"எழுத்துகளையும் தாண்டி எனக்கென்று ஒரு உலகம் உண்டு; நான் எழுதுபவற்றை மட்டுமே வைத்துக் கொண்டு, என்னை எடை போடுபவர்களை எப்பொழுதும் என் எண்ணங்கள் வியப்பில் ஆழ்த்திக் கொண்டே இருக்கும்....."
- நண்பன்

Tuesday, January 03, 2006

ரவி ஸ்ரீநிவாஸின் இஸ்லாமிய தீவிரவாதம் - ஒரு பார்வை

ரவி ஸ்ரீநிவாஸ், தொடரும்... என்ற உங்கள் கட்டுரைக்கும், நீங்கள் கொடுத்த சுட்டிக்கும் மிக்க நன்றி.

அந்தக் கட்டுரைக்கு வழி காட்டியதன் மூலம் - ஹோலோகாஸ்ட் என்ற நிகழ்வைப் பற்றி நண்பர்கள் அனைவரும் ஒரு முடிவு செய்துகொள்ள முடியும்.

அந்தக் கட்டுரையின் நோக்கம் - ஹோலோகாஸ்ட் நிகழ்ந்ததா - இல்லையா? அதைத் தான் நான் கேள்வியாகக் கேட்டிருந்தேன்.
அந்தக் கேள்விக்கான விடை - இரண்டு தான்.

ஒன்று நடந்தது - அதாவது ஹிட்லர் ஒரு கொடுங்கோலன். 60 லட்சம் யூதர்களைக் கொன்று குவித்தான். அந்த கொடுங்கோலனை, வன்முறையாளனை - ஆரோக்யம் சொன்னது போல - Hitler is being worshipped by the Sangh Pariwar as the new Messiah of Aryans - the new prophet of the Aryans. சங் பரிவாரத்தினர் வழிபட்டார்கள் - அனைவரும் அறிந்தது. அவ்வளவு தான்.

இரண்டாவது - நடக்கவில்லை. அதாவது ஹிட்லர் - ஒரு சாதாரண முரடன். அத்தனை தான். அவன் மீது ஜோடிக்கப்பட்ட குற்றச் சாட்டுகள் வைக்கப்பட்டன - நேச நாடுகளால். யூதர்களுக்குப் பரிதாபம் தேடித்தர முயன்று, அதையே காரணம் காட்டி, பாலஸ்தீனர்களின் நிலங்கள் பிடுங்கப்பட்டு, அநியாயமாக ஒரு இனத்தையே தெருவில் நிறுத்திவிட்டனர்.

இப்பொழுது சொல்லுங்கள் - நீங்கள் எந்தப் பக்கம்? ஹிட்லர் நல்லவனா? கெட்டவனா?

இந்த இரண்டு வகையான தர்க்கத்திலும் ஆதாயம் உண்டு எனக்கு. அதற்காகத் தான் அந்த கட்டுரையே!!!

அதைப் புரிந்து கொள்ளாமல், இஸ்லாமியத் தீவிரவாதத்துடன் இணைத்து அனைத்து இஸ்லாமிய வலைப் பதிவாளர்களையும் பேசுவது உங்கள் அறியாமையும், வன்மத்தையும் பறை சாற்றுகிறது.

உங்களைப் போலவே(!?), வன்முறையில் நம்பிக்கை அற்றவர்கள் நாங்கள். தீவிரவாதத்தை உங்களை விட கடுமையாக எதிர்ப்பவர்கள் நாங்கள். இன்று தீவிரவாதம் மிக அதிகமாக இயங்குவது - சவுதியில் தான். கடந்த வாரத்தில் கூட, ஐந்து காவலர்கள் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டனர். உலகின் மிக அதிகமான இஸ்லாமிய மக்கள் வாழும் இந்தோனேஷியாவும் இந்த தீவிரவாதத்தை எதிர்த்துப் போராடுகிறது. அதே போல யூத தீவிரவாதத்தை எதிர்த்து - பாலஸ்தீனியர்கள் மட்டுமல்ல - அரபு கிறித்துவர்களும் குரல் கொடுக்கின்றனர். கிறித்துவ தீவிரவாதம் இயங்குகிறது - ஆப்பிரிக்காவில்.

சுட்டி வேண்டுமானால், கேளுங்கள் தருகிறேன்.

