"எழுத்துகளையும் தாண்டி எனக்கென்று ஒரு உலகம் உண்டு; நான் எழுதுபவற்றை மட்டுமே வைத்துக் கொண்டு, என்னை எடை போடுபவர்களை எப்பொழுதும் என் எண்ணங்கள் வியப்பில் ஆழ்த்திக் கொண்டே இருக்கும்....."
- நண்பன்

Thursday, March 08, 2007

விடாது கருப்புவிற்கான பதில்: நண்பன்

விடாது கருப்புவிற்கான பதில்:

விடாது கருப்பு எனக்கு ஒரு பின்னூட்டமிட்டு அதில் நான் அவருடைய பின்னூட்டங்களைப் பதிந்து நீக்கியது குறித்து கேள்வி எழுப்பி உள்ளார்.

அவருடைய எழுத்துகள் எதையும் நான் வாசித்ததில்லை. நேரமின்மை ஒரு முக்கிய காரணம் என்று கூறி தப்பித்துக் கொள்ள முயல்வதை விட, வாசிக்க விருப்பமில்லை என்ற உண்மையை போட்டு உடைத்து சொல்லி விடுவது தான் உத்தமம்.

விடாது கருப்பு என்னை விடாது போல் தோன்றுவதால், சில விளக்கங்களைக் கொடுத்து விடலாம் என்பதே எனது உத்தேசம். அதன்படி, அவருடைய பதிவை அப்படியே கொடுத்து அதற்கான விளக்கத்தை எழுதுவது தான் சரியாக இருக்கும்.

விடாது கருப்புவின் மொழி நடை எனக்கு உகந்ததாயில்லை. எனது பதிவுகளை எனது மனைவி வாசிக்கிறார். எனது நண்பர்கள் - வலைப்பூவில் இல்லாத நண்பர்கள் வாசிக்கிறார்கள். நான் பொறுப்பற்று, பொழுது போக்க எழுதவில்லை. எழுதுவதற்கு முழுப்பொறுப்பேற்று தான் எழுதுகிறேன். அது மட்டுமல்ல, பின்னூட்டங்களுக்கான பொறுப்பும் என் தலை மீதே என்ற புரிதல் இருப்பதால், அதையும் நான் கவனமாக செய்ய வேண்டியதிருக்கிறது..

என் பதிவுகளை என்னை ஆதரிப்பவர்களைப் போல, என் கருத்தியலுக்கு முற்றிலும் எதிர்நிலையில் இருப்பவர்களும் வாசிக்கிறார்கள். எல்லோரும் வந்து வாசித்து ஒரு ஆரோக்கியமான கருத்தாடல் செய்ய முடியும் என்ற நிலைமையை என் வலைப்பதிவில் கொண்டு வர முயற்சிக்கிறேன். அதனால், அவர்களை எதிர்க்கப் போவதில்லை என்ற அர்த்தமில்லை. எதிர்ப்பது என்பது கருத்தியல் ரீதியாக, வன்முறை இல்லாத உரையாடலாக இருக்க வேண்டும் என்பதே என் நிலை.

இந்தப் பின்னணியில், உங்கள் பின்னூட்டத்திற்கு வருவோம். முதலில் ஒன்றைப் புரிந்து கொள்ளுங்கள் - உங்களுக்கு நான் எந்த அறிவுரையும் கூறப்போவதில்லை. உங்கள் பின்னூட்டத்தின் மீதான எனது கருத்துகள் மட்டுமே. அதை எப்படி எடுத்துக் கொள்ளப் போகிறீர்கள் என்பது உங்களைப் பொறுத்ததே. நீங்கள் உங்கள் எழுத்து நடையை மாற்றிக் கொள்ள வேண்டுமென்றோ, அல்லது, கருத்துகளையே மாற்றிக் கொள்ள வேண்டும் என்பதோ எனது நோக்கமல்ல. எதைச் செய்வதாக இருந்தாலும் - அதை உங்கள் தளத்தில் இருந்து செய்து கொள்ளுங்கள். எனக்கு ஆட்சேபணையில்லை.

எனது பதிவில், கருத்தை ஒட்டி வெளியிடப்படும், ஆதரவு / எதிர்ப்பு கருத்தும் விவாதங்களும் மட்டும் தான் இடம் பெறுமே தவிர, எனது பதிவைப் பயன்படுத்தி, அதன் அடியோட்டமான உணர்வுகளுக்கு மாறாக, தனிப்பட்ட தங்கள் காழ்ப்புணர்ச்சிகளை அடுத்தவர் மீது திணிக்கும் ஊடகமாக பயன்படுத்த அனுமதிக்க மாட்டேன் என்பதில் உறுதியாக இருக்கிறேன்.. உங்கள் எதிர்ப்பாளர்களை உங்கள் தளத்திற்கு வரச் செய்து வாசிக்க வைக்க வேண்டியது உங்களுடைய கடமையாகும். உங்கள் தளத்திற்கு வராதவர்களை சந்திக்க அடுத்தவரின் தளத்திற்கு வரும் பொழுது, அந்த இடத்தில் கடைப்பிடிக்கப்படும் நடைமுறைகளை அனுசரிக்க வேண்டியது உங்களுடைய கடமை தானே?


// விடாதுகருப்பு said...

அன்புள்ள நண்பன்,

நானும் பெரிய எழுத்தாளன் என்பதும் எனது வார்த்தைகளில் பறக்கும் அனலும் தங்களுக்குத் தெரியாதது அல்ல. உங்களைப் போல் அல்ல நான். வெட்டு ஒன்னு துண்டு ரெண்டு கேஸ் நான். நான் எதற்காகவும் பூனூல் போட்ட பார்ப்பன நா*களிடம் பயந்து போனதே இல்லை. எம் முன்னோர்கள் இந்த பார்ப்பன நா*களிடம் பட்ட அடியானது இன்னும் என் நெஞ்சில் ரணமாய் இருந்து வலித்துக் கொண்டிருக்கிறது.

அப்படிப்பட்ட நான் தங்கள் பதிவில் அப்படி என்ன ஆபாசமாக எழுதிவிட்டேன் என்று தெரியவில்லை. தங்களின் "தே*** மகன்கள்" என்ற தலைப்பினைவிடவா ஆபாசமாக எழுதினேன்? அப்படி நான் என்னதான் எழுதினேன் என அறிந்துகொள்ள எனக்கும் ஆவலாக உள்ளது. நண்பர், பேராசிரியர் நாகூர் இஸ்மாயில் அவர்களும் எனக்கு மெயில் அனுப்பி நண்பனை அப்படி என்னதான் சொன்னீர்கள் என்று கேட்கிறார். எனவே தயவுசெய்து நான் தங்களுக்கு இட்ட பின்னூட்டத்தினை எனக்கு மடல்வழியாக அனுப்பினால் நான் அதனை இஸ்மாயில் அவர்களுக்கு அனுப்பி அவரின் சந்தேகத்தினை நிவர்த்தி செய்வேன்.//



மேலே உள்ள விடாது கருப்புவின் எழுத்துகளில் சில எழுத்துகளை நீக்கி விட்டு, சில நட்சத்திரங்களைப் போட்டது நான் தான். சரி அவருக்கான எனது பதில்:

// நானும் பெரிய எழுத்தாளன் //

நம்பிக்கைகள் தான் ஒரு மனிதனுக்கு மிக முக்கியம், சார். வாழ்த்துகள்.

