"எழுத்துகளையும் தாண்டி எனக்கென்று ஒரு உலகம் உண்டு; நான் எழுதுபவற்றை மட்டுமே வைத்துக் கொண்டு, என்னை எடை போடுபவர்களை எப்பொழுதும் என் எண்ணங்கள் வியப்பில் ஆழ்த்திக் கொண்டே இருக்கும்....."
- நண்பன்

Friday, March 02, 2007

வாடகைத் தாய் - மற்றொரு கோணம்

தமிழ் சர்க்கிளின் சிந்தனையைத் தூண்டிய தாய்மையை விலை பேசும் உலகமயம் என்ற அருமையான ஒரு பதிவு.

அதன் மற்றொரு கோணம் தான் இது.

எந்த ஒரு நல்ல விளைவும், யார் கையில் போய்ச் சேருகிறதோ, அதைப் பொறுத்தே, அதன் பயன்பாடும், நன்மைகளும் தீமைகளும் அமைகின்றன. அதே போல் தான், குழந்தை பெற்றுக் கொள்ள வாய்ப்பில்லாத தம்பதியினருக்கு, ஒரு நல்வரமாக அமைய வேண்டிய ஒரு அறிவியல் படைப்பு, இன்று வியாபாரிகளின் கையில் போய்ச்சேர்ந்து, பெண்களைச் சுரண்டிப் பிழைக்கும் வஞ்சகர்களுக்கு ஒரு தொழில் வாய்ப்பாகப் போய்விட்டது.

வாடகைத் தாய், உண்மையான தேவையுள்ளவர்களுக்கு அனுமதிக்கப்பட வேண்டிய விஷயம். இப்பொழுதும், அநேகமாக குழந்தையற்ற தம்பதிகளே இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ள முனையும் பட்சத்தில், வாடகைத் தாய்கள் கண்டிப்பாகத் தேவைப்படத் தான் செய்வார்கள். ஆகையால், இதை முற்றிலுமாகத் தடுக்க வேண்டும் என முயல்வதை விட, அதை சரியான சட்ட திட்டங்களுடன் முறைப்படுத்த வேண்டும் என்பதே சரியாக இருக்கும்.

இப்பொழுது வாடகைத் தாய் என்று பெயரிட்டு அழைப்பதை, பழைய காலத்தில், இத்தேவைகளுக்காகத் திருமணமே செய்து கொண்டார்கள். ஆனால், அவ்வாறு செய்வதால், வாழ்நாள் முழுவதும், ஒரு பெண்ணிற்குத் தேவையான செலவுகள் அனைத்தையும் கொடுக்க வேண்டும், அத்துடன் அப்பெண்ணிற்குரிய சமூக அந்தஸ்தையும் கணவனே கொடுக்க வேண்டும். அதனால் திருமணம் என்ற அந்தஸ்தை, மரியாதையைப் பெண்ணிற்குக் கொடுக்காமலே, அவளது உடலால் விளையக்கூடிய நன்மையைப் பெற்றுக் கொள்ள முடியும் கொஞ்சம் காசு கொடுத்து என்னும் பொழுது, அது அப்பட்டமான சுரண்டல். அதை விட, அந்தப் பெண்ணைத் திருமணம் செய்து கொண்டே விடுவது உத்தமமாகும்.

இரண்டாவதாக, ஒரு ஆண் தகுதியுள்ளவனாக இருந்து, அவனது மனைவி தகுதியற்றவளாக இருக்கையில் தான் ஆண்கள் இந்த வாடகைத் தாய் முறையை விரும்பி ஏற்றுக் கொள்கிறார்கள். இதுவே, ஆண் தகுதியற்றவனாக இருந்து, மனைவி, தகுதியுடையவளாக இருக்கையில், ஒரு வாடகைத் தந்தையை - விந்து தானம் செய்யும் தந்தையை ஏற்றுக் கொள்வார்களா? நிச்சயம் மாட்டார்கள்!!! அதாவது, ஆண்கள் தங்களுக்குச் சௌகரியப்படும் பொழுது இந்த வாடகைத் தாய் முறைமைய ஏற்றுக் கொள்வார்கள் - காரணம் அது அவர்களது ஆண்மையை திருப்திப் படுத்தும் வகையில் அமைகிறது. ஆனால், தகுதியுடைய மனைவி, இன்னொருவனின் விந்தால், கருவுறுவது ஆண்களுக்கு ஏற்புடையாதாயிருக்காது.

ஆக, இந்த வாடகைத் தாய் முறைமை - மனைவிக்கும், கருவை சுமக்கும் பெண்ணிற்கும் இழைக்கப்படும் அநீதியாகத் தான் முடியும். ஆக, சுரண்டப்படும் இருவருமே பெண்கள் தான்.

இந்த வாடகைத் தாய் முறைமையால், ஒர் ஆண் தன் தந்தை இடத்தைத் தக்க வைத்துக் கொள்ள இடமிருக்கிறது. ஆனால், பெண்ணிற்கு இடமில்லை. அவள் தாயாக முடியாது. மாறாக, அவள் வளர்ப்புத் தாயாக மட்டுமே இருக்க முடியும். இது இன்னொரு பெண்ணினுடைய கரு முட்டையுடன் கணவன் விந்து அணுக்கள் கலப்பது என்ற நிலையில் மட்டுமல்ல, அவளது கருமுட்டைகளே, கணவனின் விந்துஅணுக்களோடு கலக்கச் செய்து, வேறொரு பெண்ணின் கருப்பையில் சேர்க்கப்படுகையில் கூட, கருப்பை உறவே தாய் என்ற உறவைத் தீர்மானிக்கும். தன் குழந்தைக்கு பாலூட்டும் பேறு பெறாதவள் என்றுமே தாயாக முடியாதுஇதிலே, மற்றுமொரு கோணத்தையும் காணவேண்டும் - அதாவது கருவுறுவதை தவிர்த்து விட்டு தங்களுக்கென குழந்தைகள் தேடும் பெண்கள் - இந்த வாடகைத் தாயைப் பயன்படுத்திக் கொள்ள பலத்த வாய்ப்புகள் உள்ளன. இதுவும் ஏமாற்று வேலையே. அதே போல, நாளை ஓரினச் சேர்க்கையாளர்கள் கூட, தங்களுக்கென குழந்தைகளை உண்டாக்கிக் கொள்ள முடியும்! இத்தகைய பந்தம் உடைய இவர்களிடத்தில் குழந்தைகள் போய்ச் சேர்ந்தால், அவர்களது மன உளைச்சலுக்கு யார் பொறுப்பேற்பார்கள்?

இறுதியாக, இந்த தம்பதியினர், நாளை பிரிந்து போனால், அவர்கள் இணைந்து இன்று செய்த முடிவு நாளை என்ன ஆகும்?

நிறையக் கேள்விகளை எழுப்பும், இந்த வாடகைத் தாய் வழக்கத்தை முறையாக ஆராய்ந்து, இவ்வாறு குழந்தை வேண்டுவோரின் பின்புலம் பற்றி தீர விசாரித்து, வாடகைத் தாயாக தங்கள் உடலையும், மன எழுச்சிகளையும் விற்கும் பெண்களுக்கு முழுமையான பாதுகாப்பிற்கான ஏற்பாடுகள் செய்து, இவ்வாறு பெறப்படும் அந்தக் குழந்தைகளின் எதிர்கால வாழ்க்கைக்கான உத்தரவாதமும் கிடைக்கச் செய்து, பின் இதைப் பின்பற்றுதல் முறையாக இருக்கும்.

மற்ற சமூக ஒவ்வாமை, மத ஒவ்வாமை, மன உளைச்சல்களை, வாடகைத் தாயாகப் போகும் பெண்களுக்கு முற்றிலுமாக விளக்கிச் சொல்லி, முறைப்படியான counseling கொடுத்து, தாங்கள் செய்யும் செயல் இன்னதென்று, விளங்கிக் கொண்டு, முழு மனதுடன் அந்தப் பெண்கள் விரும்பினால் மட்டுமே அனுமதிக்க வேண்டும்.

