"எழுத்துகளையும் தாண்டி எனக்கென்று ஒரு உலகம் உண்டு; நான் எழுதுபவற்றை மட்டுமே வைத்துக் கொண்டு, என்னை எடை போடுபவர்களை எப்பொழுதும் என் எண்ணங்கள் வியப்பில் ஆழ்த்திக் கொண்டே இருக்கும்....."
- நண்பன்

Saturday, March 31, 2007

சல்மான் ருஷ்டி என்ற சாத்தான். (பதிவு 3)

இதன் முதல் பகுதி மற்றும் இரண்டாம் பகுதி வாசித்து விட்டு தொடருங்கள், இங்கே:


ஐரோப்பிய வரலாற்றாசிரியர்கள் பலரும் இந்த சாத்தானிக் வெர்ஸஸ்-ஐ கையிலெடுத்டுக் கொண்டு, இஸ்லாத்தைப் பற்றிப் பக்கம் பக்கமாக தூற்றி எழுதினார்கள். Sir William Muir என்ற வரலாற்றியலாளர் தபரி, வாஹிதி எழுதியவற்றை முழுவதுமாக தன் விருப்பத்திற்கேற்றவாறு பயன் படுத்திக் கொண்டார்.

முய்ரின் வார்த்தைகளில்:

It is hardly possible to conceive how the tale, if not in some shape or other founded in truth, could ever have been invented. The stubborn fact remains, and is by all admitted, that the first refugees did return about this time from Abyssinia; and that they returned in consequence of a rumor that Mecca was converted. To this fact the narrative of Waqidi and Tabari affords the only intelligible clue. At the same time it is by no means necessary that we should literally adopt the exculpatory version of Mohammetan tradition, or seek in a supernatural interpolation, the explanation of actions to be equally accounted for by the natural workings of the Prophets mind. It is obvious that the lapse was no sudden event. It was not a concession won by surprise, or an error of the tongue committed unawares, and immediately withdrawn. The hostility of the people had long pressed upon the spirit of the Mahomet; and, in his inward musings, it is admitted even by othodox tradition that he had been mediating the very expression which, as is alleged, the devil prompted him to utter.

ஆக, முய்ர்ன் வாதம் 'நெருப்பில்லாமல் புகையாது' இது தான் மாண்புமிகு முய்ரின் சிந்தனையின் மாண்பு. இந்த வாதத்தை முன்னரே விளக்கி விட்டேன். To make an ass of yourself - Assume!

இந்த வாஹிதி மற்றும் தபரியை உபயோகித்துக் கொண்ட மற்ற அறிஞர்களுள் சிலர் -

German Scholar - Dr. A. Sprenger எழுதிய Leben des Muhammad புத்தகத்தில் முகமது நபிகளைத் தாக்கி எழுதுவதற்குப் பயன்படுத்திக் கொண்டார். எந்த ஒரு ஆராய்ச்சியும் மேற்கொள்ளாது எழுதிய இவர், கிறித்துவ பாதிரிகள் எழுதியவற்றிலுமிருந்த கற்பனைகளையும் தாராளமாக எடுத்துக் கையாண்டிருக்கிறார். மேலும் H.Grimme and H.Lammens, என்ற ஆசிரியர்கள் முகமதுவை நபிகள் அல்ல என தூற்றுவதில் முன்னணியில் இருந்தனர். என்றாலும் Grimme கூறுவது ' முகமது ஒரு இறைத்தூதர் அல்ல - என்றாலும் முகமது ஒரு சிறந்த சீர்திருத்தவாதி.' அதாவது, முகமது நபிகளை ஏற்றுக் கொள்வதில் தான் அவருக்கு சிரமமிருந்தது - கிறித்துவ மத சிந்தனைகளை ஒட்டி, முகமதுவை மறுத்தாக வேண்டிய கட்டாயத்தினால் எழுதியவர் அவர். லெம்மன்ஸ் ஒப்புக் கொள்கிறார் - இஸ்லாமிய வாய் வழியான மரபுகள் பலவும் ஏற்றுக் கொள்ளத்தக்கது அல்ல - ஒப்புக் கொள்கிறார். ஆனால் அதற்காக இந்தத் தகவலை புறக்கணிக்கவும் இல்லை. அவற்றை முழுதாகப் பயன்படுத்திக் கொள்கிறார். ஒருபுறம் - இந்த செய்திகள் தவறானவை என்ற அறிவு; மறுபுறம் அதை பயன்படுத்திக் கொள்ளும் மோசடித்தனம் - நப்பாசை.

