"எழுத்துகளையும் தாண்டி எனக்கென்று ஒரு உலகம் உண்டு; நான் எழுதுபவற்றை மட்டுமே வைத்துக் கொண்டு, என்னை எடை போடுபவர்களை எப்பொழுதும் என் எண்ணங்கள் வியப்பில் ஆழ்த்திக் கொண்டே இருக்கும்....."
- நண்பன்

Monday, January 09, 2006

வாய் சொல் வீரனடி - கிளியே....

//என்னமோ போங்க, நான் கூட அமீரகத்துல தான் இருக்கிறேன்.என்னுடைய பதிவுக்கு வருவாங்க, பின்னூட்டம் போடுவாங்க.ஆனா மறந்தும் + குத்திடமாட்டாங்க. இதுவரை இரண்டே இரண்டு பதிவுகள் "நட்சத்திர அந்தஸ்து" பெற்றிருக்கின்றன. அதுல ஒண்ணு அல்பாயிசு. மறுநாள் பார்த்தால் காணவில்லை. அடுத்த ஒன்று வெற்றிக்கரமான நாலாவது நாள். இருங்க இன்றைக்கு இருக்கிறதா என்று இன்னும் பார்க்கவில்லை :-)//

பூங்குழலியின் பதிவு ஒன்றில் பின்னூட்டமிட்டிருக்கிறார் சகோதரி, உஷா.

சகோதரி ராமச்சந்திரன் உஷா,

நானும் கவிதைகள், கதை, இலக்கியக் கட்டுரைகள் எல்லாம் எழுதித் தான் பார்த்தேன் - பார்க்க பழம் பெரு ஆரம்ப காலப் பதிவுகளை.
என்றாலும் ஒருவர் கூட வந்து எட்டிப் பார்க்கவில்லை. ஒரு வார்த்தை கூட சொல்லவில்லை. என்றாலும் சரி அப்படியே இருக்கட்டும் என விட்டுவிட்டேன்.

அப்பொழுது தான் ஆயிஷா என்ற அற்புதம் தலைப்பில் எழுதினேன் - மிகுந்த வரவேற்பு. தொடர்ந்து இஸ்லாத்தின் மீதான தாக்குதலுக்கு எதிரான பதிவுகள் அனைத்திற்குமே மிகுந்த வரவேற்பு இருந்தது.

தங்களுக்கு மட்டுமே தேசமும், பக்தியும், சொந்தம் என நினைக்கும் சில தேசபக்தர்களின் முகத் திரையைக் கிழிந்தெறிந்த அந்தக் கடைசிப் பதிவிற்கு கிடைத்த வரவேற்பு மகிழ்வு தருகிறது. அதிலும் கனிசமான அளவிற்கு மைனஸ் குத்தத் தான் செய்திருக்கிறார்கள். அதாவது எங்களுக்கும் இந்த தேசம் உரிமை உடையது. எங்களுக்கும் இந்த தேச பக்தி எல்லாம் இருக்கிறது. தீவிர வாதிகள் என நீங்கள் சொல்லும் இனம் எல்லா மதத்திலும் இருக்கிறது. அதை எல்லாம் கண்டிக்க உங்களுக்குத் தான் திராணியில்லை என்று ஒரு இஸ்லாமியன் சொன்ன போது அதை அனைவரும் எதிர்ப்பின்றி வரவேற்றிருக்க வேண்டும்.

ஆனால், அதிலும் மைனஸ் குத்திய வக்கிரம் பிடித்த மனதுடைய உயர்தரங்கள் தங்கள் மனதின் ஊனத்தைத் தான் வெளிப்படுத்திக் கொண்டார்கள்.
மேலும் இங்கு புலம்பும் வாய்ச்சொல்வீரன் - வீரன் என்ற பெயர் வைத்துக் கொண்டு பேடி போல ஒளிந்து வாழும் இந்த மனிதன் - புலம்புகிறார் - அமீரகத்தில் தான் அறிவுள்ளவர்கள் இருக்கிறார்கள் என்று. நீர் சொன்னாலும் சொல்லாவிட்டாலும் அறிவுஜீவித்தனம் கல்வி கற்றறிந்த அனைவருக்கும் பொதுவானது தான். கல்வி, அறிவு என்பதெல்லாம் தங்களுக்கு மட்டுமே சொந்தம் என உரிமை கொண்டாட இனி யாராலும் முடியாது. அதற்குப் போட்டியாக இன்று பலரும் கிளம்பி விட்டனர். இந்த உண்மை தாங்காமல், இன்று அழுது அரற்றிப் புலம்பும் வாய் சொல் வீரனைப் பார்த்து கொஞ்சம் பரிதாபமாகத் தான் இருக்கிறது.

