சல்மான் ருஷ்டி என்ற சாத்தான். (பதிவு 1)
சல்மான் ருஷ்டி என்றால், ஒரு சராசரி முஸ்லிம், யார் என்று தான் கேட்டிருப்பான் -அவர் The Satanic Verses என்ற புத்தகத்தை எழுதும் முன் வரைக்கும்.
அவர் ஏன் எதனால் அந்தப் புத்தகம் எழுதினார் என்பதற்கு யாராலும் விடை சொல்ல முடியாது. அவரே சொல்லி இருப்பது கூட, freedom of expression should never be curtailed. (Sick of it!) இந்தக் கருத்து சுதந்திரம் - ஒருவர் ஒரு கருத்தை எழுதி அதை வாசித்த பின் தான் அது சரியா, தவறா என்ற பிரச்னை விவாதிக்கப்பட்டு, எழுதியவர் சொல்லிய கருத்தை எல்லோரும் ஒரு பிடி பிடிக்கின்றனர். ஆனால், எழுதும் முன்னே, அந்தக் கருவானது, ஒருவர் மனதில், விதையாக முளைக்கும் பொழுது, யாரும், உன்னிடத்திலே ஒரு தவறான கருத்து முளைத்துக் கொண்டிருக்கிறது என்று சண்டை பிடிப்பதில்லை. தான் தவறான ஒரு கருத்தை வளர்க்கிறோமே என்ற சுயவிசாரணையெல்லாம் செய்து கொள்ள மாட்டேன் என்று அடம்பிடிப்பெதல்லாம் சரி - ஆனால், சொல்ல வந்தது இன்னொருவனின் கருத்தை இம்சித்து, பரிகசித்து, அவமானப்படுத்த இருக்கிறது அதிலும், நேர்மைக்குப் புறம்பாக என்கையிலும் கூட, இவர்களது கருத்தை அடுத்தவர் மதிக்க வேண்டும் என்பது எத்தனை சிறுபிள்ளைத் தனம்.
சரி - சல்மான் ருஷ்டி அப்படி என்ன தான் செய்தார்?
அவர் செய்தது இஸ்லாமியர்களுக்கெதிரான பச்சைத் துரோகம். சாக்கடையில் விழுந்து புரண்ட ஒரு பன்றி, வீட்டிற்குள் நுழைந்து விட்ட அருவெறுப்பு. தன் இனத்தின் மீது சேறு வாரி அடித்து, அதற்கு அடுத்தவனிடத்தில் கூலிக்குக் கையேந்தும் இலக்கிய ரவுடித்தனம். எல்லாவற்றையும் இறுதியில் இது புனைவு தானே என்று கூறி தப்பித்துக் கொள்ள முயலும் கோழைத்தனம்.
தான் எழுதுவதைப் பற்றி, முழுதான, ஒரு விரிவான ஆராய்ச்சி செய்யாமல், இஸ்லாத்தின் மீது வெறுப்புமிழும் ஒரு தலைப்பட்சமான சில வரலாற்றாசிரியர்களின் தவறான வாதங்களை ஆதாரமாகக் கொண்டு தன் கண்களை மூடிக் கொண்டு அவதூறு எழுதியவர். தன்னை ஒரு பெரும் எழுத்தாளானாகக் காட்டிக் கொள்ள முயன்று, இஸ்லாமியர்கள் அன்னை என்று ஏற்றுக்கொண்ட நபியவர்களின் மனைவியர் மீது அவதூறு கூறியவர். பெண் கருத்தியல் பேசும் பெருந்தலைகள் எவரும் காலத்தால் மறைந்து விட்ட பெண்களை இழிவு படுத்தும் இந்த ஈனனிடம் கேட்கவில்லை - எதை ஆதாரமாகக் கொண்டு நீ இதை செய்கிறாய் என்று? Hypocrites!
