"எழுத்துகளையும் தாண்டி எனக்கென்று ஒரு உலகம் உண்டு; நான் எழுதுபவற்றை மட்டுமே வைத்துக் கொண்டு, என்னை எடை போடுபவர்களை எப்பொழுதும் என் எண்ணங்கள் வியப்பில் ஆழ்த்திக் கொண்டே இருக்கும்....."
- நண்பன்

Friday, March 02, 2007

டாக்டர். A.P.J.அப்துல் கலாமிற்கு ஒரு வேண்டுகோள்


Dear Sir

Its high time you take rest from this politics.

குழந்தைகளிடம் உங்கள் கனவுகளை விதைக்கும் நல்ல காரியத்தைப் பற்றி பேசுங்கள்.

இந்த அழுத்தம் மிகும் குடியாட்சித் தலைவர் அரசியலை விட்டு விலகுங்கள்.

இரண்டாவது முறையாக உள்ளே நுழையாதீர்கள்.

இந்தியக் குழந்தைகளுக்கு உங்கள் கனவுகள் தேவை.

Its high time you take rest from this politics.

(புகைப்படம் : The Gulf News, 2-03-07)

6 comments:

Anonymous said...

YES Sir! Take Rest. Spend your time with STUNDENTS and CHILDRENS

Anonymous said...

நண்ப(னே)ரே,
//இந்த அழுத்தம் மிகும் குடியாட்சித் தலைவர் அரசியலை விட்டு விலகுங்கள்.//

அப்துல் கலாம் மீதான உங்கள் அக்கறை புரிகிறது.

//இந்தியக் குழந்தைகளுக்கு உங்கள் கனவுகள் தேவை.//

இந்திய குழந்தைகள் மீது உங்களுக்கு அப்படீயென்ன கோபம்? ;)

அன்சாரி - வழுத்தூர்.

[சிரிப்பானை கவனிக்கவும் - சீரியசா எடுத்துக்காதீங்க பிளிஸ்]

நண்பன் said...

அநாநி 1: நன்றி.

அன்சாரி,

// இந்திய குழந்தைகள் மீது உங்களுக்கு அப்படீயென்ன கோபம்? ;)//

சீரியசாகவும் சரி, சிரிப்பானாகவும் சரி, என்ன சொல்ல நினைக்கிறீங்கன்னு விளங்கலயே!!!

என்றாலும் நன்றி.

ஜோ/Joe said...

நண்பன்,
நீங்கள் சொல்வதெல்ல்லாம் சரி தான் .ஆனால் இந்த படத்துக்கும் அதற்கும் என்ன சம்பந்தம் .அவர் என்ன மனம் அழுத்தத்தாலா கீழே விழுந்தார் .அருகிலிருக்கும் முதியவரின் கைத்தடி தடுக்கி தானே விழுந்தார்?

நண்பன் said...

ஜோ,

வாருங்கள்.

// நண்பன்,
நீங்கள் சொல்வதெல்ல்லாம் சரி தான் .ஆனால் இந்த படத்துக்கும் அதற்கும் என்ன சம்பந்தம் .அவர் என்ன மனம் அழுத்தத்தாலா கீழே விழுந்தார் .அருகிலிருக்கும் முதியவரின் கைத்தடி தடுக்கி தானே விழுந்தார்? //

ஜோ, நீங்கள் சொல்வது சரிதான். காட்சியை ஒரு குறியீடாகத் தான் பயன் படுத்திக் கொண்டேன். எவ்வாறு நிகழ்ந்தது என்ற விவரத்தை விட, நான் (அல்லது பல முஸ்லிம்கள்) அவருக்கு சொல்ல விரும்பிய செய்திக்கான ஒரு குறியீடு மட்டுமே அது.

சமீப காலமாக பா.ஜ.க. முழங்கி வருகிறது - கலாம் அவர்கள் இரண்டாவது முறையாக ஜனாதிபதி ஆக விரும்பினால், தாங்கள் ஆதரவு அளிப்போம் என்று. அவர்களது குறி - முஸ்லிகளின் ஓட்டு. உ.பி. தேர்தல் அவர்களது இலக்கு. முலாயம் சிங் மீது பொதுவாகவே எல்லோரும் அதிருப்தியில் இருக்கும் பொழுது, உ.பி. தேர்தலில் கிடைக்கும் ஒவ்வொரு ஓட்டும் முக்கியம் என்ற பட்சத்தில் கிளம்பிய முழக்கம் அது.

ஆனால், அவர்களது கூட்டாளி, சிவ்சேனா, சமீப காலத்தில் சொல்லிய குற்றச்சாட்டு - அப்சல் கருணை மனுவை ஜனாதிபதி வேண்டுமென்றே தாமதம் செய்கிறார் என்று. இது அப்பட்டமான உள்நோக்குடைய குற்றச்சாட்டு. பால் தாக்கரேயின் உள்நோக்கம் - ஜனாதிபதியைத் தர்மசங்கடப்படுத்துவதா? அல்லது முஸ்லிம் மக்களை அவமானப்படுத்துவதா என்பதை ஒரு வழக்காடு மன்றம் வைத்து வாதிக்க வேண்டும்.

எந்தவொரு இந்திய குடிமகனும் அறிவான் - கலாம் அவர்கள் தன்னை மத, மொழி வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டவராக நடத்திக் கொண்டது. இப்பொழுது மட்டுமல்ல, அவர், பாதுகாப்புத் துறையில் பணி செய்யும் பொழுது கூட, அவ்வாறே இருந்தார் என்பதற்கு அத்தாட்சி - அவரது பணி தோழர்கள். வேறெந்த மனிதனையும் விட அவர் இந்தியாவை அதிகம் நேசித்தார். தன் வாழ்க்கை முழுவதையும் இந்தியாவிற்காக, பின்னர் இந்தியக் குழந்தைகளுக்காகச் செலவிட்டவர்.

இத்தகைய மனிதர் மீது, உள்நோக்கத்துடனும், காழ்ப்புணர்ச்சியுடனும் கூறப்பட்ட அந்தக் கருத்து எவராலுமே வன்மையாகக் கண்டிக்கப்படவில்லை என்ற பொழுது, இத்தகைய சூழலில், ஒரு போலியான நாட்டுப் பற்றாளர்களால் வழி நடத்திச் செல்லப்படும் அரசியல் கட்சிகளின் அருவெருப்பான செய்கைகளையும் உள்ளடக்கிய ஒரு அரசியல் அமைப்பின் தலைவராக செயல்பட வேண்டுமா என்பதே கேள்வி.

காட்சி ஒரு குறியீடு. அவ்வளவே

நன்றி.

ஜோ/Joe said...

//இத்தகைய மனிதர் மீது, உள்நோக்கத்துடனும், காழ்ப்புணர்ச்சியுடனும் கூறப்பட்ட அந்தக் கருத்து எவராலுமே வன்மையாகக் கண்டிக்கப்படவில்லை என்ற பொழுது, இத்தகைய சூழலில், ஒரு போலியான நாட்டுப் பற்றாளர்களால் வழி நடத்திச் செல்லப்படும் அரசியல் கட்சிகளின் அருவெருப்பான செய்கைகளையும் உள்ளடக்கிய ஒரு அரசியல் அமைப்பின் தலைவராக செயல்பட வேண்டுமா என்பதே கேள்வி. //

மிக்க சரி நண்பன்!

நண்பர்கள் சொல்கிறார்கள்

CSM - உலகச் செய்திகள்

GF - உலகச் செய்திகள்