"எழுத்துகளையும் தாண்டி எனக்கென்று ஒரு உலகம் உண்டு; நான் எழுதுபவற்றை மட்டுமே வைத்துக் கொண்டு, என்னை எடை போடுபவர்களை எப்பொழுதும் என் எண்ணங்கள் வியப்பில் ஆழ்த்திக் கொண்டே இருக்கும்....."
- நண்பன்

Monday, December 26, 2005

பாக்கிஸ்தானை நோக்கிய ஒரு பயணம் - சமுத்ராக்களுடன்.

My Sincere Thanks to :

India: A History - John Keay
Harper Collins Publishers London
Harper Collins Publishers India

// பி.கு.: ஜான் கீ எழுதிய இந்தியா: ஒரு வரலாறு (India: A History, John Keay) புத்தகத்தில் ஒரு சுவையான தகவல் கிடைத்தது. நமது மனுவுக்கும் Noahவுக்கும் ஒரு மிகப் பெரிய ஒற்றுமை உள்ளது. அது என்னவென்று தெரியுமா? க்ளூ : கப்பல். //

ஆஹா!!!

அற்புதம் சமுத்ரா!!!

நீங்கள் யார், எந்த சாதி என்ற தொல்பொருள் ஆராய்ச்சிகளுக்குள் நுழையாமல் - அது எனக்குத் தேவையற்றது என்பதால் - நேராக, நமக்குப் பிடித்த வரலாற்றிற்குள் வந்து விடுவோம்.

அ. மார்க்ஸ் அடிச்ச ஆப்புல, (அய்யோ, அப்படி இல்லையென்று சொல்வீர்கள் தான்) வேத மதங்களை விட்டு விட்டு, இப்போ semitic மதங்களையும் துணைக்குக் கூப்பிட்டு, எப்பாடுபட்டாவது, நாங்கள் இந்திய தேசத்தின் பூர்வ குடிகள் என்று நிறுவ முயற்சிக்கிறீர்கள். வாழ்க.

ஆனால், அதென்ன, நோவாவும், மனுவும் ஒன்றா? அப்படி ஜான் கீய் சொன்னாரா? இந்திய வரலாற்றுப் புத்தகத்தில்? அந்தப் புத்தகத்தைத் திறந்து வைத்துக் கொண்டு தான் கேட்கிறேன் - சொல்லுங்கள் எந்தப் பக்கமென்று?

ஜான் கீய் தன் வாதத்தை - ஹராப்பன் உலகம் என்ற காலத்தை நிர்ணயிக்க தொடங்கும் முதல் வாக்கியத்தை மட்டும் வாசித்து விட்டு, ஓடி வந்து விட்டீர்கள் - வலைப்பூவில் அந்தச் செய்தியைப் போட்டு விடலாம் எல்லோருக்கும் முந்தி என்ற ஆர்வத்தில் வந்து விட்டீர்கள். உங்கள் இருப்பை இந்த வாக்கியம் நியாயப்படுத்தும் என்று.

உங்களுடைய ஆர்வத்திற்குப் பாராட்டுகள். ஆனால், மீதியையும் வாசித்திருக்க வேண்டும் நண்பரே.

நீங்கள் வாசிக்க மறந்தவற்றை நான் சொல்கிறேன்::

The Harappan World - C3000 - 1700BC என்ற தலைப்பின் கீழ் இந்தியாவின் ஆதி காலத்தை ஆராயத் தொடங்கும் பொழுது அவர் நிர்ணயித்துக் கொண்ட கால அளவு - பிரளயம்.

எடுத்த எடுப்பிலேயே -

In the Bible, the Flood is the result of the divine displeasure. Enraged by man’s disobedience and wickedness, God decides to cancel his noblest creation: only the righteous Noah and his dependents are deemed worthy of survival and so of giving mankind a second chance. (பைபிளின் படி, இறைவனின் கோபத்தால், இந்த வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது.)

Very different, on the face of it, is the Indian deluge. According to the earliest of several accounts, the Flood which afflicted India’s people was a natural occurrence. (கிடைத்த தாரங்களின் படி, இந்தியாவின் வெள்ளப் பெருக்கு இயற்கையாக ஏற்பட்டது. ற்று வெள்ளப் பெருக்கு)

Manu - Noah’s equivalent - survived it thanks to a simple act of kindness. And amazingly, for a society that worshipped gods of wind and storm, no deity receives a mention.

மனு - நோவாவிற்கு சமதையானவராகக் கருதப்படுபவர் -
இவ்வாறு தன் ஒப்பீட்டைத் துவங்கி (முதல் பக்கத்தில்) 18 பக்கங்களுக்கு எழுதியவற்றை எல்லாம் ஒதுக்கி விட்டு, முதல் பக்கத்தோடு முடித்துக் கொண்ட உங்கள் வரலாற்று ஆர்வம் புல்லரிக்க வைக்கிறது, சமுத்ரா.

இனி நீங்கள் சொல்லாதவை -

மனுவிற்கு மீன் உதவிய கதையை ‘சதாபாதா ப்ரஹ்மான’ என்ற மிகுந்த வார்த்தைகள் கொண்டு, வேத புத்தகங்களுக்குப் பின் தொகுதியாக தொகுக்கப்பட்ட சுலோகங்களில் இருக்கிறது.

சமஸ்கிருதத்தின் மொழியியல் ஆய்வின் படி, இந்த வேதங்கள் இயற்றப்பட்டது - முதல் மில்லியனித்தில் (C1000) தான். இத்துடன் பின்னர் இணைக்கப்பட்ட ‘ப்ரஹ்மனா’ மற்றும் சமஸ்கிருதத்தின் உன்னத இலக்கியங்களாகக் கருதப்படும் ‘ராமாயாணம்’, ‘மஹாபாரதம்’ என்ற காவியங்கள் மூலமாகத் தான் C500க்குட்பட்ட இந்திய வரலாற்றை மரபுப்படி எழுத வேண்டியதிருக்கிறது என்கிறார் கீய்.

இந்த மீன் அவதாரத்தைத் தான் முதல் அவதாரமாக வேதங்கள் சொல்கின்றன. அதாவது விஷ்ணுவின் வரலாறு இங்கு தான் தொடங்குகிறது. அதற்கு முன் வரை விஷ்ணு என்ற கடவுளோ, தேவரோ இருக்கவில்லை.

வேதமதங்கள் - தங்களுக்கென ஒரு கடவுளை உருவாக்க முனைந்தது தான் இந்தக் கதை - காக்கும் கடவுள்!!! நீரிலிருந்து காத்தமைக்காக!!! (இல்லையென்றால், அதுவரையிலும் இந்தியா முழுமைக்கும் கடவுளாக இருந்த சிவத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும். ) Myth, howsoever remote, serves the needs of the moment. So does history, in India as elsewhere.

மீண்டும் இந்தப் பிரளய காலத்திற்கு வருவோம். நோவாவின் காலத்தில் நிகழ்ந்ததாகக் குறிப்பிடப்படும் இந்த வெள்ளப் பெருக்குக் காலத்தை 3102 BC என குறிக்கின்றனர். அதற்கு ஆதாரமாக ஈராக்கின் மெசபடோமியா ஆற்றுப் படுகைகளின் மீது நிகழ்த்தப்பட்ட தொல்பொருள் துறையின் ஆய்வுகள்.

