"எழுத்துகளையும் தாண்டி எனக்கென்று ஒரு உலகம் உண்டு; நான் எழுதுபவற்றை மட்டுமே வைத்துக் கொண்டு, என்னை எடை போடுபவர்களை எப்பொழுதும் என் எண்ணங்கள் வியப்பில் ஆழ்த்திக் கொண்டே இருக்கும்....."
- நண்பன்

Friday, January 20, 2006

பாதுகாப்பு - ஒரு பெண்ணின் பார்வையில்.

ஜனவரி திசைகள் இதழ் துபாய் சிறப்பிதழ் போல் மின்னியது என்றே சொல்ல வேண்டும். எனக்குத் தெரிந்து மூன்று துபாய் கவிஞர்களின் கவிதைகள் வெளியாகி இருந்தன. அதில் பாதுகாப்பு என்ற தலைப்பில் சகோதரி ஜெஸிலா ரியாஸ் அவர்கள் எழுதிய கவிதை பளிச்சென்று மனதைத் தொட்டது. எது பாதுகாப்பு என்பது குறித்த தீர்க்கமான சிந்தனை இங்கே பலரும் அறிய வேண்டிய செய்தி.

இனி கவிதைக்கு -

பாதுகாப்பு
***
ஜெஸிலா ரியாஸ்
***
அமீரகம்
***

துபாய் நிலா வெளிச்சத்தில்
நள்ளிரவில்
துணையின்றி
பூச்சிகளின் ஒலிகளுக்கு நடுவே
மூடிய கடைகளை பார்த்தபடி
எங்கோ கேட்கும்
வாகன சத்தத்தை உணர்ந்தபடி
தெரு விளக்கின்
பிரகாசத்தை இரசித்தப்படி
சுத்தமான அகல தெருவில்
நிமிர்ந்த நடையுடனும்
நேர் கொண்ட பார்வையுடனும்
காசு நிறைந்த கைப்பையுடனும்
விலைமதிப்புள்ள பொருட்களுடனும்
விலைமதிப்பில்லா கற்புடனும்
சின்ன சீண்டலுக்கும் கிண்டலுக்கும்
சிக்காமல்
வீடு திரும்பும் போது
ஆதங்கம் தொட்டது
எப்போது விடியும்
என் தேசம் இப்படியென்று!

7 comments:

இப்னு ஹம்துன். said...

நண்பரே,
நல்ல கவிதைகளை தந்துக்கொண்டிருப்பதுடன் நல்ல கவிதைகளை அடையாளங்காட்டவும் செய்கிறீர்கள். மகிழ்ச்சி.

நேரிய சிந்தனையுடன் கருத்துக்களை எடுத்து வைக்கும் உங்கள் வழி பாராட்டத்தக்கது

Ram.K said...

நல்ல கவிதை.

இந்தக் கவிதை பேசும் பாதுகாப்பு பற்றி டெல்லியில் ஒரு சர்வே மற்றும் தணிக்கை நடந்தது எனச் செய்தி படித்தேன்.

ravi srinivas said...

கவிதை எழுதியவருக்கும் , அதை இங்கு இட்டவருக்கும் ஒரு செய்தி


Cruel judicial punishments

In December, two women domestic migrant workers – Indonesian national Wasini bint Sarjan and Indian national Rad Zemah Sinyaj Mohammed – were sentenced to flogging, after becoming pregnant outside marriage, by a Shari’a (Islamic) Court in Ras al-Khaimah. Rad Zemah Sinyaj Mohammed was sentenced to 150 lashes, to be received in two sessions, followed by deportation. Wasini bint Sarjan was sentenced to one year’s imprisonment and 100 lashes, followed by deportation.

