"எழுத்துகளையும் தாண்டி எனக்கென்று ஒரு உலகம் உண்டு; நான் எழுதுபவற்றை மட்டுமே வைத்துக் கொண்டு, என்னை எடை போடுபவர்களை எப்பொழுதும் என் எண்ணங்கள் வியப்பில் ஆழ்த்திக் கொண்டே இருக்கும்....."
- நண்பன்

Monday, December 26, 2005

பாக்கிஸ்தானை நோக்கிய ஒரு பயணம் - சமுத்ராக்களுடன்.

My Sincere Thanks to :

India: A History - John Keay
Harper Collins Publishers London
Harper Collins Publishers India

// பி.கு.: ஜான் கீ எழுதிய இந்தியா: ஒரு வரலாறு (India: A History, John Keay) புத்தகத்தில் ஒரு சுவையான தகவல் கிடைத்தது. நமது மனுவுக்கும் Noahவுக்கும் ஒரு மிகப் பெரிய ஒற்றுமை உள்ளது. அது என்னவென்று தெரியுமா? க்ளூ : கப்பல். //

ஆஹா!!!

அற்புதம் சமுத்ரா!!!

நீங்கள் யார், எந்த சாதி என்ற தொல்பொருள் ஆராய்ச்சிகளுக்குள் நுழையாமல் - அது எனக்குத் தேவையற்றது என்பதால் - நேராக, நமக்குப் பிடித்த வரலாற்றிற்குள் வந்து விடுவோம்.

அ. மார்க்ஸ் அடிச்ச ஆப்புல, (அய்யோ, அப்படி இல்லையென்று சொல்வீர்கள் தான்) வேத மதங்களை விட்டு விட்டு, இப்போ semitic மதங்களையும் துணைக்குக் கூப்பிட்டு, எப்பாடுபட்டாவது, நாங்கள் இந்திய தேசத்தின் பூர்வ குடிகள் என்று நிறுவ முயற்சிக்கிறீர்கள். வாழ்க.

ஆனால், அதென்ன, நோவாவும், மனுவும் ஒன்றா? அப்படி ஜான் கீய் சொன்னாரா? இந்திய வரலாற்றுப் புத்தகத்தில்? அந்தப் புத்தகத்தைத் திறந்து வைத்துக் கொண்டு தான் கேட்கிறேன் - சொல்லுங்கள் எந்தப் பக்கமென்று?

ஜான் கீய் தன் வாதத்தை - ஹராப்பன் உலகம் என்ற காலத்தை நிர்ணயிக்க தொடங்கும் முதல் வாக்கியத்தை மட்டும் வாசித்து விட்டு, ஓடி வந்து விட்டீர்கள் - வலைப்பூவில் அந்தச் செய்தியைப் போட்டு விடலாம் எல்லோருக்கும் முந்தி என்ற ஆர்வத்தில் வந்து விட்டீர்கள். உங்கள் இருப்பை இந்த வாக்கியம் நியாயப்படுத்தும் என்று.

உங்களுடைய ஆர்வத்திற்குப் பாராட்டுகள். ஆனால், மீதியையும் வாசித்திருக்க வேண்டும் நண்பரே.

நீங்கள் வாசிக்க மறந்தவற்றை நான் சொல்கிறேன்::

The Harappan World - C3000 - 1700BC என்ற தலைப்பின் கீழ் இந்தியாவின் ஆதி காலத்தை ஆராயத் தொடங்கும் பொழுது அவர் நிர்ணயித்துக் கொண்ட கால அளவு - பிரளயம்.

எடுத்த எடுப்பிலேயே -

In the Bible, the Flood is the result of the divine displeasure. Enraged by man’s disobedience and wickedness, God decides to cancel his noblest creation: only the righteous Noah and his dependents are deemed worthy of survival and so of giving mankind a second chance. (பைபிளின் படி, இறைவனின் கோபத்தால், இந்த வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது.)

Very different, on the face of it, is the Indian deluge. According to the earliest of several accounts, the Flood which afflicted India’s people was a natural occurrence. (கிடைத்த தாரங்களின் படி, இந்தியாவின் வெள்ளப் பெருக்கு இயற்கையாக ஏற்பட்டது. ற்று வெள்ளப் பெருக்கு)

Manu - Noah’s equivalent - survived it thanks to a simple act of kindness. And amazingly, for a society that worshipped gods of wind and storm, no deity receives a mention.

மனு - நோவாவிற்கு சமதையானவராகக் கருதப்படுபவர் -
இவ்வாறு தன் ஒப்பீட்டைத் துவங்கி (முதல் பக்கத்தில்) 18 பக்கங்களுக்கு எழுதியவற்றை எல்லாம் ஒதுக்கி விட்டு, முதல் பக்கத்தோடு முடித்துக் கொண்ட உங்கள் வரலாற்று ஆர்வம் புல்லரிக்க வைக்கிறது, சமுத்ரா.

இனி நீங்கள் சொல்லாதவை -

மனுவிற்கு மீன் உதவிய கதையை ‘சதாபாதா ப்ரஹ்மான’ என்ற மிகுந்த வார்த்தைகள் கொண்டு, வேத புத்தகங்களுக்குப் பின் தொகுதியாக தொகுக்கப்பட்ட சுலோகங்களில் இருக்கிறது.

சமஸ்கிருதத்தின் மொழியியல் ஆய்வின் படி, இந்த வேதங்கள் இயற்றப்பட்டது - முதல் மில்லியனித்தில் (C1000) தான். இத்துடன் பின்னர் இணைக்கப்பட்ட ‘ப்ரஹ்மனா’ மற்றும் சமஸ்கிருதத்தின் உன்னத இலக்கியங்களாகக் கருதப்படும் ‘ராமாயாணம்’, ‘மஹாபாரதம்’ என்ற காவியங்கள் மூலமாகத் தான் C500க்குட்பட்ட இந்திய வரலாற்றை மரபுப்படி எழுத வேண்டியதிருக்கிறது என்கிறார் கீய்.

இந்த மீன் அவதாரத்தைத் தான் முதல் அவதாரமாக வேதங்கள் சொல்கின்றன. அதாவது விஷ்ணுவின் வரலாறு இங்கு தான் தொடங்குகிறது. அதற்கு முன் வரை விஷ்ணு என்ற கடவுளோ, தேவரோ இருக்கவில்லை.

வேதமதங்கள் - தங்களுக்கென ஒரு கடவுளை உருவாக்க முனைந்தது தான் இந்தக் கதை - காக்கும் கடவுள்!!! நீரிலிருந்து காத்தமைக்காக!!! (இல்லையென்றால், அதுவரையிலும் இந்தியா முழுமைக்கும் கடவுளாக இருந்த சிவத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும். ) Myth, howsoever remote, serves the needs of the moment. So does history, in India as elsewhere.

மீண்டும் இந்தப் பிரளய காலத்திற்கு வருவோம். நோவாவின் காலத்தில் நிகழ்ந்ததாகக் குறிப்பிடப்படும் இந்த வெள்ளப் பெருக்குக் காலத்தை 3102 BC என குறிக்கின்றனர். அதற்கு ஆதாரமாக ஈராக்கின் மெசபடோமியா ஆற்றுப் படுகைகளின் மீது நிகழ்த்தப்பட்ட தொல்பொருள் துறையின் ஆய்வுகள்.

மிகமோசமாகப் பரவிய வெள்ளப் பெருக்கு விளைநிலங்கள் மீது கொட்டிய மண்படுகைகளை - உபயோகமற்றதாக்கிய படிமங்களைத் தோண்டி எடுத்துள்ளார்கள். மெசபடோமியாவின் ஷ¤ருப்பாக் என்ற நகர் மூழ்கியதைக் கண்டு பிடித்திருக்கிறார்கள். இதையெல்லாம் கொண்டு, அந்த வெள்ளப் பெருக்கின் காலம் 3102கிமு என்று குறிப்பிடுகின்றனர்.

இந்தத் தேதியின் மீது தான் இப்போது ஆர்யர்களுக்குக் காதல் வந்து விட்டது. ஏனென்றால், இந்த வருடத்தோடு, தங்கள் இருப்பை இணைத்துக் கொண்டால், தாங்கள் இங்கே இருந்த பூர்வ குடிகளாக காட்டிக் கொள்ள முடியும்.

அதற்காகக்தான் - இந்தப் புதிய அரிதாரம்.

சரி, நமது ஆர்ய வெள்ளப் பெருக்கு எதைக் குறிக்கிறது? அதன் காலம் என்ன?
அந்நியர்களிடமிருந்தும் அந்நிய கல்வியிலிருந்தும் விடுதலை கிடைத்ததைக் கொண்டாடும் விதமாக, 1950ல், பல தொகுதிகள் அடங்கிய History and Culture of the Indian People என்ற வரலாற்று ஆய்வு நூல்கள் நடைமுறைப்படுத்தப் பட்டன. இந்திய வரலாற்று இயலாளார்களால் தொகுக்கப்பட்டு, எல்லோராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட இந்த வரலாற்று நூல்களின் படி மகாபாரத யுத்தம் நிகழ்ந்த வருடம் - 1400 BCக்குட்பட்டது.

கங்கை நதியில் ஒரு பிரளயம் ஏற்படுகிறது. தொல்பொருள் துறை ஆய்வின் படி அந்த வெள்ளப் பெருக்கின் காலம் - 800 கிமு. அந்த வெள்ளப் பெருக்கு அஸ்தினாபுரம் என்ற நகரத்தை அழிக்கிறது. இந்த நகரம் தான் அர்ஜுனனின் வழித்தோன்றல்களின் தலைநகரம். இவை சமஸ்கிருத மொழி வழக்கப்படி, பதிவு செய்யப்படுகிறது.

எப்படி?

யுத்தத்திலிருந்து ஏழாவது அரசன் காலத்தில் நிகழ்ந்ததாக. அதாவது மகாபாரதம் நிகழ்ந்ததே 975கிமு. என்பது தான். ஆக, மகாபாரத யுத்தத்தின் அதிகபட்ச காலம் 1400 - குறைந்தபட்ச காலம் 950.

சுமேரியாவில் நிகழ்ந்த வெள்ளப் பெருக்கிற்குப் பின்னும், அஸ்தினாபுரத்தின் இந்த வெள்ளப் பெருக்கிற்கு முன்னும் இன்னொரு வெள்ளப் பெருக்கு உண்டு - சிந்து நதிப்பள்ளத் தாக்கையும், முகத்துவாரத்தையும் அழித்தது அந்த வெள்ளப் பெருக்கு. அதாவது இன்றைய பாக்கிஸ்தானின் கராச்சி நகரும் அதன் சுற்றுப் புறங்களையும்.

ஆய்வாளர்களின் கூற்றின்படி அதன் வயது - 2000 கிமு. அந்த வெள்ளப் பெருக்கிற்கு முன் - அங்கு மிகுந்த புத்தி கூர்மை மிக்க ஒரு இனம் வாழ்ந்தது. விவசாயத்தைத் தொழிலாகக் கொண்டிருந்தார்கள். மிகுந்த தானியங்களைக் கொண்டு வியாபாரமும் செய்து வந்தனர். கைத் தொழில் செழித்து வளர்ந்தது. நகரங்கள் வளர்ந்தன. நைல் நதி, யூ·ப்ரடிஸ் நதி ஆகியவற்றிற்கு சமகாலத்தவர்களாக அவர்கள் வாழ்ந்தனர். உலகின் முதல் நகரங்களை உண்டாக்கியவர்கள் அவர்கள். நாகரிகத்தின் தொட்டில்களாக விளங்கினர்.

அப்பொழுது தான் அந்த வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. ஒன்றல்ல, அலையலையாக தொடர்ச்சியாக. நகரங்கள் அழிந்தன. காலங்கள் கடந்த பின்பு அந்த மண்மூடிய நகரங்களின் மீது புதிய இனங்கள் தங்கள் ஆடுகளை / மாடுகளை மேய்த்தனர். ஒரு மாபெரும் நாகரீகம் நம் நினைவிலிருந்து மறைந்தே போனது.