மிகமோசமாகப் பரவிய வெள்ளப் பெருக்கு விளைநிலங்கள் மீது கொட்டிய மண்படுகைகளை - உபயோகமற்றதாக்கிய படிமங்களைத் தோண்டி எடுத்துள்ளார்கள். மெசபடோமியாவின் ஷ¤ருப்பாக் என்ற நகர் மூழ்கியதைக் கண்டு பிடித்திருக்கிறார்கள். இதையெல்லாம் கொண்டு, அந்த வெள்ளப் பெருக்கின் காலம் 3102கிமு என்று குறிப்பிடுகின்றனர்.

இந்தத் தேதியின் மீது தான் இப்போது ஆர்யர்களுக்குக் காதல் வந்து விட்டது. ஏனென்றால், இந்த வருடத்தோடு, தங்கள் இருப்பை இணைத்துக் கொண்டால், தாங்கள் இங்கே இருந்த பூர்வ குடிகளாக காட்டிக் கொள்ள முடியும்.

அதற்காகக்தான் - இந்தப் புதிய அரிதாரம்.

சரி, நமது ஆர்ய வெள்ளப் பெருக்கு எதைக் குறிக்கிறது? அதன் காலம் என்ன?
அந்நியர்களிடமிருந்தும் அந்நிய கல்வியிலிருந்தும் விடுதலை கிடைத்ததைக் கொண்டாடும் விதமாக, 1950ல், பல தொகுதிகள் அடங்கிய History and Culture of the Indian People என்ற வரலாற்று ஆய்வு நூல்கள் நடைமுறைப்படுத்தப் பட்டன. இந்திய வரலாற்று இயலாளார்களால் தொகுக்கப்பட்டு, எல்லோராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட இந்த வரலாற்று நூல்களின் படி மகாபாரத யுத்தம் நிகழ்ந்த வருடம் - 1400 BCக்குட்பட்டது.

கங்கை நதியில் ஒரு பிரளயம் ஏற்படுகிறது. தொல்பொருள் துறை ஆய்வின் படி அந்த வெள்ளப் பெருக்கின் காலம் - 800 கிமு. அந்த வெள்ளப் பெருக்கு அஸ்தினாபுரம் என்ற நகரத்தை அழிக்கிறது. இந்த நகரம் தான் அர்ஜுனனின் வழித்தோன்றல்களின் தலைநகரம். இவை சமஸ்கிருத மொழி வழக்கப்படி, பதிவு செய்யப்படுகிறது.

எப்படி?

யுத்தத்திலிருந்து ஏழாவது அரசன் காலத்தில் நிகழ்ந்ததாக. அதாவது மகாபாரதம் நிகழ்ந்ததே 975கிமு. என்பது தான். ஆக, மகாபாரத யுத்தத்தின் அதிகபட்ச காலம் 1400 - குறைந்தபட்ச காலம் 950.

சுமேரியாவில் நிகழ்ந்த வெள்ளப் பெருக்கிற்குப் பின்னும், அஸ்தினாபுரத்தின் இந்த வெள்ளப் பெருக்கிற்கு முன்னும் இன்னொரு வெள்ளப் பெருக்கு உண்டு - சிந்து நதிப்பள்ளத் தாக்கையும், முகத்துவாரத்தையும் அழித்தது அந்த வெள்ளப் பெருக்கு. அதாவது இன்றைய பாக்கிஸ்தானின் கராச்சி நகரும் அதன் சுற்றுப் புறங்களையும்.

ஆய்வாளர்களின் கூற்றின்படி அதன் வயது - 2000 கிமு. அந்த வெள்ளப் பெருக்கிற்கு முன் - அங்கு மிகுந்த புத்தி கூர்மை மிக்க ஒரு இனம் வாழ்ந்தது. விவசாயத்தைத் தொழிலாகக் கொண்டிருந்தார்கள். மிகுந்த தானியங்களைக் கொண்டு வியாபாரமும் செய்து வந்தனர். கைத் தொழில் செழித்து வளர்ந்தது. நகரங்கள் வளர்ந்தன. நைல் நதி, யூ·ப்ரடிஸ் நதி ஆகியவற்றிற்கு சமகாலத்தவர்களாக அவர்கள் வாழ்ந்தனர். உலகின் முதல் நகரங்களை உண்டாக்கியவர்கள் அவர்கள். நாகரிகத்தின் தொட்டில்களாக விளங்கினர்.

அப்பொழுது தான் அந்த வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. ஒன்றல்ல, அலையலையாக தொடர்ச்சியாக. நகரங்கள் அழிந்தன. காலங்கள் கடந்த பின்பு அந்த மண்மூடிய நகரங்களின் மீது புதிய இனங்கள் தங்கள் ஆடுகளை / மாடுகளை மேய்த்தனர். ஒரு மாபெரும் நாகரீகம் நம் நினைவிலிருந்து மறைந்தே போனது.

இப்படி ஒரு நாகரீகம் இந்தியாவிற்கு உண்டு என்பதையே 1920ம் ஆண்டில் தான் மீண்டும் கண்டுபிடித்தோம். சிந்துவின் மொகஞ்சதாரா பஞ்சாபின் ஹராப்பா கண்டுபிடிக்கப்பட்டன. சுமேரியா நாகரீகத்தின் தொடர்ச்சி என்று எண்ணினர். பின்னர், அதன் தனித்துவங்களைக் கண்டு, சிந்து சமவெளி நாகரீகம் என தனி இடம் கொடுத்தனர்.

இந்த ஆதாரங்களைக் கொண்டு, மீண்டும் வேதத்தையும், ராமாயாணத்தையும், மஹாபாரதத்தையும், மற்ற பிற புராணங்களையும் ஓதுவோம் -
சிந்து சமவெளி நாகரீகம் - முழுக்க முழுக்க ஆய்வின் படி நிர்ணயிக்கப்பட்டது. மற்றது முழுக்க முழுக்க இலக்கியத்தை மட்டுமே அடிப்படையாகக் கொண்டது. இந்த இரண்டையும் ஒப்பிட்டு நோக்கும் பொழுது - சிந்து சமவெளி நாகரீகத்திற்கும் வேத காலத்திற்கும் எந்த வித தொடர்பும் இல்லை என விளங்கும்.

ஹராப்பன் நாகரீகம் - கட்டிடங்கள், கருவிகள், நகைகள், சிற்பங்கள் இவற்றையெல்லாம் உள்ளடக்கியது. சிறந்த கட்டிட அமைப்புகள் - கழிவுக் கால்வாய் திட்டங்கள் எல்லாம் கொண்டது. சுமேரியாவுடன் கடல் வாணிபத் தொடர்பும் உண்டு. அதனால், இவர்கள் காலத்தை ஒப்பீடு செய்து உறுதிப்படுத்தவும் முடிந்தது. அத்துடன் carbon 14 dating செய்து, இந்த நாகரீகத்தின் வயதை ஒரு நூறு வருடங்கள் முன்பின் துல்லியத்துடன் நிரூபிக்க முடிந்தது.

