"எழுத்துகளையும் தாண்டி எனக்கென்று ஒரு உலகம் உண்டு; நான் எழுதுபவற்றை மட்டுமே வைத்துக் கொண்டு, என்னை எடை போடுபவர்களை எப்பொழுதும் என் எண்ணங்கள் வியப்பில் ஆழ்த்திக் கொண்டே இருக்கும்....."
- நண்பன்

Thursday, January 26, 2006

தியானம்

தியானம்


ஒன்று... இரண்டு... மூன்று...

கடன் அட்டைக்கு
பணம் அனுப்பி விட்டாயா...?

நான்கு... ஐந்து... ஆறு...

காலை சந்திப்புக்கு
அறிக்கை தட்டச்சு ஆகியிருக்குமா...?

ஏழு... எட்டு... ஒன்பது...

பையன் பள்ளியில்
முதலாவது இடத்தை
தக்க வைப்பானா...?

பத்து...

போதும் தியானம்
எழுந்திருப்போம்...

முட்டி மோதி
வாகனங்கள் அலையும்
சாலையில்
மறந்தே போனேன்
எண்ணுவதற்கு...

ஒன்று, இரண்டு, மூன்றென...

மனம் சாலையில்
குவிந்து நின்ற தருணத்தில்...

2 comments:

பிரதீப் said...

தியானம் என்பதன் நோக்கம் ஒரு நிலைப்படுத்தப்பட்ட மனத்தை அடைவது! இந்த நோக்கத்தை உங்கள் கவிதை வலியுறுத்துகிறது.

ஒரு செயலைச் (இங்கே தியானம்) செய்ய அமரும்போது குறுக்கிடும் மற்ற எண்ண அலைகள் சாதாரணமாக அனைவருக்கும் ஏற்படும் பிரச்சினைகள் இவை.

ஆயினும் கவிதையின் கடைசி வரியில் குறிப்பிடப்படும், சில நேரங்களில் நம்மை அறியாமல் ஏற்படும் நிலைப்பட்ட மனம், வாழ்வின் அதிசயமாக நானும் கண்டிருக்கிறேன். தியானம் என்பது மட்டுமல்லாது வழிபாடு, ஒரு பாடலைக் கேட்பது போன்ற வேறு சில செயல்களிலும் என்னால் முடிந்திருக்கிறது. ஆயின் அதை நோக்கமாகக் கொண்டு செயல்படும்போது எண்ண அலைகளில் சிக்கிக் கொண்டிருக்கிறேன்.

Anonymous said...

//ஒரு பாடலைக் கேட்பது போன்ற வேறு சில செயல்களிலும் என்னால் முடிந்திருக்கிறது. ஆயின் அதை நோக்கமாகக் கொண்டு செயல்படும்போது எண்ண அலைகளில் சிக்கிக் கொண்டிருக்கிறேன். //

பிரதீப் சொன்னதைத்தான் நானும் சொல்கிறேன்.

நண்பர்கள் சொல்கிறார்கள்

CSM - உலகச் செய்திகள்

GF - உலகச் செய்திகள்