தனர்?

இனி தான் விவரங்கள் வெளி வரும்.

இந்த நிலையில் தீவிரவாதத்தை - அனைவரும் கண்டிப்பாகக் கண்டிக்கவேண்டும். அவர்களுக்காக எந்த ஒரு மூலையிலிருந்தும், எந்த ஒரு அனுதாப குரலும் எழக் கூடாது!

நண்பன் said...

சர்வேசன்,

சாம்பலிலிருந்து உயிர்த்தெழும் பறவையாக மும்பை இருக்கத் தான் செய்கிறது.

என்றாலும் அதை ஒவ்வொரு முறையும் சாம்பலாக்கிப் பார்க்கத் தான் வேண்டுமா?

இதையெல்லாம் ஒரு முடிவுக்கு கொண்டு வர உறுதி எடுக்க வேண்டும் அனைவரும்.

VANJOOR said...

AS THERE IS A WIDE BOMBINGS BEEN CARRIED OUT, THE BOMBERS MAY HAVE BEEN SEEN BY MANY CITIZENS.

IT IS TIME FOR EACH AND EVERY CITIZEN SHOULD COME FORWARD AND PROVIDE THE EVIDENCES TO CATCH ALL THE BOMBERS/GROUPS.

THE BOMBERS AND WHOLE BASE OF THE GROUP SHOULD BE DETAINED AND SHOULD BE EXECUTED .

NO MERCY SHOULD BE SHOWN TO ANY TERRORIST FROM ANY SOURCE AS THEY ARE KILLING THE INNOCENTS WITHOUT MERCY.

WE WANT PEACE PEACE PEACE AND THE RIGHT FOR EACH AND EVERY CITIZEN OF INDIA TO LIVE IN PEACE AND HARMONY WITH ONE ANOTHER.

I AM VERY SADDENED AND HAVE NO WORDS TO EXPRESS MY FEELINGS.

நண்பன் said...

NDTVயின் பாசு குறிப்பிட்டது -

காபி ஷாப் மற்றும் ரெஸ்டாரெண்ட் போய், ஒரு குறிப்பிட்ட நேரத்தில் தாக்குதலைத் தொடங்கியவர்கள் - ஹோட்டல் ஊழியர்களிடம் கேட்ட விவரங்கள் -

அமெரிக்க, பிரிட்டன் பாஸ்போர்ட் உடையவர்கள் இருக்கிறார்களா என்று. பிணயக் கைதிகளாக பிடிக்கப்பட்டிருப்பவர்கள் - பெரும்பாலும் இவர்களாக இருக்கக் கூடும் என்று தெரிய வருகிறது.

அவர்களது நோக்கம் - வளர்ந்து வரும் - இந்திய தேசத்தின் பெருமையை சீர் குலைப்பது சர்வதேச அளவில் என்பதாகா இருக்கலாமென்று சொல்லப்படுகிறது.


அவர்கள் வந்த படகு - மிதவை படகு கைப்பற்றப்பட்டிருக்கிறது.

நண்பன் said...

An international conference with the participants from Israel was going on in Taj.

மெல்ல மெல்லப் புரிய வருகிறது.

1972 மூனிச் ஒலிம்பிக்கில் கொல்லப்பட்ட யூத ஒலிம்பிக் வீரர்கள் தான் நினைவிற்கு வருகின்றனர்.

செய்தி - எப்படி இது சாத்தியம்?

1. International Conspiracy
2. Shade of Underworld participation
3. Participation of Locals.

100க்கும் அதிகமான சாவு.

அமெரிக்க, பிரிட்டன், இஸ்ரேலிய பிரஜைகள் பிணைக்கைதிகள்.

தாஜ் ஹோட்டல் மொத்தமாக சேதமடைந்திருக்கிறது.

ஒரு தாஜ் அதிகாரி பேசினார் - குரல் மட்டும் ஒலித்தது -

We will rebuild every inch of Taj to its full glory and grandeur.

Yes. Mumbai had already started to looking forward.

நண்பன் said...

