அல்லாஹ்...
இப்னு பஷீரின் இந்தப் பதிவில் ஒரு அன்பர் கேட்டிருக்கிறார் - உருவமற்ற இறைவனுக்குப் பெயர் எதற்கு என்று. ஒருவர் இத்தனை அறியாமையுற்றவராக இருக்கக் கூடும் என்று அறியும் பொழுது, வியப்பாக இருக்கிறது. இந்தியாவின் கல்விதரம் உயர்கிறது என்று சொல்பவர்களை நம்புவதற்கு சிரமமாக இருக்கிறது.
பெயர்ச் சொல்களில் பலவகையுண்டு. அவற்றில் ஒன்று பண்புப் பெயர். அதாவது அன்பு என்கிறோம். எந்த வடிவமும் அற்றது தான். என்றாலும் அந்தப் பண்பைக் குறிப்பிட ஒரு சொல் வேண்டும் இல்லையா? அது போல, இறைவனைக் குறிக்க ஒவ்வொரு மொழியும் சொற்களை உருவாக்கிக் கொண்டது. தமிழில், இறைவன் என்றால் அது யாரை குறிக்கும்? அது போல தான். அரபு மொழியில், அல்லாஹ், ஆங்கிலத்தில் God, ஹீப்ரு மொழியில், அல்லாஹ், என்று...
இந்த மொழி அடிப்படை அறிவு நிறைய பேருக்கு இல்லை. இருந்தாலும், அகம்பாவமும், கொழுப்பும், கண்களை மறைக்கிறது.
கீழ்க்கண்டவற்றை வாசித்து தெளிவு பெறட்டும்.
The use of the word "Allah" to mean "God" frequently sounds rather strange, esoteric, and foreign to Western ears.
(The eastern ears should have been attuned to this word by now, thanks to Urdu and subsequently to Hindi Moveis - Only fools would pretend as if he didn't know the meaning - இந்த வரிகள் என்னுடையவை.)
"Allah" is an Arabic word derived from the contraction of "Al" and "Ilahi", meaning "the God" or by implication "the One God" . Linguistically, Hebrew and Arabic are related Semitic languages, and the Arabic "Allah" or "Al-Ilahi" is related to the Hebrew "EL", meaning "God", and "El-Elohim", meaning "God of Gods" or "the God". It is these Hebrew words that are translated in the Old Testament as "God" . Thus one can see that the use of the word "Allah" is consistent, not only with the Qura'an and with Islamic tradition, but with the oldest Biblical traditions as well.
This basic similarity between the Arabic "Al-Ilahi" , of which "Allah" is a contraction, and the Hebrew "El-Elohim" can be seen even more clearly when one considers the Arabic and Hebrew alphabets. Neither Arabic nor Hebrew have letters for vowels. Both languages have alphabets consisting only of consonants, and both rely on vowel markings, typically found only in formal writing, as a pronunciation guide, The English transliteration of the Arabic "AL-Ilahi" and of the Hebrew "EL-Elohim" have included these vowel markings. If one were to remove, the English transliteration of these vowel markings, the Arabic remains "Al-Ilh" while the Hebrew becomes "El-ELh". Finally, if one were to transliterate all Arabic "Alifs" as "a" , and all Hebrew "Alifs" as "a", the Arabic remains "Al-Alh" and the Hebrew becomes "Al-Alh". In other words, with the single exception that the Hebrew uses the plural of respect, "Al-Ilahi", for which "Allah" is a contraction, and "El-Elohim", the Hebrew translated as "God" in the English version of the Old Testament, are absolutely identical terms in two closely related languages.
(The Cross and the Crescent - Jerald F Dirks )
கவனியுங்கள் - அரபியில் கூட, இறைவனைக் குறிக்க, மரியாதைப் பன்மையை உபயோகிப்பதில்லை. காரணம் மொழி பெயர்க்கும் பொழுது, அது பன்மையாகி விட கூடும் - தவறாக அர்த்தம் கற்பிக்கப்படும். அதனால் தான் தமிழில் இறைவனைக் குறிப்பிடும் பொழுது அவன் என்ற ஒருமை விளியைப் பயன்படுத்துகிறார்கள்.
