"எழுத்துகளையும் தாண்டி எனக்கென்று ஒரு உலகம் உண்டு; நான் எழுதுபவற்றை மட்டுமே வைத்துக் கொண்டு, என்னை எடை போடுபவர்களை எப்பொழுதும் என் எண்ணங்கள் வியப்பில் ஆழ்த்திக் கொண்டே இருக்கும்....."
- நண்பன்

Friday, January 13, 2006

நண்பனின் அமெரிக்க எதிர்ப்பும், முகமூடிக்கு ஒரு பதிலும்.....

சமீபத்திய ஒரு விவாதத்தில் என்னைப் பற்றிய இருவர் விமர்சனங்கள் வைத்தனர். வழக்கம் போல அவர்களுக்கு அதே தளத்தில் நின்று பதில் சொல்லி அந்த விவாதத்தை திசை திருப்ப விரும்பாததால், இந்த தனி பதிவு. இதில் நண்பர்கள் சன்னாசி, முகமூடி இருவருக்கும் பதில் சொன்னதோடு, அமெரிக்கர்கள் மீதான என் கடுமையான விமர்சனங்களுக்குக் காரணம் என்ன என்பதையும், இஸ்லாமிய தீவிரவாதம் என்று எழுதப்படுவது குறித்தும் என் கண்டனங்களையும் எழுதி இருக்கிறேன். இனி வாசிக்கலாம்....


சன்னாசி,

உங்களின் நீண்ட பதிவிற்கு மிக்க நன்றி.

திசை திருப்பக் கூடாதென்பதால், பெரும்பாலான கருத்துகளுக்கு நன்றி. பரஸ்பரம் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டதினால்.

அகராதி என்று எழுதிய பொழுது, பக்கத்திலே சூட்டைத் தணிக்க ஒரு ஸ்மைலி போட்டிருக்க வேண்டும். ஆனால், அப்படி போடாமல் விட்டது என் தவறு தான். நம்மிடையே நடக்கும் பனிப்போரை அறியாதவர் என்னைப் பற்றித் தவறாக நினைக்கத் தூண்டும் - அதை ஒரு தனிமனித தாக்குதலாகக் கூட கருத வாய்ப்புண்டு என்ற புரிதல் வந்த பொழுது, அது பதிவாகி விட்டது. சிரமம் பாராது அதை அழித்துவிட்டு, புதிதாகவே எழுதி இருக்க வேண்டும். பிறருக்கு வலிக்கும் வகையாக எழுத வேண்டுமென்று நினைத்தால் கூட, தனிமனித தாக்குதலாக போய்விடக் கூடாது என்பதில் கவனமாக இருப்பேன். நீங்கள் இப்பொழுது அதைப் பற்றிக் குறிப்பிட்டதில், அது நகைச்சுவையாக ஏற்கப்படவில்லை - மனம் புண்படும் வகையாகவந்து விட்டது அறிந்து வருந்துகிறேன். மற்றபடிக்கு, உங்கள் விமர்சனங்களைப் புரிந்து தான் இருக்கிறேன். கள்ளன் போலிஸ் என்று குறிப்பிட்டது ஒரு வகை விமர்சனமே தவிர, வேறு அர்த்தம் இல்லை. எப்படி நீங்கள் டிக்ஷனரி விமர்சனங்களைக் கருதுகிறீர்களோ அதே போலத் தான் இதுவும். ஆனால், இதற்காக (கள்ளன் போலிஸ்) நான் வருந்தவில்லை.

முகமூடி,

//மத்த fill in the blanksக்கு உங்கள் அஞ்சறை பெட்டியை திறந்து சம்பந்தம் இருக்கிறதோ இல்லையோ, தமிழ், மதம், ஜாதி எல்லாம் கொஞ்சம் கொஞ்சம் தூவி ஒரு பதிவு பல பின்னூட்டங்கள் என்று சம்பந்தமில்லா இடங்களில் எல்லாம் எழுதி வருகிறீர்கள் என்பதே...//

முதன்முறையாக உங்களிடமிருந்து விமர்சனம் - நன்றி.

என் பெயரை உபயோகப்படுத்தியதற்காக நான் பதில் எழுதுவது அல்ல. மாறாக என் பெயரோடு சேர்க்கப்படும் அடை மொழிகளுக்குத் தான் பதில் சொல்கிறேன். நிறைய இடங்களில் அல்ல - இரண்டே இடங்களில் தான்.

நண்பன் என்ற ஷாஜஹான். ஆரோக்யம் எழுதியது.

அவரது பதிவுகள் தமிழ் மணத்தில் இடம் பெற வில்லையென்பதால், அவருக்குப் பதிலாக ஒரு பதிவை என் வலைப்பூவில் எழுதினேன். ஆரோக்கியத்திற்குப் பதில் எழுதியது தவறென நீங்கள் குறிப்பிடுவதாக இருந்தால், பின்னர் உங்களின் அடிப்படை நேர்மையையே நான் சந்தேகிக்க வேண்டி வரும். சரிதானே?

நண்பன் போன்ற அற்புதமான நண்பர்கள் - அடைமொழியுடன் பத்ரி எழுதிய பொழுது, அதே வார்த்தைகளைக் கையாண்டு ஒரு பதில். ஏனென்றால், இந்த 'அற்புதமான' என்ற வார்த்தையில் ஒரு விஷேசம் இருக்கிறது. என்னைப் பற்றிய எந்த அறிமுகமும் இல்லாதவர், கொடுத்த அடைமொழி. அவருடைய பதிவை அதுவரையிலும் நான் வாசித்திருக்கவில்லை. அவரும் எங்கும் என் பதிவில் பின்னூட்டமிடவில்லை. அப்படியிருக்க அவர் உபயோகித்த அந்த அடைமொழி எந்த வித நியாயமோ?

பின்னர் எங்கிருந்து இந்த அடைமொழி வந்தது? எந்தப் பதிவிலிருந்து அவர் இந்த அடைமொழியை எடுத்துக் கொண்டார்? ஆயிஷா என்ற பதிவிலிருந்து தானே? அவர் என்னை ஷாஜஹான் என்று அடையாளம் கண்டு கொண்ட மாதிரி, நான் அவரை பத்ரி என அடையாளம் கண்டு கொண்டதில் என்ன தவறு இருக்கிறது?. அந்த அடையாளங்களைச் சொல்லி, நான் ஏதாவது தவறாகப் பேசி இருந்தால் சொல்லுங்கள் - திருத்திக் கொள்கிறேன்.

இங்கே - நான்காவது முறையாக - Let some one tell them that secularism is not a premise for denying the identity of a human - but, it’s a doctrine that accept others with different identities, as equal while you keep your identity. இது ஜனவரி 7ம் தேதியன்று ஸ்ரீகாந்தின் மனம் ஒரு குரங்கு என்ற பதிவில், எழுதினேன். தன் அடையாளங்களை மறைத்து விட்டு, மத ஒருங்கிணைப்பு என்று பம்மாத்து செய்வதை விட்டுவிட்டு, அவரவர் மத அடையாளங்களுடன் நல்லிணக்கத்திற்கு முயற்சி செய்வோம் என்று. இப்பொழுதும் என் கருத்தில் ஏதும் மாற்றமில்லை. இப்பொழுது ஞாபகத்திற்கு வருகிறது. இந்த ஒரு வாக்கியத்தைத் தான் பல்வேறு இடங்களில் எழுதி இருக்கிறேன். இது உங்களுக்கு சம்பந்தம் சம்பந்தமில்லாமல் எழுதுவதாக தோன்றுகிறதா? உங்களைப் போன்றவர்களுக்கும் இது சம்பந்தமில்லாமல் தோன்றியது குறித்து நான் வருத்தமடையப் போவதில்லை.

இங்கு நான் தெளிவு படுத்தி விடுகிறேன் - அற்புதமான நண்பர்கள் என்று விளித்ததில் வருத்தமில்லை. ஆனால், அடைமொழிகளை எப்பொழுதும் நான் விரும்புவதில்லை. அதுவும் அறிமுகமற்ற நிலையில். அது என்னை தர்ம சங்கடத்தில் ஆழ்த்துகிறது என்பதால் அதை தவிர்க்கவே முயல்கிறேன். ஆனால், மத அடையாளங்களை மறைத்து முகமூடி போட்டுக் கொண்டு சமத்துவம் பேசுவது எந்த விதத்தில் நியாயம்.? (முகமூடி - வாசிக்க :: முகத்திரை. உங்க பேரை நீங்க இப்படி வச்சுக்கிட்டா நான் என்ன பண்ணுவது :-) )

//இந்த பதிவை first person முறையில் எழுதவில்லை என்று என் சிற்றறிவுக்கு நான் புரிந்து கொள்கிறேன். மூன்றாம் மனிதரின் பார்வையில் எழுதப்பட்ட பதிவில்// முகமூடி உங்கள் தமிழ் சற்று தகராறு பிடித்தது போல் தெரிகிறது. Context என்று ஒன்றுண்டு. அதாவது, இடஞ்சுட்டி பொருள் விளக்குக என்று கேள்வி எழுப்புவார்கள் அல்லவா? அதைப் போலத் தான். சரியாக இடம் சுட்டி பொருள் விளங்கிக் கொள்ள வேண்டும். எந்த இடம் சுட்டப்பட்டதென்பதையும் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும். வெறுமனே first person பற்றி மட்டும் பேசக்கூடாது. பேசப்படும் பொருளாக அங்கிருந்தது - பிராமிணர்கள். அவர்களைப்பற்றித்தான் பேசிக்கொண்டிருக்கையில், நான் அந்த வரிகளை எழுதினேன். நன்றாகத்தானே இருக்கிறீர்கள் - நீங்கள் என்று. பேசு பொருளாக இருந்த பொருளைக் குறித்து கேள்வி ஒன்று வைத்தேன் - பிராமிணர்கள் என்பதை குறிப்பிடாமல், ''நீங்கள்'' என்று சொன்னேன். இந்த நீங்கள் - பத்ரியை சுட்டுகிறது என்று நீங்களாக நினைத்துக் கொண்டீர்கள். என் எண்ணம் அதுவல்ல. சுட்டு பொருளாக நிற்பது பிராமிணர்கள் தான். என்றாலும் உங்கள் கருத்தை ஏற்றுக் கொள்கிறேன். பொதுவான pronounsஐ உபயோகிப்பதை இனி தவிர்த்துக் கொள்கிறேன். யாரை குறித்துகேள்வி கேட்கிறேமோ, அவர்களின் பெயர்களையும் எழுதி விடுகிறேன். அது அத்தனை எளிதல்ல. மாறாக வேறு வகையான சங்கடங்களையும் உண்டாக்கும். எப்படி என்பதை கீழே படித்து தெரிந்து கொள்ளவும்.


மேலும்

மசாலா சேர்த்து எழுதுகிறேன் என்று நீங்கள் சொன்னதற்கு நன்றி. என் சமையல் நன்றாகத் தான் இருக்கும் - சமைக்க (எழுதத்) தெரியுமென்பதால்.

தமிழ் மொழி பற்றி இதுவரையிலும் ஒரு பதிவு கூட எழுத ஆரம்பிக்கவில்லை. ஏன் திராவிட சிந்தனை குறித்தும் கூட நான் இன்னமும் எங்கும் எழுதவில்லை. ஆகையினால், உங்களது இந்த விமர்சனம் நேர்மையற்றது.
சுபவீ, அறிவுமதி, பாமரன் படங்கள் வைத்திருப்பதால், உடனே நான் தமிழ் பற்றி, திராவிடம் பற்றி எழுதி விட்டேன் என்று நீங்கள் கூப்பாடு போட்டால் அது உங்கள் தவறு. சொல்லுங்கள் - நான் இதைப்பற்றியெல்லாம் எங்கே எழுதி இருக்கிறேன் என்று. நான் இதுவரையிலும் எழுதாத ஒன்றை நான் எழுதுகிறேன் என்று கூப்பாடு போடுவதிலிருந்தே தெரிகிறது - சும்மா குன்ஸா ஒரு கமெண்ட் வைப்போம் - என்ன ஆகிறது என்று பார்ப்போம் என்று. அல்லது இத்தனை படங்களை வைத்துக் கொண்டு இயங்குவதால், கண்டிப்பாக எழுதி இருப்பான் என்று அனுமானித்து அதன் மூலம் இந்த விமர்சனத்தை அச்சமில்லாமல் வைத்து விடலாம் என்ற நம்பிக்கையில் இயங்கினால், அது உங்கள் தவறு தானே தவிர, என் மீதான நேர்மையான விமர்சனமாகாது.