// உங்களைப் போல் அல்ல நான்.//

ரொம்ப நன்றி, கருப்பு. நம் இருவருக்குமிடையே உள்ள வித்தியாசங்களை எல்லோருக்கும் உங்கள் வாயால் உணர்த்தியதற்கு.

// தங்களின் "தே*** மகன்கள்" என்ற தலைப்பினைவிடவா ஆபாசமாக எழுதினேன் //

இந்த வார்த்தையை K.பாலசந்தர், முதன்முதலில் வெகுஜன ஊடகத்தில் அறிமுகப்படுத்தினார். அபூர்வ ராகங்கள் படத்தில். நாயகனாக நடித்த, கமல், is an anti-establishment hero. தந்தையுடன் கோபித்துக் கொண்டு, வீட்டை விட்டு, கால் போன போக்கில் போய்க் கொண்டிருந்த அவர் மீது, காரில் செல்லும் சிலர் சாக்கடையை - வீதி ஓரத்தில் கிடந்த சாக்கடையை, வேண்டுமென்றே, அவர் மீது சிதறுமாறு அடித்து விட்டுச் செல்ல, அவர், தன் கோபத்தை உரக்கக் கத்துவார் 'தே*** பசங்களா' என்று. அது ஒரு கோபத்தின் வெளிப்பாடு. அந்தக் வாகனத்தில் இருப்பவர்களை அவருக்குத் தெரியாது. தனிப்பட்ட முறையில் அவர்கள் மீது அவருக்கு வெறுப்பு இருந்திருக்க வாய்ப்பில்லை. வெறுமனே அது, கோபத்தையும், ஆத்திரத்தையும், எதிராளிக்கு வலிக்கச் செய்ய மட்டுமேவென பயன்படுத்தப்பட்ட சொல் அது. மேலும், நாயகனின் இயலாமையையும் அது வெளிப்படுத்தும். ஆக அந்த சொல், கோபம், ஆத்திரம், இயலாமை இவற்றிற்கான ஒரு குறியீடு தான். It didn't have any intended meaning other than expressing disgust. இதை ஆபாசம் என்று குறிப்பிடுவதற்கு காரணம்? சொல்லாத அர்த்தங்களைத் தேடிக் கொண்டிருந்தால், ஒவ்வொரு வார்த்தைக்கும் அகராதியில் அதற்குண்டான பொருட்களையெல்லாம் போட்டுக் குழம்பிக் கொண்டிருக்க வேண்டியது தான்.

இந்த வார்த்தைக்கு இணையான ஆங்கில வார்த்தைக்கான அர்த்தத்தைப் பாருங்கள்:
1. a man born of unmarried parents. (as a noun)
2. an unpleasant person (informal)

as an adjective it is no longer used in its pure or original form.

அதனுடைய உண்மையான பொருள் மறக்கப்பட்டு, இன்று அதை விரும்பத் தகாத மனிதர்கள் என்ற அளவில் மாத்திரமே உபயோகப்படுத்துகின்றனர். அதன் தமிழாக்கமும் கிட்டத்தட்ட அதே அளவில் தான் இன்று பயன்படுத்தப்படுகிறது. பொது ஊடகத்தில் புழக்கத்திற்கு வந்து விட்ட, இந்த வார்த்தையைப் பயன்படுத்த தடை விதித்தால், இன்று பல எழுத்தாளர்கள் சிரமம் அடைவார்கள். ஒரு கதாபாத்திரத்தை வடிவமைக்கும் பொழுது, ஒரு மோசமான பாத்திரத்தை இந்த ஒற்றைச் சொல்லால் வடிவமைத்து விடலாம். So, this word is no more a taboo. இதில் ஆபாசத்தைக் கண்டெடுக்க, உங்களைப் போன்ற பெரிய எழுத்தாளர்களாலும், அறிவுஜீவிகளாலும் மட்டும் தான் முடியும் என்ற உண்மையை இப்பொழுது தெரிந்து கொள்கிறேன்.

எனக்கு அறிவுறுத்திய நண்பர்கள், இதை ஒரு மோசமான வார்த்தை என்ற அளவில் தான் கேட்டுக் கொண்டார்கள் - மாற்றுங்கள் என்று. அவர்கள் இதை ஆபாசம் என்று குறிப்பிடவில்லை. மாறாக தரமற்றது என்று தான் நினைத்தார்கள். அவர்களின் வார்த்தைகளில் என் மீதான உண்மையான அக்கறை இருப்பதாக உணர்ந்ததால், ஏன் என்ற கேள்வியைக் கூட நான் கேட்க வில்லை. மேலும், அபூமுஹை அவர்கள் சொன்னதும், சிந்திக்க வைத்தது. ஒருவனைத் திட்ட வேண்டுமென்றால், அவனின் தாயின் மீதான வசவு சொல்லை ஏன் பயன்படுத்துகிறீர்கள் என்ற அவரது தர்க்கத்தில் இருந்த நியாயம் உறைத்ததால், உடன் மாற்றினேன். இந்த வார்த்தை ஒரு ஆணாதிக்க வர்க்கத்தால் வடிவமைக்கப்பட்ட சொல் என்ற புரிதலும் வந்தது. இந்த சறுக்கலுக்காக வருத்தப்பட வேண்டியது தான்.

நியாயப் பூர்வமான தர்க்கங்களை, வாதங்களை, யார் சொன்னாலும் ஏற்றுக் கொள்வேன். நண்பர்களாயினும் சரி, எதிரணியினர் ஆனாலும் சரி. அகங்காரத்தைக் கொண்டு வாதாடுவது இல்லை. அதனால், தான் நண்பர்கள் சொன்ன பொழுது, அதை கேள்வியின்றி ஏற்றுக் கொண்டேன்.

// நண்பன் said...

விடாது கருப்பு,

உங்கள் பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி.

அதை நீக்குவதற்குக் காரணம் - அதன் மொழி நடையும், எழுத்தில் தெரிந்த வன்முறையும்.//


நீங்கள் ஆபாசமாக எழுதிகிறீர்கள் என்று நான் சொல்லவில்லை. வன்முறையும், மரியாதையற்ற மொழியும் தான் என்னைப் படுத்தி எடுக்கிறது. வன்முறைகளை என்றுமே நான் ஆதரிக்கப் போவதில்லை. என் வலைப்பதிவிலும் தான். அதனால், வன்முறைகளை நிச்சயம் விலக்கியே வைப்பேன். எனது இன்னுமொரு பதிவில், தீவிரவாதத்தை எதிர்த்து அத்தனை பேசிய ஒரு பதிவில், ஆருரன் வந்து எழுதுகிறார் - சுன்னி முஸ்லிம தீவிரவாதிகள் அனைவரையும் அமெரிக்கர்கள் அழித்து ஒழிக்க வேண்டும். அதையும் நீக்கி விடுவேன். அந்த குறிப்பிட்ட நண்பரின், மனோபாவம் எப்படிப்பட்டது என்பதை வலைப்பதிவினர் அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக, அதை ஒரு நாள் விட்டு வைத்தேன். அதன் ஆயுள் அத்தனை தான்.

