"எழுத்துகளையும் தாண்டி எனக்கென்று ஒரு உலகம் உண்டு; நான் எழுதுபவற்றை மட்டுமே வைத்துக் கொண்டு, என்னை எடை போடுபவர்களை எப்பொழுதும் என் எண்ணங்கள் வியப்பில் ஆழ்த்திக் கொண்டே இருக்கும்....."
- நண்பன்

Sunday, January 01, 2006

நான் வெற்றி பெற்றவன்

என் திரிதலெல்லாம்
என் தேடுதலெல்லாம்
முயற்சித்தோமென்ற சந்தோசமன்றி
வேறொன்றும் தருவதில்லை

எல்லோரிடமும்
நான் சொல்லிக்கொள்வதெல்லாம்
நான் வெற்றி பெற்றவன்

அனைவரும்
என்னைக் கேட்பதென்னவோ -
வெற்றியை
எப்பொழுது பார்த்தாயென்று?

வெற்றியை
யார் தான் சந்தித்தது?

எத்தனை
எவரெஸ்ட்களை ஏறினாலும்
என்னுடைய
எவரெஸ்ட் மட்டும்
வளர்ந்து கொண்டே போகிறது...

உச்சியை அடையாதது
தோல்வியல்ல -
ஏறாதிருப்பது தான் தோல்வி.

இன்னதுதான் தோல்வியென்று
கண்டுகொண்ட அன்று
என் வெற்றியைச் சந்திப்பேன்.

எல்லோரிடமும்

சொல்லிக்கொள்வதெல்லாம்
நான் வெற்றி பெற்றவன்

மறுப்பதற்கு எவருமில்லை
நான் வெற்றி பெற்றவன்

***
கவிதை வாசித்த அன்பு நண்பர்களுக்கு புத்தாண்டு வாழ்த்துகள்.

வெற்றி தோல்வி என்பது ஒரு Relative measurement தான்.

ஒப்பிட்டு அளக்கப்படும் செயல்பாடுகள்.

ஒப்பீடுகளை உதறித் தள்ளுங்கள்.

நீங்கள் உறுதியாக நம்புபவற்றை செயல்படுத்துங்கள் - பேசுங்கள்.


அது தான் வெற்றி.

உங்களைத் தூற்றுபவர்களைக் கண்டு ஆவேசம் கொண்டால் தோற்றுப் போவீர்கள். ஏனென்றால் அவர்கள் சீண்டுவது உங்கள் நம்பிக்கையை - தன்னம்பிக்கையை.

மீண்டும் வாழ்த்துகள்.

அன்புடன் நண்பன்.

10 comments:

Ram.K said...

அருமையான கவிதைக்கு நன்றி.

புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

நண்பன் said...

அன்பு நண்பர் chameleon,

நன்றி.

புத்தாண்டு வாழ்த்துகள்

அன்புடன்
நண்பன்.

இப்னு ஹம்துன். said...

அளவீடுகளில் அல்ல
'அளப்ப'வர்களிடம் உள்ளது
வெற்றியும் தோல்வியும்.

நல்ல கவிதை. நன்றி நண்பன்

நண்பன் said...

அன்பு நண்பர் இப்னு ஹம்துன்,

நன்றி.

புத்தாண்டு வாழ்த்துகள்.

அன்புடன்
நண்பன்

Pot"tea" kadai said...

நண்பனுக்கு இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!

நண்பன் said...

அன்பு நண்பர் pot"tea"kadai,

நன்றி.

புத்தாண்டு வாழ்த்துகள்

அன்புடன்
நண்பன்

ஞானவெட்டியான் said...

அன்பு நண்பரே!,
//உச்சியை அடையாதது தோல்வியல்ல - ஏறாதிருப்பது தான் தோல்வி"//

ஆம். அதுவே உண்மை. "ஒரு காரியத்தை முடிக்கவேண்டுமாயின் அதை முதலில் தொடங்கு."
முயற்சி திருவினையாக்கும்.

தங்களின் இல்லத்திலுள்ளோர் அனைவருக்கும் இதயங்கனிந்த புத்தாண்டு வாழ்த்துகள்.

பரஞ்சோதி said...

நண்பனுக்கு புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

முதன் முறையாக உங்கள் கவிதையை படித்தவுடனே புரிந்து கொண்டேன்.

நானும் வெற்றி பெற்றவன் தான்.

அன்புடன்
பரஞ்சோதி

நண்பன் said...

அன்பு நண்பர் ஞானவெட்டியான்

நன்றி.

இனிய புத்தாண்டு வாழ்த்துகள்

அன்புடன்
நண்பன்

நண்பன் said...

அன்பு நண்பர் பரஞ்சோதி

நன்றி.

இனிய புத்தாண்டு வாழ்த்துகள்

அன்புடன்
நண்பன்

நண்பர்கள் சொல்கிறார்கள்

CSM - உலகச் செய்திகள்

GF - உலகச் செய்திகள்