"எழுத்துகளையும் தாண்டி எனக்கென்று ஒரு உலகம் உண்டு; நான் எழுதுபவற்றை மட்டுமே வைத்துக் கொண்டு, என்னை எடை போடுபவர்களை எப்பொழுதும் என் எண்ணங்கள் வியப்பில் ஆழ்த்திக் கொண்டே இருக்கும்....."
- நண்பன்

Tuesday, February 20, 2007

இந்த வார நட்சத்திர வலைப்பதிவருக்கு ஒரு வேண்டுகோள்

வஜ்ரா,

// நண்பன் இந்த ஹோலோகாஸ்டையே குப்பைத் தொட்டியில் போடவேண்டும் என்று பதிவு போட்டு இந்த ஹோலோகாஸ்டை மறுபரிசீலணைக்கு உட்படுத்த வேண்டுகிறார்.

என்னைப் பொருத்தவரை, அவர் பதில் சொல்லவேண்டிய கேள்வி ஒன்றை ஒரு அனானி கேட்டு அது அப்படியே இருக்கிறது, அது ஹோலோகாஸ்ட் நடந்து அதில் ஆறு மில்லியன் (யூத) மனித உயிர்கள் பலியானதாகக் கூறப்படுவதை அவர் ஏற்கிறாரா ? என்பது தான்.

ஆம் என்றால் மறு பேச்சு, இல்லை என்றால் மறு பேச்சில்லை.

நடுவில் சென்று இல்லை, அதைத் தான் ஆராய்ச்சி செய்யனும் என்பது என்று ஜல்லியடிப்புகள் இருக்கக் கூடாது.
//

நீங்கள் குறிப்பிட்ட அநாநி, மூசா என்று நினைக்கிறேன். முன்பு அநாநிகளை உள்ளேயே விட அனுமதிப்பதில்லை என்று ஒரு நியதி வைத்திருந்தேன். ஆனால், ஒரு சில நண்பர்கள், 'உங்கள் பதிவில் பின்னூட்டமிட்டால், எங்களுக்கும் முத்திரை குத்திவிடுவார்கள். அதனால், எங்களையும் கொஞ்சம் அநாநியாக அனுமதியுங்கள்' என்ற வேண்டுகோளின் பேரில் தான் இந்த அனுமதியே.

நிற்க, நான் மூசா என்பவருக்குப் பதிலிறுக்கவில்லை என்ற வார்த்தைகளை மறுக்கிறேன். அவருக்குப் பதில் சொல்லி இருக்கிறேன். அவர் ஹோலோகாஸ்ட் விவாதத்திற்கு எங்குமே தடை விதிக்கப்படவில்லை என்று தடாலடியான ஒரு வாக்கியத்தை சொல்லி விட்டு, பிறகு தான் யூதர்கள் கொல்லப்பட்டார்களா என்ற கேள்வியை வைக்கிறார்.

அதனால் தான் அவரிடத்தில் சொன்னேன் - முதலில் அடிப்படை சங்கதிகளைத் தெரிந்து கொண்டு வாருங்கள். பிறகு பேசுவோம் என்றேன். ஹோலோகாஸ்ட் மறு ஆய்விற்கு சில நாடுகளில் தடை விதிக்கப்பட்டிருக்கிறது என்பதை அனைவரும் அறிவர். ஏன், அவர் உங்கள் பதிவையோ அல்லது அதற்கு முந்தைய எனது பதிவையோ வாசித்து விட்டு வந்திருந்தாலே இந்த உண்மை புரிந்திருக்கும். கொஞ்சம் கூட home work செய்யாமல், ஏனோ தானோ என்று எகத்தாளம் செய்யும் நபர்களிடத்தில் என்னால் உரையாட முடியாது.

மேலும், நீங்கள் அவரை அநாநி என்று குறிப்பிடுகிறீர்கள். ஆனால் நான் அவரை அவ்வாறு கருதவில்லை. நான் அவரை ஒரு போலி என்று தான் கருதுகிறேன். அதனால் தான் அவரிடத்தில் பதில் அளிக்கும் முதல் வாக்கியத்திலே தெளிவு படுத்தி விட்டேன் - ஒரு பெயரை தாங்கியதால், ஏதோ ஒரு அந்தஸ்து வந்து விடும் என்பதல்ல என்று சொன்னேன்.