இஸ்ரேலிய பிணைக்கைதிகளாக நாரிமன் ஹவுஸ்சிலும் சிலர் பிடித்து வைக்கப்பட்டிருப்பதாகத் தெரிகிறது.

ராணுவம், கம்மாண்டோஸ் எல்லோரும் தயார் நிலையில் ஒரு வார்த்தைக்காகக் காத்திருக்கின்றனர். GO.

ஆனால், குவிக்கப்படும் அரசு அதிகாரிகள் - பேச்சு வார்த்தைகள் தொடங்கப்படும் என தெரிய வைக்கிறது.

ஆனால் இந்தியாவின் பெயரை சர்வ நாசப்படுத்துவது என்பது ஒன்று தான் அவர்களுடைய நோக்கமென்றால், அதை நிறைவேற்றியே இருக்கிறார்கள் என்று தான் சொல்ல வேண்டும்.

- பள்ளி கல்லூரி மற்றும் அலுவலகங்கள் மூடியிருக்கும் இன்று.

- பங்கு சந்தைகள் அனைத்தும் மூடப்பட்டு விட்டன.

- சர்வ தேச விமான கம்பெனிகள் தங்கள் விமானங்களை ரத்து செய்திருக்கின்றன. (3 சர்வீஸ்கள் - லுஃப்தான்ஸா உட்பட)

- பன்னாட்டு மக்களைக் காக்க இந்தியா தவறிவிட்டது என்ற அவப்பெயர்.

- இங்கிலாந்து கிரிக்கெட் குழு ஊர் திரும்ப விரும்புகிறது.

இந்தியா தன் பெயரை மீட்க வேண்டுமானால், it should act ruthlessly and quickly.

AND HANG THEM IN THE PUBLIC - NO DECENCY TO THESE BASTARDS.

VANJOOR said...

நண்பன் said...//இந்தியா தன் பெயரை மீட்க வேண்டுமானால், it should act ruthlessly and quickly.

AND HANG THEM IN THE PUBLIC - NO DECENCY TO THESE BASTARDS.//

I AGREE IN FULL WITH YOUR FEELINGS/ COMMENT. EVEN THE BOMBERS CARRY MUSLIM NAMES.

VANJOOR வாஞ்ஜுர்

Anonymous said...

//A Salute to you all Officers.

No amount of words would express our gratitude.

May God give the strength to your family to bear the losses//

குறிப்பாக, சமீபத்தில் நடந்த குண்டுவெடிப்புக்களின் பின்னால் இந்துத்துவ பயங்கரவாதம் இருப்பதை வெளிச்சத்துக்கு கொண்டுவந்த நேர்மையான அதிகாரி ATS Chief Hemant Karkere, உமக்கு எமது கண்ணீர் அஞ்சலி.!!!

இறைவன் உமது குடும்பத்திற்க்கு உமது இழப்பை தாங்கிக் கொள்ளும் சக்தியை தரட்டும்...!!!

நண்பன் said...

No Deal will be struck - but we will talk - உள்துறை அமைச்சகம் அறிவித்திருக்கிறது.

பர்கா தத்-துடன் பேசிய சில உயர் ராணுவ அதிகாரிகள் சொன்னது -

We are checking for booby traps, and other kinds of devices.

கனடியன் தூதரக அதிகாரிகள் சம்பவ இடத்தில் காத்திரூக்கிறார்கள். தங்கள் நாட்டு பிரஜைகளின் பாதுகாப்பு குறித்த கவலையுடன்.

பிரதமர், அத்வானி இருவரையும் மும்பைக்கு வரவேண்டாம் என பாதுகாப்பு அதிகாரிகள் வற்புறுத்தியதாகத் தெரிகிறது.

4 - 5 தீவிரவாதிகள் என்ற செய்தி இப்பொழுது 14 தீவிரவாதிகள் ((தாஜ் ட்ரைடண்ட் இரண்டிலும் சேர்த்து) என சொல்கிறார்கள்.

பாதுகாப்பு படையினரின் பணி இன்னமும் கடினமாகத் தான் தோன்றுகிறது.