- முற்றிலுமாகத் தவறு என நிரூபிக்கப்பட்டு வரலாற்றாசிரியர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டு, வரலாறுகளைத் திருத்தி எழுத ஆரம்பித்துள்ளனர் வரலாற்றாசிரியர்கள். ஆனால், இவரோ, அவற்றையெல்லாம் புறக்கணித்து, குப்பை என தூக்கி எறியப்பட்ட, ஆதாரமற்ற போலியான நிகழ்வுகளை சுவையாக இருக்கிறது என்று அவதூறை எழுதினால் பின்னர் அனைவராலும் வெறுக்கப்படுவது நியாயம் தானே?
அப்படி என்ன தான் செய்தார் இவர்?
இவர் ஒரு புனைவை எழுதினார். The Satanic Versus என்ற புனைவை.
வரலாற்றில் பெருமானார் அவர்கள் மீது அவர்கள் வாழ்ந்த காலத்திலேயே, அவரது ஆளுமையை இழிவு செய்ய முயன்ற பகான் அரபிகள் இட்டுக் கட்டிய கதை தான் இது.
கொஞ்சம் வரலாற்றின் உள்நுழைந்து பார்ப்போம்.
நபிகள் வெளிப்படையாகப் பிரச்சாரம் தொடங்கி, பலரது கவனம் பெற்று, தங்களை இஸ்லாத்தில் இணைத்துக் கொள்ள சிறிது சிறிதாக மக்கள் முன் வந்து கொண்டிருந்த காலமது. முஸ்லிம்களுக்குப் பலவகையிலும் தொல்லை கொடுத்துக் கொண்டிருந்தனர் - குரைஷி இன அரபிகள். அரபிகளிலே மிக வலுவான குலம் குரைஷி இனம். கஃபா எனப்படும் பழங்கால இறை வணக்க ஆலயம் அவர்களது கட்டுப்பாட்டில் இருந்தது. அதனுள் பல சிலைகளும் நிறுவப்பட்டு, அதன் வணக்க வழிபாடுகளை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்ததன் மூலம், அரபிகள் அனைவரையும் தங்கள் மேலாண்மையை, ஆளுமையை மறைமுகமாக ஏற்க வைத்திருந்தனர்.
ஆனால், இன்றோ, அந்த அரபிகளின் குலத்திலிருந்தே ஒருவர் தோன்றி - இந்த சிலைகள் வணக்கத்திற்குரியவை அல்ல - வணக்கத்திற்குரிய இறைவன் வேறு - அவனது பாதைக்கு வாருங்கள் என்று அறை கூவல் விட்டதும் மிரண்டு போய்விட்டனர். ஏனென்றால், விடுக்கப்பட்ட அறை கூவல் நேரிடையாக அவர்களது ஆளுமையை - அதிகாரத்தை - கேள்விக்குட்படுத்தியது. கேள்வி கேட்டவரோ -நம்பிக்கைக்குரியவர் என்று அனைவராலும் பாராட்டப் பெறும், அல் அமீன் என்று விளிக்கப்பட்ட நபிகள் பெருமானார். அவரது நேர்மையை எவரும் சந்தேகிக்கவில்லை. இப்படிப்பட்டவரின் பிரச்சாரத்தால், தினமும் அவர் பக்கம் கூட்டம் பெருகுவதையும், தங்கள் பக்கம் தேய்கிறதையும் கவனித்த அவர்கள் புரிந்து கொண்டனர் - வெகு சீக்கிரமே தாங்கள் தங்கள் அதிகாரமனைத்தையும் இழந்து விடுவோமென்று. அதை தடுக்க அவர்கள் பல வழிகளிலும் தொல்லைகள் கொடுக்க முனைந்தனர் - முஸ்லிம்களின் கூட்டம் பெருகுவதை கண்டிப்பாகத் தடுத்து நிறுத்திட வேண்டுமென்று.
நபிகள் மீது நேரிடையான தாக்குதல் தொடுக்க அவர்கள் தயங்கினர். அவரது குலம் வலுவானது. நபிகள் மீது கை வைக்கும் எவரும் தாங்கள் மட்டுமல்ல தங்கள் வம்சமும் பூண்டோடு அழிக்கப்பட்டு விடும் என்பதை அறிந்து வைத்திருந்தனர் - அதனால், அவர்கள் நேரிடையான மோதலைத் தவிர்த்து விட்டு, வழக்கம் போல் கோழைகள் செய்யும் உத்தியை மேற்கொண்டனர்.
