"எழுத்துகளையும் தாண்டி எனக்கென்று ஒரு உலகம் உண்டு; நான் எழுதுபவற்றை மட்டுமே வைத்துக் கொண்டு, என்னை எடை போடுபவர்களை எப்பொழுதும் என் எண்ணங்கள் வியப்பில் ஆழ்த்திக் கொண்டே இருக்கும்....."
- நண்பன்

Sunday, February 25, 2007

மைக்கேல் ஜாக்ஸன் முஸ்லிமாகிறார்?


மைக்கெல் ஜாக்ஸன் வெகு விரைவில் இஸ்லாத்தில் இணைவார் என அவரது சகோதரர் ஜெர்மய்ன் ஜாக்ஸன் ஒரு பிரிட்டிஷ் இஸ்லாமிய செய்தித் தாளில் அறிவித்துள்ளார். இதைப் பற்றிய செய்தி, இன்று கலீஜ் டைம்ஸிலும் வெளியாகியுள்ளது.

தன்னைப் பின்பற்றி, தனது சகோதரனும் தனது நம்பிக்கைகளை மாற்றிக் கொள்வார் என கூறியுள்ள அவர், தனது ஹஜ் கடமைகளை முடித்து விட்டு, திரும்புகையில் தனது சகோதரனுக்காக நிறைய இஸ்லாமிய புத்தகங்களை வாங்கி வந்ததாகவும், அவர் இஸ்லாம் மதம் பற்றி தன்னிடம் நிறைய கேள்விகள் கேட்டதாகவும், தான் அதற்கு இஸ்லாம் அமைதியான, அழகிய மார்க்கம் என்று கூறியதாகவும் தெரிவித்துள்ளார்.

புத்தகங்கள் அனைத்தையும் வாசித்து விட்ட மைக்கேல் ஜாக்ஸன், அமைதியையும், மன வலிமையையும் தரக்கூடிய வழியைக் கண்டு கொண்ட தன் சகோதரனைக் குறித்துப் பெருமையடைந்ததாக சகோதரர் ஜெர்மய்ன் ஜாக்ஸன் (52) கூறினார். 'வெகு விரைவில் அவர் இஸ்லாத்தில் இணையக் கூடும்" என்ற ஜெர்மய்ன், மைக்கேல் இஸ்லாத்தில் இணைந்தால், தானும் அவரும் சேர்ந்து இவ்வுலகில் பெரும் மாற்றங்களைத் தோற்றுவிக்க முடியும் என்றார்.

'மைக்கேலால் நிறையச் செய்ய முடியும். நான் முயற்சிப்பதைப் போல். நான், மைக்கேல் ஜாக்ஸன், மற்றும் இறைவனின் வார்த்தைகளால் நிறையச் செய்ய முடியும்.' என்கிறார் ஜெர்மய்ன். 1989ல் தன்னை இணைத்துக் கொண்ட, ஜெர்மய்ன், சமீபத்தில் நடைபெற்ற Big Brother Celebrityயில் இரண்டாம் இடத்தைப் பிடித்தார் - அதாவது ஷில்பா ஷெட்டிக்கு அடுத்த இடம். இன துவேஷத்திற்கு ஷில்பா ஆளான பொழுது, அவருக்கு ஆதரவாக இருந்து, நண்பனானவர்.

பல வழக்குகளில் சிக்கி மன அமைதி இழந்து, நிம்மதியின்றி தவித்தவர் - ஜாக்ஸன்.

செய்தியின் சுட்டி.
http://news.yahoo.com/s/afp/20070222/ennew_afp/afpentertainmentislam_070222184705
The Khaleej Times, 25-2-07.

செய்தியைப் படித்ததும் மற்றவர்களுக்கு ஆச்சரியமாக இருக்கலாம். அமெரிக்காவிலிருந்து வெளியான பின்பு அவர் பஹ்ரைன் வந்தார். அங்கேயே பெரும்பகுதியைக் கழித்தவர். அவர் மீது தொடுக்கப்பட்ட வழக்குகளிலெல்லாம் விடுபட்டாலும் இன்னமும் புதிது புதிதாக ஏதாவது ஒரு காரணத்தைக் கொண்டு, வழக்குகள் வந்த வண்ணம் தான் இருக்கின்றன. இப்பொழுது கூட, அவர் மீதும், ஒரு மருத்துவ மனை மீதும் வழக்குகள் போடப்பட்டுள்ளது. காரணம் - அவர் காய்ச்சலுடன் உடல் நலமின்றி வந்த பொழுது, ஒரு நோயாளிப் பெண்மணியை அகற்றி விட்டு, அவருக்கு அந்த இடத்தைத் தந்தார்கள். அந்தப் பெண்மணி, சிறிது நேரத்தில் இறந்து விட்டார். அவர் சாவிற்கு ஜாக்ஸன் தான் காரணம் என்று ஒரு வழக்கு.

