சண்டை போடலாம் வாங்க....
சண்டை போடலாம், வாங்க..
சும்மாவாச்சும் இல்லீங்க, காசுக்குத் தான்.
ஆட்டோ பிடிச்சு, காசு கொடுத்து ஆளை அடிச்சிட்டு வரச்சொல்வாங்கல்லீயா, அது மாதிரி தான் இதுவும். ஆட்டோ அடியாள் மீதாச்சும் காவல்துறை வழக்கு போடும் - ஆள் அகப்பட்டாலும், படாவிட்டாலும்.
ஆனால், இங்கே அப்படியில்லை.
கூலிப்படையா போறவன் பிடிபடறதுக்கு வாய்ப்பே இல்லை. என்ன, கொஞ்சம் - கொஞ்சமோண்டு செத்துப் போகறதுக்கு வாய்ப்புண்டு. அந்த probability ரொம்ப ரொம்ப கம்மி. மாசத்துக்கு 1:33,000 தான். சாகாமல் பிழைத்துக் கொண்டாச்சுன்னு வச்சுக்கிட்டா - உங்களுக்கு கொடுக்கப்படும் கூலில, நம்மூர் பணத்துக்கு கோடீஸ்வரனாகி விடலாம்.
ஆமாம். சண்டை போட தயாராகிச்சுன்னா ஒரு நாள் சம்பளம் எத்தனை தெரியுமா? $1000!!! ஆமாம் ஒரு நாளைக்கு ஆயிரம் டாலர். அப்புறம், நம்மூர் மாதிரி வீச்சரிவாள், வேல்கம்பு இதெல்லாம் ஆயுதங்கள் இல்லை. இவையெல்லாம் வைச்சுக்கிட்டா, ஆட்களை நெருங்கி மோத வேண்டி வரும். உங்களை எளிதா போட்டுத் தள்ளிடுவாங்க. இவங்க கொடுக்கறதெல்லாம் - எந்திர துப்பாக்கி வகையறாக்கள். தள்ளி நின்னுகிட்டு, சும்மா சுட்டுத்தள்ள - போட்டுத் தள்ள வேண்டியது தான்.
உங்களுக்கு விருப்பமா?
அப்படியானால், நீங்கள் அணுக வேண்டிய இடம் :
திருவாளர். G.W.புஷ், பிரசிடெண்ட், வாஷிங்க்டன், அமெரிக்கா.
சொந்த நாட்டுப் படையை (Official military) அனுப்பி, மனுஷன் நொந்து நூலாகி கெடக்கிறார். இருக்கிற அமைப்புகள்லாம் போராட வேற ஆரம்பிச்சிட்டாங்க. அதனால், யுத்தத்தையே மனுஷன் காண்ட்ராக்ட்ல விட்ருக்கார். செத்துப் போறவன் கணக்கில வரமாட்டான். சும்மாங்காட்டியும் கொடி பிடிக்கற கொஞ்ச நஞ்ச தேசவிரோதிகளுங்களுக்கு பதில் சொல்ல வேண்டாம். கூலிப்படையா போனவன் செத்தா, தனியார் சவமா திரும்ப வர வேண்டியது தான். அதிகாரபூர்வமா, சாவு ரொம்ப குறைச்சல் தான். பாருங்க, நம் படையோட சேதாரம் கம்மின்னு மார் தட்டிக்கலாமே!
சரிங்க, புஷ் இத்தனை கில்லாடியா? மக்காச்சே! எப்படி இந்த மாதிரி யோசனைல்லாம் பண்றாருன்னு யோசிக்கிறீங்களா - அது வந்து, அவரோட தேர்தல் பொருளாதாரத்தைக் கவனிச்சிக்கற எரிக் பிரின்ஸ்-ன்ற கோடீஸ்வரரின் மூளைதான் இது. (புஷ்ட்ட இல்லாதது).