என்னை நீங்கள் ஒரு ஜனநாயகப் பண்பில்லாதவன் என்று கடிந்து கொள்ள வேண்டுமானாலும் செய்யுங்கள். ஜனநாயகப் பண்பு சில விதிமுறைகளுக்குட்பட்டது. மனித மாண்புகளை மதிக்க வேண்டும் என்பதும் ஜனநாயகத்தின் ஒரு அடிப்படைத் தத்துவம். எல்லையற்றது எனது ஜனநாயக உரிமைகள் என்று கோருவதனால், மன்னிக்கவும், அத்தகைய ஜனநாயகம் எனக்குத் தேவையில்லை. அதையும் மீறிய உரிமைகள் உங்களுக்குத் தேவை என்றால், அதை உங்களுக்கு உரிய இடத்தில் செய்து கொள்ளுங்களேன். ஏன் என்னைத் தொந்தரவு செய்கிறீர்கள்?



// வெட்டு ஒன்னு துண்டு ரெண்டு கேஸ் நான் //


மிக்க மகிழ்ச்சி. அப்படியே இருங்கள். ஆனால், அந்த ஒரு வெட்டு, நேர்மையானதாக இருக்கட்டும். பண்புள்ளதாக இருக்கட்டும். இந்த அடிப்படைகளை வைத்துக் கொண்டு பார்த்தால், என்னுடைய எழுத்துகளும் பெரும்பாலும் வெட்டு ஒன்று, துண்டு இரண்டு என்று தான் இருக்கின்றது. சில சிறு சிறு தவறுகளை, சறுக்கல்களை, வார்த்தைப் பிரயோகங்களைக் கொண்டு, எதிரிகளை மடக்கிப் பிடித்து விட்டதாக, நான் ஒரு போதும் நினைத்துக் கொள்ள மாட்டேன். இந்த சறுக்கல்கள் அனைவருக்கும் வரக்கூடியது தான். பேசப்படும் கருத்தளவில் இருக்கும் குறைகளைத் தான் நான் விமர்சிக்கிறேன். இதில் வெட்டும் கிடையாது துண்டும் கிடையாது புரிதல்கள் மாத்திரமே சாத்தியம்.

வாதம் புரிந்து, எவரையும் அவர்கள் கருத்திலிருந்து வெளியேற்றி, என்னிடம் வந்து வேர வைக்க முடியும் என்ற முட்டாள்தனமான நம்பிக்கைகள் எல்லாம் கிடையாது. கொஞ்சமேனும் என்னுடைய நிலைபாட்டைக் குறித்து ஒரு புரிதல் மாற்று அணியினருக்குக் கிடைக்குமென்றால், அது தான் என் எழுத்துகளின் வெற்றி என பெருமிதம் கொள்வேன். மற்றபடி, வெட்டவும் துண்டாடவும் விருப்பமில்லாதவன்.

இருவருடைய பார்வைகளும், கோணமும் வேறுவேறாக இருக்கின்றது. அதில் ஒன்றும் தவறில்லை.


// எம் முன்னோர்கள் இந்த பார்ப்பன நா*களிடம் பட்ட அடியானது இன்னும் என் நெஞ்சில் ரணமாய் இருந்து வலித்துக் கொண்டிருக்கிறது. //


இருக்கலாம். அந்த வலியை நீங்கள் வெளிப்படுத்துவதை நான் தடை செய்யவில்லையே? உங்கள் தளத்தில் நின்று கொண்டு அதைச் செய்யுங்கள். உங்கள் அனுபவங்களிலிருந்து உங்களுடைய எழுத்துகள் வருகிறதென்றால், என்னுடைய அனுபவங்களிலிருந்து என்னுடைய எழுத்துகள் வருகின்றன. எனக்கு நிறைய பிராமின் நண்பர்கள் உண்டு. ஆண்களும் உண்டு, பெண்களும் உண்டு. அவர்கள் என்னிடத்தில் எந்த பேதத்தையும் காட்டியதில்லை. இன்னமும் எனக்கு அவர்கள் நண்பர்கள் தான். கல்லூரிக் காலம் என்ற பொழுது, இளமைத் துடிப்பில் அப்படி இருந்திருக்கலாம் என்றில்லை, இப்பொழுதும் கூட அவர்கள் அவ்வாறு தான் இருக்கின்றார்கள். நீங்கள் சொல்வது போலவும் மனிதர்கள் இருந்திருக்கக் கூடும். அதற்காக, உங்கள் அனுபவத்தை நான் உள்வாங்கிக் கொண்டு, உங்களைப் போன்று எழுத வேண்டும் என்றில்லையே? உங்கள் அனுபவத்தை நீங்கள் எழுதுங்கள். என் அனுபவத்தை நான் எழுதிக் கொள்கிறேன். சரிதானே?


// அப்படி நான் என்னதான் எழுதினேன் என அறிந்துகொள்ள எனக்கும் ஆவலாக உள்ளது. //


இதோ இருக்கிறது - கீழே.

நண்பர்களுக்குத் தகவல் சொல்லி வாசிக்கச் சொல்லுங்கள். நீங்கள் குறிப்பிடும், பேராசிரியர், நாகூர் இஸ்மாயில், என் தவறுகளைச் சுட்டிக் காட்டி, திருத்தச் சொன்னார். திருத்திக் கொண்டேன். உங்களுக்கும் அத்தகைய நல்ல வழிகளை அவர் சொல்லித் தரட்டும்.

// விடாது கருப்பு said

பல கேள்விகளை நானும் பலமுறை அந்த சொறிகரனிடம் கேட்டேன். அதன் கும்பலிடமும் கேட்டேன். தகுந்த பதில் இல்லை. அடிவருடும் கும்பலை வைத்தும் ஜால்ராக்களை வைத்தும் எனக்கெதிராகக் குறைப்பதைத் தவிர உருப்படியான எந்த பதிலும் வருவதில்லை!

நான் முன்பே சொன்னபடி பூணூலை மட்டுமே வெட்டி இருக்கக் கூடாது. ஒட்டுமொத்தமாக எல்லா அய்யனையும் போட்டுத் தள்ளி இருந்தால் இன்றைக்கு இந்த அளவுக்கு பேசிக் கொண்டிருக்க மாட்டார்கள் ஜாதிவெறி பிடித்த பார்ப்பனர்கள்.//



இதில் ஆட்சேபத்துக்குரிய பகுதியாக நான் கருதியது - 'எல்லா அய்யன்களையும் போட்டுத் தள்ளி இருந்தால்........' - என்பதைத் தான். உங்களுடைய இந்தக் கருத்து, this ethnic cleansing concept is totally unacceptable to me. அதனால் தான் வெளியிடவில்லை.

