"எழுத்துகளையும் தாண்டி எனக்கென்று ஒரு உலகம் உண்டு; நான் எழுதுபவற்றை மட்டுமே வைத்துக் கொண்டு, என்னை எடை போடுபவர்களை எப்பொழுதும் என் எண்ணங்கள் வியப்பில் ஆழ்த்திக் கொண்டே இருக்கும்....."
- நண்பன்

Thursday, March 08, 2007

அபூமுஹையின் பதிவிற்கான பின்னூட்டம்

குரான் வசனம் 2:187 - வார்த்தைக்கு வார்த்தை மொழி பெயர்ப்பு இதோ:

(1)


இதில் வரக்கூடிய ரஃபத் என்ற சொல்லிற்கான விளக்கம்:

கவனியுங்கள் - ரஃபத் என்ற சொல்லிற்கான பொருளை. அது உடலுறவைக் குறிக்கும் நேரடியான சொல் அல்ல. அது, ஒரு கணவன் தன் விருப்பத்திற்கு தன் மனைவியை உடன்படச்செய்யும் பொருட்டு செய்யக்கூடிய, பேசக்கூடிய, குறிப்பால் உணர்த்தக் கூடிய செயல்கள் அனைத்தையும் குறிக்கும். மார்க்க அறிஞர்களே, ரஃபத் என்ற அந்த சொல்லை, இந்த இடத்தில் கணவன் விருப்பம் என்பது தாம்பத்ய உறவாகத் தான் இருக்க வேண்டும் என்று விளக்கமளித்துள்ளனர்.

இந்த மொழி பெயர்ப்பை எடுத்து உங்கள் முன் வைக்கக் காரணம் - இஸ்லாம் ஏற்படுத்திய வழிமுறைகளைப் பற்றிய தெளிவு எல்லோருக்கும் வேண்டுமென்பதற்காகத் தான். தன் விருப்பத்திற்கு தன்னிச்சையாக மனைவியை உடன்படச் செய்து தான், கணவன் உறவு கொள்ள வேண்டுமே தவிர, வற்புறுத்தியோ அல்லது பலாத்காரம் செய்தோ அல்ல. The husband is not allowed to rape his wife. இஸ்லாத்தில் அனுமதிக்கப்படாத விசயம் அது.

இதை முக்கியமாகக் குறிப்பிடுவதன் நோக்கம் - இந்தப் பதிவை எழுதிய மாற்று மத அன்பர் தாம்பத்ய உறவை கொச்சைப்படுத்தும் விதத்தில் எழுதி உள்ளார். அறியாமை தான் காரணம். இஸ்லாம் எந்த ஒரு விஷயத்திலும் புனித பூச்சு வேலைகள் செய்வதில்லை. வாழ்க்கையை அதன் இயல்பை ஒட்டி, எவ்வாறு வாழ்வது என்பதைத் தான் இஸ்லாம் போதிக்கிறது.

இஸ்லாத்தில் துறவறம் என்பதே கிடையாது. பாலுணர்ச்சி என்பது மனிதனின் இயற்கைத் தேவை. அதை அடக்கி ஆளப் போகிறோம் என்பதெல்லாம் பிரம்மையை கிளப்பும் ஒரு விஷயமே தவிர, கடைப்பிடித்தலில் தவறுகள் நேரக்கூடிய அபாயம் நிறைந்த பாதை. துறவறம் பூண்டவர்களின் கதி என்ன என்பது, சாமியார்களைப் பற்றி தினம் தினம் வரக்கூடிய செய்திகளில் இருந்து அறிந்து கொள்ளலாம். உலகமறிந்த குருக்கள் முதல் கடுந்தவம் புரிந்த முனிவர்கள் வரை இறுதியில் இந்த இச்சைக்குப் பலியாகியே இருக்கின்றனர். ஒரு விதண்டாவாததிற்கு வேண்டுமானால், தர்க்கம் செய்யலாமே தவிர, நடைமுறை சாத்தியக் கூறுகள் நிறைந்த பாதை அல்ல, பிரம்மச்சாரியம்.

