"எழுத்துகளையும் தாண்டி எனக்கென்று ஒரு உலகம் உண்டு; நான் எழுதுபவற்றை மட்டுமே வைத்துக் கொண்டு, என்னை எடை போடுபவர்களை எப்பொழுதும் என் எண்ணங்கள் வியப்பில் ஆழ்த்திக் கொண்டே இருக்கும்....."
- நண்பன்

Saturday, November 22, 2008

மைக்கெல் ஜாக்ஸன் இஸ்லாத்தில் இணைந்தார்.

பெப்ருவரி 25, 2007 அன்று நான் எழுதிய பதிவில் குறிப்பிட்டிருந்தேன் - ஜாக்ஸன் இஸ்லாத்தில் இணைகிறார். அதற்கான காலம் கனிந்து வருகிறேன் என்று.

இன்றைய செய்தி - ஜாக்ஸன் இணைந்தே விட்டார் என்று.

Good Luck and Welcome Jackson.

வணக்கம், மைக்கெல் ஜாக்ஸன், வாருங்கள்.





மிக்காயீல் என்று தனது பெயரை மாற்றிக் கொண்டு அவர் இஸ்லாத்தில் இணைந்த செய்தியும், கடந்த வருடம் நான் எழுதிய பதிவின் மீள் பிரசுரமும் இதோ கீழே::



Troubled pop star Michael Jackson has converted to Islam and changed his name to Mikaeel.

Jackson, 50, was dressed in the Islamic garb as he pledged his allegiance to the Koran at a friend's house in Los Angeles. He sat on the floor as an Imam was called to officiate the ceremony.

Jackson, who was raised a Jehovah's Witness, decided to convert after discussing religion with a music producer and songwriter on his new album - both of them converts to Islam.

"They began talking to him about their beliefs and how they thought they had become better people after they converted. Michael soon began warming to the idea. An Imam was summoned, and Michael went through the shahada, which is the Muslim declaration of belief," a source was quoted as saying.

Mikaeel is the name of one of Allah's angels.

கடந்த வருடம் நான் எழுதிய பதிவு இது தான்.


மைக்கெல் ஜாக்ஸன் வெகு விரைவில் இஸ்லாத்தில் இணைவார் என அவரது சகோதரர் ஜெர்மய்ன் ஜாக்ஸன் ஒரு பிரிட்டிஷ் இஸ்லாமிய செய்தித் தாளில் அறிவித்துள்ளார். இதைப் பற்றிய செய்தி, இன்று கலீஜ் டைம்ஸிலும் வெளியாகியுள்ளது.

தன்னைப் பின்பற்றி, தனது சகோதரனும் தனது நம்பிக்கைகளை மாற்றிக் கொள்வார் என கூறியுள்ள அவர், தனது ஹஜ் கடமைகளை முடித்து விட்டு, திரும்புகையில் தனது சகோதரனுக்காக நிறைய இஸ்லாமிய புத்தகங்களை வாங்கி வந்ததாகவும், அவர் இஸ்லாம் மதம் பற்றி தன்னிடம் நிறைய கேள்விகள் கேட்டதாகவும், தான் அதற்கு இஸ்லாம் அமைதியான, அழகிய மார்க்கம் என்று கூறியதாகவும் தெரிவித்துள்ளார்.

புத்தகங்கள் அனைத்தையும் வாசித்து விட்ட மைக்கேல் ஜாக்ஸன், அமைதியையும், மன வலிமையையும் தரக்கூடிய வழியைக் கண்டு கொண்ட தன் சகோதரனைக் குறித்துப் பெருமையடைந்ததாக சகோதரர் ஜெர்மய்ன் ஜாக்ஸன் (52) கூறினார். 'வெகு விரைவில் அவர் இஸ்லாத்தில் இணையக் கூடும்" என்ற ஜெர்மய்ன், மைக்கேல் இஸ்லாத்தில் இணைந்தால், தானும் அவரும் சேர்ந்து இவ்வுலகில் பெரும் மாற்றங்களைத் தோற்றுவிக்க முடியும் என்றார்.

'மைக்கேலால் நிறையச் செய்ய முடியும். நான் முயற்சிப்பதைப் போல். நான், மைக்கேல் ஜாக்ஸன், மற்றும் இறைவனின் வார்த்தைகளால் நிறையச் செய்ய முடியும்.' என்கிறார் ஜெர்மய்ன். 1989ல் தன்னை இணைத்துக் கொண்ட, ஜெர்மய்ன், சமீபத்தில் நடைபெற்ற Big Brother Celebrityயில் இரண்டாம் இடத்தைப் பிடித்தார் - அதாவது ஷில்பா ஷெட்டிக்கு அடுத்த இடம். இன துவேஷத்திற்கு ஷில்பா ஆளான பொழுது, அவருக்கு ஆதரவாக இருந்து, நண்பனானவர்.

பல வழக்குகளில் சிக்கி மன அமைதி இழந்து, நிம்மதியின்றி தவித்தவர் - ஜாக்ஸன்.

செய்தியின் சுட்டி.
http://news.yahoo.com/s/afp/20070222/ennew_afp/afpentertainmentislam_070222184705
The Khaleej Times, 25-2-07.