உஷா, அமீரகத்தில் இருப்பதால் மட்டும் அறிவுஜீவி என்று ஒருவர் சொன்னால் அதை அப்படியே ஏற்றுக் கொண்டதை நினத்து மனம் வருந்துகிறேன். அந்தப் பதிவில் அனைவருக்கும் உடன்பாடிருந்திருக்கிறது. இஸ்லாமியர்கள் மட்டுமல்ல, பிற மதத்தினர் உட்பட. ஒரு சிலரைத் தவிர அனைவருக்கும் அந்தப் பதிவில் உடன்பாடே. அதனால் மட்டுமே அத்தனைப் பதிவுகளைப் பெற்றது. இரவு ஒரு மணி தாண்டியும், சில சமயங்களில் - எழுதிக் கொண்டிருக்கும் வேளையில் - பார்த்தால், என் பதிவை வாசித்துக் கொண்டிருப்பார்கள் - அமெரிக்காவில் இருந்து. எனக்குத் தெரிந்து பெரும்பாலான சமயங்களில் இந்த மேலை நாட்டு நண்பர்களின் உலாவுதல் தான் அதிகமே தவிர, இஸ்லாமிய நண்பர்கள் மட்டுமே அல்ல.

அதற்கு காரணமென்ன?

தெளிவான கருத்துகள், விளக்கம் கொடுக்க முடிகின்ற தெம்பு, இயல்பான நடை, இத்துடன் இனப்பாதுகாப்பில் உறுதியுடன் நிற்பது. வாதத்தில் மாற்று மதத்தினரை இழிவு செய்யாதிருப்பது - எங்காவது ஒரு பதிவை சுட்டிக்காட்டுங்கள் பார்ப்போம் - இந்து மதத்தைப் பற்றியோ, அல்லது, பிற மதங்களைப் பற்றியோ இழித்தோ, பழித்தோ பேசியிருக்கிறேனா என்று. கிடையாது. என் மதத்தைப் பற்றிய குற்றச்சாட்டிற்கு மட்டுமே பதில் சொல்கிறேன். நீ என்னை இழிவு செய்தால், பதிலுக்கு உன்னை இழிவு செய்வேன் என்று எங்குமே நான் செயல்பட்டதில்லை. இழிவு செய்தவர்களைக் கூட பதிலுக்கு நியாயமான முறையிலே தான் அழைக்கிறேன். வெறுப்பு உமிழும் மொழியால் அல்ல. அதனால், மற்றவர்களும் மரியாதையுடன் நடந்து கொள்ளவே செய்கின்றனர். இந்த மரியாதையோடு விலகி நிற்பதை விட்டு விட்டு, விவாதங்களில் கலந்து கொள்வது எல்லாருக்குமே நன்மை பயக்கும்

எப்பொழுது மதிப்பிழந்து போவார்கள்?

பிற மதத்தினரைப் பார்த்து ஏதாவது குறை சொல்லி எழுதுவதும், பின்னர் ஜகா வாங்குவதும், எழுதும் விஷயங்களைப் பற்றிய முழுமையான ஞானம் இல்லாது இகழ்வதும், பின்னர் மற்றவர்கள் வந்து, விளக்கம் கொடுக்கும் பொழுது தனது கருத்தை மாற்றிக் கொள்வதும் வாசிப்பவர்கள் மத்தியில் நம்பிக்கையின்மையைத் தான் வளர்க்கும்.