பூணூலை வெட்டி எறிய வேண்டுமென்பதை, பார்ப்பனீய சிந்தனைகள் அழிய வேண்டும் என்பதன் குறியீடாக பெரியார் கூறினார். அந்த அளவில் ஒரு கருத்தியலாக ஏற்றுக் கொள்கிறேன். ஆனால், இந்த 'போட்டுத் தள்ளும் விவகாரம்' நம்ம கையில ஆகாது, ஐயா!!!

பெரியார் இதையும் சொன்னாரே என்று ஒரு தர்க்கத்திற்காக, நீங்கள் பெரியாரின் ஒரு கூற்றை முன் வைக்கலாம். 'பாம்பையும், பார்ப்பனனையும் பார்த்தால், முதலில் பார்ப்பனனை அடி' என்று. பெரியாரின் இந்தக் கூற்றோடு எனக்கு உடன்பாடு கிடையாது. ethnic cleansing என்ற கோட்பாட்டை, பெரியாரின் பெயரால் எல்லோரும் தவறாக பயன்படுத்துகின்றன்ரோ என்ற ஐயம் என்னிடத்தில் உண்டு. Periyar had merely set a priority as to what to fight as an evil. He considered parpanism as more dangerous and venomous than a snake. அவ்வளவு தான். பெரியார் போன்ற ஒரு சிந்தனையாளர், அழித்தொழிப்பதை கற்றுக் கொடுத்திருக்க மாட்டார் என்பது என் எண்ணம். என் புரிதல். பெரியாரை மறு ஆய்வுக்கு உட்படுத்தும் பொழுது இந்த கருத்து சிதைவுகளை களைய முயன்றிருக்க வேண்டும். ஆனால், பாவம். எல்லோருக்கும் அவரை திட்டுவதற்கும் தவறாகப் புரிந்து கொள்வதற்கும் தான் நேரமிருக்கிறது.

'நீ பெரியாரைத் தவறாகப் புரிந்து கொண்டிருக்கிறாய். அவர் சொன்னதன் பொருள் அழித்தொழிப்பு தான்' என்ற வாதத்தை நீங்கள் வைத்தால், அதை எதிர்த்து இப்பொழுதுக்கு நான் தர்க்கம் செய்யப் போவதில்லை. மாறாக, பெரியாரை முற்றிலுமாகப் படித்துப் புரிந்து கொள்ளும் வரை, கொஞ்சம் தள்ளி வைத்துக் கொள்வேன். என்னை பார்ப்பனர்கள் இம்சிக்கவில்லை. மாறாக, அவர்களில் சிலர் முன் எடுத்துச் செல்ல விரும்பும் பார்ப்பனீயம் கோட்பாட்டை அடிநாதமாகக் கொண்ட இந்துத்வம் என்ற கருத்தியல் தான் படுத்துகிறது. அந்தக் கருத்தியலை, அதன் தளத்திலே நின்று தான் சந்திக்க வேண்டுமே தவிர, வீண் ஜம்பமாக, அழித்தொழிப்பு கொள்கையெல்லாம் ஆதரிக்கப் போவதில்லை.

இறுதியாக, நண்பனொருவன் அனுப்பிய என் வலைப்பதிவைப் பற்றிய விமர்சனம் கீழே தருகிறேன்.








இந்த மாதிரியான நண்பர்களால் தான் என்னை வழி நடத்திச் செல்ல முடியும். அத்தகையவர்களில் ஒருவராக உங்களால் முடிந்தால் மாறுங்கள். இல்லையென்றால், என் வழி தனி வழி தான்.

திட்ட விரும்பினால் தாராளமாகத் திட்டிக் கொள்ளுங்கள். சிறிது நாட்களுக்கு முன்னால், சில நண்பர்கள், பட்டம் கொடுத்து, புகைப்படம் போடுவோம் என்று மிரட்டினார்கள். (இப்பொழுது தங்கள் கருத்தை மாற்றிக் கொண்டிருப்பார்கள் என்றே நினைக்கிறேன்.) உங்களுக்கும் அந்த மாதிரி ஏதாவது எண்ணம் இருந்தால், அந்த சிரமத்தைத் தரவிருப்பமில்லை. படத்தை இணைத்திருக்கிறேன். எடுத்து போட்டு என்ன வேண்டுமானாலும் திட்டிக் கொள்ளுங்கள்.

நன்றி - இத்தனை நேரம் பொறுமையாக வாசித்தமைக்கு.

(அனைவருக்கும் தான்)

(நேர்மையாகக் கருத்து சொல்ல விரும்புபவர்கள் மட்டுமே எழுதுங்கள். இந்தப் பதிவை வைத்துக் கொண்டு, ஜல்லியடிக்க கிளம்பியவர்களுக்கு, கண்டிப்பாக No Entry)

24 comments:

நண்பன் said...

மேலே உள்ள புகைப்படத்தை எடுத்தவர் நண்பர் இசாக். இரண்டு வாரங்களுக்கு முன்பு, கவிஞர் இன்குலாப் அவர்களின் மகனை ரஸ்-அல்-கைம்மாவில் சந்தித்து விட்டு, ஃபுஜைரா வழியாக திரும்பும் பொழுது, வழியில் ஒரு பழமையான பள்ளிவாசல் ஒன்று இருந்தது. 1446ஆம் வருடம் கட்டப்பட்ட அழகிய அந்த பள்ளியின் வெளிப்புறத்து நின்று எடுத்துக் கொண்ட புகைப்படம்.

புகைப்படத்திற்காக இசாக்கிற்கு நன்றி.

சீனு said...

Superb post...

//வன்முறையும், மரியாதையற்ற மொழியும் தான் என்னைப் படுத்தி எடுக்கிறது.//

இதே தான் நானும் அவருக்கு சொல்லியிருந்தேன்.

சிறில் அலெக்ஸ் said...

நண்பன் உங்க ஃபோட்டோவ எடுத்துருங்க (கொஞ்சம் வயசானவராத் தெரியுது அதனாலத்தான் :))

I had an younger image in mind seeing the one on the left.

உங்கள் பதில்பற்றி சொல்வதற்கு பெருசா ஒண்ணுமில்ல. முன்னெல்லாம் அவருக்கு அப்பப்ப பின்னூட்டம் போட்டு இதுபோல சொல்லிக்கிட்டிருப்பேன்.

நம் முன்னோர்கள் ஏமாந்தது பற்றிய கோபமா? ஹ்ம் என்னால நிச்சயம் நம்பமுடியல.

கோபத்துல வில்லன போட்டுத்தள்ளுறது பழைய சினிமா கத.. இப்பெல்லாம், மன்னிக்கிறது தன் வாழ்வ முன்னேற்றுறதுக்கு அந்தக் கோபத்த பயன்படுத்துறதுதான் கத.

Anyways..nice post. like your friend has mentioned concentrate on 'other' good stuff.
:)

Anonymous said...

Dear Nanban

I think you have captured screen shot using camera. You can always use ALT+PRINT SCREEN and paste it in paint brush and then do whatever you want to hide from the screen. I feel that is easiest method.

dondu(#11168674346665545885) said...

நல்ல தரமான சொற்களில் எழுதியுள்ளீர்கள். நீங்களும் எனது புதுக்கல்லூரியி படித்தவர் என படித்ததாக ஞாபகம். சரிதானே?