இஸ்லாம் இந்த மாதிரி பித்தலாட்டங்களைச் செய்யச் சொல்லவில்லை, போதிக்கவில்லை. மாறாக அனைவரும் திருமணம் செய்து, இல்லற வாழ்க்கையை மேற்கொள்வதையே வற்புறுத்துகிறது

(2)


ஆடைகளைப் பற்றிய வசனப் பகுதி இதோ:

(3)


குரான் வசனங்கள் ஒரே நாளில் இறக்கி அருளப்படவில்லை. பல வருடங்களாக, தேவைகளுக்கேற்ப சிறிது சிறிதாக இறக்கி அருளப்பட்டது. முதன் முதலில் நோன்பு வைத்தவர்கள் அது குறித்து பலவகையான தவறான கருத்துகளைக் கொண்டிருந்தனர். புனித ரமலான் என்பதால், மனைவியுடன் உறவு வைத்துக் கொள்வது தவறு என்ற எண்ணமும், எப்பொழுது உண்பது, எப்பொழுது நோன்பு வைப்பது போன்ற குழப்பங்களும் இருந்தது. இது சராசரி மனிதர்களுக்கு ஏற்படக் கூடிய குழப்பங்களே. அதன் தீர்வாக வந்தது தான் இந்தக் குரான் வசனம். மனைவியுடனான தாம்பத்ய உறவு எந்த வகையிலும் ரமலான் மாதத்தின் புனிதத்திற்கு கேடு விளவிப்பதில்லை. தாராளமாக நீங்கள் உங்கள் மனைவியுடன் இணைந்து கொள்ளுங்கள் என்று தான் கூறுகிறது குரான். அதாவது இறைவசனங்கள்.

Its a down-to-earth advice.

இது சிலருக்கு ஆபாசமாகத் தெரிகிறதா? இன்னமும் நம்மிடையே பலருக்கு, தாம்பத்ய உறவு என்றாலே ஆபாசம் தான் மனதில் தோன்றுகிறதே தவிர, அது ஒரு இயல்பான, இயற்கையான, மனித இன பாதுகாப்பிற்குத் தேவையான ஒரு விஷயமாகத் தோன்றவில்லை. காரணம் - தாம்பத்ய உறவென்றால் தவறென்றே புத்தி புகட்டப்பட்டு வளர்க்கப் பட்ட கட்டுப் பெட்டித்தனம். The Victorian Values!!! இது அவரின் தனிப்பட்ட மன வளர்ச்சியின்மையைக் காட்டுகிறதே தவிர, வேறில்லை. எத்தனை புதிரா, புனிதமா வந்தால் கூட, இந்த விஷயத்தில் இவர்களால் தெளிவு பெற முடியாது.

மற்ற குரான் வசன மொழி பெயர்ப்புகள் இதோ:

(4)
(5)


(6)

(7)(8)


என்னிடமுள்ள ஆறு குரான்களிலிருந்து, மொழி பெயர்ப்பைக் கொடுத்து விட்டேன். (குரானின் விவரங்கள் கீழே வரும். வாசிக்க விருப்பமுள்ளவர்களுக்காக)

இணையத்திலிருந்து, கீழே உள்ள ஒரு மொழி பெயர்ப்பைக் காட்டியுள்ளார்.

002:187 Rashad
Permitted for you is sexual intercourse with your wives during the nights of fasting. They are the keepers of your secrets, and you are the keepers
of their secrets. GOD knew that you used to betray your souls, and He has redeemed you, and has pardoned you. Henceforth, you may have
intercourse with them, seeking what GOD has permitted for you. You may eat and drink until the white thread of light becomes distinguishable
from the dark thread of night at dawn. Then, you shall fast until sunset. Sexual intercourse is prohibited if you decide to retreat to the masjid
(during the last ten days of Ramadan). These are GOD's laws; you shall not transgress them. GOD thus clarifies His revelations for the people,
that they may attain salvation.

எல்லா மொழி பெயர்ப்பாளர்களும் ஒரே நடையைக் கையாள்வார்களா என்பது சந்தேகமே. ஒவ்வொருவருக்கும் ஒரு பாணி இருக்கும் ஒரு நடை இருக்கும். மூலப் பொருள் மாறாதிருக்கும் வரை - அவர்களின் சொந்தப் புலமையைக் காட்டிக் கொள்வதில் தவறில்லை.