The sentences were to be carried out once the women had given birth and their children had been weaned.
http://web.amnesty.org/report2005/are-summary-eng

இது போன்ற குரூரமான தண்டனைகள் இந்தியாவில் இல்லை.துபாயில் பெண்களுக்கு எதிராக
வன்முறைகளே இல்லையா என்ன?. பொய்தான் சொல்லுகிறீர்கள், நம்பும்படியாவது இருக்கட்டுமே.
இந்தியாவில் பாதுகாப்பான இடங்கள் இல்லையா அல்லது உலகில் வேறு எங்குமே இல்லையா.

நண்பன் said...

ravi,

சோரம் போவதை நாகரீகமாக கருதும் உங்கள் போன்றவர்களால் தான் பிறர் மீது குற்றம் சுமத்த முடியும் - பொய் சொல்கிறார்கள் என்று.

லட்சக்கணக்கில் வேலை செய்பவர்களுக்கு மத்தியில், ஓரிரண்டு விதி விலக்குகளைத் தான் உங்களால் காட்ட முடியும். இது மாதிரி விதிவிலக்குகளை எந்த ஒரு சமுதாயத்திலும் எடுத்து வைக்க முடியும். இந்த விதி விலக்குகளை எடுத்துக் கொண்டு வாதத்திற்கு வரும் உங்கள் அறியாமையை எண்ணி சிரிக்கத் தான் செய்ய முடியும்.

சரி - சொல்லுங்கள் - எந்த சமூகத்தைப் பற்றி பேச வேண்டும் என்று?. மழுப்ப வேண்டாம் - சமூகத்தைக் குறிப்பிடுங்கள்.

உடலுறவிற்கு சம்மதித்தால், விசா வழங்கப் படும் என்ற பிரிட்டீஷ் பண்பாட்டைப் பற்றி பேசுவோமா?

தாங்கள் தங்குவதற்கு இடம் கொடுத்தால், அந்த நாட்டுப் பெண்களை கற்பழிக்கவும் - immunity to rape - உரிமை வேண்டும் என்று பிலிப்பைனில் மற்றும் இராக்கில் கேட்ட அமெரிக்க ராணுவ பண்பாட்டைப் பற்றி பேசுவோமா?

அல்லது அமைதியான ஸ்டவ் வெடிப்புகளில் மூடிப்புதைக்கப்படும் பெண்களைப் பற்றிப் பேசுவோமா?

அல்லது 25 பென்குழந்தைகளுக்கு ஒரு பெண் குழந்தை என்று கொலை செய்து கொண்டிருக்கும் சமூகத்தைப் பற்றி பேசுவோமா?

பெண்கள் - எண்ணிக்கையில் 35 லட்சம் பேர் வரை விகிதாச்சாரத்தில் தேய்ந்து போனார்கள் இந்தியாவில் என்பது தெரியுமா? இந்த விகிதத்தில் - இந்திய சமூகங்கள் - மகாபாரத விதிகளைப் பின்பற்ற தள்ளப்படும் என்ற நிலை தெரியுமா?

கோத்ரா சம்பவத்தில், கர்ப்பிணி பெண்களை கற்பழித்த இந்தியர்களைப் பற்றி பேசுவோமா - அல்லது கர்ப்பிணிகளின் வயிற்றைக் கிழித்து குழந்தைகளை எடுத்து நெருப்பில் இட்டு மகிழ்ந்த மக்களைப் பற்றி பேசுவோமா?

கேரளாவில் கன்னித்தன்மையே முதன்மை என்று வாழ்வதனால், கன்யாஸ்திரிகள் என்று கூறப்படும் கிறித்துவ பெண்களைக் கற்பழித்து, இனி எப்படி நீ கன்யாஸ்திரியாக இருக்க முடியும் என்று கொக்கரித்த வக்கிர கும்பலை பற்றி பேசுவோமா?