ஒரு மனிதனை எத்தனை தூரம் ஒரு சமூகம் சின்னாபின்னா படுத்த முடியும் என்பதற்கு மைக்கேல் ஜாக்ஸன் ஒரு உதாரணம். மன அமைதியைக் குலைத்து, தங்கள் சுயலாபத்திற்காக எதையும் செய்யத் தயாராகி விட்ட ஒரு சமூகத்தின் பிடியிலிருந்து தன்னை விடுவித்துக் கொள்ள, அவர் தேர்வு செய்து கொண்ட பாதை: இஸ்லாம்.

வலுக்கட்டாயமான கருத்துத் திணிப்பினால், அவர் தன் வழியை மாற்றிக் கொள்ளவில்லை. மாறாக முற்றிலும் அறிந்து, பின் தன்னை இணைத்துக் கொள்ள விரும்புகிறார். அவர் அவ்வாறு தன்னை இணைத்துக் கொள்வாரானால், இஸ்லாம் அவரை வரவேற்கும். அவருக்கு அமைதியை வழங்கும்.

புலம்புபவர்கள் புலம்பித் திரியட்டும்.

இஸ்லாம் அமைதியாக தன்னை வளர்த்துக் கொண்டேயிருக்கும்.

27 comments:

Anonymous said...

Poor guy!
he probably doesnt know about a more generous and hihgly spritual religion Hinduism. After all, this barbaric religion islam is against his own profession of music and dance :))

Anonymous said...

மொத்தத்தில் மனிதனால் சரி!!

எல்லா மதமும் அன்பேயே போதிக்கின்றது.

இதை அறியதாவர்கள் இங்கும் அங்கும் தாவிக்கொண்டிருக்கின்றனர் -

- Common Man

Anonymous said...

I used to be (still I am) a MJ fan. There is no match in the pop world for some of his brilliang songs.

We will never know if all the cases against him are triggered dut to 'real issues' or made up ones.

anyway, choice of religion is totally his will and I am sure all his fans fully support that.

please avoid publishing comments which trigger unwanted hatred.

-BNI

ஆரூரன் said...

Thank god for that, Allah works in a mysterious way.

The funny thing is that Arab Muslims were the one, who killed, captured and sold the Negroes as slaves to the white people. I guess this Wako is joining the killers of his ancestors, funny isn't it?

Just looking at this freak is spooky! He is a Wako! :))

மரைக்காயர் said...

பல ஆண்டுகளுக்கு முன் பிரபல பாடகர் கேட் ஸ்டீவன்ஸ் அமைதியை நாடி தேர்ந்தெடுத்த பாதை இஸ்லாம். இன்று அவர் யூசுப் இஸ்லாம் என்ற பெயரில் ஒரு சிறந்த முஸ்லிமாக மார்க்கப்பணியில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டுள்ளார். அவருக்கு கிடைத்த அந்த நேர்வழி மைக்கேல் ஜாக்சனுக்கும் கிடைக்கட்டும் இன்ஷா அல்லாஹ்.

//a more generous and hihgly spritual religion Hinduism. After all, this barbaric religion islam..//

தங்கள் மதத்தின் பெருமையை பேசுவதற்கு கூட அனானியாக முக்காடு போட்டுக் கொண்டு வர வேண்டிய பரிதாபமான நிலையில்தான் இவர்கள் இருக்கிறார்கள்.

நல்லடியார் said...

நண்பர் ஷாஜஹான்,

சிலமாதங்களுக்கு முன் மைக்கேலின் சகோதரர் ஜெர்மைன் ஜாக்ஷன் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டதாக செய்தி வெளியானது. எந்தளவு உண்மையென்று தெரியவில்லை. Cat Stevens ஆக இருந்த யூசும் இஸ்லாம் வரிசையில் மைக்கேல் சகோதரர்களும் இஸ்லாத்தில் இணைய அல்லாஹ் நாடியிருந்தால் யாரால் தடுக்க முடியும்?