இப்படி ஒரு நாகரீகம் இந்தியாவிற்கு உண்டு என்பதையே 1920ம் ஆண்டில் தான் மீண்டும் கண்டுபிடித்தோம். சிந்துவின் மொகஞ்சதாரா பஞ்சாபின் ஹராப்பா கண்டுபிடிக்கப்பட்டன. சுமேரியா நாகரீகத்தின் தொடர்ச்சி என்று எண்ணினர். பின்னர், அதன் தனித்துவங்களைக் கண்டு, சிந்து சமவெளி நாகரீகம் என தனி இடம் கொடுத்தனர்.

இந்த ஆதாரங்களைக் கொண்டு, மீண்டும் வேதத்தையும், ராமாயாணத்தையும், மஹாபாரதத்தையும், மற்ற பிற புராணங்களையும் ஓதுவோம் -
சிந்து சமவெளி நாகரீகம் - முழுக்க முழுக்க ஆய்வின் படி நிர்ணயிக்கப்பட்டது. மற்றது முழுக்க முழுக்க இலக்கியத்தை மட்டுமே அடிப்படையாகக் கொண்டது. இந்த இரண்டையும் ஒப்பிட்டு நோக்கும் பொழுது - சிந்து சமவெளி நாகரீகத்திற்கும் வேத காலத்திற்கும் எந்த வித தொடர்பும் இல்லை என விளங்கும்.

ஹராப்பன் நாகரீகம் - கட்டிடங்கள், கருவிகள், நகைகள், சிற்பங்கள் இவற்றையெல்லாம் உள்ளடக்கியது. சிறந்த கட்டிட அமைப்புகள் - கழிவுக் கால்வாய் திட்டங்கள் எல்லாம் கொண்டது. சுமேரியாவுடன் கடல் வாணிபத் தொடர்பும் உண்டு. அதனால், இவர்கள் காலத்தை ஒப்பீடு செய்து உறுதிப்படுத்தவும் முடிந்தது. அத்துடன் carbon 14 dating செய்து, இந்த நாகரீகத்தின் வயதை ஒரு நூறு வருடங்கள் முன்பின் துல்லியத்துடன் நிரூபிக்க முடிந்தது.

அவர்கள் மொழிக்கு எழுத்து வடிவமும் இருந்தது. நானூறு எழுத்து வடிவங்கள் அடையாளப்படுத்தப்பட்டுள்ளன. அவை வலமிருந்து இடமாக வாசிக்கப்பட்டன. சமஸ்கிருத மொழியியலாளர்கள் அதை சமஸ்கிருதம் இல்லையென உறுதிபட கூறிவிட்டனர். அந்த மொழி திராவிட மொழிகளுடன் தொடர்பு உடையதாக இருக்கலாம் - பிரஹ்மி என்ற மொழிக்கு முந்தையதாக இருக்கலாம். இந்த பிரஹ்மி ஒரு காலத்தில் இந்தியா முழுமைக்கும் பரவி இருந்தது. அதாவது திராவிட தொடர்பு - ஆதிக்கம் இந்தியா முழுமைக்கும் இருந்தது.

இதை அம்பேதகரும் பல இடங்களில் வற்புறுத்தி வந்துள்ளார். அ. மார்க்ஸ் அவர்களும், இன்னமும் திராவிட தொடர்புடைய மொழியின் சில கூறுகள் வட இந்தியாவிலும், பாக்கிஸ்தானின் சிந்து வெளியிலும் புழக்கத்தில் இருப்பதை கூறியுள்ளார்.

மிகச் சிறந்த கல்வியாளர்கள், கணிணிகள், குறியீடுகளை உடைப்போர் இவர்களால் கூட இன்னும் வாசிக்க முடியாத குறியீடுகளில் ஒரு மாபெரும் வரலாறு முடங்கிக் கிடக்கிறது.

இதற்கு மாறாக - வேதங்கள் தருவதோ - மலைமலையாக பெயர்களை மாத்திரமே. வழிவழியாக குலத்தோன்றல்கள் பெயர்களைக் குறிப்பிட்டு, அதன் மூலம் மனுவை சென்றடைகின்றனர்.

மனுவின் காலம் கிமு 3102 என்றால், மரபுவழி தங்கள் கடந்த காலத்தின் பழம்பெருமைகள் பேசும் இந்த வேதங்கள் - ஆய்வின் படி நிரூபிக்கப்பட்ட இந்த ஹராப்பன், மொகஞ்சதாராவின் பெருமைகளையும், அந்த இனத்தையும் தன் இலக்கியங்களில் குறிப்பிட்டிருக்க வேண்டும். ஆனால் குறிப்பிடப்படவில்லை. அதைப் பற்றிய ஒரு distant knowledge கூட இல்லாதவர்களாக வேத இன மக்கள் இருந்திருக்கிறார்கள்.

இந்த வேத காலத்து மக்கள், கிமு 2000க்கு முன் என்ன நிகழ்ந்தது என்பதை அறிந்திருக்கவில்லை. வேதங்களில் அது குறிப்பிடப்படவில்லை. ஏனென்றால், அவர்கள் ஞானத்தில் அது இல்லை.

இந்த இரண்டு நாகரீகங்களையும் இணைக்கும் எந்த ஒரு தொடர்பும் இருக்கவில்லை. வேத காலத்தின் ஆதி - மிஞ்சி மிஞ்சிப் போனால் கிமு 1400ஐத் தான் தொடும். அதற்கு முன் அது போவதில்லை.

இன்று தேசியம் பேசித் திரியும் சில அரசியல் கட்சிகளும் அதன் இந்துத்வா தலைவர்களும் தான் - வேத காலத்தின் வயதை முன்னுக்குத் தள்ள முயற்சிக்கின்றனர். தாங்கள் வந்து மேய்ச்சலில் ஈடுபட்ட நிலங்களையும், தங்கி இருந்து தோற்றுவித்த வேத மதங்களையும் - இந்தியா - அகண்ட பாரதம் என்ற எல்லைக்குள் கொண்டு வர முயற்சி செய்கின்றனர்.

ஜான் கீய் கூற்றுப் படி, இந்தியா என்றுமே - பூகோள அமைப்பிலும் சரி, தேசங்களின் அமைப்பிலும் சரி ஒரு நாடாக இருந்ததில்லை. இதை அவர் கூறுவதைக் கொண்டே கேளுங்கள் - பக்கம் 7ல்:: Despite the pick-and-preach approach of many nationalist historians, geographical India is not now, and never has been, a single politico-cultural entity. ஆமாம், இந்தப் புரிதலுடன் தான் நாம் இந்தியர்களாக இருக்க முடியுமே தவிர, இவற்றை மறந்தல்ல.

மேலும் நீங்கள் வாசித்த முதல் பக்கத்தைத் தாண்டினால், இத்தனை செய்திகள் இருக்கின்றன.

வேதங்களின் வயது - கிமு1400க்குள் தான். மனுவின் காலம் - மிகை இல்லையென்றால் கிமு 2000க்குள் தான். (அப்படி ஒருவர் இருந்திருக்கும் பட்சத்தில்) வேதங்களை - இந்து அந்தண மதத்தை - ஆர்யர்கள் தங்கி வடிவமைத்த இடம் - பாக்கிஸ்தான்.

ஆமாம், ஆர்யர்களின் நவீன தோற்றுவாய்கள் - தாயகம் பாக்கிஸ்தானில் இருக்கிறது. அதற்கும் முன்னர் ஈரானில் இருக்கிறது.

சமுத்ரா - நீங்கள் தமிழன் / அய்யர் இல்லை தான். ஆனால், ஆர்யன் இல்லையென்று கூற மறந்து விட்டீர்கள். நீங்கள் பேசிய - பலவற்றிற்கு இந்த கட்டுரையில் விடை இருக்கிறது.

வைகோவைப் பற்றிய பதிவில், இந்திய தேசியத்திற்கு விளக்கம் தேட முனைந்தீர்கள். நீங்கள் கூற விளையும் தேசப்பற்று, உங்களுக்கு உகந்த சுயநலம். அதை மறுப்பவர்களை நிறுவச் சொல்வீர்கள் - தேசப்பற்றை.

எங்கள் தேசப்பற்றை எவருக்கும் நிறுவ வேண்டிய அவசியம் எங்களுக்கில்லை.

அகண்ட பாரதம் பற்றி பேசுகிறீர்கள் - எப்படியாவது ஹராப்பாவையும், மொகஞ்சதாராவையும் இந்தியாவுக்குக் கொண்டு வந்துவிட வேண்டும் - பின்னர் வரலாறு தங்கள் கைக்குள் என்று எண்ணித் தான் தேசியம் பேசுகிறீர்கள்.

அகண்ட பாரதம் என்று.

அ.மார்க்ஸ் கூறியது போல, இது கொஞ்சம் அபத்தம் தான் - அந்தண மதத்தின் மூலம் - பாக்கிஸ்தானில் இருக்கிறது என்றால்!!!

அடுத்த முறை முஸ்லிம்களைப் பார்த்து பாக்கிஸ்தானுக்குப் போ என்று இரைச்சலிடும் பொழுது, நினைவில் வையுங்கள், எங்களுக்கு வழிகாட்டியாகப் பெட்டி படுக்கையோடு, நீங்களும் வர வேண்டியதிருக்கும் என்பதை.

மேலும், புத்தகங்களை வாங்கிப் படியுங்கள். வாங்குவது போல ஒன்றிரண்டு பக்கங்களைப் படித்து விட்டு, வரலாறு பேச வந்துவிடாதீர்கள்.

எங்கள் புத்தக அலமாரியில் இந்தப் புத்தகங்களும் இருக்கின்றன.

வரலாறுகளைப்பற்றிய வரலாறு விரைவில் வருகிறது விரிவாக,.

Sunday, December 25, 2005

ஒரு பிரார்த்தனை.

இன்று உலகில்
எந்த ஒரு மூலையிலும்
குண்டுகள் வெடிக்காதிருக்கட்டும்

எந்த ஒரு நதியும்
எந்த ஒரு மூலையிலும்
கரை மீறாதிருக்கட்டும்

எந்த ஒரு எரிமலையும்
எந்த ஒரு மூலையிலும்
பொங்கிக் குமுறாதிருக்கட்டும்

எந்த ஒரு கடலும்
எந்த ஒரு மூலையிலும்
உயிர்களை விழுங்காதிருக்கட்டும்

எந்த ஒரு இடியும்
எந்த ஒரு மூலையிலும்
எவர் தலையிலாவது விழாதிருக்கட்டும்

எனது இறைவனே !!!
உன்னால் கொடுக்க முடிந்தது
அனைத்தையும்
கொடுத்து விடு -
கேட்டது மட்டுமின்றி
கேட்காமல் விட்டதையும் தான்

இத்துடன்
எனது பிரார்த்தனைகள்
முடிந்து விட்டன -
நேரமின்மையால்

எந்த நிமிடத்திலும்
அழைப்பு வரலாம்
பதுங்கு குழி விட்டேகி
எதிரியின் மண்ணில்
எறிந்தே ஆகவேண்டும் குண்டுகளை -
தலைமை ஆணையிடலாம்.

இன்று
நான் எறியப் போகும்
இந்தக் குண்டுகளில்
எந்த ஒரு குழந்தையும்
சிக்காதிருக்கட்டும்.

இல்லையென்றால்
காக்கும் சக்தி இருப்பதாக
எண்ணிக் கொண்டு
இத்தனை நேரம் இறைஞ்சிய
என் பிரார்த்தனைகளை
என் குண்டுகளில் மடிந்துவிழும்
குழந்தைகளின் காலடியில்
சமர்ப்பித்துவிடும் -
சுவர்க்கத்தில் காலடி
எடுத்து வைக்கும் அவர்களிடம்

Thursday, December 22, 2005

நெடுஞ்சாலையில் ஒரு துகிலுரிப்பு...........