நமக்குள் பல எதிர் கருத்துக்கள் இருப்பினும் கருத்தைத்தான் சாட வேண்டுமேயன்றி ஆளை அல்ல என்பதை ஏற்காமல் இருக்க முடியாது.

அன்புடன்,
டோண்டு ராகவன்

வடுவூர் குமார் said...

பின்னூடம் அல்ல!!
நண்பரே!!
உங்கள் பொன்னானநேரத்தை இப்படியா வீணடிக்கவேண்டும்.??
உண்மையான அக்கரையுடன் சொல்கிறேன்.
சிலர் திருந்துவதற்க்கு இப்போது அவருக்கு உள்ள காலகட்டம் போறாது,என்று உங்கள் பணியை தொடருங்கள்.

மரைக்காயர் said...

நல்ல பதிவு. நண்பர் விடாது கருப்பு தனது பதிவுகளின் தரத்தை இன்னும் மெருகேற்றிக் கொள்ள வேண்டும் என்பது என் விருப்பமும் கூட.

இந்த வரிகளுடன் நான் முழுக்க முழுக்க ஒத்துப் போகிறேன்.

//வாதம் புரிந்து, எவரையும் அவர்கள் கருத்திலிருந்து வெளியேற்றி, என்னிடம் வந்து வேர வைக்க முடியும் என்ற முட்டாள்தனமான நம்பிக்கைகள் எல்லாம் கிடையாது. கொஞ்சமேனும் என்னுடைய நிலைபாட்டைக் குறித்து ஒரு புரிதல் மாற்று அணியினருக்குக் கிடைக்குமென்றால், அது தான் என் எழுத்துகளின் வெற்றி என பெருமிதம் கொள்வேன். மற்றபடி, வெட்டவும் துண்டாடவும் விருப்பமில்லாதவன். //

நன்றி.

கருப்பு said...

நண்பன் ஷாஜி,

நக்கைப் பிடுங்குபடியாக அருமையான பதிவினை நான்குமணி நேரம் செலவழித்து எழுதிய பதிவை ப்ளாக்கர் சொதப்பால் பறிகொடுத்து விட்டேன். விரைவில் சரியான பதிலைத் தருவேன். அதுவரை இந்த பதிவினை அழிக்காமல் இருங்கள்.

நன்றி.

பொன்ஸ்~~Poorna said...

//வன்முறையும், மரியாதையற்ற மொழியும் தான் என்னைப் படுத்தி எடுக்கிறது.//
உண்மை தான் நண்பன்... கருத்தளவில் ஒப்புக் கொள்ள முடிந்தாலும் எழுத்துக்களில் உள்ள வன்முறை அந்தக் கருத்தைத் தாண்டி ஒலித்து, கருத்தின் வீச்சை அடக்கிவிடுகிறது/ திசைதிருப்பிவிடுகிறது. :(

//'பாம்பையும், பார்ப்பனனையும் பார்த்தால், முதலில் பார்ப்பனனை அடி' //
இதை, இதே சொல்லாடலில் பெரியார் சொல்லவே இல்லை என்கிறார்கள். நானும் அதிகம் படித்ததில்லை; கேள்விப்பட்டது தான்.

//நண்பன் உங்க ஃபோட்டோவ எடுத்துருங்க (கொஞ்சம் வயசானவராத் தெரியுது அதனால தான் :))//
சிறிலை நானும் வழிமொழிகிறேன் :)

இதற்கு முந்தைய பதிவிற்கே பின்னூட்டமிட நினைத்திருந்தேன். தலைப்பில் உடன்பாடில்லாததால் வரவில்லை..

[மாற்றிய தலைப்பிலும் உடன்பாடில்லை.. ரொம்பவும் அறிவுப் பூர்வமாக யோசித்து அவர்கள் புத்தக வீதியைக் குறிவைக்கிறார்கள்.. நீங்க என்னடான்னா... :) :(((((( ]

Anonymous said...

Arumayana Pathivu. Anbae Sivam padathin climaxil kamala hasaan solluvar "oruthana kolla vendum yendru vandthu vitu manam mari manippu keta neeyum oru kadavulthan" yendru. Athuthan nitharsanman Unmai. Intha unmaiya purinthu kondal ulagathil ivallvu vanmurai irukkathu. Hats off to you.

வடுவூர் குமார் said...

நண்பரே!!
???!!! :-((
இது பின்னூடம் தான்.

கருப்பு said...

பதில் எழுதிவிட்டேன் நண்பன். படித்து தெளிவு பெறுங்கள்.

Anonymous said...

//நல்ல தரமான சொற்களில் எழுதியுள்ளீர்கள். நீங்களும் எனது புதுக்கல்லூரியி படித்தவர் என படித்ததாக ஞாபகம். சரிதானே?//

இதுவரைக்கும் டாக்சி, ரயிலுதான் உங்களுதா இருந்துச்சு. இப்போ கல்லூரியும் உங்களுதா?

//நமக்குள் பல எதிர் கருத்துக்கள் இருப்பினும் கருத்தைத்தான் சாட வேண்டுமேயன்றி ஆளை அல்ல என்பதை ஏற்காமல் இருக்க முடியாது.//

இதுபோல சொல்லிச் சொல்லியே போண்டா வாங்கிக் கொடுத்து ஆட்களை மடக்கப் பாருங்க. அதுசரி முரளி மனோஹர் நலமா இருக்காரா?

நண்பன் said...

//விடாதுகருப்பு said...

பதில் எழுதிவிட்டேன் நண்பன். படித்து தெளிவு பெறுங்கள். //

Occupational Hazard!!!

நண்பன் said...

// Anonymous said...

Dear Nanban

I think you have captured screen shot using camera. You can always use ALT+PRINT SCREEN and paste it in paint brush and then do whatever you want to hide from the screen. I feel that is easiest method.//

மிக்க நன்றி, அநாநி. இத்தனை எளிதாக செய்ய முடிகின்ற ஒரு விஷயத்தை, இத்தனை நாளும் அறியாது இருந்தேனே!!!

அத்தனை தான் எனது கணிணி அறிவு.

அது சரி, இதற்குப் போய் ஏன் அநாநியாக வருகிறீர்கள்?

சரி, சரி, சப்தமின்றி, நற்காரியம் செய்யும் மனிதர்களும் இருக்கிறார்கள்.!!!

கார்மேகராஜா said...

///Dear Nanban

I think you have captured screen shot using camera. You can always use ALT+PRINT SCREEN and paste it in paint brush and then do whatever you want to hide from the screen. I feel that is easiest method.//


தகவலுக்கு நன்றி!

Anonymous said...

//Occupational Hazard!!!//

Excellent response!

dondu(#11168674346665545885) said...

//இதுவரைக்கும் டாக்சி, ரயிலுதான் உங்களுதா இருந்துச்சு. இப்போ கல்லூரியும் உங்களுதா?//
இது என்ன போங்கு? எனது திருவல்லிக்கேணியில் எனது ஹிந்து உயர்நிலைப் பள்ளியில் வாசித்த என்றென்றும் அன்புடன் பாலா, எனது புதுக்கல்லூரியில் படித்த நல்லடியார், சலாஹுத்தீன் ஆகியோர், எனது கிண்டி பொறியியல் கல்லூரியில் படித்த நண்பர்கள் எல்லோருமே எனக்கு பிடிக்கும் எனக் கூறுவதில் என்ன தவறு?