சில சமயங்களில் நண்பர்களுக்கு குறிப்பால் தான் உணர்த்த வேண்டும். அதே ரீதியில் அவருக்கு ஒரு எச்சரிக்கையும் வைத்தேன் - இது நீங்கள் வாந்தி எடுக்கும் இடமும் அல்ல என்று. அதை அந்த நபர் புரிந்து கொண்டதினால் தான் மேற்கொண்டு எதுவும் பதில் சொல்லவில்லை.

ஒரு போலியுடன் உரையாடி என் மதிப்பை நான் தாழ்த்திக் கொள்ள முடியாது. ஏதோ ஒரு சிலருக்குத் தான் போலியால் தொந்தரவு இருக்கிறது என்று எவரும் எண்ணிவிடக்கூடாது. எனக்கும் அநாமதேயங்களால் தொல்லைகள் இருக்கின்றன. ஆனால் அவற்றை நான் பொருட்படுத்துவதில்லை. பிரஸ்தாபிப்பதில்லை. வெளியில் சொல்வதில்லை. என்னைத் தாக்குகிறார்கள் என்று சொல்லி ஒப்பாரி வைப்பதில்லை. அதை கொண்டு, மற்றவர்களின் பரிதாபத்தைச் சம்பாதித்து, என் இருப்பை நிலை நிறுத்திக் கொள்ள முயற்சிப்பதில்லை.

போலிகளுக்கு எடுக்கும் அரிப்பை சொறிந்து விட நான் தயாராக இல்லை. இதை குறித்து யாரும் என்னிடம் கேள்வி கேட்க முடியாது. இயல்பாக உரையாடும் சக வலைப்பதிவர்களுடன் - அவர்கள் என் கருத்து நிலைக்கு எத்தனை கோணத்திற்கு அப்பால் நின்றாலும் என்னால் உரையாட முடியும். என்னிடத்தில் எந்த மனத்தடைகளும் இல்லை. ஆனால் ஒரு போலியுடன் மன்றாடிக் கொண்டு உரையாடி, அவர்களது இருப்பை நியாயப்படுத்த முடியாது.

நீங்கள் எவ்வாறு, ஒரு போலிக்கு நான் பதில் சொல்லவில்லை என்பதை ஒரு வாதமாக வைக்கிறீர்கள் என்று எனக்குப் புரியவில்லை. இந்த கேள்வியில் பெரிதான பிரச்சினைகள் இல்லை. இத்தகைய ஒரு சாதாராண கேள்வியை நேரிட்டு முன் வைக்கவே தயக்கம் காட்டுபவர்களிடத்தில், போலிகளிடத்தில் எனக்கு எந்த பரிதாபமும் கிடையாது.

என்னுடைய இந்த நிலைபாட்டை நீங்கள் ஆதரிக்காவிட்டாலும் மதிப்பீர்கள் என்று எண்ணுகிறேன். மற்றபடிக்கு என்னைப் பொறுத்தவரைக்கும் போலிகள் என்பவர்கள் 'part of the occupational hazard' அவர்களை அப்படி புறந்தள்ளிவிட்டுத் தான் நான் இங்கு இயங்கிக் கொண்டிருக்கிறேன்.

அந்தக் கேள்விக்கு உங்களுக்குப் பதில் வேண்டுமா, கண்டிப்பாகத் தருகிறேன் - அதை நீங்களே ஒரு பின்னூட்டமாக வையுங்கள். கேட்கப்படாத கேள்விகளுக்கெல்லாம் பதில் சொல்லிக் கொண்டிருக்க முடியாது. அதனால், கேளுங்கள் - எந்த நிபந்தனையுமின்றி. I will not accept any precondition for any dialogues.


இத்துடன், ஒரு சிறு வேண்டுகோள் - இதற்கு முன்னர் நட்சத்திரப் பதிவர்களாக இருந்தவர்களில் பெரும்பாலோர் ஒன்று அல்லது இரண்டு பதிவுகளாவது தங்களைப் பற்றிய உள்ளார்ந்த விமர்சனத்திற்கும், ஒரு சுய தேடுதலுக்கும், உட்படுத்தி பதிவுகள் இட்டிருக்கிறார்கள். அதுபோல, நீங்களும் ஒரு பதிவாவது உங்களை ஒரு சுயவிமர்சனத்திற்கு உட்படுத்திக் கொண்டு கேட்டுப் பாருங்கள் - ஒரு போலிக்கு ஏன் பதில் சொல்லவில்லை என்று நண்பனைக் கேட்டது சரிதானா என்று.