தகவலுக்கு நன்றி.

நண்பன் said...

நல்லடியார்,

ஜெர்மைய்ன் ஜாக்ஸன் 1989ல் இஸ்லாத்தில் தன்னை இணைத்துக் கொண்டவர் என்று அந்த செய்தியில் உள்ளது. இது குறித்து தான் மைக்கெல் "தன்னிடம், மனவலிமையையும், அமைதியையும் தரும் மார்க்கத்தையும் நீ முன்னதாகவே தேர்ந்தெடுத்துவிட்டது குறித்து நான் பெருமைப்படுகிறேன்" என்று கூறியதாக ஜெர்மைன் ஜாக்ஸன் அந்தப் பேட்டியில் கூறியுள்ளார்.

அதாவது, 18 வருடங்களுக்கு முன். !!!

நண்பன் said...

ஆரூரன்,

முதன்முதலாக வருகிறீர்கள், வாங்க.

வியாபாராம் என்றதும், அராபியர்களை நீங்கள் நினைத்துக் கொள்வது இயல்பு தான். ஆனால், உண்மை அதுவல்ல.

சிறிது காலத்திற்கு முன், நான் விரும்பி வாசித்து அனைவருக்கும் வாசிப்பதற்காக சுட்டி கொடுத்து வைத்திருந்தேன் - கறுப்பு சகோதரர்களின் வரலாறு என்று. அதைப் படித்திருந்தால் - யார் இந்த அடிமை வியாபாரத்தை நடத்தினார்கள். யார் ஆப்பிரிக்காவின் மேற்குக் கடற்கரையோரம் அடிமைத் தொழிற்சாலைகளை ஏற்படுத்தினார்கள் என்பதெல்லாம் மிகத் தெளிவாக குறும்படங்களுடன் தகவல் தந்திருக்கிறார்கள். முஸ்லிம்களை தவிர்க்க நினைத்து, வேறு திசையில் பயணித்த ஐரோப்பாவின் போர்ச்சுகல் இந்த வியாபாரத்தில் முன்னணியில் நின்றது. பின்னர் மற்ற நாடுகள் தொடர்ந்தன். அடிமைகள் எத்தனை ஆரோக்கியமாக இருக்கிறார்கள் என்பது குறித்து 'எங்களிடம் தரமான அடிமைகள் கிடைப்பார்கள்' என்று நோட்டீஸ் அடித்து ஒட்டி விற்றார்கள்.

வரலாறு புரியாமலே எழுதிக் கொண்டிருப்பவர்கள் தான், இன்னமும் அரபிகளை திட்டிக் கொண்டிருப்பார்கள். அரபிகளே, அடக்கப்பட்டு, துருக்கியர்களின் ஆட்சியில் கீழ் தான் முதலாம் உலகப் போர் வரையிலும் இருந்தார்கள். மேம்போக்காக பேசும் பொழுது, அரபிகளைத் திட்டுவது வழக்கமாகி விட்டது.

நன்றி ஆரூரன்,

நண்பன் said...

மரைக்காயர்,

வாருங்கள்.

ஆம், இந்த மறுதலிப்பாளர்களைப் புன்னகையுடன் ஏற்றுக் கொள்ள வேண்டும். ஏனென்றால், இவர்கள் மற்றுமோர் இடத்தில், மிகவும், அறிவு சார்ந்த விவாதக்கராராக, ஞானம் பெற்றவராக, நியாயவாதியாக தன் முகத்தை வைத்திருக்கக் கூடும்.

அப்படி இருக்கும் பொழுது, தன் மனசாட்சிக்கு எதிரான கருத்தை வைக்கும் பொழுது, கொஞ்சம் கூச்சம் வரத்தான் செய்யும். அதனால் பர்தா அணிந்து வருகிறார். பின்னர் வெளியே போய் பர்தா அணிவதை தூற்றுவார். என்ன செய்வது, இரட்டை வேடம் போடாவிட்டால், அவர்களுக்கு வாழ்வேது?

வருகைக்கு நன்றி,

G.Ragavan said...

