"எழுத்துகளையும் தாண்டி எனக்கென்று ஒரு உலகம் உண்டு; நான் எழுதுபவற்றை மட்டுமே வைத்துக் கொண்டு, என்னை எடை போடுபவர்களை எப்பொழுதும் என் எண்ணங்கள் வியப்பில் ஆழ்த்திக் கொண்டே இருக்கும்....."
- நண்பன்

Thursday, January 12, 2006

வாழ்க்கை இனிப்பாகத்தான் இருக்கிறது.

பிறந்த நாளன்று, பெங்களூரில் இருக்கும் மனைவி, மகன், மகளுக்கு ஒரு இனிய கடிதம். என் பெயரைப் பார்த்ததுமே நெகட்டீவ் ஓட்டு குத்தணும்னு கை நமநமக்கிறவங்கல்லாம் கொஞ்சம் பொறுமை காத்து அடுத்த பதிவில் போடுங்க. ரைட்?

****
அன்பின்
அன்பான மனைவியே
இரண்டாவதாகப் பிரிந்ததும் தான்
உணர்கிறேன்
உன்னை எத்தனை தூரம்
காதலிக்கிறேனென்று.

முதல் பிரிவின்
வலியைத் துடைக்க வந்து
வலி கூடிப்போய்த் திரும்பினேன்.

உன்னை மீண்டும் பார்க்க
இன்னும் வெகுதொலைவு
நடக்க வேண்டுமென்ற புரிதலில்
கூடிப்போன வலியை
சுமந்து திரிகிறேன்.

பிரிவின் நடுவேயும்
வாழ்ந்த ஒருமாத வாழ்க்கை
இன்றும் பசுமையாய் இருக்கிறது
கடலில் மிதக்கும்
ஒரு குட்டித் தீவைப் போல.

நீயும் நானுமாய்
தனித்திருக்குமிடத்தில்
பாலையும் பசுமையாயிருக்கும்.

இங்கெல்லாம்
எனக்குப் பசுமையாய்த்
தானிருக்கிறது.
உனக்கென
நான் விரித்து வைத்த
வானத்தில்
தன்னந்தனியாய்
உன் நினைவுகள்
பறந்து கொண்டேயிருப்பதால்

இன்னும் ஒரு வருடம் வாழ
போதுமான வாழ்க்கையை
எடுத்து வந்திருக்கிறேன்
மனதின்
ஏதோ ஒரு மூலையில்
மறைத்து வைத்து.

யாரும் அறியாத சமயத்திலே
நான் மீண்டும் வாழ்வேன் -
மனதின்
மறைவிடங்களின் தனிமையில்.

உன் மூச்சுக் காற்று
என் நுரையீரலில்
மோதப்போவதில்லை தான்.

நடுநிசிக் குளிரில்
இருளைத் துழாவி
உன் போர்வைக்குள்
வந்துவிட முடியாது தான்.

எந்த ஒரு கைப்பக்குவமும்
உன் சமையலின்
சுவையைத்
தந்துவிட முடியாது தான்.

என்றாலும்
இந்த நினைவுகளாலும்
தரமுடிந்தது ஒன்றுண்டு -
இத்தனை
வருடங்கள் கழித்தும்
நம்மிடையே காதல்
பூத்த தினத்தின் மலர்ச்சியோடு
இருக்கிறதென்ற உணர்வு தான்.

நடுநடுவே
வந்து போன சண்டைகளில்
காதல் தொலைந்து போனதாக
வந்த நினைப்புகள்
ஆவியாகிப் போனதே
இந்த பிரிவின் பரிசானது.


சிறுவனாய்
நான் விட்டு வந்த
நம் மகன்
இன்று
உனக்கு நண்பனாய்
வளர்ந்து விட்டது
ரசிப்பதாயிருக்கிறது.

அழாமலிருப்பேனென்று
அழுது கொண்டே
சொன்ன மகள்
தன்னைத் தானே
கவனித்துக் கொள்ளும்
ஆளாகி விட்டதை
அருகேயிருந்து
பார்த்து வியக்கவியலாத துயரம்
வற்றா நதியாய்
ஓடிக்கொண்டேயிருக்கிறது.