இங்கே ஒரு அறிஞர் cover என்கிறார். மற்றொரு அறிஞர் raiment என்கிறார். இன்னும்மொரு அறிஞர், secret என்கிறார். ஆனால் சாராம்சம் எல்லாவற்றிலும் ஒன்றாக இருக்கக் காணலாம். ஒருவருக்கொருவர் ஆடையாக இருப்பதென்பது ஒருவரை மற்றவர் பாதுகாத்தல் என்ற பொருளில் தான் வருகிறது. தாம்பத்ய உறவென்பது, மிகவும் நெருங்கிய கணவன் மனைவிக்குள்ளே ரகசியமாகக் காக்கப்பட வேண்டிய உறவு. தன் துணையுடன், உடலாலும், உள்ளத்தாலும் இணைந்து இயங்கும் உறவை ஒரு மனிதன் மூன்றாவது ஆளுக்குச் சொல்வது என்பது கூடாது. இதைத் தான் ரகசியம் காத்தல் என்று சொல்கிறார். ஒருவர் மற்றவரின் ரகசியத்தைக் காத்தல்.

இவர் மட்டும் ரகசியம் என்று கூறி விட, மற்றவர்கள் ஏன், ஆடை என்று கூறுகிறார்கள் என்றால், அந்த அரபு வார்த்தையின் நேரிடையான மொழி பெயர்ப்பு அது. பொருள் விளக்கம் தனியாகக் கொடுக்கிறார்கள். இணையத்தில் காணப்படும் குரானில் காண்பவை எல்லாம் வெறும் மொழி பெயர்ப்பு மட்டுமே. அதற்கான விளக்க உரைகள், குறிப்புகள், வசனம் வெளியான இடம், காலம், அதன் பின்னணி என்ற பல விபரங்கள் புத்தகங்களில் தான் கிடைக்கும். குரானை வாசிப்பதற்கு இவை அனைத்தும் முக்கியம். இவை இல்லாமல், குரானை வாசித்து விட்டு உரையாடி புண்ணியமில்லை.

சரி, இப்பொழுது இந்த ஆடை என்ற குறியீட்டின் தாத்பார்யம் என்ன?

ஆடையின் பயன் மறைத்தல், பாதுகாத்தல் இரண்டுமே தான். உடைகள் மனிதனின் பாலியியல் உறுப்புகளை மட்டும் மறைத்தல் அல்ல. அது பாதுகாப்பும் தருகின்றது - இயற்கையிலிருந்து. குளிர், வெயில், மழை, காற்று போன்றவற்றிலுமிருந்து பாதுகாப்பது போல். மனிதனின் பாலியியல் உறுப்புகளையும் மறைத்துப் பாதுகாக்கிறது. மனிதனின் நிர்வாணத்தைப் பிறருக்குக் காட்டாது பாதுகாக்கிறது. இந்த ஆடைகளுக்குப் பின்னால், மனித உடலின் ரகசியங்கள் அடங்கிக் கிடக்கின்றன.

கணவன், மனைவி, இருவரும் ஒருவருக்கொருவர் ஆடையாக இருப்பதென்பது, அவர்கள் உரிமை பெற்ற நெருக்கத்தினால், தெரிந்து கொண்டதை வெளியில் சொல்லக் கூடாது. இது உடல் சார்ந்தது மட்டுமல்ல. மற்ற ரகசியங்களாகவும் கூட இருக்கலாம். எதுவானாலும், ஒருவர் மற்றவரை நம்பி தன்னை ஒப்படைத்துக் கொள்ளும் பொழுது, அவர்களின் அந்யோன்யத்தை பறைசாற்றாமல், எப்படி ஒரு ஆடை உங்கள் மானத்தைப் பிறரது பார்வையிலிருந்து தடுத்து வைக்கிறதோ, அந்த அளவிலான, பாதுகாப்பைத் தரும் உறவாக அமைய வேண்டும் என்ற பொருளில் அமையப் பெற்ற வசனம்.