அல்லது, பெற்றவர்களுக்குக் கொள்ளி வைக்கும் உரிமை ஆண்களுக்கு மட்டும் தான் உண்டு என்ற விதி ஏற்படுத்தி, பெண்களை இரண்டாம்தர குடிமக்களாக்கி - இனி, இந்த உலகில், எந்த ஒரு சட்டத்தாலும், எந்த ஒரு தர்மத்தாலும், எந்த ஒரு சம்பிராயத்தாலும், பெண்களை சமதையாக ஏற்க மறுக்கும் ஒரு சமூக கட்டமைவில் இருந்து கொண்டு, பெண்கள் உரிமை பற்றி பேசுவதற்கு சற்று கூச்சப்படுங்கள் ravi.

ஆண்குழந்தை பெற்றால் மட்டும் தான் சுவர்க்கம் செல்ல முடியும் என்ற விதி வகுத்து, பெண்கள் எப்பொழுதுமே இரண்டாம் பட்ச நிலையாளியாக மட்டும் தான் வாழ முடியும் என்ற தர்மத்தை உண்டாக்கி, எத்தனை போராடினாலும் விமோசனமற்ற நிலைபாட்டையுடைய அமைப்பில் இருந்து கொண்டா, அடுத்தவர்களைப் பற்றி - குற்றம் செய்தவர்களைப் பற்றி, விவாதிக்க வந்து விட்டீர்கள்?

ravi,

அவமானமாக இருக்கிறது - உங்களுடன் பேசுவதற்கு.

இது உண்மையிலே நீங்கள் தான் எழுதியதா - அல்லது ஏதாவது போலியா? அல்லது உங்கள் சிந்திக்கும் திறன் இத்தனை மட்டமானதா?

சோரம் போன தவறு செய்த பெண்களைப் பற்றி நீங்கள் பேசுகிறீர்கள்.

நான் குறிப்பிட்ட பெண்கள் அனைவரும் எந்த தவறுமே செய்யாதவர்கள். நீங்கள் கவலை கொள்ள வேண்டியது - உங்கள் முதுகில் ஒட்டிக் கொண்டிருக்கும் அழுக்கைப் பற்றி. நீங்கள் குறிப்பிட்ட விதிகள் வெளிநாட்டிலிருந்து வரும் பெண்களுக்கெதிரானது மட்டுமல்ல - அனைத்துப் பெண்களுக்கும் பொதுவானது. அரபிப் பெண்களுக்கும் உரித்தானது. இந்த தண்டனை முறைப்படியான விசாரணைக்குப் பின் தான் வழங்கப் படுகிறது. தங்கள் தரப்பு வாதத்தை எடுத்து வைக்க அவர்களுக்கு சந்தர்ப்பம் உண்டு. வக்கீல் வைத்துக் கொள்ள வசதி இல்லையென்றால், இலவசமாக வக்கீல்கள் ஏற்பாடு செய்து தருகின்றனர். கற்பழிக்கப்பட்டிருந்தால், தங்களைக் கற்பழித்த ஆண்களை அவர்கள் நீதிமன்றத்தில் சொல்லலாம் - (யாரேனும் நினைப்பது போல) நான்கு சாட்சிகளை அழைத்து வர வேண்டிய அவசியமில்லை. மாறாக DNA பரிசோதனை மூலம் அவர்கள் வயிற்றில் வளரும் குழந்தைக்கு தகப்பன் அந்த ஆண் தான் என்று நிரூபிக்கப்பட்டால் போதுமானது.

ஒரு காலத்தில் இந்தியாவைப் பாம்பாட்டிகளின் நாடு என்று உலகம் முழுவதும் பிரச்சாரம் செய்தனர். படங்கள் எடுத்து பெருமையாக வெளியிட்டனர். அந்த அறியாமையப் போன்று தான் அரபு நாடுகளைப் பற்றிய கருத்துகளுடன் நீங்களும் இயங்கி வருகிறீர்கள். அரபு நாடுகளைப் பற்றிய காழ்ப்புணர்ச்சி. அவர்கள் விஞ்ஞானத்தையெல்லாம் எங்கே உபயோகிக்கப் போகிறார்கள் என்ற அலட்சிய மனப்பான்மை. இது உங்கள் அறியாமை. அவ்வளவே.