தனக்கு நல்லது என்று நம்பும் எந்தவொரு மதத்தையும் பின்பற்றும் உரிமை எவருக்கும் உள்ளது. அந்த வகையில் மைக்கேல் ஜாக்சன் எடுத்த முடிவு அவரது உரிமை. அதைக் கேள்வி கேட்பதோ கிண்டல் செய்வதோ தவறு. அவர் விரும்பும் அமைதி அவரை ஆட்கொள்ளட்டும். நிறைய ஆடி விட்டார். இனிமேலாவது அமைதி பெறட்டும்.

நண்பன் said...

// Anonymous said...

Poor guy!

he probably doesnt know about a more generous and hihgly spritual religion Hinduism. After all, this barbaric religion islam is against his own profession of music and dance :)) //

அநாநி 1:

வாருங்கள் என்று பெயர் கூறி உங்களை வரவேற்க இயலவில்லை. பெயரே இல்லாத பொழுது என்ன செய்வது?

நீங்கள் spiritualism என்பதை எப்படி விளங்கிக் கொண்டீர்கள் என்பது எனக்குத் தெரியாது. அது பேக்கேஜ் செய்து விற்கப்படும் ஒரு பொருளல்ல என்பது தான் உண்மை.

ஒரு குறிப்பிட்ட வட்டத்திற்குள் அடைத்து வைக்கப்படும் பண்டம் அல்ல அது. கொஞ்ச காலம் வந்து அனுபவித்து விட்டு, பின்னர் தன் வழியே போய்விடுவது எத்தகைய ஆன்மீகத் தேடல் என்பது அனைவரும் அறிவர்.

முன்பு, பீட்டில்ஸ் குழுவினர், சிறிது காலம் இந்து மதத்தின் தத்துவங்களைப் புகழ்ந்து கொண்டிருந்தனர். அவர்களுக்குக் குருவாக பண்டிட் ரவி ஷங்கர் இருந்தார் என்ற செய்தியும் பழையது தான்! ஆனால், ஹாரிசன், தொடரவில்லை. தொடர இயலாது தான்.

Spiritualism is an intenses personal experience of one's self with his own beliefs, conviction and finally with the truth he believes.

நீங்கள் சொல்வது போல, அது ஒருவன் தன் மனதை ஈடுபடுத்திக் கொள்ளாமலே, ஒரு பொட்டலமாகக் கட்டி விற்கப்படும், அது எங்களிடம் கிடைக்கிறது என்று சொன்னால், அதை இந்த உலகம் நம்பத் தயாராக இல்லை என்பதே உண்மை.

நன்றி, சிந்திக்கத் தூண்டியமைக்கு.

G.Ragavan said...

// நீங்கள் சொல்வது போல, அது ஒருவன் தன் மனதை ஈடுபடுத்திக் கொள்ளாமலே, ஒரு பொட்டலமாகக் கட்டி விற்கப்படும், அது எங்களிடம் கிடைக்கிறது என்று சொன்னால், அதை இந்த உலகம் நம்பத் தயாராக இல்லை என்பதே உண்மை.

நன்றி, சிந்திக்கத் தூண்டியமைக்கு. //

ஆன்மீக உணர்வு என்பது பொட்டலத்தில் கிடைக்கும் பொருள் அல்ல அள்ள. முயற்சி வேண்டும். முனைப்பு வேண்டும். அப்படியில்லாமல் இந்து மதத்திற்கோ இஸ்லாமிற்கோ மாறுவது பயனற்றது. இன்னும் சொல்லப் போனால் எந்த மதமும் இல்லாமலும் இறையுணர்வு கொள்ள முடியும் என்று நம்புகிறேன். ஆனால் அதற்குப் பக்குவம் எக்கச்சக்கமாக வேண்டியிருக்கும்.

நண்பன் said...

Spiritualism is an intense personal experience of one's self with his own beliefs, conviction and finally with the truth he believes.

பிழை திருத்தத்திற்காக மீண்டும்.

நண்பன் said...

ராகவன்,

வாருங்கள். உடனுக்குடன் வாசித்து கருத்து தரும் உங்கள் அன்பிற்கு நன்றி.

இரவில் விரிவாக பதில் எழுதிகிறேன்.

நன்றி.

அன்புடன்,
நண்பன்

வாசகன் said...