கொஞ்சம் தேடித்தான் பாருங்களேன் - உலகம் எப்படி இயங்குகிறது என்று. இவை அனைத்தும் தீவிரவாதம் என்று தான் சுட்டப்படுகிறது.
ஏன் சமீபத்தில், மத்திய கிழக்கிலிருந்து வந்து குடியேறிய பாலஸ்தீனர்களுக்கு எதிராக கட்டவிழ்க்கப்பட்ட சிட்னி கலவரங்களை எப்படிக் குறிப்பிடப் போகிறீர்கள்? தீவிரவாதம் உலகம் தழுவிய தொல்லை - அதை எதிர்ப்பது ஏதோ உங்களுக்கு மட்டுமே உரித்தானது என்று நினைத்துக் கொள்ளாதீர்கள்.

தீவிரவாதத்தை எதிர்ப்பதில் எங்களுக்கும் உரிமை உண்டு.
ஏனென்றால், அதன் மூலம் பாதிக்கப்பட்டவர்கள் நாங்கள். குற்றம் செய்தாலும் செய்யவிட்டாலும் தீவிரவாதிகளாகப் பார்க்கப்பட்டு, உரிமைகள் இழந்து, வாழ்வை இழந்து பாதிக்கப்பட்ட - எந்த குற்றமும் செய்யாத - ஆயிரக்கணக்கான இளைஞர்கள் இருக்கத் தான் செய்கின்றனர். அதை நீங்கள் அறிய மாட்டீர்கள். ஒரு பாவமும் அறியாத இளைஞர்களைக் கைது செய்யும் பொழுது செய்தியாக்கும் நீங்கள் (வாசிக்க - பத்திரிக்கைகள்) - அவர்கள் குற்றமற்றவர்கள் என்று விடுதலை செய்யப்படும் பொழுது அதை ஒரு வரி கூட குறிப்பிடாமல் இருட்டடிப்பு செய்வதை அறியாதவரா நீங்கள்? அந்த செய்திகளும் வெளிவரத் துவங்கி விட்டால், பின்னர் அடுத்த முறை பத்திரிக்கைகளால் பரபரப்பு செய்ய முடியாது.

இஸ்லாமியத் தீவிரவாதம் என்று சொல்லி முஸ்லிம்கள் அதைக் கண்டிக்க முன் வரவில்லை என்பதை சுட்டிக் காட்டும் நீங்கள் - பல ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்களை - அப்பாவிகளை - பெண்களை - வயதானவர்களை - கர்ப்பிணிகளை - அவர்கள் கருவறையில் விடியலுக்காகக் காத்திருந்த இன்னும் பிறவாத மழலைகளையும் பிடுங்கி எறிந்து கொலை செய்த - நரேந்திர மோடியை - ஆட்சிப் பீடத்தில் அமர்த்தியது எது?

அந்த இந்துத் தீவிரவாதியைக் கண்டித்தீர்களா?

எகிப்தில் - Brotherhood of Islam - சற்று அதிகமான ஓட்டுகள் பெற்று விட்டது கண்ணை உறுத்துகிறது. ஆனால் மோடி என்ன புது அவதாராமா? அவர் செய்த செயல்கள் ஏன் உங்கள் பார்வையில் புலப்படவில்லை?

எந்த ஒரு குற்றவாளியும் இன்று இப்பொழுது இஸ்லாமியத் தீவிரவாதத்தின் போர்வையில் குற்றங்கள் செய்து விட்டுத் தப்பி ஓடி விட முடியும். அப்படித் தான் பெரும்பாலான சம்பவங்கள் அமைகின்றன. அதற்குள் ரவி ஸ்ரீநிவாஸ் நீதிமன்றம் அமைத்து, இன்னும் பிடிபடாத குற்றவாளிகளை இனம் கண்டு விசாரித்து தீர்ப்பே வழங்கி விட்டார்!!!

இஸ்ரேலைப் பின்பற்ற வேண்டும் என்று சொல்லும் உங்கள் மனதின் வக்கிரம் எங்களிடம் இல்லை.

நீங்கள் மிக அதிகமாக வெறுக்கும் ஈரான் தான் இன்று நமக்கு எண்ணெய் மற்றும் வாயுவை வழங்குகிறது.