மதம் பற்றி எழுதுவது, யாரையும் திட்டவோ, பரிகசிக்கவோ இல்லை. என் மதத்தின் மேன்மையை மட்டும் தான் நான் எடுத்துரைத்தேன். அதிலும் சிலர் இஸ்லாம் பற்றி வைக்கும் விமர்சனங்களுக்குப் பதிலாக. அதில் என்ன தவறு இருக்கப் போகிறது.? நீங்கள் பிராமினிசம் காக்க முன் வந்தால், நான் அதை தவறு என்று சொல்ல மாட்டேன். ஆனால், அங்கு உங்கள் சம்பந்தப்பட்ட விமர்சனங்களுக்குப் பதில் வைக்காமல், என் நம்பிக்கை சரியா, அடுத்தவர் நம்பிக்கை சரியா என்று தர்க்கங்களுக்குப் போய் விமர்சனங்களை வீசும் பொழுது - பதிலுரைக்க வேண்டி வருகிறது. (நான் இதுவரையிலும், பிற மதங்களைப் பற்றிய விமர்சனத்தில் இறங்கியதில்லை. இனியும் இறங்கப் போவதில்லை என்பதில் உறுதியாக இருக்கிறேன். )

முகமூடி, தயவு செய்து, மீண்டும் ஒருமுறை என்னுடைய பதிவுகளைப் படித்துப் பார்த்து விட்டு, பொறுப்போடு விமர்சனம் வையுங்கள்.

நான் மிக அதிக பதிவுகள் போட்டது அமெரிக்காவின் உலக / இஸ்லாமிய எதிர்ப்பு அரசியல் - அது பற்றி ஒரு வார்த்தை கூட உங்களால் பேச இயலவில்லை - ஏன்? உங்களுக்கே தெரியும் அதில் உள்ள நியாயங்கள். சிலருக்கு நான் அமெரிக்காவைப் பற்றி எழுதியதுமே கோபம் பொத்துக் கொண்டு வருகிறது. உங்கள் பக்கத்து நியாயமாக அமெரிக்காவில் கிடைக்கும் - (மீண்டும் - இங்கு உங்கள் என்பது முகமூடி அல்ல. மாறாக அமெரிக்காவைப் பாதுகாக்க நினைக்கும் அங்கு வாழும் அமெரிக்கார்களைப் பற்றியதானது இந்த 'உங்கள்' இப்பொழுதாவது புரிகிறதா - என்னுடைய பாணி என்னவென்று) அதிகப்படியான வசதிகள் கொண்ட வாழ்க்கை - சம்பளம் - என்று நியாயங்கள் இருக்கலாம். அதனால், என்னை எதிர்ப்பதும் கடமையாகிறது அமெரிக்க வாழ் இந்தியர்களுக்கு. ஒன்று செய்யட்டுமே - அமெரிக்க வாழ் இந்தியர்கள் (பாருங்கள் - எல்லோரும் அடிக்க வரப்போகிறார்கள் - ஏன் எப்பொழுதும் அமெரிக்க வாழ் இந்தியர்கள் என்றே எழுதிக்கொண்டிருக்கிறான் - Tell him to use a pronoun - shorter one என்று குரல் கொடுக்கப் போகிறார்கள் - ) எல்லோரும் பதிலுக்கு அமெரிக்க செய்யும் நல்ல காரியங்களைப் பற்றி எழுதட்டுமே - அப்படி ஒன்று இருந்தால் - நாங்களும் தான் தெரிந்து கொள்கிறோம்.?

அமெரிக்கர்களைப் பற்றிய என் பக்கத்து தரப்பு நியாயங்களும் உண்டு.

இந்த அமெரிக்கர்களின் கொள்கைகளோடு நேரடியாக அனுபவம் உண்டு. பிஜேபி ஆட்சியில் அணுகுண்டு வெடித்ததும், ஒரு தடை போட்டார்கள் - அதாவது, இந்தியாவின் அணுத் துறைக்கு எந்த உதவியும் செய்யக் கூடாது. தேவைப்படும் தொழில் நுட்பங்கள் - பொருட்கள் எதுவும் கிடைக்கக் கூடாது என்று ஒரு தடை விதித்தார்கள். அதாவது நம் அணுத்துறையையே அடக்கி மண்டி வைத்து விடவேண்டும் என்று. ஆனால், அதன் பின்னால் இருந்த hidden agenda - அணுத்துறை மட்டுமல்ல - சகல விஞ்ஞான துறைகளையும் முடக்கிப் போட வேண்டும் என்பது இந்த துறைகளோடு சம்பந்தப் பட்டவர்களுக்கு நன்கு தெரியும். நான் இந்த துறைகளில் நேரிடையாக சம்பந்தப் படாவிட்டாலும் - இவர்களுக்கெல்லாம் தேவைப்படும் தொழிலில் இருக்கிறேன். நான் ஒரு Air conditioning Engineer. அமெரிக்கா இந்த ஏர்கண்டிஷனர்களுக்குக் கூட தடை விதித்தது என்பது உங்களுக்கெல்லாம் தெரியுமா? இந்த ஏர் கண்டிஷனர்களால் - ஒரு ராக்கெட்டைப் பறக்க வைத்து விடலாம் என்றோ, அல்லது அணு உலையை ஓட்டி விடலாம் என்றோ யாரும் நம்பப் போவதில்லை. இந்த ஏர்கண்டிஷனர்களால் ஆகக் கூடிய ஒரே காரியம் - குளிர்ந்த நீரை உற்பத்தி செய்து தர முடியும் - 5 டிகிரி செல்சியஸ்ற்கு. பிறகு அதை கொண்டு, AHU மூலமாகக் காற்றைக் குளிர்விக்க வேண்டும்.

இதில் என்ன பெரிய காரியம்? இந்த மெஷின்களை ஏன் தடை செய்ய வேண்டும்.?

விஞ்ஞானிகள் குளுகுளு சூழலில் உட்கார்ந்து வேலை செய்து, அணு உலை தயாரிக்கப் போகிறார்கள் என்றா?

அந்தப் பொழுதில் இந்தியாவில் இருந்த பன்னாட்டு நிறுவனங்கள் அனைத்தும் - Trane, Carrier, etc உட்பட, எவருமே இந்த எந்திரங்கள் இந்தியாவிற்கு தரும் பொழுது ஒரு உறுதி மொழிப் பத்திரத்தில் எழுதி வாங்கிக் கொண்டு தான் தருவார்கள் - அந்தப் பத்திரம் என்ன தெரியுமா? எங்களிடம் வாங்கப் படும் இந்த இயந்திரங்கள் - ஏர்கண்டிஷனர்கள் - இந்தியாவின் அரசு தொடர்புடைய எந்த நிறுவனத்திற்காகவும் வாங்கப்படவில்லை. மாறாக எங்கள் சொந்த உபயோகத்திற்காக வாங்குகிறோம் என்ற வகையில் எழுதித் தர வேண்டும். எதற்கு? வெறுமனே குளிர்ந்த நீரை உண்டாக்கவா?

நீங்கள் ( இது இவ்வலைப்பதிவை படித்துக் கொண்டிருக்கும் அன்பர்களைப் பார்த்து) இப்பொழுதும், போய் பாருங்கள் - ISRO, GTRE, அணுத்துறை மற்றும் அரசு சார்ந்த துறைகளில் - எங்காவது அமெரிக்காவில் இருந்து, வரவழைக்கப்பட்ட எந்திரங்கள் இருக்கிறதா என்று.? அங்கு நீங்கள் பார்ப்பதெல்லாம் வெறுமனே - Kirloskar, Voltas, Bluestar, Batliboi போன்ற இந்திய நிறுவனங்கள் தயாரித்த out-dated என்று சொல்லத்தக்க reciprocating machinesஐ வைத்துத் தான் காலம் தள்ளுகின்றன. இது 2003 வரையிலும் உள்ள நிலைமை.

இந்த reciprocating இயந்திரங்களில் உபயோகப்படுத்துவது - R22 என்று சொல்லப்படும் தடை செய்யப்பட்ட halo-carbon குடும்பத்தைச் சார்ந்த freon என்னும் குளிர்விப்பான். இந்த வகை வாயு, 2020 ல் இந்தியாவில் தடை செய்யப்படும். அந்த ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திட்டு உள்ளது. அதாவது இன்று ஓடிக்கொண்டிருக்கும் இந்த அனைத்து வகை குளிர்மி-களையும் நாம் நிறுத்தியாக வேண்டும். அதற்குள்ளாக, மாற்று freonகளைக் கொண்டு இயங்கும் இயந்திரங்களை நிறுவாவிட்டால், அப்புறம் நமது விஞ்ஞான நிறுவனங்கள் எல்லாம் அம்பேல் தான். அப்படியில்லையென்றால், ஒசோன் வட்டத்தைத் துளையிடாத freonகளால் இயங்கக் கூடிய வகையில், இந்த அரதப் பழசான எந்திரங்களைக் கழற்றி கடாசி விட்டு, புது எந்திரங்களை வடிவமைத்து நிறுவ வேண்டும். எப்படி என்றாலும், நமக்கு பெரும் செலவு. அதை இப்பொழுதிலிருந்தே கொஞ்சம் கொஞ்சமாக செய்து கொண்டால் நலம். அதற்குத் தடையாக இருப்பது அமெரிக்கா. மாறி விட்ட சூழ்நிலையில், இந்த தடை நீக்கப்பட்டதா, நமக்கு இந்த எந்திரங்கள் எல்லாம் கொடுக்கிறார்களா என்பதை இனி தான் விசாரிக்க வேண்டும்.

இந்த நேரிடையான அனுபவம் தான் அமெரிக்காவின் அனைத்து செயல்களிலும் என்ன உள்குத்து வேலை இருக்கிறது என்பதை ஆராயத் தூண்டுகிறது. இங்கு சிலர் (இந்த சிலர் தான் இனி வரக்கூடிய நீங்கள் என்ற சுட்டிக்கு அர்த்தம்), அமெரிக்காவும் இந்தியப் பாதுகாப்பும் என்று எழுதும் பொழுது, சிரிப்பு பொத்துக் கொண்டு வருகிறது. இத்தகைய அறிவிலிகளும் இருக்கத்தானே செய்கிறார்கள் என்று. அதிலும் அவர்கள் (அந்த சிலர்) - என்னைப் போன்றவர்களை கேள்வி வேறு கேட்கிறார்கள் - தேச பக்தி இருக்கிறதா என்று. என் நாட்டிற்கு, விஞ்ஞான துறையுடன் சம்பந்தப்படாத பொருட்களைக் கொடுக்கக் கூட தடைவிதித்த செய்கையால் அமெரிக்காவை எப்பொழுதும் கண்டித்துக் கொண்டிருக்கும் என்னையெல்லாம் நிரூபிக்கச் சொல்வார்கள் - தேச பக்தியை - தங்கள் தேசபக்தியை அடகு வைத்தவர்கள்.

அணுத்துறை சார்பாக சமீபத்தில் பல முன்னேற்றங்கள் - அமெரிக்கா நமக்கு உதவப் போகிறது என்றெல்லாம் பேச்சு. அது சரி, இந்த 25 வருடங்களாக நம்மை நசுக்கனும் என்று கங்கணம் கட்டிக் கொண்டிருந்த அமெரிக்கா -இப்பொழுது உதவ முன் வந்த காரணம்? சில உள்குத்து வேலைகள் இருக்கத் தானே செய்யும்? எனக்குத் தெரிந்த ஒன்று - நாம் நம் அணுக்கூடங்களை - civilian என்று அறிவிக்கப்பட்ட உலைகளை - சர்வதேச கண்காணிப்பாளார்கள் வரும் பொழுது திறந்து விடவேண்டும். அந்த உலைக்கூடங்களை எக்காரணம் கொண்டும் ராணுவ பயன்பாட்டிற்கு உகந்ததாக மாற்றக் கூடாது என்ற நிபந்தனை. இது போதுமே - ராணுவத்திற்கென தனியாக நாம் வைத்துக் கொள்ளலாமே என்று நினைக்கக் கூடும்.

இந்த நிபந்தனையின்படி, இந்திய அரசு - எது சிவிலியன் - எது ராணுவ உலை என்று தங்களைத் தேர்ந்தெடுக்கும் மக்களுக்கு அறிவித்திருக்கிறதா? நம் ராணுவம் தனக்குத் தேவையான அணுகுண்டுகளைத் தயாரித்துக் கொள்ள, போதுமான உலைகள் இருக்கிறதா என்று மக்களுக்கு உறுதிமொழி கொடுக்கப்பட்டிருக்கிறதா? (ராணுவ ரகசியங்கள் முன்னிட்டு, இடங்களைக் குறிப்பிடாவிட்டாலும், ஒரு உறுதிமொழியாக, ஊக்கமொழியாக அறிவித்திருக்கிறதா? சந்தேகம் தான். ஆனால், இதே சரத்தை அணுகுண்டு வல்லரசுகளாக அறிவிக்கப்பட்ட நாடுகள் எப்படி கையெழுத்திட்டிருக்கின்றன?