'ஆடையாக உன்னை உடுத்துக் கொள்வேன்..' என்று எத்தனையோ திரை இசை பாடல்களில், புதுகவிதைகளில் கவிஞர்கள் எழுதித் தள்ளுகிறார்கள். அதையெல்லாம் அறியாதவர்களா இவர்கள்? இவர்களுக்கெப்படி தகுதி வந்தது - குரானை விமர்சிக்க?

மற்றொரு விதத்திலும் இந்த ஆடை என்ற சொல்லுக்குப் பொருள் கொள்ளலாம் 'அதாவது, ஒரு கணவன், மனைவி என்ற ஆடையை அணிந்து செல்லும் பொழுது, எங்கிருந்தாலும், மற்ற பெண்களை நாடாது, தவறு செய்யாது இருப்பான். அதே போல மனைவியும் கணவன் என்ற ஆடையினுள் பாதுகாப்பாக இருப்பாள். இந்த ஆடையை சற்றே கழற்றி வைக்க நேரிட்டால், துணையல்லாத ஒருவருடன் தொடர்பு கொள்ள நேர்ந்தால், அங்கு முதலில் கொட்டப்படுவது - இயலாமை நிறைந்த தன் வாழ்க்கைத் துணையின் பலவீனங்கள் தான். ரகசியங்கள் வெளிப்படும் பொழுது, அந்த ரகசியங்களைக் கொண்டு, பின்னர் மிரட்டப்பட்டு, நிரந்தரமாக அடிமையாகிவிடக்கூடும், துரோகம் இழைக்கும் அந்த துணை.

அதனால் தான் ரகசியங்களைக் காப்பீராக என்கின்றது குரான். ரகசியங்கள் எப்படி காக்கப்பட வேண்டும். ஆடையைப் போல், உடலை விட்டு எப்பொழுதும் விலகாது இருப்பதைப் போல்.

நெருக்கமான, பாதுகாப்பான ஆடைகளாக கணவன் மனைவி இருக்க வேண்டும் - வாழ்க்கை அமைய வேண்டும்.

கவித்துவமான வரிகள்.


குரான் விபரங்கள்:

1, 3 - The Holy Quran - Bait ul Quran, Urdu Bazar, Karachi, Pakistan. Ph: 2630744-2633342 Email: alquran@digicom.net.pk
2, 7 - Ma'ariful Quran, Maulana Mufti Muhammad Shafi, Maktaba-e-Darul-'Uloom, Karachi -14, Pakistan. Ph: 5042280, 311217, 5040923
4. - Towards Understanding the Quran (Tafhim Al-Quran) Sayyid Abul A'Laa Mawdudi, The Islamic Foundation, 225, London Road, Leicester LEZ IZE, UK.
5 - திருக் குர்ஆன், இஸ்லாமிய நிறுவனம் ட்ரஸ்ட், IFT காம்ப்ளாக்ஸ்,
138/78 பெரம்பூர் சாலை, சென்னை 600 012.
6. திருக் குர் ஆன், Moon publications, 2nd floor, 3, Post Office Street, Mannady, Chennai - 600 001
8. The meaning of the Holy Quran - Mohammed Marmaduke Pickthall, Universal Book Stall, 5 Ansari Road, New Delhi 2

12 comments:

அபூ முஹை said...

நண்பன்,

அபாரமாக விளக்கியிருக்கிறீர்கள்.

கணவன், மனைவியின் தாம்பத்திய உறவை நண்பர்கள் கொச்சைப்படுத்தினாலும் ''அல்லாஹ் உண்மையைச் சொல்லவும், உதாரணம் சொல்லவும் வெட்கப்பட மாட்டான்''

எனக்கும் சில விளக்கங்கள் எழுதும் எண்ணமிருந்தது, அது 002:0187வது வசனத்தில் ஆடை என்று சொல்லப்பட்டிருக்கிறதா? இல்லையா? என்பதை நண்பர்கள் எதிர் கருத்துத் தெரிவித்தபின் அடுத்த கட்டமாக வைத்துக் கொள்ளலாமென்றிருந்தேன் நேரம் கிடைக்கும்போது எழுதுவேன்.