சில குற்றவாளிகளால், இந்தியப் பொருளாதாராம் சீர்குலையும் என்கிறீர்கள். இன்று தீவிரவாதிகளின் செயல்பாடுகள் உலகிற்கு ஓரளவிற்கேனும் பரிச்சயம் ஆகி விட்டது. முன்னே மாதிரி ஒரு குண்டு வெடித்ததும் உடனே travel banலாம் யாரும் கொடுக்கப் போவதில்லை. இந்த தீவிரவாதிகளை எதிர்த்துப் போரிட வேண்டிய அவசியம் - நீங்கள் சொன்னது போல தொடரும். ஏனென்றால் - இதன் மூலம் ஆதாயம் அனுபவித்த சில அடிப்படை வாதிகள் - சங் பரிவாராக இருக்கட்டும் அல்லது இஸ்லாமிய ஜிஹாதி அமைப்புகளாக இருக்கட்டும் - அவர்கள் தொடரத் தான் செய்வார்கள். ஆனால் அவர்களை எதிர்த்து போரிடத்தான் செய்ய வேண்டுமே தவிர, அவனின் சாதி, மத, இன அடையாளங்களைப் பார்த்துக் கொண்டிருப்பது - உங்கள் பார்வையின் வர்ணத்தைத் தான் வெளிப்படுத்துமே தவிர, பிரச்சினைக்கான தீர்வல்ல.

நாளை உங்கள் வீட்டில் நீங்கள் சமைப்பது ஈரானிய வாயுவாக இருக்கும். அப்பொழுதும், நீங்கள் உலையில் போடும் அரிசி வேகத்தான் செய்யும்.

காஷ்மீரம் பற்றிய உங்கள் புலம்பலுக்கு, தனியாகப் பதிவு போடுகிறேன்.

மீண்டும் சொல்லுகிறேன் - தீவிரவாதம் எந்த வடிவத்தில் வந்தாலும் எதிர்ப்பேன். அது இஸ்லாமியப் பெயர் தாங்கிய தீவிரவாதிகளாக இருக்கட்டும். அல்லது இந்து - யூத - கிறித்துவ பெயர் தாங்கிய தீவிரவாதிகளாக இருக்கட்டும். எதிர்ப்பேன். (தீவிரவாதம் மட்டுமல்ல - இன்ன பிற அடிப்படை வாதங்களையும் தான். ஆனால், அந்த விவாதங்கள் எங்களுக்குள் மட்டுமே - We will not wash our laundry in the street. )

தீவிரவாதத்திலும் சாதி, மத, இன அடையாளங்களைத் தேடிப்பார்ப்பது உங்கள் மரபு. தீவிரவாதிகளை தீவிரவாதிகளாகப் பார்ப்பது மட்டுமே எங்களது வழக்கம்.

அணிந்திருக்கும் காவி உடையைத் தூக்கி எறிந்து விட்டு -

ஹிட்லருக்குப் பஜன் பாடிய சங் பரிவாரத்தின் அடிப்படைவாதத்தைக் கண்டித்து விட்டு -

நரேந்திர மோடியின் கொலை வெறி தாண்டவத்தையும் அதன் மூலம் இந்தியாவிற்கு ஏற்பட்ட தலைகுனிவையும் விமர்சித்துவிட்டு -

வாருங்கள் -

ரவிஸ்ரீநிவாஸ் - உங்கள் தோளோடு தோள் உரச, தொண்டை கிழிய முழக்கமிடுவேன் - தீவிரவாதிகள் ஒழிக என்று.

அது வரையிலும் - பேசாதீர்கள்.

(அப்படியே சுட்டி கொடுக்கும் முன்பு, கொஞ்சம் சொல்லி விடுங்கள் - நாகரீகம் கருதி. உங்களுக்குப் பதில் சொல்ல ஏதுவாக இருக்கும். இல்லையென்றால் - உங்களுடைய தீவிரவாத குரலுக்குப் பதில் சொல்லாமல் போனால், நாளை என்னைப் பற்றித் தவறாக பிறர் நினைக்க வாய்ப்புண்டு. இதை ஒரு வேண்டுகோளாகத் தான் வைக்கிறேன். மற்றபடிக்கு, நீங்கள் எந்தக் குற்றச்சாட்டை வைத்தாலும் பதில் சொல்கிறோம் - முறைப்படி தெரிவித்தால்.