அவர்கள் மொழிக்கு எழுத்து வடிவமும் இருந்தது. நானூறு எழுத்து வடிவங்கள் அடையாளப்படுத்தப்பட்டுள்ளன. அவை வலமிருந்து இடமாக வாசிக்கப்பட்டன. சமஸ்கிருத மொழியியலாளர்கள் அதை சமஸ்கிருதம் இல்லையென உறுதிபட கூறிவிட்டனர். அந்த மொழி திராவிட மொழிகளுடன் தொடர்பு உடையதாக இருக்கலாம் - பிரஹ்மி என்ற மொழிக்கு முந்தையதாக இருக்கலாம். இந்த பிரஹ்மி ஒரு காலத்தில் இந்தியா முழுமைக்கும் பரவி இருந்தது. அதாவது திராவிட தொடர்பு - ஆதிக்கம் இந்தியா முழுமைக்கும் இருந்தது.

இதை அம்பேதகரும் பல இடங்களில் வற்புறுத்தி வந்துள்ளார். அ. மார்க்ஸ் அவர்களும், இன்னமும் திராவிட தொடர்புடைய மொழியின் சில கூறுகள் வட இந்தியாவிலும், பாக்கிஸ்தானின் சிந்து வெளியிலும் புழக்கத்தில் இருப்பதை கூறியுள்ளார்.

மிகச் சிறந்த கல்வியாளர்கள், கணிணிகள், குறியீடுகளை உடைப்போர் இவர்களால் கூட இன்னும் வாசிக்க முடியாத குறியீடுகளில் ஒரு மாபெரும் வரலாறு முடங்கிக் கிடக்கிறது.

இதற்கு மாறாக - வேதங்கள் தருவதோ - மலைமலையாக பெயர்களை மாத்திரமே. வழிவழியாக குலத்தோன்றல்கள் பெயர்களைக் குறிப்பிட்டு, அதன் மூலம் மனுவை சென்றடைகின்றனர்.

மனுவின் காலம் கிமு 3102 என்றால், மரபுவழி தங்கள் கடந்த காலத்தின் பழம்பெருமைகள் பேசும் இந்த வேதங்கள் - ஆய்வின் படி நிரூபிக்கப்பட்ட இந்த ஹராப்பன், மொகஞ்சதாராவின் பெருமைகளையும், அந்த இனத்தையும் தன் இலக்கியங்களில் குறிப்பிட்டிருக்க வேண்டும். ஆனால் குறிப்பிடப்படவில்லை. அதைப் பற்றிய ஒரு distant knowledge கூட இல்லாதவர்களாக வேத இன மக்கள் இருந்திருக்கிறார்கள்.

இந்த வேத காலத்து மக்கள், கிமு 2000க்கு முன் என்ன நிகழ்ந்தது என்பதை அறிந்திருக்கவில்லை. வேதங்களில் அது குறிப்பிடப்படவில்லை. ஏனென்றால், அவர்கள் ஞானத்தில் அது இல்லை.

இந்த இரண்டு நாகரீகங்களையும் இணைக்கும் எந்த ஒரு தொடர்பும் இருக்கவில்லை. வேத காலத்தின் ஆதி - மிஞ்சி மிஞ்சிப் போனால் கிமு 1400ஐத் தான் தொடும். அதற்கு முன் அது போவதில்லை.

இன்று தேசியம் பேசித் திரியும் சில அரசியல் கட்சிகளும் அதன் இந்துத்வா தலைவர்களும் தான் - வேத காலத்தின் வயதை முன்னுக்குத் தள்ள முயற்சிக்கின்றனர். தாங்கள் வந்து மேய்ச்சலில் ஈடுபட்ட நிலங்களையும், தங்கி இருந்து தோற்றுவித்த வேத மதங்களையும் - இந்தியா - அகண்ட பாரதம் என்ற எல்லைக்குள் கொண்டு வர முயற்சி செய்கின்றனர்.

ஜான் கீய் கூற்றுப் படி, இந்தியா என்றுமே - பூகோள அமைப்பிலும் சரி, தேசங்களின் அமைப்பிலும் சரி ஒரு நாடாக இருந்ததில்லை. இதை அவர் கூறுவதைக் கொண்டே கேளுங்கள் - பக்கம் 7ல்:: Despite the pick-and-preach approach of many nationalist historians, geographical India is not now, and never has been, a single politico-cultural entity. ஆமாம், இந்தப் புரிதலுடன் தான் நாம் இந்தியர்களாக இருக்க முடியுமே தவிர, இவற்றை மறந்தல்ல.

மேலும் நீங்கள் வாசித்த முதல் பக்கத்தைத் தாண்டினால், இத்தனை செய்திகள் இருக்கின்றன.

வேதங்களின் வயது - கிமு1400க்குள் தான். மனுவின் காலம் - மிகை இல்லையென்றால் கிமு 2000க்குள் தான். (அப்படி ஒருவர் இருந்திருக்கும் பட்சத்தில்) வேதங்களை - இந்து அந்தண மதத்தை - ஆர்யர்கள் தங்கி வடிவமைத்த இடம் - பாக்கிஸ்தான்.

ஆமாம், ஆர்யர்களின் நவீன தோற்றுவாய்கள் - தாயகம் பாக்கிஸ்தானில் இருக்கிறது. அதற்கும் முன்னர் ஈரானில் இருக்கிறது.

சமுத்ரா - நீங்கள் தமிழன் / அய்யர் இல்லை தான். ஆனால், ஆர்யன் இல்லையென்று கூற மறந்து விட்டீர்கள். நீங்கள் பேசிய - பலவற்றிற்கு இந்த கட்டுரையில் விடை இருக்கிறது.

வைகோவைப் பற்றிய பதிவில், இந்திய தேசியத்திற்கு விளக்கம் தேட முனைந்தீர்கள். நீங்கள் கூற விளையும் தேசப்பற்று, உங்களுக்கு உகந்த சுயநலம். அதை மறுப்பவர்களை நிறுவச் சொல்வீர்கள் - தேசப்பற்றை.

எங்கள் தேசப்பற்றை எவருக்கும் நிறுவ வேண்டிய அவசியம் எங்களுக்கில்லை.

அகண்ட பாரதம் பற்றி பேசுகிறீர்கள் - எப்படியாவது ஹராப்பாவையும், மொகஞ்சதாராவையும் இந்தியாவுக்குக் கொண்டு வந்துவிட வேண்டும் - பின்னர் வரலாறு தங்கள் கைக்குள் என்று எண்ணித் தான் தேசியம் பேசுகிறீர்கள்.

அகண்ட பாரதம் என்று.

அ.மார்க்ஸ் கூறியது போல, இது கொஞ்சம் அபத்தம் தான் - அந்தண மதத்தின் மூலம் - பாக்கிஸ்தானில் இருக்கிறது என்றால்!!!

அடுத்த முறை முஸ்லிம்களைப் பார்த்து பாக்கிஸ்தானுக்குப் போ என்று இரைச்சலிடும் பொழுது, நினைவில் வையுங்கள், எங்களுக்கு வழிகாட்டியாகப் பெட்டி படுக்கையோடு, நீங்களும் வர வேண்டியதிருக்கும் என்பதை.