நெடுஞ்சாலையில் ஒரு துகிலுரிப்பு...........

காற்று எனக்காகப் பாடிக்கொண்டிருந்த
ஒருநாள் நான் பயணம் போய்க் கொண்டிருந்தேன்
மெக்ஸிகோவிற்குப் போகும் நெடுஞ்சாலை ஒன்றில்.

அடிபட்டு, நெளிந்து, நைந்து போன
நீல மஸ்டாங்க் வண்டியொன்று எனக்கு முன்னே,
அழுக்குப் படிந்த பின் கண்ணாடியுடன்
விரைந்து கொண்டிருந்தது.

விரைந்து செல்லும் காரிலிருந்து திடீரென
அழகிய பெண்ணின் கரம் ஒன்று -
கடிகாரம் கட்டிய கரம் ஒன்று,
பலப்பல பொருட்களை
தூக்கி எறிய ஆரம்பித்தது -
பின்னோக்கி விரைந்திடும் சாலையின் மீது......

ஒரு தொப்பி,
ஒரு அழகிய வெள்ளை காலணி,
பின்னர் அதன் ஜோடி,
மடிப்புகள் நிறைந்த பாவாடை,
எல்லாம் ஒழுங்கற்ற இயக்கத்துடன்
காற்றில் ஒலியெழுப்பி
கண்முன்னே பறந்து செல்கிறது -
மார்புச் சட்டையும் கூட.

எரிசக்தியை அழுத்தி,
வண்டியின் வேகம் கூட்டி,
முந்தைய காரின் பின்னே
ஐம்பதடி தூரத்தில்
ஆவலுடன் உற்றுப் பார்க்கிறேன் -
உபயோகத்தில் பழமையான
தேய்ந்து போன மார்புக் கச்சை ஒன்று -
சிறிய மார்புகளுக்கானது,
விரைந்து போய்
சாலையோர வேலியில்
சிக்கிக் கொள்கிறது -
வேலிக்கு அப்பால்,
மஞ்சளும், பச்சையுமான
கோதுமை வயல்கள்.
வெளிர் மஞ்சள் மார்புக் கச்சையை,
வேலியில் ஆணியடித்தாற் போன்று
நிறுத்தி வைக்கிறது,
வீசியடிக்கும் காற்று....

வியர்த்துக் கொட்டி,
இன்னும் வேகமெடுத்து விரட்ட
உத்தேசத்திருக்கும் வேளையில்,
அட்டகாசமான சிவப்பில்,
வெள்ளை நூல் எம்பிராய்டரி கொண்ட
கீழ் உள்ளாடை,
நான் அறியுமுன்னே
விரைந்து வந்து என் பார்வையைத் தாக்க
நிலைகுலைந்தும், இடம், வலம் தடுமாறியும்,
அநாதையான அந்தச் சாலையில் விபத்தில்லாமல்
நிலைக்கு வந்து சேர்ந்த பொழுது,
காணவில்லை, அந்த உள்ளாடையை.
காற்றின் வலிய கரங்கள்
கீழ் உள்ளாடையை மட்டும் நகர்த்தவில்லை -
என் நாவையும் வரளத்தான் செய்து விட்டது.

அந்த துகிலுரியும் நங்கையை
நன்றாகப் பார்த்து விட
ஆவலும், பரபரப்பும், அதிகரித்தது -
ஒரு பெண் மட்டும் தானா?
இல்லை ஆணும் இருக்கிறானா?
அல்லது பல ஆண்களா?
அவள் மார்பின் மீது
அல்லது அவள் தொடையின் மீது
அவன் கைகள் இருக்குமோ?

நிச்சயமாக இந்தக் காட்சியைக்
கண்டே விட வேண்டும் -
அந்த அழுக்கடைந்த பின்கண்ணாடி உதவாது.

எரிசக்தி பெடலில் ஏறினின்று மிதிக்க
விரைந்து சென்று
அந்தக் காரின் பக்கவாட்டுக் கண்ணாடி வழியே
பார்த்த அந்த முழுமையான விநாடியில்,
அடுத்தவர் அந்தரங்கத்தை நோட்டம் விடும்
அநாகரீக நரகவாசிகள் மிகுந்த உலகில்
நானும் ஒருவனாக
அந்த காரின் பக்கவாட்டு கண்ணாடி வழியே
கிடைத்த தரிசனத்தில்
நான் பார்த்தது ஒரே ஒரு மனிதனைத் தான் -
நாற்பது வயதிருக்கும் மனிதன்,
காரின் சக்கரத்தை இயக்கி கொண்டிருந்தான்.

மூக்குக் கண்ணாடி அணிந்து
சாலையை மட்டுமே பார்த்துக் கொண்டு,
வானொலியில் கால்பந்தைக் கேட்டுக் கொண்டு,
நிர்ச்சலனமாய்,
நிதானமாய் போய்க் கொண்டிருந்தான்.

முந்திச் சென்ற நான்
பின் வரும் பொருள் காட்டும்
கண்ணாடி வழியே
திரும்பத் திரும்ப பார்த்துக் கொண்டிருக்கிறேன் -
என் வண்டியை
நிதானத்துக்குக் கொண்டு வந்தவனாய்.
பின்னோக்கி செல்லும் மரங்களுக்கிடையில்
உறுதி செய்து விட்டேன் -
ஒரு ஆண் தான்.

ஏமாற்றமுற்ற எனக்குத் தெரியவில்லை -
என்ன தான் நடந்தது?
அவன் வீசியெறிந்தவை
தொப்பியும், காலணிகளும்,
மார்புக் கச்சையும்,
கீழாடையும் மட்டும் தானா?
அல்ல
அவன் தான் அணிந்திருந்த
(அணிவிக்கப்பட்ட)
பெண்ணை தான் தூக்கி எறிந்தானா?
அல்லது நான் தான் தூக்கி எறிகிறேனா?
முன்னோர்களின் வழக்கத்தையும்
எனது பழைய முதலீடுகளையும்,
தூக்கி எறிந்து விட்டு -
இவ்வுலகின்
முகவரியற்ற இடங்களில்,
அம்மண வெறுமையை
துல்லியமாகப் புணர்ந்து ருசிக்க
வெறிகொண்டு பாய்ந்து செல்லும்
நான் தான் அந்த மனிதனா?


(ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு மொழி பெயர்ப்பு - நண்பன்.
மூலம் யாருடையது? நீங்களே தேடி கண்டுபிடித்துக் கொள்ளுங்கள்)

புதிய தேவாலயம்....

புதிய தேவாலயத்தின் கட்டுமானப் பணிகள் 10மில்லியன் திர்ஹம் செலவில் ஜெபல் அலியில் இன்னும் சில வாரங்களில் ஆரம்பிக்கப்படுகிறது. இந்த தேவாலயம் தான் கிரீக் ஆர்த்தோடாக்ஸ் பிரிவினரின் முதல் தேவாலாயம் ஆக இருக்கும் - அமீரகத்தில்.

பாரம்பரியமிக்க பைசாண்டைன் மரபு வழக்கப்படி அமையும் இந்த தேவாலயத்திற்கு செய்ண்ட் மேரி கிரீக் ஆர்த்தோடாக்ஸ் தேவாலயம் என பெயரிடப்பட்டுள்ளது. இந்த தேவாலயம் கட்டப்படுவதற்குத் தேவையான நிலத்தை துபாயின் இளவரசரும், அமீரகத்தின் பாதுகாப்பு மந்திரியுமான ஷேக் முகமது அவர்களால் நன்கொடையாகக் கொடுக்கப்பட்டுள்ளது.

பத்து மில்லியன் திர்ஹம் செலவை ஈடுகட்ட வசூல் பணிகள் திட்டமிடப்பட்டுள்ளன. இந்த தேவாலயத்திற்கு துபாயில் இருந்து 400 பேரும், ஷார்ஜாவில் இருந்து 200 பேரும் வருவர். விழாக்காலங்களில் இது இருமடங்காக ஆகலாம்.

இது வரையிலும் இவர்கள் மற்ற தேவாலயங்களில் - குறிப்பாக ஹோலி டிரினிடி தேவாலயத்தில் பிரார்த்தித்து வந்தனர். அந்த தேவாலயத்துக்கு, மற்ற கிறித்துவ மத குழுக்களும் அதிகம் வரத் துவங்கியதால், இட நெருக்கடியுடன், நேர நெருக்கடியும் ஏற்படுவதால், புது ஆலயம் கட்டுவதான திட்டம் செய்து, இப்பொழுது முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த செய்தி கிறித்துவர்களை - ரஷ்யா, சிரியா, கிரீஸ், உக்ரைன், மற்றும் சைப்ரஸ் நாட்டு மக்களால் ஆன இந்த கிறித்துவர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. தேவாலய நடவடிக்கைகள் - அரபு மற்றும் கிரேக்க மொழியில் நடைபெறும்.

அமீரகத்தின் மத நல்லிணக்கத்திற்கும், சகிப்புத் தன்மைக்கும் இது மேலும் ஒரு நல் உதாரணமாகும்.

Sunday, December 18, 2005

ஆயிஷா என்ற அற்புதம்

ஆரோக்கியம் என்ற அறியாமை நிறைந்த மனிதர் -

ஒரு கண்டுபிடிப்பு செய்திருக்கிறார் - //நண்பன் என்ற ஷாஜஹான்//

பாவம். அவ்வளவு சிரமப்பட்டிருக்க வேண்டாம்.

தமிழ் மணத்தில் போய் பீர் என்று பார்த்திருந்தாலே தெரிந்திருக்கும் - நான் என் வலைப்பூவை பீர் முகமது ஷாஜஹான் என்ற பெயரில் தான் பதிவு செய்து வைத்திருக்கிறேன்.

என்றாலும் ஒரு நண்பர் எழுதிய தளத்தில் பின்னூட்டமிட்டிருக்கிறார் - இஸ்லாத்தைத் தோற்றுவித்த நபிகளைப் பற்றி.

இந்த மனிதர் - ஆரோக்கியம் - நாகரீகம் என்பதை துளியும் அறியாதவர் என்பது அனைவரும் அறிந்தது தான். இதனால் அவருடைய பதிவுகள் எதையும் வாசிப்பதில்லை. ஆனால், இஸ்லாமியப் பெயர் தாங்கிய எவரையும் எப்படியும் சீண்ட்டுவது, வம்புக்கு இழுப்பது என்ற வகையில் செயல்பட்டு, அவர்களையும் (எங்களையும்) ஆராய்ச்சிப் பார்வையோடு இஸ்லாமிய நூல்களைக் கற்க வைத்து - ஆன்மீகத்தில் நாட்டம் கொள்ள வைக்காமல் விடக்கூடாது என்ற முனைப்பில் இயங்குகிறார் போலிருக்கிறது.

பாருங்களேன் - இதுவரையிலும் நான் எந்த ஒரு ஆன்மீகப் பதிப்பையும் எழுதியதில்லை. ஏனென்றால் நமக்கு அத்தனை பெரிய ஞானம்.!!!

அதனால் இந்த மாதிரி விஷயங்களை எல்லாம் - நல்லடியார், இறைநேசன், அபு முஹை ஆகியவர்கள் செய்யட்டும் என்று ஒதுங்கிக் கொண்டு - வெறுமனே அரசியல், சமூகத தளங்களில் இஸ்லாத்திற்கு எதிரான கருத்துகளுக்குப் பதில் சொல்லும் வகையில், வரும் செய்திகளை தொகுத்து வழங்கிக் கொண்டிருந்தேன்.

அதில்லாமல், கவிதைகள், கட்டுரைகள், சிறுகதைகள் - கொஞ்சம் தமிழ் உணர்வாளர்கள் மீது ஒரு வாஞ்சை என்று ஒரு கலக்கலான ஆளாக இருந்தேன்.

ஆனால், ஆரோக்கியமற்ற நமது நண்பரின் தூண்டுதலால் - இப்பொழுது இஸ்லாமியப் புத்தககங்களையும் தீவிரமாக வாசிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறேன் - ஆரோக்கியத்திற்குப் பதில் சொல்ல அல்ல. சுய அறிவுக்காக மட்டும் தான்.