அந்நிய செலவாணி மூலம் பன்மடங்காகப் பெருக்கப்பட்ட பணத்தை இறைப்பதன் மூலம் சாதித்துக் கொள்ள முடியும் என்ற சுரண்டல் முறையை முற்றிலுமாக நீக்கி விட்டு, தேவையுடையவர்களுக்கு இதை அனுமதிப்பதே நலம்.

சட்டரீதியான வழிகாட்டுதல்களும், அரசின் கண்காணிப்பும் இன்றி, இதை தனியார் துறைகளிடம் அனுமதித்தால், it will be amounting to the rape of the innocent women of our society by these foreigners.

18 comments:

அரவிந்தன் நீலகண்டன் said...

நண்பன் எனது புரிதல் என்னவென்றால் சந்தை பொருளாதாரத்தின் மூலம் ஒரு பெண் தன் கருப்பையை பிறருக்காக பயன்படுத்த அனுமதி அளிப்பது ஒரு அரசின் கைக்கு இந்த தொழில்நுட்பத்தின் அதிகாரம் முழுமையாக சென்றடைவதைக் காட்டிலும் நல்லது என்று படுகிறது.
//அவளது உடலால் விளையக்கூடிய நன்மையைப் பெற்றுக் கொள்ள முடியும் கொஞ்சம் காசு கொடுத்து என்னும் பொழுது, அது அப்பட்டமான சுரண்டல். அதை விட, அந்தப் பெண்ணைத் திருமணம் செய்து கொண்டே விடுவது உத்தமமாகும்.//
ஆனால் இதில் அந்த பெண்ணின் விருப்பமும் இருக்கிறதே. தனது கருப்பையை மட்டும் வாடகைக்கு விட்டு அதற்கான ஊதியத்தை பெற்றுக்கொண்டு அந்த ஆணுடன் வாழ விருப்பப்படாமல் இருக்கலாம்.
//இதுவே, ஆண் தகுதியற்றவனாக இருந்து, மனைவி, தகுதியுடையவளாக இருக்கையில், ஒரு வாடகைத் தந்தையை - விந்து தானம் செய்யும் தந்தையை ஏற்றுக் கொள்வார்களா? நிச்சயம் மாட்டார்கள்!!!//
சொல்ல தெரியவில்லை நண்பன்.
//இன்னொரு பெண்ணினுடைய கரு முட்டையுடன் கணவன் விந்து அணுக்கள் கலப்பது என்ற நிலையில் மட்டுமல்ல, அவளது கருமுட்டைகளே, கணவனின் விந்துஅணுக்களோடு கலக்கச் செய்து, வேறொரு பெண்ணின் கருப்பையில் சேர்க்கப்படுகையில் கூட, கருப்பை உறவே தாய் என்ற உறவைத் தீர்மானிக்கும். தன் குழந்தைக்கு பாலூட்டும் பேறு பெறாதவள் என்றுமே தாயாக முடியாது //
பிள்ளை பெற்றால்தான் பாலூட்ட வேண்டுமென்று இல்லை. பால் சுரப்பினை செயற்கை ஊக்கிகள் மூலம் ஏற்படுத்திக்கொண்டு தன் குழந்தைக்கு பாலூட்ட முடியும்.
//நாளை ஓரினச் சேர்க்கையாளர்கள் கூட, தங்களுக்கென குழந்தைகளை உண்டாக்கிக் கொள்ள முடியும்! இத்தகைய பந்தம் உடைய இவர்களிடத்தில் குழந்தைகள் போய்ச் சேர்ந்தால், அவர்களது மன உளைச்சலுக்கு யார் பொறுப்பேற்பார்கள்?//
ஓரினச்சேர்க்கையாளர் குழந்தையை வளர்ப்பது தவறில்லையே. இந்த 'மன உளைச்சல்' தியரி அத்தனை சரி என்று தோன்றவில்லை. குழந்தையை வளர்க்க விரும்பும் ஓரினச்சேர்க்கையாளருக்கு நல்ல உளவியல்ல் கவுன்ஸலிங் கொடுத்து குழந்தைக்கு மன உளைச்சலை தவிர்க்கலாம். ஆனால் பாரதத்தில் இதெல்லாம் இப்போதைக்கு இந்த குறிப்பிட்ட விசயத்தில் பெரிய பிரச்சனை என தோன்றவில்லை. என்றாலும் இதனையும் விவாதிப்பது நல்லதுதான்.
ஒரு ஆழமான விவாதத்திற்குரிய விஷயத்தை அருமையாக ஆராய்ந்திருக்கிறீர்கள் நண்பன் நன்றி. நம்மை போன்ற வளரும் நாட்டு மக்களுக்கு, குறிப்பாக பிரசவத்தில் தாய் மரணம் அதிகமாக இருக்கும் நாட்டு மக்களுக்கு, சரியான முறையில் இந்த தொழில்நுட்பம் கொண்டு செல்லப்பட்டால் நல்ல சில விளைவுகளை ஏற்படுத்த முடியும். சாதீயத்தையும் ஒழிக்க முடியும்.

மாசிலா said...

நண்பனுக்கு வணக்கம்.

எனது வாதத்தை ஆரம்பிக்கும் முன் முதலில் உங்களது இந்த ++பெண்களைச் சுரண்டிப் பிழைக்கும் வஞ்சகர்களுக்கு ஒரு தொழில் வாய்ப்பாகப் போய்விட்டது++ வாக்கியத்திற்கு என் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.


வாடகைத்தாய் முறை என்பது பெண்களுக்கு கிடைத்த சுதந்திரம் எனதான் சொல்ல வேண்டும். பெண்கள் தங்களது ஒப்புதல் இல்லாமல் ஒருகாலும் இதுபோன்ற காரியங்களுக்கு கட்டாயப்படுத்தி அவர்களை பணிய வைக்க முடியாது என்பதே என் கருத்து.

வறுமையில் வாடும் பெண்கள் அவர்களது குடும்பம் அனைத்தையும் காப்பாற்ற, இவர்கள் இதுபோன்ற காரியத்தில் ஈடுபடுவது எந்த விதத்திலும் தவறு அல்ல.

முக்கியமாக சாதி, மதம், கல்வி, இனம், கலாச்சாரம், வர்க்கம் ஆகிய காரணங்களுக்காக சமுதாயத்தை விட்டு ஒதுக்கப்பட்டு விலக்கி வைக்கப்பட்டு இருக்கும் குடுபத்தினருக்கு இது சரியான சந்தர்ப்பம்.

இதையே ஒரு வியாபார நோக்கோடு செய்யாமல் சமுதாயத்திற்கு தேவையான ஒரு *தொண்டாக* செய்தால் நலமே. இலவசமாக அல்ல. கட்டாயமாக பணத்திற்குத்தான்.

மேலை நாடுகளில் இந்த பழக்கம் இருந்துகொண்டுதான் வருகிறது. இவர்களும் பணத்திற்குத்தான் இதை செய்கிறார்கள்.

இந்தியாவில் இதுபோன்ற வாடகைத்தாய் முறை பிரபல்யமானதற்கு முக்கிய காரணம் **பணம்தான்**. ஆம், மேலை நாடுகளில் இதுபோன்ற தாய்கள் குழந்தையை சுமப்பதற்கு நிறைய பணம் வாங்குகிறார்கள். உதாரணமாக ஈராப்பில் 10.000 - 15.000 ஈரோ வரை போகும். அதாவது இங்குள்ள அரசாங்க சராசரி அடிப்படை குறைந்த பட்ச மாத சம்பளத்தை 15ஆல் பெருக்கவும். எனவே நம் நாட்டிலும் பெண்கள் நிறைய பணம் கேட்க வேண்டும்.

அராசாங்கமும் இதனை அங்கீகரித்து இப்பெண்களுக்கு தகுந்த சமுதாய மற்றும் மருத்துவ பாதுகாப்பு கொடுக்க வேண்டும்.

பொருளாதார, தர்க்க வர்க்க, சாதி மத பேத காரணங்களுக்காக தவறான வழிகளுக்கு செல்ல தள்ளப்படும் பெண்களுக்கு இது ஒரு மாற்று சுவாசக்காற்று.

எனவே இந்த முறையை அரசாங்கம் ஊக்குவிக்க வேண்டும்.