இந்த பிரின்ஸ் இருக்காரே, அவரு, ஒரு ராணுவத் தொழிற்சாலை வச்சிருக்கார் - தளவாடங்கள் செய்யும் தொழிற்சாலை இல்ல, ஆட்களைப் பிடித்துப் பயிற்சி கொடுத்து, அண்டை அயல் தேசங்கள்ல கூலிப்படையா சண்டை போட அனுப்பி வைக்கத் தான். முதல் பரிசோதனை - இராக். பாவம், இராக், பரிசோதனைக் கூடத்து எலியாய் முழிச்சிக்கிட்டு இருக்குது. அப்புறம் குவைத், ஆ•ப்கான்லாம் கூட இந்த கூலிப்படை இருக்காம். கூலிகளை எதிர்த்து கூலிகள் - சண்டை போட. சபாஷ், சரியான போட்டி (யுத்தம்..) அப்புறம் என்ன பெரிய முக்கல் முனகல் வேண்டி கெடக்கு, தீவிரவாதத்தை எதித்துன்னு சொல்லிக்கிட்டு ?
இதெல்லாம், அமெரிக்க மக்களோட முதுகுக்குப் பின்னாடியா நடக்கற கூத்து. ஆனாலும் எப்படியாச்சும் ஒருநாள் சொல்லத்தானே வேணும் - அதனால்ல, ‘State of the Union’ பேச்சுல இதப்பத்தி ஒரு கோடு போட்டுக் காட்டிருக்கார் - ‘Civilian Reserve Corps’ன்னு ஒண்ணு உண்டாக்கணும்னு. அதோட நோக்கமா அவரு சொல்றது - அந்நிய தேசத்தில இருக்கற அதிகாரபூர்வ துருப்பிற்கு துணையா இருக்கும்னு சப்பைக் கட்டு. இந்த கூலிப்படையாட்கள் சிறப்பு துறையில் பயிற்சி எடுத்துக்கிட்ட பொதுஜனம் என்கிறார். ( hire civilians with critical skills to serve on missions abroad when America needs them )
கொஞ்ச காலத்துக்கு முன்ன அறிமுகமாயி, இன்னைக்கு ரொம்ப பிரபலமாகிப்போன வார்த்தை - outsourcing business. அதுக்கே அப்ப எல்லாரும் பெரும் கூப்பாடு போட்டாங்க. ஆனால், இப்போ, யுத்தத்தையே, அவுட்சோர்ஸாக்கிட்டாங்க அமெரிக்கக்காரங்க. ஏன் யாரும் கூப்பாடு போடலை?
இந்த கூலிப்படை நிறுவனத்தின் பெயர் - பிளாக்வாட்டர் யு.எஸ்.ஏ. (Blackwater USA.) இத விட சிறப்பா பேர் வைக்க முடியாது. என்ன ஒரு கறுத்த சிந்தனை? இராக்ல்ல இருக்கற கறுப்புத் தண்ணீ கூலிப்படையின் எண்ணிக்கை எத்தன தெரியுமா? 100,000. ஆமாம், அமெரிக்காவின் அதிகாரப்பூர்வ ராணுவத்துக்கு அதிகப்படியா, தோழன் பிளேய்ர் ராணுவத்தை விடவும், மத்த யூரோ படைகள விடவும், அதிகமா, ரெண்டாவது எடத்துல இருக்கறது - இந்த கூலிப்படை தானாம்.
இந்த கூலிப்படைக்கு தலைமை? யாரும் கிடையாது - தாந்தோன்றித்தனமான படை. சட்டபூர்வமான நடைமுறைகள் எதுவும் கிடையாது. இவர்கள் ஒரு எதிரியைக் கொன்றால் - அது யுத்த தர்ம விதிகளில் வராது. மத்தபடி அது படுகொலை. உம், எந்த மக்களை ஒரு கொடுங்கோலனிடமிருந்து விடுவிக்கிறோம்னு பந்தா காட்னாங்களோ, அதே மக்களைக் கொல்வதற்கு கூலிப்படையை அனுப்பி வைக்குது - ஒரு அரசாங்கமே! அதுவும் மனித உரிமையின் உச்சமே நாங்கன்னு கோஷம் போட்டுக்கிட்டே!!!
போதாக்குறைக்கு காண்ட்ராக்ட் விட்டதுல்ல, காசு கைமாறிய குற்றச்சாட்டுக்கு விசாரணை வேற தொடங்கியாச்சு..
ஏதோ, தீவிரவாதம் தீவிரவாதம்னு கத்துனாங்களே, பின்னே இது என்னவாம்?
அமெரிக்கன்னா புனிதப் பசு. மத்தவங்கன்னா, demons. இந்த கறுப்புத் தண்ணீ மனுஷங்க, நாளைக்கு அமெரிக்க மக்களுக்கே போக்கு காட்ட மாட்டாங்கன்னு என்ன நிச்சயம்.?