ஆனால், படித்த பிறகு தான் பிரமிப்பு எழுகிறது - இத்தகைய வரலாறுகளை ஏன் முன்னரே படிக்கவில்லை என்று. வெறுமனே சிகரெட் பிடிப்பதை விட்டதை கட்டுரையாக எழுதி காலத்தை வீணடித்து விட்டோமே என்று.

இவ்வாறு வாசித்த பொழுது தான் தோன்றியது. இதை எழுதியே ஆக வேண்டும் என்று.

இது யாருக்குமான பதிலும் இல்லை. என் வாசிப்பும் வாசித்ததைப் பகிர்ந்துகொள்ளுவதும் மட்டும்.
****
Hadhrat Ayesha Siddiqa - Her life and works என்றொரு புத்தகம் இருக்கிறது. எழுதியவர் அல்லாமா சையத் சுலைமான் நத்வி.
****
ஆயிஷாவுக்கு திருமணமாகும் பொழுது வயது - 9.

சிறிய வயது தானென்றாலும் - அப்பொழுதே அவர் மனதாலும் உடலாலும் வளர்ச்சியில் முழுமையடைந்திருந்தார். குரான் வாசகங்களை ஒருமுறை கேட்டாலே அதை மனனம் செய்வதும், குரான் வாசகங்கள் இறங்கிய சந்தர்ப்பங்களை நினைவில் வைத்திருப்பதும், பெரியவர்கள் மீது மதிப்பும் மரியாதையும் வைத்திருப்பதும் என பல நல்ல குணங்கள் நிறைந்தவராக விளங்கினார். தந்தையார் - அபூபக்ர் சொல்லித்தரக்கூடிய கவிதை வரிகளையும், பழ மொழிகளையும் மனதில் ஆக்கிக் கொண்டிருந்தார்.என்றாலும், திருமணம் முடிந்ததும் உடனே நபிகள் அவர்களுடன் சென்று விடவில்லை. வயதின் காரணமாக தந்தையார் வீட்டிலே தங்க வைக்கப்பட்டிருந்தார். பருவ வயதிற்கு வந்த பின்னே தான் அவர் வாழ்வதற்காக நபிகள் அவர்களின் இல்லத்திற்குச் சென்றார்.

வலைப்பூக்களிலே பலர் காழ்ப்புணர்ச்சியுடன் எழுதி வருவதற்கு எந்த வித ஆதாரமும் கிடையாது. இவர்கள் ஆதாரமாக கொடுப்பதெல்லாம் - சில இணையதள முகவரிகள் மாத்திரமே. இந்த இணைய தள முகவரிகள் எத்தனை தூரம் உண்மையானவை என்று இணையத்தில் இயங்கும் எல்லோருக்கும் எளிதாகப் புரியும். ஒரு இரண்டாயிரம் ரூபாய் இருந்தால், ஒரு வருடத்தை இணையத்தில் ஓட்டலாம். இவையெல்லாம் குரோத மனப்பான்மையுடன் துவங்கப்பட்டவையே.



கிட்டத்தட்ட ஓராயிரம் ஆண்டுகளாக சொல்லியும் மக்கள் மத்தியில் எடுபடாமலேபோன குற்றச்சாட்டுகள் தான் இவை.

என்றாலும் புதிதாக குற்றச்சாட்டு சொல்கிறார்கள் -

காம இச்சைக்காக நபிகள் பலதார திருமணத்தைச் செய்து கொண்டார்கள் என்று.

தவறு.

இஸ்லாத்தில் - வாழும் முறையை விளக்க மூன்று வகையான வழிமுறைகள் உள்ளன.

1. குரான், 2. ஹதீதுகள் 3. நபிகளின் வாழ்க்கை முறை.

சிலவற்றை சொன்னால் புரியும். சிலவற்றிற்கு முன்னுதாரணங்கள் இருந்தால் மட்டுமே புரியும். ஒரு வாழ்க்கை முறைக்கு முன்னுதாரணம் வேண்டுமென்றால் அந்த முன்னுதாரணத்தை நபிகள் வாழ்வில் வாழ்ந்து காட்டினால் மட்டுமே ஏற்கப்படும் என்பது அனைவருக்கும் எளிதில் விளங்கக் கூடிய காரணம் தான். அதனாலே பலதரப்பட்ட வாழ்க்கை முறையையும் நபிகள் ஒருவர் மூலமே உதாரண வாழ்க்கையாக காட்ட வேண்டி இருக்கிறது. அதனால் நபிகள் வாழ்ந்த முறைகள் அனைத்தையும் ஒருவன் தன் வாழ்விலே செய்து விட வேண்டுமென்பதில்லை. தனக்குப் பொருந்தியவற்றை எடுத்துக் கொள்வது என்பது சரியானது. நேர்மையான மனதுடன் இருப்பவர்கள் இதை உணர்வார்கள் - மாற்று மதத்தினர் என்றாலும்.

ஆக, நபிகளின் வாழ்க்கையின் ஒவ்வொரு அசைவிலும் ஒவ்வொரு செய்தி இருக்கின்றது.

முதலாவது காம இச்சை தீர்க்க திருமணங்களா?

இல்லை.

அது தான் குறிக்கோள் என்றால் நபிகள் தனது இருபத்தைந்தாவது வயதில், தன்னை விட பதினைந்து வயது மூத்த விதவையைத் திருமணம் செய்து கொள்ள வேண்டியதில்லை. அப்படியே திருமணம் செய்து கொண்டிருந்தாலும் அந்த பந்தத்திற்குள்ளேயே முடங்கிக் கிடக்க வேண்டிய அவசியமில்லை. அந்தக் கால வழக்கப்படி, மேலும் இளம்பெண்களை திருமணம் செய்தோ - அல்லது அழகிய அடிமைகளை வாங்கியோ தனது இச்சைகளைத் திருப்தி படுத்திக் கொண்டிருக்க முடியும். ஆனால், நபிகளின் தேவை அதுவாக இருக்கவில்லை. நீண்ட நேரம் தனிமையில் தங்கி இருப்பதும், மனதிற்குள் இனம் புரியாது உறுத்திக் கொண்டிருக்கும் ஏதோ ஒரு இறைஅச்சத்தில் மௌனமாக இருப்பதுவுமாகவே இருந்தார். போதாக்குறைக்கு மலையில் குகை வாசம் வேறு. தன் கணவரின் இயல்பறிந்த கதீஜா அவர்களும் மறுப்பேதும் சொல்லாது - கணவருக்கு உணவை அனுப்பிக் கொண்டிருந்தார்.

இந்த இயல்பினராய நபிகளுக்கு, காமத்திற்காக செலவிட எங்கு நேரம் இருந்திருக்கும்?

விதவை மறுமணம் என்பது இன்னும் ஒரு விவாதப் பொருளாகவும் - அது மனைவியை இழந்த கணவன்மார்களுக்கோ அல்லது ஆண் வயோதிகரான பின்னர் வேறுவழியில்லை என்பதினால் பரீசீலிக்கப்படும் ஒரு காரியமாகத் தான் இருக்கிறது இங்கு.

ஆனால், இதை அந்தக் காலத்தில் நபிகள் வாழ்ந்து காட்டினார் -

விதவை மறுமணமே தனது முதல் choice என்று.

21ஆம் நூற்றாண்டைப் பற்றி பேசுபவர்கள் இன்னமும் ஜீரணிக்க இயலாமல் தவிக்கிறார்கள் -முதல் திருமணமாக ஒரு விதவையை ஏற்றுக் கொள்வதைப் பற்றி.

இத்தனை தான் நமது சிந்தனைத் தளம்.

ஆனால் முழுமுதல் முன் உதாரணம் நபிகளாரின் வாழ்க்கை - அதில் முதலாவதாக அவர் திருமணத்தை செய்கிறார் - ஒரு விதவையை. அப்பொழுது அவர் நபிகள் கூட இல்லை. ஒரு சாதாரண இளைஞன்.
இந்த திருமணம் 25 வருடங்கள் நீடிக்கிறது. தனது 50 ஆவது வயதில் இழக்கிறார் தனது துணையை. இடைப்பட்ட காலத்தில், நபித்துவம் பெற்று, அதை முதன்முதலில் தனது மனைவிக்கு அறிவிக்கிறார். எந்தக் கேள்வியுமின்றி தன்னை ஒரு முஸ்லிமாக மாற்றிக் கொள்கிறார். அவர்களது அன்பும் பாசமும் மேலும் உறுதியடைகிறது. தன் செல்வமனைத்தையும் இஸ்லாத்தின் வழியில் செலவழிக்கிறார். பிறகு இறந்து போகிறார். தன் மனைவியின் மீது அளவற்ற பாசம் கொண்ட நபிகள் அந்த நினைவிலேயே வாழ்கிறார். 3 வருடங்கள் வரையிலும் வேறெந்த துணையுமின்றி.

அந்தக் காலத்து அரபு வழக்கம் - குலம் கோத்திரம் பார்த்து ஒவ்வொன்றிலும் ஒன்றாக பெண்களைத் திருமணம் செய்து கொள்வது.

ஏன்?

ஒரு பாதுகாப்புக் கருதி.

வியாபாரத்திற்கு பணம் புரட்ட, அல்லது யுத்தம் புரியும் பொழுது தேவைப்படும் படைபலத்திற்காக. பெண் வீட்டார்களும் தங்கள் நலனைக் கருதி, சக்தி வாய்ந்த மணமகனைத் தேடிக் கொள்வர். நபிகளின் வம்சமும் மிகவும் சக்தி வாய்ந்த குலம் தான். என்றாலும் மன உறுதிமிக்க நபிகள் அதனைப் பொருட்படுத்தவில்லை. ஒரே பெண்ணுடன் அமைதியான, ஆனந்தமான வாழ்க்கையைத் தான் வாழ்ந்தார்கள் - தனது வாழ்வின் பெரும்பகுதி வரை. தனது இளமை முழுவதையும். வயது மூத்த தன் மனைவியுடன் தான் செலவிட்டார்கள்.

மகிழ்வான வாழ்க்கையை வாழ்ந்தார்கள்.

இந்த மாதிரி வாழ்க்கை வாழ்ந்த ஒரு மனிதரை - இச்சை பிடித்தவர் என்று சொல்பவன் - அவதூறு பேசுபவன் - தான் இன்னது செய்கிறோம் என்று அறியாத மனநிலை பிறழ்ந்த மனிதர்கள் அல்லாமல் வேறு எவராக இருக்க முடியும். அத்தகைய மனிதர்களில் சிலர் எல்லாவிடத்தும் இருக்கத் தான் செய்தனர் - செய்கின்றனர்.

மனைவி இழந்து இறைப்பணியில் மூழ்கிக் கிடந்து மூன்று வருடங்கள் ஓடி விட்டன. இந்த இடைப்பட்ட காலத்தில், இஸ்லாமில் இணைந்தவர்கள் எண்ணிக்கையும் கூடுகிறது. அவர்களை தொலைத்துக் கட்டுவோம் என்ற கங்கணத்துடன் அலையும் கூட்டமும் கூடுகிறது. மக்கா விட்டு மதினா நீங்க வேண்டும் என்றெல்லாம் திட்டமிடப்படுகிறது. உற்ற தோழர் அபுபக்ர் அவர்களின் வீட்டில் தான் தினமும் ஆலோசனை செய்யப் படுகிறது.