மேலும், புத்தகங்களை வாங்கிப் படியுங்கள். வாங்குவது போல ஒன்றிரண்டு பக்கங்களைப் படித்து விட்டு, வரலாறு பேச வந்துவிடாதீர்கள்.

எங்கள் புத்தக அலமாரியில் இந்தப் புத்தகங்களும் இருக்கின்றன.

வரலாறுகளைப்பற்றிய வரலாறு விரைவில் வருகிறது விரிவாக,.

23 comments:

ravi srinivas said...

you deny the genocide of jews and you talk of history.if you have some respect for history and truth you would not have denied the holocaust.

Samudra said...

Please see page no : 1
Chapter Name : "The Harappan World"
c3000 - 1700 BC.

This is the text in the first paragraph "In the HINDU tradition, as in Jewish and Christian tradition, history of a manageable antiquity is sometimes said to start with Flood"

Last paragraph :
"[One day] the fish forewarned Manu of a forthcoming flood and advised him to prepare a ship and enter into it when the flood came"

I shall post a picture of the same page in my blog very soon.

I shall also try to answer many of your queries with respect to Aryan theories,my identity etc in my blog my evening.

You see, I cant write out of hate.I write based on facts and what I read unlike some of you Moslem writers here.


Rgds
Samudra.

பகுத்தறிவாளன் said...

நண்பன், மிக அருமையாக ஆராய்ந்துள்ளீர்கள்.

தற்காலத்திய முஸ்லிம்களுக்கு இது மிகச் சிறந்த முன்னுதாரணமாக இருக்கும்; இருக்க வேண்டும்.

வரலாறுகளை தெரிந்திருக்கவில்லையெனில் சமுத்ராக்களின் அபத்தங்களையும், பொய்களையும் உண்மை என்று நம்பிக் கொண்டிருக்க வேண்டி வரும் என்பதை மிக அழகாக நிறுவியுள்ளீர்கள்.

அவர்களின் "ஆரிய சமூகம் இந்தியாவில் வந்தேறியவர்களல்ல" என்பதை நிரூபிப்பதற்கு காலம் காலமாக "நடந்த ஓர் உண்மையோடு நடக்காத ஓர் பொய்யை கூட்டி சேர்த்தால் பொய்யும் உண்மையோடு சேர்ந்து உண்மையென்றாகி விடும்" என்ற தத்துவத்தின் படி செயல் படுவதை ஒரு சிறிய உதாரணத்தின் மூலம் நிரூபித்துள்ளீர்கள்.

இதனை சாதாரணர்களுக்கும் புரியும் ஓர் உதாரணத்தோடு கூற வேண்டுமெனில், "சுவாமி ஐயப்பனின்" வரலாறை கூறலாம்.

"சுவாமி ஐயப்பனின் காலம் என்ன?", "முஸ்லிம்களின் காலம் என்ன?"!

முஹம்மது நபியின் இஸ்லாத்தின் காலம் வெறும் 1400 ஆண்டுகள். அதாவது சுமார் 1400 ஆண்டுகளுக்கு முன் தான் அரேபியாவில் முஹம்மது நபி இஸ்லாத்தினை புனர்நிர்மாணித்தார். இதே காலத்திலேயே இஸ்லாம் இந்தியாவில் வந்தது என்று வைத்துக் கொண்டாலும் "சுவாமி ஐயப்பனின்" நண்பன்(!!!?) "வாவரின்" காலம் வெறும் 1400 ஆண்டுகள் தான்.

அவர்களின் கூற்று படி "வாவரும் ஐயப்பனும் சந்தித்திருந்தார்கள் எனில்" ஐயப்பனின் காலமும் 1400 ஆண்டுகள் என்று ஆகிறது. எனில் ஐயப்பன் 1400 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்ததாக ஒரு சரித்திர குறிப்பாவது இவர்களுக்கு காட்ட முடியுமா?

இருந்தால் தானே காட்டுவதற்கு? எனவே தான் அழகாக ஜோடித்தார்கள், "இவ்வுலகில் வாழ்ந்த வாவரையும், இவ்வுலகில் வாழாத அல்லது வாழ்ந்ததற்கு ஆதாரமில்லாத ஐயப்பனையும்!". "மக்கள் ஆதாரம் உள்ள ஒன்றை ஏற்றுக் கொண்டால் அதனோடு சம்பந்தப் பட்டதாக வரும் மற்றொன்றையும் கேள்வி கேட்காமலேயே ஏற்றுக் கொள்வார்கள்" என்ற எண்ண்த்தின் படி மக்களின் மனதில் அழகாக பொய் கதைகளை ஏற்றி விட்டு குளிர் காய்கிறார்கள்.

அதே முறையைத் தான் சமுத்ராவும் "நோவா, மனு" விஷயத்தில் கையாண்டிருக்கிறார். இதிலிருந்து சமுத்ரா தன்னை தான் யார் என்று கூறாமலே தன்னை அழகாக வெளிப்படுத்தியுள்ளார்.

ஒரு முறை அபூ முஹையின் பதிவில் "ரவி சிறீனிவாஸ், தருமி" போன்றவர்களை தன்னோடு இணைத்து தாங்கள் யார் என்பதை சொல்லாமல் சொல்லியவர், அவருடைய இவ்வெளிப்படுத்தலின் மூலம் தான் "ஆரியன்" தான் என்பதையும் தாங்கள் இந்தியாவின் பூர்வீக குடிகள் என்று ஆக்கி தீர்க்க என்ன வேண்டுமானாலும் செய்வோம் என்பதையும் சொல்லாமல் சொல்கிறார்.

அவரின் முகத்தினை ஆதாரத்துடன் வெளிப்படுத்தியமைக்கு நன்றி நண்பனுக்கு!

Samudra said...

நன்பருக்கு எனது பதில் - போவோம் பாகிஸ்தானை நோக்கி!

நனபரே,

//அ. மார்க்ஸ் அடிச்ச ஆப்புல, (அய்யோ, அப்படி இல்லையென்று சொல்வீர்கள் தான்) வேத மதங்களை விட்டு விட்டு, இப்போ semitic மதங்களையும் துணைக்குக் கூப்பிட்டு, வாழ்க.
//

முதலில் யார் இந்த அ.மார்கஸ் ?
யாராகவோ இருந்த்து விட்டு போகட்டும்.

(ரஷ்யா, சீனா, வடகோரியாவில் மக்களை இன்றும் கொன்று குவிக்கும் கம்யுனிஸ்டகளை பார்த்தால் எனக்கு பிடிக்காது.அமெரிக்கா மற்ற நாட்டு மக்களை தான் குண்டுபோட்டு கொன்று குவிக்கும்,அனால் இந்த கம்யுமனிஸ்டகள் மிக கெவலமானவர்கள், தங்கள் மக்களையே சாதாரனமாக சுட்டுகொள்ளுவர்.)

//எப்பாடுபட்டாவது, நாங்கள் இந்திய தேசத்தின் பூர்வ குடிகள் என்று நிறுவ முயற்சிக்கிறீர்கள். //

நான் பிறந்த்து 1985ஆம் ஆண்டு.
பூர்வகுடியா இல்லையா என்று பார்த்து எனக்கு வோட்டு போடும் உரிமை கொடுப்பதில்லை.
இதனால் நான் அதை பற்றி எல்லாம் கவலைபடுவதில்லை.