//தன் மனசாட்சிக்கு எதிரான கருத்தை வைக்கும் பொழுது, கொஞ்சம் கூச்சம் வரத்தான் செய்யும். அதனால் பர்தா அணிந்து வருகிறார். பின்னர் வெளியே போய் பர்தா அணிவதை தூற்றுவார். என்ன செய்வது, இரட்டை வேடம் போடாவிட்டால், அவர்களுக்கு வாழ்வேது?//

செருப்பால் அடித்தமாதிரி இருந்திருக்கும் சிலருக்கு.

இந்து மதத்தைப்பற்றி எவனோ ஒரு மேனாட்டு அனானி புகழ்ந்ததற்கு ஒரு உள்நாட்டு அணானி பதிவு எழுதி சிலாகித்திருந்தார். என்னைப் பொருத்தவரை பிரபலங்கள் மதம் மாறுவதனால் சம்பந்தப்பட்ட மதம் பெறும் சிறப்பைவிட அவ்வாறு மாறியவர்களே சிறப்படைகிறார்கள்.

எதிர்வினைகளையும் கருத்துக்களையும் நீங்கள் எதிர்கொள்ளும் பண்பு இணைய ஊடகங்களில் அரிதாகி விட்டது. நேர்மையான பதிவுகளுக்காக ஒரு சபாஸ்

Sirajudeen said...

G.Rahavan Said,
//ஆன்மீக உணர்வு என்பது பொட்டலத்தில் கிடைக்கும் பொருள் அல்ல அள்ள. முயற்சி வேண்டும். முனைப்பு வேண்டும். அப்படியில்லாமல் இந்து மதத்திற்கோ இஸ்லாமிற்கோ மாறுவது பயனற்றது.//
உங்கள் கருத்தை பாதி ஏற்றுக் கொள்கிறேன். அதாவது முயற்சி செய்ய வேண்டும். ஆனால் இடம் மாறுவது தவறு என்பது தவறான கருத்து. ஏனெனில் பசிக்கிறது என்று உணவு தேவைக்காக சேற்றிலே கையை விட்டால் அங்கே சோறு கிடைக்காது. முதலில் சோறு கிடைக்கும் இடத்தை கண்டுபிடிக்க வேண்டும். பின்பு அங்கே சென்று முயன்று அதை பெற வேண்டும். அதுபோல மன அமைதிக்கும், நிம்மதிக்கும் சரியான ஆன்மீக பாதையை தேர்ந்தெடுக்க வேண்டும். அதை அவர் (மைக்கெல் ஜக்ஸன்) இஸ்லாத்தில் கிடைப்பதாக உணர்கிறார்கள். அது நிங்கள் பின்பற்றும் மதத்தில் இருந்தால் அந்த அமைதி பாதையை (ஆன்மீக) எடுத்து வைப்பது தான் சரியான வாதமுறை. அதைவிட்டு விட்டு எல்லாம் பயனற்றது என்பது பயனற்ற வாதம். ஆக பயனற்ற வாதத்தை விட்டுவிட்டு ஏன் பல மனிதர்கள் பிரச்சனைகளிலும், துன்பங்களிலும் சிக்கும் போது மன அமைதியை நாடி இஸ்லாத்தில் தஞ்சமடைகிறார்கள் என்று சிந்தியுங்கள். தெளிவு கிடைக்கும்.

// இன்னும் சொல்லப் போனால் எந்த மதமும் இல்லாமலும் இறையுணர்வு கொள்ள முடியும் என்று நம்புகிறேன்.//

இறைவனே இல்லாமல் இறையுணர்வா? புரியவில்லை.

நண்பன் said...

சிராஜுத்தீன்

// இறைவனே இல்லாமல் இறையுணர்வா? புரியவில்லை.//

சிராஜுத்தீன், நண்பர் ராகவன் சொல்வது மதங்களைத் தாண்டிய இறைவன். இறைவனில்லாத இறையுணர்வைச் சொல்லவில்லை.

இது ஒரு கருத்து நிலை.

நமது கோட்பாடுகூட, There is no God, but God என்பது தானே?