நபிகளுக்கு தனக்கும் ஒரு வீடு இருக்கிறது - அங்கும் பெண் குழந்தைகள் இருக்கிறார்கள் என்ற நினைப்பெல்லாம் பின் தங்கி விட, அதைக் கண்டித்து காவ்லா என்ற பெண்மணி - நபிகளிடத்தில் திருமணம் செய்து கொள்ள வற்புறுத்துகிறார். ஆயிஷா என்ற பெயரை முன்மொழிகிறார். ஆயிஷாவை ஏற்கனவே அறிந்திருந்த நபிகள் 'அவர் சிறுமியாயிற்றே' என்று மறுக்க அதற்கு காவ்லா ஒரு விடை சொல்கிறார் - சௌதா - விதவையையும் திருமணம் செய்து கொள்ளுங்கள். அதே சமயம் - ஆயிஷாவை மணம் செய்து தந்தை வீட்டிலே இருக்கட்டும். தக்க வயது வந்ததும் அழைத்துக் கொள்ளலாம் என்றும் கூற, நபிகள் பின்னர் ஒத்துக் கொண்டனர்.

இந்த திருமணத்திலும் செய்திகள் உள்ளன.

ஆம்.

நபிகள் திருமணம் செய்து கொள்ளும் முன் - ஆயிஷா - சிறுமி - மற்றொருவருக்காக நிச்சயிக்கப்பட்டிருந்தார். மத்ஆம் மகன் ஜாபீர் என்பவருக்காக. இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டு, செல்வம் எல்லாம் கரைந்து கொண்டிருக்கும் தருணத்தில், தன் மகளைத் திருமணம் செய்து அனுப்பி விட்டால், நலமாக இருக்குமே என்று எண்ணி, மணமகன் வீட்டை அணுகி, ஆயேஷாவை ஏற்றுக் கொள்ள வேண்டும் பொழுது, அவர்கள் மறுத்து விடுகிறார்கள். ஏன்? ஆயிஷா தங்கள் வீட்டிற்கு வந்தால், தனது மகன் மனதை மாற்றி, மயக்கி, இஸ்லாமியனாக்கி விடுவாள் - அதனால் அவள் தேவையில்லை என்று கூறி விடுகிறார்கள். திருமணம் தடைபட்டு விடுகிறது.

இப்படி நிச்சயிக்கப்பட்ட திருமணம் தடைபட்டால், அப்புறம் அந்தப் பெண்ணின் கதி என்ன இந்த நாட்டில் என்று இந்த இருபத்தொன்றாம் நூற்றாண்டில் விளக்க வேண்டிய அவசியமில்லை.

அவளுக்குத் தகுந்த மாப்பிள்ளை கிடைப்பானா? அவள் ஜாதகத்தைக் குறை கூறி, மட்டம் தட்டி, அந்த குடும்பத்தையே சின்னா பின்னமாக்கி விடுவீர்கள் தானே.? இல்லையென்று மறுக்க வேண்டாம் - இப்படி சின்னபின்னமான குடும்பங்களை நான் அறிவேன்.

நாளை ஒரு இஸ்லாமிய இளைஞன் இத்தகைய மூட பழக்க வழக்கங்களுக்கு அடிமை ஆகிவிடக்கூடாது என்ற நெறிமுறையும் இங்கு ஏற்படுத்தப் படுகிறது. ஆம் - நிச்சயித்த திருமணம் நின்று போய்விட்டதென்பதால் அந்தப் பெண் தீண்டத்தகாதவள் ஆகி விட மாட்டாள் - மாறாக அவளும் ஒரு நல்ல மனைவியாக பரிணமிக்கக் கூடும் என்ற முன் உதாரணத்தை ஏற்படுத்திக் கொடுத்தார்.

இந்த முற்போக்குச் சிந்தனைகளை எல்லாம் மட்டம் தட்ட வேண்டும் என்ற மனநிலை கொண்டவர்கள் தான் - இதை இச்சையாகப் பார்க்கிறார்கள். முதலில், இந்தத் திருமணத்தைப் பற்றிப் பேச மனதில் ஒரு நேர்மை வேண்டும். கண்ணை மூடிக்கொண்டால் போதுமென்பவர்களிடத்தில் எந்த நியாயம் இருக்கப் போகிறது.? (இவர்களுடைய நியாயம் தேவையில்லை என்பது வேறு)

திருமணம் முடிந்து மூன்றாண்டுகள் கழிந்த பின்பு, மக்கா விட்டு நீங்கி மதினா சென்ற பின்னர் - மசூதியையும் சில குடியிருப்புகளையும் தோற்றுவித்த பின்னர் -சாவகாசமாக தன் மணமகளை அழைத்துக் கொள்கிறார் - 12 ஆவது வயதில் - பருவமடைந்த வயதில். இதுவரையிலும் எழுதியவற்றைக் கொண்டு, இப்பதிவை முடித்திடலாம் தான்.

ஆனால், ஆயிஷா என்ற அற்புதப் பெண்மணியின் வாழ்க்கையைப் படித்த பின்னர், மீதியையும் கொஞ்சம் சுருக்கமாகவே சொல்லி விடுகிறேன்.

ஒன்பதாவது வயதில் திருமணம் நடந்தது. மக்காவில். நபிகள் மறைந்து மறைந்து தான் நடமாடவே முடிகின்ற காலம் அது. அங்கு தாம்பத்ய வாழ்க்கை வாழ நேரமேது? சிறுமியும் வளர்கிறாள். அறிவை வளர்த்துக் கொள்கிறார். நற்பண்புகளை வளர்த்துக் கொள்கிறார். அவருக்குத் தெரிந்திருக்கிறது - தான் எத்தகையவரின் மனைவியாக இருக்கிறோம் - அவருக்குத் தக்கபடி இருக்க வேண்டுமே என்ற கவனம் கொண்டு - தன்னை வளர்த்துக் கொள்கிறார். தன் தந்தையாருடன் நபிகள் உரையாடும் பொழுது கவனத்துடன் கேட்டுக் கொள்கிறார் - குரான் வசனங்களை. அதன் உட்பொருட்களை.

புத்திசாலித்தனமும் மதிக்கூர்மையும் கொண்டு வளர்ந்து வருகையில் - எல்லோரும் மதினாவிற்கு செல்கின்றனர். பள்ளிவாசல், எல்லோரும் தங்குவதற்கு சிறிய குடில்கள் கட்டுவது என்று ஒன்பது மாதங்கள் கழிந்த பின்பு - தன் மணமகளை அழைத்துக் கொள்கிறார். இனிய வாழ்க்கை. இடையே பழிச்சொற்கள். அதைத் துடைக்க, புறம் பேசுபவர்களைக் கண்டித்து குரான் வசனங்கள் இறங்குகிறது.

ஆயிஷாவின் தாய், மகளுக்கு அறிவுரை கூறுகிறார் " கணவரின் கால்களைத் தொட்டு வணங்கு "

என்ன நினைக்கிறீர்கள்? ஆயிஷா செய்தாரா? இல்லை. ''என்னைப் படைத்த இறைவனை அன்றி பிறரை வணங்குவதில்லை ''

ஆம்.

இதுதான் இஸ்லாம்.

இது தான் பெண்களுக்கு கொடுக்கப்பட்ட சுதந்திரம்.

கணவனின் காலில் வீழ்வது கூட அவசியமில்லை.

இத்தகைய ஆளுமை மிக்க பெண்மணி ஆயிஷா. அவரைக் கண்டால் மன்னர்கள் கூட அஞ்சினார்கள். இல்லையென்றால், ஒரு பெண்மணியான அவர் - படை திரட்டி -கலிபாவை எதிர்த்து போர் புரிந்திருக்க முடியுமா?

ஆம்.

கலிபா அலி அவர்களை எதிர்த்துத் தான் ஆயிஷா அவர்கள் போர் புரிந்தார்கள். முதல் வெற்றி - பாஷ்ரா நகரில். அங்கேயே தங்கி இருக்கிறார். கலிஃபாவாக முடி சூடிய அலி அவர்கள் - இழந்த நகரத்தை மீட்க பாஷ்ரா நோக்கி வருகிறார்கள். சமரச பேச்சு வார்த்தைகள் நடக்கின்றன.

பலரும் நடுநிலை வகிக்கிறார்கள். பாஷ்ரா நகரின் எல்லையில் யுத்தம் நடக்கிறது. சகோதரர்கள் சகோதரர்களுடன் மோதுகிறார்கள்.

எதன் பொருட்டு?

முந்தைய கலிஃபா உதுமான் அவர்கள் அடையாளம் தெரியாத நபர்களால் கொலை செய்யப் படுகிறார்கள். அது பற்றி சரியான விசாரணை நடத்தப்படவில்லை என்பது ஆயேஷாவின் குற்றச் சாட்டு. மேலும் தேர்தல் பார்வையாளராக நியமிக்கப்பட்ட - ஜுபைர், தல்ஹா - இவர்கள் இருவரும் வற்புறுத்தப்பட்டனர் -அடுத்த கலிஃபாவாக அலி அவர்களைத் தேர்ந்தெடுக்க என்ற குற்றச்சாட்டும் உண்டு.

எல்லாமாக சேர்ந்து யுத்த களம் வரைக்கும் வந்தாகி விட்டது.

யுத்தம் நடக்கிறது முடிவிற்கு வந்த பாடில்லை. யுத்த களத்தில் நடுநாயகமாக - ஆயேஷா அவர்களின் ஒட்டகம். அந்த ஒட்டகத்தை வீழ்த்தினால் மட்டும் தான் யுத்தம் நிற்கும் என்ற நிலையில் அந்த ஒரு ஒட்டகத்தை சுற்றியே போர் நடக்கிறது. அம்புகள் எய்யப்படுகின்றன. ஒட்டகத்தின் மீதுள்ள அம்பாரியின் கனத்த துணி கிழியத் தொடங்குகிறது.

ஆயேஷாவின் படைகள் ஒட்டகத்தைச் சுற்றி வளையம் வளையமாக நின்று கொண்டு போரிடுகின்றனர் - யுத்த பாடலைப் பாடிக் கொண்டே

நாங்கள்
ஜாப்பாவின் மக்கள்
எங்கும் ஓட மாட்டோம்
எதிரிகளின் தலைகள் வீழும் வரை
குருதி வடிந்து முடியும் வரை.

ஓ எங்கள் அன்னை ஆயிஷாவே
அஞ்சாதீர்கள்
உங்கள் பிள்ளைகள் நாங்கள்
சக்தி மிக்கவர்கள்
வீரம் மிக்கவர்கள்
எம் நபியின் மனைவியே

ஆசிர்வதிக்கப்பட்ட
கணவனைக் கொண்டவளே
நாங்கள் எல்லாம்
ஜாப்பாவின் மக்கள்
இந்த ஒட்டகத்தின் பாதுகாவலர்கள்

தேனை விட இனிப்பானது
மரணம் எங்களுக்கு
மரணத்தின் மடியில்
பாலூட்டப்பட்டவர்கள்

நாங்கள் அறிவித்தோம்
உதுமான் பின் அஃபானின்
மரணத்தை திருப்பிக் கொடு
தலைவனை திருப்பிக் கொடு
தகராறு ஏதுமில்லை பின்னர்.

நாடி நரம்புகள் புடைக்க உற்சாகமாகப் பாட்டெழுப்பிப் பாடிக் கொண்டே யுத்தம் புரிகின்றனர். உயிரிழக்கின்றனர்.

எழுபது பேர் அவ்வாறு உயிர் இழந்த நிலையில் ஒரு சிறிய இடைவெளி கிடைக்கிறது. அதனூடாக உள்ளே செல்லும் ஒருவன் - ஒட்டகத்தின் ஒரு காலை வெட்டி விட - ஒட்டகம் வீழ்கிறது.

ஒரு விநாடியில் யுத்தம் நின்று போய்விடுகிறது.

எல்லோரும் திடுக்கிட்டுப் போய் ஓடி வருகின்றனர் - ஒட்டகத்தை நோக்கி. முதலில் ஓடி வந்தவர் - அலி. அன்னை ஆயிஷா காயமுற்றாரோ என்ற பதைபதைப்புடன். அலியைப் பார்த்ததும் அவர் மீது தனக்கு தனிப்பட்ட கோபம் எதுவுமில்லை என்கிறார். வேறு ஒரு ஒட்டகம் வரவழைக்கப்படுகிறது. பாஷ்ராவில் தன் ஆதரவாளர் ஒருவர் வீட்டிற்குச் சென்று ஓய்வடுத்தபின் தன் சகோதரனுடனும், கண்ணியமிக்க நாற்பது பெணகளுடனும் ஹிஸஸ் நோக்கி புறப்படுகிறார். அலி அவர்கள் பின்னால் சிறிது தூரம் பயணம் செய்கிறார்.