ஆனால், நான் குறிப்பிட்ட நிகழ்வுகள் உலக அளவில் பெண்களுக்கெதிராக இழைக்கப்படும் கொடுமைகள். ஆணாதிக்கம் மிக்க அனைத்து சமூகத்திலும் இந்த கொடுமைகள் நிகழத்தான் செய்கின்றன. உங்கள் போன்ற குருட்டு நடுநிலைமையாளர்களுக்கு மட்டும் தான் - அரபு நாடுகளில் பெண்கள் கொடுமைப்படுத்தப்படுகிறார்கள் என்று சொல்ல வருகிறது. உண்மையாக பெண்கள் மீது அக்கறை இருந்தால், இந்தியாவில் போகப்பொருளாக ஆக்கப்படும் - சுரண்டப்படும் பெண்களுக்கு - எந்தக் குற்றமும் செய்யாத பெண்களுக்கு முதலில் நீதி கேட்டு போராடி விட்டு, பின்னர் குற்றம் செய்தவர்களுக்காக வந்து வழக்காடுங்கள்.

சில சமூகங்கள் மாதிரி, பணம் கொடுத்தால் ஒரு நீதி, இல்லையென்றால், நீதி வேறு மாதிரி என்று வாழும் சமூகத்தைப்போல் இங்கு நீதி வழங்கப்படுவதில்லை.

துபாயில் உண்மையிலேயே பெண்களுக்குப் பாதுகாப்பு இருக்கிறதா, இல்லையா என்பதை அறிந்து கொண்டு பேசுங்கள். உங்களுக்கு ஏற்கனவே அழைப்பு கொடுத்தாகி விட்டது - வந்து பார்த்து கொள்ளுங்கள் என்று. வரத்தான் முடியவில்லை என்றால் - உங்கள் நண்பர்களை என்னை சந்திக்க அனுப்பி வையுங்கள் - அதாவது அமீரகத்தில் வாழும் உங்கள் நண்பர்களையோ அல்லது உங்களுக்குப் பிரியப்பட்ட அமீரக வலைப்பதிவாளர்களையோ அனுப்பி வையுங்கள். தெளிவு படுத்தி அனுப்பி வைக்கிறேன். இது எதுவுமே இயலவில்லை என்னும் பட்சத்தில் கட்டுக்கதை, பொய் என்று சொல்லிக் கொண்டு வந்து நிற்காதீர்கள்...

right?

ஒரு ஆழமற்ற, சிந்தனை திறனற்ற, காழ்ப்புணர்ச்சி மிக்க, ஒரு பக்க சார்பு நிலை எடுத்து நிற்கும் நடுநிலைமையாளர் நீங்கள் என்று அனைவருக்கும் தெரியும்.

உங்கள் காழ்ப்புணர்ச்சிகளை வேறெங்கும் வைத்துக் கொள்ளுங்கள். சிந்திக்கத் தெரியாத உங்களுக்கும் நேரம் ஒதுக்கி பதில் சொல்வது அவசியம் தானா என்று இனி கேள்விகளை கேட்டுக் கொள்ள வேண்டும் நான்!!!

ஒரு விதிவிலக்கை வைத்துக் கொண்டு பேசுகிறீர்களே - சாஸ்திர, சம்பிராதாய, சமூக அமைவின் படி சட்டபூர்வமாக பெண்களை இழிவு படுத்தும் நீங்கள், பேச வந்து விட்டீர்கள் - பெண்கள் நிலையைப் பற்றி.

என்ன செய்வது - ஆட்டுக்கிடைக்கு காவலா - ஓநாய்கள்.!!!

வஹ்ஹாபி said...

நண்பன்,

அண்மையில் ஒரு நாகரிகம்+பண்பாடு வலைத் தளங்களில் அறிமுகப் படுத்தப் பட்டிருக்கிறது.