Maxime Rodinson எழுதுகிறார் தனது Mohammed என்ற புத்தகத்தில் ' There was one incident, in fact, which may reasonably be accepted as true because the makers of Muslim tradition would never have invented a story with such damaging implications' இஸ்லாமிய எழுத்தாளர்கள் இவர்களுக்குப் பெருந்தெய்வம் ஆயினர். தங்கள் காலத்தில் கிடைக்கும் பல வேறு தகவல்களையும் இவர்கள் பொருட்படுத்துவது இல்லை.

Montgomery Watt நபிகளை மதிப்புடன் அணுகினாலும், இந்த சாத்தானிக் வெர்ஸஸ் பற்றி பல பக்கங்கள் எழுதி உள்ளார் - தனது Bell's Introduction to the Qur'an என்ற புத்தகத்தில். அவர் எழுதுகிறார் - 'In essentials, it would seem that the account is true since no Muslim could have invented such a story about Muhammad and, indeed, there is confirmation of it in the Quran.' இவர் ஒரு நிலை கடந்து, முஸ்லிம் எழுத்தாளர்கள் சிலரையும் கடந்து, குரானைப் பற்றியும் பேசியவர்.

இவர்கள் கிளப்பிய அவதூறுகள் இஸ்லாமியர்களை மிகவும் பாதித்தது. அப்படி பாதிக்கப்பட்டவர்களில் ஒருவர் - சர். சையத் அஹமத் கான் (1817 - 1898) இந்திய முஸ்லிம்களின் தலைவர்களில் ஒருவரும், அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகத்தைத் தோற்றுவித்தவரும் ஆவார். அவர் தன் பணிகளை எல்லாம் ஒதுக்கி வைத்து விட்டு, லண்டன் பயணமானார். இரண்டு வருடங்கள் அங்கேயே தங்கியிருந்து, பல வரலாற்று ஆவணங்களையும் ஊன்றிப் படித்தார். நூல்களையும் படித்தார். பின்னர் இஸ்லாமியர்கள் எழுதிய பல புத்தகங்களையும் ஆவணங்களையும் முழுவதுமாகப் படித்து முடித்தார். பின்னர் அவற்றைத் தொகுத்து, உருது மொழியில், குதாபெட் - இ - அஹமதிய்யா என்ற புத்தகத்தை எழுதினார். பின்னர் அதை ஆங்கிலத்திலும் அவரே மொழி பெயர்த்தார். விரிவான ஆராய்ச்சிகள் மூலம், பல அறிஞர்களையும் ஆய்ந்து, மேற்கோள் காட்டி, இந்த சாத்தானிக் வெர்ஸஸ் என்ற செய்தியில் துளியும் உண்மை இல்லை என்பதை நிருவினார்.

அவரது புத்தகத்தில் இருந்து -

ஹாபிஸ் இப்னு ஹாஜ்ர், மத ஆய்வாளர் எழுதுகிறார் - ' தபரி எடுத்துக் கொண்ட மரபுகள் யாவற்றிலும் துளியும் உண்மை இல்லை' என்று. மற்றுமொரு அறிஞரான மௌலானா ஷிப்லி நுமானி (சீரத்துன் நபி எழுதியவர்) சொல்கிறார் ' உண்மையை சற்றும் விரும்பாதவர் - புரணி மற்றும் ஊழல்களில் பெரிதும் விருப்பமுள்ளவர்' இப்னு ச'ஆத் இஷாக்கின் புத்தகத்தில் இருந்து பலவற்றையும் எடுத்துக் கொண்டாலும், தீர்மானமாக எதையும் கூறிவிடாமல், இவையெல்லாம் 'interpretive jugglery' என்றே கூறுகிறார். இவர்களை எல்லாம் இஸ்லாமியர்கள் ஒதுக்கி வைத்தாலும் இவர்களைத் தான் இஸ்லாமிய விமர்சகர்கள் விரும்பி ஏற்றுக் கொண்டார்கள். ஏனென்றால், மேற்கொண்ட ஆராய்ச்சிகள் எதுவும் செய்ய வேண்டாம். ஒரு முஸ்லிமைக் கொண்டே அவர்களை விமர்சித்தால் போதுமே என்ற எண்ணம் தான்.