These crooks and thugs, thus developed as mercenaries are a Frankenstein monster in the making.
The American public should CRY FOUL now - to shun this evil.
இதுவரையிலும், நமக்குப் பாட புத்தகங்களில் சொல்லித்தருவாங்க - நாகரீகத்தின் தொட்டில் - சிந்து சமவெளி நாகரீகம், நைல் நதி பள்ளத்தாக்கு நாகரீகம், சுமேரிய நாகரீகம்னு. ஆனால், ஒரு நாட்டை அல்லது இடத்தக் கூட இதுவரைக்கும் - அநாகரீகத்தின் தொட்டில்னு சுட்டிக் காட்டி, சொல்லித் தந்ததில்ல.
வருங்காலத்தில, இதுவும் நடக்கலாம் - அமெரிக்கா, இருபத்தோராம் நூற்றாண்டில் அநாகரீகத்தின் தொட்டிலாக விளங்கியது என்று.
தூக்கிலிட்டபோதும் தலை தொங்காது செத்துப் போனவர்களைப் பார்த்தோம். கழுத்தில் கயிறு மாட்டாமலே தலை தொங்கி விட்டது இந்த அமெரிக்கன்களுக்கு. இந்தத் தலை நிமிர வேண்டுமானால், please stand up and CRY FOUL now.
ஆண்டவன் காப்பத்தட்டும் இவர்களை, ஆமீன்.
கொசுறு:
From Gulf News dated January 29, 2007 - page 22
From high dollar fraud to conspiracy to bribery and bid rigging, Army investigators have opened up 50 criminal probes involving battlefield contractors in the war in Iraq and the US fight against terrorism. Senior contracting officials, government employees, residents of other countries and in some cases United States military personnel have been implicated in millions of dollars of fraud allegations.
And from
“Bush’s mercenaries in Iraq” article from Los Angeles Times - Washington Post via Gulf News.
13 comments:
சவுதி அரேபியா இஸ்ரேலுக்கு தூதுவிட்டு இருக்காம்.
ஷியா-சன்னி மோதல் நடக்குது...அதுல யூதன் உதவி செய்யனுமுன்னு சவுதிக்காரன் கேக்குறான்.
ஈரான் சிரியா ரெண்டு பேரும் ஒரு கூட்டு.
சவுதி,ஜோர்டான், இஸ்ரேல் ஒரு கூட்டு.
தினமும் குண்டு வெடிச்சு சாகுறவன் ஈராக்குக்காரன்...சாகடிச்சது சக-முஸ்லிம் தான்..அவன் ஷியாவா,சன்னியான்னு தான் பிரச்சனை.
இதுல எங்க போயி அமெரிக்காவை சமாளிக்க போறாங்க.
நண்பன்,
அமெரிக்காவின் மனிதாபிமானமற்ற செயலை ஒரு நக்கலுடன் கண்டித்துள்ளீர்கள். அருமை.
பிறகு, மேலே பேர் சொல்ல விரும்பாத அன்பரின் கருத்தைப் படித்தவுடன், உங்களுக்கு ஒரு யோசனைக் கூறவேண்டும் என என் மனதில் பட்டது.
அமெரிக்காவின் செயலைப் பற்றி ஒரு கணிசமான மக்கள் அறிந்துள்ளனர். ஆனால் ....
தனது அரசாங்கம் மேலுலகில் சட்ட முறையில் ஏற்றுக்கொள்ளப் படவேண்டும் என்பதற்காக அவர்கள் பக்கம் சாய்ந்து செயாலர்றும், அல்லது தன் மக்களையே பலிகடாவாக ஆக்கும் சவுதி அரசினப் பற்றி தாங்கள் எழுதலாமே. மத்திய கிழக்கு நாடுகளில் வாழும் தாங்கள் பலர் மூலமாக அவ்வரசாங்கத்தினைப் பற்றி நன்கு அறிந்திருக்க கூடும். அவர்களது தண்ணிகாட்டும் போக்கினை பலர் அறிவதில்லை.