மேலும் - இஸ்லாமியர்களின் சிந்தனை எப்படி செயல்படுகிறது என்று தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டுமென்றால் - The Struggle within Islam என்ற புத்தகத்தை நீங்கள் வாசிக்க வேண்டும். Dr.Rafiq Zacaria என்பவர் எழுதியது. ஜின்னா, காந்தி போன்ற தலைவர்களுடன் கலந்து பழகியவர். விமர்சனங்கள் எப்படி நேர்மையாக இருக்க வேண்டும் என்பதற்கும், இஸ்லாமியர்கள் தங்களுக்குள் எதை எதை விவாதிக்க வேண்டும் என்ற குறிப்புகளோடு - நபிகள் காலம் முதல், உலகம் தழுவிய இஸ்லாமியத்தைப் பற்றி விவாதித்து விட்டு, பின்னர் இந்திய விடுதலைப் போராட்டம் வரை விவரித்து, முஸ்லிம்களின் இயல்புகளைப் பற்றி விலாவாரியாக விவரித்து இருப்பார்.

இதையெல்லாம் படித்துப் பாருங்கள் - நீங்கள் முஸ்லிம்களைப் பற்றிய மனமாற்றத்திற்கு ஆளாகி விட மாட்டீர்கள். உங்கள் விமர்சனத்தில், இப்பொழுதில்லாத நேர்மை உண்டாகும்.

விமர்சகர்களுக்கு விசாலமான அறிவு தேவை. புரிதல் தேவை. ஆர் எஸ் எஸ் பிரச்சாரக் பிரஃபுல் கொராடியா, பிஜேபியின் intellectual ஆகத் தன்னை கருதிக் கொள்ளும் அருண் ஷோரி எழுதிய அனைத்து புத்தகங்களும் என்னிடமிருக்கின்றன. அதே போல் அம்பேதகர். ஆர்ய மாயையைகளைப் பற்றிய ஆதரவு எதிர்ப்பு புத்தகங்கள். ஏனென்றால், ஒரு தத்துவத்தைப் பற்றிய புரிதல் இல்லாமல், அதைப் பற்றிய விவாதங்களில் பங்கேற்கக் கூடாது என்பதால். நீங்கள் இஸ்லாத்தைப் பற்றி அறிந்து கொள்வதற்காக என்ன செய்திருக்கிறீர்கள்?

ஒருவரைத் திட்டுவதாக இருந்தால் கூட, அதிலும் நேர்மை இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பவன். அத்தகைய நேர்மை உங்களிடமும் உண்டாவ கடவுவதாக.... ஆமீன்)

16 comments:

சன்னாசி said...

//இந்த இரண்டு வகையான தர்க்கத்திலும் ஆதாயம் உண்டு எனக்கு. அதற்காகத் தான் அந்த கட்டுரையே!!!//

இன்னொன்று இங்கே.

Anonymous said...

//ஒன்று நடந்தது - அதாவது ஹிட்லர் ஒரு கொடுங்கோலன். 60 லட்சம் யூதர்களைக் கொன்று குவித்தான். அந்த கொடுங்கோலனை, வன்முறையாளனை - ஆரோக்யம் சொன்னது போல - Hitler is being worshipped by the Sangh Pariwar as the new Messiah of Aryans - the new prophet of the Aryans. சங் பரிவாரத்தினர் வழிபட்டார்கள் - அனைவரும் அறிந்தது. அவ்வளவு தான்.//

யார் இந்த ஆரோக்கியம்? எங்கே சொல்லியிருக்கிறார்? சுட்டி தாருங்கள் படித்துப் பார்க்கிறேன்.

Thanks

Anonymous said...

அன்பிற்கினிய நண்பன்,

உங்கள் கருத்துக்களை தெளிவாக எடுத்து வைத்திருக்கிறீர்கள்.