கதைகள் மட்டும் எழுதி விட்டு, அதை மற்றவர்களுக்கு பரிந்துரைக்கவில்லையே என்றால் என்ன செய்வது? பரிந்துரைக்க வேண்டுமென்றால், அதில் ஏதாவது விஷயமிருக்க வேண்டும் இல்லையா? அப்படி இல்லையென்றால், அதைப் பரிந்துரைத்து என்ன லாபம்?

பரிந்துரைகள் கிட்டாததினால் வருத்தமடையும் நீங்கள் - எத்தனை பேருடைய கதை கவிதைகளைக் குறித்து விமர்சித்து இருக்கிறீர்கள்?

வாய்ச்சொல் வீரனின் புலம்பலுக்கு இத்தனை மெனக்கெடும் நீங்கள் - மற்ற கதை கவிதை எழுதும் அன்பர்களின் தளத்திற்குப் போய் உங்கள் விமர்சனத்தையும் பரிந்துரைத்தலையும் வையுங்கள் - பின்னர் அனைவரும் உங்கள் படைப்பிலக்கியத்தின் மீதும் கவனம் கொள்வார்கள். ஏன் உங்களுக்குத் தெரியுமா - வெறும் கவிதைகள் எழுதத் தான் நான் வலைப்பூவிற்கே வந்தேன் என்று?

பிறரை மதிக்கும் பொழுது, நம்மையும் பிறர் மதிப்பர்.

முடிக்கும் முன், ஸ்ரீகாந்த் மீனாட்சி எழுதிய சுஜாதவைப் பற்றிய பதிவுக்கு எழுதிய பின்னூட்டத்தின் கடைசி சில வரிகளை இங்கு வைத்து விடுகிறேன் உங்கள் பார்வைக்கு -

// He (சுஜதா) did not have any other option to get recognised other than by his own community and he grabbed the opportunity as it had come. Still, he was better than S.V.Shekhar and Cho.Ramasamy - who abstained for their own motives.
After all, Sujatha had gathered enough guts to show his true color whereas still lot of human (சோ மற்றும் எஸ்வி சேகர்) around try to prove that they are secular by staying away from their own people.

Let some one tell them that secularism is not a premise for denying the identity of a human - but, it’s a doctrine that accept others with different identities, as equal while you keep your identity.

Thanks and best wishes for the New Year.//

ஆம் - உங்களை உங்கள் அடையாளங்களுடன் சேர்த்தே மதிப்பு கொடுப்பேன். அதனால் பயப்படாமல் உங்கள் கருத்துகளை எழுதுங்கள். எழுதியவற்றை நீக்கவோ மறுக்கவோ வேண்டாம்.

''நான் அப்படியெல்லாம் இல்லையாக்கும்'' - என்று மறுக்க வேண்டாம்.

இல்லையென்றால் - நண்பர் ஆசிஃப் மீரானிடம் புகார் சொல்லியிருப்பீர்களா - நண்பன் ரொம்ப காட்டமா எப்பவும் பதில் சொல்றார் என்று???

(வருத்தமில்லை - ஆனால், புன்னகைக்கத் தோன்றுகிறது.)

சரி - இந்த பதிவு எதற்கு என்று கேட்கிறீர்களா? வாய் சொல் வீரனுக்கு நீங்கள் கொடுத்த முக்கியத்துவம் - போலி பெயர்களில் வருபவரின் கூற்றை இத்தனை சிரமேற் கொள்ள வேண்டுமா என்ற கேள்வி தான்.

மற்றவை - உங்கள் மனசாட்சிக்கு. ( பலரின் மனசாட்சிகளை கூர்ந்து அணுகி ஆராய்ந்து கதை எழுதும் சகோதரிக்கு தன்னுடைய மனசாட்சியை கூர் பிரித்து நோக்குவதற்கு நான் சொல்லித் தர வேண்டுமா என்ன?)

நன்றி,

அன்புடன்
நண்பன் என்ற ஷாஜஹான்.

6 comments:

வசந்தன்(Vasanthan) said...