மீண்டும் இப்பதிவு,

''மாண்பு மிகு'' பதிவு என்று

அன்புடன்,
அபூ முஹை

Naina said...

எல்லாம் வல்ல ஏக இறையோனின் திருநாமத்தால் எழுதுகிறேன்.
அன்பு சகோதரர் நண்பன் அவர்களுக்கு,
இஸ்லாமிய வாழ்வியலை ஏற்று பின் குர்ஆனை படித்ததால் இஸ்லாமிய கொள்கையிலிருந்து வெளியேறியதாக கூறும் சகோதரர் ஏமாறாதவன், முதலில் "ஆடை" என்னும் மொழி பெயர்ப்பு ஏதோ மக்களை ஏமாற்ற செய்யப்பட்ட சதி திட்டம் போல சித்தரித்தார். குர்ஆனின் மூலம் அரபி மொழி. எனவே குர்ஆன் மொழி பெயர்ப்புகளில் தவறுகளை சுட்டி காட்ட வேண்டும் என்றால் அரபு மூலத்திலிருந்து காட்ட வேண்டும் என்பதை அறியாமல், மற்றொரு மொழி பெயர்ப்பிலிருந்து தமிழ் மொழி பெயர்ப்பை தவறாக சித்தரித்ததால் மாட்டி கொண்டார். இதனடிப்படையில், அவரை நான் கேட்டு கொண்டேன், முந்தைய அவரது இஸ்லாமிய ஆய்வை மீண்டும் மறுபரீசீலனை செய்து பாருங்கள். "ஆடை"யை தவறு என்று பிழையாக சுட்டி காட்டிய மாதிரி, முந்தைய ஆய்விலும் தவறுகள் ஏற்பட்டுள்ளது என்று கூறினேன்.
அடுத்து "ஆடை" என்று உவமானமாக இறைவன் கூறுவதன் அர்த்தம் ஏமாறாதவனுக்கு இவ்வாறு தான் புரிகிறதாம்.
//"ஆடை" என்பது ஆண், பெண் உடல் சம்பந்தப்பட்ட நெருக்கத்தையே குறிக்கிறது என்பதே என் தெளிவு.//

அதற்கு நான், "ஆடை" என்ற உவமானத்தை இன்னும் எவ்வாறெல்லாம் அணுகலாம் என்று விளக்கியிருந்தேன். //ஆடை என்பது ஒரு மனிதனின் மானத்தை பாதுகாக்கிறது, தட்ப வெட்ப சூழ்நிலைகளிலிருந்து பாதுகாக்கிறது, கண்ணியத்தையும் மரியாதையையும் பெற்று தருகிறது. இப்படி என்னென்ன பண்புகளை ஆடை கொண்டுள்ளதோ, அது போன்ற பண்புகளையும் தாம்பத்திய உறவு கொண்டுள்ளது என்று விளக்குவதன் நோக்கமே, "ஆடை" என்று இந்த வசனத்தில் கூறப்பட்டதன் நோக்கமாகும். இவ்வளவு தான் எனது அறிவிற்கு புலனானது. இன்னும் கூட விளக்கங்கள் இருக்கலாம். நான் மேலே "ஆடை"க்கு கொடுத்த விளக்கங்கள், அந்த இடத்திற்கு பொறுத்த மற்றதாக இருந்தால் எறிந்து விடலாம். பொறுத்தமானதாக இருக்கும்பட்சத்தில், ஏற்றுக் கொள்வது தானே பண்பாகும்? அல்லது முரட்டு பிடிவாதாமாக இருக்க எண்ணமா?//

இப்போது, உங்களது பதிவில் இன்னுமொரு சிறந்த விளக்கத்தை "ஆடை"க்கு கொடுத்திருக்கிறீர்கள். //'அதாவது, ஒரு கணவன், மனைவி என்ற ஆடையை அணிந்து செல்லும் பொழுது, எங்கிருந்தாலும், மற்ற பெண்களை நாடாது, தவறு செய்யாது இருப்பான். அதே போல மனைவியும் கணவன் என்ற ஆடையினுள் பாதுகாப்பாக இருப்பாள்//
இன்னும் பல சிறந்த விளக்கங்கள் கூட நம் அறிவிற்க்கு தற்போது புலப்படாமல் இருக்கும். பின்னர் இறைவன் நாடினால், மற்ற சகோதரர்களால் விளக்கப்படுத்த பட கூடும்.
இன்னும் சகோதரர் அபூமுஹை அவர்களின் பதிவுகளும் சிந்தனையை தூண்டும் விதமாகவும், நிதாமான, நளினமான வார்த்தைகளாலும் கொடுக்கிறார். பாராட்டுக்கள். இறைவன் மனிதர்களுக்கு நேர்வழி காட்ட பிராத்திக்கிறேன்.

