நேர்மையே உன் விலை என்ன?
எக்ஸிஸ்டென்ஷியலிசம்-எஸ்.வி.ராஜதுரை- ஒரு பதில்
இந்தப் பதிவை இப்பொழுது தான் பார்க்கின்றேன். தலைப்பிலே இதைப் பற்றி கொஞ்சமாவது ஒரு குறிப்பு கொடுத்திருந்தால், உடனே பார்வையில் பட்டிருக்கும். ஆனால், நண்பனின் பார்வையில் படவேண்டாம் என்று நினைத்து விட்டீர்கள் போலிருக்கிறது. ரகசியமாக உள்ளே கிசுகிசுப்பாய் பேசிக் கொண்டால் யாருக்குத் தெரியும்?
ரவி இன்று ( 22/01/06) கொடுத்திருந்த, அல்-கொய்தா, உலகமயமாதல், இஸ்லாம் என்ற தலைப்பின் வெளியான கட்டுரையைப் படிக்கும் ஆவலில் உள்ளே நுழைந்த பொழுது, எக்ஸிஸ்டென்ஷியலிசம்-எஸ்.வி.ராஜதுரை- ஒரு பதில் என்பதைப் படித்து ஒரு கவிதை அல்லது ஓவிய விமர்சனம் பற்றி பேசிக் கொண்டிருக்கிறீர்களாக்கும் என்று எதேச்சையாக உள்ளே நுழைந்தால் என்னைப் பற்றிய பேச்சு தான்.... எத்தனை நேர்மை!!! பேசப்படுபவனுக்கு ஒரு தகவலும் சொல்லாமல், தாங்களாகவே பேசிக்கொள்வது.!!!
இது குறித்து ஏற்கனவே என்னுடைய பதிவிலே குறிப்பிட்டுவிட்டேன் - என்னைப் பற்றிய விமர்சனங்களாக இருந்தால் ஒரு வார்த்தை சொல்லிவிடுங்கள் ஐயா - உங்களுக்குப் பதில் சொல்வதற்கு ஏதுவாக இருக்குமென்று. இதிலேயே தெரிகிறது - யாருடைய நேர்மை எத்தகையது என்று!!!
சரி போகட்டும் - தகுதியைப் பற்றி ரோஸா வஸந்த் பேசுகிறார். தகுதி எதுவாம்? அவர்(நண்பன்) இணையத்தில் இயங்காத பொழுதே நாங்கள் இருக்கிறோம் - ஐயோ, இது தான் தகுதியா? ரவி ஸ்ரீநிவாஸ் இதற்கு முன் எத்தனை பேருடன் சண்டை போட்டிருக்கிறார் தெரியுமா? அதனால் நீ எப்படி விமர்சிக்கலாம்? என்று கேட்கிறார், ரோஸா - அவர் நேற்று என்னவாக இருந்தார், நாளை என்னவாக இருப்பார் என்பதெல்லாம் எனக்குத் தேவையில்லாத சமாச்சாரம். இன்று அவர் யார் - அவர் சிந்தனை என்ன? எப்படி இயங்குகிறார் என்பதைக் கொண்டு தான் என்னால் விமர்சிக்க இயலுமே தவிர, நேற்று அவர் புனிதராக இருந்தார் என்பதனால், நாளை அவர் நல்லவராக இருப்பார் என்ற அனுமானங்களைக் கொண்டு விமர்சகன் இயங்குவதில்லை. இன்று ரவி என்னவாக இருக்கிறார்? அவர் (ரவி) சிந்தனை எந்த தரத்தில் இருக்கிறது? அவரின்(ரவியின்) படைப்பின் லட்சணம் என்ன? இவை பற்றி தான் விமர்சிக்க முடியுமே தவிர, சம்பந்தமற்ற பதிவுகளைக் கொண்டல்ல.
இதிலே நேர்மையற்ற தனம் எங்கிருந்து வந்தது?
// இந்த பின்னூட்டத்தை இங்கே எழுதுவதன் முக்கிய காரணம் நண்பனின் நேர்மையற்ற தாக்குதலுக்கும், ரவியின் கருத்தை நேர்மையாய் எதிர் கொள்ளாதற்கும் (அதை நீக்கியதற்கும்) எதிராக ரவிக்கு ஆதரவாக எழுதுவது மட்டுமே.//
ரவிக்கு ஆதரவாக நீங்கள் வரிந்து கட்டிக்கொண்டு வருவதைப்பற்றிய கவலை எனக்கில்லை. ஆனால், உண்மை என்னவென்று தெரியாமல், எத்தனை காலம் இயங்கி என்ன பயன்? நேர்மையற்ற தாக்குதல் என்று கூறிவிட்டு, நீங்கள் என்ன எழுதி இருக்கிறீர்கள்?