ஆம் - கலிஃபா - மாமன்னர் - அராபிய தீபகற்பம், சிரியா, எகிப்து, இராக் என்ற நாடுகள் அனைத்தும் அன்று அவர் கட்டுப்பாட்டில்! ஒரு பேரரசர். ஆனால், அவர் - அன்னை ஆயிஷாவின் பயணக் கூட்டத்தாருடன் பின்னால் நடந்து செல்கிறார் - சற்று தூரம் வரை.

பின்னர் தன் மகனை அனுப்பி வைக்கிறார் - இறுதி வரையிலும் பயணம் செய்து பத்திரமாக பயணத்தை முடித்து விட்டு வருமாறு அனுப்பி வைக்கிறார்.

இந்த யுத்தம் தான் வரலாற்றில் குறிக்கப்படுகிறது - The war of camel என்று.

இத்தகைய ஆளுமை மிக்க பெண்மணி - பாலியியல் துன்புறுத்தலுக்கு ஆளாகியிருந்தால் - அந்த மனதில் - ஒரு துளி கூட வீரமோ தைரியமோ இருந்திருக்குமா? சுத்தமாக அற்றுப் போயிருக்கும். அஞ்சி அஞ்சி நடப்பர். ஆளுமையும், வீரமும் கண்ணியத்துடனும் தன்மானத்துடனும் வளர்க்கப்பட்ட விதத்தில் தான் வருமே அன்றி, கொடுமைக்கு ஆளான சிதைந்த உள்ளத்திலிருந்து அல்ல.

மேலும் ஆயிஷா வாழ்ந்த கால கட்டத்தில் அவர் தாம் மிகுந்த அறிவு பெற்றவர். ஒரு முறை அமீர் மூவய்யா தன் அவையினரைப் பார்த்துக் கேட்டார் - நம் தேசத்தில் மிகுந்த அறிவுடையவர் யாரென்று. அவருக்குக் கிடைத்த பதில் - அன்னை ஆயிஷா. அதன் பின் அமீர் ஆலோசனை ஒன்று கேட்டு கடிதம் எழுதுகிறார் - தன் மகனை தனக்குப் பின்னர் மன்னராக்க வேண்டும் என்று. ஆயிஷா மறுத்து அறிவுரை சொல்கிறார்.

இது தான் ஆயிஷா

இது தான் இஸ்லாம் பெண்களுக்குக் கொடுத்த உரிமை.

மரியாதை.

இன்று இப்படி இல்லையே என்று சொல்பவர்களுக்கு - இடைப்பட்ட காலத்தில் இஸ்லாமிய உலகம் அடிமைப்பட்டு சிதறிப் போயிற்று. வசதிகளும் வாய்ப்புகளும் குறைந்து போயின. கிடைத்த வாய்ப்புகளைப் பகிர்ந்து கொள்ளும் பொழுது - அதில் முதலிடம் இயல்பாகவே ஆண்களுக்கு என்றாகியது.

ஆனால், இன்று செல்வமும் செழிப்பும் திரும்ப வந்தடைந்த பொழுது - மீண்டும் கதவுகள் திறக்கின்றன. தன்னை ஏமாற்றிய கணவனைக் கோர்ட் படியேற்றி, தண்டனை வாங்கிக் கொடுத்த கதையை நானே என் வலைப்பூவில் எழுதியிருக்கிறேன்.

இஸ்லாமியப் பெணகள் கூட்டம் கூட்டமாக சென்று கல்வி கற்கின்றனர். ஆதாரம் வேண்டுமென்றால் அமீரகத்திற்கு வாருங்கள். பல ஆண்களும் இயங்கும் அரசில் பெண் மந்திரி இருக்கிறார். உலக வர்த்தக அமைப்பின் கூட்டத்திற்கு தன் நாட்டின் சார்பாக சென்று பேசியிருக்கிறார். அனைவரும் அவர் பேசியதை ஆவலுடனும் உற்சாகத்துடனும் கேட்டிருக்கின்றனர். உள்ளூர் அமைப்புகளுக்கு தேர்தல் நடந்திருக்கிறது.

'என்று பெண்கள் நள்ளிரவில் கூட தனி மனுஷியாக சுதந்திரமாக உலாவ முடிகிறது அன்று தான் எந்த ஒரு நாடும் சுதந்திரம் பெற்றதாகக் கருதுவேன்.'என்றார் காந்தி.

இன்று அந்த சுதந்திரத்தைப் பெண்களுக்கு வழங்கி இருப்பது அராபியத் தீபகற்பம் தான். ஓமன் நாட்டிற்கு சென்று வந்த சுஜாதா எழுதுகிறார் - கற்றதும் பெற்றதுமில் - ஓமன் நாட்டு மன்னர் போல் ஒருவர் கிடைத்து விட்டால் - பின்னர் யாருக்கு வேண்டும் ஜனநாயகம்? என்று.

இது ஓமன் நாட்டிற்கு மட்டுமல்ல - அமீரகம் உட்பட பல நாடுகளுக்கும் பொருந்தும்.

இன்று இஸ்லாமிய மக்கள் தொகையில் சரிபாதி பெண்கள் என்பதை எல்லோரும் உணர்ந்திருக்கிறார்கள். அவர்களுக்கு கல்வி, வேலை வாய்ப்பு இவற்றில் சரி சம பங்கு கொடுக்க வேண்டும் என்பதில் எல்லோருக்கும் ஆர்வம் வந்திருக்கிறது. அரபு நாட்டு அரசுகளுக்கு மட்டுமல்ல. இந்தியாவில் வாழும் ஏழை முஸ்லிமுக்குக் கூட. ஒரு கட்டத்தில், வசதி வாய்ப்புகள் இல்லை - யாராவது ஒருவர் படிப்பதை விட்டுக் கொடுத்தால் மட்டுமே மற்றவருக்கு வாய்ப்பு என்று வந்து விடுகிறது. அந்த சமயத்தில் - அது இயற்கையாக ஆண்களுக்குப் போய்விடுகிறது. சில சமயங்களில் - அது இரண்டு ஆண்களுக்கிடையேயான போட்டியாக கூட மாறி விடுகிறது. ஒரு சகோதரனைப் படிக்க வைக்க குடும்பத்திலுள்ள பிற அங்கத்தினர் அனைவரும் உழைத்தால் தான் ஆயிற்று என்ற நிலைமையில் பெண்களை எங்கே படிக்க வைப்பது?

இன்று நிலைமை மாறி இருக்கிறது.

மற்றபடி - பெணகளுக்கெதிராக வைக்கப் படும் மற்றொரு குற்றச் சாட்டு - உடை.

Dress Appropriate.

இது தான் தாரக மந்திரம். இயல்பாய் உணர, பிற ஆடவரின் பார்வைகளைத் தவிர்க்க, please do dress appropriately. அவ்வளவு தான். இன்று சேலையையே - மிக மிக கண்ணியமாக உடுத்த முடியும். அதையே மிக மிக ஆபாசமாக உடுத்த முடியும். அப்படியானால் எது தகுந்த முறை.? இது ஒரு பெரிய தர்க்கமாகலாம்.

அதனால் தான் இதற்கு எளிய ஒரு விடை. உடல் முழுவதையும் மறைக்கும் ஒரு அங்கி. தலைக் கவசமெல்லாம் அவரவர் சேர்த்துக் கொண்டது. தலையை மறைத்துக்கொள்ளுதல் என்பதை முகத்தை என்று எடுத்துக் கொண்டார்கள் போலும். மேலும் இந்த பர்தா என்பது பொது இடங்களிலும், பிற ஆண்கள் புழங்கும் இடங்களிலும் மட்டும் தான் அணிய வேண்டியதே தவிர - பெண்கள் மட்டுமே இருக்கும் இடத்திலோ, அல்லது குடும்ப அங்கத்தினர்கள் மட்டும் இருக்கும் இடத்திலோ அணியத் தேவையில்லை.

இப்பொழுது சொல்லுங்கள் - ஒரு பெண் ஒரு நாளில் எத்தனை மணி நேரம் - இந்த உடையை அணிய வேண்டுமென்று? அப்படி இருந்தும் இன்று இது முஸ்லிம் பெண்களிடையே a preference of individuals என்று தான் சொல்ல வேண்டும். பல முஸ்லிம் பெண்கள் முகமூடி அணிவதைப் போன்று அணிவதை விட்டு விட்டு நாசுக்காக ஆனால் அதே சமயம் கண்ணியமாக உடை உடுத்துகின்றனர். மீண்டும் பொருளாதாராம் விளையாடுகிறது. வகைவகையான உடைகள் இல்லாத பொழுது - இந்த பர்தா உடை அந்த ஏழ்மையை மூடி மறைக்கிறது. ஒரு சமத்துவத்தைத் தருகிறது.

பர்தா அணிவதால் பெண்கள் அடிமைப்பட்டு விட்டார்கள் என்பதெல்லாம் சுத்தப் பொய். பொருளாதார வசதியற்ற நிலைமை தான் சில குறைகளுக்குக் காரணமாக விளங்குகிறது.

அவற்றைக் களையும் பொழுது - ஐந்து வருடங்களுக்கு ஒருமுறை சட்டம் போட்டுத் தான் உரிமை முழக்கம் செய்யவேண்டும் என்ற நிலை அல்லாமல், பிறப்பினாலேயே தங்கள் உரிமைகளை இந்த பெண்கள் அடைவார்கள்.

அது வரையிலும், ஆடு நனைகிறேதே என்று அழும் ஓநாய்களாக யாரும் மாறாமல் இருந்தால் சரிதான்.





Friday, December 16, 2005

Holocaust என்ற மாயை - அமெரிக்காவின் பொய்யுரை.

Holocaust என்ற மாயை - அமெரிக்காவின் பொய்யுரை.

வெற்றி பெற்றவர்களே வரலாறு எழுதுவார்கள் என்பது வரலாற்று நியதி. அந்த வகையில் இன்று உலகம் முழுவதிற்குமான வரலாறை அமெரிக்கா தனக்கு விருப்பம் போல எழுதிக் கொண்டிருக்கிறது.

தப்பும் தவறுமாக.

அது சரி - இந்த ஹோலோகாஸ்ட் என்பது என்ன?

சாரி சாரியான யூதர்களை வாயுக் குழிக்குள் தள்ளி, விஷவாயு பீய்ச்சிக் கொன்றது ஹிட்லரின் நாஜி படை என்ற நிகழ்வைத் தான் ஹோலோகாஸ்ட் என்று வரலாறு குறிப்பிடுகிறது.

உலகையே உலுக்கிய குற்றச்சாட்டு அது.

ஜெர்மனி தலை குனிந்து நின்ற தருணம்.

தோற்றுப் போன நாடு.

அவமானங்களையெல்லாம் தாங்கித் தான் ஆக வேண்டும். குற்றச் சாட்டுகள் பதிவு செய்யப்பட்டு நாஜிக்கள் வேட்டையாடப்பட்டனர். உலகின் மிகப் பெரிய கொடுங்கோலனாக ஹிட்லர் சித்தரிக்கப்பட, அமெரிக்க அல்லது ரஷ்யர்களின் கையில் சிக்கி, அவமானப்பட விரும்பாத ஹிட்லர் தற்கொலை செய்து கொண்டார்.

யூதர்களுக்கு மிகப் பெரிய ஆதரவு திரண்டது. மக்கள் அனைவரும் பரிவுடன் பார்த்தனர். உலகம் முழுக்க நாடற்று அநாதவராக நிற்பதினால் தானே இத்தகைய துயரம் - அதனால், அவர்களுக்கென்று ஒரு நாடு உண்டாக்க வேண்டும் என்று உரத்து எழுந்தன குரல்கள். அப்பாவி பாலஸ்தீனியர்களின் நாடு நிலமெல்லாம் பிடுங்கப்பட்டு, யூதர்களுக்கு நாடு உண்டாக்கப்பட்டது.