பேசிய உயர் ராணுவ அதிகாரிகள் வைத்த வேண்டுகோள் - Do not try to quantify the number of terrorists, the time frame and it would become a long haul operation. The enemy had well planned the operation. And our operation is well underway - do not try to give too much information.

நண்பன் said...

// சமீபத்தில் நடந்த குண்டுவெடிப்புக்களின் பின்னால் இந்துத்துவ பயங்கரவாதம் இருப்பதை //

அநாநி,

தீவிரவாதத்தை மதங்களுடன் இணைத்ததன் மூலமே, தீவிரவாதத்தை எதிர்க்கும் சரியான திசையில் நமது உளவுத் துறை பயணிக்க முடியாமல் போய்விட்டது என்றே கருதுகிறேன்.

இனியாவது அந்தப் பிழையை யாரும் செய்யாமல், உணர்ச்சி வசப்பாட்டிற்கு ஆளாகாமல், கண்டிப்புடன் அணுக வேண்டும்.

ATS Chief Hemant Karkareயின் மரணத்திற்கு எந்த காரணத்தையும் கற்பிக்காமல், தீவிரவாதங்களுடன் போராடும் தன் பணியைச் செய்தார் என்ற அளவிலே நாம் பாராட்டுவதை நிறுத்திக் கொள்வோம்.

மொத்தம் 12 போலிஸினர் இறந்திருக்கிறார்கள். அனைவரையும் நன்றியுடன், தீவிரவாதத்திற்கு எதிரான யுத்தத்தில் மனித மாண்புகளைக் காக்கும் பணியில் இறந்தவர்களாக நினைவில் கொள்வோம்.

Anonymous said...

go and see srilanka tamil people why are you guy are concern about Indian people.


I strongly condemn this attack.
we have to fight to eradicate terrorism from India

நண்பன் said...

அநாநி

தீவிரவாதம் என்பது மக்களை பிளவு படுத்திப் பார்க்கும் மனநிலையிலிருந்து எழுகிறது.

உங்கள் மனநிலையும் அதேவாக இருக்கிறது. இலங்கையில் நாங்கள் எதைப் போய் பார்க்க வேண்டும்? யாரைப் பார்க்க வேண்டும்?

//go and see srilanka tamil people why are you guy are concern about Indian people.//

உன்னைப் போன்ற மனிதர்கள் இருக்கும் வரையில், தீவிரவாத ஒழிப்பு என்பது சரியான திசையில் பயணிப்பது என்பது இயலாது.

நல்லது கெட்டது என்ற அளவுகோலைப் பயன்படுத்தாமல், 'தமிழ்' என்ற அடையாளத்தைக் குறி வைக்கும் உன்னைப் போன்ற ஈனர்களால் ஓரு போதும் தீவிரவாதத்தை ஒழிக்க இயலாது.

// we have to fight to eradicate terrorism from India //

நிச்சயமாக, தீவிரவாதத்தை நாங்கள் ஒழிக்கப் பாடுபடுவோம் - we but minus you.

ஜோசப் பால்ராஜ் said...

இந்த தீவிரவாதிகளை எதிர்த்து போராடும் கமாண்டோக்களின் ஒரு ஒரு அசைவையும் நேரடியாக ஒளிபரப்பி தங்களது வியாபாரத்தை பெருக்கிக்கொள்ளும் தொலைக்காட்சி நிறுவனங்களை முதலில் தடை செய்து அனைவரையும் கடுமையாக தண்டிக்க வேண்டும்.
தீவிரவாதிகள் என்ன காட்டுக்குள்ள பதுங்கிக் கொண்டிருக்கின்றார்கள்? அவர்கள் இருப்பது நட்சத்திர விடுதியில், அங்கு டிவி இருக்காதா? அவர்களும் அதை பார்க்க மாட்டார்களா? முதலில் அங்கிருக்கும் எல்லா செய்தியாளர்களையும் வெளியேற்ற வேண்டும். கமாண்டோக்கள் ஹோட்டலில் ஏறுவதைக் கூட நேரடி ஒளிபரப்பு செய்யும் மூடர்களை என்ன செய்வது? நம் கமாண்டோக்களின் அசைவுகளை தொலைக்காட்சியில் பார்த்து அந்த தீவிரவாதிகள் எதிர்நடவடிக்கையில் ஈடுபட்டு நம் கமாண்டோக்கள் தாக்கப்பட்டால் என்ன செய்வது? அது கூடவா தெரியாது இந்த முட்டாள் தொலைகாட்சிகாரர்களுக்கு? முதலில் நம் காமாண்டோக்கள் இவர்களை சுட்டுவிட்டு தங்கள் நடவடிக்கையை தொடர வேண்டும்.