// ஆனாலும் கூட ரவியின் மேற்படி (iisc தாக்குதலை முன்வைத்த) பதிவு மோசமானது. இந்தியா இஸ்ரேலிடம் இருந்து பாடம் கற்கவேண்டும் என்ற தொனிப்பட எழுதியுள்ளது, ஒரு தீவிரவாத தாக்குதலை மட்டும் முன்வைத்து, அவசர குடுக்கைதனமாய் எழுதியுள்ள, ஒரு பொதுபுத்தி சார்ந்த ஒரு எதிர்வினை மட்டுமே. அதில் விவேகமோ, அரசியல் நேர்மையோ கூட இருப்பதாக எனக்கு தெரியவில்லை. இது தவிரவும் முழுமையாய் வேறுபட்டு அந்த பதிவு மீது கடுமையான விமர்சனம் எனக்கு உண்டு.//
ஆக, நீங்கள் (ரோஸா) மோசம் என்று சொல்லலாம் - ஆனால், நான்(நண்பன்) சொன்னால் அது நேர்மையற்றது. காரணம் - ரவி இதற்கு முன் வேறாக இருந்தார்.
ரோஸா விமர்சிக்க முற்பட்டது ரவியைத் தெரியும் என்பதால்.
நான் விமர்சிக்க முற்பட்டது, ரவியின் எழுத்துகளில் இருந்த எதிர்மறை உணர்வுகளை. தீவிரவாதத்தை எதிர்த்து நிற்பதற்கு யாருக்கும் நான் சளைத்தவனல்ல - ஆனால், தீவிரவாதம் என்றால், அது அனைத்து வகை தீவிரவாதங்களையும் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும் என்று உரத்து குரல் எழுப்பியதால், அது நேர்மையற்ற தனம் என்றால், ரோஸா, உங்களுடைய நேர்மை, சந்தையில் கிலோ என்ன விலை?
// ரவியின் கருத்தை நேர்மையாய் எதிர்கொள்ளாததற்கும் (அதை நீக்கியதற்கும்)//
மீண்டும் கேட்கிறேன் - உங்கள் நேர்மை கிலோ என்ன விலை?
ரவி அனுப்பிய கருத்து, ஹோலோகாஸ்ட் என்ற தலைப்பில் வந்த பதிவிற்கு எழுதியிருந்தார். எங்கு? பாக்கிஸ்தானுக்குப் போவோம் - சமுத்ராக்களுடன் என்ற பதிவிற்கு!!! எந்த பதிவிற்கு எந்த கருத்தை எழுத வேண்டும் என்ற அடிப்படை கூட இல்லாமல் ஒருவர் இயங்குவார். அந்த திசை திருப்புதல் நியாயம் ஆகிவிடுகிறது. ஆனால், திசை திருப்பும் விதமாக வரும் பதிவை பதிப்பிக்காமல் விட்டால், அவர் நேர்மையை சந்தேகிப்பீர்கள் இல்லையா?
இதிலிருந்து என்ன தெரிகிறது என்றால், எதையும் வாசிக்க வேண்டாம் - தங்கள் கருத்திற்கு எதிரான தளத்தில் நிற்பவன் தானே - அவனைப் பற்றி என்ன வேண்டுமானாலும் எழுதிவிடலாம் என்று தான். ரொம்ப உயர்ந்த உள்ளம் ஐயா - உம்முடையது!? அப்படி இருந்தும், ரவிக்கு, மிக மென்மையாகப் பதில் சொல்லியிருந்தேன் - கீழே உள்ளேது - இது இன்னமும் பாக்கிஸ்தான் போவோம் என்ற என் பதிவில் உள்ளது. படிக்க நேரமற்றவர்கள் -மெல்லமாக நேரம் கிடைக்கும் பொழுது படித்துத் தெளிவாகிக் கொள்ளுங்கள்.
//ரவி ஸ்ரீநிவாஸ்
உங்கள் பதிவு கிடைத்தது. பதிந்து நீக்கி விட்டேன்.
மீண்டும்,
உங்களுக்கு holocaust பற்றி விவாதிக்க விருப்பமென்றால் அங்கு இந்தப் பதிவை இடவும்.
இங்கு பேசப்படும் பொருளை பற்றி மட்டும் எழுதவும்.
பதிந்து நீக்குவதற்குக் காரணம் - to acknowledge your time and effort you are spending on my posts and also to keep the post alive on top for many to read. Thank you and continue to read my posts.
No hard feelings!!!Bye, Bye!!! //
அந்தப் பதிவை சரியான இடத்தில், சரியான தளத்தில் விவாதிப்போம் என்று அன்புடன் கூறி அழைத்ததைப் புறக்கணித்து ஓடி விட்டு, மறைவிடத்தில் நின்று அடிபட்டகாயங்களை சொறிந்து கொண்டிருப்பது தான் - உண்மையை நிரூபிக்கும் முறை என்பதை பிறருக்கு சொல்லிக் கொள்ள 'தகுதி' இருக்கிறது - ரவிக்கு.
நான் முந்தி வந்துட்டேன் - அதனால எனக்கு அதிக தகுதி இருக்கிறது என்று புலம்புபவர்களுக்கு -
தகுதியை நிர்ணயிக்கத் தகுதி யாருக்கும் இல்லை.