எனது கருத்துக்களில் உண்மையிருக்குமானால், புழனைத்தும் ஏக இறைவன் ஒருவனுக்கே! தவறுகள் இருந்தால் அது எனது சிறுமதியால் ஏற்பட்ட தவறாகும். அந்த தவறை சுட்டிகாட்டும் பட்சத்தில், உண்மையிருந்தால் என்னை திருத்தி கொள்வேன்.

நன்றி. வாழ்த்துக்களுடன்
சகோதரன் நெய்னா முஹம்மது

Naina said...
This comment has been removed by a blog administrator.
நண்பன் said...

அன்பின் அபூமுஹை,

// மீண்டும் இப்பதிவு,

''மாண்பு மிகு'' பதிவு என்று

அன்புடன்,
அபூ முஹை //

உங்களின் இந்த வார்த்தைகளால், இன்று நான் கண்ணியம் பெற்றேன். மிக்க மகிழ்ச்சியாக உள்ளது. நீங்கள் எழுதுவதாக நினைத்தவற்றையும் எழுதுங்கள்.

வேறு வேறு மொழி நடைகளில் ஒரு கருத்து வெளியாகும் பொழுது, அதை வாசிப்பது ஒரு தனி சுவை தான்.

அன்புடன்,
நண்பன்

நண்பன் said...

Naina said...

//இன்னும் பல சிறந்த விளக்கங்கள் கூட நம் அறிவிற்க்கு தற்போது புலப்படாமல் இருக்கும்.//

அன்பின் நைனா,

மீண்டும் மீண்டும் வாசிப்பதும் அதன் பொருள் விளங்க முயற்சி எடுத்துக் கொள்வதாலும் தான் ஒரு கருத்து மேம்படுகிறது. இத்துடன் வாழ்வியல் அனுபவங்களும் சேர்ந்து கொள்ளும் பொழுது, அந்தக் கருத்தாக்கம் இன்னும் விரிவு பெறுகிறது.

ஏமாறாதவன், ஒரு உண்மையான விமர்சகன் கிடையாது. அவருக்கு அரபு மொழி தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அது ஒரு குறையுமில்லை. ஆனால், ஒரு கருத்தை அதன் நேரடி வார்த்தைகளைக் கொண்டு, வாதம் செய்வது இக்கட்டில் கொண்டு விடும். இது குரானுக்கு மட்டுமல்ல, மற்ற சமய நூல்களுக்கும் பொருந்தும்.

ஒன்று, உட்பொருளை அறியாது பேசும் அறிவிலியாக இருக்க வேண்டும். அல்லது, தெரிந்து கொண்டே பேசும் மோசடியாளாராக இருக்க வேண்டும். இன்று, இஸ்லாத்தின் மீது விமர்சனம் வைப்பவர்கள் இந்த இரண்டாவது தளத்தில் அதிகம் இருக்கிறார்கள் என்பது உண்மை.

முதலாவது தளத்தில், பல இஸ்லாமியர்களே கூட இருக்கிறார்கள் என்பதும் உண்மை. மோசடியாளர்களின் கருத்திற்கு எளிதில் பலியாகிவிடக் கூடிய மனநிலையில் இந்த இஸ்லாமியர்கள் இருக்கிறார்கள். இவர்களுக்காகத் தான் நாம் எழுத வேண்டுமே தவிர, மோசடிகளுக்காக அல்ல.

நன்றி.

சுவனப்பிரியன் said...

அழகிய பதிவு!

வாழ்த்துக்கள் நண்பன்!

இறை நேசன் said...