உடல் மற்றும் மனத்திறமை உள்ள யாவரும் இந்த வாடகைத்தாய் முறையில் பயன் பெறுவார்கள் என நம்புவோம்.

இப்போது என் கண்டனத்திற்கான விளக்கம்.

பெண்கள் தாங்களாகவே முடிவெடுத்து, தலைமை தாங்கி நடத்தும் எந்த காரியமாக இருந்தாலும் உடனே அதை பெண்கள் சுரணடப்படுகிறார்களோ, ஏமாற்றப்படுகிறார்களோ என நினைப்பது தவறு என்றே நான் கூறுவேன்.

ஆண்கள் மட்டுமே இந்த உரிமைகளுக்கு அடிப்படை வாழ்நாள் குத்தகை காரர்கள் போல் தங்களை கருதிக்கொள்வது நன்றல்ல.

ஆண்கள் தயவில்லாமல் பெண்கள் இது போன்ற விடயங்களில் தன்னிச்சையாக முடிவெடுக்க தகுதியற்றவர்களா?

எடுத்த எடுப்பில் பெண்கள் சுரண்டப்பார்வகளோ என நினைத்து நீங்கள் எழுதி இருப்பது உங்களுக்குள் புதைந்து கிடக்கும் ஒருவகை ஆணாதிக்கத்தையே வெளிப்படுத்துகிறது.

இந்த விடயத்தை பெண்கள் மட்டுமே எடுத்து வாதாடினால் நான் மிகவும் மகிழ்ச்சி அடைவேன்.

இவண்
மாசிலா.

நண்பன் said...

அர்விந்த்

// நண்பன் எனது புரிதல் என்னவென்றால் சந்தை பொருளாதாரத்தின் மூலம் ஒரு பெண் தன் கருப்பையை பிறருக்காக பயன்படுத்த அனுமதி அளிப்பது ஒரு அரசின் கைக்கு இந்த தொழில்நுட்பத்தின் அதிகாரம் முழுமையாக சென்றடைவதைக் காட்டிலும் நல்லது என்று படுகிறது. //

அரசினால், முறைப்படுத்தப்பட்டு, தகுந்த சட்டதிட்டங்கள் வகுத்து கொடுக்க வேண்டும் என்பதே என் எண்ணம். பாலியியல் தொழிலில் அரசு தலையிடுவது இல்லை தான். அவ்வப்பொழுது, காவல்துறையினர், சிலரை தர்மசங்கடப்படுத்துவதற்காகவும், அல்லது தங்கள் இலக்கை எட்ட முடியாத பொழுது, பெண்களைப் பிடித்து, விபச்சார குற்றம் சாட்டி, உள்ளே தள்ளும் அற்பத்தனத்தைத் தவிர, மற்றபடிக்கு தலையிடுவது அல்ல தான். அதனால் என்ன நிகழ்ந்தது? சமூகவிரோதிகள் கையில் சிக்கிக் கொண்டு, பெண்கள் சீரழிவது மட்டுமல்ல, 'human trafficking' என்ற குற்றத்திற்கும் வழி வகுத்து கொடுத்தது அல்லவா?

அதுபோல இந்த தொழிலும் முறைமைப்படுத்தப்படாவிட்டால், இதே வகையான குற்றங்களுக்கு வழி வகுக்கும்.

முறைப்படியான ஒப்பந்தங்கள் போடப்பட்டால் கூட, இப்பொழுது அவை Contract Law என்ற பொதுச் சட்டத்தின் கீழ் தான் வரும். அவற்றைக் கொண்டு, இந்த வழக்குகள் வாதாடப்படும் பொழுது, அவை குழப்பத்திற்குத் தான் வழி வகுக்குமே தவிர, முறையான நீதிக்கு வழி வகுக்காது.

மற்றபடி, இதைத் தொழிலாகச் செய்ய, ஒழுங்குபடுத்தப்பட்ட, நம்பகத்தன்மை மிக்க நிறுவனங்களும், முறையான கல்வி பெற்ற மருத்துவர்களும் போதும். அரசு தலையிட வேண்டியது இல்லை.


// இதில் அந்த பெண்ணின் விருப்பமும் இருக்கிறதே. //

மிக்க மகிழ்ச்சி. பெண் விருப்பப்பட்டால், மணம் செய்து கொள்ளலாம் என்ற நிலைபாட்டிற்கு நீங்கள் வந்தது குறித்து. ( இந்த வரிகளை, 'அரபு அரச' குடும்பத்தினர் உங்களுக்குப் பெண் கொடுப்பார்களா என்ற கேள்வியைக் கேட்கும் அனைத்து நண்பர்களும் அர்விந்தின் இந்த அறிவுரையைக் கவனத்தில் வைத்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்.)

//இதுவே, ஆண் தகுதியற்றவனாக இருந்து, மனைவி, தகுதியுடையவளாக இருக்கையில், ஒரு வாடகைத் தந்தையை - விந்து தானம் செய்யும் தந்தையை ஏற்றுக் கொள்வார்களா? நிச்சயம் மாட்டார்கள்!!!//

சொல்ல தெரியவில்லை நண்பன்.

மாசிலா கூட இந்தக் கேள்விக்குப் பதில் சொல்லாமலே, என்னை ஆணாதிக்கவாதி என்று ஆவேசத்துடன் கொதித்திருக்கிறார் பாருங்களேன்!!!

// பிள்ளை பெற்றால்தான் பாலூட்ட வேண்டுமென்று இல்லை. பால் சுரப்பினை செயற்கை ஊக்கிகள் மூலம் ஏற்படுத்திக்கொண்டு தன் குழந்தைக்கு பாலூட்ட முடியும். //

உண்மை தான். ஆண்களால் கூட முடியும்.

ஆனால், இது பொதுவில் நிகழ்வதில்லை. மாறாக வாடகைத் தாயே ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு பாலூட்டவும் ஒப்பந்தம் செய்து கொள்கின்றனர்.

//குழந்தையை வளர்க்க விரும்பும் ஓரினச்சேர்க்கையாளருக்கு நல்ல உளவியல்ல் கவுன்ஸலிங் கொடுத்து குழந்தைக்கு மன உளைச்சலை தவிர்க்கலாம். //

ஒரு குழந்தை இயல்பாக வளரக்கூடிய சூழ்நிலை இருக்காது. The child would face an unnatural surrounding than what it can comprehend. எல்லாவற்றிற்கும், ஹார்மோன் சுரப்பி ஊக்கிகள், மருத்துவ ஆலோசனைகள் இவற்றைக் கொண்டே வாழ்ந்து விடலாம் என்ற நிலையே ஒரு சமூக சீரழிவு தானே?

// சரியான முறையில் இந்த தொழில்நுட்பம் கொண்டு செல்லப்பட்டால் நல்ல சில விளைவுகளை ஏற்படுத்த முடியும். சாதீயத்தையும் ஒழிக்க முடியும்.//

தொழில் நுட்பம் மட்டுமல்ல, சரியான சட்டங்களும் தேவை. மேலும் உற்பத்தி, இங்கு நிகழ்வதால், அந்த சட்டங்கள் நம் பெண்களுக்குப் பாதுகாப்பாக அமைக்கப்படுவதோடு மட்டுமல்ல, குறைந்தபட்ச ஊதியமும் நிர்ணயிக்கப்படவேண்டும்.

சாதீயத்தை ஒழித்துக் கட்ட இது வகை செய்யாது. ஒரு குழந்தை இந்தியாவில் எப்பொழுதும், தந்தை வழியாக சாதியத்தையும், மதத்தையும் பெறுகிறது. அப்படி இருக்கும் பொழுது எப்படி, சாதி, மதத்தை இது ஒழித்துக் கட்ட இயலும். நம் சமூகம், பெண்ணை ஒரு உற்பத்தி இயந்திரமாகத் தான் பார்க்கிறது. அதனால் தான், ஆண் வழியில் கலப்புத் திருமணத்தை ஏற்றுக் கொள்ளும் பொழுது, பெண்களைத் தூற்றுகிறார்கள். காரணம் ஒரு பெண் வெளியேறும் பொழுது, அது அவர்களது உற்பத்தித் திறனில் ஒரு unitஐ இழக்கிறார்கள். அதனால் தான் படைப்பியல் புனைவைக் கூட அவர்கள், ஏற்றுக் கொள்வதில்லை. பெரும் கலவரத்தை உண்டாக்கி விடுகிறார்கள்.