'தேவைப்பட்டால், சிவிலியன் உலைக்கூடத்தை ராணுவ உலையாக மாற்றுவோம் - எந்த முன்னறிவிப்புமின்றி.' இது சீனாவுக்கும் பொருந்தும்.

போதுமா? அமெரிக்காவின் நரித்தனம்?

'சோழியன் குடுமி சும்மா ஆடாது' என்பார்கள். அமெரிக்காவின் குடுமி மட்டும் சும்மா ஆடும் என்று எதிர்பார்க்க முடியுமா? நாம் நம்ப வேண்டும் - அமெரிக்கர்கள் பொறுப்பானவர்கள் என்று! ஆனால் அவர்கள் நம் நாட்டை ஒரு பொறுப்பான நாடு என்று நம்ப மாட்டார்கள். பாக்கிஸ்தான், வியட்நாம், லிபியா போன்ற சண்டிய நாடுகள் என்ற நிலையில் தான் வைத்துப் பார்ப்பார்கள். (இந்த ரோக் ஸ்டேட்ஸ் என்று குறிப்பிட்டது அமெரிக்கர்களின் பார்வையில். என் கண்ணோட்டம் அதுவல்ல. அந்த நாடுகளுக்கு என்று நியாயங்கள் இருக்கக்கூடும். அமெரிக்கர்களுக்கென்று நியாயம் எதுவுமில்லையா என்று கேட்காதீர்கள் - அவர்களுக்கு உள்ள பயங்களை - அராபியாவில் அம்மா முலையில் பால் குடிக்கும் குழந்தை கூட நம்மை அழித்து விடும் என்ற அதீத பயத்தைப் போக்க எத்தனை முயன்றாலும் அவர்களால் அந்த பயத்தை துறந்து, நிம்மதியாக இருக்க முடியாது. இது இறைவன் அவர்களுக்குக் கொடுத்த சாபம். யாரும் இதில் எதுவும் செய்வதற்கில்லை.)

இது தான் அமெரிக்கர்கள் நமக்குக் கொடுக்கும் மரியாதை. இதை சரி என்பவர்களைக் குறித்து எனக்கு எந்த கருத்தும் இல்லை. ஒன்றைத் தவிர - தேசபக்தியின் ஏகபோக குத்தகையாளர் நாங்கள் என்று பேசுவதை விட்டுவிடுங்கள்.

முகமூடி

இந்தப் பதிவே உங்களுக்கு ஒரு பாடமாக (பாடமாக:: படிக்க - விளக்கமாக) அமைய வேண்டும் என்ற நோக்கத்தில் தான் எழுதுகிறேன். அதனால் தான் வேண்டுமென்றே இந்த திசை திருப்பல் - அமெரிக்காவைப் பார்த்து. இப்பொழுது சொல்லுங்கள் - இங்கு நான் சிலர் என்று குறிப்பிட்டு பேசுவதை என்னவென்று? நன்றாகத் தெரியும் - இது உங்களை நோக்கி வைக்கப்பட்ட கேள்வி அல்ல என்று. (தேச பக்தியின் ஏக போக உரிமையாளர் என்ற சொற்றோடர்) ஆனால் மேலே உங்கள் பெயரை எழுதிவிட்டதால், எழுதப்படும் அனைத்தும் தன்னைத் தான் குறிக்கிறது என்று நினைத்துக் கொண்டால், அது உங்கள் மொழி ஆளுமையின் குறை பாடே தவிர என்னுடையது அல்ல. (உங்கள் தெளிவிற்காக, தேச பக்தியைப் பற்றி நான் குறிப்பிட்டது - கேள்வி எழுப்பியது - சமுத்ராவை நோக்கி. தொடர்ந்து நீங்கள் என் எழுத்துகளைப் படித்துக் கொண்டிருந்தால், உங்களுக்கு தெளிவு கிடைத்திருக்கும். ஆனால், முன்னரே சொன்னது போல, நிதானமாக வாசித்துப் பதில் எழுதும் பொறுமை இல்லாத நீங்கள் என் வலைத்தளத்தில் இருக்கும் படங்களைக் கொண்டு எழுந்த அனுமானத்தில் உண்டாக்கிக் கொண்ட சித்திரங்கள் தானே? அப்படி இல்லையென்றால், மிக்க மகிழ்ச்சி.)

முகமூடி, (சீக்கிரமே பேரை மாத்துங்க நன்பரே - அழைப்பதற்கு சிறிது தயக்கமாக இருக்கிறது. :-) )

சம்பந்தமில்லா இடங்கள் என்று எதைக் குறிப்பிடுகிறீர்கள் - நீங்கள் தான் சொல்ல வேண்டும். பின்னூட்டங்கள் எல்லோருக்கும் உரியன. நான் பின்னூட்டம் எழுதுவது மட்டும் சம்பந்தமில்லா இடங்களில் என்று ஆகிவிடுமா என்ன? இப்படியான விமர்சனம் இதுதான் முதல் முறை. நான் எழுதிய வலைப்பூக்காரர்கள் இதுவரையிலும் இப்படி சொன்னதேயில்லை. உங்கள் தளத்தில் ஒன்று கூட நான் எழுதியதில்லை. நீங்கள் இப்படி சொல்கிறீர்கள். என்ன சொல்வது? தென்னை மரத்தில் தேள் கொட்டினால், பனை மரத்தில் நெறி கட்டுமாம்!

மேலும், இந்த சம்பந்தமில்லாமல் எழுதப்படும் எழுத்துகள் எப்படி இருக்கும் தெரியுமா? சுஜாதாவின் கற்றதும் பெற்றதும் தான். எப்படி மேலெழுந்தவாரியாக எழுதிக் கொண்டே போகிறார்? அந்த ஸ்டைல் தான் சம்பந்தா சம்பந்தமில்லாமல் எழுதுவது என்பது. ஏன்? நினைவிற்கு வரவர எழுதிக்கொண்டே இருக்கலாம். பலருக்கும் ஒரே இடத்தில் பதில் சொல்லலாம். மேலும் தீவிரமாக ஒரு கருத்தை எழுத வேண்டியதில்லை. கலவையாக கதம்பமாக பதில் எழுதி விடலாம். இது எத்தனை விதத்தில் வசதியாக இருக்கிறது தெரியுமா, சுஜாதாவிற்கு? ஆனால் என்னுடைய பாணி அதுவல்ல என்று இப்பொழுது தெரிந்திருக்கும் - இல்லையா?

// இப்போது உங்கள் பாணியில் பேசினால், //

என் பாணி என்ன என்று உங்களால் விளங்கிக் கொள்ள இயலவில்லை இதுவரையிலும். இப்பொழுது தான் கொஞ்சம் உணர்திருப்பீர்கள் என்று எண்ணுகிறேன். என்றாலும் நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள், உங்கள் அனுமானம் என்ன என்றும் தான் பார்ப்போமே!.

// உங்கள் மதம் எனக்கு தெரியும் என்ற காரணத்தால், IISCல் நடந்த தாக்குதல்களை குறித்து உங்களிடம் விவாதித்தால் நீங்கள் ஏன் இப்படியெல்லாம் காட்டுமிராண்டித்தனமாக செயல்படுகிறீர்கள் என்று கேட்டால் ஓகேவா? //
முதலில் நான் இதுகுறித்து மேலே ஒரு பெரிய விளக்கம் கொடுத்து விட்டேன். மீண்டும் ஒரு முறை விளக்குகிறேன். நீங்கள் (முகமூடி) என்னிடம் நீங்கள் இப்படி செய்கிறார்களே இது சரியா என்று கேட்டால், தீவிரவாதத்தில் நம்பிக்கை உள்ள அந்த இளைஞர்களைப் பற்றித் தான் கேள்வி எழுப்புகிறீர்கள் என்பதை புரிந்து கொண்டு அவர்கள் (தீவிரவாதிகள்) செய்வது தவறு தான் என்று பதில் சொல்வேன். ஆனால், நீங்கள் (சில வலைப்பதிவாளர்கள் - தினசரிகள். இந்த சில வலைப்பதிவாளர்களில் நீங்கள் இருக்கிறீர்களா, இல்லையா என்று எனக்குத் தெரியாது. ) எழுதும் பொழுது எவ்வாறு என்று எழுதுகிறீர்கள் - இஸ்லாமிய தீவிரவாதி என்றல்லவா? இங்கு தன்மை, முன்னிலை, படர்க்கை என்றெல்லாம் எந்த சந்தேகத்திற்கும் இடமில்லாமல், தெளிவாக இஸ்லாம் என்று குறிப்பிட்டு, எழுதுவதைத் தான் கேள்வி எழுப்புகிறோம். தீவிரவாதிகள் அனைத்து மதத்திலும் இருக்கையிலே அவர்கள் எல்லாம் மதம் சாராத குற்றவாளிகளாகவும், இஸ்லாமியனாக இருந்தால், அவனை மதத்தோடு இணைத்து விடுவது மட்டும் எந்த விதத்தில் நியாயம் என்று தான் கேள்வி கேட்கிறோம். இந்த தெளிவு என்னிடமிருக்கிறது. ஆனால், உங்களிடம் இல்லாத பொழுது, அதை நான் என்னவென்று சொல்வது? தீவிரவாதத்தைக் கண்டிப்பதில் அனைவரும் முன்வரவேண்டும் - அது எம்மதத்தைச் சார்ந்ததாகவும் இருந்து விட்டுப் போகட்டும். ஏன் இதை கருத்தில் வைக்க மாட்டேனென்கிறீர்கள்? உங்களுடையது எந்த விதத்தில் நேர்மையானது சொல்லுங்கள் பார்ப்போம்.?


மேலும் இப்படியெல்லாம் எழுதவில்லை என்று யார் சொன்னது? விழித்துக் கொண்டு உலகில் என்ன நிகழ்கிறது என்று பாருங்கள் நண்பரே -

எழுதத் தான் செய்கிறார்கள்.

நீங்கள் எழுதவே இல்லை இதுவரை என்று சொன்னால் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன் - நியாயமாக நடந்து கொள்ளும் ஒரு மாற்று மத சகோதரர் இருக்கிறார் என்று.

உங்களைப் போன்ற அன்பர்களையும் அழைக்கிறோம் - அத்தகைய தவறான எண்ண ஓட்டத்தில் இருந்து மற்றவர்களையும் வெளிக் கொண்டு வர துணை புரியுங்கள். செய்தீர்கள் என்றால் நல்லது - இல்லையென்றால், அதனால் வருத்தமில்லை. தொடர்ந்து, பொய் பிரச்சாரங்களை எதிர்த்து எழுதுவோம்.

// மதக்கோட்பாடு எந்த சிந்தாந்தத்தில் எழுப்பப்பட்டாலும் கிறிஸ்துவ தீவிரவாதம் என்ற சொல் இல்லாத நிலையில் இஸ்லாமிய தீவிரவாதம் என்று சொல்வதும் முறையற்றது என்று வாதிடுபவன் நான். //

உங்கள் எண்ணத்திற்கு மிக்க நன்றி. இத்தகைய சிந்தனைகள் வளர வேண்டும் என்பது தான் எங்களது கோரிக்கை.

மிக்க மகிழ்ச்சி, முகமூடி.

இதே அலைவரிசையில் விவாதங்கள் தொடரும் என்றால்.

அன்புடன்
நண்பன்

27 comments:

சன்னாசி said...