மேலே கூறிய 'வாட்'ஐத் தான் சல்மான் ருஷ்டி தனது ஆதாரமாகக் கொண்டார். சர் சையத் அஹமத் கான், மௌலான மௌதூதி போன்ற இஸ்லாமிய அறிஞர்கள் தந்த கருத்துகளை இவர் அறிந்திருக்கவே இல்லை. அல்லது மூடி மறைத்து விட்டு, இஸ்லாமியர்கள் இந்த குற்றச்சாட்டுக்கு, பதிலே சொல்லாத மாதிரி நினைத்துக் கொண்டு, அவர் தன் இனத்துக்கு எதிராக தன் அறியாமையால் வரலாறாகக் கூட அல்லாமல், புனைவாக முன் வைத்து தன் மீது நீக்க முடியாத இழிவை அள்ளிப் பூசிக் கொண்ட idiot - இந்த சல்மான் ருஷ்டி.

முஸ்லிம்கள் எழுதி வைத்த ஆதாரம் தானே என்றாலும், இது குறித்து ஒரு சிறு ஐயப்பாட்டைக் கூட எழுப்பாது, ஒரு சுட்டுவிரலைக் கூட அசைக்காது, தனது புரணி பேசும் நூலுக்கு - It would sell in millions என்ற வியாபார நோக்கில், தனது கற்பனைகளையும் கலந்து விற்பதற்குத் தயாரானார்.

மற்ற வரலாற்றாசிரியர்கள், தாங்கள் சார்ந்த நம்பிக்கைகளின்படி, மத-வரலாற்றுத் தளங்களில் மட்டுமே விவாதித்துக் கொண்டிருந்த இந்த விஷயத்தை, அது தீர்ந்து பல ஆண்டுகள் கழித்து - வரலாற்றியலாளர்களே தங்கள் தவறை உணர்ந்து, தொடர்ந்து வரும் நூல்களில் இந்த சம்பவத்தைக் குறிப்பிடுவதை தவிர்த்துக் கொண்ட பின்னரும், தனது புத்தக விற்பனையை மட்டுமே நோக்காகக் கொண்டு, ஒரு வரலாற்றுப் புரட்டை மீண்டும், fiction என்று புனைவாக, நஞ்சாக, விற்க முயன்ற கீழ்மையை, கிளம்பிய எதிர்ப்பைக் கண்டதும், அய்யோ, freedom of speech இல்லாமல் போயிற்றே என்று புலம்பிய கோழைத்தனம் ' இவை தான் இந்த நபர் மீது வெறுப்பு கொள்ள வைத்தது. வரலாற்றை சரியாக அறிந்த எந்த ஒரு மனிதனும் - இஸ்லாமியன் அல்ல என்றால் கூட, இந்த ஈனன் மீது காறி துப்புவான். மேலை நாட்டு ஆய்வாளர்கள், கிறித்துவ போதகர்கள் சிறிது சிறிதாக தங்களை மாற்றிக் கொள்ளும் நேரத்தில், இனத்தின் உள்ளிருந்து கிளம்பிய ஒரு நச்சுப் புழு, மீண்டும் இஸ்லாமியர்களின் காயத்தை ஆழ்ந்து கீறியது. உலகம் முழுவதிலுமுள்ள அனைத்து இஸ்லாமிய இதயங்களையும் கீறியது - இதயம் என்று ஒன்று உள்ள எந்த ஒரு இஸ்லாமியனும் இந்த ஈனனின் பெயர் கேட்டால் - இதயம் கொதிப்பான்.