செய்தியைப் படித்ததும் மற்றவர்களுக்கு ஆச்சரியமாக இருக்கலாம். அமெரிக்காவிலிருந்து வெளியான பின்பு அவர் பஹ்ரைன் வந்தார். அங்கேயே பெரும்பகுதியைக் கழித்தவர். அவர் மீது தொடுக்கப்பட்ட வழக்குகளிலெல்லாம் விடுபட்டாலும் இன்னமும் புதிது புதிதாக ஏதாவது ஒரு காரணத்தைக் கொண்டு, வழக்குகள் வந்த வண்ணம் தான் இருக்கின்றன. இப்பொழுது கூட, அவர் மீதும், ஒரு மருத்துவ மனை மீதும் வழக்குகள் போடப்பட்டுள்ளது. காரணம் - அவர் காய்ச்சலுடன் உடல் நலமின்றி வந்த பொழுது, ஒரு நோயாளிப் பெண்மணியை அகற்றி விட்டு, அவருக்கு அந்த இடத்தைத் தந்தார்கள். அந்தப் பெண்மணி, சிறிது நேரத்தில் இறந்து விட்டார். அவர் சாவிற்கு ஜாக்ஸன் தான் காரணம் என்று ஒரு வழக்கு.

ஒரு மனிதனை எத்தனை தூரம் ஒரு சமூகம் சின்னாபின்னா படுத்த முடியும் என்பதற்கு மைக்கேல் ஜாக்ஸன் ஒரு உதாரணம். மன அமைதியைக் குலைத்து, தங்கள் சுயலாபத்திற்காக எதையும் செய்யத் தயாராகி விட்ட ஒரு சமூகத்தின் பிடியிலிருந்து தன்னை விடுவித்துக் கொள்ள, அவர் தேர்வு செய்து கொண்ட பாதை: இஸ்லாம்.

வலுக்கட்டாயமான கருத்துத் திணிப்பினால், அவர் தன் வழியை மாற்றிக் கொள்ளவில்லை. மாறாக முற்றிலும் அறிந்து, பின் தன்னை இணைத்துக் கொள்ள விரும்புகிறார். அவர் அவ்வாறு தன்னை இணைத்துக் கொள்வாரானால், இஸ்லாம் அவரை வரவேற்கும். அவருக்கு அமைதியை வழங்கும்.

புலம்புபவர்கள் புலம்பித் திரியட்டும்.

இஸ்லாம் அமைதியாக தன்னை வளர்த்துக் கொண்டேயிருக்கும்

18 comments:

Anonymous said...

அருமையான செய்தி,
//வணக்கம், // - ‍த்திற்கு ப‌திலாக‌ அஸ்ஸலாமு அலைக்கும் என்று குறிப்பிட்டு இருந்தால் மிக நன்றாக இருக்கும்.

நண்பன் said...

அன்பின் அநாநி,

வணக்கம் என்பது குறித்த எனது நிலைபாடுகளை ஏற்கனவே தெளிவுபடுத்தி விட்டேன். இது குறித்து பண்புடனில் விரிவான தர்க்கங்கள் நடத்தியிருக்கிறோம்.

இன்னமும் இது குறித்து ஒரு பதிவிட வேண்டியதிருக்கிறது. இன்று இரவு முடிந்தால், பதிவிடுகிறேன்.

நன்றி.

இனியவன் ஹாஜி முஹம்மது said...

Dear Shaji (Nanban)

This good news but he has to act as Islamic man not like the normal muslims. They have bear and kullah.

If he follow as per Muhammadh (PBUH), Then we are happy. You know one thing I was in Europe, somany white peoples joined Islam. you can visit my blog http://iniyahaji.blogspot.com, http://iniyamendia.blogspot.com,
http://ilaiyarajali.blogspot.com.

Regards,
IniyaHaji
Doha - Qatar
Mobile: 00974 6932877
Email:iniyavan.haji@gmail.com
iniyavan_haji@hotmail.com

நண்பன் said...

அன்பின் இனியன்,

நன்றி.

அவர் ஒரு முஸ்லிமைப் போல் நடந்து கொள்ள வேண்டுமென்கிறீர்கள்.

ஒரு மனிதரிடத்திலிருந்து எதை எதிர்பார்க்க வேண்டும் எதை எதிர்பார்க்கக் கூடாது என்பதற்கு ஒரு எல்லை வகுத்துக் கொள்ள வேண்டும்.

பெரும்பான்மையான இஸ்லாமியார்கள் எவ்வாறிருக்கிறார்களோ, அவ்வாறே இருந்தால் போதும்.

ஒரு நல்ல இஸ்லாமியராக இருக்க வேண்டும் என்ற காரணத்தினால், உங்கள் மனதில் இருக்கும் 'ஒரு நல்ல முஸ்லிமின் தோற்றத்தை' அவர் மீது சுமத்தி அப்படியெல்லாமிருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்புகளையெல்லாம் உருவாக்கிக் கொள்ளக் கூடாது.

இஸ்லாமியனாகிவிட்டாய் - இனி பாட்டு பாடாதே என்றெல்லாம் நிபந்தனைகளை விதிக்காதீர்கள்.

இஸ்லாமியனாகிவிட்டாய் - இனி இஸ்ரேலை ஒழித்துக் கட்டுவதே உன் சிந்தனையாக இருக்க வேண்டும் என்றெல்லாம் கட்டாயப்படுத்தாதீர்கள்.