நானில்லாத வாழ்க்கையை
வாழக்கற்றுக் கொண்ட
உங்கள் வாழ்வில்
உள்ளே நுழையாது
விலகி நின்று பார்த்தால்
வாழ்க்கை
இனிப்பாகத்தான் இருக்கிறது

17 comments:

PKS said...

Happy Birthday to you. Many happy returns of the day.

- PK Sivakumar

நண்பன் said...

PKS

நன்றி.

பிறந்த நாள் வாழ்த்துக்கும்,

மிக நீண்ட பணி நாளொன்றில், நேரம் எடுத்து வாசித்தமைக்கும் -

மிக்க நன்றி.

பொங்கல் மற்றும் தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துகள்.

அன்புடன்
நண்பன்

ilanthirayan said...

À¢Èó¾ ¿ø¿¡û Å¡úòÐì¸û

-«ýÒ¼ý þÇ󾢨ÃÂý

நண்பன் said...

இளந்திரையன் எழுதியதன் மறுஎழுத்துருவாக்கம்.


***
பிறந்த நல்நாள் வாழ்த்துக்கள்

-அன்புடன் இளந்திரையன்
***

நன்றி இளந்திரையன்

உங்காள் வாழ்த்திற்கு,

அன்புடன்
நண்பன்

மூர்த்தி said...

அன்பின் நண்பன் அவர்களுக்கு,

வணக்கமும் வாழ்த்துக்களூம்....

எல்லா வாலமும் நலனும் பெற்று இன்னும் பல்லாண்டு வாழ எல்லாம் வல்ல இறைவன் அருள் புரியட்டும்.

மோகன்தாஸ் said...

பிறந்த நாள் வாழ்த்துகள் நண்பன் :-)

நண்பன் said...

மூர்த்தி

உங்கள் பிறந்த நாள் வாழ்த்திற்கு மிக்க நன்றி.

அன்புடன்

நண்பன்

நண்பன் said...

மோகன்தாஸ்

மிக்க நன்றி வாழ்த்துகளுக்கு.

அன்புடன்
நண்பன்

G.Ragavan said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் நண்பன். அன்பான உங்கள் இல்லறம் இன்று போல் என்றுமே நல்லறமாகச் சிறக்க எனது உளமார்ந்த வாழ்த்துகள்.

அன்புடன்,
கோ.இராகவன்

நண்பன் said...

கோ.ராகவன்,

நன்றி உங்கள் வாழ்த்துகளுக்கு.

அன்புடன்
நண்பன்

முத்து(தமிழினி) said...

//நடுநடுவே
வந்து போன சண்டைகளில்
காதல் தொலைந்து போனதாக
வந்த நினைப்புகள்
ஆவியாகிப் போனதே
இந்த பிரிவின் பரிசானது.//

IMM SUPER..

wish you happy birthday

நண்பன் said...

முத்து (தமிழினி)

மிக்க நன்றி.

உங்கள் வாழ்த்திற்கு

அன்புடன்
நண்பன்

Dharumi said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்

நண்பன் said...

தருமி

மிக்க நன்றி - உங்கள் வாழ்த்துகளுக்கு

அன்புடன்
நண்பன்

நண்பன் said...

தருமி

மிக்க நன்றி - உங்கள் வாழ்த்துகளுக்கு

அன்புடன்
நண்பன்

பிரதீப் said...

நண்பன்,
இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.
அன்புடன்,
பிரதீப்

நண்பன் said...

பிரதீப்

உங்களை இங்கே காண மகிழ்ச்சியாக இருக்கிறது.

உங்கள் வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி.

உங்களுக்கும் நண்பர்களுக்கும் உறவுகளுக்கும் எனது மனங்கனிந்த பொங்கல் மற்றும் தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகள்.

தொடர்ந்து வருகை தாருங்கள்.

அன்புடன்
நண்பன்

நண்பர்கள் சொல்கிறார்கள்

CSM - உலகச் செய்திகள்

GF - உலகச் செய்திகள்