எனது இந்தியா என்று கூடத்தான் கூறுவேன் யார் தடுப்பது?

அன்புடன்,
டோண்டு ராகவன்

Thamizhan said...

விளக்கம்:
பாம்பையும் பாப்பானையும் பார்த்தால் பாப்பானை முதலில் அடி
என்பது வட இந்திய கிராமத்துப் பழமொழி. பெரியார் மீது பாம்பையும் வீசி இருக்கிறார்கள்.பாம்பை அடித்தாரோ இல்லையோ பாப்பானையும் வாங்க என்று மரியாதையுடன் தான் அழைத்துப் பேசி,அவருடைய ஆசிரியர் பயிற்சிப் பள்ளியிலே இடந்தரவில்லை என்று சொன்னபோது அவர்களுக்கு மூன்று விழுக்காடு கொடுங்கள் என்றார்.பார்ப்பனீயத்தை முழுமூச்சுடன் அடித்தார் ஆனால் ஒரு பார்ப்பனரைக் கூட அடிக்கச் சொல்லவில்லை.
அரைநேரப் பள்ளியும் குலக்கல்வியும் கொண்டு வந்தபோது கத்தியுடனும்,நெருப்புப் பெட்டியுடனும் தயாராக இருக்கச் சொன்னார்.பிடிவாதமாக இருந்த ஆச்சாரியார் ராஜினாமா செய்தவுடன் அவற்றிற்கு இனி வேலையில்லை என்றார்.

nagoreismail said...

மரியாதைக்குறிய நண்பன் அவர்களுக்கு, அருமை தோழர் விடாது கருப்பு அவர்களின் எல்லா பதிவையும் விரும்பி படித்து வருபவன் நான், அவருடைய சமுதாய கோபங்களை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது, அவர் எழுதிய எல்லா எழுத்தையும் படிக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் நான் தான் அவரிடம் கேட்டேன் , நண்பனின் பதிவில் என்ன எழுதினீர்கள், எனக்கு தனிப்பட்ட முறையில் அனுப்ப முடியுமா? என்று, அந்த கேள்வி இவ்வளவு விளைவுகளை ஏற்படுத்தும் என்று எனக்கு நிச்சயமாக தெரியாது, அந்த கேள்வியே விடாது கருப்பு தங்களுக்கு எழுதிய கடிதத்திற்கான தூண்டுதலாக அமைந்திருக்கிறது. மிகவும் வருந்துகிறேன், விடாது கருப்பின் கடிதத்தில் எனக்கு உடன்பாடு இல்லை, அதை போல் நீங்கள் தனி பதிவாக எனக்கு பிடிக்காது, வேண்டுமானால் திட்டிக் கொள்ளுங்கள் என்று எழுதியதிலும் எனக்கு உடன்பாடு இல்லை, இதில் என் தவறும் இருப்பதால் நான் தங்களிடமும், நண்பர் விடாது கருப்பிடமும் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன், இத்துடன் இதை விட்டு விடுங்கள், இறைவனுக்காக, -நாகூர் இஸ்மாயில்

நண்பன் said...

சீனு, சிறில் அலெக்ஸ், டோண்டு, வடுவூர் குமார், மரைக்காயர், கார்மேகராஜா, பொன்ஸ் மற்றும் தமிழன். - அனைவருக்கும் பின்னூட்டத்திற்கான நன்றிகள்.

விடாது கருப்பு ‘கதை’ கட்டி விடுவார் என்பது தெரிந்தும், சிலவற்றை தெளிவு படுத்தி விட வேண்டுமென்று தான் எழுதினேன்.

சிறில்,

Aging is a part of growing up. I enjoy that. பக்க வாட்டில் உள்ள படத்திற்கும், பிரசுரித்த படத்திற்கும், உள்ள வித்தியாசம் ஒரு வருட இடைவெளி தான். தலைக்கு சாயம் பூசிக் கொள்ளவில்லை என்ற ஒன்றைத்தவிர, உடலும் மனமும் கல்லூரிக் காலத்தின் இளமையுடன் தான் இன்னமும் இருக்கின்றது.

சீனு,
//வன்முறையும், மரியாதையற்ற மொழியும் தான் என்னைப் படுத்தி எடுக்கிறது.//

எத்தனை முறை சொன்னாலும் எடுபடாது. மனிதர்களுக்கு மட்டும் தான் ஆறாவது அறிவு உண்டு.

டோண்டு,

// நீங்களும் எனது புதுக்கல்லூரியி படித்தவர் என படித்ததாக ஞாபகம். சரிதானே? //

நான் உங்களுடைய புதுக்கல்லூரியில் படிக்கவில்லை. நான் என்னுடைய புதுக்கல்லூரியில் படித்தேன். சென்னையில் அல்ல. நெல்லையில்.

நான் படித்த, நெல்லை பொறியியற்க் கல்லூரி., 1981ல் தொடங்கப்பட்டது. அதன் முதல் வருடத்திய மாணவன் நான். இப்பொழுது அதன் வயது, 25 வருடங்கள். விழா எடுக்கிறார்கள். அதற்கான அழைப்பிதழை அனுப்பிய நண்பன் தான் கடிந்து கொண்டான் - உனக்கு என்ன ஆயிற்று என்று.

புதிதாக தொடங்கிய கல்லூரியில், புதிதாக நுழைந்த மாணவர்கள் நாங்கள் என்ற வகையில் அது எங்களுக்கும் புதுக்கல்லூரி தான்.

மற்றபடிக்கு, உங்களுக்குத் தெரிந்த நண்பரோடு என்னைப் போட்டுக் குழப்பிக் கொண்டிருக்கிறீர்கள்.

எனக்கும், உங்களது சென்னை புதுக்கல்லூரிக்கும் எந்தத் தொடர்புமில்லை.

வடுவூர் குமார்,

// உங்கள் பொன்னானநேரத்தை இப்படியா வீணடிக்கவேண்டும்.?? //

சில சமயங்களில், கொஞ்சம் கால விரயம் செய்வதை தவிர்க்க முடியாது. குறைந்தபட்சம் இனி கருப்புகளைப் பற்றி கவலை கொள்ளாது இருக்கலாம் அல்லவா?

மரைக்காயர்,

// நல்ல பதிவு. நண்பர் விடாது கருப்பு தனது பதிவுகளின் தரத்தை இன்னும் மெருகேற்றிக் கொள்ள வேண்டும் என்பது என் விருப்பமும் கூட. //

எதிரிக்கு எதிரி நண்பன் என்ற தத்துவத்தில், இவரைப் போன்ற பண்பற்றவர்களுடன் இஸ்லாமியர்கள் கை கோர்த்துக் கொள்வதை தவிர்க்க வேண்டும். இவரால் தன்னை ஒருபோதும் மெருகேற்றிக் கொள்ள முடியாது. இவருடைய தயவால் தான் இஸ்லாமிய எதிரிகளை சந்திக்க முடியும் என்றால், அதனால் இஸ்லாம் தான் கேவலப்படும். இஸ்லாமிய வலைப்பதிவர்கள் தங்கள் நம்பகத்தன்மையை இழப்பார்கள்.