நண்பர் ராகவன் விரிவான வாசிப்பு அனுபவம் பெற்றவர். அவர் J.Krishnamurthiஐ வாசித்திருக்கக் கூடும். ஜே கிருஷ்ணமூர்த்தி சொல்வதும், மதங்களைத் தாண்டிய ஒரு ஆன்மீக நிலையைத் தான். இது இஸ்லாமின் கருத்தியலை ஒத்துப் போக கூடிய ஒரு நிலை தான். ஒரு மதம். மார்க்கம் என்று பெயர் வைத்து இயங்கவிட்டாலும், மதத்தின் வழிபாட்டு முறையைத் தவிர்த்து, இறைவனை மட்டுமே ஏற்றுக் கொள்ள வேண்டும் என்ற கோட்பாடு அது. அதைக் கண்டு அஞ்ச வேண்டியதில்லை.

வருகைக்கு நன்றி.

அன்புடன்
நண்பன்

நண்பன் said...

// Anonymous said...
மொத்தத்தில் மனிதனால் சரி!!

எல்லா மதமும் அன்பேயே போதிக்கின்றது.

இதை அறியதாவர்கள் இங்கும் அங்கும் தாவிக்கொண்டிருக்கின்றனர் -

- Common Man//

நீங்கள் சொல்வது முற்றிலும் சரியே. எல்லா மதமும் அன்பைப் போதித்தாலும், சுற்றிலுமிருப்பவர்களும் அதை உணர்ந்தால் தான் மகத்துவமிக்கதாயிருக்கும். அக்கம்பக்கத்து மனிதர்களை ஒதுக்கி வைக்கச் சொல்லும் மனிதர்களால், மதங்களைத் திசை திருப்ப முடிகையில், ஒருவர் தன் வழியை கவனத்துடன் தேர்ந்தெடுக்க வேண்டும்.

நன்றி.

நண்பன் said...

// Anonymous said...
I used to be (still I am) a MJ fan. There is no match in the pop world for some of his brilliang songs.

We will never know if all the cases against him are triggered dut to 'real issues' or made up ones.

anyway, choice of religion is totally his will and I am sure all his fans fully support that.

please avoid publishing comments which trigger unwanted hatred.

-BNI //

இசையை ரசிப்பதற்கு மதங்கள் தடையாயிருப்பதில்லை.

அவர் தன் பாதையை மாற்றிக் கொண்டாலும், அவர் இசையை அவரது ரசிகர்கள் ரசிப்பார்கள்.

இன்றும் பீட்டில்ஸின் While my guitar gently weeps என்ற பாடல் தான் எனக்கு மிகவும் பிடித்த பாடல். ஹாரிசன் எந்த மதம் என்று ஒரு போதும் நான் நினைத்ததில்லை.

அது போலவே, அடிமைகளை கட்டி வைத்து அடித்து கொடுமைப் படுத்திய இடத்தில், மைக்கெல் ஜாக்ஸன் பாடிய, They don't care about us என்ற பாடலும் மிகவும் பிடிக்கும். அப்பொழுது அவர் இஸ்லாமியர் அல்ல.

யாராவது அவரது இசையையும், இஸ்லாத்தையும் முடிச்சு போட முனைந்தால், அது போல முட்டாள்தனம் வேறு எதுவும் இருக்க முடியாது.

இன்று இளையராஜா, ரஹ்மான் எப்படி எல்லோருக்கும் பொதுவானவர்களோ அதுபோலவே, மைக்கெலும் எல்லாருக்கும் பொதுவானவராகவே இருப்பார்.

உங்கள் கருத்துடன் முழுமையாக ஒத்துப் போகிறேன்.

அன்புடன்
நண்பன்

நண்பன் said...

மைக்கெல் ஜாக்ஸன் ரசிகர்களுக்கு,

அவருடைய பாடல்களின் கவிதை வரிகள் இங்கே கிடைக்கின்றன:

நன்றி.

நண்பன் said...

வாசகன்,

//என்னைப் பொருத்தவரை பிரபலங்கள் மதம் மாறுவதனால் சம்பந்தப்பட்ட மதம் பெறும் சிறப்பைவிட அவ்வாறு மாறியவர்களே சிறப்படைகிறார்கள்.//

ஆம். முன்பு, காசியஸ் க்ளே என்ற பிரபல குத்து சண்டை வீரர் முகமது அலி என்ற பெயரில், இஸ்லாத்தில் இணைந்தார். பின்னர் மேலும் மேலும் சிறப்புற்றார். மிக நல்ல மனிதர் என்று பெயர் பெற்றார்.