//தீவிரவாதத்திலும் சாதி, மத, இன அடையாளங்களைத் தேடிப்பார்ப்பது உங்கள் மரபு. தீவிரவாதிகளை தீவிரவாதிகளாகப் பார்ப்பது மட்டுமே எங்களது வழக்கம்.//

சந்தர்ப்பம் கிடைக்கும்போதெல்லாம் இஸ்லாத்தை சாடுவதை சிலர் பொழுதுபோக்காக கொண்டுள்ளனர். இங்கே சிலருக்கு இதுவே முழுநேர பிழைப்பு. பெயரிலேயே 'சாந்தி' 'சமாதானம்' ஆகியவற்றைக் கொண்டிருக்கும் இஸ்லாம் மீது 'தீவிரவாத மார்க்கம்' என்று பட்டம் சுமத்த கங்கணம் கட்டி கிளம்பியிருக்கும் எழுத்துத் தீவிரவாதிகள் இவர்கள். உங்கள் வார்த்தைகளாவது இவர்களுக்கு உறைக்கிறதா என்று பார்ப்போம்.

அட்றா சக்கை said...

அன்பின் நண்பன் அவர்களே

திரு ரவி ஸ்ரினிவாஸ் என்பவர் எங்கெல்லாம் இஸ்லாத்தைப் பற்றிப் பேசினாலும் சம்பந்தமில்லாமல் விவாதத்தைத் திசை திருப்ப முயல்வார். (கவனிக்க வேண்டியவை அவரின் ஆங்கிலப் பின்னூட்டங்கள்)அவரிடம் இரண்டு கேள்வி கேட்டால் நழுவி விடுவார். இது தான் அவரது உத்தி. சமயம் கிடைத்தால் காழ்ப்பைக் கொட்டுவார். தீவிரவாதிகளை தீவிரவாதிகளாகப் பார்க்கவே மாட்டார். டெல்லியில் நடந்த குண்டு வெடிப்பு எல்லாருக்கும் தெரிந்திருக்கும். அதற்கு சற்று காலத்திற்கு முன் ஒரு திரையரங்கில் நடைபெற்ற குண்டுவெடிப்பை இந்த அறிவு சீவிகள் அதில் இசுலாமியப் பெயருடையவர் எவரும் சம்பந்தப் படாததினால் 'மறந்திருப்பர்'. இதுதான் இவர்கள் தீவிரவாதத்தை எதிர்க்கும் லட்சணம்.

நல்லடியார் said...

நண்பன்,

ஸ்ரீநிவாஸ் தன் எந்தப் பதிவிலும் அல்லது பின்னூட்டத்திலும் சொல்ல வந்த கருத்தை திசை திருப்பாமல் சொல்லியதில்லை.

கத்தோலிக்க ஜார்ஜ் புஷ்ஷும்,டோனி பிளேரும் செய்த அயோக்கியத்தனங்களைக் காட்டி, தன்னை கத்தோலிக்க ?! கிறிஸ்தவராகச் சொல்லிக் கொள்ளும் ஆரோக்கியத்தை யாரும் கிறிஸ்தவ தீவிரவாதி என்று சொல்வதில்லை.

மற்றபடி தீவிரவாதமும் ஜிஹாதும் ஒன்றல்ல. ஜிஹாத் என்ற சொல் "ஜஹ்தா" என்ற அரபுச் சொல்லிலிருந்து வந்தது. இதற்கு முயற்சி செய்தல் என்று அர்த்தம். ஆங்கிலேயரின் அடக்குமுறைக்கு எதிரான நம் சுதந்திரப்போராட்டமும் ஆங்கிலேயருக்கு எதிரான ஜிஹாத்தான்!

ஆரோக்கியத்தின் பதிவுகளை தற்போது யாரும் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை. முஸ்லிம்கள் மீதுள்ள காழ்பில் எழுதிக் கொண்டிருக்கிறார்.

மலேசியாவில் இருந்து தன் வயிற்றை நிரப்பிக் கொண்டு, மூர்த்தி என்ற அப்துல்லாஹ்வின் சடலத்தை சரீஅத் நீதிமன்றம் இஸ்லாமிய முறைப்படி அடக்கம் செய்ததைப் பற்றிய அவரின் பதிவை பாருங்கள் அவரின் (அ)நியாயங்கள் வெட்ட வெளிச்சமாகும். முஹம்மது நபியை திட்டுவதற்காகவென்றே வலைப்பதிவு நடத்திக் கொண்டிருக்கிறார்.

என்ன செய்வது? குரங்குக்கு புண் வந்தால் சொறிந்து கொண்டுதான் இருக்கும். புண்ணும் ஆராது! சொரிதலும் நிற்காது.

நண்பன் said...

சன்னாசி

அகராதியைக் காட்ட வேண்டாம், நண்பரே.