வாட் குரானைப் பற்றி பேசினார் அல்லவா? ஆதையும் ஆராய்ந்து விடுவோமே! மௌலானா அபுல் ஆலா மௌதூதி (founder of Jamat-i-Islami) மிக ஆழ்ந்து இந்தப் பிரச்சினைக்குரிய குரான் வாசகங்களை ஆராய்ந்தார். வரலாற்றை எழுதியவர்கள் எத்தகைய ஆதாரங்களை வைக்கிறார்கள் என்று பரிசோதித்தார். மேலும், இந்த சாத்தானிக் வெர்ஸஸ் நிகழ்ந்ததாக நடந்த காலத்தைப் பரிசோதித்தார். இந்த நிகழ்வு, இஸ்லாத்தின் அடிப்படைக்கே முரணானது என்பதால், இந்த வசனங்கள் என்ன ஆயிற்று என்று கேள்வி கேட்டார். நீக்கப்பட்டது என்றால், எவ்வாறு? எப்பொழுது இந்த re-proof by Allah had come? என்ற கேள்வியை எழுப்பினார்! Reproof பார்த்த பின் எப்பொழுது நீக்கும் உத்தரவிடப்பட்டது? When the order to expunge had come?

மௌதூதி தனது வாதங்களை வைக்கிறார் -


அல்நஜ்ம் என்ற அத்தியாயத்தில் இருந்து,

53:19 நீங்கள் (ஆராதிக்கும்) லாத்தையும், உஸ்ஸாவையும் கண்டீர்களா?

53:20 மற்றும் மூன்றாவதான 'மனாத்"தையும் (கண்டீர்களா?)

53:21 உங்களுக்கு ஆண் சந்ததியும், அவனுக்குப் பெண் சந்ததியுமா?

53:22 அப்படியானால், அது மிக்க அநீதமான பங்கீடாகும்.

உச்சரிக்கப்பட்டதினாலே, ஏற்றுக் கொண்டதாகப் பேசப்பட்ட இந்த வசனங்களில், they are exalted birds, whose intercession is hoped for என்ற வரிகள் என்ன ஆயிற்று? இந்த வரிகள் நீக்கப்படவில்லை என்றால், இந்த வசனங்களின் பொருள் ஒன்றுக்கொன்று முரணாகப் போகின்றதே? தொடர்பில்லாத இந்த வரி, இந்த வசனங்களில் பொருந்த வில்லையே என்ற வாதத்திற்குப் பதில் இல்லை.

53:23 இவையெல்லாம் வெறும் பெயர்களன்றி வேறில்லை. நீங்களும் உங்கள் மூதாதையர்களும் வைத்துக் கொண்ட வெறும் பெயர்கள்! இதற்கு அல்லாஹ் எந்த அத்தாட்சியும் இறக்கவில்லை. நிச்சயமாக அவர்கள் வீணான எண்ணத்தையும், தம் மனங்கள் விரும்புபவற்றையுமே பின் பற்றுகிறார்கள். எனினும் நிச்சயமாக அவர்களுடைய இறைவனிடமிருந்து, அவர்களுக்கு நேரான வழி வந்தே இருக்கிறது.

53:24 அல்லது, மனிதனுக்கு அவன் விரும்பியதெல்லாம் கிடைத்து விடுமா?

53:25 ஏனெனில், மறுமையும், இம்மையும் அல்லாஹ்வுக்கே சொந்தம்.

அதாவது முதல் வரிகளில், அவைகள் உய்விக்கப்பட்ட பறவைகள் - அவைகளின் குறுக்கீடுகள் விரும்பத்தக்கதே என்று சொல்லிவிட்டு அடுத்த வாக்கியத்தில், 53:23ல், இவைகளெல்லாம் வெறும் பெயர்களன்றி வேறில்லை என்று சொல்ல வேண்டிய அவசியம்? ( உண்மை, சாத்தானிக் வெர்ஸஸ் என்ற வாக்கியம் பேசப்படவே இல்லை.)

மேலும், குரைஷிகள் என்ன அத்தனை முட்டாள்களா? அடுத்த வாக்கியம் முற்றிலும் எதிரான ஒரு பொருளைத்தருவது குறித்து எந்த ஒரு கேள்வியும் எழுப்பாமல், அப்படியே விழுந்து வணங்கி விட அவர்கள் என்ன முட்டாள்களா? இது நியாயமாக சிந்திக்கக்கூடிய அறிவிற்குப் பொருத்தமாக இல்லையே?

சரி, அப்புறம் இந்த் re-proof எப்பொழுது எப்படி வந்தது? எந்த வசனத்தின் மூலமாக? அது பனுஇஸ்ரெய்ல் என்னும் அத்தியாயத்தில், வசனம் 73-5 மூலமாக இந்தத் திருத்தம் அனுப்பப்பட்டதாம். அதன் பின்னர் அல்-ஹஜ் என்னும் அத்தியாயம் மூலம் 22:52-3 வசனங்கள் மூலம் நீக்கம் செய்யப்பட்டதாம். வேடிக்கை தான்.