வல்லான் வகுத்த வாழ்க்கை என்ற மொழிக்கேற்ப, வெற்றியின் உச்சத்தில் மமதையில் நின்ற அமெரிக்கா, மத்தியக் கிழக்கில் தனக்கென ஏவல் செய்ய ஒரு நாடு வேண்டும் என்ற நோக்கோடு, பாலஸ்தீனியர்களைப் புறந்தள்ளி - ஒரு இனத்தை அடிமைப்படுத்தி, மற்றதோர் இனத்திற்கு விடுதலை பெற்ற நாட்டைக் கொடுத்து, இன்றைய மத்திய கிழக்குப் பிரச்சினையை ஆரம்பித்து வைத்தது.

இந்த உலகம் நாசம் அடையும் என்பதை தெளிவாக உணர்ந்திருந்தும், அமெரிக்கா அதைப் பொருட்படுத்தாமல், பாலஸ்தீனியர்களுக்கு துரோகமிழைத்தது.

அதற்கான நியாயம் தான் இந்த ஹோலோகாஸ்ட்.

யாருமே இந்த அநியாயத்தைக் கேள்வி கேட்கவில்லையா? கேட்டிருக்கிறார்கள்.

இதற்கு முன்பு வரை ஹோலோகாஸ்ட் என்பதைப் பற்றி யாரும் எதுவும் கேட்கக்கூடாது என்ற கோட்பாடைத் தான் அனைவரும் கடைபிடித்தனர். கேள்வி கேட்பவர்கள் நாஜிக்கள் என்று முத்திரை குத்தப்படுவார்கள். இந்த படுகொலை என்பது விசாராணக்கு அப்பாற்பட்டது - இதுவரையிலும் விசாரணைக்கு அப்பாற்பட்டதாக இருந்தவை மூன்று விஷயங்கள் தான் - உலகம் முழுவதிற்கும்.

அவை இறைவன், மதம், நபிமார்கள்.

இப்பொழுது அவற்றுடன் ஹோலோகாஸ்ட் - விசாரணைக்கும் கேள்விகளுக்கும் அப்பாற்பட்டதாக. கேள்வி கேட்கும் கொஞ்சநஞ்ச சரித்திர ஆய்வாளர்களும் தங்களை "மறுப்பாளர்கள்" என்று சொல்லிக் கொள்வதில்லை. மாறாக "மீள் பார்வையாளர்கள்" என்று தான் தங்களைச் சொல்லிக் கொள்கிறார்கள். ஏனென்றால் பல நாடுகளிலும் மறுப்பாளார்கள் என்று சொன்னால் தண்டனை உண்டு.

ஹோலோகாஸ்ட் நடக்கவில்லை என்பதில் இன்றும் பல குழுக்கள் உறுதியாக இருக்கின்றன - உலகம் முழுவதிலும்.

அமெரிக்கா, ஐரோப்பா, மற்றும் சில வலது சாரி குழுக்கள் இவற்றை முழுமையாக நம்புகின்றன. யூத இனப் படுகொலை ஒரு பித்தலாட்டம்; வரலாற்றுப் புரட்டு என்று.

மத்திய கிழக்கில் சிரியா மற்றும் ஈரானைச் சேர்ந்த பல தனி நபர்களும், பாலஸ்தீனத்தில் ஹமாஸ் குழுக்களும் இந்த இனப்படுகொலை போலியானது என்று ஆதாரங்களுடன் எழுதியுள்ளனர்.

2000 ஆவது ஆண்டில், ஹமாஸ் வெளியிட்ட ஒரு செய்தி அறிக்கையில் இந்த போலி படுகொலையைக் கண்டித்து பல விவாதங்களை முன் வைத்தது.

'விஷவாயு அறைகள் கிடையாது. சில அறைகள், பிணத்தை பதப்படுத்துவதற்காக உண்டாக்கப்பட்டன. Zyklon B, என்ற வாயுவை பயன்படுத்தினர். பிணங்களை அரிக்கும் கரையான்களை ஒழிப்பதற்காக வாயுக்களை பயன்படுத்தினர். அந்த அறைகளில் மூன்று அல்லது நான்கு பேருக்கு மேல் நிற்க முடியாது. அந்த அறையினுள் - எப்படி 60 லட்சம் மனிதர்களை அடைத்து, விஷவாயு செலுத்திக் கொல்ல முடியும்.?'

அந்த அறைகள் யூதர்களை கொல்வதற்காகப் பயன்படுத்தப் படவில்லை. நாஜிக்கள் எரியூட்டும் அடுப்புகளைப் பயன்படுத்தவில்லை. இந்த அடுப்புகள் எல்லாமே மக்கள் புழக்கம் உள்ள இடங்கள்,தொழிலாளர் முகாம்கள் போன்றவற்றில் ஒரு அங்கமாகவே இருக்கும். ஆனால், அவ்வாறான அடுப்புகளுக்குப் பதிலாக, பிணங்களை வாயு அறைகளில் பதப்படுத்தி புதைக்கும் பழக்கத்தைக் கொண்டிருந்தனர். அதற்காக வாயு அறைகளை உபயோகப்படுத்தினர். இதைத்தான் வாயு அறை என்று பெயரிட்டு, தங்களுக்குச் சாதகமாக ஆக்கிக் கொண்டனர் நேச நாட்டு படைகள்.

மேலும், 60 லட்சம் யூதர்கள்?

அந்த அளவிற்கு மக்கள் தொகை ஜெர்மனியில் இருந்தார்களா யுத்தத்தின் போது? ஹிட்லரின் அடக்கு முறைகளுக்குப் பயந்து இங்கிலாந்து, ரஷ்யா, அமெரிக்கா, பாலஸ்தீனம் போன்ற இடங்களுக்கு ஓடிப்போன மக்கள் தொகையையும் சேர்த்துக் கொண்டனர்.

இரண்டாம் உலகப் போர் இறுதியில் இந்த அழித்தொழித்தல் வேலைக்கு ஆதாரமாகக் காட்டப்பட்ட பல புகைப்படங்கள் - நேச நாடுகள் கூட்டாகத் தயாரித்தவை - யுத்தத்தில் நாஜிக்கள் மீது வெறுப்பு உண்டாவதற்கும், தங்கள் யுத்த முயற்சியில், மக்களைத் தொடர்ந்து தங்களுக்கு ஆதரவு தருவதற்காக பரிதாபத்தைத் தோற்றுவிப்பதற்காகவும், இவர்கள் இந்தப் படத்தை உண்டாக்கினர்.

நாஜிக்களுக்கு எதிரான பிரச்சாரத்திற்காக.

நாஜிக்களைப் பலவீனப்படுத்த.

யுத்தத்தில் நாஜிக்கள் மீது வெறுப்பு உண்டாக்குவதற்காகவும், தங்கள் யுத்த முயற்சியில், மக்களைத் தொடர்ந்து தங்களுக்கு ஆதரவு தருவதற்காக பரிதாபத்தைத் தோற்றுவிப்பதற்காகவும், இவர்கள் இந்தப் படத்தை தயாரித்தனர்.
(The allied forces fabricated the pictures in their propaganda against the Nazis and to win the public sympathy for their continuing the war.)

அவற்றில் ஒரு புகைப்படம் நேச நாட்டுப் படைகள் குண்டு வீசி தாக்கியதில் இறந்து போன ஜெர்மானியர்களின் புகைப்படம். டிரெஸ்டன் என்ற நகரின் மீது வீசப்பட்ட குண்டில் நிகழ்ந்த மரணம் அது.

மேலும் இந்த புகைப்படங்களில் காணப்படும் பலரும் பசியால் வாடியும், காய்ச்சலால் பீடிக்கப்பட்டவர்களாகவும் தான் காணப்பட்டனரே தவிர, வாயுத் தாக்கத்தால் இறந்து விட்டவர்களாக அறிய முடிவதில்லை என்று'' மீள் பார்வையாளர்கள்'' கருதுகிறார்கள்.

யுத்த நோக்கம் முடிந்ததும், அவர்கள் செய்த போலி பிரச்சாரங்களை நியாயப் படுத்தவும், ஓட்டாமான் பேரரசை சிதைத்து உண்டாக்கப்பட்ட, அரபு நாடுகளை கண்காணிக்கவும் இவர்கள் உள்நோக்கத்துடன் இந்த ஹோலோகாஸ்ட் என்ற பித்தலாட்டத்தைத்ட் தொடர்ந்து அரங்கேறச் செய்தனர். யூத நாடு ஒன்றை ஏற்படுத்த வேண்டுமென்ற மெனக்கெடுதலினால் திட்டமிட்டு செய்யப்பட்ட போலி பிரச்சாரம்.

அமெரிக்க, பிரிட்டிஷ், யூத சதிகளே இவை.

பலியாடாக யூதர்களையும், சாத்தானாக ஜெர்மனியையும் சித்தரிக்கும் முயற்சியில் நடத்தப்பட்ட நாடகம். மேலும், தான் கையகப்படுத்திய நாடுகளை அச்சுறுத்தி தன் மேலாண்மையை நிலைநாட்டுவதற்காக சோவியத் ரஷ்யாவும் இந்தப் போலி பிரச்சாரத்தில் பங்கு கொண்டது.

யூதப் படுகொலைகளை ஆதரித்து அலை அலையாக பொய்ப்பிரச்சாரங்கள் தொடர்ந்து முன் வைக்கப்பட்ட பொழுது, அதை வரலாற்றியலாளர்களால், துணிவுடன் முனைந்து எதிர்க்க முடியவில்லை - பயத்தினாலும், வசதியான வாழ்க்கைகளைத் துறக்கும் சக்தியற்றதினாலும்.

ஆனால், இதே யூதர்கள் ரஷ்ய அரசுடன் இனைந்து கொன்று குவித்த அரசியல் எதிர்ப்பாளர்களையும், கிறித்துவர்களையும் கணக்கிலெடுத்தால், யூதப் படுகொலைகள் ஒன்றுமேயில்லை என்றாகிவிடும் என்கிறார்கள் வரலாற்றை மறு ஆய்வு செய்பவர்கள்.

இந்த யூதர்களுக்கு எதிராக ஜெர்மனியில் அரசு இயந்திரங்கள் மூலமாக நிறுவனமயமாக்கப்பட்டு குற்றங்கள் நடத்தப்படவில்லை. அவர்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளெல்லாம் தனிப்பட்ட நாஜி அதிகாரிகளால் தான் நடத்தப்பட்டது. நாஜி தலைமை இதில் சம்பந்தப்படவேயில்லை என்கின்றனர் ஆய்வாளர்கள்.

இந்த படுகொலை மறுப்பாளர்களின் ஆரம்பகால நூலாசிரியர் பிரான்சிஸ் பார்க்கர் யாக்கி என்ற அமெரிக்கர் தான். 1962ல் அவர் எழுதிய இம்பீரியம் என்ற நூல் தான் முதல் பதிவாக வந்த மறுப்பு. அதற்கு முன் இருந்த மறுப்பாளர்கள் எல்லாமே தங்களைக் காத்துக் கொள்வதற்காக நாஜிக்கள் நடத்திய பிரச்சாரங்கள் மட்டுமே.

யாக்கியுடன் இணைந்து கொண்டவர் ஹேரி எல்மர் பார்னஸ். அவர் குறிப்பிடுவது - ஜெர்மனிக்கும், ஜப்பானியர்களுக்கும் எதிராக யுத்தத்தில் பங்கு பெற்ற தன் நிலையை நியாயப்படுத்த அமெரிக்கா கிளப்பிய போலி கோஷம் தான் - ஹோலோகாஸ்ட்.