தயவு செய்து சிந்திக்கக் கோருகிறேன்.


பொன்ஸ்
// கருத்தளவில் ஒப்புக் கொள்ள முடிந்தாலும் எழுத்துக்களில் உள்ள வன்முறை அந்தக் கருத்தைத் தாண்டி ஒலித்து, கருத்தின் வீச்சை அடக்கிவிடுகிறது/ திசைதிருப்பிவிடுகிறது. :( //
உண்மை தான். சொல்லவரும் கருத்தை விட, தான் முன்னிலைப்படுத்தப்படவேண்டும் என்று, ஒருவன் நினைக்கும் பொழுது, எழுத்து கட்டுப்பாட்டை மீறி விடுகிறது. புரிந்து கொண்டவர்கள், இதை தவிர்த்துக் கொள்கிறார்கள்.

// இதற்கு முந்தைய பதிவிற்கே பின்னூட்டமிட நினைத்திருந்தேன். தலைப்பில் உடன்பாடில்லாததால் வரவில்லை.. //

அபூமுஹை அவர்கள் அந்தப் பதிவில் பின்னூட்டம் எழுதும் பொழுது, அந்தப் பெண்கள் எந்தத் தவறுமற்ற உத்தமிகளாக இருக்கும் பட்சத்தில், அவர்கள் மீதான அவதூறு உங்கள் மீதே திரும்பக் கூடிய வாய்ப்புகள் இருக்கின்றன என்றார்.

அது இத்தனை சீக்கிரம் பலித்து விடக்கூடும் என்று எண்ணவில்லை.

அந்த சிறிய சறுக்கலுக்காக, ஒரு பெண்ணாகிய உங்களை உள்ளே வரவிடாமல் தடுத்த அந்த தலைப்பிற்காக, நிச்சயமாக வருந்துகிறேன். மன்னிப்பு கோருகிறேன்.

வடுவூர் குமார்,

// ???!!! :-(( //

கேள்வி, வியப்பு / அதிர்ச்சி, வருத்தம்..

நன்றி.

அநாநி,

// Arumayana Pathivu. //

நன்றி.

தமிழன்,

// பாம்பையும் பாப்பானையும் பார்த்தால் பாப்பானை முதலில் அடி என்பது வட இந்திய கிராமத்துப் பழமொழி.//

உங்கள் செய்தி புதிய தகவல் எனக்கு.

பெரியாருக்கும் ராஜாஜிக்கும் உள்ள நட்பு எல்லோரும் அறிந்தது தான். அவர்கள் கருத்தியல் ரீதியாக மட்டும் தான் மோதிக் கொண்டார்கள். அதனால், தான், இயங்கும் தளங்களையும் மீறிய ஒரு நட்பு அவர்களிடையே சாத்தியமாயிற்று.

தகவலுக்கு நன்றிகள்.

விடாதுகருப்பு said...
// நண்பன் ஷாஜி,

நக்கைப் பிடுங்குபடியாக அருமையான பதிவினை நான்குமணி நேரம் செலவழித்து எழுதிய பதிவை ப்ளாக்கர் சொதப்பால் பறிகொடுத்து விட்டேன். விரைவில் சரியான பதிலைத் தருவேன். அதுவரை இந்த பதிவினை அழிக்காமல் இருங்கள்.

நன்றி.//

இதுதான் உங்களுடைய கடைசிப்பதிவு என்பது. ஆட்சேபகரமான எழுத்துகள் இல்லையென்பதால் விட்டு வைத்திருக்கிறேன். இனி, என்னுடைய தளத்தில் வந்து எந்தப் பின்னூட்டமும் இடுவதில்லை என்று நீங்கள் சொல்லியதற்கு நன்றி.

மேலும் உங்களுடைய தளத்தில் எழுதும் பொழுது கூட,

ஒன்று நாக்கைப் பிடுங்கி விட்டு எழுதுங்கள் அல்லது நாக்கைப் பிடுங்க முயற்சிப்பதை விட்டு விட்டு எழுதுங்கள். நான்கு மணி நேரத்துக்கு மேலானாலும் பரவாயில்லை.

பாருங்கள், உளறிக் கொட்டியிருக்கிறீர்கள் - // நக்கைப் பிடுங்கும்படியாக.. .. ..//


சிறில்,


// கோபத்துல வில்லன போட்டுத்தள்ளுறது பழைய சினிமா கத.. இப்பெல்லாம், மன்னிக்கிறது தன் வாழ்வ முன்னேற்றுறதுக்கு அந்தக் கோபத்த பயன்படுத்துறதுதான் கத. //

தன் இன முன்னேற்றத்திற்காக பாடுபடுவது தான் பட்ட அடிகளின் வலிகளை மறக்கச் செய்யும் என்ற உங்கள் வரிகளின் அடிப்படையில் தான் ஆக்கபூர்வ தர்க்கங்கள் நிகழக் கூடும். இனியும் அதுபோன்று நடவாது ஒருபுறம் கண்காணித்துக் கொண்டே, மறுபுறம் தன் இன முன்னேற்றத்திற்காக, பாடுபடுவது தான் இவர்களது உண்மையான சமூக அக்கறையைக் காட்டும். இல்லையென்றால், எல்லாம் சுயதம்பட்டமாக முடிந்து விடும்.


// நம் முன்னோர்கள் ஏமாந்தது பற்றிய கோபமா? ஹ்ம் என்னால நிச்சயம் நம்பமுடியல. //

சிலரால் இன்னமும் லெமூரியக் கண்டத்தின் தேரோடும் வீதிகள், ரதங்கள், படைபரிவாரங்கள் என்ற உலகை விட்டு வெளிவர இயலவில்லை. தாங்கள் படைத்துக் கொண்ட ஒரு கனவுலகில், தங்களை அரசனாகப் பாவித்துக் கொண்டு, ஆட்சி புரிந்து மகிழ்ந்து கொண்டிருக்கும் கனவுகளை இனி ஒரு போதும் விழிக்கச் செய்ய முயற்சிக்கப் போவதில்லை.

மாறாக, இன்றைய உலகின் நிதர்சனங்களுடன் கூடிய வாழ்க்கையில் எவ்வாறு இயங்க வேண்டும் என்பதை பற்றித் தான் என்னால் கவலை கொள்ள இயலும்.

சில நேரங்களில் சில மனிதர்கள்...

நன்றி சிறில், ஆக்க பூர்வமான கருத்துகளுக்கு.

அன்புடன்

நண்பன்

நண்பன் said...