நான் இதை ஏன் கூறுகின்றேன் என்ற்றால், சவுதி அரசாங்கத்தினர் ஒரு முறையற்ற, பிந்தங்கிய வகாபிச சிந்தனையாளர்களகவே எனக்குத்தெரிகிண்றனர். சமீபத்தில், 'அமெரிக்கா ஈராக்கிலிருந்து வெளியேறினால், நாங்கள் சுன்னா பிரிவினருக்கு உதவுவோம்' என அது அறிவித்தது. ஸவுதி மன்னர், வெளிப்படையாக, 'ஈராக்கில் ஷியா கொள்கைகளைப் பரப்பும் ஈரானின் முயற்சி தோல்வியடையும்' என சாதீயம் பேசினார். தனது அரசின் மேலாண்மையைக் கருத்தில் கொண்டு அது செய்யும் இனவாதத்தினைக் கண்டிப்பவர்கள் மிககுறைவு.
மத்திய கிழக்கு நாடுகளில், உலக அமைதிக்கு எதிராக இருப்பது, அந்த வெளிநாட்டினருக்காக உருவாக்கப் பட்ட நாடான இஸ்ரேல் மட்டுமல்ல. அவரகளுடன் மக்களாட்சி முறையில் தேர்ந்தெடுக்கப்படாத பல நாடுகள் தன் சொந்த நலனுக்காக அதனுடன் சேர்ந்து நிற்கிறது. உதாரணத்திற்கு, மேலே அவர் கூறியிருப்பது போல சவுதி, ஜோர்டான், பக்ரைன், எகிப்து (இங்கு கண்துடைப்பு தேர்தல்கள் நிலவுகின்றான்), குவைத் போன்ற நாடுகள் . அதன் காரணமாக அவைகள் மேற்கே செல்வாக்கு பெறுகின்றன. மக்களாட்சி முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஹமாஸ், ஈரான் அரசுகள், செல்வாக்கினைப் பெருவதில் தடுமாறுகின்றன.
http://www.tamilchristians.com/tamilbible/rev/rev18.html
ஐயா இரண்டாவது அநாநி,
பைபிளின் சுட்டி கொடுப்பதற்கெல்லாம், முகத்தை மூடிக் கொண்டு தான் வரவேண்டுமா, என்ன? சரியான முன்ஜாக்கிரதை முத்தண்ணாவாக இருப்பீர் போலிருக்கிறதே!
என்றாலும், மிக்க நன்றி.
அதற்குரிய இடத்தில் வைத்திருக்கிறேன்.
அன்புடன்
நண்பன்
அநாநி 1
எதையெடுத்தாலும், இஸ்லாமிய பூச்சு பூச வேண்டுமெ என்று மெனக்கெட்டால், அப்புறம் எதுவுமே உங்கள் கண்களுக்கு நியாயமாகத் தெரியாது.
யுத்தத்தை ஒப்பந்த அடிப்படையில், அடியாட்களிடம் ஒப்படைப்பது என்பது மனித உரிமைகளை அவமானப்படுத்தும் செயல். இதில் எங்கிருந்து இஸ்லாம் வந்தது என்று தெரியவில்லை.
ஒரு ராணுவ வீரன், தன் நாட்டின் சார்பாக, அதன அரசியல் தலைமை அளிக்கும் உத்தரவை ஏற்று நடக்கக் கடமைப்பட்டவன் ஆதலால், அவன் தன் துப்பாக்கியால் அல்லது அவன் வசம் கொடுக்கப்பட்ட ஆயுதங்களால், எதிரியைக் கொல்லும் பொழுது அவன் கொலைகாரனாக ஆகிவிடுவதில்லை. ஆனால், அதே யுத்தத்தை, அதிகாரப்பூர்வமற்ற, தனி நபர் நிறுவனங்களிடம் ஒப்படைக்கும் பொழுது, அவனுக்கு ராணுவ வீரனுக்குரிய சர்வதேச சட்டப் பாதுகாப்பை வழங்க முடியாது. அவன் கொல்லும் ஒவ்வொரு உயிரும் ஒரு கொலை ஆகும்.