In its highest sense, Islam means the awareness of our nothingness before him, for, as the Quran says, "All that dwells in the heavens and the earth perishes, yet there abideth the Face of thy Lord, Majestic, Splendid" (55:26-27) The very name of the religion, Islam, comes from this reality, for the Arabic word al-islam means "surrender" as well as the peace that issues from our surrender to God. Islam considers all authentic religions to be based on this surrender, so that al-islam means not only the religion revealed through the Quran to the Prophet Muhammad, but all authentic religion as such. That is why in the Quran the prophet Abraham is also called muslim, that is, one who is in the state of al-islam.

இஸ்லாம் என்பது ஒரு மனிதனின் எளிய நிலைபாடு. இறைவனை முழுமையாக ஏற்றுக் கொள்தல்.

மற்றவையெல்லாம், இரண்டாம்பட்சம் தான்.

Anonymous said...

ஹூம் கதை, கலாட்சபம் என்று போய்கிட்டு இருந்த நீங்கள் இப்பத்தான் இஸ்லாத்தின் பக்கம் உங்களின் பார்வையை திருப்பி அதை அறியும் முயற்சியில் இறங்கி உள்ளீர்கள். இன்னும் கடக்க வேண்டிய பாதைகள் நிறைய உள்ளன. அதற்குள் இரண்டாம் பட்சம் என்ற கருத்துக் கூறி கருத்து கந்தசாமியாகிடாதிங்க.

நண்பன் said...

நன்றி, அநாநி.

நான் இஸ்லாத்தை அதன் சரியான தளத்தில் அறிந்து கொள்ளும் வழியில் தான் இருக்கிறேன்.

இறுதி வரையிலும், அந்த அறியும் வழியில் தான் இருப்பேன்.

முற்றிலும் அறிந்தவனாக, உங்களைப் போன்ற இஸ்லாத்தின் அத்தாரிட்டியாக ஒரு நாளும் ஒரு பொழுதும் மாறும் விருப்பம் இல்லை.

அதனால், நீங்கள் உபதேசங்களைச் செய்து கொண்டே இருங்கள். ஆனால், அதற்காக அவற்றையெல்லாம் நான் கேட்டுக்கொண்டிருக்க வேண்டும் என்று வற்புறுத்தாதீர்கள்.

என் அறிவை நான் என் வழியில் தேடிக் கொள்ளவே விரும்புகிறேன்.

என் பதில் உங்களைப் புண்படுத்தியிருக்காது என்ற எண்ணத்துடன்,

அன்புடன்
நண்பன்

Anonymous said...

...என் பதில் உங்களைப் புண்படுத்தியிருக்காது என்ற எண்ணத்துடன்,

அன்புடன்
நண்பன்...

நிச்சயமாக புண்படுத்த வில்லை. இந்த பதிலில் மகிழ்ச்சியே. முன்பைக் காட்டிலும் முன்னேற்றத்தைத்தான் இந்த பதிலில் நான் காண்கின்றேன்.

நாம் அனைவருக்கும் நேர்வழியைக் காட்ட அந்த வல்ல இறைவனை பிரார்த்திப்போம்.

தருமி said...

//இஸ்லாமியனாகிவிட்டாய் - இனி பாட்டு பாடாதே என்றெல்லாம் நிபந்தனைகளை விதிக்காதீர்கள்//

ஆனால் இஸ்லாமியக் கருத்துப் படி ஆட்டம் பாட்டம் எல்லாம் தவறான காரியங்களா? ஒரு இஸ்லாமியரின் பதிவில் ஏ.ஆர், ரஹ்மான் இசையை விட்டு விலகுவது நல்லது என்று ஒரு கருத்தைக் கூறியிருந்தார். யார் எப்போது என்பதெல்லாம் நினைவில்லை. அதே அளவை இங்கே காண்பித்தால் மிக்கேலும் அவைகளை விட்டு விடவேண்டும்தானே?

நண்பன் said...

அநாநி,

நீங்கள் மகிழ்ச்சி கொண்டது குறித்து மிக்க நன்றி.

அது சரி, ஏன் அநாநியாகத் தொடர வேண்டும்?

உங்கள் அறிமுகத்த்தையும் தரலாமே!

அன்புடன்,
நண்பன்

வினவு said...

மைக்கேல் ஜாக்சன் ஏதோ சமூக சேவைக்கு பெயர் பெற்றவர் போல அவர் இசுலாத்திற்கு வருவது குறித்து மகிழ்கிறீர்கள். மற்ற சீரழிவுகளை விடுங்கள், சிராறை பாலியல் வன்முறை செய்த நன்மகன் இசுலாத்திற்கு வருவதால் கெட்டபெயர் அவருக்கல்ல, உங்களைப் போன்றவர்களுக்குத்தான்

வினவு

நண்பன் said...

வினவு,

நான் எங்கேயுமே, அவர் வருவது குறித்து மகிழ்ச்சி கொண்டு குதூகலிக்கிறோம் என்றோ, அல்லது அவரது வருகையால் இஸ்லாம் மேலும் பெருமையுறுமென்றோ எழுதவில்லையே!

அவர் வருகிறார், என்று இரண்டு வருடத்திற்கு முன்பு எழுதினேன், பத்திரிக்கைச் செய்திகளைக் கொண்டு. பின்னர் அவர் வந்த பின்பு, நான் முன்பு எழுதியது நிகழ்ந்தது என்ற வகையில், அந்த செய்தியை - இந்த முறை மொழி பெயர்க்காமல், ஆங்கிலத்தில் வந்த செய்தியை அப்படியே தான் இணைத்திருக்கிறேன்.

மற்றபடிக்கு, ஒருவர் வருவதை வாருங்கள் என்று சொல்லாமல், வரவேற்காமல் வேறு என்ன செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்கள்?