நாகூர் இஸ்மாயில்,

// அந்த கேள்வி இவ்வளவு விளைவுகளை ஏற்படுத்தும் என்று எனக்கு நிச்சயமாக தெரியாது, அந்த கேள்வியே விடாது கருப்பு தங்களுக்கு எழுதிய கடிதத்திற்கான தூண்டுதலாக அமைந்திருக்கிறது. மிகவும் வருந்துகிறேன், விடாது கருப்பின் கடிதத்தில் எனக்கு உடன்பாடு இல்லை, //

இதில் உங்கள் தவறு ஏதும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. Curiosity is never a mistake. அதை நீங்கள் என்னிடம் கேட்டிருந்தாலே நான் உங்களுக்கு அனுப்பி வைத்து இருப்பேன்.

இந்த மனிதர், தொடர்ந்து தொல்லை கொடுப்பார் என்று தெரிந்து கொண்டதினால் தான், எல்லாவற்றையும் திறந்த மனதுடன் விவாதித்துக் கொள்ளலாம் என்று நினைத்தேன். ஆனால், அதற்கு இவர் தகுதியானவர் இல்லை என்று தெரிந்து கொண்டேன்.

என்றாலும், துபாய் பாய்களை இவர் தொடர்ந்து நிந்திப்பார் என்று அறிகிறேன். முன்னர், வேறொரு பெயரில், துபாய் பாய்களை சுருட்டி வைக்க நினைத்தார். முடியவில்லை.

இப்பொழுது மீண்டும் முயன்றிருக்கிறார். அதனால் தான் சொல்கிறேன் - இவருடன் உறவாடுவது இஸ்லாமியர்களுக்கு அழகல்ல. முன்பு ஒரு அனுமானத்தில் இன்னாராகத் தான் இருக்கும் என்று துபாய் பாய்களுக்கு சொன்ன பொழுது, ச்சேச்சே, அப்படி இருக்காது என்றார்கள். இப்பொழுது துபாய் பாய்களெல்லாம் பேஸ்த்து அடித்துப் போய் நிற்கிறார்கள்.

எங்கோ, யாரோ ஒருவனுடன் மோதிக் கொண்டு, சண்டை போட்டுக் கொண்ட இவர், அந்த மர்ம மனிதருக்கு நாங்கள் ஆதரவாக இருப்பதாகத் தப்பர்த்தம் பண்ணிக் கொண்டு குதித்துக் கொண்டிருக்கிறார்.

நாங்கள் கலாச்சார காவலர்கள் இல்லை. யாரோ, எவரோ துபாயில் இருந்து கொண்டு, எதையோ செய்கிறார்கள் என்றால், துபாய் பாய்கள் என்ன செய்வார்கள்.?

துபாய் பாய்கள் சுய சிந்தனை உள்ளவர்கள். பெரியார், திராவிடம், தமிழ் என்று முன்னுரிமை கொடுப்பவர்கள். இஸ்லாம் அவர்களுக்கு இரண்டாம் இடம் தான். திராவிடமே இந்துத்வாவை எதிர்க்கிறது என்பதால், இஸ்லாத்தின் வழியாக இயங்க வேண்டியதில்லை என்ற புரிதலுடன் இயங்கி வருபவர்கள்.

ஒரு அடிப்படை வாதத்தை எதிர்க்க இன்னொரு அடிப்படை வாதத்தை ஆதரிக்கக் கூடாது என்ற முடிவான தீர்மானத்தில் உள்ளவர்கள். ஆனால் அதே சமயம் தனி மனித வெறுப்பை வளர்க்கக் கூடாது என்றும் இருப்பவர்கள்.

அதனாலே அவர்கள் தங்கள் தளங்களில் வெறும் கவிதைகளை மட்டும் எழுதிக் கொள்கிறார்கள். அதுவும் தாங்கள் எழுதுபவற்றை சேமிக்கும் ஒரு இடமாக, மட்டுமே வலைப்பூவை வைத்திருக்கிறார்கள். மறுமொழிகளைக் கூட அனுமதிப்பதில்லை.

இத்தகையவர்களைக் கொச்சைப்படுத்த வேண்டும் என்று இஸ்லாத்தை ஆதரிக்கிறேன் என்ற பம்மாத்தில், வெறுப்பு உமிழும் வார்த்தைகளைக் கொண்டு அனைவரையும் திட்டித் தீர்க்கிறார். இதுவரையிலும் சந்தேகத்தோடு ஊகித்துக் கொண்டிருந்தோம். இப்பொழுது உறுதியாகி இருக்கிறது. முற்றிலுமாக விலக்கி வைக்கப் பட வேண்டியவர்.

நீங்கள் எனக்கு ஒரு அறிவுரை சொன்னீர்கள் - கேட்டுக் கொண்டேன். இப்பொழுது நான் உங்களுக்குச் சொல்வது - இந்த நபரை நம்பாதீர்கள். நீங்கள் கேட்டுக் கொண்டீர்கள் - இந்த விஷயத்தை இத்தோடு விட்டு விடுங்கள் - இறைவனுக்காக என்று. உங்கள் அறிவுரையின் படி, இந்த விஷயம் துபாய் பாய்களைப் பொறுத்த வரைக்கும் சுருட்டி வைக்கப்பட்டு விட்டது.


நன்றி....

அன்புடன்
நன்பன்

தமிழ் செல்வன் said...

//என்னை பார்ப்பனர்கள் இம்சிக்கவில்லை. மாறாக, அவர்களில் சிலர் முன் எடுத்துச் செல்ல விரும்பும் பார்ப்பனீயம் கோட்பாட்டை அடிநாதமாகக் கொண்ட இந்துத்வம் என்ற கருத்தியல் தான் படுத்துகிறது. அந்தக் கருத்தியலை, அதன் தளத்திலே நின்று தான் சந்திக்க வேண்டுமே தவிர, வீண் ஜம்பமாக, அழித்தொழிப்பு கொள்கையெல்லாம் ஆதரிக்கப் போவதில்லை.//

நண்பன் ஷாஜஹான் இதை தான் நண்பர் கருப்புவும் கூறுகிறார்.

இந்துத்துவ கருத்தியலை அதன் தளத்திலே நின்று தான் சந்திக்க வேண்டும்.

அதை விடுத்து வீண் ஜம்பம் போடுவது நீங்கள் தானே?

இந்துத்துவத்தின் கருத்தியல் என்ன? அது இந்தியாவில் என்ன செய்து கொண்டிருக்கின்றது? உங்களின் கருத்துப்படி இந்துத்துவத்தின் களத்தில் அதனை நேரிடுவது வெறும் வாய் சவடால் மூலமா? அது இந்துத்துவத்தின் கருத்தியல் அல்லவே?

இந்துத்துவம் வெறும் வாய்சவடாலோடு நின்று விட்டால் நீங்கள் கூறுவது போன்று அழித்தொழிப்பு வேலையெல்லாம் வேண்டாம்.

ஆனால் இந்துத்துவத்தின் கருத்தியலே அழித்தொழிப்பு தானே? அதனை வெறும் வாய்சவடால் கொண்டு நேரிடுவதா அதன் தளத்தில் அதனை நேரிடுவதன் லட்சணம்.

சும்மா கிச்சு கிச்சு மூட்டாதீங்க நண்பன்.

Anonymous said...
This comment has been removed by a blog administrator.

நண்பர்கள் சொல்கிறார்கள்

CSM - உலகச் செய்திகள்

GF - உலகச் செய்திகள்