அது அவரவர் கையில் இருக்கிறது. இன்னும் யாராவது தங்களுக்குத் தான் தகுதி இருக்கிறது - அடுத்தவர் தகுதியை நிர்ணயிக்க என்று முனகினால், அவர்களை ஒரு மருத்துவமனையில் தான் சேர்க்கவேண்டுமேயன்றி, வாதம் புரியும் இடத்தில் வைத்துக் கொள்வது நல்லது அல்ல.
ரோஸா, நன்றி.
யார், எப்படிப்பட்டவர் என்பதை நான் அறிந்து கொள்ள தாங்களாகவே முன்வந்து தங்கள் 'தகுதி'யை நிரூபித்துக் காட்டிக் கொண்டமைக்காக.
neo,
// அந்த 'இஸ்ரேல்' போன்ற எதிர்வினை செய்யவேண்டும் இந்தியா என்கிற கருத்தைத்தான் நான் ஆதரிக்கவில்லை. //
அன்பின் நியோ,
உங்கள் எழுத்தின் தரம் என்னவென்று எனக்குத் தெரியும்.
பதற்றப்படவேண்டாம் -
யாரிடமும் சொல்ல மாட்டேன்.
thangamani
// I completly agree with Rosavasanth. Thanks. //
arul. // he should first realise that a stand against nationwide majority terror will naturally translate as opposition to other global terror networks.//
ரோஸா வசந்த் சொன்னது தெய்வ வாக்காக இருக்கலாம் நண்பர் தங்கமணி. ஆனால், சுயமாக சிந்தித்து முடிவெடுக்கும் திறன் என்று ஒன்று உண்டு. அது ஒன்றே மதிக்கப்படும்.
அருள், வாசித்து விட்டு பதில் சொல்லுங்கள் - கிழிந்து போன முகத்திரைகளை ஒட்டுப் போடும் வேலையை விட்டுவிட்டு, நேர்மையாக பார்த்து பதில் எழுதுங்கள்.
இறுதியாக,
நண்பர்களே - உங்களுக்கு ரவியின் மீது அளவு கடந்த பற்றுதல் இருக்கலாம். கடந்த காலத்தில் அவர் சிறப்பாக செயல்பட்டிருக்கலாம். ஆனால், இன்றுஅவர் மாறிவிட்டார் என்ற நிஜத்தைத் தான் நான் தொட்டிருக்கின்றனே தவிர, கடந்த கால அவர் முகத்தை அல்ல. அதனால், எதைப் பேசுகிறோமோ அதைப் பற்றி மட்டுமே - பேசுங்கள். அவ்வாறு பேசியவற்றில் நியாயம் இருக்குறதா என்பதைப் பாருங்கள்.
விமர்சனம் செய்ய எங்களுக்குத் தான் தகுதி இருக்கிறது என்று இறுமாப்பு கொள்ள வேண்டாம்.
தகுதிகளைத் தேடி அலைய வேண்டிய கட்டாயத்தில் இல்லை நான். அது என்னுடைய பிறப்பிலே என்னிடத்தில் இருக்கிறது. எவரிடத்திலிருந்தும் அங்கீகாரம் வாங்கித் தான் என்னுடைய சிந்தனைகளை புனிதப்படுத்திக் கொள்ள வேண்டிய அவசியத்திலோ, கட்டாயத்திலோ நான் இல்லை.
நன்றி.
2 comments:
திரு.ரோஸாவசந்த், மதம் பற்றிய பதிவுகள் தமிழ்மணத்தில் பட்டியலிடப்பட்டதிலிருந்து நீக்கப்பட்டிருந்த போது, மதங்கள் பற்றிய விவாதம் அவசியம் என்றதோடு நேசகுமாரின் இஸ்லாம் பற்றிய எதிர்மறைக் கண்ணோட்டங்களை வரவேற்றிருந்தார். தான் சாராத பிறிதொரு கொள்கையை அதுவும் தன் கொள்கைக்கு நேரெதிர் கொள்கையை பொய்கலந்து விமர்சிப்பதை நியாயப்படுத்தியதன் மூலம் இவர்களின் விமர்சன நேர்மை பல்லிளித்தது.
நண்பர்.ரவி ஸ்ரீனிவாஸ், உங்களுக்கு முன்பே இணைய விவாதங்களில் கலந்து கொண்டுள்ளார் என்பது உண்மையாக இருந்த போதிலும் உருப்படியாக எந்த விவாதத்தையும் முடிவுக்கு கொண்டுவந்ததில்லை. பெரும்பாலான விவாதங்களில் திசைதிருப்பலும் நழுவலுமே இவரின் ஆயுதமாக இருந்துள்ளது.
இவர்களிடம் நேர்மையை கிலோ கணக்கில் எதிர்பார்க்கும் நீங்கள், பாவம் நண்பரே!
மிக்க நன்றி நல்லடியார் உங்கள் தகவல்களுக்கு.
மதங்கள் பற்றிய விவாதம் அவசியம் தேவை தான்- அவை நேர்மையின் அடிப்படையில் நடத்தப்படும் பொழுது.
அத்தகைய நேர்மையை இவர்களிடத்தில் எதிர்பார்க்க முடியாது - அதை அவர்கள் மீண்டும் மீண்டும் நிரூபித்துக் கொண்டேயிருக்கிறார்கள்.
Post a Comment