//நம்மிடையே நடக்கும் பனிப்போரை அறியாதவர் என்னைப் பற்றித் தவறாக நினைக்கத் தூண்டும்//

பனிப்போரும் இல்லை வேறெதுவும் இல்லை; ஒரு பதிவு, அதற்கான விமர்சனமோ கருத்தோ - அவ்வளவே. உங்களது பதிவில் நான் இட்ட பின்னூட்டங்களுக்கான காரணத்தை அறியவேண்டுமென்ற அவ்வளவு ஆர்வம் உங்களுக்கிருந்தால் - உங்களது ஹோலோகாஸ்ட் பற்றிய பதிவு, பஸ்மாசுரனுக்கு வரம்கொடுத்த சிவன் நிலைமை மாதிரிப் பட்டதால்தான் அந்தக் குத்தலான பின்னூட்டங்கள். யூதப் படுகொலைகளை மஹ்மூதினேஜாதின் அரைவேக்காட்டு உளறல்களைவைத்து நீங்கள் "கட்டவிழ்த்தமாதிரி" நரேந்திர மோடியின் அரைவேக்காட்டு உளறல்களைவைத்து நாளைக்கு குஜராத் படுகொலைகளை, ஒரிஸ்ஸாவில் எரிக்கப்பட்ட பாதிரியார், குடும்பத்தின் நிகழ்வுகளை எவரேனும் "கட்டவிழ்க்கும்" துர்ப்பாக்கியம் நிகழும்போது ஒருவேளை நான் இட்ட பின்னூட்டத்தின் அசல் நோக்கம் உங்களுக்குத் தெரியக்கூடும். மற்றப்படி தனிமனிதத் தாக்குதலென்றெல்லாம் நான் கருதவில்லை. பத்ரி பதிவில் உங்கள் பின்னூட்டத்துக்கான விமர்சனம், அந்தப் பதிவளவில் மட்டுமே. Emotional spill-over ஏதும் உண்டென்று ஏதும் நினைத்துக் குழப்பிக்கொள்ளவேண்டாம் - அதற்கான அவசியம் எனக்கில்லை, இந்த profiling, அடிப்படையில் நான் வெறுக்கும் விஷயமும்கூட. அவ்வளவே.

நண்பன் said...

மிக்க நன்றி.

உங்கள் நிலைமைமைய்யித் தெளிவுபடுத்தியமைக்கு.

emotional spillover என்று எதையும் நான் எடுத்துக் கொள்ளவில்லை. ஆனால், உங்களது சில வாக்க்கியங்களைக் கண்டபொழுது, அது வருத்தத்தின் மீது எழுந்ததோ என்று நினைத்தேன். அப்படி இல்லையென்றால், சரிதான்.

Samudra said...
This comment has been removed by a blog administrator.
நண்பன் said...

சமுத்ரா - மிக்க நன்றி. நீங்கள் கொடுத்த உபயோகமான தகவலுக்கு.

அதே சமயம் - தங்கள் அணு உலைகளை கண்காணிப்பாளர்களுக்குத் திறந்து விடும் அதே சமயத்தில், அவற்றை ராணுவ உபயோகத்திற்கானதாக மாற்றிக் கொள்ள அனுமதி தேவையில்லை என்ற நிபந்தனையைப் பற்றியும் நான் சொல்லியிருந்தேன். அது பற்றிய தகவலையும் அறிந்து சொல்லுங்கள். இந்த உலகை 100 முறைக்கும் மேல்அழிக்கத் தேவையான அளவிற்கு ஆயுதங்களை வைத்துக் கொண்டு, மேலும் இந்த நிபந்தனையைத் தங்களுக்குத் தேவையானதாக வைத்திருக்கிறது. ஆனால், இந்தியாவிற்கு மட்டும் ஏன் இந்த் நிபந்தனை.? இது ஒரு discrimination ஆக உங்களுக்குப் படவில்லையா? மேஎலும் இது இந்தியா மீது கொண்ட அவநம்பிக்கையாகத் தோன்றவ்வில்லையா?

அடுத்து, technology denials - நீங்கள் சொல்கிறீர்கள் அது கொஞ்சம் கொஞ்சமாக வாபஸ் பெறப்பட்டது என்று. இல்லை. 2003 வரைக்கும் எனக்கே அது தெரியும். அதன் பிறகு என்ன ஆயிற்று என்று கேட்டுத் தான் சொல்ல முடியும். ஆனால், நீங்கள் பொத்தம் பொதுவாக எழுதி விட்டீர்கள் - வாபஸ் வாங்கப்பட்டது என்று.

மற்றுமொரு விஷயம் - இந்த ஒப்பந்தம் இன்னும் காங்கிரஸில் ஏற்கப்படவில்லை. இரண்டு செனட்டர்கள் இதை எதிர்த்து குர்ல் எழுப்பி இருக்கிறார்கள். இதையும் தாண்ட வேண்டும்.

அடுத்து -

அமெரிக்கா செய்த நல்ல காரியமாக, உணவு வழங்கியதைப் பற்றி எழுதி இருக்கிறீர்கள். பின்னர் அதுவே உண்ணத் தகாதது என்றும் எழுதீ விட்டீர்கள். இந்த உணவு எதற்காகப் பயன்பட்டது என்று எழுதவில்லை. இன்றும் பல ஆப்பிரிக்க நாடுகளுக்கு இந்த உணவு போகிறது - பல charity mission வழியாக. இவர்கள், இந்த உணவுப் பொருளைக் கொண்டு, என்ன என்ன செய்கிறார்கள் என்பது எல்லோருக்கும் தெரியும்.

பின்னர் - அமெரிக்காவில் மசூதிகள் இருக்கின்றன என்பதைக் கொண்டு என்ன சொல்ல வருகிறீர்கள்? அமெரிக்காவின் பெருந்தன்மையையா? அந்த மசூதிகளில் அணுப் பொருட்கள் இருக்கிறதா என்றூ மோப்பம் பிடித்ததா பெருந்தன்மை? என்னவோ போங்க - எப்படியாவது அமெரிக்காவைக் காப்பாற்றிவிட முனைகிறீர்கள் - தேவையே இல்லை.

இந்தியா - சோவியத் உறவுகள் நடுநிலைமை என்று நான் சொல்லவே இல்லை. அதைப் பற்றி சொல்லும் பொழுது - India treats all as equal but Russians as more equal. அத்தனை தான். அதே சமயம் அமெரிக்காவை விட, ரஷ்யா நமக்கு பல உதவிகள் செய்தது என்பதும் உண்மை. Cryogenic engines கொடுத்த வரைக்கும்.

ஆனால், அமெரிக்கா, எப்பொழுதுமே இந்தியாவை சந்தேகத்தோடு தான் பார்த்தது. இனி அதை மாற்றிக் கொள்ளும் என்றும் தோணவில்லை.

முத்து(தமிழினி) said...

நண்பன்,

நன்றாகவும் ஆழமாகவும் எழுதுகிறீர்கள்..

நம்முடைய அறிவியல் வளர்ச்சியை தடுக்க அமெரிக்கா நினைப்பதைப்பற்றி நீங்கள் எழுதியது நல்ல விஷயம்..

எனக்கு தோன்றிய ஒன்றை இங்கு கூற விரும்புகிறேன். இஸ்லாமிய தீவிரவாதம் என்று கூறப்படுவதின் ஒரு பின்னணி என்னவென்றால்
எந்த ஒரு தீவிரவாத செயலையும் கடவுளின் பெயரால் செய்வதினால் தான்
என்று நினைக்கிறேன். கடவுளின் பெயரால் செய்யப்படும்போது சற்று சமாதானவாதியாக இருக்கும் மக்கள் கூட அதை நியாயப்படுத்த வேண்டி உள்ளது...

இதைப்பற்றி எனக்கு நிறைய கருத்து உள்ளது..பின்னால் தனிப்பதிவாக இடுகிறேன்.

நண்பன் said...

முத்து மிக்க நன்றி உங்கள் பின்னூட்டத்திற்கு.

உங்கள் கருத்துகளைத் தனிப்பதிவாக வையுங்கள். இப்பொழுது எழுதியவற்றிலிருந்து நீங்கள்
என்ன சொல்ல வருகிறீர்கள் என்பது புரியவில்லை.

உங்கள் தனிப்பதிவில், நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள் என்பதைத் தெரிந்து கொண்டு பின்னர் என் பதில்களைச் சொல்கிறேன்.

நன்றி.

அன்புடன்
நண்பன்

நண்பன் said...

//நண்பன்,

நன்றாகவும் ஆழமாகவும் எழுதுகிறீர்கள்..//

எந்தவித சித்திரங்களும் மனதில் கொள்ளாது நேராக நேர்மையாகப் பார்ப்பவர்களுக்கு இப்படித் தான் தெரியும்.

முகத்திரை போட்டுக் கொண்டவர்களுக்கு வேறு விதமாகத் தெரிகிறது.

அதுதான் அவர்களது நேர்மை. அந்த நேர்மையை ஏற்றுக் கொண்டு தான் அவர்களுடன் உரையாட வேண்டியதிருக்கிறது.

இல்லையா, முத்து?

முத்து(தமிழினி) said...

நேர்மையான விவாததிற்கு நீங்கள் கொடுக்கும் மரியாதை எனக்கு பிடிக்கும்..சில விஷயங்களில் உங்கள் கருத்துக்கு மாற்று கருத்து நான் கொண்டிருந்தாலும்..

மற்றபடி பொது இடங்களில் எல்லா வகையான ஆட்களையும் நாம் சமாளிக்க வேண்டித்தான் உள்ளது...அதை தவிர்க்க முடியாது...

coming to the point....

//இஸ்லாமிய தீவிரவாதி என்றல்லவா? இங்கு தன்மை, முன்னிலை, படர்க்கை என்றெல்லாம் எந்த சந்தேகத்திற்கும் இடமில்லாமல், தெளிவாக இஸ்லாம் என்று குறிப்பிட்டு, எழுதுவதைத் தான் கேள்வி எழுப்புகிறோம்//

i mentioned about this paragraph only in my previous comment...

Samudra said...
This comment has been removed by a blog administrator.
neo said...
This comment has been removed by a blog administrator.
கல்வெட்டு (எ) பலூன் மாமா said...

நண்பன் ,
இது இந்த பதிவிற்குச் சம்பந்தம் இல்லாதது .. சொல்லவேண்டும் என்று தோன்றியது அதனால்..

பொங்கல் வாழ்த்துகள்.
நண்பர்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் மகிழ்ச்சியும் அன்பும் பொங்கல் போல் பொங்கட்டும்.

அன்புடன்,
கல்வெட்டு (எ) பலூன் மாமா

நண்பன் said...

சமுத்ரா,

உங்கள் பதிவுகளுக்கு நன்றி. ஆனால் ஏன் ஆங்கிலத்தில் மட்டுமே எழுதுவேன் என்று அடம்பிடிக்கிறீர்கள் என்று தெரியவில்லை. உங்களால் தமிழில் எழுத முடியவில்லை என்றால், இனி உங்கள் ஆங்கிலப் பேருரைகளை பிரசுரிக்க இயலாது.

என்றாலும் - you are biased - so am I
மன்னிக்கவும் - உங்கள் அளவில் அது சரியானதாக இருக்கலாம். ஆனால், நான் எடுத்து வைக்கும் விமர்சனங்கள் - பெரும்பாலும் அமெரிக்கப் பத்திரிக்கைகளில், அமெரிக்கர்களாலேயே எழுதப்பட்டது தான். இங்கு, பத்திரிக்கைகள் பெரும்பாலானவை - அமெரிக்கப் பத்திக்கைகளுடன் ஒப்பந்தம் செய்து கொண்டு அந்தக் கட்டுரைகளை எடுத்து கையாள்கின்றனர். அதனால், அவை மாற்றுக் கருத்துகளே அன்றி, விமர்சனங்களே அன்றி, துவேஷங்களல்ல.

மற்றபடிக்கு, இன்னும் இரண்டு நாள் விடுமுறையில், நீங்கள் இதுவரையிலும் அனுப்பி வைத்த ஆங்கில உரைகளுக்கு மொழி பெயர்ப்பு எழுதி அனுப்பாவிட்டால், அவற்றை நீக்கி விடுவேன்.

உங்கள் கருத்துகளைப்பிரசுரித்து உங்கள் கருத்து சுதந்திரத்தைப் பாதுகாத்து தந்தது போல, நீங்களும் மற்றவர் கருத்துகளை மதிக்க வேண்டுகிறேன்.

என்னுடைய தளத்தைப் பலரும் படிக்கின்றனர். அவர்கள் அனைவரும் ஆங்கிலம் அறிந்தவர்களாக இருக்க வேண்டும் என்று நான் எதிர்பார்க்க முடியாது. ஏதோ ஒன்று இரண்டு வரிகள் என்றால் பரவாயில்லை. நீங்கள் எழுதி வைத்திருக்கும் பிரச்சாரங்களை தொடர்ந்து என்னால் பிரசுரித்துக் கொண்டிருக்க இயலாது.

தமிழில் எழுதுங்கள் - துவேஷங்கள் கொண்டு எழுதப்படாத வரைக்கும் அவற்றை நான் மதிப்பேன்.

நன்றி.

உங்கள் கருத்திற்கும், தகவல்களுக்கும்.

எந்த உள்குத்து வேலையுமில்லாமல், இந்த ஒப்பந்தம் கையெழுத்தானால் அதனால் மகிழ்ச்சி கொள்வேன்.