// எதிர்வினைகளையும் கருத்துக்களையும் நீங்கள் எதிர்கொள்ளும் பண்பு இணைய ஊடகங்களில் அரிதாகி விட்டது. நேர்மையான பதிவுகளுக்காக ஒரு சபாஸ் //

உங்கள் வருகைக்கும், பாராடுதலுக்கும் மிக்க நன்றி.

சீனு said...

//தங்கள் மதத்தின் பெருமையை பேசுவதற்கு கூட அனானியாக முக்காடு போட்டுக் கொண்டு வர வேண்டிய பரிதாபமான நிலையில்தான் இவர்கள் இருக்கிறார்கள்.//

B-) Supppppppperappu...

//இன்று இளையராஜா, ரஹ்மான் எப்படி எல்லோருக்கும் பொதுவானவர்களோ அதுபோலவே, மைக்கெலும் எல்லாருக்கும் பொதுவானவராகவே இருப்பார்.//

உங்கள் கருத்துடன் முழுமையாக ஒத்துப் போகிறேன்.

G.Ragavan said...

// Sirajudeen said...
G.Rahavan Said,
//ஆன்மீக உணர்வு என்பது பொட்டலத்தில் கிடைக்கும் பொருள் அல்ல அள்ள. முயற்சி வேண்டும். முனைப்பு வேண்டும். அப்படியில்லாமல் இந்து மதத்திற்கோ இஸ்லாமிற்கோ மாறுவது பயனற்றது.//
உங்கள் கருத்தை பாதி ஏற்றுக் கொள்கிறேன். அதாவது முயற்சி செய்ய வேண்டும். ஆனால் இடம் மாறுவது தவறு என்பது தவறான கருத்து. ஏனெனில் பசிக்கிறது என்று உணவு தேவைக்காக சேற்றிலே கையை விட்டால் அங்கே சோறு கிடைக்காது. முதலில் சோறு கிடைக்கும் இடத்தை கண்டுபிடிக்க வேண்டும். பின்பு அங்கே சென்று முயன்று அதை பெற வேண்டும்.//

சிராஜுதீன், தவறாகப் புரிந்து கொண்டிருக்கின்றீர்கள். இஸ்லாமில் இறையுணர்வு கிடைக்காது என்று நான் சொல்லவில்லை. ஒரு குறிப்பிட்ட மதத்தில் இருப்பதால் மட்டும் இறையுணர்வு வந்து விடாது என்பது என் கருத்து. அது இந்து மதமானாலும் சரிதான். இஸ்லாம் மதமானால் சரிதான். எந்த மதத்தைச் சார்ந்திருந்தாலும் தேடல் இருந்தால்தான் இறையுணர்வு எய்ய முடியும் என்பது என் கருத்து. Label is not a product என்பதுதான் நான் சொல்வது. மைக்கேல் ஜாக்சனின் மதமாற்றம் அவர் விரும்பியதைத் தரட்டும் என்று நான் ஏற்கனவே வாழ்த்தி விட்டேன். ஒருவர் மதம் மாற (எதிலிருந்து எதற்குப் போனாலும்) விரும்பினால் அது அவர் உரிமை என்பது என் கருத்து. அதில் தலையிட யாருக்கும் உரிமையில்லை என்பதும் என் கருத்து.

// அதுபோல மன அமைதிக்கும், நிம்மதிக்கும் சரியான ஆன்மீக பாதையை தேர்ந்தெடுக்க வேண்டும். அதை அவர் (மைக்கெல் ஜக்ஸன்) இஸ்லாத்தில் கிடைப்பதாக உணர்கிறார்கள். அது நிங்கள் பின்பற்றும் மதத்தில் இருந்தால் அந்த அமைதி பாதையை (ஆன்மீக) எடுத்து வைப்பது தான் சரியான வாதமுறை. அதைவிட்டு விட்டு எல்லாம் பயனற்றது என்பது பயனற்ற வாதம். ஆக பயனற்ற வாதத்தை விட்டுவிட்டு ஏன் பல மனிதர்கள் பிரச்சனைகளிலும், துன்பங்களிலும் சிக்கும் போது மன அமைதியை நாடி இஸ்லாத்தில் தஞ்சமடைகிறார்கள் என்று சிந்தியுங்கள். தெளிவு கிடைக்கும். //