கொஞ்சம் மேலே கொடுக்கப்பட்ட, Encyclopaedia Britannicaவைக் கொஞ்சம் புரட்டிப் பார்த்திருந்தால், நீங்கள் சொன்ன அந்த deconstruction என்ற வார்த்தைக்கு என்ன பொருள் என்று தெளிவாகப் புரிந்திருக்கும்.

ஒருவேளை அதைப் படித்திருந்தும் உங்களுக்குப் புரியாமல் போயிற்றா?

விளக்குகிறேன்.

இந்த deconstruction நீங்க நினைக்கற(?!) மாதிரி construction க்கு எதிர்ப்பதமில்லை. இது பின் நவீனத்துவத்தின் ஒரு அங்கம். இந்த வார்த்தையைத் தமிழ்ப்படுத்தினால், என்ன பொருள் வரும் தெரியுமா?

கட்டுடைத்தல்.

அதாவது மரபின் வழி சரி என கொள்ளப்பட்ட, ஒரு கொள்கையை மீண்டும் தூண்டித் துருவி அதைச் சுற்றிப் பின்னப்பட்ட மாயைகளை உடைத்து, உண்மையை எடுத்துரைக்கும் தொழிலுக்குப் பெயர் கட்டுடைத்தல்.

இங்கும் அதைத்தான் நான் செய்கிறேன். மீண்டும் ஒரு விவாதம் - கட்டுடைக்கும் விவாதம் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பது தான் இன்றைக்கும் பலருக்கும் கோரிக்கையே.அத்தகைய விவாதங்களைத் தடை செய்யக் கூடாது என்பதும் தான் கோரிக்கை. இத்தகைய விவாதத்தை ஏற்கனவே ஒரு பின்னூட்டமாக வைத்து விட்டதினால், அதை மேற்கொண்டு வலியுறுத்தவில்லை.

என்றாலும் மூத்த வழ்க்கறிஞர்களுக்குப் "பாயிண்ட்" எடுத்துக் கொடடுக்க பல இளைய வழக்கறிஞர்கள் உடன் இருப்பார்கள். அது போல நான் விட்டுவிட்ட "பாயிண்ட்"களைக் கூட எடுத்துக் கொடுத்து எனக்கு உதவி செய்தமைக்கு நன்றி.

(ஆனாலும் சார், நீங்க என்னை ரொம்பப் புகழ்றீங்க. முன்னாடி சாதூர்யமாக வழக்காடுகிறீர்கள் என்றீர்கள். இப்பொழுது என்னவென்றால் கட்டுடைத்தலைச் சரியாக செய்கிறீர்கள் என்கிறீர்கள். புகழ்வதைக் கொஞ்சம் குறைத்துக் கொள்ளுங்கள் சார்...)

நன்றி

மற்றும் புத்தாண்டு வாழ்த்துகள், சன்னாசி.

நண்பன் said...

// யார் இந்த ஆரோக்கியம்? எங்கே சொல்லியிருக்கிறார்? சுட்டி தாருங்கள் படித்துப் பார்க்கிறேன். //

நீங்கள் ரவி ஸ்ரீநிவாஸின் பதிவில் போடப்பட்டிருக்கும் பின்னூட்டங்களை படித்துப் பாருங்கள்.

நண்பன் said...

இப்னு பஷீர்,

நன்றி.

புத்தாண்டு வாழ்த்துகள்.

நண்பன் said...

அட்றா சக்கை,

நன்றி

புத்தாண்டு வாழ்த்துகள்.

நண்பன் said...

நல்லடியார்,

நன்றி.

புத்தாண்டு வாழ்த்துகள்.

இப்னு ஹம்துன் said...

//தீவிரவாதத்திலும் சாதி, மத, இன அடையாளங்களைத் தேடிப்பார்ப்பது உங்கள் மரபு. தீவிரவாதிகளை தீவிரவாதிகளாகப் பார்ப்பது மட்டுமே எங்களது வழக்கம்.//

சரியாகச் சொன்னீர்கள். தீவிரவாதிகளிடத்தும் 'தீண்டாமை'யை கடைப்பிடிப்பவர்கள் சிந்திக்கட்டும்.

நண்பன் said...

இப்னு ஹம்துன்,

நன்றி,

புத்தாண்டு வாழ்த்துகள்.