நண்பன் said...

மாசிலா said...

// நண்பனுக்கு வணக்கம். //

பதில் வணக்கங்கள், மாசிலா.

// எனது வாதத்தை ஆரம்பிக்கும் முன் முதலில் உங்களது இந்த ++பெண்களைச் சுரண்டிப் பிழைக்கும் வஞ்சகர்களுக்கு ஒரு தொழில் வாய்ப்பாகப் போய்விட்டது++ வாக்கியத்திற்கு என் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். //

உங்களுடைய வெளிப்படையான, வெகுளித்தனமான வார்த்தைகளை ரசித்தேன்.


// வாடகைத்தாய் முறை என்பது பெண்களுக்கு கிடைத்த சுதந்திரம் எனதான் சொல்ல வேண்டும். பெண்கள் தங்களது ஒப்புதல் இல்லாமல் ஒருகாலும் இதுபோன்ற காரியங்களுக்கு கட்டாயப்படுத்தி அவர்களை பணிய வைக்க முடியாது என்பதே என் கருத்து. //

மிக நல்ல கருத்து. ஆனால், துரதிர்ஷ்டவசமாக, இத்தகையத் தொழிலுக்கு வரக்கூடிய சாத்தியதை உள்ளவர்கள், தங்கள் குடும்ப நிர்ப்பந்தத்தின் காரணமாக வரக்கூடிய சாத்தியதைகள் 90% உள்ளன. இதை மறுத்து விட்டு, பெண் விடுதலைப் பற்றி பேசி புண்ணியமில்லை. எங்கு குறைபாடு உள்ளது என்ற புரிதல் இல்லாமல், உரிமைகளைப் பற்றிப் பேசுவது யானையைத் தடவிய குருடர்களாய் மாறிவிடும்.

// முக்கியமாக சாதி, மதம், கல்வி, இனம், கலாச்சாரம், வர்க்கம் ஆகிய காரணங்களுக்காக சமுதாயத்தை விட்டு ஒதுக்கப்பட்டு விலக்கி வைக்கப்பட்டு இருக்கும் குடுபத்தினருக்கு இது சரியான சந்தர்ப்பம். //

எத்தகைய பெண்கள் இந்தத் தொழிலுக்கு வரவேண்டும் என்ற உங்கள் நிலைபாடு வியக்க வைக்கிறது. நான் இத்தகைய வகைப்படுத்தலை விரும்பவில்லை. எத்தகையவர்களும் இந்தத் தொழிலில் ஈடுபடலாம் என்பதே என் நிலை. முறையாக செயல்படவேண்டும் என்பதே நான் வலியுறுத்துவது.

// இதையே ஒரு வியாபார நோக்கோடு செய்யாமல் சமுதாயத்திற்கு தேவையான ஒரு *தொண்டாக* செய்தால் நலமே. இலவசமாக அல்ல. கட்டாயமாக பணத்திற்குத்தான். //

இலவசமாக செய்யுங்கள் என்று நானும் சொல்லவில்லையே.

// மேலை நாடுகளில் இந்த பழக்கம் இருந்துகொண்டுதான் வருகிறது. இவர்களும் பணத்திற்குத்தான் இதை செய்கிறார்கள். //

இருக்கட்டும். மேலை நாட்டினரை நான் எப்பொழுதுமே ஒரு அளவு கோலாகக் கருதியதில்லை.


// இப்போது என் கண்டனத்திற்கான விளக்கம். //

// பெண்கள் தாங்களாகவே முடிவெடுத்து, தலைமை தாங்கி நடத்தும் எந்த காரியமாக இருந்தாலும் உடனே அதை பெண்கள் சுரணடப்படுகிறார்களோ, ஏமாற்றப்படுகிறார்களோ என நினைப்பது தவறு என்றே நான் கூறுவேன்.//

தாங்களாக முடிவெடுப்பது தவறல்ல. ஆனால், பெண்களுக்கு அந்த உரிமைகளைக் கொடுத்து விட்டு, இதைப் பற்றிப் பேசலாமே!! இந்த விஷயத்தில் பெண்கள் தங்கள் குடும்பத்தினரைக் கலக்காமல் முடிவெடுப்பார்கள் என்று தோன்றவில்லை. அவ்வாறு தனியாக எடுக்கக் கூடிய சமூக சூழல் இன்று இல்லை என்பது தான் உண்மை. மேலும் இங்கு சுரண்டல் என்பது நிகழ்ந்து கொண்டிருக்கும் செயல்பாடுகளைக் கொண்டு தான் பேசப்பட்டதே தவிர, வேறில்லை. பெணகளைச் சுரண்ட வாய்ப்பிருக்கிறது என்பதை நீங்கள் மறுத்தால், உங்களுடைய utopian கனவுகளைக் கலைக்க நான் விரும்பவில்லை.

Enjoy your siesta!!!

// ஆண்கள் மட்டுமே இந்த உரிமைகளுக்கு அடிப்படை வாழ்நாள் குத்தகை காரர்கள் போல் தங்களை கருதிக்கொள்வது நன்றல்ல. //

//எடுத்த எடுப்பில் பெண்கள் சுரண்டப்பார்வகளோ என நினைத்து நீங்கள் எழுதி இருப்பது உங்களுக்குள் புதைந்து கிடக்கும் ஒருவகை ஆணாதிக்கத்தையே வெளிப்படுத்துகிறது. //

என்னை கருத்தியல் ரீதியாக 100% எதிர்ப்பவர்கள் கூட, என் மீது இந்தக் குற்றச்சாட்டை வைக்க முடியாது. நீங்கள் என் பதிவை முழுமையாக வாசிக்கவில்லை. அல்லது என் சிந்தனைகளைப் புரிந்து கொள்ள உங்களுக்கு விருப்பமில்லை. அல்லது இந்த மாதிரி கருத்துகளை வைப்பதன் மூலம், தங்கள் மீது ஒரு வெளிச்சத்தைப் பாய்ச்சிக் கொள்ளும் முயற்சியில் விருப்பமுடையவராக இருக்க வேண்டும்.

வருத்தமாக இருக்கிறது - உங்கள் பின்னூட்டம்.

தன்னை முன்னிலைப்படுத்துவதில் தவறில்லை. ஆனால், அது தவறான வழிமுறைகளால் இருக்கக் கூடாது என்பது என் திண்ணமான எண்ணம்.

// இந்த விடயத்தை பெண்கள் மட்டுமே எடுத்து வாதாடினால் நான் மிகவும் மகிழ்ச்சி அடைவேன்.//

பெண்கள் இந்த விஷயத்தில் தங்கள் கருத்தை எடுத்துச் சொல்ல முன்வந்தால் மிகவும் மகிழ்வேன். ஆனால், பெண்கள் மட்டுமே வாதாட வேண்டும் என்ற உங்கள் கருத்து ஏற்புடையதல்ல. ஆண்கள் என்றாலே அவர்கள் பெண்களின் எதிரி என்ற திரையை அகற்றி விடுங்கள்.

நன்றி.

நண்பன் said...

தமிழ் சர்க்கிள் எழுதிய தாய்மையை விலை பேசும் உலக மயம் என்ற பத்வின் கீழ் மாசிலா எழுதிய பின்னூட்டம்.

எத்தனை முரண்கள் என்பதை மாசிலா நீங்களே வாசித்துப் புரிந்து கொள்ளுங்கள்.

நன்றி.