அதற்காக, அமெரிக்கா பயன்படுத்தும் தவறான வெளி நாட்டு கொள்கைகளை ஒரு போதும் ஏற்கப்போவதில்லை.

நீங்களும் நானும் ஒரு புள்ளியில் இணையப்போவதில்லை. ஆனால், பரஸ்பர கருத்துப் பரிமாற்றத்திற்கு நான் எதிரியல்ல.

தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகள்

அன்புடன்
நண்பன்

நண்பன் said...

கல்வெட்டு,

மிக்க நன்றி.

வாழ்த்துகள் சொல்வதற்கும், முகம் பார்த்துப் பேசுவதற்கும் - நான் இடம் பொருள் ஏவல் பார்ப்பதில்லை.

அதனால், சம்பந்தா சம்பந்தமில்லாமல் என்று நான் தவறாக நினைக்க மாட்டேன்.

மிக்க மகிழ்ச்சி.

உங்களுக்கும் குடும்பத்தினர் அனைவருக்கும் - பொங்கல் வாழ்த்துகளுடன், தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகளும்.

நண்பன் said...

அன்பின் நியோ,

உங்கள் ஆதரவிற்கு நன்றி.

மறுமொழி மடலும் கிடைத்தது.

உங்கள் உணர்வுகளை அப்படியே பிரதிபலித்தால், அதைக் கொண்டு, இந்தப் பதிவின் நோக்கத்தைத் தவறான திசையில் திருப்பி விடக் கூடும் என்பதால், தவிர்த்தேன்.

நீங்கள் புரிந்து கொள்வீர்கள் என்றே நினைக்கிறேன்.

உங்கள் மின்னஞ்சல் முகவரியைக் கொடுங்கள் - எந்த ஒரு சந்தர்ப்பத்திலாவது போலியான பின்னூட்டங்கள் வருகிறது என்று நான் கருதினால் உங்களுடன் தொடர்பு கொண்டு உறுதி செய்து கொள்ள முடியும் என்பதால். இப்பொழுது உங்கள் மின்னஞ்சல் இல்லையென்பதால், அதைப் பதித்து நீக்க வேண்டியதாயிற்று.

பொங்கல் + தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகள்

அன்புடன்
நண்பன்

அபூ ஸாலிஹா said...

அன்பின் நண்பன் ஷாஜகான் அவர்களுக்கு, அஸ்ஸலாமு அலைக்கும்! தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் எமது நெஞ்சம் நிறைந்த தியாகப்பெருநாள் வாழ்த்துக்கள். தங்களின் பதிவுகளைத் தொடர்ந்து படித்து வந்தாலும் நான் பின்னூட்டம் ஏதும் இதுவரை இட்டதில்லை.

சிறிய வேண்டுகோள்: பிற பதிவர்கள் தங்கள் பதிவுகளில் இடும் கருத்துக்களை தாங்கள் (பதிவுகள் என்றல்லாமல்) பின்னூட்டம் என்று குறிப்பிடலாமே?

ஆழமான சிந்தனையின் வெளிப்பாடுகளான தங்களின் பதிவுகள் மேன்மேலும் தொடர வாழ்த்துக்கள்.

முகமூடி said...

சுட்டு பதிவு, என் தமிழ் தகராறு பிடித்தது என்றெல்லாம் நீங்கள் சொன்னாலும் நீங்கள் அந்த இடத்தில் கட்டுரையாளரைத்தான் குறிப்பிடுகிறீர்கள் என்பது படித்தவர்களுக்கு தெரியும். எனினும் பொதுவான pronounsஐ உபயோகிப்பதை இனி தவிர்த்துக் கொள்கிறேன் என்று நீங்கள் ஏற்கனவே சொல்லிவிட்டதால் இதுபற்றிய விவாதம் இனி தேவையில்லாதது.

அஞ்சறை பெட்டியிலிருந்து தூவி மசாலா சேர்த்து சமைக்கிறீர்கள் என்ற என் கருத்தில் எந்த மாற்றமும் இல்லை. உங்களின் எல்லா எண்ணங்களையும் பதிவாக எழுதி, தலைப்பு வைக்கும்போது மாத்திரம் எங்கோ உங்களை கேள்வி கேட்டவர் ஒருவரின் பெயரை வைப்பது என்பது தெரிந்தே செய்தால அது அயோக்கியத்தனம். ஆனால் நீங்கள் தெரியாமல் செய்கிறீர்கள் என்பதால் மசாலா சமையல். இப்பதிவிலும் கூட எனக்கு பதில் என்று தலைப்பு வைத்துவிட்டு சம்பந்தமேயில்லாத பல விஷயங்களை எழுதியிருக்கிறீர்கள். உங்கள் தலைப்பை பார்த்துவிட்டு, நீங்கள் ஆழமாக பதிப்பவர் என்று ஏற்கனவே முன்முடிவுகளோடு வருபவர்கள் ஏதோ உங்கள் அமெரிக்க எதிர்ப்பு கருத்துக்கு எதிரான முகமூடிக்கு நீங்கள் பதில் சொல்வதாகவே நினைப்பர். உங்களின் ஒரே ஒரு பதிவை தவிர வேறு பதிவுகளை படித்திராத முகமூடிக்கும் உங்கள் அமெரிக்க எதிர்ப்பு கொள்கைக்கும் என்ன சம்பந்தம். எளிமையான ஒரே ஒரு கேள்விக்கு தொடர்பிருக்கிறது என்று நீங்கள் நினைக்கும் ஆனால் உண்மையில் தொடர்பில்லாத எல்லாவற்றையும் கலந்து கட்டி ஒரு பதிவு. நியாயப்படி பார்த்தால் இப்பதிவின் தலைப்பு "பலருக்கு என் பதில்" என்பதாக இருக்க வேண்டும். தலைப்பு வைப்பது உங்கள் இஷ்டம், அதில் என் பெயர் இருப்பதால்தான் இவ்விளக்கமே அன்றி இது பற்றி எந்தவிதத்திலும் இதற்கு மேல் விவாதம் செய்ய விருப்பம் இல்லை. நன்றி.

இராமநாதன் said...

நண்பர் அவர்களே,
ஏன் முஸ்லீம்கள் மட்டும் மீடியாவால் குறிவைக்கப்படுகிறார்கள் என்று கேட்டுள்ளீர்கள்?

என்னைப் பொருத்தவரை ஸ்ரீலஙகாவில் நடக்கும் பிரச்சனைக்கு இந்து/புத்தம் என்று வர்ணம் புகுத்தாமல் தமிழே முதன்மைப்படுத்தப்படுகிறது.

ஆனால், அல்-கயிதாவில் ஆரம்பித்து லாஷ்கர்-இ-தொய்பா வரைக்கும் தங்களின் மதத்தையே முன்னிருத்துருகின்றனர். அத்தகைய குழுக்களின் (ஹமாஸ் உட்பட) பெயரினில் தங்களின் மதம் சம்பந்தபட்டுள்ளதே: இஸ்லாமிஸற்க்கு எதிர்ப்பானதனொன்று. இது புரியாமலா இருக்கிறீர்கள்?

நரேந்திர மோதி பற்றி குறை கூறுமுன்னர் கோத்ராவில் நடந்தது நினைவுக்கு வர மறுப்பது ஏனோ?

நண்பன் said...

சமுத்ரா,

// My knowledge of Tamil begins and ends with the appreciation of Kalki and Bharathi. // கல்கியையும் பாரதியையும் பாராட்டத் தெரிந்தவர், அத்துடன் தன் அறிதல் முடிந்து விட்டது என்று சொன்னால் அது வேண்டுமென்றே தன் அடையாளங்களை மறைக்கிறார்களோ என்று தோன்றச் செய்கிறது. என்ன செய்தாலும் திருந்தவே மாட்டீர்களா?

// So far as the US foreign policy is concerned its all about Oil and resources.// அப்படி சொல்லி விட முடியாது. புஷ், 9/11க்கப்புறம் பேசிய பேச்சில், உபயோகப்படுத்திய வார்த்தை - crusade - அவர் உளறிக் கொட்டினார் என்பது அப்புறம். ஆனால், அவர் தீவிரவாதத்திற்கான யுத்தம் நடத்துவதைக் காட்டிலும், இஸ்லாத்திற்கெதிரான யுத்தத்தில் தீவிரம் காட்டுகிறார் என்று எண்ண வைக்கிறது. இல்லையென்றால், பின்லேடன் குடும்பத்தை அவர்கள் உளவுத்துறையின் எதிர்ப்பையும் மீறி, பத்திரமாக விமானமேற்றி அனுப்பி வைக்கக் காரணம்?

// Honestly, any country that is in the shoes of the USA would do what the USA is doing right now. // தவறு. இதை சரி என சொல்ல முனைந்தால், அரசத் திவிரவாதத்தை எதிர்த்து மற்றவர்களுக்கும் போர் புரிய உரிமை இருக்கிறது என்ற அர்த்தம் வரும். எப்படி தீவிரவாதிகள் வேட்டையாடப்பட்டு அழித்தொழிக்கப் படவேண்டுமோ, அப்படியே, அரசுகளால் இயக்கப்படும் தீவிரவாத செயல்களும் நிறுத்தப்பட வேண்டும். இல்லையென்றால், தீவிரவாதிகள் நியாயம் பேச தொடர்ந்து வழி வகுத்து கொடுத்த மாதிரி ஆகிவிடும். தீவிரவாதத்தை எதிர்த்து குரல் கொடுக்கும் அனைவரும் பலவீனமடைவர். உதாரணம் பாக்கிஸ்தான் மீது அந்த நாட்டின் அரசுக்குத் தெரியாமலே பின்லேடனுக்கு அடுத்த தலைவன் ஜாவ்ரி விருந்துண்ண வருகிறார் என்று குண்டு வீசி, அப்பாவி பெண்கள் குழந்தைகள் உட்பட 18 பேரை அமெரிக்கா கொலை செய்ய, மக்கள் இன்று மாபெரும் பேரணி நடத்தி அமெரிக்கா மீது தங்கள் வெறுப்பைக் காட்டியிருக்கிறார்கள். எப்பொழுதுமே, அமெரிகாவின் உளவுத் துறை தவறான தகவல்களைக் கொடுத்து மக்களை கொலை புரிந்து வருகிறது. மக்கள் மனதில் இடம் பிடிக்காமல், இவர்கள் எப்படி தீவிரவாதிகளை அழித்தொழிக்கப் போகிறார்கள்? ( அது சரி, ஏன் எவருமே, இந்த
படுகொலைகளைக் கண்டிக்கவில்லை? ) தீவிர வாத எதிர்ப்பில் அமெரிக்காவிற்குப் பல உதவிகள் புரிந்து வரும் முஷரஃபிற்கு இது மிகப் பெரிய அடியாகும். அவர் இந்த அமெரிக்க எதிர்ப்பை எதிர்கொள்ள வேண்டும். எதற்காக அமெரிக்க இப்படி தனக்கு ஆதரவளிப்பவர்களைக் கூட கலந்தாலோசிக்காது, இக்கட்டில் கொண்டு நிறுத்துகிறது?

// International relations are not based on morality - I'm afraid no country can afford to base its relations on morality or principles. // என்னுடைய மேற்கண்ட வாதமே இதற்கும் பொருந்தும். தனக்கு ஒரு நீதி அடுத்தவர்க்கு ஒரு நீதி என்று வாழ முடியாது.

// Thats akin to disaster - like what Nehru brought upon us in the early years of our freedom. // உங்களுக்கு நேரு மீது தனிப்பட்ட வெறுப்பு இருக்கிறது போலும். ஆனால், அன்று நேரு என்று ஒருவர் இல்லாவிட்டால், அன்றே இந்தியா இந்துத்வாவின் கைகளுக்ககுப் போயிருந்திருக்கும். விளைவுகள் இன்னும் மோசமாக இருந்திருக்கும்.

// Matsya Nyaya, Big fish eat small fish.// இந்த வேத காலத்து நியாயங்கள் இனி எடுபடாது. என்றாலும் உண்மையை ஒத்துக் கொண்டதற்கு நன்றி. வல்லவன் வாழ்வான் என்று இனி யாரும் பேசித் திரிய முடியாது. ஆனால், இந்த எண்ணம் கொண்ட பலர் இன்றும், முகத்திரை போட்டு அலைகிறார்கள் என்பதும் உண்மை என்பதை ஒப்புக் கொள்ளத் தான் வேண்டும்.