நீங்கள் படித்தீர்களோ இல்லையோ, அது யாதெனில்:

பெண்கள் (குமரியிலிருந்து கிழவி வரை - நங்கை, பேரிளம் உட்பட) யாருடன் வேண்டுமானாலும் படுத்துக் கொள்ளலாம்; ஆனால் கர்ப்பமாகாமல் காத்துக் கொள்ள வேண்டும்.

இந்தப் பண்பாடு, நாகரிகம், பரந்த (?) மனப்பான்மை போன்றவை நீங்கள் வசிக்கும் துபையில் இருக்கிறதா?

மேற்காணும் சுதந்திரத்தைப் பெண்களுக்கு மறுத்து விட்டு, இந்தோனேஷியாவுக்கும் இந்தியாவுக்கும் நல்லுறவு(?) மலர்வதை சதி செய்து, வேண்டுமென்றே தடுத்ததோடன்றி கர்ப்பமான ஒரு சிறு பிழைக்காக சவுக்கடிகள் கொடுக்கின்றீர்களே! இது காட்டுமிரண்டித் தனமில்லையா?

நண்பன் said...

// நண்பரே,
நல்ல கவிதைகளை தந்துக்கொண்டிருப்பதுடன் நல்ல கவிதைகளை அடையாளங்காட்டவும் செய்கிறீர்கள். மகிழ்ச்சி.

நேரிய சிந்தனையுடன் கருத்துக்களை எடுத்து வைக்கும் உங்கள் வழி பாராட்டத்தக்கது
//

இப்னு ஹம்துன்,

நன்றி.

கவிதைகளுக்குக் கிடைக்கும் வரவேற்பு சற்று குறைவாக இருந்தாலும், கவிதை பற்றி அறிந்தவர்கள் வாசித்துப் பாராட்டும் பொழுது மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது.

நன்றி இப்னு.

நண்பன் said...

Chameleon - பச்சோந்தி

//நல்ல கவிதை.

இந்தக் கவிதை பேசும் பாதுகாப்பு பற்றி டெல்லியில் ஒரு சர்வே மற்றும் தணிக்கை நடந்தது எனச் செய்தி படித்தேன்.
//

மிக்க நன்றி நண்பரே.

பெண் பாதுகாப்பு என்பது குறித்து அவ்வப்போது பேசுவார்கள் பின் மறந்து விடுவார்கள்.

The Rape Capital of India என்று சொல்லப்படும் இந்தியாவின் தலைநகரமான டெல்லியின் போலிஸ் உயர் அதிகாரி ஒரு முறை - Outlook -
பத்திரிக்கைக்குப் பேட்டி கொடுத்தார் - The women and girls should not invite rapists by their improper dresses, going around
unaccompanied, at odd times என்று. மிகப் பலத்த சர்ச்சையை உண்டாக்கியது. பாதுகாப்பு கொடுக்க வக்கில்லாத போலிஸ் அதிகாரி, இவ்வாறு
பேசுவது முட்டாள்தனம் என்று அனைத்துப் பெண்கள் இயக்கமும் கூக்குரலிட்டன.

துபாயில், இத்தகைய துர்பாக்கியங்கள் எதுவும் பெண்களுக்கு நேர்வது இல்லை. இது சிலருக்குப் புரிவதில்லை. சட்டத்தின் மூலம் முறைப்படி தண்டிக்கப்பட்டவர்களை
பற்றி பேசி அதை பாதுகாப்பின்மைக்கு உதாரணம் ஆக்கியதன் மூலம், தங்கள் அறிவின்மையையும், காழ்ப்புணர்ச்சியையும் வெளிப்படுத்திக் கொள்கின்றனர்.

என்ன செய்வது? இவர்கள் தான் அடிப்படைவாதத்தை எதிர்க்கிறார்களாம் - எது அடிப்படைவாதம் என்றே அறியாதவர்கள்....!!!

நண்பர்கள் சொல்கிறார்கள்

CSM - உலகச் செய்திகள்

GF - உலகச் செய்திகள்