// மனிதர்களை மதம் சாதி அடிப்படையில் மிருகங்களைவிட கேவலமான நிலைக்குத் தள்ளி சமுதாய விளிம்பில் எறியப்பட்டு இருக்கும் மக்களை வைத்து எது வேண்டுமாகிலும் செய்யலாம். ஆடம்பரம், சொகுசு, வெளிவேசம், பகட்டு போன்ற மாயைகளுக்கு அடிமைகளாகி இருக்கும் இயந்திர மனிதர்களுக்கு பணம் வருகிறது என்றால், எதையும் செய்வார்கள். ஊடகங்கள் மூலமாக மக்களின் வாழ்க்கை திருடப்பட்டு வருகின்றன. குடும்பம், குலம், சமுதாயம் இவைகளின் அடையாளங்கள் அழிக்கப்பட்டு மக்கள் நிர்வாணம் ஆக்கப்பட்டனர். கலை, கலாச்சாரம், பண்பாடு, மண்ணின் பெருமை, மூதாதையர்களின் வழிபாடு போன்ற ஆயுதங்கள் பறிக்கப்பட்டன. நடைபிண நுகர்வோர் பிண்டமான இம்மக்களிடம் இனி யார் எதை சொன்னாலும் எதுவும் எடுபடாது.
மேற்கத்திய நாடுகளில் இந்தியாவை பற்றி பேசப்படும்போது அதன் இனம், கலாச்சாரம், மனிதர்கள், பண்பாடு, பாரம்பரியம் இதையெல்லாம் பற்றி மருந்தளவும் நினைக்க மாட்டார்கள். இத்தனை கோடி நுகர்வோர் என்கிற சிந்தனையில்தான் யோசிக்கவே ஆரம்பிப்பார்கள்.

இடைத்தரகர்கள் இல்லாமல் நீங்கள் குறிப்பிட்டிருக்கும் அடிமைதொழில் சாத்தியமாக வழி கிடையாது. இந்தியாவிலிருந்து புலம் பெயர்ந்த நம் மக்களே இதற்கு தரகர்களாக இருக்க நிறைய வாய்ப்புகள் உண்டு.

இந்தியாவிற்கு அதன் முதல் எதிரிகள் நாட்டின் உள்ளேயே இருக்கிறார்கள் என்பதை பொது மக்கள் நன்கு உணர்ந்து கொள்ளவேண்டும். அந்நிய நாட்டு சக்திகள் கொள்கைகள் இழைக்கும் கொடுமைகள், அழிவுகளைவிட உள்நாட்டில் மக்கள் சமுதாயத்திற்கு உள்ளேயே இருந்துகொண்டு உயிர்கொல்லி கிருமிகளைப் போல் சமுதாயத்தை அழித்துவரும் நஞ்சுக் கிருமிகளை ஒழித்துக்கட்ட நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.

அரசியல் என்றால் பதவி, ஆட்சி, அதிகாரம், பணம், சொகுசு, ஆடம்பரம், பகட்டு ... இதையே வாழ்க்கையின் குறிக்கோளாக கொண்ட ஓட்டுப்பொறுக்கி மனிதர்கள் தம் மக்களின் கருவைறை என்ன? மக்களையே விற்று மண்ணையும் விற்று காசாக்க தயங்க மாட்டார்கள். //

நண்பன் said...

http://archive.gulfnews.com/world/India/10108183.html


Published: 02/03/2007 12:00 AM (UAE)

Country aims to halve infant and maternal death rates by 2010
ReutersNew Delhi: India's health minister lamented yesterday the country's high infant mortality rate at a time of economic prosperity, pledging to halve the number of baby deaths by 2010.

The government, under criticism that many poor people are not benefiting from record economic growth, will increase health spending and deploy thousands more health workers to villages, Anbumani Ramadoss said.

Some 2.1 million children under 5 die each year in India, of which over 60 per cent are under 1 year, according to the United Nations Children Fund (Unicef).

"India has been talked about as the nation of the future, a country which will become a superpower, a country with 9.2 per cent GDP growth," Ramadoss told a gathering of Christian missionary doctors yesterday.

"But then, we have a country where we have one of the highest infant mortality rates in the region, and where maternal mortality is one of the highest in the world."

India's infant mortality rate stands at 57 per 1,000 live births - more than impoverished Eritrea and Bangladesh. Ramadoss pledged to bring the rate down to around 30 per 1,000 live births within the next four years.

More than two-thirds of Indians live in rural areas, many without access to basic medical facilities, despite three years of over 8 per cent economic growth.

Ramadoss said India would aim to cut the country's maternal mortality rate of 300 per 100,000 live births - three times that of Botswana - to less than 100.

Around 65 per cent of Indian women still deliver at home. 'If you save the mother, you can save the child," Ramadoss said.

On Wednesday, the communist-backed government increased health spending for the fiscal year April-March 2007/08 by 21 per cent to Rs99.47 billion (Dh8.3 billion), but government funding for health still is just 2.4 per cent of GDP.

The health ministry said it would double the number of female Associated Social Health Activists (ASHAs) in rural areas to 620,000 within a year.

"They are going to know all the children and mothers in each village," Ramadoss said, adding ASHAs would work with thousands of child nutrition workers to cut infant and maternal mortality.

மாசிலா said...

//இத்தகையத் தொழிலுக்கு வரக்கூடிய சாத்தியதை உள்ளவர்கள், தங்கள் குடும்ப நிர்ப்பந்தத்தின் காரணமாக வரக்கூடிய சாத்தியதைகள் 90% உள்ளன.// மறுபடியும் நீங்கள் பெண்கள் மீது வைத்திருக்கும் நம்பிக்கையின்மையையும், அடிமைத்தனத்தையும், ஆணாதிக்கத்தையும் இக்கூற்று மூலம் வெளிப்படுத்தி இருக்கிறீர்.

//இதை மறுத்து விட்டு, பெண் விடுதலைப் பற்றி பேசி புண்ணியமில்லை. எங்கு குறைபாடு உள்ளது என்ற புரிதல் இல்லாமல், உரிமைகளைப் பற்றிப் பேசுவது யானையைத் தடவிய குருடர்களாய் மாறிவிடும். // என் வாதத்தை மூச்சு திண்றடித்துதான் நீங்கள் உங்கள் கூற்றுகளை பறைசாற்றவேண்டும் என நினைத்தால் இதற்கு நான் ஏற்றவன் அல்ல.


//எத்தகைய பெண்கள் இந்தத் தொழிலுக்கு வரவேண்டும் என்ற உங்கள் நிலைபாடு வியக்க வைக்கிறது. //
இது ஒன்றும் ஒரு தொழில் அல்ல நண்பரே. விருப்பத்தின் அடிப்படையில், தொண்டு செய்யும் எண்ணத்தில், பணத்திற்காக செய்தாலும், பாசத்தையும், நேசத்தையும், நேரத்தையும், நிதானத்தையும், அன்பையும், பாதுகாப்பையும், பராமரிப்பையும் கொட்டி வளர்க்கும் ஒரு மனித உயிரைப் பற்றிய விவகாரம்தான் இது.

"தாசிகள் தொழில் போல் அல்ல இது"

//எத்தகையவர்களும் இந்தத் தொழிலில் ஈடுபடலாம் என்பதே என் நிலை.// இதை ஒரு தொழிலாக நீங்கள் பாவித்து இருப்பது என்னை மிகவும் ஏமாற்றத்திற்கும் மன வருத்தத்திற்கும் உள்ளாக்கி இருக்கிறது. மீண்டும் ஒருமுறை நீங்கள் உங்கள் மனதில் பெண்களுக்கென வரைந்திருக்கும் "வியாபார பொருள்" சித்திரம் அழகுபட தெரிகிறது.

//இலவசமாக செய்யுங்கள் என்று நானும் சொல்லவில்லையே.// இப்படி நீங்கள் சொன்னதாக நானும் சொல்லவில்லை. என் கருத்தைத்தான் சொன்னேன்.

//இந்த விஷயத்தில் பெண்கள் தங்கள் குடும்பத்தினரைக் கலக்காமல் முடிவெடுப்பார்கள் என்று தோன்றவில்லை.// உங்களுக்கு தோன்றவில்லையா? அல்லது, அது உங்களுக்கு பிடிக்கவில்லையா?

//அவ்வாறு தனியாக எடுக்கக் கூடிய சமூக சூழல் இன்று இல்லை என்பது தான் உண்மை// ஒரு வேளை இந்த சூழ்நிலையை ஏற்றுக்கொள்ளக் கூடிய மனப்பக்குவம் இன்னும் உங்களுக்கு வரவில்லையா?