நிற்க,

அவர் மீது பல குற்றச்சாட்டுகள் சொல்லப்பட்டன தானே தவிர, எதுவுமே நிரூபிக்கபடவில்லையே?

இந்தக் கேள்வியை அல்லது நீங்கள் சொல்லும் குற்றங்கள் குறித்து என்ன நிகழ்ந்தது என்று கூகுளில் தேடிப்பார்த்து விட்டு, இங்கு சொல்லியிருக்கலாமே!

ஒருவன் மீது ஒரு குற்றம் சொல்லிவிட்டாலே, அவன் தீண்டத்தகாதவனாகிவிடுகிறான் என்பதை ஏற்க முடியவில்லை. அதென்ன புனிதம், பாவம் எல்லாம்?

மேலும், நீங்கள் சொன்ன குற்றங்கள் எல்லாம் நிகழ்ந்த பொழுதில் அவர் இஸ்லாத்தில் இல்லை. அப்பொழுது அவர் இருந்த கிறித்துவ மதத்திற்கு இழுக்கா? அதிலும் பொருளில்லை.

அவர் மீது குற்றம் சாட்டியவர்கள், பின்னர் பணம் கேட்டு மிரட்டினார்கள் என்பதும் தெளிவு படுத்தப்பட்டிருக்கிறது. ஒரு நீண்ட கால வழக்கில் சிக்கி, எங்கே ஜாக்ஸன் தன்னையே இழந்து விடுவாரோ என்ற அச்சத்தில், பணம் கொடுக்கக் கூட தயாராகத் தான் இருந்தனர். பேரம் படியவில்லையென்பதால் வழக்கு தொடர்ந்து நடந்து, கடைசியாக not guilty என்று அவர் மீது தொடரப்பட்ட பத்து வழக்குகளிலுமிருந்து அவர் விடுதலை செய்யப்பட்டார் - நீதி மன்றங்களிலினால்.

அந்த இடைப்பட்ட காலத்தில் அவர் இந்த கடினமான நிலையைக் கடக்க எத்தனை சிரமப்பட்டார் என்பதையும், தூக்க மாத்திரைகள், போதை வஸ்துகள் என்றெல்லாம் சிரமப்பட்டு அதிலிருந்து மீண்டார் என்பது தானே உண்மை.

நீங்கள் தேடுவதற்கு மறந்துவிட்டாலும் , உங்களுக்காகக் கீழே:

(A bit longer.. but I can't help it...)

CNN தளத்திலிருந்து:

SANTA MARIA, California (CNN) -- A California jury has exonerated Michael Jackson of the child molestation, conspiracy and alcohol charges that could have sent him to prison for nearly 20 years.

The jury deliberated about 32 hours throughout the course of seven days before reaching its decision.

The clerk of court read the verdicts Monday in a packed courtroom while a large crowd of supporters waited outside. Jackson fans cheered, wept and hugged upon hearing the verdicts. (Fans react)
Courtroom observers reported that Jackson dabbed his eyes with a tissue after his acquittal.

Prosecutors had charged the singer with four counts of lewd conduct with a child younger than 14; one count of attempted lewd conduct; four counts of administering alcohol to facilitate child molestation; and one count of conspiracy to commit child abduction, false imprisonment or extortion.

Santa Barbara County District Attorney Thomas Sneddon sat grim-faced during the reading of the verdict and said later that he would accept the decision.

"In 37 years [as a prosecutor], I've never quibbled with a jury's verdict, and I'm not going to start today," Sneddon said. (Legal reaction)

Asked if the acquittal ends California's prosecution of Jackson, Sneddon replied, "No comment."

Jackson's family members accompanied him to the courthouse to hear the verdict and flanked him as he exited the courthouse to the cheering of supporters.

Looking drawn and expressionless, Jackson did not address the throng before leaving the courthouse in a caravan of black sport utility vehicles.

His lead defense attorney, Thomas Mesereau Jr., told reporters on his way out of the courthouse that "justice was done."

"The man's innocent. He always was," Mesereau said.

CNN's Rusty Dornin reported that before the clerk of court read the findings, the courtroom was hushed. The only sound was that of the judge tearing open the envelope for each count.

Jackson's father, Joe Jackson, stared stiffly with hands clasped as he listened to the verdicts, Dornin said.

Jackson stared starkly at jurors with no visible signs of emotion, she said. Santa Barbara Superior Court Judge Rodney Melville previously admonished courtroom observers to restrain themselves at the reading of the verdicts, Dornin reported.

Upon hearing the findings, Jackson's family members reached out to touch one another and to support Jackson's mother, Katherine Jackson, Dornin said.
The matriarch sobbed at hearing the first "not guilty."

After the verdicts, the judge read a statement from the jury. It stated: "We the jury feel the weight of the world's eyes upon us." The jurors asked to return to their "private lives as anonymously as we came."

They later held a news conference, identifying themselves by their juror numbers.

The attorney for Debbie Rowe, one of Jackson's former wives, released a statement from her. "Debbie is overjoyed that the justice system really works, regardless of which side called her to testify at the trial," it read.

Chain of events

Monday's verdicts capped a chain of events that began in February 2003, after the broadcast of "Living With Michael Jackson," an unflattering television documentary by British journalist Martin Bashir.

In the program, Jackson was shown holding hands with the boy now accusing him of child molestation, and he defended as "loving" his practice of letting young boys sleep in his bed.