எந்த ஜாதியயும் எனக்கு திட்ட வேண்டிய அவசியமும் இல்லை, அதனால் மற்ற ஜாதியினர் எங்கு இருந்து வந்தனர் என்றும் நான் ஆராயந்து பார்த்து கொண்டு இருக்க வேண்டியது இல்லை.

//வாழ்க//

நான் வாழ்வேன், கோவையில் குண்டு வெடித்த பொது தப்பித்தேன்.அயுசு கெட்டி எனக்கு.

//ஆனால், அதென்ன, நோவாவும், மனுவும் ஒன்றா? அப்படி ஜான் கீய் சொன்னாரா? இந்திய வரலாற்றுப் புத்தகத்தில்? அந்தப் புத்தகத்தைத் திறந்து வைத்துக் கொண்டு தான் கேட்கிறேன் - சொல்லுங்கள் எந்தப் பக்கமென்று?
//

இருவருக்கும் something common இருப்பதால் ஒரு trivia பொல எழுதிய கேள்வி அது.
இதில் எதோ நான் சதி செய்து அதையும் இதையும் நுழைக்க முயற்ச்சி செய்வதாக பயபட வேண்டாம்.

இருவர் கதையிலும் வெள்ளம் வருகிறது.இதை தான் நான் பெரிய ஒற்றுமை என்றேன்.பயபடாதிர்கள்.

பைபிள் எல்லாம் படிக்கும் அளவுக்கு எனக்கு நெரம் கிடைப்பது இல்லை.
சங்கரர் commentry எழுதிய உபநிஷத்துகளை இப்போது படிக்க முயற்ச்சி செய்து கொண்டு இருக்கிறேன்.
பார்ப்போம்.

//அடுத்த முறை முஸ்லிம்களைப் பார்த்து பாக்கிஸ்தானுக்குப் போ //
எப்போது அப்படி நான் கூறினேன் என்று தெரிவியுங்கள்.
மாறாக பரம் வீர் சக்ரா விருது கொடுக்கபட்ட ஒரு முஸ்லிமை பற்றி எழுத நல்லடியார் போன்றோர் இடம் கேட்டு உள்ளேன்.
என்ன எழுதினாலும் Negative ஆக தான் எழுதுவோம் என்று முடிவுகட்டிவிட்டு எழுதினால் இதை பற்றி எல்லாம் எழுத முடியாது.என்னை போன்றோரை ஜாதி பெயர் சொல்லி திட்ட தான் முடியும்.
//மேலும், புத்தகங்களை வாங்கிப் படியுங்கள். வாங்குவது போல ஒன்றிரண்டு பக்கங்களைப் படித்து விட்டு, வரலாறு பேச வந்துவிடாதீர்கள்.//

450 ரூபாய கொடுத்து வாங்கி படித்துவிட்டேன் - ஒரு வருடம் முன்பே.

//வரலாறுகளைப்பற்றிய வரலாறு விரைவில் வருகிறது விரிவாக,.//
வெள்ளைகாரனும், கம்யுனிஸ்ட்களும் இந்திய வரலாறு எழுதினால் எப்படி இருக்கும் என்று எனக்கு தெரியும்.அதை அப்படியே வாந்தி எடுத்தாலும் எப்படி இருக்கும் என்று எனக்கு தெரியும்.
(அப்படியே உஙகள் அந்த பொலி BLOGGER-ID எல்லாம் தயாராக இருக்கட்டும், நிறைய + மார்க பொட்டு அனைவரும் படிபபது போன்ற தோற்றம் எற்படுத்த மிக அவசியம்)
இறைநேசன் தான் இன்னும் பதில் சொல்லகானோம்..
அவருக்கு பதில் நிங்கள் என்னை தாக்கி எழுதியாகிவிட்டது.
ஜெய் ஹிந்த்!
(என்னிடம் Green Card இல்லை)

Samudra said...

எனது பதில்கள் எனது வலைபூவிலும் உள்ளது.

http://mymeikirthi.blogspot.com/2005/12/blog-post_113557301033204815.html

Samudra said...
This comment has been removed by a blog administrator.
அப்பாவி said...

//அடுத்த முறை முஸ்லிம்களைப் பார்த்து பாக்கிஸ்தானுக்குப் போ என்று இரைச்சலிடும் பொழுது, நினைவில் வையுங்கள், எங்களுக்கு வழிகாட்டியாகப் பெட்டி படுக்கையோடு, நீங்களும் வர வேண்டியதிருக்கும் என்பதை.//

இந்த வார்த்தைகளை மிகவும் ரசித்தேன்!

நண்பன் said...

//you deny the genocide of Jews and you talk of history. If you have some respect for history and truth, you would not have denied the holocaust. //

Ravi Srinivasji,

Thanks for affording your time to read and make a comment.

You know, any human would always have a tendency to divert the topic of the discussion, when they find the subject matter too hot to handle.

And your comment was one such.

But alas, see, I do not have any intention to let you hijack this post from its intended course of discussion.

You talk about history.

Before that, why not let me raise a question to you - whether you do really have the required comprehensive capability to understand and assimilate the subject matter written under Holocaust?

Historians of American and European origins wrote the subject matter and I had provided the names of all those books by them.

The article clearly stated that the Holocaust to be debated and should not be construed as a matter of patriotism by those countries, which had imposed a ban on discussion.

The ban is an oppression and violation of the fundamental rights of a human being and such a law exists in the most civilised world of Europe and America - not in any other third world countries.

I closed that article with a statement that if not publicized by the Iranian President, I too would have considered that it’s true - without even questioning the veracity of the claim by the democrats in so many countries. Now it is the responsibilty of those countries and their historians to prove that the Holocaust had really happened. Proove again. Or consider the evidences and re-open the debate.

Secondly, since you opened the issue - I say this for your information and knowledge since you seemed to have short supply of those things - I do not need to exonerate Hitler.

There is no purpose to that as far as I am concerned.

Hitler had claimed that he was the purest of all the Aryans and had more rights to live than any other human in the world. He was as good any of the present day Parpanism thinkers / intellectuals / supporters and I am fully aware of this when I was writing that the Holocaust to be reviewed - to give Hitler the justice, if he was innocent.

I do not know, whats your stand with respect to Hitler - but, I know, the RSS and Associates sang hymns in favour of Hitler in Gujarat. (ஹிட்லருக்கு தரவாக குஜராத்தில் பஜனை பாடியவர்கள் தான்ஆர் எஸ் எஸ் இயக்கத்தினர். )

It is not in my agenda to protect Hitler. (May be RSS)

If injustice had been imposed on Hitler, because he lost the war, then every just human had the right to get the historic facts corrected and Hitler be given the justice. Europeans and Americans wrote most of the letters to 7 Days Newspaper, expressing wonder and shock on the ban on the discussion.

I am a human being!!! You?

Any further discussion and clarification on this subject would be entertained only under the article and not elsewhere.