//பெணகளைச் சுரண்ட வாய்ப்பிருக்கிறது என்பதை நீங்கள் மறுத்தால், உங்களுடைய utopian கனவுகளைக் கலைக்க நான் விரும்பவில்லை. // உலகத்தில் எந்த பெண்ணும் தன் மன விருப்பம், ஒப்புதல் இல்லாமல் இதை ஒருகாலும் ஒத்துக் கொள்ளவே மாட்டார்.

//அல்லது இந்த மாதிரி கருத்துகளை வைப்பதன் மூலம், தங்கள் மீது ஒரு வெளிச்சத்தைப் பாய்ச்சிக் கொள்ளும் முயற்சியில் விருப்பமுடையவராக இருக்க வேண்டும்.// இதில் உண்மையும் இருக்கலாம். யார் கண்டது. மற்றவர்களின் மூலமே நாம் 'இருக்கிறோம்'. மற்றவர்களால் வரையப்பட்ட சுவர் சித்திரம்தானே நாம். நாம் பார்ப்பது, படிப்பது, பழகும் மக்கள் ஆகியவைகளின் ஒருமித்த சித்திரமே நாம். அனால் நான் மாறக்கூடிய, மாற்றிகொள்ளக் கூடிய சித்திரம். எனக்கு விடாபிடி மற்றும் முரட்டு கொள்கைகள் பிடிக்காது.

என் வாழ்நாளில் நான் அறிந்த அனைத்து கூற்றுகளிலும் எனக்கு மிகவும் பிடித்தது : " மாறாதவன் மடையன் ஒருவன் ஒருவனே! " இது ஒரு பிரஞ்ச் அடைமொழி. இதுவே நான் என்னை நேரங்களுக்கும் காலங்களுக்கும் தகுந்தபடி மாற்றிக் கொண்டு வாழ்க்கைப் பயணத்தை தொடர உதவுகிறது.

//வருத்தமாக இருக்கிறது - உங்கள் பின்னூட்டம்.// ஜல்லி அடிப்பவனில்லை என நீங்கள் எனை வாழ்த்தியதற்கு நன்றிகள்.

//ஆனால், பெண்கள் மட்டுமே வாதாட வேண்டும் என்ற உங்கள் கருத்து ஏற்புடையதல்ல. // நான் இப்படி சொல்லவில்லை. இருப்பினும், பெண்கள் மட்டுமே இந்த விடயத்தை எடுத்து வாதாடினால் உங்களுக்கு எந்த விதத்தில் குறைந்து விடப்போகிறது?

//ஆண்கள் என்றாலே அவர்கள் பெண்களின் எதிரி என்ற திரையை அகற்றி விடுங்கள்// இது என்க்கு புரியவில்லை நண்பரே!

பதிவர் நண்பனுக்கு,
அன்புடன் மாசிலா.

Nandha said...

உண்மையில் சொல்லப் போனால், இந்த விஷயத்தில் அவ்வளவாக விஷய ஞானமே இல்லாமலிருந்த நான் உங்களது இப்பதிவைப் பார்த்தே சற்று தெளிவு பெற்றேன்.

இது சரி, தவறு என்று கூறுமளவுக்கு இல்லாவிடினும்,என் அறிவிற்கு ஒன்று மட்டும் என்னால் கூற முடியும்.

நிச்சயமாக இப்பதிவு ஒரு ஆணாதிக்க சிந்தனையின் வெளிப்பாடு இல்லை என்பதே அது.

Nandha said...
This comment has been removed by the author.
நண்பன் said...

மாசிலா,

வாதம் புரிந்தால் பதில் வாதம் செய்யலாம்.

ஆனால், உங்களுடைய வாதங்கள் விதண்டவாதமாக அமைந்திருக்கின்றன தவிர, அதில் நேர்மையில்லை.

நடைமுறைச் சூழலை சாடித்தான் நான் எழுதி இருக்கிறேன். உங்களுக்குப் புரியவில்லை என்றால், தயவு செய்து புரிந்து கொள்ளுங்கள் – செய்யுங்கள்

பதிவு வாடகைத் தாய்மையைப் பற்றியது. அதைப் பற்றி பேசுங்கள்.
உங்களின் புரிதல் சக்தியைப் பற்றி நன்கு விளங்கிக் கொண்டேன். இத்தனை பலவீனமான புரிதலும், நடைமுறையைப் பற்றிய ஞானமின்மையும், விதண்டவாதமும் நேரத்தை வீணடிப்பவை.

உங்களுடைய இரட்டை நிலைபாட்டை நான் ஏற்கனவே எடுத்து வைத்து விட்டேன். இந்தியப் பெண்களின் நிலை என்ன என்று மத்திய அமைச்சர் சொல்லியதை எடுத்து வைத்து விட்டேன். இந்த வாடகைத் தாய்மார்களைப் பற்றி ஏற்கனவே பத்திரிக்கைகள் - தமிழ்ப் பத்திரிக்கைளிலே ஏற்கனவே வந்திருக்கிறது - அவர்கள் தங்கள் குடும்பத்தினரின் நிர்ப்பந்தத்திலே (பணத்தேவைக்காக) இதை செய்கிறோம் என்று கூறியது மட்டுமல்ல, அவர்கள் தலைமறைவு வாழ்க்கை வாழ்வதையும் குறிப்ப்பிட்டுளனர். இத்தகைய சூழ்நிலைகளையெல்லாம் அறியாமலே இருக்கும் நீங்கள் பெண்களுக்கு ஏற்படக் கூடிய இடர்பாடுகளைப் பற்றிச் சுட்டிக்காட்டி, அத்தகைய சூழலுக்கு, இந்தத் தொழிலையும் உட்படுத்திக் கொள்ளக் கூடாது என்று தான் வாதாடி வருகிறேன். இதைக் கூட புரிந்து கொள்ள இயலவில்லை வலைப்பதிவில் இயங்கும் ஒருவரால் என்பது வியப்பளிக்கிறது.. அதே சமயம் - வாதம் புரிய வேண்டுமென்பதற்காகவே விதண்டவாதம் புரியும் உத்தியையும், உள்நோக்கத்தோடும் செயல்படும் உங்கள் பலவீனமான தர்க்கங்களையும் ஒதுக்கி விட்டு, நிதானமாக எல்லாவற்றையும் படித்துப் பார்த்து யோசித்துப் பதில் எழுதுங்கள்.

என்னை ஆணாதிக்க சிந்தனையாளன் என்று நிறுவுவது தான் உங்கள் நோக்கம் என்றால், தயவு செய்து, நண்பன் ஒரு ஆணாதிக்கவாதி என்று ஒரு பதிவு போட்டுவிடுங்களேன் - என்னுடைய நேரத்தையும், என் வலைப்பதிவை வாசிப்பவர்களின் நேரத்தையும் வீணடிக்காமல்!!!


நன்றி.

அசுரன் said...

//அந்நிய செலவாணி மூலம் பன்மடங்காகப் பெருக்கப்பட்ட பணத்தை இறைப்பதன் மூலம் சாதித்துக் கொள்ள முடியும் என்ற சுரண்டல் முறையை முற்றிலுமாக நீக்கி விட்டு, தேவையுடையவர்களுக்கு இதை அனுமதிப்பதே நலம்.

சட்டரீதியான வழிகாட்டுதல்களும், அரசின் கண்காணிப்பும் இன்றி, இதை தனியார் துறைகளிடம் அனுமதித்தால், it will be amounting to the rape of the innocent women of our society by these foreigners.///


ஆயிரத்தெட்டு சட்டம் இருக்கும் பொழுதே சந்தைப் பொருளாதாரம் கிட்னி கொள்ளையடிதத்து சமீபத்த்ல்தான் நாறீயது. இங்கு பலரும் இந்தியாவைவிட முன்னேறிய சமூகங்களின் பண்பாட்டு பழக்கவழக்க கூறுகளை அப்படியே கடைபிடிக்க விரும்புகிறார்கள். அவர்கள் இந்திய சமூகத்தின் இயல்பான வளர்சிதை மாற்ற பருவம் பிந்தங்கி இருப்பதை பார்க்க மறுக்கிறார்கள்.