- நபிகளை விடுத்து, வலுவற்ற ஏழ்மை நிலையில் இருக்கும் முஸ்லிம்களை மிகுந்த துயரத்திற்குள்ளாக்குவது. அதன் மூலம் மத மாற்றத்தைத் தவிர்ப்பது
- நபிகளின் நற்குணத்திற்குக் களங்கம் விளைவித்து அதன் மூலம் எங்கனமாகிலும், மக்களை நபிகளிடமிருந்து விலகச் செய்வது.
இந்த இரண்டு உத்திகளிலும் முதலாவதை செய்வது எல்லோருக்கும் மிக எளிதாக இருந்தது. அதற்கு பெரிய அளவில் மூளை தேவைப்படவில்லை. ஆனால், பிந்தைய செயலைச் செய்ய மிகுந்த கவனம் தேவைப்பட்டது. எதிரியின் பலம் அவர்களுக்கு நன்றாகத் தெரியும். நபிகளுக்குப் பொய் பேசாதவர் என்ற நற்பெயர் உண்டு. அந்த நற்பெயரை மட்டும் கெடுத்து விட்டால்...?
பொய்பேசாதவர் என்ற நற்பெயரை மட்டும் கெடுத்து விட்டால்.. .. !?
(அடுத்த பதிவைப் பாருங்கள்...)
8 comments:
நண்பன்,
சிலவருடங்களுக்கு முன்பு ஒரு பத்திரிக்கையாளர் ருஷ்டியின் லேட்டஸ்ட் மனைவியைப் பற்றி விமர்சித்ததால் கோபம் கொண்டு அந்த பத்திரிக்கையாளரை ருஷ்டி தாக்கியதாக படித்த நினைவு.
சல்மான் ருஷ்டியை பொறுத்தவரை கருத்து சுதந்திரமெல்லாம் மற்றவர்களை விமர்சிக்க மட்டுமே போலும்! அதுவும் அவதூராக விமர்சிக்க மட்டுமே போலும்!!
இஸ்லாத்திற்கு எதிரான கருத்தியல் தாக்குதல்களைவிட முஸ்லிம்கள் மீதான நேரடி தாக்குதல்களால் அதிகரித்து விட்டதால்,ருஷ்டியின் தாக்குதல்கள் பழசாகிப் போனாலும் அவசியம் தோலுரித்துக் காட்டப்பட வேண்டியவ'ன்'. தொடரட்டும் உங்கள் பணி.
பி.கு:எனக்கும் கருத்துரிமை உள்ளதாலேயே 'ன்' மரியாதை! :-)
நண்பன்,
//சிலவருடங்களுக்கு முன்பு ஒரு பத்திரிக்கையாளர் ருஷ்டியின் லேட்டஸ்ட் மனைவியைப் பற்றி விமர்சித்ததால் கோபம் கொண்டு அந்த பத்திரிக்கையாளரை ருஷ்டி தாக்கியதாக படித்த நினைவு. //
இச்செய்தியை கீழ்கண்ட சுட்டியில் காணலாம்:
http://sify.com/news/offbeat/fullstory.php?id=13676856
Rushdie threatens journalist with bat
Tuesday, 22 February , 2005, 15:13
London: Novelist Salman Rushdie is always known for hurling words straight in the face of people and institutions. Editor's Choice
The report that angered Rushdie
However, this time round, it's a baseball bat that he is ready to wield. Also see: Sify Offbeat special
Rushdie picked up a baseball bat to threaten a reporter who allegedly wrote "mean things" about his wife and model Padma Lakshmi.
He shouted at the reporter at a New York function. "If you ever write mean things about my wife again, I'll come after you with a baseball bat", The Sun quoted Rushdie as saying.