இதைப் புரிந்து கொள்ள அறிவில்லாதவர்கள், இஸ்லாத்தை விமர்சிப்பதை விட்டு விட வேண்டும். அதை விட்டு விட்டு, இறைவனையே அவன் என்று சொல்லும் பொழுது, நபிகளையும் அப்படித் தான் சொல்வேன் என்று அடம்பிடித்து மனித மாண்புகளை மதியாத மிருகங்களாய் ஆன பின்பு, விமர்சனத்தில் ஈடுபட எந்தத் தகுதியுமில்லை. இவர்கள் மன நோயாளிகள் கூட இல்லை - மிருகங்கள் என்றே அழைக்கப்பட வேண்டும்.
8 comments:
//இதைப் புரிந்து கொள்ள அறிவில்லாதவர்கள், இஸ்லாத்தை விமர்சிப்பதை விட்டு விட வேண்டும். அதை விட்டு விட்டு, இறைவனையே அவன் என்று சொல்லும் பொழுது, நபிகளையும் அப்படித் தான் சொல்வேன் என்று அடம்பிடித்து மனித மாண்புகளை மதியாத மிருகங்களாய் ஆன பின்பு, விமர்சனத்தில் ஈடுபட எந்தத் தகுதியுமில்லை. இவர்கள் மன நோயாளிகள் கூட இல்லை - மிருகங்கள் என்றே அழைக்கப்பட வேண்டும்//
நண்பன் ஷாஜஹான்,
அறிந்தவரும் அறியாதவரும் சமமாக மாட்டார்கள் என்று குர்ஆன் அடிக்கடி சுட்டிக்காட்டுவது இத்தகைய 'குமார்' களைத்தான் போலும்!
இவர்களின் நோக்கம் அறிவுப்பூர்வமான விவாதங்களால் விளக்கம் பெறுவதல்ல; மாறாக நேரவிரயம் மட்டுமே.
Thank you, Nalladiyaar.
புதிய தகவல் மிக்க நன்றி.
நானும் பலவேளைகளில் ஏன் கடவுளை அவன் என்கிறார்கள் என வியந்திருக்கிறேன். (குறிப்பாக சில ஹனிபா பாடல்களில்).
இதை தனியாக போடுகின்றேன்.. If you feel like reply here itself or send a mail to me if possible. Need not publish if you think it will divert discussions.
அவ'ன்' என்பது குரானில் சொல்லியிருக்குதா இல்ல அவள் என்பதையும் பயன்படுத்த இயலுமா?
ஸூரத்துன்னிஸாவு (பெண்கள்)
4:1 மனிதர்களே! உங்கள் இறைவனுக்குப் பயந்து நடந்து கொள்ளுங்கள், அவன் உங்கள் யாவரையும் ஒரே ஆத்மாவிலிருந்து படைத்தான், அவரிலிருந்தே அவர் மனைவியையும் படைத்தான
ஸூரத்துல் அஃராஃப்(சிகரங்கள்)
7:189 அவனே, உங்களை ஒரே மனிதரிலிருந்து படைத்தான், அவருடன் கூடி (இணைந்து) வாழ்வதற்காக அவருடைய துணைவியை (அவரிலிருந்தே) படைத்தான்
ஸூரத்து ஃபாத்திர் (படைப்பவன்)
35:11 அன்றியும் அல்லாஹ்தான் உங்களை (முதலில்) மண்ணால் படைத்தான்¢ பின்னர் ஒரு துளி இந்திரியத்திலிருந்து - பின் உங்களை (ஆண், பெண்) ஜோடியாக அவன் ஆக்கினான
ஸூரத்துஜ்ஜுமர் (கூட்டங்கள்)
39:6 அவன் உங்களை ஒரே மனிதரிலிருந்து படைத்தான்¢ பிறகு, அவரிலிருந்து அவருடைய மனைவியை ஆக்கினான்
இறைவன் முதலில் ஆணைப் படைத்ததாகவும்(ஆதம்) பின் ஆணின் விலா எலும்பினின்றும் பெண்ணைப்(ஏவாள் அல்லது ஹவ்வா) படைத்ததாகவும் அறிகிறோம். மனிதரில் ஆதம் மட்டுமே இருந்த பொழுது இறைவனை இன்னும் படைக்கப்படாத பெண்பாலாக அவர் கண்டிருக்க மாட்டார்.