// However their crediblity matters! Not everything written in the media is to be taken as the Gospel truth. // அமெரிக்க பத்திரிக்கைகளில் எழுதப்படுபவற்றை நான் படிப்பதில்லை. அங்கிருக்கும் காலம்னிஸ்ட் என்ன எழுதுகிறார்கள், எந்தக் கட்டுரையை எழுதுகிறார்கள் என்பதைத் தான் நான் படிக்கிறேன். இவைகள் செய்தியல்ல. மாறாக, its a view point. அவ்வளவே.

// Happy New Year to You. (Well, thats for both Calenders, Tamil and English) // தமிழ்ப் புத்தாண்டுகளை இன்று யாரும் கேள்வி கேட்காமல், பலரும் வாழ்த்துகள் சொல்ல ஆரம்பித்திருப்பது மிக்க மகிழ்ச்சி.

நண்பன் said...

அபு ஸாலிஹா,

மிக்க மகிழ்ச்சியும் நன்றியும்.

உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் தியாகத் திருநாள் வாழ்த்துகள்.

அன்புடன்
நண்பன்.

நண்பன் said...

முகமூடி, ராமநாதன் - உங்களுக்கான பதில்கள் நாளை. ரொம்ப காக்க வைத்ததற்கு மன்னிக்கவும்.

நண்பன் said...

முகமூடி,

// அஞ்சறை பெட்டியிலிருந்து தூவி மசாலா சேர்த்து சமைக்கிறீர்கள் என்ற என் கருத்தில் எந்த மாற்றமும் இல்லை. //


// உங்களின் ஒரே ஒரு பதிவை தவிர வேறு பதிவுகளை படித்திராத முகமூடிக்கும் //


ஆஹா!!! அதி அற்புதம் போங்கள்!!! என்னுடைய எழுத்து மசாலா சேர்க்கப்பட்டது. எப்படி தெரிந்து கொண்டீர்கள்? என்னுடைய எழுத்துகளையெல்லாம் தொடர்ந்து படித்து வந்தீர்களா? இல்லை. நீங்களே சொல்லிவிட்டீர்கள் - என்னுடைய ஒரே ஒரு பதிவை - அதாவது இந்தப் பதிவை மட்டும் தான் வாசித்திருக்கிறேனென்று. !!!

நீங்கள் வைத்த விமர்சனமோ பத்ரியின் பதிவில். இந்தப் பதிவு வருவதற்கு முன்னே. அதாவது என் எந்த ஒரு பதிவையும் வாசிக்காமலே உங்களுக்குத் தோன்றியபடி ஒரு விமர்சனம். நல்லா இருக்குது நண்பரே!!! உங்களுடைய அத்தனை எழுத்துகளும் அப்படித்தானோ?

எந்த அனுமானத்தின் மீது என் எழுத்துகளை பற்றிய விமரசனம் வைத்தீர்கள் ? மசாலா சேர்த்தது என்று? தமிழ், மதம், ஜாதி இவற்றைப் பற்றி எழுதுகிறேன் என்று எப்படி முடிவு செய்தீர்கள்? வாசிக்கவே செய்யாத பதிவுகளை எப்படி உங்களால் இனம் காண முடிந்தது.? என் பெயரா? அல்லது என் வலைப்பதிவில் இருக்கும் புகைப்படங்களா? எதைக் கண்டு மிரண்டு விட்டீர்கள்?

இப்பொழுது புரிகிறதா நண்பரே - உங்கள் விமர்சனம் நேர்மையற்றது என நான் சொல்லியது ஏனென்று?. அதிலும், மசாலா சேர்க்கிறீர்கள் என்று சொல்லியதை விட்டுவிடலாம் - ஏனென்றால், நன்றாக சமைக்கிறீர்கள் என்று சொன்னால் அதை பாராட்டாக எடுத்துக் கொள்ளலாம். சுந்தர மூர்த்தி தன் கருத்துகளைச் சொன்ன பொழுது, அதை நேராக எடுத்துக் கொண்டு தான் நன்றி சொன்னேன். அதைப் போல மசாலா சேர்க்கிறீர்கள் என்பதை ஒரு பாராட்டாக மட்டுமே எடுத்துக் கொள்கிறேன். அதற்காக நன்றி கூட சொல்லியிருந்தேன். ஏனென்றால், மாற்றுக் கருத்தாளார்கள் பாராட்டும் பொழுது கிடைக்கும் ஆனந்தமே அலாதி தான்.

ஆனால், தமிழ்,மதம், ஜாதி இதையெல்லாம் எழுதினேன் என்று எப்படி முடிவு கட்டினீர்கள்? எங்கிருந்து படித்தீர்கள்?

படித்திருக்க மாட்டீர்கள். யாராவது சொல்லியிருக்கக் கூடும். அதை முழுவதுமாக நம்பி விட்டீர்கள். ஆபத்து நண்பரே - பிறரை எல்லா இடத்திலும் நம்பக் கூடாது. என்னுடைய எழுத்தைப் படிக்காமலே புலம்பித் தள்ளி விட்டீர்கள். பாவம். இப்படி உங்கள் காலை வாரி விடும் என்று உங்களுக்குத் தெரிந்திருக்காது.

பரவாயில்லை - என்னைப் பற்றிய எந்த அனுமானத்தையும் நீங்கள் வைத்துக் கொள்ளுங்கள். ஆனால், விமர்சனமாக அதை வெளியே வைக்கும் பொழுது கவனமாக இருங்கள். நான் தமிழ், ஜாதி இவற்றைப் பற்றி இது வரையிலும் எழுதவில்லை. ஒவ்வொரு ஜாதிக்கும் போராட இங்கு ஆட்கள் இருக்கும் பொழுது, நான் வேறு எவருக்காகவும் வக்கீலாக இருக்க வேண்டிய அவசியமில்லை. என் மதம் பற்றி ஒரு பதிவு எழுதினேன் - அதுவும் குறிப்பிட்டு சொல்லித்தான் எழுதினேன் - மதம் பற்றிய ஞானம் எனக்கு குறைவு என்பதால் - வாசித்து எழுதுகிறேன் என்று. அதன் பின்னர் மதம் பற்றிய ஒரு பதிவை கூட எழுதவில்லை.

கோட்ஸேயைத் தெய்வமாக கொண்டாட முடியவில்லை - புகழ் பாட முடியவில்லை - மேடை போட்டு பாராட்ட முடியவில்லை என்ற ஆதங்களையெல்லாம் வெளியிடும் பொழுது, என் மதம் பற்றி உயர்வாகப் பேசுவதில் என்ன தவறு இருக்கப் போகிறது.? பிற மதங்களை இழிவு படுத்தி எழுதி இருந்தால் சொல்லுங்கள் பார்ப்போம் - உங்களால் முடியாது.

மதம் பற்றிய என்னுடைய குறைந்த அறிவை ஈடு செய்யும் வகையில், வரலாற்றில் அபரிதமான ஆர்வமும், புத்தகங்களும் இருக்கின்றன. அதனால், என் பதிவுகள் வரலாற்றைக் குறித்தானதாக இருக்கும் என்றே எழுதியிருக்கிறேன். அரசியல், சமூக நிகழ்வுகள் குறித்தானதாக இருக்கும் என்று தான் சொல்லியிருக்கிறேன் - எழுதி வருகிறேன்.

நீங்கள் உங்கள் பெயருக்கு களங்கம் விளைவித்துக் கொண்டீர்கள், நண்பரே. அத்தனை தான் என்னால் சொல்ல முடியும்!!!.

உங்கள் நோக்கம் அந்தப் பதிவை திசை திருப்பி, இடைஞ்சலான கேள்விகளுக்கு பதில் சொல்லாமல் விலகிக் கொள்ளலாம் என்றிருந்தால், அது தவறு.

ஏனென்றால், பதில் சொல்லப்படவில்லையென்றால், அதை ஏற்றுக் கொண்டீர்கள் என்று தான் பொருள். அதனால், நான் அங்கு வைத்த கேள்விகள் அனைத்தையும் ஏற்றுக் கொண்டீர்கள். இல்லையா?

தலைப்பு வைப்பது என் விருப்பமாக இருந்தாலும், அதனால் யாரையும் அவதூறு செய்ததில்லை. பொதுவாக நீண்ட பின்னூட்டங்களை நான் பிறர் பதிவில் வைப்பதில்லை. நீளமாக் எழுதுகிறார் என்று யாரும் கலவரப்பட வேண்டிய அவசியமில்லை. என் வலைப்பூவில் எத்தனை நீளமாகவும் எழுதுவேன். எத்தனை சிறியதாகவும் எழுதுவேன். அது குறித்து உங்கள் அனைவருக்கும் உண்டான கவலை எனக்கு சிரிப்பை வரவழைக்கிறது. தமிழ் மணத்தில் ஏதேனும் விதிமுறைகள் இருக்கின்றதா, என்ன? இத்தனை வரிகளுக்கு மிகுந்து போனால் பதிக்கப்படாது என்று? ஆனால், அதே சமயத்தில் அடுத்தவர் வலைத்தளங்களில், நீண்ட பின்னூட்டங்களை வைப்பதில்லை என்று தான் இயங்கி வருகிறேன். இது உங்களுடைய மற்றொரு தவறான கண்ணோட்டம். அதனால், நீண்ட பதில்களை, ஒரு பதிவாகவே என் வலைப்பூவில் வைக்கிறேன். அவ்வாறு செய்யும் பொழுது, அதில் யாரிடம் அதிகம் உரையாடும் தொனியில் பேசியிருக்கிறேனோ அவர் பெயரை தலைப்பில் வைக்கிறேன். பின்னூட்டங்களில், பெயரைக்குறிப்பிட்டு, எழுதுவதில்லையா? அது போலத்தான் இதுவும்.

இந்தப் பதிவில், எழுதப்பட்ட பல விஷயங்களும் உங்களிடத்தில் பேசும் தோரணையில் அமைந்து விட்டதால், உங்கள் பெயரை தலைப்பில் வைப்பது பொருத்தம் என்று நினைத்தேன்.

நல்லது.

மற்றபடிக்கு படித்து விட்டு விமர்சனம் வையுங்கள் - இவன் இப்படி தான் எழுதுவான் என்று நினைத்துக் கொண்டு, விமர்சனம் வைத்தீர்கள் என்றால், அதனால் உங்கள் நம்பகத்தன்மை தான் பாதிக்கப்படும். என்ன, நான் சொல்றது சரிதானே?

அன்புடன்
நண்பன்

நண்பன் said...

ராமநாதன்,

மன்னியுங்கள் - உங்களுக்கான பதில் நாளை.

தாமதத்திற்கு வருந்துகிறேன்.

அன்புடன்
நண்பன்

நண்பன் said...

அன்பின் ராமநாதன்,

// ஏன் முஸ்லீம்கள் மட்டும் மீடியாவால் குறிவைக்கப்படுகிறார்கள் என்று கேட்டுள்ளீர்கள்? //

இல்லையா பின்னே? நீங்கள் தமிழ்நாட்டில் இல்லை. அல்லது குறைந்தபட்சம் தமிழ்கத்தில் எப்படி செய்திகள் வெளி வருகின்றன என அறிய இயலாத சூழ்நிலையாகக் கூட இருக்கலாம். அதனால் உங்களுக்கு இந்தப் பிரச்சினையின் முழுவீச்சும் புரியவில்லை போலிருக்கிறது. ஏன் என்பதற்கு பல விளக்கங்கள் கொடுக்க இயலும். ஒன்று - முஸ்லிம்களிடையே ஒரு பதட்டத்தை உண்டாக்க வேண்டும். அவர்களின் நம்பகத் தன்மையை குலைக்க வேண்டும். அவர்களுக்கு ஆதரவு தர முனையும் அல்லது அவர்களை ஓட்டு வங்கியாக நினைக்கும் அரசியல் கட்சிகளை தள்ளி வைப்பது. என்றுமே இஸ்லாமியர்கள் தங்களுக்கு ஆதரவு அளிக்க மாட்டார்கள் என்பதை உறுதியாகத் தெரிந்து கொண்ட இந்துத்வா அமைப்புகள் இஸ்லாமிய ஓட்டு வங்கியைத் தனிமைப் படுத்தி விட்டால், தங்களுக்கு எந்தப் பாதிப்பும் இருக்காது. மற்ற கட்சிகளுக்கும் அதனால் நன்மை அடையாது என்ற அரசியல் ஒரு முக்கியமான காரியம். இந்துத்வா வாதிகள் போடும் கணக்கு - முஸ்லிம் ஓட்டு வங்கி ஒட்டுமொத்தமாக தங்களுக்கு எதிராக இயங்கினால், மொத்தமாக ஒரு 150 இடங்கள் வரையிலாவது தங்களால் வெற்றி பெறவே முடியாது - அதனால், இந்த ஓட்டு வங்கியைத் தனிமைப்படுத்துவது அவசியம் என்ற கணக்கு தான். அரசியல் ரீதியாக அவர்களுக்கு ஆதாயம் கிட்ட வேண்டுமென்றால் இந்த முஸ்லிம் ஓட்டு வங்கியை அரவணைத்து இயங்க நினைக்கும் அரசியல் கட்சிகளை - அரசியல் வாதிகளை தர்மசங்கடத்திற்கு உள்ளாக்குவது - அந்த அரசியல் வாதிகளின் தேசபற்றை கேள்விக்குரியதாக்குவது - இதெல்லாம் தான் நோக்கம். இதை ஒரு பலமுனை பிரச்சார உத்தியாக அது செய்து வருகிறது. அவற்றில் ஒன்று தான் ஊடகங்கள் மூலம் செய்திகளைத் திரித்து எழுதுவது.