11 comments:

மாசிலா said...

முதல் வணக்கம் நண்பன்.

ஏந்தான் நீங்கள் இந்த 'ஹோலோகோஸ்ட்'இல் இவ்வளவு பிடியாக இருக்கிறீர்கள்? என்னதான் தமிழன் தன் அறிவை வளர்த்து கொள்ளவேண்டும் என்றாலும், இது தேவைப்படாத ஒரு துறையாகவே எனக்கு தெரிகிறது.
உங்கள் கருத்து?

narmadha said...

எனக்கு இந்த தமிழ்மணம் 4 மாதங்களக அறிமுகம் ஆனல் உங்கள் பதிவுகளை 5 நாட்களுக்கு முண்தான் படிக்க நேர்ந்தது, மிகவும் தெளிவாக அதே சமயம் நேர்மையாகவும் எழுதறிங்க. வாழ்த்துக்கள்

mohamed said...

//இயல்பாக உரையாடும் சக வலைப்பதிவர்களுடன் - அவர்கள் என் கருத்து நிலைக்கு எத்தனை கோணத்திற்கு அப்பால் நின்றாலும் என்னால் உரையாட முடியும். என்னிடத்தில் எந்த மனத்தடைகளும் இல்லை. ஆனால் ஒரு போலியுடன் மன்றாடிக் கொண்டு உரையாடி, அவர்களது இருப்பை நியாயப்படுத்த முடியாது.//
good !!!

Vajra said...

//
I will not accept any precondition for any dialogues.
//

There is no purpose for dialogue if you we do not agree on certain basic things.

The first and foremost basic thing is, do we agree on the events of holocaust and killing of innocent men, women and children ?

If yes, then comes your questions, if no, then there is no talking. We agree that we disagree and your belief is yours, i have no intention of changing it.

have a nice day

Vajra said...

//
I will not accept any precondition for any dialogues.
//

There is no purpose for dialogue if you we do not agree on certain basic things.

The first and foremost basic thing is, do we agree on the events of holocaust and killing of innocent men, women and children ?

If yes, then comes your questions, if no, then there is no talking. We agree that we disagree and your belief is yours, i have no intention of changing it.

have a nice day

david santos said...

Hello!
This text is very good. I love INDIAN culture
Thank you

நண்பன் said...

கருத்தளித்த அனைவருக்கும் நன்றி.

விரிவான பதில்கள் நாளை இரவு.

அன்புடன்
நண்பன்

நண்பன் said...

வஜ்ரா,

நன்றி. இருமுறை கருத்தளிமைக்கு.

உங்கள் பதிலில் இருந்து, நீங்கள் கருத்து சுதந்திரத்திற்கு எத்தனை மதிப்பளித்தீர்கள் என்று தெரிந்து கொண்டேன்.

இதுவரையிலும், நான் உங்களிடம் எதையும் பேசியதில்லை. என்னிடமும், (இந்தப் பதிவைத் தவிர,) வேறு எங்கும் உரையாடியதில்லை. ஆனாலும், நான் சிலவற்றை ஒப்புக் கொண்டால் மட்டுமே, மேற்கொண்டு பேச இயலும் என்று சொல்லியுள்ளீர்கள்.

பேசவே இல்லாத ஒருவனிடம் வந்து, நான் சொன்னவற்றை ஒப்புக் கொண்டால் தான் மேற்கொண்டு பேச்சு என்று வாதாடுவது எப்படி?

ஆண்டவனுக்கே வெளிச்சம்...

நன்றி.

நண்பன் said...

// மாசிலா said...
முதல் வணக்கம் நண்பன்.

ஏந்தான் நீங்கள் இந்த 'ஹோலோகோஸ்ட்'இல் இவ்வளவு பிடியாக இருக்கிறீர்கள்? என்னதான் தமிழன் தன் அறிவை வளர்த்து கொள்ளவேண்டும் என்றாலும், இது தேவைப்படாத ஒரு துறையாகவே எனக்கு தெரிகிறது.
உங்கள் கருத்து? //

மாசிலா, பதில் வணக்கங்கள்.