வசனம் 73-5 இறங்கிய காலம், சாத்தானிக் வெர்ஸஸ் ஓதப்பட்டதாக சொல்லப்பட்ட காலத்திலிருந்து - ஆறு வருடங்கள்!!! நீக்கம் செய்யப்பட்ட வசனம் வந்த காலம் மேலும் மூன்றாண்டுகள் கழித்து. அதாவது அந்த தவறான வசனம் - சாத்தானின் வேதம் - நீக்கப்பட 9 வருடங்கள் காலமாகியதாம்!!! இந்த 9 வருடங்களும் குரைஷிகளுக்கும், இஸ்லாமியர்களுக்கும் இடையே சமாதானம் நிலவியதா? இல்லையே! சமாதான உடன்படிக்கையின் படி தான், இந்த வசனத்தை நபிகள் முன்மொழிந்தார் என்றால், இந்த 9 வருடங்களும் சமாதானம் நிலவி இருக்க வேண்டுமே - ஏன் இல்லை? இந்தத் தவறை உணர்வதற்கு 9 வருடங்கள் ஆகியதா, இறைவனுக்கு?

ஒரு குருட்டு மனிதனை அவமானப்படுத்தியதற்காக, நபிகளை கடிந்து இறைவன் இறக்கித்தந்த வசனம், அந்த குருட்டு மனிதன் திரும்பி போகுமுன் வந்தது.


80:1 அவர் கடுகடுத்தார்; மேலும் (முகத்தைத்) திருப்பிக் கொண்டார்.
80:2 அவரிடம் அந்த அந்தகர் வந்தபோது,
80:3 (நபியே! உம்மிடம் வந்த அவர்) அவர் தூய்மையாகி விடக்கூடும் என்பதை நீர் அறிவீரா?
80:4 அல்லது அவர் (உம் உபதேசத்தை) நினைவு படுத்திக்கொள்வதன் மூலம், (உம்முடைய) உபதேசம் அவருக்குப் பயனளித்திருக்கலாம்.
80:5 (உம் உபதேசத்தின்) தேவையை எவன் அலட்சியம் செய்கிறானோ-
80:6 நீர் அவன்பாலே முன்னோக்குகின்றீர்.
80:7 ஆயினும் (இஸ்லாத்தை யேற்று) அவன் தூய்மையடையாமல் போனால், உம் மீது (அதனால் குற்றம்) இல்லை.
80:8 ஆனால், எவர் உம்மிடம் விரைந்து வந்தாரோ,
80:9 அல்லாஹ்வுக்கு அஞ்சியவராக-
80:10 அவரை விட்டும் பராமுகமாய் இருக்கின்றீர்.

கணப்பொழுதில், கடிந்து கொள்ளும் வசனத்தை நபிகள் ஒளித்து வைக்கவில்லை. மாறாக அதையும் தன் சகாக்களிடம் கூறி, எழுதி வைக்குமாறு கூறினார். எப்படி தனக்கு வசனங்கள் கூறப்பட்டதோ, அப்படியே. கூடுதலும் கிடையாது, குறைவும் கிடையாது.

இவ்வாறிருக்கும் பொழுது, ஒரு தவறைக் கண்டுபிடிக்க ஆறு வருடங்கள் இறைவன் காத்திருந்தானா? ஏன்? ஆறு வருடங்களுக்குப் பின் அதை நீக்குவதற்கு மேலும் மூன்று வருடங்கள் காத்திருந்தானா? அறிவிற்குப் பொருந்தாத இந்த தர்க்கங்களை, தன்னைக் கழுதையாக்கிக் கொள்ளும் தத்துவக்காரர்களால் மட்டும் தான் ஏற்றுக் கொள்ள இயலும். எந்த நேர்மையான ஆய்வாளர்களும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.

அடுத்த கட்டமாக, இந்த வசனங்கள் தான் திருத்துவதற்கும், நீக்குவதற்கும் அனுப்பப்பட்டது என்று கொண்டாலும், அந்த வாசகங்கள் அந்தப் பொருளைத் தான் தருகின்றனவா? கிடையாது.