மேலும், இந்த செயல், அமெரிக்கத் தலைமை, தன் மக்களுக்குச் செய்யும் துரோகமாகும். முதலாம் உலகம் என்று சொல்லிக் கொள்ளும் மேற்கத்திய நாடுகளில், அரசியல் தலைமை தன் செயல்களுக்குப் பொறுப்பேற்று பதில் சொல்லியாக வேண்டும். அதில் அந்நாட்டு மக்கள் விழிப்பாக இருக்கிறார்கள் என்பதும் உண்மை. அதனால் தான், ஒவ்வொரு மரணத்தையும் குறித்து அவர்கள் கேள்வி எழுப்புகிறார்கள். யாருக்காக நம் நாட்டு மக்கள் சாகிறார்கள்? எதற்காக சாகிறார்கள் என்று கேள்வி கேட்கிறார்கள். இதற்கெல்லாம் பதில் சொல்லாமல், சொல்ல முடியாமல், தவிக்கும் தலைமை தான், இத்தகைய கொல்லைப் புற வழியாக இயங்கும் கூலிப்படையை ஏவி, பொறுப்புகளைத் தட்டிக் கழிக்க வழி செய்கிறார்கள்.
இந்த மனித உரிமை மீறலை, கேள்வி கேட்டு எழுதப்பட்ட கட்டுரை தான், நீங்கள் வாசித்தது. இந்த யுத்தத்தை, இராக்கில் பரிட்சித்துப் பார்க்கிறது, அமெரிக்கா. உடனே இதில் இஸ்லாத்தை இழுத்துக் கொண்டு வந்து நிறுத்துவது, உங்கள் புரிதலில் நிகழும் தவறே தவிர, என் எழுத்துகளின் குறைபாடல்ல.
எழுதுவதில் மட்டுமல்ல, வாசிப்பதிலும் நாணயம் வேண்டும் நண்பரே.
முயற்சி செய்யுங்கள்.
அன்புடன்
நண்பன்
மு.மாலிக்,
உங்களுக்கான பதிலை ஒரு தனி பதிவாகவே போட்டு விடுகிறேன்.
இந்த வார இறுதியில் எதிர்பாருங்கள்.
அன்புடன்
நண்பன்
ரிசர்வுக்கு போகும் முன்னர் draft இருக்குது...
எனக்கு தெரிஞ்சு அமெரிக்க படைகளின் என்னிக்கை போன வருசம் நவம்பர்ல 152,000 வீரர்கள்.
அது எப்பிடிங்க 1,00,000 விட ஜாஸ்தியா போச்சு ?
'அடுத்தபடியா'ன்னு எழுதுறதுக்கு பதிலா 'அதிகபடியான்னு' எழுதிட்டீங்களா ?
போன வளைகுடா போர்ல கூட ஒன்பதாயிரம் contractors அமர்த்தபட்டார்கள்.
கறுப்புத்தன்னி வீரர்களின் என்னிக்கை ஒரு லட்சம் எல்லாம் இல்லீங்க.
மொத்தமா எல்லா contractorsகளும் சேர்த்து ஒரு லட்சம் பேர் இருக்கலாமுன்னு நினைக்கிறேன்.
Contractorsன்னவுடனே சண்டை போட போகிற mercenariesன்னு நினைக்க தேவையில்லை.
translators, logistics, சமையல் காரன், housekeeping etc etcன்னு நிறைய இருக்குங்க.
எனக்கு தெரிஞ்ச ஒரு கம்பனி மட்டும் 5000 translatorகளை அனுப்பியிருக்கிறது.
மொத்தமாக எல்லாவற்றையும் போட்டு demonize செய்யலாமுன்னு பார்க்கறீங்க...ஹும்.
இனிமே demonise செய்ய என்ன இருக்கு ?
அப்பிடி செஞ்சாத்தான் அமெரிக்காவை அடுத்த போரில் இருந்து தடுத்து நிறுத்திவிட முடியுமா ?
சமுத்ரா,
Draft செய்து, பயிற்சி பெற்று, ரிசர்வ் போயி காத்திருக்கும் நபர்களைச் சொல்லவில்லை.
அதிகபடியா = என்பது அடுத்தபடியாக என்றாலும் சரிதான்.
ஆனால் அதிகாரப்பூர்வமற்ற இந்த படையினரின் எண்ணிக்கை - 100,000 என்பது சரியே.
These crooks and thugs, thus developed as mercenaries are a Frankenstein monster in the making.
The American public should CRY FOUL now - to shun this evil.
------
q. Human eugenics research advanced by the King of Terror
===
I p 244 (cX-72)
In 1999 and WWWIII many horrible areas of research will be pursued,
including a eugenics project, i.e. breeding humans for selected
characteristics. This particular research will have been ongoing for
decades. The scientists attempt to bring back some of the less
civilized, fiercer humans, still smart but cunning and strong, for
the purpose of infantry soldiers. The governments engage the breeded
humans in battles and the scientists will try to tabulate their
performance relative to normal human soldiers.