In November of 2003, California authorities searched Jackson's Neverland Ranch, following molestation allegations against the singer. Jackson was booked on child-molestation charges that month and released on $3 million bail. Formal charges against Jackson were filed in December 2003.

A grand jury indicted the 46-year-old pop star in April 2004 on charges of molesting the boy at the center of the trial, giving him alcohol and conspiring to hold him and his family captive in 2003.
Jackson pleaded not guilty to the charges and did not testify during the trial.

Testimony and closing arguments stretched nearly 14 weeks before the jury got the case.

Prosecutors alleged that, following the broadcast of the Bashir documentary in 2003, Jackson and five associates plotted to control and intimidate the accuser's family to get them to go along with damage-control efforts, including holding them against their will at Neverland. The molestation charges relate to alleged incidents between Jackson and the accuser after the Bashir documentary aired.

Jackson's lawyers, however, consistently portrayed the singer as a naive victim of the accuser's family, who, they claimed, were grifters -- schemers -- with a habit of wheedling money out of the rich and famous.

Dramatic testimony

The Jackson trial was full of salacious testimony, dramatic moments and celebrity defense witnesses. (Key moments)

Among the more than 130 people who testified were former child star Macaulay Culkin. He disputed testimony from earlier witnesses who claimed they saw Jackson behaving inappropriately with him in the early 1990s.

On March 10, the first day Jackson's accuser testified, the pop star arrived late for court as the judge threatened to revoke the singer's $3 million bail. Jackson, claiming he had a back injury severe enough to require a hospital visit, finally came to court in pajamas and slippers, walking gingerly with a bodyguard and his father supporting him.
The accuser, now 15, testified in graphic detail about what he claims were molestations by Jackson on two separate occasions in early 2003. During cross-examination, however, the teenager admitted he told an administrator at his school that nothing happened between him and the singer.

Prosecution witnesses included the accuser's mother, who was on the stand for three days, and a former security guard who testified that he saw Jackson engaged in oral sex with another teenage boy.

That boy received an out-of-court settlement in his family's molestation case against the pop star for an undisclosed amount. Jackson was not charged in that case and denied any wrongdoing.
Testimony in the trial closed with prosecutors showing a police videotape in which the accuser tells detectives the singer gave him wine and masturbated him as many as five times.

Members of the jury came from a pool of 200 people from Santa Barbara County, just north of Los Angeles. The eight-woman, four-man jury ranged in age from 20 to 79, including a 21-year-old male paraplegic who said he once visited Neverland Ranch, where Jackson has a mansion, zoo and small amusement park.

http://www.cnn.com/2005/LAW/06/13/jackson.trial/index.html

Timeline of the Case – prosecution and defense.

http://www.cnn.com/interactive/law/0505/timeline.jackson.trial/frameset.exclude.html



Legal reaction to Jackson verdict.
SANTA MARIA, California (CNN) --

The following is reaction to Monday's verdicts in Michael
Jackson's child molestation case.
Lead defense attorney Thomas
Mesereau Jr.:

"Justice was done. ...

"The man's innocent. He always was."

CNN legal analyst Jeffrey Toobin:

"A lot of people are going to be surprised, and you don't need a law degree to understand this verdict.

"It is an absolute and complete victory for Michael Jackson, utter humiliation and defeat for Thomas Sneddon, the district attorney who has been pursuing Michael Jackson for more than a decade, who brought a case that was not one that this jury bought at all. This one's over."

Robert Shapiro, defense attorney from O.J. Simpson's murder trial:

"The jury did not come up with a compromise verdict, which a lot of people would suspect if they just wanted to give the prosecution something.

"The jury clearly has told the prosecution: 'This was a case you probably should not have brought.'

"The little's boy's credibility was probably nonexistent to this jury, coupled with the mother who offered testimony that bordered on the bizarre.

"That this is a case that they didn't want to show guilt by association. They did follow the judges' instructions clearly on the prior [accusations] by not using that as a way to show he committed this particular crime.

"My hope is that the public accepts this verdict. This is a jury in a very, very conservative part of California, a jury that by all the markings looked like a pro-prosecution jury. And if this jury had no doubt, none of us should have any doubt whatsoever."

"I didn't think Michael would be singing 'Beat It.' Now he's going to be doing the moonwalk."
Santa Barbara County District Attorney Thomas Sneddon, the lead prosecutor:

"In 37 years, I've never quibbled with a jury's verdict, and I'm not going to start today. ...

"I'm not going to look back and apologize for anything. ...

"I have no criticisms of the judge whatsoever. ...

"I think we all learned some lessons here. We thought we had a good case this time, and we thought we did a conscientious job, and the sheriff's department did a remarkable job of investigating. ...

"The people in this county elected me to do a job, and I've tried to do that conscientiously. ...

"We did the right thing for the right reasons. ...

"You can never have a case where you don't get some surprises. ...

"When a victim comes in and the victim tells you they've been victimized, and you believe that, and you believe the evidence supports that, you don't look at their pedigree. ...

"We look at what we think is what's right. You do the right things for the right reasons. If it doesn't work out, that's why we have a jury system. But we did the right thing for the right reasons."

http://www.cnn.com/2005/LAW/06/13/jackson.legal/index.html

SurveySan said...

interesting.

இனி என்ன பண்றாருன்னு பாப்போம்.

மைக்கேலோ, மிக்காயிலோ, யாரா இருந்தாலும் எனக்கு ஒண்ணுதான்.