கிடையவே கிடையாது. இந்த வசனங்கள் ஒன்றுக்கொன்று தொடர்பில்லாதவை. ஒட்ட இயலாதவை. சூழ்நிலை விட்டு விலகி நிற்பவை. பனுஇஸ்ரெய்ல் வசனம் (73-5):

17:73 (நபியே!) இன்னும் நாம் உமக்கு வஹீ மூலம் அறிவித்தோமே அதை விட்டும், அதல்லாததை நம்மீது நீர் இட்டுக்கட்டிக் கூறும்படி உம்மைத் திருப்பிவிடவே அவர்கள் முனைந்தார்கள், (அவ்வாறு நீர் செய்திருந்தால்) உம்மை தம் உற்ற நண்பராகவும் அப்போது எடுத்துக் கொண்டிருப்பார்கள்.

17:74 மேலும், நாம் உம்மை (ஹக்கான பாதையில்) உறுதிப்படுத்தி வைத்திருக்க வில்லையெனின் நீர் கொஞ்சம் அவர்கள் பக்கம் சாய்ந்து போயிருத்தல் கூடும்.

17:75 (அவ்வாறு நீர் சாய்ந்திருந்தால்) நீர் இவ்வாழ்நாளில் இரு மடங்கு (வேதனையும்,) மரணத்தில் இரு மடங்கு (வேதனையு)ம் நுகருமாறு நாம் செய்திருப்போம், பின்பு, நமக்கு எதிராக உமக்கு உதவியாளர் எவரையும் நீர் காணமாட்டீர்

இதில் என்ன திருத்தம் அனுப்பப்பட்டது என்று இந்த வசனத்தை முன் வைத்தவர்களால் விளக்கிச் சொல்ல முடியவில்லை. 'அவர்கள் முனைந்தார்கள்' என்ற வார்த்தைகள் நபிகளுக்கு எதிராக சூழ்ச்சி செய்தவர்களையே அடையாளம் காட்டுகிறதே தவிர, நபிகள் தவறான வசனங்களை மொழிந்தார் என்று கூறவில்லை. அவ்வாறு செய்யவில்லை நீர் என்பதை உறுதிபடுத்துகிறது. மேலும், தவறான பாதையை நோக்கி சாய்ந்தால் கூட, அதற்கு எத்தனை கொடிய தண்டனையை வழங்குவோம் என்ற எச்சரிக்கையும் கலந்திருந்தது. இத்தகைய எச்சரிக்கைகள், ஆங்காங்கு இருக்கின்றது - நம்பிக்கையாளர்களுக்கு.

அத்தகைய வசனங்களில் ஒன்று தான் இது தவிர, இதில் எந்த reproofம் அனுப்பப்படவில்லை. அடுத்ததாக சொல்லப்பட்ட, expunging order அந்த வசனங்களைப் பார்ப்போம் -

22:52 (நபியே!) உமக்கு முன்னர் நாம் அனுப்பி வைத்த ஒவ்வொரு தூதரும் நபியும் (ஓதவோ நன்மையையோ) நாடும்போது, அவர்களுடைய அந்த நாட்டத்தில் ஷைத்தான் குழப்பத்தை எறியாதிருந்ததில்லை, எனினும் ஷைத்தான் எறிந்த குழப்பத்தை அல்லாஹ் நீக்கியப் பின்னர் அவன் தன்னுடைய வசனங்களை உறுதிப்படுத்துகிறான் - மேலும், அல்லாஹ் யாவற்றையும் அறிந்தவனாகவும், ஞானம் மிக்கோனாகவும் இருக்கின்றான்.

22:53 ஷைத்தான் (மனங்களில்) எறியும் குழப்பத்தை, தங்களுடைய இருதயங்களில் நோய் இருக்கிறதே அவர்களுக்கும், தங்களுடைய இருதயங்கள் கடினமாக இருக்கின்றனவே அவர்களுக்கும் ஒரு சோதனையாக ஆக்குவதற்கே (அவ்வாறு செய்தான்) அன்றியும், நிச்சயமாக. அநியாயம் செய்பவர்கள், நீண்ட (எதிர்ப்பிலும்) பகையிலும் தான் திடனாக இருக்கிறார்கள்.