ஜோசப் பால்ராஜ் said...

உயிரிழந்த காவல்துறை வீரர்களுக்கு என் அஞ்சலிகள்.

நண்பன் said...

ஜோசப் பால்ராJ,

இதை ஒரு வேண்டுகோளாகவே ஊடகங்க்ளுக்கு, அதிகாரிகள் வைத்தார்கள்.

ஆனால், அவர்கள் அதைப் பொருட்படுத்தவேயில்லை.

அவர்கள் அத்தனை விவரங்களைத் தர வேண்டிய அவசியமில்லை. உங்கள் க்ருத்துடன் முழுவதுமாக ஒத்துப் போகிறேன்.

சென்னை பித்தன் said...

//இந்தியா தன் பெயரை மீட்க வேண்டுமானால், it should act ruthlessly and quickly.

AND HANG THEM IN THE PUBLIC - NO DECENCY TO THESE BASTARDS.//
மிகச்சரியாகச் சொன்னீர்கள் .ஆனால் இந்த நாட்டில் இது நடக்குமா?அதற்கான துணிவு நம் ஆட்சியாளர்களிடம் இருக்கிறதா?

நண்பன் said...

நன்றி சென்னைபித்தன்.

தீவிரவாதிகளுடன் பேசுவதில்லை என்ற முடிவில் இறுதிவரை உறுதியாக நின்று, அனைவரையும் அழித்தொழித்ததே அது நடக்கும் என்ற நம்பிக்கையைத் தருகிறது.

ஆனால், அதற்குள்ளே வந்து, ஒவ்வொருவருக்கும் ஒரு கோடி தருகிறேன் என தன்னை முன்னிலைப்படுத்த முனைந்த மோடிகளைக் குறித்த கவலை இருக்கத் தான் செய்கிறது.

அவர் செய்ய விரும்பியதை எவருக்கும் தெரியாமல் செய்திருக்கலாமே.

இந்த குள்ளநரித்தனமிருக்கும் பொழுது, நம்பிக்கையின்மையும் கூடவே வருகிறது.

Anonymous said...

தீவிரவாத ஒழிப்பு என்பது சரியான திசையில் பயணிக்க வேண்டுமாயின் எல்லா இடங்களிலும் தீவிரவாதத்தை எதிர்க்க வேண்டும். இலங்கையில் செய்தால் வீரன் இந்தியாவில் செய்தால் பயங்கரவாதி என்ற நிலை மாறவேண்டும்.

நண்பன் said...

அநாநி,

தீவிரவாதத்திற்கும், ஒரு இனவிடுதலைப் போராட்டத்திற்கும் உள்ள அடிப்படை வித்தியாசம் கூடப் புரியவில்லையென்றால், முதலில் அதை உங்களுக்குச் சொல்லித் தர வேண்டும்.

ஹில்லரி க்ளிண்டனின் பேச்சின் ஒரு பகுதி இங்கு இருக்கிறது.

http://blog.tamilsasi.com/2008/11/islamic-fundamentalism-freedom-struggle.html

இதைப் படித்தால், உங்களுக்குத் தெளிவாகி இருக்கும்.

இல்லையா?

நண்பர்கள் சொல்கிறார்கள்

CSM - உலகச் செய்திகள்

GF - உலகச் செய்திகள்