இந்தப் பதிவின் தமிழாக்கம் - நாளை.

Samudra said...
This comment has been removed by a blog administrator.
நண்பன் said...

சமுத்ரா -

உங்கள் பதிவு இந்த விவாதத்திற்கு சம்ப்பந்தமில்லையென்பதால் -

பதித்து நீக்கி விட்டேன்.

போலி பிளாக்கர்களைப் பற்றி குறிப்பிட்ட உங்கள் பதிவில் வரும் காசியைப் பற்றி எழுதிய விமர்சனம் - உங்களுடையது அல்ல என்று நீங்கள் குறிப்பிடுவதால் - அதையும் நீக்கி விடுகிறேன்.

கருத்து சுதந்திரம் என்ற பெயரில், போலிகளுக்கும், ஆபாசநாயகர்களுக்கும் புற வாசலைத் திறந்து வைக்கும் உங்களைப் போன்ற ஈனத்தை நான் செய்ய மாட்டேன்.

போலிகளைப் பற்றிப் புலம்பும் நீயே ஒரு போலி என்பது நன்றாகத் தெரியும். இருந்தாலும், உங்கள் மூலமாக வெளியே இருக்கும் அன்பர்கள் பேசத்தான் செய்கிறார்கள்.

அ.மார்க்ஸ் யார் தெரியாது என்று சொல்லும் நீ, முதலில், பெரியவர்களிடமிருந்து கற்றுக் கொண்டு வா. பிறகு பேசு. வசூல் செய்து, ப்ராஜக்ட் திட்டங்கள் போட்டு, உண்மைகளைத் திரித்து எழுத உங்களிடத்தில் ஒரு கும்பலே உண்டு.

உங்களை எதிர்ப்பவர்களோ தங்கள் சொந்த மூளையையும், சம்பாத்தியத்தையும் செலவு செய்து உங்கள் எழுத்துகளை மறுக்கிறார்கள் - காரணம் மனிதனின் இயல்பான உண்மையை அறிய ஆவல். அதனால் தான் ஒவ்வொரு பதிவிலும் நீங்கள் நிலை குலைந்து போகிறீர்கள். முகமூடிகளுடன் வலம் வருகிறீர்கள்.

பாவம் சமுத்ராக்கள்....

Samudra said...

நன்பரே,

//போலி பிளாக்கர்களைப் பற்றி குறிப்பிட்ட உங்கள் பதிவில் வரும் காசியைப் பற்றி எழுதிய விமர்சனம் - உங்களுடையது அல்ல என்று நீங்கள் குறிப்பிடுவதால் - அதையும் நீக்கி விடுகிறேன்.//

நன்றி.

//போலிகளைப் பற்றிப் புலம்பும் நீயே ஒரு போலி என்பது நன்றாகத் தெரியும்.//

முடிந்தால் நிருபித்துவிட்டு பிறகு பேசவும்.

//அ.மார்க்ஸ் யார் தெரியாது என்று சொல்லும் நீ, முதலில், பெரியவர்களிடமிருந்து கற்றுக் கொண்டு வா.//

கம்யுனிஸ்ட்களை பிடிக்காது என்ற எனது நிலைபாட்டில் இருந்து மாறும் உத்தேசம் இல்லை.

மற்றபடி வழக்கம் பொல நான் எழுப்பியுள்ள கெள்விகளுக்கு பதில ஒன்றயும் கானோம்.

மூர்த்தி said...

நண்பன்,

அருமையான ஒரு அலசல்.

ravi srinivas said...
This comment has been removed by a blog administrator.
நண்பன் said...

ரவி ஸ்ரீநிவாஸ்

உங்கள் பதிவு கிடைத்தது. பதிந்து நீக்கி விட்டேன்.

மீண்டும்,

உங்களுக்கு holocaust பற்றி விவாதிக்க விருப்பமென்றால் அங்கு இந்தப் பதிவை இடவும்.

இங்கு பேசப்படும் பொருளை பற்றி மட்டும் எழுதவும்.

பதிந்து நீக்குவதற்குக் காரணம் - to acknowledge your time and effort you are spending on my posts and also to keep the post alive on top for many to read.

Thank you and continue to read my posts.

No hard feelings!!!Bye, Bye!!!

நண்பன் said...
This comment has been removed by a blog administrator.
மு மாலிக் said...

இது ஒரு அருமையான சமூகப் பிரச்சனையைப் பற்றிய பதிப்பு. உங்களுடைய ஒவ்வொறு வரிகளிலும் லாஜிக் நிறைந்துள்ளது என்னை வியப்பில் ஆழ்த்துகிறது.

வலதுசாரி/சங்பரிவார்களின் 'பூர்வீக ஆரியர்கள் கொள்கை' (Aryan Non-invasion theory) -யில் அநேக விஷமங்கள் நிறைந்துள்ளன.

பலரும் வாழ்ந்து கொண்டிருக்கிற நாட்டில் திடீரென ஒரு சாரார்கள் எழுந்து 'நாங்கள் இந்த நாட்டின் பூர்வீகர்கள்' என வலியுறுத்துவதின் நோக்கம், அவ்வாறு தாங்கள் பூர்வீகர்கள் என்று அரசு இயந்திரங்களை ஒத்துக் கொள்ளச் செய்துவிட்டால், அந்த பூர்வீகத்தைக் காரணம் காட்டி தங்கள் சாதியக்கருத்துக்களை தேசியம் என்ற போர்வையில் அரங்கேற்றுவதுதான் என்பதைத்தவிர வேறெதுவுமில்லை.

அவ்வாறு செய்வதன் மூலம் அவர்களது தேசியமாக்கப்பட்ட சாதியக் கருத்துக்கள், அரசின் கொள்கைகளாக மாறும். பிறகு அரசு இயந்திரங்களான கல்வி-நிறுவனங்கள், ராணுவம், நீதி மன்றங்கள், காவல்துறை முதலியவற்றை இந்த அரசு கொள்கைகள் கொண்டு கைப்பற்ற இயலும் பின்பு இவைகளைக் கொண்டு எதுவும் செய்ய இயலும். இதுவே இவர்களின் நோக்கம்.

சில சமயங்களில் சங்பரிவாரத்தினர், 'ஆரியர்களை அந்நியர்கள் என்று வரலாறு கூறுவதால் அதனை ஆரியர்கள் என்ற முறையில் எதிர்க்கிறோம்; அதிலென்ன தவறு' என்று வாதிடுகின்றனர். இது ஒரு பூசி மெழுகும் வாதம். ஆரியர்களை அன்னியர்கள் என்று வரலாறு கூறவில்லை. ஆரியர்களைப் பற்றி 'மத்திய ஆசியாவிலிருந்து இந்தியத்துனைக் கண்டத்தில் குடியேறியவர்கள்' என்றே கூறுகிறது வரலாறு. அதற்காக இப்போதுள்ள ஆரியர்கள் அன்னியர்கள் என்று அர்த்தமல்ல. அதற்காக அவர்களை, 'மத்திய ஆசியாவான உஸ்பெக்கிஸ்தான், ஆர்மீனியா போன்ற நாடுகளுக்கு செல்லுங்கள்' என்று யாரும் கூறவில்லை. அவ்வாறு இருந்தும் அவர்கள் இதனைப் பற்றி பேசி, தாங்களை பூர்வீகர்கள் என்று அவர்கள் வலியுறுத்துவதன் நோக்கம், நான் மேலே கூறியது போல கொள்கை மேலாதிக்கத்திற்காகத்தான். அத்துடன் பிற்காலத்தில் படையெடுத்தவர்களாகிய ஆஃகானியர் / ஆங்கிலேயர்கள் மூலமாகப் பரவிய தத்துவங்களான இஸ்லாம் / கிறிஸ்தவம் போன்றவற்றைப் பின்பற்றுபவர்களை இரண்டாம் தரக் குடிமக்களாக ஆக்கவும் இந்த 'பூர்வீக ஆரியர்கள் கொள்கை' அரங்கேற்றப்பட்டு வருகிறது.