அடுத்த ஆல்பம் சிறப்பா வந்தா நல்லாருக்கும். பல காலமாச்சு, அவர் கிட்டேயிருந்து பாட்டு வந்து.

நண்பன் said...

தருமி,

இசை என்பது இன்னமும் சூடாக விவாதிக்கப்பட்டுக் கொண்டு தானிருக்கிறது, இஸ்லாத்தினுள்.

இதை ஒரு பின்னூட்டத்தில் விளக்கிச் சொல்ல முடியும் என்று தோன்றவில்லை.

என்றாலும், நீங்கள் நாகூர் ரூமியின் 'சொற்களின் சீனப்பெருஞ்சுவர்' என்ற புத்தகம் கிடைத்தால் வாசித்துப் பாருங்கள். அதிலும் இந்த விவாதம் நிகழ்கிறது.

மற்றபடி, இசையும், இஸ்லாமும் என்பதை தனிப் பதிவாகவும் இட முயற்சிக்கிறேன்.

உங்கள் வருகைக்கு மிக்க நன்றி, தருமி.

அன்புடன்
நண்பன்

நண்பன் said...

சர்வேசன்,

//interesting.

இனி என்ன பண்றாருன்னு பாப்போம்.

மைக்கேலோ, மிக்காயிலோ, யாரா இருந்தாலும் எனக்கு ஒண்ணுதான்.

அடுத்த ஆல்பம் சிறப்பா வந்தா நல்லாருக்கும். பல காலமாச்சு, அவர் கிட்டேயிருந்து பாட்டு வந்து.//

நன்றி.

பலரும் காத்துக் கொண்டிருப்பது, அவரது மறுபிரவேசத்திற்காகத் தான்.

அவர் எந்த மதத்தில் என்னவாக இருக்கிறார் என்ற கவலையை விட, அவர் அடுத்து எந்த மாதிரியான இசையைத் தருவார் என்ற பதைபதைப்பு தான் அனைவரிடத்திலும்.

பார்ப்போம்.

வெற்றி பெற வாழ்த்துவோம்.

மஸ்தூக்கா said...

இதற்கு முன்னரும் தங்கள் பதிவை பார்வையிட்டிருந்தாலும், இப்போது தங்கள் பதிவில் (இஸ்லாமிய)முன்னேற்றம் தெரிகிறது மகிழ்கிறேன்.
அடுத்து
//வணக்கம் குறித்து எனது நிலைபாட்டை ஏற்கனவே தெளிவு படத்திவிட்டேன்//
என்று குறிப்பிட்டுள்ளீர்கள்.
தங்கள் நிலைபாடு என்ன? என்பதல்ல பிரச்சினை. வணக்கம் குறித்து இஸ்லாத்தின் நிலைபாடு என்ன? என்பது தான் கேள்வி.

இறைவனுக்கு மட்டுமே செலுத்த வேண்டிய வணக்கத்தை மற்றவர்களைப் பின்பற்றி மனிதனுக்கு மனிதன் செய்யலாமா? உடனே, 'வணக்கம்' செய்யப்படுவதில்லையே சொல்லாத்தானே படுகிறது எனத் தாங்கள் வாதிடலாம்.ஒரு பெண் அந்நிய ஆணிடம் 'நீங்கள் எனது கணவர் மாதிரி' என்று சொன்னாலோ அல்லது ஒரு ஆண் அந்நிய பெண்ணிடம் 'நீங்கள் எனது மனைவி மாதரி'என்று சொன்னாலோ இங்கு சொல்லத்தானே படுகிறது இல்லற வாழ்க்கையா நடத்துகிறார்கள் எனக் கேட்பது எப்படி எவ்விதம் தவறானதோ அப்படித் தான் இதை எடுத்துக் கொள்ள வேண்டும்.
வாதத்தில் நீங்கள் என்னை ஒருகால் மிகைக்கலாம்.ஆனால் வணக்கம் எனக் கூறுவது ஓர் அந்நிய கலாச்சாரம் என்பதை தாங்கள் மறுக்க மாட்டீர்கள். ஏனெனில் முகமன் கூறும் முறையாக இஸ்லாம் நமக்குக் கற்றுத் தந்திருப்பது 'அஸ்லாமு அலைக்கும்' என்னும் அழகிய முகமன் தான. சரி முஸ்லிம் அல்லாதவர்களுக்கு எப்படி சொல்வதாம் என அடுத்த வினாவைத் தாங்கள் தொடுப்பது புரிகிறது. பிறமதச் சகோதாரர்கள் நமக்கு சலாம் சொன்னால் நாமும் பதிலுக்கு அதே முறையில் அழகாக திருப்பி பதில் சொல்வோம். நமது ஸலாம் கூறும் முறையை விரும்பாத அல்லது தெரியாத பிற சமய சகோதர்களிடம் 'வாழ்த்துக்கள்' எனக் கூறலாமே.
அறிஞர் நன்னன் அழகாக இதை விளக்கியுள்ளாரே. அறிஞர் நன்னன் அவர்களுக்கு இருக்கும் பக்குவம் நமக்கு ஏன் இல்லாமற்போனது.
ஒரு நபி மொழியை தங்களுக்கு நினைவுறுத்துகிறேன்.
' யார் அந்நிய கலாச்சாரத்தைப் பின்பற்றுகிறாரோ அவர் நம்மைச்சார்ந்தவர் அல்ல' என்பது நபிமொழி். மற்றொரு அறிவிப்பில் அவர்களையே சேர்ந்தவர் என்னும் வாசகமும் கூடுதலாக இடம் பெற்றுள்ளது.