This will happen during the period of WWWIII and enormous social
unrest. U.S., Japan, Russia, and some European countries will be
involved. They have the gold to fund the research. A "King of
Terror", the "power behind the throne", is in charge of the project.
He has enormous secret influence and greatly feared, unchallenged
power over policy decisions in various countries.
http://www.faqs.org/faqs/nostradamus/part5/
மூன்றாவது அநாநி,
நன்றி - நீங்கள் கொடுத்த தொடுப்பிற்கு.
வாசித்து விட்டு அப்புறமாக கருத்து சொல்கிறேன்.
நீங்கள் சொல்லியவரையிலுமே, மிரட்டலாக இருக்கிறது.
மீதி எப்படி இருக்குமோ?
சமுத்ரா டியர்,
தாமதமாக வந்தாலும் தரமான நகைச்சுவையுடன் வந்திருக்கிறீர்கள்.
நான் புஷ்-ஷை மக்கு என்று சொன்னது His decisions are not so political savvy என்ற வகையில் தான். ஆனால், நீங்கள் அவரை மிக மோசமாக மட்டம் தட்டி விட்டீர்களே.
புஷ், தனது உரையில், அதுவும் அமெரிக்க மக்கள் மிக ஆவலுடன் எதிர்பாத்த உரையில் கீழ்க்கண்டவாறு சொல்கிறார்.
... hire civilians with critical skills to serve on missions abroad when America needs them...
யாராவது தப்பாக புரிந்துகொள்ளப் போகிறார்கள் என்பதால், ஆங்கிலத்தில் அவர் கூறியதையும் எழுதி வைத்தேன்.
வார்த்தைகளைக் கூர்ந்து கவனியுங்கள் - critical skill என்று சொல்வது சமையல்காரர்களின் திறமையை அல்ல என்று நினைக்கிறேன். அது போல சமையற்கட்டில் நடக்கும் வேலைகளை யாருமே mission என்று சொல்வதில்லை. சும்மா பிஸ்ஸா சுடுவததயும், பர்கர் செய்வதையும் அவர் குறிப்பிடவில்லை. மிகத் தெளிவாக, ராணுவத்தின் சில வேலைகளை எடுத்துக் கொள்ள வேண்டும், அதற்குரிய சிறப்பு பயிற்சிகளைப் பெற்றவர்கள் வேண்டும். என்று சொல்வதை சமையல் கட்டில் நடக்கும் வேலைகளாகவோ, அல்லது ஒரு டைப்பிஸ்ட் வேலைக்கான பணியாகவோ புஷ் நினைத்திருக்க மாட்டார். அல்லது அவருக்கு உரை தயாரித்து தரும் அலுவலரும் அவ்வாறு நினைத்திருக்க மாட்டார்.
சமுத்திராவால் மட்டும் தான் இப்படி நகைச்சுவையுடன் ஒரு அதிபரைப் பற்றி எண்ண முடியும்.
கறுப்புத் தண்ணீர் நிறுவனம் முன்னணியில் இருக்கிறது. பிற நிறுவனங்களும் அதை பின்பற்ற தொடங்கி இருக்கின்றன.
சரி, இந்த 100,000 கூலியினர், அமெரிக்க ராணுவத்திற்கு உதவி செய்வதற்காக கூடுதலாக அனுப்பி வைக்கப்பட்டவர்கள். இவர்களில், 48,000 பேர் - private soldiers. மீதி பேர், அங்கிருக்கும் அரசியல்வாதிகள், தூதரக அதிகாரிகள் ஆகியோருக்கு ஆயுதம் தாங்கிய பாதுகாவலர்களாக, மற்றும் அதே போன்று ராணுவ சம்பந்தமான வேலைகளைத் தான் செய்கிறார்கள்.
சும்மா ரொட்டி சுடுவதற்கெல்லாம் 1000 டாலர் சம்பளத்தை கொட்டி கொடுக்க மாட்டார்கள், அன்பு நண்பரே.
வாசிக்க விரும்புபவர்களுக்கு
http://archive.gulfnews.com/articles/07/01/29/10100162.html
Post a Comment