என்ன நடக்குதெண்டு சரியா விளங்கேல. மற்றதுகளையும் வாசிக்கிறன்.

நண்பன் said...

நன்றி, வசந்தன்

படியுங்கள்.

நன்றி

Sundar Padmanaban said...

//தெளிவான கருத்துகள், விளக்கம் கொடுக்க முடிகின்ற தெம்பு, இயல்பான நடை, இத்துடன் இனப்பாதுகாப்பில் உறுதியுடன் நிற்பது. வாதத்தில் மாற்று மதத்தினரை இழிவு செய்யாதிருப்பது //

உண்மை. பாராட்டுகள். தொடர்ந்து எழுதுங்கள்.

அன்புடன்
சுந்தர்.

நண்பன் said...

நன்றி சுந்தர்.

படிப்பதற்கு ஆட்கள் இருந்தாலும் இல்லாவிட்டாலும் எழுதுவேன்.

நானே ஒரு நல்ல வாசகன் தான்.

பூனைக்குட்டி said...

//நானும் கவிதைகள், கதை, இலக்கியக் கட்டுரைகள் எல்லாம் எழுதித் தான் பார்த்தேன் - பார்க்க பழம் பெரு ஆரம்ப காலப் பதிவுகளை.
என்றாலும் ஒருவர் கூட வந்து எட்டிப் பார்க்கவில்லை.//

நண்பன் உங்கள் கவிதைகள் எனக்கு பிடிக்கும்னு சாதாரணமா எல்லாம் சொல்லமாட்டேன் ரொம்பவே பிடிக்கும். கவிதை எழுதிட்டாங்க்யளேன்னு நான் எல்லா கவிதைகளையும் படிப்பதில்லை. ஆனால் நீங்கள் எழுதியதை நான் பார்த்திருந்தால் படித்து புரிந்து கொள்ள நிச்சயமாக முனைவேன்.

பல சமயங்களில், எனது வீட்டிலும் கூட நான் பீட்பேக்ஸ் தருவதில்லை, சாப்பாடு அருமை பிரமாதம், போன்றவைகளை. அதைப்போலவே உங்களிடமும், உங்கள் கவிதைகளிடமும்.

இப்போது எழுதும் ஒரே காரணம். நீங்கள்யாருமே கண்டுகொள்வதில்லை என்று குறிப்பிட்டிருந்ததால் தான். நானே கவனிக்கிறேன் என்றால் உங்கள் கவிதைகள் பலரால் கவனிக்கப்படும், கின்றன. சில சமயங்களில் உங்களுடைய கருத்து முழுமனதாக எனக்கு சம்மதமே. சுந்தரவடிவேலின் பதிவில் பின்னூட்டம் நீங்கள் இட்டிருந்தால் அதில் பெரும்பாலானவை எனக்கும் சம்மதமே. ஆனால் வெளியில் சொல்வதில்லை. அதற்கு எந்த என்னைப்பற்றிய கருத்தும் மாற்றப்படும் என்பது காரணமல்ல நேரம் மட்டுமே.

நண்பன் said...

கருத்து மாற்றிப் பொருள் கொள்ளப்படும் என்பது மட்டுமல்ல - சில சமயங்களில் மாற்றிப் பொருள் கொள்வதிலே முனைந்து ஈடுபடுகிறார்கள் மக்கள் என்பது தான் கவலை அளிக்கிறது.

மற்றபடி, கவிதைகள் சற்று சிரமமான தளம் என்பது உண்மை. அதிலும் நான் எழுதும் சில கவிதைகளைப் புரிந்து கொள்வதில் சிரமம் இருக்கத் தான் செய்கிறது.

எளிமையான கவிதைகள் எழுதுவதில்லையா என்று கேட்காதீர்கள். சில கவிதைகள் அத்தனை எளிமையானவை. என்றாலும் எளிமையை முன்னிட்டு, கவிதை தரும் மற்ற வடிவங்களுக்குள் போகாதிருக்க முடியுமா என்ன?

நன்றி.

நண்பர்கள் சொல்கிறார்கள்

CSM - உலகச் செய்திகள்

GF - உலகச் செய்திகள்