SurveySan said...

ஒரு 'வணக்கத்துல' இவ்ளோ மேட்டர் இருக்கா. :)

அந்த அலசலை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.

வணக்கம் = ஹலோ = சலாம்தானே? அதில் எப்படி இவ்வளவு குழப்பங்கள் இருக்க முடியும்?

மஸ்தூக்கா said...

அழகிய முகமன்
---------------
அஸ்ஸலாமு அலைக்கும்
----------------------
மனிதர்கள் ஒருவரையொருவர் சந்திக்கும்போது அழகிய முகமன் கூறித் தங்கள் அன்பை வெளிப்படுத்துவது இனம் நிறம் மொழி தேசம் மதம் இவை எல்லாவற்றையும் கடந்த ஓர் அழகிய பண்பாடு.

இவ்விதம் ஒருவரையொருவர் சந்திக்கும் போது கூறும் முகமன், வெறுப்பு குரோதம், பகை, உயர்வு தாழ்வு ஆகிய அனைத்தையும் அப்புறப்படுத்தி அதற்கு பதிலாக அன்பு, பாசம், சகோதரத்துவம், ஆகியவற்றை ஏற்படுத்தி நெருக்கத்தை அதிகப்படுத்துகிறது எனலாம்.

ஒருவர் ஏதோ ஒரு காரணத்திற்காக உங்களை வெறுக்கிறார் என வைத்துக் கொள்வோம். அவரிடம் சென்று அழகிய முகமன் கூறி கை கொடுத்தால் அதுவரை அவருக்கு உங்கள் மீதிருந்த வெறுப்பின் அளவு குறைந்து விடும். மென்மேலும் தொடர்ந்து இதனைக் கடைப் பிடித்தால் வெறுப்பு படிப்படியாகக் குறைந்து இறுதியில் அடியோடு அவர் மாறிப்போவதைக் காணலாம்.

ஒருவரையொருவர் சந்திக்கும் போது கூறும் இந்த அழகிய முகமன் எப்படி இருக்க வேண்டும்? அனைவருக்கும் பொதுவானதாக, அனைத்து நேரத்திலும் பயன்படுத்தக்கூடியதாக இருந்தால் தானே முகமன் கூறுவதன் நோக்கம் நிறைவேறும்.

உலகின் பலதரப்பட்ட மக்கள், பல்வேறு மதத்தினர், பல் வேறு மொழி பேசுவோர், பல்வேறு கலாச்சாரங்களைப் பின்பற்றுவோர் எப்படியெல்லாம் முகமன் கூறும் வழக்கத்தைக் கொண்டிருக்கின்றனர்? கொஞ்சம் அலசி ஆராய்ந்து சரியானதைத் தெர்ந்தெடுப்போமா?

ஆங்கிலேய ஆட்சி ஒரு காலத்தில் உலகின் பெரும் பகுதியைத் தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்ததால் உலகம் முழுவதும் அம் மொழி வெகு எளிதில் பரவிற்று. பல்வேறு நாடுகளிலிருந்தும் அவர்கள் அடித்து விரட்டப்பட்டாலும், அவர்களது மொழி மட்டும் பலமாக வேரூன்றி கோலோச்சிக் கொண்டிருப்பதை மறுக்க முடியாது.

நாகரிகம் என்று கருதி பலரும் ஆங்கில மொழியில் முகமன் கூறுவதைக் காண்கிறோம். ஒருவரையொருவர் சந்திக்கும் போது குட்மார்னிங் சொல்கிறார்கள்.இதையே மாலைப் பொழுதுக்கு வேறு மாதிரியும் இரவுப் பொழுக்கு வேறு மாதிரியும் சொல்ல வேண்டும். பகல் பொழுதில் ஒருவரைச் சந்திக்கும்போது 12 மணிக்கு முன் ஒரு வார்த்தை, அதன் பின் வேறு வார்;த்தை என்று மாற்றிக் கொண்டிருக்க வேண்டும். ஒரு வரை சந்திக்கும்போது அவருக்கு வாழ்த்துச் சொல்வதா? அல்லது மணியைப் பார்த்துக் கொண்டிருப்பதா?

நமது நண்பர் அல்லது உறவினரைச் சந்திக்கிறோம் அல்லது அவர்கள் வீட்டுக்குச் செல்கிறோம். அவர்கள் குடும்பத்தில் ஒரு இறப்பு அல்லது துக்கம் நிகழ்ந்திருக்கிறது. அவருக்கு எப்படி குட்மார்னிங் சொல்ல முடியும்? அது அவருக்கு நல்ல காலைப் பொழுதல்லவே! பேட் மார்னிங் என்றல்லவா சொல்ல வேண்டும். இது பழக்கமில்லை என்பது ஒரு புறம் இருக்கட்டும் நாகரிகமும் இல்லையே!

சிலர் ஹலோ என்கிறார்கள், அவரும் பதிலுக்கு ஹலோ என்பார். சிலர் ஹாய் என்பர்கள். பதிலுக்கு ஒரு ஹாய். அதிகம் ஆங்கிலம் படித்தவர்கள் ஹவ் டு யு டு சொல்வார்கள். பதிலுக்கும் அதே ஹவ் டு யு டு தான். இதில் அழகிய முகமன் எங்கே இருக்கிறது?