What angered the controversial writer was reporter Guy Trebay's reference to Padma Lakshmi as standing "for a love of money and commodity". ANI
// தான் தவறான ஒரு கருத்தை வளர்க்கிறோமே என்ற சுயவிசாரணையெல்லாம் செய்து கொள்ள மாட்டேன் என்று அடம்பிடிப்பெதல்லாம் சரி - ஆனால், சொல்ல வந்தது இன்னொருவனின் கருத்தை இம்சித்து, பரிகசித்து, அவமானப்படுத்த இருக்கிறது அதிலும், நேர்மைக்குப் புறம்பாக என்கையிலும் கூட, இவர்களது கருத்தை அடுத்தவர் மதிக்க வேண்டும் என்பது எத்தனை சிறுபிள்ளைத் தனம்.//
Apparently there are different standards of "Freedom of expression". It depends on who you are trying to critique on. If it on Islam, you would most definitely get refuge under this.
Usually, Muslims are ridiculed for being against commenting Islam.
Simple truth I started seeing lately, is Muslims (not the mob that bears some islamic name, but the genuine muslims) do oppose the 'freedom of expressing
"Defaming Intentional Fables", Not honest and earnest question in search of knowledge.
I had a comment for Abu Muhai on similar issue. But I was unable to publish it due blogger issue.
Since it fits in equally well here, I included it:
// கடைசி வரிகள் ரொம்பவும் சங்கடப்படுத்தி விட்டது. கேள்விகள் கேட்பதை இஸ்லாம் ஆர்வமூட்டுகிறது. தெரிந்து கொள்ள கேள்விகளை எழுப்புவது அறிவீனம் இல்லை. நன்றி//
மதங்களையோ, சம்பிரதாயங்களையோ கேள்வி கேட்கும் சுதந்திரத்தை மதங்கள் தரவில்லை என்றும்,
நம்பிக்கையாளர்களாக இருக்கும் பட்சத்தில் ஆன்மீக தேடலுக்கு உறுதுணை செய்யும் கேள்விகளை ந்ம்பிக்கை என்ற வட்டத்துக்குள் இருந்து கொண்டு கேள்வி கேட்க இயலாது என்றும்,
ஒரு வாதம் சமீப காலமாக ஒரு நிரூபிக்கப்பட்ட உண்மை போல பேசப்ப்டுகிறது (உதாரணத்திற்கு - பேராசிரியர் தருமி மற்றும் நண்பன் இடையே நடக்கும் உரையாடல்கள்)
அது எவ்வளவு தூரம் உண்மை என அறியும் ஒரு லிட்மஸ் டெஸ்டாகவே இதை உங்களிடம் கேட்டேன்.
இந்த கேள்விகளை அறிவீனம் என கருதுவதையே தங்களை சங்கடப்படுத்துவதாக சொல்லுவது எவ்வளவு தூரம் இஸ்லாமிய நம்பிக்கையாளர்கள் ஆன்மீகம் சார்ந்த தேடலில் வெளிப்படையாகயும், பரந்த மனதோடும் உள்ளனர் என்பதையே காட்டுகிறது.
இதே தொனியை நண்பன் அவர்களிடத்திலும், சுல்தான் அவர்களிடத்திலும் கண்டேன். மகிழ்ச்சி கொண்டேன்.
தங்களின் தனிப்பதிவுக்கு ஆவலோடு காத்திருக்கிறேன்.
SALMAAN
// தான் தவறான ஒரு கருத்தை வளர்க்கிறோமே என்ற சுயவிசாரணையெல்லாம் செய்து கொள்ள மாட்டேன் என்று அடம்பிடிப்பெதல்லாம் சரி - ஆனால், சொல்ல வந்தது இன்னொருவனின் கருத்தை இம்சித்து, பரிகசித்து, அவமானப்படுத்த இருக்கிறது அதிலும், நேர்மைக்குப் புறம்பாக என்கையிலும் கூட, இவர்களது கருத்தை அடுத்தவர் மதிக்க வேண்டும் என்பது எத்தனை சிறுபிள்ளைத் தனம்.//
Apparently there are different standards of "Freedom of expression". It depends on who you are trying to critique on. If it on Islam, you would most definitely get refuge under this.
Usually, Muslims are ridiculed for being against commenting Islam.
Simple truth I started seeing lately, is Muslims do oppose the 'freedom of expressing
"Defaming Intentional Fables", Not honest and earnest question in search of knowledge.
I had a comment for Abu Muhai on similar issue. But I was unable to publish it due blogger issue.