நண்பனிடமிருந்து எதிர்பார்த்திராத அற்புதமான பதிவு.

அல்ஹம்துலில்லாஹ்(அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்)!

வாசிப்பின் எல்லையைத் தொட முயற்சி செய்வது உங்களின் சமீபத்திய பதிவுகளிலிருந்து அறிய முடிகிறது. நானும் ஒரு புத்தகப் புழுவே. ஆனால் உங்கள் அளவுக்கு என்று கூற இயலாது.

மிக அருமையாக (ஆடை, உடலுறவு என தமிழில் படித்த சில வசனங்களின் மொழிபெயர்ப்புக்கு)நுண்ணிய விளக்கங்கள் கொடுத்திருப்பது மேலும் சிந்திக்க வைக்கின்றது.

தொடர்ந்து எழுதுங்கள். வாழ்த்துக்கள்.

அன்புடன்
இறை நேசன்.

நண்பன் said...

இறை நேசன்,

வாருங்கள்.

// நண்பனிடமிருந்து எதிர்பார்த்திராத அற்புதமான பதிவு.//

எல்லோருடைய எதிர்பார்ப்புகளையும் நிறைவேறும்படி இயங்க இறைவன் ஒருவனுக்குத் தான் தகுதியுண்டு.

மற்றவர்களால் எல்லோரையும் எல்லா சமயத்தும் திருப்தியுற இயங்க இயலாது. அந்த சமயத்தில், தன் சூழலிலே இருந்து தான், அவனால் இயங்க முடியும். குறைந்த பட்சம் தன் மனசாட்சியாவது அமைதியுறும் வண்ணம் இயங்க முடிந்தாலே, அதுவே ஒரு வெற்றி தான் - மனிதனைப் பொறுத்த வரைக்கும்.

புத்தகங்கள் வாசிப்பது நீண்ட நாளையப் பழக்கம். இப்பொழுது தான் அது இஸ்லாம் நோக்கித் திரும்பி இருக்கிறது. சில நண்பர்களுக்காக விடை தேடி அலைந்த பொழுது, ஒன்று இரண்டு, மூன்று என தொடங்கி, ஆறு குரான்கள் வாங்கிவிட்டேன். இனியும் வாங்குவேன் - வித்தியாசமான முறையில், விளக்கங்களோ, குறிப்புகளோ அல்லது எந்த வகையிலாவது வித்தியாசமாக அறிவூட்டும் வகையில் அமைக்கப் பெற்ற குரான் என்றால் இனியும் வாங்குவேன்.

நிறைய புத்தகங்கள் வாங்கினாலும் அதை வெளியில் சொல்வதில்லை. எந்த மாதிரியான புத்தகங்களை நான் வாசிக்கிறேன் என்பதை ஏனோ சொல்லிக் கொள்வதில் விருப்பமில்லை.

குரான் பற்றி தவறாக ஒரு மோசடி பேர்வழி எல்லாம் அறிந்தவன் நான் என்ற மமதையில் எழுதியதால், அந்த நபருக்கு ஒரு ஆதாரம் தர வேண்டும் என்பதற்காக அந்த புத்தகங்களிலிருந்து புகைப்படம் எடுத்து வெளியிட வேண்டியதாயிற்று.

மீண்டும்,

// நண்பனிடமிருந்து எதிர்பார்த்திராத அற்புதமான பதிவு.//

நீங்கள் என்ன எதிர்பார்த்தீர்கள் என்று எனக்குத் தெரியாது. நான் பெரிய ஆன்மீகவாதி இல்லை. ஆனால், சில அடிப்படைகளைத் தெளிவாக உணர்ந்தவன்.

என் தளத்தில் என்னைப் பற்றி, ஒரு சிறு குறிப்பு உண்டு. "எழுத்துகளையும் தாண்டி எனக்கென்று ஒரு உலகம் உண்டு. நான் எழுதுபவற்றை மட்டும் வைத்துக் கொண்டு, என்னை எடை போடுபவர்களை எப்பொழுதும் என் எண்ணங்கள் வியப்பில் ஆழ்த்திக் கொண்டே இருக்கும். "

ஏனோ, யாருமே அதை கண்டு கொள்ளவில்லை. ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாதிரியான பாதைகளில் பயணிக்கிறார்கள். சிலருக்குத் தினமும் சென்று வரும் பழக்கமான பாதையைப் பாதுகாப்பாக உணர்கிறார்கள். சிலருக்கு தினமும் புதிய புதிய வழித்தடங்கள் தேவை. அவை ஆபத்து நிறைந்ததானாலும். சிலருக்கு அடுத்தவர் முதுகில் சவாரி. எது எப்படியானாலும் பயணம் தன் இலக்கை அடைந்தால் சரிதானே!