ஸூரத்துல் பகரா (பசு மாடு)
2:31 இன்னும், (இறைவன்) எல்லாப் (பொருட்களின்) பெயர்களையும் ஆதமுக்கு கற்றுக் கொடுத்தான்
2:37 பின்னர் ஆதம் தம் இறைவனிடமிருந்து சில வாக்குகளைக் கற்றுக் கொண்டார்
ஆதமுக்கு இறைவனே கற்றுக் கொடுத்தான்.
அல்லாஹ் என்ற அரபுச் சொல் இலாஹ் என்பதன் குறிப்பாகு பெயர்ச் சொல்லாகும் (அல்-இலாஹ்=அல்லாஹ்).
இலாஹ் என்றால் 'வணங்குதற்குரியவன்' என்பதாம். அரபு மொழியைத் தாய்மொழியாகக் கொண்ட எந்த மதத்தைச் சேர்ந்தவரும் இறைவனை இவ்வாறே ஆண்பாற் சொல்லாகக் குறிப்பர். ஏனெனில் அப்பெயர்ச் சொல் மொழி சார்ந்ததேயன்றி மதம் சார்ந்ததன்று.
நாம் கதிரவனை ஆண்பாலாகக் குறிப்போம். ஆனால் அரபு மொழியில் அது பெண்பாற் சொல்லாகும். இரவு என்னும் சொல் ஆண்பால்; பகலோ பெண்பால்.
ஆன்மா என்ற சொல்லைத் தமிழில் எப்பாலாகக் கொள்வது? அஃது அரபியில் பெண்பாற் சொல்லாகும்.
இறை'ஆண்மை' உள்ள நாடு இந்தியா என்று நாம் வழக்கில் சொன்னாலும் ஒரு நாட்டைப் பிரதிப் பெயரால் குறிக்கும்போது பெண்ணாகச் சுட்டுவதை இங்குச் சொல்லலாம்.
கூடுதல் விபரங்களுக்கு "அவன் பெயர் என்ன?" என்ற நூல் உதவக் கூடும்: http://www.ahmed-deedat.co.za/books/intro.html
நல்ல விளக்கங்கள். நன்றி.
சிறில், முத்து வாப்பா, வஹ்ஹாபி - அனைவருக்கும் நன்றி.
ஒரு நல்ல கேள்விக்கு ஆக்க பூர்வமான பதிவு.
பொதுவாகவே, இறைவனை அவன் என்று குறிப்பிடும் பொழுது, அது மொழியின் பலவீனமே தவிர, ஆணையோ அல்லது பெண்ணையோ குறிக்காத ஒரு பொதுச்சொல் இல்லாமையால், அவன் என்று குறிப்பிட நேர்ந்தது. இது தமிழில். இது போல மற்ற மொழிகளுக்கு வேறு விதமான பிரச்சினைகள் இருக்கலாம்.
முன்பு mankind என்று எழுதுவதில் கூட feministகள் எல்லோரும் பிரச்சினையைக் கிளப்பினார்கள். ஏன் womankind என்று குறிப்பிடுவதில்லை என்று. இறுதியாக humankind என்றானது. என்றாலும் human என்பது கூட ஆண் சார்பு எடுக்கும் ஒரு சொல் என்ற தர்க்கம் உண்டு.
மொழி என்பது நாம் உண்டாக்கிக் கொண்டதே தவிர, அதன் பலவீனத்திற்கு இறைவனை பொறுப்பாக்க முடியாது. இறைவன் - ஆண், பெண் நிலைகளை எல்லாம் கடந்தவன் என்பதால் தானோ என்னவோ, இஸ்லாத்தில், இறைவனை ஆணாகவோ, பெண்ணாகவோ பாவித்து பாடல்கள் எழுதுவதும், பக்தி கொள்வதும் தடை செய்யப்பட்டுள்ளது.
ஜலாலுத்தீன் ரூமி எழுதிய பாடல்கள் சிலவற்றில், இவற்றை மீறும் தன்மை தெரியும். அதனால், அவற்றைக் காதல் பாடல்கள் என்று மொழி பெயர்த்து புத்தகம் ஆக்கினார்கள். ஆனால், ஒரு ஆணாகவோ, பெண்ணாகவோ பாவித்து, காதல் மேலிட, பக்தி பாடல்கள் எழுதுவது தான் தடை செய்யப்பட்டதே தவிர, முன்னிலையில் - அதாவது - second person - you / yourself என்ற முன்னிலையில் இறைவன் மீது பாடல்கள் எழுதுவதோ, பாடுவதோ தடை செய்யப்படவில்லை.