Since it fits in equally well here, I included it:
// கடைசி வரிகள் ரொம்பவும் சங்கடப்படுத்தி விட்டது. கேள்விகள் கேட்பதை இஸ்லாம் ஆர்வமூட்டுகிறது. தெரிந்து கொள்ள கேள்விகளை எழுப்புவது அறிவீனம் இல்லை. நன்றி//
மதங்களையோ, சம்பிரதாயங்களையோ கேள்வி கேட்கும் சுதந்திரத்தை மதங்கள் தரவில்லை என்றும்,
நம்பிக்கையாளர்களாக இருக்கும் பட்சத்தில் ஆன்மீக தேடலுக்கு உறுதுணை செய்யும் கேள்விகளை ந்ம்பிக்கை என்ற வட்டத்துக்குள் இருந்து கொண்டு கேள்வி கேட்க இயலாது என்றும்,
ஒரு வாதம் சமீப காலமாக ஒரு நிரூபிக்கப்பட்ட உண்மை போல பேசப்ப்டுகிறது (உதாரணத்திற்கு - பேராசிரியர் தருமி மற்றும் நண்பன் இடையே நடக்கும் உரையாடல்கள்)
அது எவ்வளவு தூரம் உண்மை என அறியும் ஒரு லிட்மஸ் டெஸ்டாகவே இதை உங்களிடம் கேட்டேன்.
இந்த கேள்விகளை அறிவீனம் என கருதுவதையே தங்களை சங்கடப்படுத்துவதாக சொல்லுவது எவ்வளவு தூரம் இஸ்லாமிய நம்பிக்கையாளர்கள் ஆன்மீகம் சார்ந்த தேடலில் வெளிப்படையாகயும், பரந்த மனதோடும் உள்ளனர் என்பதையே காட்டுகிறது.
இதே தொனியை நண்பன் அவர்களிடத்திலும், சுல்தான் அவர்களிடத்திலும் கண்டேன். மகிழ்ச்சி கொண்டேன்.
தங்களின் தனிப்பதிவுக்கு ஆவலோடு காத்திருக்கிறேன்.
SALMAAN
//சிலவருடங்களுக்கு முன்பு ஒரு பத்திரிக்கையாளர் ருஷ்டியின் லேட்டஸ்ட் மனைவியைப் பற்றி விமர்சித்ததால் கோபம் கொண்டு அந்த பத்திரிக்கையாளரை ருஷ்டி தாக்கியதாக படித்த நினைவு. //
ஒரு அழகுப் பொம்மையும் ஒரு அறிவுக் கிழவனும் எப்படி ஒருவருக்கொருவர் ஒத்துப் போவீர்கள் என்ற கேள்வியை வைத்த பொழுதும், எரிந்து விழுந்தவர் தான் இவர்.
'How compatible intellectually - a beauty queen and an intellect? '
விமர்சனங்கள் வைப்பவர்கள், தாங்களும் அதே வகை விமர்சனத்திற்கு உட்படுத்தப் படுவோம் என்பதை அறியவேண்டும்.
நன்றி, நல்லடியார் - உங்கள் செய்திக்கும், வருகைக்கும்.
அன்புடன்
நண்பன்
சல்மான்,
தங்கள் வருகைக்கும், பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி.
உங்கள் பின்னூட்டம் தெளிவற்று இருந்ததால், நேர்ந்த சிறு தவறு - முந்தைய இரண்டு பின்னூட்டங்கள். அவற்றை நீக்கி விட்டேன்.
இருந்தாலும், அது உங்கள் மனதை வருத்தி இருக்கக்கூடும்.
இப்பொழுது தான் அபூமுஹையின் பதிவில் நீங்கள் எழுதிய பின்னூட்டத்தை வாசித்து விட்டு வருகிறேன். இப்பொழுது தான் நேரம் கிடைத்தது.
ஒரு தளத்தில் நடக்கும் உரையாடலை மற்றொரு தளத்திற்கு எடுத்து வந்தால், அதனால் நேரும் பிழை தான் இது.
என்றாலும்,
ஈத் மிலாது.
Have a nice day.
அன்புடன்
நண்பன்
Post a Comment