Anonymous said...

//நாளை உங்கள் வீட்டில் நீங்கள் சமைப்பது ஈரானிய வாயுவாக இருக்கும். அப்பொழுதும், நீங்கள் உலையில் போடும் அரிசி வேகத்தான் செய்யும்.//

Good. At the time of flourishing India-Iran Gas pipleline project, this statement makes sense. Iran Agrees to go-ahead with this project with India, eveafter India voted against Iran in UN. India Can make a good revenue out of It. Gracious Iran's Gas will be used by all irrespective of whether the users like Iran or not.

நண்பன் said...

ரஹ்மான்,

மிக்க நன்றி.

புத்தாண்டு வாழ்த்துகள்

Sundar Padmanaban said...

நண்பன்.

//ஒரு பாவமும் அறியாத இளைஞர்களைக் கைது செய்யும் பொழுது செய்தியாக்கும் நீங்கள் (வாசிக்க - பத்திரிக்கைகள்) - அவர்கள் குற்றமற்றவர்கள் என்று விடுதலை செய்யப்படும் பொழுது அதை ஒரு வரி கூட குறிப்பிடாமல் இருட்டடிப்பு செய்வதை //

ஊடகங்கள் பரவலாகச் செய்துவரும் வன்முறையின் உச்சக்கட்டம் இதுதான் என்று சொல்வேன். புலன் விசாரணையின் ஒரு பகுதியாகச் சந்தேகப்படும் நபர்களை விசாரணைக்குக் கொண்டுசெல்லும்போது ஊடகங்கள் "குற்றவாளி பிடிபட்டான்" அல்லது "குண்டு வைத்த தீவிரவாதி பிடிபட்டான்" என்ற ரீதியில் செய்திகள் வெளியிடுவதை காவல்துறையும், அரசும், நீதிமன்றங்களும், மற்ற நடுநிலையாளர்களும் கைகட்டி வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருப்பதைப் பார்த்தால் வெறுப்பாக இருக்கிறது. இது மிகவும் கண்டனத்துக்குரிய செயல் மட்டுமல்ல. கடுமையான நடவடிக்கைக்குரிய - சட்டத்தைக் கையில் எடுத்துக்கொள்ளும் - செயல். ஒரு சாதாரண பொது ஜனத்தை இப்படிக் குற்றவாளியாகச் சித்தரிக்கும் ஊடகங்கள் - அவர் நிரபராதி என்று தெரியவரும்போது அதைப் பற்றியும் செய்தி வெளியிடாமல் - அல்லது ஒரு துணுக்காக மூலையில் யாரும் படிக்காத பக்கங்களில் போடுவதும் - வெட்கக்கேடான விஷயம். ஆளைக் கூட்டிச் செல்லும்போது "பிடிபட்டான்" என்று தலைப்புச் செய்தி. விடுதலை செய்யப்பட்டால் இருட்டடிப்பு.

"பிடிபட்டான்" என்ற வார்த்தைப் பிரயோகமே கண்டிக்கப் பட வேண்டியது. இவர்களின் பார்வையில் சந்தேகத்தின் பேரில் விசாரிக்கப்படும் நபர்களெல்லாம் உடனடிக் குற்றவாளிகளாகிவிடுகிறார்கள். அந்த நபர் இப்படிப்பட்ட எதிர்மறை விளம்பரங்களால் வாழ்க்கையையே தொலைக்க வேண்டியது வரும். வெளியில் தலைகாட்டமுடியாது. போலீஸ் வீட்டுக்கு வருவதையே அவமானமாக நினைக்கும் சமூகம் நம்முடையது. இதில் யாரையாவது விசாரணைக்குக் கூட்டிச் சென்றார்கள் என்றால் அவ்வளவுதான். அவர்(ள்) குற்றவாளி என்றே முடிவு செய்துவிடுவார்கள். இதில் ஊடகங்கள் வேறு பரபரப்புக்காகவும் வியாபாரத்திற்காகவும் அவசரகோலத்தில் செய்திகளைத் திரித்து வெளியிட்டு அந்நபரை நடைபிணமாகவே ஆக்கிவிடுகிறார்கள். விசாரணை முடிந்து - சந்தேகம் தீர்ந்து - திரும்ப வரும் நபரும் அவரைச் சார்ந்தவர்களும் சமூகத்தால் குற்றவாளிகளாகவே பார்க்கப்படும் சாத்தியக்கூறுகள் இவர்களது மரமண்டைகளில் உறைப்பதே இல்லை.