இது போல இய்ந்திரகதியாக பொருத்துவது கிட்னி பிரச்சனை போல விளைவுகளையே ஏற்ப்படுத்தும். முற்போக்கு எல்லாமே எல்லா காலத்துக்கும் பொருந்தும் விசயம் அல்ல. இந்திய சமூகத்தின் நிதர்சனத்துக்கு ஒத்து வருவது என்று பார்க்குமிடத்து நண்பன் கூறியுள்ள வரிகளே சரி என்று சொல்ல முடியும்.

அப்புறம் நண்பர் நீலகண்டனுடைய RSS... ஸாரி இந்து தர்மம் சந்தைப் பொருளாதாரம் குறித்து என்ன சொல்கீறது என்பதை இங்கு சொல்ல வேண்டாம். அவரது தளத்திலோ அல்லது வேறு தளத்திலோ சொன்னால் எங்களுக்கு வசதியாக இருக்கும். ஏனேனில் 'சமூகம் தற்கொலைப் பாதையில்' என்று கோல்வால்கர் விடும் புருடாக்களில் ஒன்று சந்தைப் பொருளாதாரம் குறித்தும் வருவதாக ஞாபகம்.

அசுரன்

நண்பன் said...

அசுரன்,

வருகைக்கு நன்றி.


// இந்திய சமூகத்தின் நிதர்சனத்துக்கு ஒத்து வருவது என்று பார்க்குமிடத்து நண்பன் கூறியுள்ள வரிகளே சரி என்று சொல்ல முடியும்.//

தான் வாழும் சமூகத்துக்குள் நிகழும் மாற்றங்களைத் தான் மக்கள் தங்களுக்கான மாற்றங்களாகக் கருதி மாறிக் கொள்ள வேண்டுமே தவிர, நான் பரந்த மனப்பான்மையுள்ளவன் என்று தம்பட்டம் அடித்துக் கொள்வதற்காக மாற்றம் பெற விரும்புவது என்பது வேடதாரிகளாக நம்மை மாற்றி விடும்.

இன்று பலர் அவ்வாறான வேடத்தை விரும்புகிறார்கள் என்பது கசப்பான உண்மை.

இந்த வாடகைத் தாய் வழக்கத்தை, இது ஒரு தொண்டு, சேவை என்று கூறி, புனித பூச்சு பூசுவதும், பெண்களை மோசடிக்குள்ளாக்கும் வழியே ஆகும். இதில், பெண்ணின் மருத்துவ செலவுகள் இருக்கின்றன. குழந்தை பிறப்பிற்கு முன்னும், பின்னும். அது தவிர, பணத் தேவையற்ற பெண்கள் எவரும் இதில் ஈடுபடப் போவதில்லை. ஒரு குடும்பத்திற்குள் வேண்டுமானால், அபூர்வமாக இத்தகைய நிகழ்வுகள் இருக்கலாமே தவிர, முகமறியாத அந்நியர்களுக்காக, ஒரு பெண் தன்னை வருத்திக் கொள்ள வேண்டிய அவசியமும், தேவையுமிருக்காது. தொண்டு செய்து கொண்டே பணமும் வாங்கிக் கொண்டு, தொழில் என்று சொன்னால் கோபம் கொள்வது வேஷமே அன்றி வேறல்ல.

இத்தகைய மனிதர்களிடமிருந்து இந்தப் பெண்களைக் காக்க வேண்டுமென்றால், அதை ஒரு தொழிலாக அங்கீகரித்து, முறைப்படித்தி, அந்தப் பெண்களுக்கு நியாயமான ஒரு தொகையைப் பெற்றுத் தருவதே தர்மமாக இருக்கும்.

மற்றபடி, இது சரியா, தவறா, என்பது தனிமனித தர்க்கத்திற்குட்பட்டது. அவர்கள் சார்ந்த கலாச்சார, சமூக அங்கீகாரத்திற்குட்பட்டது. அதை ஏற்றுக் கொண்டு அல்லது மீறி செயல்படுவது தனி மனித சுதந்திரம் மட்டுமே.

நண்பன் said...
This comment has been removed by the author.
நண்பன் said...

நர்மதா,

வாருங்கள்.

உங்களைப் போன்ற சார்பு நிலை எடுக்காத நண்பர்களின் வாசிப்புத் தான் மேலும் மேலும் எழுதத் தூண்டுகிறது..

உங்கள் வருகைக்கும், கருத்திற்கும் மிக்க நன்றி.

தொடர்ந்து, வாசித்து கருத்து எழுதுங்கள்.

நன்றி.

அசுரன் said...

Nanban,

Tamilarangam is not that kind of Blog. He published critical questions of Ravi srinivas. and I know even he published The Famous Bala's Comments. May be your comments have been missed somewhere. So please remind him of this. And I don't find your article is contradicting the core concept of his article.

Please don't conclude anything before hand.

Asuran

நண்பன் said...

அசுரன்,

நீங்கள் சொன்னது போலத் தான் நடந்திருக்க வேண்டும். தமிழரங்கத்தை நானும் நன்றாக அறிவேன். நண்பர்களும், வேலைப்பளுவிற்கு இடையே கிடைக்கும் நேரத்தில் தான், அவர்கள் இயங்குகிறார்கள் என்று சொன்னார்கள். அதனால் தான் அவருக்கு என்ன பிரச்சினை என்று தெரியவில்லை என எழுதினேன். ஒரு பின்னூட்டம் பிரசுரிக்கவில்லை என்பதைத் தான் சொன்னேனே தவிர, ஏன் என்ற கேள்விக்குள் போகவில்லை. மேலும், இவ்வாறு தவறிப் போவதற்கு பல காரணங்கள் இருக்கக் கூடும்.

நான் ஊகித்தது - அந்த பின்னூட்டம் அவர் பார்வைக்குப் போகவே இல்லையோ என்று தான். நீங்கள் தொடர்பு கொண்டு தெரியப்படுத்தியமைக்கு நன்றி.. மீண்டும் ஒரு முறை அவருக்கு இந்தப் பதிவை பின்னூட்டமாக அனுப்பி வைக்கிறேன்.

நன்றி, அசுரன்.

Tamil Circle said...

From: "நண்பன்" Add to Address Book Add Mobile Alert
To: tamilcircle@tamilcircle.net
Subject: [விவாதமேடை - தமிழ ரங்கம்] New commen t on தாய்மையை வி லை பேசும் உலகமயம்.
Date: Mon, 5 Mar 2007 10:20:58 +0100 (CET)
நண்பன் has left a new comment on your post "தாய்மையை விலை பேசும் உலகமயம்":

எந்த ஒரு நல்ல விளைவும், யார் கையில் போய்ச் சேருகிறதோ, அதைப் பொறுத்தே, அதன் பயன்பாடும், நன்மைகளும் தீமைகளும் அமைகின்றன. அதே போல் தான், குழந்தை பெற்றுக் கொள்ள வாய்ப்பில்லாத தம்பதியினருக்கு, ஒரு நல்வரமாக அமைய வேண்டிய ஒரு அறிவியல் படைப்பு, இன்று வியாபாரிகளின் கையில் போய்ச்சேர்ந்து, பெண்களைச் சுரண்டிப் பிழைக்கும் வஞ்சகர்களுக்கு ஒரு தொழில் வாய்ப்பாகப் போய்விட்டது.

வாடகைத் தாய், உண்மையான தேவையுள்ளவர்களுக்கு அனுமதிக்கப்பட வேண்டிய விஷயம். இப்பொழுதும், அநேகமாக குழந்தையற்ற தம்பதிகளே இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ள முனையும் பட்சத்தில், வாடகைத் தாய்கள் கண்டிப்பாகத் தேவைப்படத் தான் செய்வார்கள். ஆகையால், இதை முற்றிலுமாகத் தடுக்க வேண்டும் என முயல்வதை விட, அதை சரியான சட்ட திட்டங்களுடன் முறைப்படுத்த வேண்டும் என்பதே சரியாக இருக்கும்.