இஸ்லாமில் கிடைக்காதது இந்து மதத்தில் கிடைக்கும் என்று நான் சொல்லிக் கொண்டும் இருக்கவில்லை. அதற்கு இஸ்லாமும் இந்து மதமும் முழுமையாகத் தெரிந்திருக்க வேண்டும். இரண்டையும் முழுமையாக அறிந்தவன் இல்லை நான். ஆகையால் உங்களோடு வாதம் செய்ய எனக்கு விருப்பமும் இல்லை. ஒரு கருத்து எந்த மதத்துக் கருத்தாக இருந்தாலும் அதைக் கேள்விப் படுகையில் என் மனதிற்குச் சரியாகப் படுகிறதா இல்லையா என்று மட்டுமே என்னால் சொல்ல முடியும். அதைத்தான் இந்தப் பதிவில் சொல்லியிருக்கிறேன்.

// இன்னும் சொல்லப் போனால் எந்த மதமும் இல்லாமலும் இறையுணர்வு கொள்ள முடியும் என்று நம்புகிறேன்.//

இறைவனே இல்லாமல் இறையுணர்வா? புரியவில்லை. //

நான் சொன்னதைச் சரியாகப் படியுங்கள். மதம் இல்லாமல் இறையுணர்வு என்றேன். இறைவனும் மதமும் ஒன்று என்று நீங்கள் நம்பினால் அதற்கு நான் பொறுப்பல்ல.

G.Ragavan said...

// நண்பன் said...
சிராஜுத்தீன்

// இறைவனே இல்லாமல் இறையுணர்வா? புரியவில்லை.//

சிராஜுத்தீன், நண்பர் ராகவன் சொல்வது மதங்களைத் தாண்டிய இறைவன். இறைவனில்லாத இறையுணர்வைச் சொல்லவில்லை.

இது ஒரு கருத்து நிலை. //

நன்றி நண்பன். நான் சொன்னதைச் சரியாகப் புரிந்து கொண்டீர்கள்.

நண்பன் said...

ராகவன்,

// Spiritualism is an intense personal experience of one's self with his own beliefs, conviction and finally with the truth he believes.//

இதை வார்த்தைக்கு வார்த்தையாக அல்லாமல் கருத்தாக மட்டும் மொழி பெயர்த்தால், கிட்டத்தட்ட நீங்கள் சொன்ன மதங்களைத் தாண்டிய இறைவனையும் குறிக்கும். அதே சமயம் ஒருவனின் நம்பிக்கை சார்ந்த "உண்மைகள் -இறைவன்" யும் குறிக்கும்.

ஒவ்வொரு மனிதனும் தன் நம்பிக்கைகளை தானே அலசி ஆராய்ந்து உண்மைகளைக் கண்டு கொள்ள முயற்சித்தால், பல சண்டை சச்சரவுகள் நீங்கி விடும்.

நீங்கள் சொல்ல முற்பட்ட விஷயத்தை நான் ஏற்கனவே சில நன்பர்களுடன் விவாதித்துள்ளேன் - சுரேஷ் (பெனாத்தல்,) முத்து, தம்பி, லியோ, இசாக், கவிமதி, நாகை சிவா... அதைப் பற்றி அப்புறம் மறந்தே விட்டேன். உங்கள் பதிவு, அதை நினைவூட்டியது.

நன்றி.

nagoreismail said...

நண்பன் அவர்களே, பதிவும் அதை தொடர்ந்த விவாதங்களும் அருமை, நீங்கள் நமது கோட்பாடுகள் பற்றி கூறியதும் ஜி.ராகவன் அவர்களின் வாதமும் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. அல்லாஹ்வே இல்லை ஆனால் அல்லாஹ் - பெயர் மட்டுமே பொருளாகாது - அருமை - நன்றி - நாகூர் இஸ்மாயில்

நண்பன் said...

நாகூர் இஸ்மாயில்,

வாருங்கள்

உங்கள் கருத்திற்கு மிக்க நன்றி.

அன்புடன்
நன்பன்

நண்பர்கள் சொல்கிறார்கள்

CSM - உலகச் செய்திகள்

GF - உலகச் செய்திகள்