சங்கப்பரிவார்கள் உருவாக்கியுள்ள 'யார் இந்த நாட்டின் குடிமக்கள் ?' என்ற வரையறுப்பில், மக்களின் தாய் தந்தையர் இந்நாட்டினராக இருந்தால் மட்டும் போதாது; அவர்கள் பின்பற்றும் கொள்கை (அல்லது மதம்) இந்த நாட்டில் தொடங்கியதாக இருக்கவேண்டும். இது இஸ்லாமியர்கள் மற்றும் கிறிஸ்தவர்களின் குடியுரிமையைப் பரிக்கும் வரையறுப்பு.
இந்த நயவஞ்சக வரையறுப்பில் சீக்கியர்கள், சங்பரிவாரத்தினருக்குப் பிடிக்காவிட்டாலும் குடிமக்கள் ஆகிறார்கள். மேலும் "சாதி" எனும் ஆரியக் கொள்கையை எதிர்த்த காரணத்தினால் ஒரு காலத்தில் இந்தியாவிலிருந்து அகற்றப்பட்ட புத்த சமயத்தைப் பின்பற்றுபவர்களும் இந்த புதிய வரையறுப்பில் ஆரியர்களுக்குப் பிடிக்காவிட்டலும் இந்தியக் குடிமக்களாகிறார்கள். இந்த கையறு நிலையைப் போக்கவும், சாதி முறைகளைக் கட்டிக் காக்கவும் ஆரியர்கள் மற்றொரு கொள்கையையும் தயாரித்து இந்த 'பூர்வீக ஆரியர் கொள்கை'-யுடன் தருகிறார்கள். அதுதான் 'புத்தரைப் பத்தாவது அவதார'-மாக்கும் கொள்கையாகும். இவ்வாறு செய்வதன் மூலம் பெளத்தம் மற்றொரு கொள்கையாகயிராமல் ஆரியக் கொள்கையின் ஒரு அங்கமாகவே கருதப்படும். இவ்வாறு ஆரியர்களால் அனைத்து வழிகளிலும் சிந்தித்து உருவாக்கப்பட்டக் கொள்கைகள்தான் ...

(1) 'பூர்வீக ஆரியர்கள் கொள்கை',

(2) 'இந்தியக் குடிமக்கள் கொள்கை' மற்றும்

(3) 'புத்தர் - பத்தாவது அவதாரக் கொள்கை'.

இது பற்றி மேலும் விவாதித்து நான் என் வலைப்பதிவில் ஒரு பதிவிட்டுள்ளேன். தாங்கள் வருகை தந்து ஆராயவும். நன்றி

நண்பன் said...

மாலிக்,

நன்றி.

அருமையான அலசல் உங்கள் பதிவு.

நோவாவையும், மனுவையும் ஏன் இணைக்கப் பார்க்கிறார்கள் என்று தான் நான் எழுதினேன். ஆனால் அதன் பின்னால் இருக்கக் கூடிய ஆபத்துகளை நீங்கள் பட்டியலிட்டுவிட்டீர்கள்.

நான் எழுதுபவற்றை பெரும்பாலும் இஸ்லாமிய - பார்ப்பனிய மோதலாக மட்டும் தான் மற்றவர்கள் பார்க்கிறார்களோ என்று ஒரு ஐயம் உண்டு. மற்றவர்களையும் இது பாதிக்கும் என்பதையும் அவர்கள் இதில் எவ்வாறு சம்பந்தப்படுகிறார்கள் என்பதை தெளிவு படுத்துகிறது உங்கள் பதிவு.

உங்கள் சிந்தனைத் திறனும். பண்பட்ட நடையும் என்னை பெருமை கொள்ளச் செய்கிறது.

அன்புடன்
நண்பன்

நண்பன் said...

// அவர்களின் "ஆரிய சமூகம் இந்தியாவில் வந்தேறியவர்களல்ல" என்பதை நிரூபிப்பதற்கு காலம் காலமாக "நடந்த ஓர் உண்மையோடு நடக்காத ஓர் பொய்யை கூட்டி சேர்த்தால் பொய்யும் உண்மையோடு சேர்ந்து உண்மையென்றாகி விடும்" என்ற தத்துவத்தின் படி செயல் படுவதை ஒரு சிறிய உதாரணத்தின் மூலம் நிரூபித்துள்ளீர்கள்.//

பகுத்தறிவாளன் -

நன்றி.

நான் எழுதிய மொத்தக் கட்டுரையின் ஒரு சுருக்கம் போல அழகாக எழுதிவிட்டீர்கள்.

ஐயப்பன் கதையைப் போகிறது என விட்டு விடுங்கள். மத நல்லிணக்கத்திற்காக - ஒருவர் மீது ஒருவர் நேசம் கொள்வதற்காக செய்த ஒரு ஏற்பாடு என்று கூறி விடலாம்.

ஆனால், அகண்ட பாரத கற்பனைகள், மனுவும் நோவாவும் ஒன்று என திரிக்க முனைவது - பித்தலாட்டங்களை எழுதி அரங்கேற்றி வருவது ஏன் என அனைவரும் சிந்திக்க வேண்டும்.

இந்தத் தருணத்தில் மாலிக் அவர்கள் கட்டுரையும் படித்து விடுங்கள். இவர்களால் ஏற்படக்கூடிய ஆபத்துகளை மிகத் தெளிவாக சுட்டிக் காட்டி இருக்கிறார்.

அனைவரிடமும் விழிப்புணர்வு தோன்றிவிட்டாலே போதும் - இந்த வரலாற்றுப் புரட்டைத் தடுத்து விடலாம்.

இதை அ. மார்க்ஸ் போன்ற சமுதாய போராளிகள் தனித்து நின்று போராடிக் கொண்டே இருக்க முடியாது. அவரைப் போன்ற போராளிகளுக்கு அனைவரும் ஆதரவுக்கரம் நீட்ட வேண்டும்.

நண்பன் said...

//அடுத்த முறை முஸ்லிம்களைப் பார்த்து பாக்கிஸ்தானுக்குப் போ என்று இரைச்சலிடும் பொழுது, நினைவில் வையுங்கள், எங்களுக்கு வழிகாட்டியாகப் பெட்டி படுக்கையோடு, நீங்களும் வர வேண்டியதிருக்கும் என்பதை.