// என்னைப் பொருத்தவரை ஸ்ரீலஙகாவில் நடக்கும் பிரச்சனைக்கு இந்து/புத்தம் என்று வர்ணம் புகுத்தாமல் தமிழே முதன்மைப்படுத்தப்படுகிறது. //

இலங்கையில் மதம் முன்னிறுத்தப்பட வேண்டிய அவசியமேயில்லை. அங்கு முன்னிறுத்தப்படுவது இனம் தானே தவிர, மதம் அல்ல. தமிழர்களை யாரும் தீவிரவாதி என்று குறிப்பிடுவதில்லை. இலங்கை அரசு கூட தங்கள் ஊடகங்களில் போராளிகள் என்று தான் கூறுகின்றனரே தவிர, தீவிரவாதிகள் என்றல்ல. ஆனால், ஆரம்பகாலங்களில், தமிழ் போராளிகளைத் தமிழக ஊடகங்களில் சில தமிழ் தீவிரவாதிகள் என்றே குறிப்பிட்டு வந்தது. இப்பொழுதும் கூட இலங்கை விடுதலை வீரர்களை போராளிகள் என்று குறிப்பிடும் ஊடகங்கள், தமிழகத்தில் நடக்கும் சில குற்றங்களை தமிழ் தீவிரவாதிகள் செய்தனர் என்றே கூறி வருகின்றன. அதாவது தங்கள் நிலைபாட்டிற்கு எதிரான கொள்கையுடையவர்களை அவர்கள் சார்ந்த இனத்துடன் சேர்த்தே குறிப்பிடுவது என சில பத்திரிக்கைகள் கொள்கை வைத்திருக்கின்றன.

// அல்-கயிதாவில் ஆரம்பித்து லாஷ்கர்-இ-தொய்பா வரைக்கும் தங்களின் மதத்தையே முன்னிருத்துருகின்றனர். அத்தகைய குழுக்களின் (ஹமாஸ் உட்பட) பெயரினில் தங்களின் மதம் சம்பந்தபட்டுள்ளதே: இஸ்லாமிஸற்க்கு எதிர்ப்பானதனொன்று. இது புரியாமலா இருக்கிறீர்கள்? //

ராமநாதன் - நீங்கள் என்ன புரிந்து கொண்டீர்கள்? இந்த குழுக்கள் எல்லாம் இஸ்லாத்தை நிலை நிறுத்துவதற்காகவும், பரப்புவதற்காகவும் ஏற்படுத்தப்பட்ட அமைப்பு என்றா நீங்கள் புரிந்து கொண்டீர்கள்? அராபிய, பாரசீக, உருது பெயர்கள் இருந்தாலே அவை இஸ்லாத்தோடு சம்பந்தப்பட்டது என்று நீங்கள் நினைத்தால் - அதை நான் எப்படி எடுத்துக் கொள்வது?

ஹமாஸ் - பாலஸ்தீன விடுதலைப் போராட்ட குழு. அவர்கள் நோக்கம் பாலஸ்தீனர்களின் தாயகத்தை விட்டு ஆக்கிரமிப்புகளை நீக்க வேண்டும் என்ற உரிமைப் போராட்டத்திற்காக ஏற்படுத்தப் பட்ட ஒரு குழு. ஒரு இனத்தின் விடுதலைக்காக போராடும் அமைப்பு அது. இஸ்லாத்தைக் காக்க தோற்றுவிக்கப்பட்ட இயக்கம் அல்ல அது.

அதே போல அல் கொய்தா - அமெரிக்கர்களிடம் கேட்டால் சொல்லுவார்கள் - எதற்காக இந்த அமைப்பு ஏற்படுத்தப்பட்டது என்று. ஆயுதங்களை எடுத்துச் சென்று ரஷ்யர்களுக்கு எதிராகப் போராடும் முஜாஹிதீன்களுக்கு கொடுப்பதற்காக ஒரு அமைப்பை ஏற்படுத்தி, அவர்களுக்கு நவீன பயிற்சிகள் எல்லாம் கொடுத்து, பின்லேடன் தலைமையில் அனுப்பி வைத்தனர். இது இன்று உலக வரலாறு. அனைவரும் அறிவர்.

பின்னர் பின்லேடன் அமெரிகாவிற்கு எதிராக திரும்ப காரணமாக அமைந்தவை -

முஜாஹிதின்கள் தங்களுக்குள் ஒற்றுமை இல்லாமல், யார் பெரியவன் என்ற கணக்கில் அடிதடியில் இறங்க, ஆஃகானிஸ்தான சிதறிப் போகும் - அதை தடுக்க வேண்டுமானால், ஒரே கட்சியால் ஆள வேண்டும் என்ற முடிவெடுத்து தாலிபான்களை ஆதரித்தார்.

அடுத்தது - சதாமை குவைத்திலிருந்து விரட்ட, அமெரிக்கப் படைகள் சவுதி மண்ணில் நிலை கொள்ள, பின்லேடனுக்குப் புரிந்தது - இந்த அமெரிக்கர்கள் இனி திரும்பவே போவதில்லை என்று. பாம்பின் கால் பாம்பு தானே அறியும். அதனால், யாரால் வளர்க்கப்பட்டாரோ அவர்களையே எதிர்ப்பது என்று முடிவு செய்தார். இந்த அமெரிக்கா மீதான தாக்குதலுக்கு தனக்கு ஆதரவாக நிற்க கூடிய ஒரே துணையாக பின்லேடன் நம்பியது - தாலிபான்களை.

ஆக அல்கொய்தா இயக்கம் அமெரிக்க எதிர்ப்பு இயக்கம். சவுதி மண்ணிற்கு ஆபத்தென துவங்கப்பட்ட இயக்கம். இதில் இஸ்லாம் எங்கே இருந்தது வந்தது?

உலகம் முழுவதும், பிற இன மக்களின் நிலங்களிலிருந்து கிடைக்கும் கனிம வளங்களை - நிலப்பரப்பின் முக்கியத்துவதற்காக, பெரிய
நாடுகள் ஆக்கிரமிக்க அதையொட்டி தான் இந்த நில மீட்புப் போராட்ட குழுக்கள் தோன்றுகின்றன. இந்த இயக்கங்களின் நம்பகத் தன்மையை
சீர்குலைப்பதன் மூலமே தாங்கள் அங்கிருப்பதை பிறர் கேள்வி கேட்க மாட்டார்கள் என்ற முனைப்பு எப்பொழுதுமே ஆக்கிரமிப்பாளர்களிடம் உண்டு.
இந்த ஆக்கிரமிப்பாளர்கள் சொல்வது - இவை தீவிரவாத இயக்கங்கள் என்று. அந்த இயக்கங்கள் சொல்வது தங்கள் நிலங்களிலிருந்து ஆக்கிரமிப்பாளர்கள்
வெளியேற வேண்டும் என்று. ஒருவர் மீது ஒருவர் தொடுக்கும் தாக்குதலில் ஒன்று தான் இந்த நம்பகத் தன்மையை குலைத்தல் என்பது.
இந்தப் போராட்டங்களின் நோக்கங்களை தவறான திசையில் திருப்பி விட வேண்டும். மத துவேஷத்தால்,
இயங்குகின்றன என்ற திசை திருப்புதலின் ஒரு அங்கம் தான் இந்த ஊடக வன்முறைகள்.
தங்கள் ஆக்கிரமிப்பை மத துவேஷ போர்வையால் நியாயப்படுத்த முயலும் போக்கு இது.

அது போல, லஷ்கர் இ தொய்பா, காஷ்மீர மாநிலத்தை இந்தியாவிடமிருந்து மீட்டெடுக்க வேண்டும் என்ற முனைப்பில் ஏற்படுத்தப்பட்டது. இது பாக்கிஸ்தானின் எடுபிடியாக இருக்கலாம். இந்தியாவிற்கு தலைவலியாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் தான் இங்கு முக்கியமே தவிர, இஸ்லாம் காப்பது என்பது இந்த அமைப்பின் பணி அல்ல. இந்த நுண்ணிய புள்ளியை விட்டு விட்டு, நம்முடன் எல்லைத் தகராறுள்ள ஒரு நாட்டின் தில்லுமுல்லு வேலையாகத் தான் கணிக்கப்பட வேண்டுமே தவிர, இஸ்லாமியர்கள் தீவிரவாதத்தை ஆதரிக்கிறார்கள் என்று கூறுவது கடைந்தெடுத்த அயோக்கியத் தனம். பிற நாட்டில் சிண்டு முடிவதென்பது அனைத்து நாடுகளுமே செய்வது தான். ஏன், இந்தியா - பாக்கிஸ்தானில் சிண்டு முடியும் வேலை செய்யவே இல்லை என்று கூறுவீர்களா? முடியாது. இத்தனை ஏன், அமெரிக்கா என்ன செய்கிறது என்று இஸ்ரேல் வேவு பார்க்கத் தான் செய்கிறது. இங்கிலாந்து தங்கள் மீது படையெடுத்து வரக்கூடிய சாத்தியக் கூறுகள் உண்டா? அவ்வாறு வந்தால், அதை எப்படி எதிர்கொள்வது என்று அமெரிக்கா ஒரு திட்டமே தயாரித்து வைத்திருந்தது தெரியுமா? Planet Red (?) என்ற புனைபெயரில். ஆக, இரு அரசுகள் தங்கள் சாணக்யத்தனமாக செய்யும் செயல்களை இங்குள்ளவர்கள், அப்படியே எடுத்துக் கொண்டு, வசை பாடுவது அவர்களது அறியாமையைத் தான் எடுத்துரைக்கிறதே தவிர, உண்மையை அல்ல.

என்றாலும் - இந்த இயக்கங்களின் செயல்பாடுகள், செய்முறைகள் ஆகியவை கண்டிக்கப்பட வேண்டியவையாக இருக்கும் பொழுது கண்டிப்பாக அதை கண்டிக்கத் தான் செய்ய வேண்டும். (மக்கள் புழங்கும் பொது இடங்களில் குண்டு வைப்பது, அப்பாவிகளைக் கடத்திப் பிணைக் கைதிகளாக வைத்து கொள்வது போன்ற செயல்கள்) அப்பாவிகளின் மீது தாக்குதல் நடத்தி, ஒரு கவன ஈர்ப்பாக இவர்கள் செயல்பட நினைக்கும் பொழுது கண்டிப்பாக அதை எதிர்க்க வேண்டியது தான்.

அதை விட்டுவிட்டு, இஸ்லாத்தோடு அதை சம்பந்தப்படுத்தும் பொழுது, முதலில் இந்த வதந்தியைப் பரப்புவோரை எதிர்ப்பதே முக்கியத்துவம் பெறுகிறது. தீவிரவாத எதிர்ப்பு என்பதை இந்த ஊடகங்கள் அறிந்தோ அறியாமலோ பின்னுக்குத் தள்ளி விடுகின்றன. இஸ்லாமியர்களை குற்றவாளி கூண்டில் ஏற்றிவிட்டு, குற்றவாளிகளையும் அவர்களின் நோக்கங்களையும் பின் தள்ளுவது - இவர்கள் மறைமுகமாக தீவிரவாதிகளுக்கு உதவ முயற்சிக்கிறார்களோ என்று கூட எண்ண வைக்கிறது. மும்பை குண்டு வெடிப்பில் ஈடுபட்ட சில குற்றவாளிகளுடன் மும்பையின் பிரபலங்கள் சிலருக்கு - அரசியல், சினிமா, பொருளாதாரம் சார்ந்த சிலருக்கு - மிக நெருங்கிய தொடர்பு இருந்தது என்று அரசல்புரசலாக செய்திகள் வரத்தானே செய்கின்றன? அவதிப்படுவது அப்பாவி முஸ்லிம்கள் - அனுபவிப்பது பிரபலங்களா?