மீண்டும் ஒரு முறை,

தவறாக எண்ணிக் கொண்டு, முன்முடிவுகளோடு, யாராவது அணுகினால், என்னால் சீறிப்பாயவும் முடியும். சீண்டாத பொழுது, அமைதியாக சலசலப்பின்றி பயணத்தைத் தொடரவும் முடியும்.

"எழுத்துகளையும் தாண்டி எனக்கென்று ஒரு உலகம் உண்டு. நான் எழுதுபவற்றை மட்டும் வைத்துக் கொண்டு, என்னை எடை போடுபவர்களை எப்பொழுதும் என் எண்ணங்கள் வியப்பில் ஆழ்த்திக் கொண்டே இருக்கும். "

எதிர்பாராத நேரத்தில், எதிர்பாராத ஆச்சரியங்கள்.

அன்புடன்
நண்பன்

நண்பன் said...

// சுவனப்பிரியன் said...
அழகிய பதிவு!

வாழ்த்துக்கள் நண்பன்!
//

மிக்க நன்றியும், தங்கள் வருகையினால் மகிழ்ச்சியும்.

அன்புடன்
நண்பன்

podakkudian said...

//மற்றொரு விதத்திலும் இந்த ஆடை என்ற சொல்லுக்குப் பொருள் கொள்ளலாம் 'அதாவது, ஒரு கணவன், மனைவி என்ற ஆடையை அணிந்து செல்லும் பொழுது, எங்கிருந்தாலும், மற்ற பெண்களை நாடாது, தவறு செய்யாது இருப்பான். அதே போல மனைவியும் கணவன் என்ற ஆடையினுள் பாதுகாப்பாக இருப்பாள். இந்த ஆடையை சற்றே கழற்றி வைக்க நேரிட்டால், துணையல்லாத ஒருவருடன் தொடர்பு கொள்ள நேர்ந்தால், அங்கு முதலில் கொட்டப்படுவது - இயலாமை நிறைந்த தன் வாழ்க்கைத் துணையின் பலவீனங்கள் தான். ரகசியங்கள் வெளிப்படும் பொழுது, அந்த ரகசியங்களைக் கொண்டு, பின்னர் மிரட்டப்பட்டு, நிரந்தரமாக அடிமையாகிவிடக்கூடும், துரோகம் இழைக்கும் அந்த துணை.

அதனால் தான் ரகசியங்களைக் காப்பீராக என்கின்றது குரான். ரகசியங்கள் எப்படி காக்கப்பட வேண்டும். ஆடையைப் போல், உடலை விட்டு எப்பொழுதும் விலகாது இருப்பதைப் போல்.

நெருக்கமான, பாதுகாப்பான ஆடைகளாக கணவன் மனைவி இருக்க வேண்டும் - வாழ்க்கை அமைய வேண்டும்.

கவித்துவமான வரிகள்.//

மிக நன்று தொடருங்கள்

பொதக்குடியான்

asalamone said...

நண்பனுக்கு
வாழ்த்துகள் அன்புடன்.

உங்களது விமர்சனம்கள் நன்றாக இருந்தது.

எல்லா புகழும் இறைவனுக்கே

நண்பன் said...

asalamone, podakkudian....

வாருங்கள்.

உடல் நலக்குறைவினால் உடன் பதில் எழுத தாமதம்.

மிக்க நன்றி, உங்கள் வருகைக்கும், பின்னூட்டத்திற்கும்...

அன்புடன்
நண்பன்

நண்பர்கள் சொல்கிறார்கள்

CSM - உலகச் செய்திகள்

GF - உலகச் செய்திகள்