இது ஒரு பொதுவான, எந்த ஒரு நிகழ்வையும் குறித்து சொல்லப்படாமல், ஒவ்வொரு நபிமார்களின் வாழ்விலும் சாத்தான் ஏற்படுத்தும் குழப்பங்களை எவ்வாறு இறைவன் நீக்கி, எல்லா நபிமார்களின் சொற்களையும் உறுதிபடுத்தினான் என்பதைத் தான் பொதுப்படையாக பேசி இருக்கிறதே தவிர, நபியே நீர் கூறிய தவறான வசனத்தை மாற்றிக் கொள்ளும் என்ற உத்தரவெல்லாம் இல்லை.

எல்லா நபிமார்களும் சாத்தானால் குழப்பத்திற்குள்ளாக்கப்பட்டார்கள். அவற்றிலிருந்து அவர்களைக் காத்து, இறைவன் தன் சொன்னவற்றை நிரூபித்தான் என்ற வசனம் இவர்களால் தவறாக மேற்கோளிடப்பட்டது. அத்தனையே!!!

மேலும் இந்த வசனங்களுக்கு முன்னும் பின்னும் அமைந்த வசனங்கள், இவை சாத்தானிக் வெர்ஸஸ் என்ற வசனத்தை நீக்குவதற்காக ஏற்பட்டதாகச் சொல்லப்படும் வசனங்களுடன் இணைத்துப் பார்த்தால், தெரியும் - பொருத்தமின்மை.

இவ்வாறு அனைத்து வாதங்களுக்கும் மறுப்பு தெரிவித்த பின்னர், என்ன நடந்தது என்பதை மௌதூதி அவர்களே தொகுத்து வழங்கினார்கள்.
1. குரைஷிகள் தலை தாழ்த்தி வணங்கியது.
2. லாத், உஸ்ஸா, மனாத் என்ற அவர்களின் ப்ரிய தெய்வங்களின் பெயர் சொல்லப்பட்டதும் பரவசம் கொண்டது. (இவைகள் வெற்று பெயர்களே என்ற கண்டன வரிகள் பின்னர் வருவதை இவர்கள் அறிந்திருக்கவில்லை. கண்டுகொள்ளவுமில்லை.)
3. அபிசீனியாவில் இருந்து முஸ்லிம்கள் மக்கா திரும்பத் துவங்கினர்.


இவைகளெல்லாம் ஒன்றாக இணைக்கப்பட்டு, சாத்தானிச் வெர்ஸஸ் என்ற கதை உருவாக்கப்பட்டது. இந்தக் கட்டுக்கதையை ஆராயாது, கேட்டதை கேட்டவாறே எழுதி வைத்தனர் - உண்மையை விட, Romantic fables ஐ அதிகம் விரும்பிய சில இஸ்லாமிய அறிஞர்கள். தங்களுக்குக் கூறப்படும் வசனத் தொடர்கள் - strong / weak என ஆராய முற்படவில்லை. மேலும் இவர்கள் தாங்கள் கேட்டதை கேட்டவாறு எழுதி வைத்திருக்கிறோம் என்ற Disclaimerஐயும் எழுதி வைத்திருந்தார்கள். இவர்களை மேற்கோள் காட்டிய ஐரோப்பிய அறிவுஜீவிகள் இந்த டிஸ்க்ளெய்மர்களை சாதூர்யமாக மறைத்துக் கொண்டனர்.

இவர்கள் (இஸ்லாமிய / ஐரோப்பியர்கள் ) செய்த தவறையெல்லாம், மௌதூதியின் வாதங்கள் தவிடு பொடியாக்கியது. 'தன்னைக் கழுதையாக்கிக் கொள்ளும் தத்துவவாதிகள்' அத்துடன் தொலைந்து போயினர்.

புதிய வரலாற்றாசிரியர்கள் தோன்றினர். அவர்கள் எழுதியதைப் பற்றி...

அடுத்த - இறுதிப் பதிவில்... ... ...

2 comments:

gulf-tamilan said...

நல்ல பதிவு தொடரவும்!!!

நண்பன் said...

மிக்க நன்றி, gulf-tamilan,

அன்புடன்
நண்பன்

நண்பர்கள் சொல்கிறார்கள்

CSM - உலகச் செய்திகள்

GF - உலகச் செய்திகள்