இந்த வார்த்தைகளை மிகவும் ரசித்தேன்! //


அப்பாவி -

மிக்க நன்றி.

அது ஒரு நகைச்சுவை உணர்வுக்காக எழுதியது.

நிஜத்தில் இனி அப்படி நடக்க வாய்ப்பில்லை. ஏனென்றால், இனி யாருக்குமே அவ்வாறு சொல்ல அருகதை இல்லை என்பதை காலம் நிரூபித்து விட்டது.

மேலும் இன்றைய முஸ்லிகள் அனைவரும், இங்கேயே பிறந்து வளர்ந்து, பின்னர் விரும்பி ஏற்றுக் கொண்ட மதம் தான் இது.

கணவாய் வந்தவர்கள் அல்ல.

இந்த உண்மையை அனைவரும் அறிவர்.

நண்பன் said...

மூர்த்தி

மிக்க நன்றி - உங்கள் கருத்திற்கு

நண்பன் said...

//

//வாழ்க//

நான் வாழ்வேன், கோவையில் குண்டு வெடித்த பொது தப்பித்தேன்.அயுசு கெட்டி எனக்கு.//

யாராக இருந்தாலும் வாழ்க என வாழ்த்துவது தமிழர் பண்பாடு.

இந்தப் பண்பாட்டைப் புரிந்து கொள்ள வயதும் அனுபவமும் வேண்டும்.


உங்களைப் போலி என்று சொன்னது -

- 20 வயது என புருடா விடுவது.

- அ.மார்க்ஸ் யார் என தெரியாது என்று அலட்டிக் கொண்டது.

- கம்ஸ்யூனிட்டுகளைப் பிடிக்காது என பதில் சொன்னது. அ.மார்க்ஸ் ஐ அறியாத பொழுது, பல வருடங்களுக்கு முன்னர் அவர் கம்யூனிஸ்டாக இருந்தார் என்பதை தெரிந்து வைத்திருப்பது.

- தன் நாட்டு மக்களைக் கொல்வது மட்டும் தான் குற்றம் என பிதற்றுவது.

- அமெரிக்கா அடுத்த நாட்டு மக்களைத் தான் கொல்கிறது என ஆதரவுக் கரம் நீட்டும் பைத்தியக்காரணாத் தனம்.

- ஆங்கிலத்தில் அட்சரசுத்தமாக எழுதுவது. ஆனால் அதேசமயம் தமிழில் தட்டச்சு செய்ய தடுமாற்றம் வருகிறது என நடிப்பது.

- திடீரென்று தமிழில் சரளமாக தட்டச்சு செய்வது

- கருத்து சுதந்திரம் என்ற பெயரில், இங்கு தடுக்கப்பட்ட நபர்களுக்கு புற வாசலைத் திறந்து வைத்திருப்பது.

- அதை நியாயப்படுத்த, மாடரேஷன் வசதி இருந்தும், அதை வழிமுறைப்படுத்தாமல் ஆபாச பின்னூட்டங்களையும் அனுமதித்து மனித நாகரீகத்தின் மீதே வன்மம் கொண்டு அலைவது.

இத்தனை போதாதா? சமுத்ரா என்பது ஒரு போலி என சொல்வதற்கு...

நான் கேட்ட கேள்விக்குப் பதில் சொல் என்பவரே - முதலில் கேள்வி என்ன என்பதை தெளிவாக சொல்லுங்கள்.

ஏற்கனவே இந்தக் கேள்வியை பல நண்பர்கள் கேட்டுவிட்டார்கள் - உங்கள் வலைப்பூவிலே -

பதில் தான் நீங்கள் கொடுக்க வில்லை இன்னமும்.

நல்லடியார் said...

நண்பன்,

சந்தர்ப்பத்திற்கேற்ற காரணங்களை சொல்லி நழுவும் சமுத்திராக்களுக்கு தகுந்த பதிலடி கொடுத்திருக்கிறீர்கள். இப்படித்தான் ஒரு வாதத்தை தொடங்கி எதிர்வினைகளுக்கு பதில் சொல்லத் தெரியாமல் திசை திருப்பியும் அல்லது வாதத்திற்கு சம்பந்தமில்லாததைச் சொல்லி தங்கள் "பக்க" வாதங்களைக் காட்டுவர்கள்.

இஸ்லாம் பற்றிய விவாதங்களில் பின்லாதினை என்னமோ இஸ்லாமியர்களின் பிரதிநிதி போல சித்தரிப்பார்கள் வசதியாக தங்கள் மத பின்லாதின்களுக்கு சாமரம் வீசிக் கொண்டு. தீவிரவாதம் பற்றி யார் வேண்டுமானலும் எதுவும் சொல்லலாம். ஆனால் ஒரு முஸ்லிம் தீவிரவாதத்தை எதிர்த்துக் கருத்துச் சொன்னால் கூட தாங்கிக் கொள்ள முடியாத அளவுக்கு சிலருக்கு தீவிரவாதத்தை எதிர்க்கும் ஏகபோக உரிமையுண்டு.

சமுத்திராவும் சரி நேசகுமாரும் சரி, இவர்களின் நோக்கம் ஒரு முஸ்லிம், அவர் வலைப்பதிவராக இருந்தாலும் கூட தீவிரவாத முத்திரை குத்தி தங்கள் உள்மன அரிப்புகளை சொரிந்து கொள்வதில் அலாதி இன்பம்.

ஆணித்தரமான கருத்துக்களை மிக அழகாகவும் தெளிவாகவும் சொல்கிறீர்கள். தொடரட்டும் உங்கள் பணி!

அன்புடன்,
நல்லடியார்

Samudra said...

இத்துனை நாள் பதில் அளிக்காமல் இருந்தர்க்கு மன்னிக்கவும்.

//யாராக இருந்தாலும் வாழ்க என வாழ்த்துவது தமிழர் பண்பாடு.

இந்தப் பண்பாட்டைப் புரிந்து கொள்ள வயதும் அனுபவமும் வேண்டும்.
//

கோவையில் குண்டுவெடிப்பு நிகழ்த்தியது யாராக இருப்பினும் அவர்கள் செத்து தொலையட்டும்.
மீண்டும் சொல்கிறேன் : நான் தமிழ்ன் அல்ல!

//- 20 வயது என புருடா விடுவது.//
எப்போது எங்கள் ஊருக்கு வந்தாலும் சொல்லுங்கள்.
உங்களை சந்திக்க தயார்!
//கம்ஸ்யூனிட்டுகளைப் பிடிக்காது என பதில் சொன்னது//
கம்யுனிஸ்ட்களை எனக்கு பிடிக்காது தான்.
உலகின் மிக அதிகமான் அடிமைகளை உருவாக்கிய இவர்களை எனக்கு பிடிக்காது.

//அதை நியாயப்படுத்த, மாடரேஷன் வசதி இருந்தும், அதை வழிமுறைப்படுத்தாமல் ஆபாச பின்னூட்டங்களையும் அனுமதித்து மனித நாகரீகத்தின் மீதே வன்மம் கொண்டு அலைவது.//
Moderation has been enabled now.Thank You.

நண்பர்கள் சொல்கிறார்கள்

CSM - உலகச் செய்திகள்

GF - உலகச் செய்திகள்