ஒரு வேளை இந்த நடுநிலைவியாதிகளில் யாராவது ஒருவரையோ அல்லது அவர் குடும்பத்திலிருந்து யாராவது ஒருவரையோ போலீஸ் கூட்டிச்சென்று அது ஊடகங்களில் தலைப்புச் செய்தியாக வந்தால்தான் வலி இவர்களுக்குப் புரியும் போலிருக்கிறது.

இந்தப் பொதுஜனம் என்ன கட்சித் தலைவரா - கைது செய்யப்படும் போது ஏதோ வீரதீரபராக்கிரமமான காரியத்தைச் செய்தது போலவும், இமயத்தின் உச்சியைத் தொட்டதுபோலவும் - கம்பீரமாகச் சிரித்துக்கொண்டே போட்டோவுக்குப் போஸ் கொடுக்க?

இன்னொரு புரிபடாத விஷயம் "குற்றவாளிகளைப் பிடிக்க காவல்துறை அங்கு விரைந்தது. இங்கு விரைந்தது. அந்தத் தெருமுக்கில் காத்துக் கொண்டிருக்கிறது. ராத்திரி பனிரெண்டு மணியளவில் சுற்றிவளைக்க வியூகம் அமைத்துக் காத்திருக்கிறார்கள்" என்று கிட்டத்தட்ட லைவ் ரிலே போன்று செய்திகளை வெளியிடுகிறார்களே - இது உண்மையான குற்றவாளிகள் தப்பித்துக் கொள்வதற்காகக் கொடுக்கப்படும் தகவல்களா? காவல்துறையும் எப்படி இம்மாதிரி செய்திகளைத் தருகிறது? அல்லது வெளிவர அனுமதிக்கிறது?

//எந்த ஒரு குற்றவாளியும் இன்று இப்பொழுது இஸ்லாமியத் தீவிரவாதத்தின் போர்வையில் குற்றங்கள் செய்து விட்டுத் தப்பி ஓடி விட முடியும்//

மிகவும் கவலைதரக் கூடிய வேதனையான விஷயம் இது. இதற்கும் முழுமுதற்காரணம் ஊடகங்களே.

//விமர்சகர்களுக்கு விசாலமான அறிவு தேவை. ஒரு தத்துவத்தைப் பற்றிய புரிதல் இல்லாமல், அதைப் பற்றிய விவாதங்களில் பங்கேற்கக் கூடாது //

மிகவும் சரி. இந்தத் தெளிவு இருப்பது மிகமிக முக்கியம். நன்றி.

நண்பன் said...

மிக்க நன்றி சுந்தர்.

சமீபத்தில் திருநெல்வேலியில் சதக்கத்த்ல்லா அப்பா கல்லூரியில் நுழைந்து அங்கிருந்த சில இளைஞர்களைக் கைது செய்திருக்கிறார்கள் - ஒரு வெடிகுண்டு மிரட்டல் மின்னஞ்சல் என்ற பெயரில். அவர்கள் கல்லூரியில் வேலை பார்ப்பவர்கள். கைது செய்யும் பொழுது செய்தி துபாய் வரையிலும் வானொலியில் கூட வந்தது. பின்னர் அவர்கள் அப்பாவிகள் என்று விட்டு விட்டார்கள். இந்த செய்தி நண்பர்கள் மூலமாக தனிப்பட்ட சானல்கள் வழியாக வந்தது.

இதெல்லாம் காவல்துறையின் இயலாமையா? அல்லது கல்வி நிறுவனங்களை தாக்கி நிலைகுலையச் செய்ய வேண்டும் என்ற எண்ணமா?

கைது, பத்திரிக்கைச் செய்தி இவையெல்லாம் தீர்ப்பு வழங்கப்பட்ட பின்பே ஊடகங்கள் பிரசுரிக்கலாம் என்றால் மட்டுமே இந்த ஈனத்தில் இருந்து தப்ப முடியும் என்று தோன்றுகிறது.

நண்பர்கள் சொல்கிறார்கள்

CSM - உலகச் செய்திகள்

GF - உலகச் செய்திகள்