பதில் எழுத கால தாமதம் ஆனது குறித்து வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன்.

முதலில், இந்த ஹோலோகாஸ்ட்டைப் பிடித்துக் கொண்டு நான் தொங்கவில்லை. கிட்டத்தட்ட பதினான்கு மாதங்களுக்கு முன் நான் எழுதியது. அந்தப் பதிவை நீங்கள் படித்திருந்தீர்கள் என்றால், அது ஒரு மொழி பெயர்ப்பு என்பதை தெளிவாக அறிந்து கொள்ளலாம். அதில் எனது கருத்தாக தெரிவித்தது - 'வாழ்க ஜனநாயகம் ' என்ற ஒரு வரியும், கட்டுரை வெளி வர காரணமான ஈரானிய அதிபருக்கு ஒரு நன்றியும்.

அந்த கட்டுரை வெளிவரும் பொழுது, உலகளாவிய ஒரு விவாதம் நடைபெற்றுக் கொண்டிருந்தது. கருத்து சுதந்திரம் எந்த அளவிற்குப் போகலாம் என்பது தான் அந்த தர்க்கத்தின் கரு. இஸ்லாமியர்கள் தங்கள் உயிருக்கு இணையாக மதிக்கும் நபிகள் பெருமானாரை - அவமானப்படுத்தும் விதமாக - கேலிச்சித்திரங்கள் போட்டுவிட்டு, கோடிக்கணக்கான முஸ்லிம்கள் தங்கள் மனதைப் புண்படுத்தியதாக புகார் செய்த பொழுது, அதை கருத்து சுதந்திரமாக கொண்டாடினார்கள் என்பதை எல்லாரும் பார்க்கத் தானே செய்தோம்.

எதை வேண்டுமானாலும் கருத்து சுதந்திரம் என்ற வடிவத்தில், பேச, எழுத, வரைய, உரிமைகள் கேட்கும் பொழுது, மனிதர்களால் அதுவும் ஐம்பது வருடத்திற்குள்ளாக எழுதப்பட்ட வரலாற்றை மறு ஆய்வு செய்ய, ஏன் தடை விதிக்க வேண்டும்? அப்படியானால், எந்த வகை கருத்து சுதந்திரத்தை நீங்கள் முன்வைக்கிறீர்கள்? உங்களுக்குத் தேவைப்படும் விஷயம் என்றால் - அதுவும் வெறுமனே ஒரு வரலாற்று நிகழ்வு மாத்திரமே - அதை தடை செய்கிறீர்கள். ஆனால், அடுத்தவரைப் புண்படுத்தும் விஷயத்தில் உரிமைகளைப் பற்றி பேசுகிறீர்கள் - How hollow your freedom of speech? என்ற கேள்வியை உள்வைத்து கேட்கப்பட்டதே அது.

மேலும் மீள் பார்வை, மறு வாசிப்பு என்பது இதற்கு மட்டுமே என்பதல்ல என் நிலை. In the name of Honour என்ற புத்தகத்தின் விமர்சனத்தின் மீதான, வாதங்களில் நான் எழுதி இருப்பது - நவீன விஞ்ஞான ஒளியில், குரானை மீண்டும் வாசித்துப் பாருங்கள் - அது உங்களுக்குப் புது பொருளையும் அர்த்தத்தையும் தரும் என்று எழுதி இருக்கிறேன்.

எது ஒன்றையும் மறு வாசிப்பிற்கு உட்படுத்தப்பட வேண்டும் என்ற என் கொள்கையில் மாற்றம் ஏதும் கிடையாது.

நடுநிலைமையாளர்களால் சிந்திக்க முடியும். சாயம் பூசிக் கொண்டவர்களால் இயலாது.

நன்றி.

நண்பன் said...

நர்மதா, முகமது - உங்கள் அன்பிற்கு மிக்க நன்றி.

தொடர்ந்து வாசித்து வாருங்ள்

அன்புடன்,
நண்பன்

நண்பன் said...

David Santos,

Thanks for visiting and praising.

keep coming.

நண்பர்கள் சொல்கிறார்கள்

CSM - உலகச் செய்திகள்

GF - உலகச் செய்திகள்