// நரேந்திர மோதி பற்றி குறை கூறுமுன்னர் கோத்ராவில் நடந்தது நினைவுக்கு வர மறுப்பது ஏனோ? //

நீங்கள் என்ன தனித்தீவில் வாழ்கிறீர்களா என்ன? இப்படி கேட்கிறீர்கள்!!! கோத்ரா சம்பவம் தற்செயலாக நடந்த ஒரு விபத்து என்று தீர்மானமாகக் கூறப்பட்டு விட்டது.

அதை விட்டு விட்டு மோடிக்கு வருவோம்.

கோத்ரா எப்படி யாரால் உண்டாக்கப்பட்டது வேண்டுமானாலும் இருந்து விட்டுப் போகட்டும். ஒரு சம்பவம் நடந்துவிட்டது. உணர்ச்சி கொந்தளிப்பில் கலவரம் - நியாயமோ - அநியாயமோ - கலவரம் உண்டாகிவிட்டது. எல்லா இடங்களிலும் என்ன நடக்கும்? மாநில அரசு தன் முழு பலத்தையும் கொண்டு கலவரத்தை அடக்கும். தங்களால் இயலாத பொழுது, மத்திய அரசிடமிருந்து உதவிகள் பெற்று சட்ட ஒழுங்கைக் கட்டுக்குள் கொண்டு வரும். ஆனால், மோடி என்ன செய்தார்? கலவரத்தை அடக்கினாரா? இல்லை. மாறாக தன் காவல்துறையை கலவரக்காரர்களுக்குத் தேவையான logistical support கொடுக்குமாறு பணித்தார். அரசு வாகனங்கள் கலவரக்காரர்களுக்கு கொடுத்து உதவப் பட்டது. அந்தக் கொடுமைகளை எல்லாம் மீண்டும் ஒரு முறை எண்ணிப் பார்க்கவே அவமானமாக இருக்கிறது - இஸ்லாமியன் என்ற காரணத்தால் அல்ல - இந்தியன் என்ற காரணத்தால். மத்திய அரசு செயலிழந்து பார்த்துக் கொண்டிருந்தது. மாநில அரசு கேட்கவில்லை என ராணுவத்தை அனுப்ப மறுத்தது. இது குறித்து அப்போதைய ஜனாதிபதியின் சொல்லைக் கூட கேட்க மறுத்து விட்டனர் - வாஜ்பேயும் அத்வானியும். உலக நாடுகள் கடும் கண்டன குரல் எழுப்பிய பின்னர் தான் - இந்த மனித உரிமை அத்துமீறல் இந்தியாவின் உள்நாட்டு விவகாரம் மட்டுமல்ல என்று கண்டித்த பின்னரே சும்மா ஒரு கண்துடைப்புக்காக மோடியைக் கண்டித்தனர்.

ராமநாதன் -

உலக நடப்புகள் பற்றி இன்னமும் கூட கொஞ்சம் முனைந்து அறிந்து கொள்ளுங்கள்.

பாலஸ்தீனம்

ஈழம்

காஷ்மீரம்

இந்த மூன்றின் பிரச்சினைகளின் பரிமாணங்கள் வேறு வேறு.

பாலஸ்தீனம் - விரட்டியடிக்கப்பட்ட மக்களின் குரல்.

ஈழம் - பேரின வாத அரசு ஒடுக்குமுறைகளிலிருந்து விடுபட முனையும் குரல்.

காஷ்மீரம் - விதிகள் வழுவிய அரசுகளின் சாணக்யத்தனத்திற்கு எதிரான குரல்.

இந்த மூன்றையும் ஒரே நேர்கோட்டில் கொண்டுவந்து நிறுத்தியது தற்செயலான சிந்தனை தானா, ராமநாதன்?

உங்களுக்குத் தான் தெரியும்!!!

இராமநாதன் said...

நண்பன்,
எனக்கு இதுவரையில் வாழ்க்கையில் மிக முக்கிய நண்பன் இஸ்ரேலியன் என்ற வகையில் (அது உங்கள் பார்வையில் எத்தகையான ஒன்றா அகினும்) இஸ்ரேலிய கண்ணோட்டமும் முக்கியத்துவம் வாய்ந்ததே, என்னைப் பொருத்தவரையில்.

யாசர் அராபத், அமைதியின் சீடர் என்று கூறுவீர்க்ளாயின், நான் இந்த விவாதத்திலிருந்து விலகிக்கொள்கிறேன். நான் biased என்று நீங்கள் நினைதிர்கள் என்ற போதினும் யாசர் தேவையானவர், நேர்மையானவர் என்பது உங்கள் நிலையாயின்.

நண்பன் said...

ராமநாதன்,

உங்களுக்கு இஸ்ரேலிய நண்பன் இருப்பதில் தவறில்லை. ஆனால், அதே சமயம் தங்களுடைய ஆக்கிரமிப்பை எதிர்த்துப் போராடும் ஒருவரை அவர் உயர்வாக பேச வேண்டும் என்று எதிர்பார்ப்பது தவறு.

அராபத் பற்றி இதுவரையிலும் ஒரு வார்த்தை கூட பேசப்படவே இல்லாத பொழுது திடீரென்று அவரை அமைதியின் சீடர் என்று நான் கூறினேன் என்கிறீர்கள். எப்படி?

அராபத் அமைதியின் சீடர் இல்லை தான். ஏன் அவர் அமைதியின் சீடராக இருக்க வேண்டும்? அவர் ஒரு போராளி. இஸ்ரேலியர்களை எதிர்த்துப்போர் செய்தார். இஸ்ரேலும் அவரை எதிர்த்துப் போர் செய்தது. யுத்த நெறிமுறைகளை இருவருமே சரிவர கையாளவில்லை. ஆனால், அராபத்தின் பக்கம் நியாயம் இருந்தது. ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலை வேட்கை இருந்தது. ஆனால், இஸ்ரேலின் பக்கம் இது எதுவும் இல்லை. ஆக்கிரமிப்பு - மேலும் மேலும் ஆக்கிரமிப்பு. உலக நாடுகள் அனைத்தும் எதிர்த்துக் குரல் கொடுத்தாலும், தங்கள் இஷ்டம் போல செயல்படும் திமிர் இருந்தது. உலக நாடுகளை இஸ்ரேல் போல அலட்சியப்படுத்திய நாடு வேறு எதுவும் இருக்காது.

என்ன தான் நவீன தளவாடங்களை வைத்துக் கொண்டு அடக்குமுறையைக் கையாண்டாலும், அதனால் மக்கள் சக்தியை ஒடுக்கி விட முடியாது. அதைத்தான் சமீபத்தில் தன் குடியிருப்புகளைக் காலி செய்து விட்டு சென்ற இஸ்ரேல் உணர்த்துகிறது.

ஹமாஸ் - விடுதலிப் புலிகள் - அல் கொயதா - லஷ்கர் இ தொய்ப்பா - பிஎல்ஏ - நீங்கள் எடுத்து வைக்கும் உதாரணங்கள் - வாதங்கள் ஒன்றுக்கொன்று சம்பந்தமற்றவை.

என்றாலும், உங்களுக்கு ஒரு செய்தி. இஸ்ரேலுக்கும் சவுதி அராபியாவிற்கும் இடையே நடக்கும் வர்த்தகத்தின் மதிப்பு எத்தனை தெரியுமா?

400 மில்லியன் டாலர். ஆச்சரியமாக இருக்கிறதா? இஸ்ரேலில் தயாராகும் பொருட்கள் சைப்ரஸ் தீவுகளுக்கு அல்லது கிரீஸ் நாட்டிற்கு எடுத்துச் செல்லப்பட்டு, அரபு நாட்டு வியாபாரிகளால் மீண்டும் அராபியாவிற்கு எடுத்து வரப்படுகிறது. நேரடி போக்குவரத்து மட்டும் இல்லையே தவிர, வியாபார கொடுக்கல் வாங்குதல்கள் நிகழத்தான் செய்கிறது. அரபிகளே தொடர்பு வைத்திருக்கும்ம் பொழுது, எனக்கு என்ன வந்து விடப்போகிறது அவர்களை எதிர்த்து!!!

யூதர்கள் தங்கள் ஆக்கிரமிப்புகளை விட்டு வெளியேறி, பாலஸ்தீனர்களுக்கு உரிமைகளைக் கொடுத்து விட்டால் எல்லா பிரச்னைகளுமே தீர்ந்து விடப் போகிறது. கடந்த மாதம் நடந்த GCC மாநாட்டில், அரபு நாடுகளின் அனைத்து தலைவர்களும் இஸ்ரேலுக்கு அழைப்பு விடுத்திருக்கின்றனர் - அணு ஆயுத ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு, மத்திய கிழக்கை அணு ஆயுதமற்ற பிராந்தியமாக அறிவிக்க. இஸ்ரேலுக்கு அழைப்பு விடப்பட்டது என்பதே - அவர்களை ஒரு நாடாக மதித்து தான். இஸ்ரேல் பாலஸ்தீன பிரச்சினைக்கு தீர்வு வெகு தூரமில்லை என்று எண்ணத் தோன்றுகிறது. அதே போல, எகிப்துக்கும் இஸ்ரேலுக்கும் தொடர்புகள் இருக்கின்றன. ஜோர்டான் கூட இஸ்ரேலுடன் குறிப்பிடத்தக்க - ஆனால், வெளிப்படையாக இல்லாமல் உறவு வைத்துக் கொண்டே இருக்கிறது. யூதர்கள் ஆக்கிரமிக்கப்பட்ட அனைத்து பகுதிகளையும் விட்டு வெளியேறி விட்டால், பிரச்சினை தீர்ந்து விடும் என்றே தோன்றுகிறது.

இஸ்ரேல் தான் இதில் செயல்பட வேண்டும்.

இறுதியாக அராபத் பற்றி அத்தனை வெளிப்படையாக நீங்கள் கேட்டு விட்ட பின்பு, அவர் தேவையானவராக இருந்தார் பாலஸ்தீன மக்களுக்கு என்பது உண்மை. அதை யாரும் மறுக்க முடியாது. அவருடைய நேர்மை - இஸ்ரேலை விட அவர் நேர்மையானவராக இருந்தார்.

உங்கள் முடிவு உங்கள் விருப்பம்.

நண்பன் said...

மின்னஞ்சலில் ஒரு மடல் வந்துள்ளது. அநாமதேயம் என்ற முகமூடி அணிந்து.

தான் யார் என்று சொல்ல அஞ்சும் - அடிப்படை நேர்மை கூட இல்லாத பொழுது, அதை எப்படி ஏற்றுக் கொள்வது? இது குறித்து முன்பே அறிவித்து விட்டேன். அநாமதேயங்களை அனுமதிப்பதில்லையென்று. வசதிப்பட்ட இடத்தில் உள்ளே விடுவதும், வசதிப்படாத இடத்தில் உள்ளே விட மறுப்பதும் இயலாத காரியம் என்பதால் மொத்தமாக அநாமதேயங்களுக்குத் தடை.

ஆகையால், அதை எழுதியவர்கள், தயவு செய்து மீண்டும் தாங்கள் யார் என்ற தகவல் கூறி நேர்மையுடன் அனுப்பி வைத்தால் பிரசுரிப்பேன்.

இராமநாதன் said...

நண்பன் அவர்களே,
யாசர் அராபத்தை பற்றி நான் குறிப்பிட்டதற்கும் காரணம் இருக்கிறது, உங்களின் பின்னூட்டங்களை பார்த்தபின் சொல்லலாம் என்ற எச்சரிக்கையே. இஸ்ரேல் என்று சொன்னாலே எரிந்து வந்து விழும் பின்னுட்டங்களுக்கு மத்தியில் உங்களுடையது வித்தியாசமானது. அதை உறுதிசெய்து கொள்ளவே கடைசி பின்னூட்டம்.

மோடி செய்த்தை நான் நியாயப்படுத்தவில்லை.

கூடியவிரைவில், உங்களுக்கு என் பார்வையிலிருந்து பதிலளிக்கிறேன்.

உங்களின் அடுத்தவரை புண்படுத்தாத வாதங்கள் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது (நான் சில நேரங்களில் அத்துமீறியிரிந்தாலும்). அதற்கு மிக்க நன்றி. இத்தகைய உணர்ச்சிவசப்படாத ஆரோக்கியமான வாதங்களே நமக்கு தேவை.

அன்புடன்,
இராமநாதன்

நண்பர்கள் சொல்கிறார்கள்

CSM - உலகச் செய்திகள்

GF - உலகச் செய்திகள்