இப்பொழுது மீண்டும் ஜலாலுத்தீன் ரூமி அவர்கள் எழுதிய காதல் பாடல்களை எடுத்துப் படித்து பாருங்கள் - கண்டிப்பாக அதில் he / she என்ற படர்க்கை நிலை பாடல்கள் இருக்காது. அவர் எழுதி காதல் பாடல்களாக அறியப் பட்டவை எல்லாம் - அவர் இறைவன் மீது கொண்ட பக்தியின் வெளிப்பாடுகளே.
அவன் / அவள் என்ற பாகுபாடு இல்லாமல், நீ என்ற பதத்தைக் கொண்டு, இறைவனிடம் நேரிடையாக பக்தியைக் காட்டியவர். இத்தகைய உறவு நிலையை பெரும்பான்மையான இஸ்லாமியர்கள் ஏற்றுக் கொள்வதில்லையென்றாலும், பலருக்கும் இந்த சூஃபிக்களைப் பிடித்திருப்பதற்குக் காரணம் - அவர்கள் காட்டித் தந்த, இசையும், கவிதையும் கலந்த ஒரு பக்தி வழி.
இதோ ஜலாலுத்தீன் ரூமியின் ஒரு கவிதை.:
ஆங்கிலத்தில்: (Andrew Harvey)
I unlock the Door from inside to myself
Step from room to room leading myself
Come to myself in myself in our Bed of fire
Hear, You astoundedly call yourself by my name.
தமிழாக்கம்: ( நண்பன் - நானே தான்)
என்னுள்ளே
அடக்கப்பட்டிருந்த
கதவைத் திறக்கின்றேன்
எனக்குள்ளிருந்து.
அறை அறையாக
என்னை
வழி நடத்திச் செல்கிறேன்.
நெருப்பிலமைந்த படுக்கையில்
என்னை நான் வந்தடையும் பொழுது
கேட்கிறேன்:
நீ வியப்புடன்
உன்னை அழைக்கிறாய்
என் பெயர் சொல்லி.
தன் அறியாமையினால், தன்னுள்ளே அடைத்துக் கிடக்கும் கதவுகளைத் திறந்து கொண்டு, உள்நோக்கிய ஒரு தேடுதல் பயணம். ஒவ்வொரு ரகசிய மூலையும் அலசி ஆராயப்படுகிறது - தேடப்படுகிறது. தேடுதல் அதிகப்பட, அதிகப்பட, மனம் தகிக்கிறது. நெருப்பாற்றில் விரிக்கப்பட்ட படுக்கை போல் கொதிக்கிறது. தன்னைத் தேடி அடைகிறான் கவிஞன் - தன்னை அடைந்ததும் அவன் கேட்பது - அங்கிருக்கும் இறைவன், தனனை அழைக்கிறான் - அவன் உதிக்கும் பெயர் - கவிஞருடையது. தன்னை உணராத மனிதன் இறைவனை என்றுமே அடைய முடியாது என்பதே கவிஞரின் வார்த்தை.
இறைவனுக்கும் தனக்கும் உள்ள உறவை - இறுதியில், தன்னை உணர்தலே இறைவனை அடைதல் என்ற தெளிவு - வெகு சிலருக்கே கைவரக்கூடியதாகும்.
இப்படி விரிவான பொருளை விரும்பாதவர்களுக்கு, இப்படி வாசித்து திருப்தி அடைந்து கொள்ளுங்கள்:
அன்பே,
உன் ஒவ்வொரு அடிக்கும்
என்னுள்ளே
அடக்கப்பட்டிருந்த
கதவைத் திறக்கின்றேன்
எனக்குள்ளிருந்து.
ஒவ்வொரு அறை அறையாக
எ(உ)ன்னை
வழி நடத்திச் செல்கிறேன்.
நெருப்பிலமைந்த படுக்கையில்
எ(உ)ன்னை நான் வந்தடையும் பொழுது
கேட்கிறேன்:
நீ வியப்புடன்
உன்னை அழைக்கிறாய்
என் பெயர் சொல்லி
No big deal, alright! A Simple, plain, love poem. Enjoy.
Post a Comment