"எழுத்துகளையும் தாண்டி எனக்கென்று ஒரு உலகம் உண்டு; நான் எழுதுபவற்றை மட்டுமே வைத்துக் கொண்டு, என்னை எடை போடுபவர்களை எப்பொழுதும் என் எண்ணங்கள் வியப்பில் ஆழ்த்திக் கொண்டே இருக்கும்....."
- நண்பன்

Friday, January 20, 2006

ஒரு அதிகாலையில் நீ வந்தாயா?

சிலநாட்களின் அதிகாலைகள்
உன்னைக் கொண்டு வந்து
அருகே கிடத்தி விழிப்பூட்டுகின்றன

உண்மையிலேயே அருகே கிடக்கிறாயோவென
கைகள் தனியாய் அலைகின்றன.
காலியாய்க் கிடக்கும் படுக்கை
தடவி ஏமாற்றமுற்று ஓய்ந்து
கனவென உணருமுன் ஓடிப்போய்விடுகின்றன
உன் உருவம் தாங்கிய நினைவுகள்

விழித்துக் கொண்ட பின்னும்
உணர மறுக்கிற புலன்கள்
உன்னை உண்மையிலேயே உணர்ந்த
தருணங்களைப் பேசுகின்றன.
இதயம் தான் அதிகமாக துடித்ததைச் சொல்லுகிறது
இன்னும் உன் வருகையை படுகையினடியில் ஓடும்
நதியாய் உருவகித்துப் பிரவாகிக்கிறது.

உன் வருகையைப் பற்றிய
தர்க்கங்கள் நிகழ்கின்றன என்னுள்
நீ வந்தாயா இல்லையாவென

நீ வந்தாதாகவும் வரவில்லையாகவும்
என்னுள்ளே பிரிந்து கிடக்கும் நான்
மீண்டும் ஒன்றாகி என்னை உயிர்ப்பிக்க
வருகை தர வேண்டியவளாயிருக்கிறாய் நீ.

உன் வருகை நிகழும் போதிலே
உதிர்ந்த ஒன்றிரண்டு கேசங்கள்
வெண்மை கசங்கிய மல்லிகைகள்
கூடவே சிணுங்க சிறுதுண்டு வளையல் கூட்டங்கள்
இவையெல்லாவற்றையும் விட்டுச் செல்
வாழ்ந்தேன் உன்னுடன் என்பதற்கான சாட்சியாய்

No comments:

நண்பர்கள் சொல்கிறார்கள்

CSM - உலகச் செய்திகள்

GF - உலகச் செய்திகள்