இப்பொழுது வாடகைத் தாய் என்று பெயரிட்டு அழைப்பதை, பழைய காலத்தில், இத்தேவைகளுக்காகத் திருமணமே செய்து கொண்டார்கள். ஆனால், அவ்வாறு செய்வதால், வாழ்நாள் முழுவதும், ஒரு பெண்ணிற்குத் தேவையான செலவுகள் அனைத்தையும் கொடுக்க வேண்டும், அத்துடன் அப்பெண்ணிற்குரிய சமூக அந்தஸ்தையும் கணவனே கொடுக்க வேண்டும். அதனால் திருமணம் என்ற அந்தஸ்தை, மரியாதையைப் பெண்ணிற்குக் கொடுக்காமலே, அவளது உடலால் விளையக்கூடிய நன்மையைப் பெற்றுக் கொள்ள முடியும் கொஞ்சம் காசு கொடுத்து என்னும் பொழுது, அது அப்பட்டமான சுரண்டல். அதை விட, அந்தப் பெண்ணைத் திருமணம் செய்து கொண்டே விடுவது உத்தமமாகும்.

இரண்டாவதாக, ஒரு ஆண் தகுதியுள்ளவனாக இருந்து, அவனது மனைவி தகுதியற்றவளாக இருக்கையில் தான் ஆண்கள் இந்த வாடகைத் தாய் முறையை விரும்பி ஏற்றுக் கொள்கிறார்கள். இதுவே, ஆண் தகுதியற்றவனாக இருந்து, மனைவி, தகுதியுடையவளாக இருக்கையில், ஒரு வாடகைத் தந்தையை - விந்து தானம் செய்யும் தந்தையை ஏற்றுக் கொள்வார்களா? நிச்சயம் மாட்டார்கள்!!! அதாவது, ஆண்கள் தங்களுக்குச் சௌகரியப்படும் பொழுது இந்த வாடகைத் தாய் முறைமைய ஏற்றுக் கொள்வார்கள் - காரணம் அது அவர்களது ஆண்மையை திருப்திப் படுத்தும் வகையில் அமைகிறது. ஆனால், தகுதியுடைய மனைவி, இன்னொருவனின் விந்தால், கருவுறுவது ஆண்களுக்கு ஏற்புடையாதாயிருக்காது.

ஆக, இந்த வாடகைத் தாய் முறைமை - மனைவிக்கும், கருவை சுமக்கும் பெண்ணிற்கும் இழைக்கப்படும் அநீதியாகத் தான் முடியும். ஆக, சுரண்டப்படும் இருவருமே பெண்கள் தான்.

இந்த வாடகைத் தாய் முறைமையால், ஒர் ஆண் தன் தந்தை இடத்தைத் தக்க வைத்துக் கொள்ள இடமிருக்கிறது. ஆனால், பெண்ணிற்கு இடமில்லை. அவள் தாயாக முடியாது. மாறாக, அவள் வளர்ப்புத் தாயாக மட்டுமே இருக்க முடியும். இது இன்னொரு பெண்ணினுடைய கரு முட்டையுடன் கணவன் விந்து அணுக்கள் கலப்பது என்ற நிலையில் மட்டுமல்ல, அவளது கருமுட்டைகளே, கணவனின் விந்துஅணுக்களோடு கலக்கச் செய்து, வேறொரு பெண்ணின் கருப்பையில் சேர்க்கப்படுகையில் கூட, கருப்பை உறவே தாய் என்ற உறவைத் தீர்மானிக்கும். தன் குழந்தைக்கு பாலூட்டும் பேறு பெறாதவள் என்றுமே தாயாக முடியாதுஇதிலே, மற்றுமொரு கோணத்தையும் காணவேண்டும் - அதாவது கருவுறுவதை தவிர்த்து விட்டு தங்களுக்கென குழந்தைகள் தேடும் பெண்கள் - இந்த வாடகைத் தாயைப் பயன்படுத்திக் கொள்ள பலத்த வாய்ப்புகள் உள்ளன. இதுவும் ஏமாற்று வேலையே. அதே போல, நாளை ஓரினச் சேர்க்கையாளர்கள் கூட, தங்களுக்கென குழந்தைகளை உண்டாக்கிக் கொள்ள முடியும்! இத்தகைய பந்தம் உடைய இவர்களிடத்தில் குழந்தைகள் போய்ச் சேர்ந்தால், அவர்களது மன உளைச்சலுக்கு யார் பொறுப்பேற்பார்கள்?

இறுதியாக, இந்த தம்பதியினர், நாளை பிரிந்து போனால், அவர்கள் இணைந்து இன்று செய்த முடிவு நாளை என்ன ஆகும்?

நிறையக் கேள்விகளை எழுப்பும், இந்த வாடகைத் தாய் வழக்கத்தை முறையாக ஆராய்ந்து, இவ்வாறு குழந்தை வேண்டுவோரின் பின்புலம் பற்றி தீர விசாரித்து, வாடகைத் தாயாக தங்கள் உடலையும், மன எழுச்சிகளையும் விற்கும் பெண்களுக்கு முழுமையான பாதுகாப்பிற்கான ஏற்பாடுகள் செய்து, இவ்வாறு பெறப்படும் அந்தக் குழந்தைகளின் எதிர்கால வாழ்க்கைக்கான உத்தரவாதமும் கிடைக்கச் செய்து, பின் இதைப் பின்பற்றுதல் முறையாக இருக்கும்.

மற்ற சமூக ஒவ்வாமை, மத ஒவ்வாமை, மன உளைச்சல்களை, வாடகைத் தாயாகப் போகும் பெண்களுக்கு முற்றிலுமாக விளக்கிச் சொல்லி, முறைப்படியான counseling கொடுத்து, தாங்கள் செய்யும் செயல் இன்னதென்று, விளங்கிக் கொண்டு, முழு மனதுடன் அந்தப் பெண்கள் விரும்பினால் மட்டுமே அனுமதிக்க வேண்டும்.

அந்நிய செலவாணி மூலம் பன்மடங்காகப் பெருக்கப்பட்ட பணத்தை இறைப்பதன் மூலம் சாதித்துக் கொள்ள முடியும் என்ற சுரண்டல் முறையை முற்றிலுமாக நீக்கி விட்டு, தேவையுடையவர்களுக்கு இதை அனுமதிப்பதே நலம்.

சட்டரீதியான வழிகாட்டுதல்களும், அரசின் கண்காணிப்பும் இன்றி, இதை தனியார் துறைகளிடம் அனுமதித்தால், it will be amounting to the rape of the innocent women of our society by these foreigners.

நட்புடன் நண்பர் அவர்களுக்கு

நீங்கள் எழுதிய பின்னூட்டம் எமக்கு கிடைக்கப் பெற்ற திகதி கடந்த 5ம் திகதியாகும்.

உங்களது பதிவு 02ம் திகதியன்று பிரசுரமாயிருக்கின்றது.

உங்களது பதிவை இடு முன்னரே நீங்கள் பின்னூட்டம் எமக்கு அனுப்பியிருந்தும் அது எமக்கு கிடைப்பதற்கு என்ன தொழில் நுட்பக் காரணமோ புரியவில்லை இடையில் மூன்று நாட்கள் எப்படியோ புகுந்துவிட்டது.

இந்தப் புரியாத தாமதம் தான் பின்னூட்டத்தை பிரசுரிப்பதில் உருவான சுணக்கத்துக்குரிய காரணமாகுமே தவிர உங்களது மாற்றுக்கருத்தை அநுமதிப்பதில் எதுவித பேதத்தையும் நாம் பாராட்டவில்லை என்பதை தெரிவிக்க விரும்புகின்றோம்.

தங்களது கருத்துக்கும் வருகைக்கும் நன்றி.


தமிழரங்கம்

நண்பன் said...

Tamil Circle,


I removed my comment on the subject. I understand this happened due to a technical fault. The same happened to me again, when I replied to Living Smile too.


Asuran had clarified and then I re-sent the comment to your post. Your detailed reply had clarified and I thought, the comment I posted in my blog to draw attention need be there any more as things had been clarified.

Continue to write thought provoking articles. I regret, if my comment in my blog had created any kind of discomfort to you.

Thanks,
Nanban

நண்பர்கள் சொல்கிறார்கள்

CSM - உலகச் செய்திகள்

GF - உலகச் செய்திகள்