தமிழ் பேசும் கிறிஸ்தவச் சகோதரர்கள் சிலர் ஒருவரையொருவர் சந்திக்கும் போது 'ஏசுவுக்கு ஸ்தோத்திரம்' என்கிறார்கள். அதனைக்கேட்டவரும் 'ஏசுவுக்கு ஸ்தோத்திரம்' என்று மறு மொழி சொல்கிறார். ஏசுவைப் புனிதராகக் கருதும் அவர்களைப் பொருத்தவரை இந்த ஸ்தோத்திரம் சரியானதாக இருக்கலாம், அதனை இங்கு நாம் விமரிசிக்கவில்லை. ஆனால் இது எப்படி ஒருவரையொருவர் சந்திக்கும் போது கூறும் முகமன் ஆக இருக்க முடியும்?

வடநாட்டின் சில பகுதிகளில் ஒருவரையொருவர் சந்திக்கும் போது 'ராம் ராம்' என்பர். அதனைக் கேட்பவரும் அதற்கு மறுமொழியாக 'ராம் ராம்' என்பார். அவர்கள் கடவுளாகக் கருதி வணங்கும் இராமரை நினைவு படுத்திக் கொள்கின்றனர்.ஆனால் சந்திப்பவருக்கு உரிய வாழ்த்து இதில் என்ன இருக்கிறது?

இந்தியைத் தாய் மொழியாகக் கொண்ட இந்துச் சகோதரர்கள் பலர் 'நமஸ்தே' என்றோ 'நமஸ்கார்' என்றோ கூறுகின்றனர். மலையாளம் தெலுங்கு கன்னடம் ஆகிய மொழி பேசும் தென்னாட்டு இந்துச் சகோதரர்கள் 'நமஸ்காரம்' என்று கூறுவர். தமிழர்கள் பலரும் இதையொட்டி 'வணக்கம்' என்கின்றனர். இவை அனைத்தும் 'நான் உங்களை வணங்குகிறேன்' என்ற பொருளையே தருபவை.

யாரை யார் வணங்குவது? அனைவருமே அவர் எம்மதத்தவராயினும் கடவுளை மட்டும் அல்லவா வணங்க வேண்டும்? மனிதரை மனிதர் ஏன் வணங்க வேண்டும்? 'வணங்குதல் என்னும் பொருளில் சொல்வதில்லை முகமன் கூறுமுகமாகத்தான் சொல்கிறோம்' என்று சிலர் வாதிடலாம். அப்படியானால் 'வணக்கம்' என்னும் சொல்லுக்கு வேறு என்ன தான் பொருள்?
முகமன் கூறுமுகாக அவர்கள் சொல்லும் 'வணக்கம்' கூட பெரியவர் சிறியவருக்கோ, ஆசிரியர் மாணவருக்கோ, உயர்ந்தவர் தாழ்ந்தவருக்கோ சொல்வதில்லை. (உயர்ந்தவர் தாழ்ந்தவர் என்பது எந்த முறையிலும் இருக்கலாம்)

இவை எல்லாவற்றையும் சற்று ஒதுக்கி வைத்து விட்டு இஸ்லாம் சொல்லும் அழகிய முகமன் எப்படி என்று பார்ப்போமா?

ஒருவரையொருவர் சந்திக்கும் போது 'அஸ்ஸலாமு அலைக்கும்'(இறைவின் சாந்தி உங்கள் மீது உண்டாவதாக!) என்று ஒருவர் சொல்ல அதனைக் கேட்டவர் 'வ அலைக்குமுஸ் ஸலாம்' (அவ்வாறே உங்கள் மீதும் இறைவனின் சாந்தி உண்டாவதாக!)

ஆகா! என்ன அற்புதமான வார்த்தைகள்! எத்துனைச் சிறந்த முகமன்! உயர்ந்தவர் தாழ்ந்தவர், பெரியவர் சிறியவர், ஆண்கள் பெண்கள், பெற்றோர் குழந்தைகள், ஆசிரியர் மாணவர், முதலாளி தொழிலாளி, அனைவரும் சொல்லலாம் அனைவருக்கும் சொல்லலாம். மகிழ்ச்சி, துக்கம், கோபம், குதூகலம் எந்த நேரத்திலும் சொல்லலாம். எந்த நேரத்திலும் சொல்லாம், யாரும் சொல்லலாம். யாருக்கும் சொல்லலாம். இனம் புரியாத பேரின்பம் அடைவீர்கள். எங்கே! ஒரு முறை சொல்லுங்கள் பார்ப்போம்.

அஸ்ஸலாமு அலைக்கும் (இறைவனின் சாந்தி உங்கள் மீது உண்டாவதாக!)

http://masdooka.blogspot.com/2007/08/blog-post_14.html

Pebble said...

அஸ்ஸலாமு அலைக்கும்.
// இது குறித்து பண்புடனில் விரிவான தர்க்கங்கள் நடத்தியிருக்கிறோம். //
ஒரு சக முஸ்லீமை 'வணக்கம்' கூறி வரவேற்பதை விட 'அஸ்ஸலாமு அலைக்கும்' என முகமன் கூறி வரவேற்பது சிறப்பாக இருக்கும் என்ற கருத்தில் கூறினேன். உங்களது வாதத்தை ஏற்கனவே படித்த ஞாபகம். வாதம் செய்யும் நோக்கில் இந்த பின்னூட்டத்தை இடவில்லை.

நண்பர்கள் சொல்கிறார்கள்

CSM - உலகச் செய்திகள்

GF - உலகச் செய்திகள்