1964ல் பிரெஞ்சு வரலாற்றியலாளர் ஆன, பால் ரெஸ்ஸினியர் - தி டிராமா ஆஃப் தெ யூரோப்பியன் ஜ்யூஸ் என்ற நூலை எழுதி வெளியிட்டார். இவரே படுகொலையிலிருந்து தப்பித்தவர் தான். பின்னர் இவர் கைது செய்யப்பட்டார்.

நவீன மீள்பார்வையாளர்கள் இவரது புத்தகத்தை ஒரு ஆதாரமாக கொள்கின்றனர். சிறப்பான ஆராய்ச்சி என்று சொல்கின்றனர். 1943 ஆம் ஆண்டு ஜெர்மனியில் கைது செய்யப்பட்டு, பின் போலந்து நாட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டார் - அப்பொழுது தான் யூதர்களுக்கு நிகழ்த்தப்பட்ட கொடுமைகள் உச்சத்தில் இருந்தன.

இவ்வாறு சிறுக சிறுக ஆரம்பித்த ஹோலோகாஸ்ட் எதிர்ப்பாளர்களின் இயக்கம் 70களில் வலுக்க ஆரம்பித்தது. 1976ஆம் வருடத்தில் ஆர்தர் பஸ் என்பவர் எழுதிய தி ஹோக்ஸ் ஆஃப் தி ட்வண்டியத் செஞ்சுரி : தி கேஸ் அகய்ன்ஸ்ட் தி ப்ரிஸ்யும்ட் எக்ஸ்டெர்மினேஷன் ஆஃப் யூரோப்பியன் ஜ்யூரி மற்றும் 1977ஆம் ஆண்டு, டேவிட் இர்விங்க் எழுதிய ஹிட்லர்ஸ் வார் போன்ற நூல்களின் வரவு இந்த இயக்கத்தை வலுப்படுத்தியது.

1979 ஆம் ஆண்டு, வரலாற்று மறு ஆய்வு மையம் (Institute of Historical Review - IHR) தொடங்கப்பட்டது வில்லிஸ் கார்ட்டோ என்பவரால். இந்த மையத்தின் நோக்கமே ஹோலோகாஸ்ட் என்ற புரளியை வெளிப்படையாக எதிர்ப்பது. இந்த அமைப்பினர் தான் பர்னஸ் எழுதிய புத்தகத்தை மீண்டும் வெளிக் கொண்டு வந்ததனர்.

இந்த அமைப்பினர் கூறுவதாவது - மிகப் பெரிய தொகையில் யூதர்கள் தொழிலாளர் முகாமிற்கு அனுப்பப் பட்டதில் சந்தேகமேயில்லை. இவர்களில் பலர் இயற்கையான மரணமோ அல்லது கொலையோ செய்யப்பட்டனர். மற்றும் பலர் யுத்தத்தில் இறந்தனர். ஆனால், ஹோலோகாஸ்ட் என்ற விஷவாயு அறைகளில் 60 லட்சம் யூதர்கள் கொல்லப்பட்டனர் என்பது ஒரு பித்தலாட்டம். இதை உலகில் உள்ள அனைத்து கிறித்துவர்களும், நேர்மையும், உண்மையும் கொண்ட தகவலறிந்த மனிதர்கள் அனைவரும் இதை உணர வேண்டும்.

ஜனநாயகத்தின் மீது பெருமதிப்பு வைத்திருக்கும் பல நாடுகளில் இந்த போலி பிரச்சாரத்தை எதிர்ப்பது குற்றமாகும். ஆஸ்திரியா, பெல்ஜியம்,செக் குடியரசு, பிரான்ஸ், ஜெர்மனி, இஸ்ரேல், லித்துவேனியா, போலண்ட், ருமேனியா, ஸ்லோவாக்கியா, சுசிட்சர்லாண்ட் ஆகிய நாடுகளில் இந்த வரலாற்றுப் புரட்டைப் பேசினால் அபராதம் விதிக்கப்பட்டு, கைது செய்யப்பட்டு, தண்டிக்கப்படுவர்.

வாழ்க ஜனநாயகம்.

ஆய்வாளர்கள் அளவில் இயங்கிக் கொண்டிருந்த இந்த மறுபார்வையாளர்களின் விமர்சனங்கள் எப்படி உங்களுக்கும், எனக்கும் அறிமுகம் ஆயிற்று என்று கேட்கிறீர்களா?

போலிகளை எதிர்த்து போர்க்குரல் எழுப்பிய மஹ்மூத் அஹ்மத் இனேஜாத் என்பவரால்.

ஈரானிய அதிபரால்.

நன்றி இனேஜாத்.

இல்லையென்றால் இந்த வரலாற்றுப் புரட்டை நாமும் நம்பிக் கொண்டிருப்போம் இன்றும், இனியும் வரும் காலத்திலும்.

கர்மா

தன் நிழலை
ஒட்டி வைத்தான்
தான் உண்டாக்கியதன் மேல்.

தன் தவற்றிற்கு
தன் நிழல்
தண்டனை அடைவது
அவனுக்குத் தெரியவில்லை.

இறந்த காலத்தின்
தவறுகள் படிந்த
நிகழ்காலத்தை
வாழ்வது
நிஜம்மான அவனின்
நிழல் மட்டுமே

செத்தவன்
கர்மம் தொலைக்க
சமயம் வாய்க்குமுன்னே
வந்திறங்கும் தண்டனை
காலத்தின் கைப்பிடியில்
குழந்தையாக அவன்

திடீர் தாக்குதல்
வலியில் திகைத்து
வலி வந்த
வகையைத் தேடுவானா?
வலித்த வேதனையை
அழுது தீர்ப்பானா?

Tuesday, December 13, 2005

முழுமையடைந்த வெறுமை....

ஒரு மாலைப் பொழுதில்
மெலிந்த நிழலை
வீழ்ந்த இலைகளுக்கிடையே
மரஉச்சியிலிருந்து
தூக்கியெறிந்தது
இலையுதிரும் காலம்

துக்கம் பாவிக்கும் நிழல்
துயருற்று கிடந்ததாங்கே
விதியை நொந்து

அப்பொழுது தான்
அவள் உள்நுழைந்தாள்
பரவசமூட்டும் புன்னகையை
எங்கெங்கும் படரவிட்டு

அடிவானம் தொட்டு உரசிய
மின்னல்களில்
அப்பழுக்கற்ற ஓவியமாய்

முதல் மழையின் மண்வாசனையை
உயிர்க்கொடியின்
ஒவ்வொரு திசுவிற்கும்
கறந்த பாலின் மணத்துடன்
விளம்பிக் கொண்டே
மனதினுள் பதிந்தாள்

படங்கள் நிரந்தரமாய்
சுவரில் தொங்குகிறது
ஒரு ஒழுங்கற்ற கோணத்தில்
என்னவோ மனம் மட்டும்
தேடுகிறது
அந்த மண்வாசனையை

மெல்ல மெல்ல தேய்ந்து
விலகிப் போகும்
மண்வாசனையை
மீண்டும் உயிர்ப்பிக்க
காலத்தால் மட்டுமே முடியும்
அதன் விருப்பம் போல

வீழ்ந்த நிழலின் பெருமூச்சு
விலகிக் கொள்கிறது.


(இந்தக் கவிதையை ஆங்கிலத்தில் வாசிக்க - http://sharepoetry.com/poem/show/4947

ஆங்கிலத்திலும் எழுதியது நானே. தமிழில் - வரிக்கு வரியான மொழி பெயர்ப்பு அல்ல.)

பின் நவீனத்துவம்

பின்நவீனத்துவம்...

வேற்று முகம்
பொருத்தப்படும்
பழைய முகத்திலென
அறிவிப்புடன் கடை போட்டான்
நவீன அறிவுஜீவி.

அலைமோதியது
அங்குமிங்கும் கூட்டம் -
புதுமுகம் தரித்து
முற்போக்கு வேஷம் போட்டாட.

புதுமுகம் பொருத்தி
வந்த மனுஷிகளெல்லாம் நடித்தனர் -
பலருடன்
பாதுகாப்பாய்ப் படுத்தல்
தங்களை தளைகளிலிருந்து
விடுவிப்பதாய்.

ஆண்களிடமிருந்து விடுபட
ஆண்களுடனே படுத்தெழுங்களென்ற
பின் நவீனத்துவம்
நாகரீகமாய்ப்பட்டது சிலருக்கு.

எங்கெங்கும்
அவர்களைப் பற்றியே
பேச்சாக இருந்தது.
புதிய புதிய மனுஷிகளால்
நிரம்பி வழிந்தது
நவீனத்துவ கடை.

புதுத்தொழிலாகிய
கட்டுடைத்தலின் பேரால்
கடந்தகால முகங்களை வீசி
பாவங்களைக் கழுவத் தொடங்கினர்
நடுவீதியில்.

ஒழுங்கமைவற்ற
கட்டுடைத்தல்களில்
விழுந்து போன
பழைய முகங்களைக்
குப்பைத் தொட்டியில்
போடச் சொன்னனர்
தெருவில் வாழும் மக்கள்
கொஞ்சம் அதட்டியே.

அடக்கப்படுவதாய்
கிளர்ந்தெழுந்த ஒப்பாரியில்
தொடர்ந்து கிழிகின்றது
ஒப்பனை முகங்கள்.

என்றாலும் அவர்கள்
என்னவோ பரிகசிக்கிறார்கள்
நேர்த்தியாக அலங்கரிக்கப்பட்டு
திரைச்சீலைகள் போட்டுப்
பாதுகாக்கப்பட்ட
படுக்கை அறைகளைப் பார்த்து -
பலருடன் பகிரப்படவில்லையென்று.

அறிவுஜீவி மட்டும்
யோசித்துக் கொண்டிருக்கிறான்
இன்னொரு கடை
திறக்கலாமாவென்று.

Friday, November 11, 2005

சிறுவட்டம் தாண்டி

குண்டுச்சட்டியில்
குதிரை ஓட்டிக் களைத்து வீழ்ந்த
நண்பர்கள்
விழிகளை வீசித் தேடினர்
சக குண்டு சட்டிகளை

குண்டுச்சட்டி சிறுவட்டம் வழி
வான்துண்டொன்று எட்டிப்பார்த்தது
மல்லாந்து கிடந்த நண்பர்களை

விண்வெளியின் விரிவே
ஒரு துண்டு வட்டமென்ற புரிதலில்
வாழ்வின் இன்பங்களைத் தேடி
வட்டமடி தொழிலில்
மீண்டும்
குதிரைகள் மீதேறி வலம்

முகமறியா ராசகுமாரன் வருகை தவத்தில்
துதிபாடலுடன் ஒருவர் பின் ஒருவராக
குண்டுச்சட்டியின் விரிந்த வயிற்றில்
பழகிய வட்டப்பாதையின்
வரிசைக் கிரம சுற்றுதலில்
நண்பர்கள்

குண்டுச் சட்டி தொப்பையடியில்
குருதிப் பிதுக்கி வெளியேற்றும்
இந்திரியநாற்ற முகர்வில் முகஞ்சுளித்து
வலம் வந்த நண்பனுக்கு மட்டும்
வானம் தன் இருப்பை அறிவித்தது
சிறுவட்டமருகே வந்த பறவையொன்றினால்
குத்தித் தூக்கி வானில் மிதக்க வைத்து

வானின் விரிவுகளில்
பறவை சவாரி பிரும்மாண்டத்தில்
மீண்டுமொரு வட்டப்பாதை வாழ்க்கை
விரும்பா நண்பனோ
பறவையிடம் கூக்குரலிட்டான் -
சிறகுகள் தா
என்னைத் தூக்கிச் சுமக்காதே

தோளில் துளைத்த அலகில்
வலிக்க வலிக்க
பிய்ந்து தொங்கும் சதைகள்
வடிந்து உறையும் குருதியோட்டம்
உயிர் பிய்க்கும் பிரசவம்
தோள் கிழித்து வந்ததொரு உறுப்பு

கண்மூடி வலி தாங்கிக் கிடந்த மனம்
உலுப்பி விட்டது
பற பற
இறக்கை வீசி வீசி
பற பற

விட்டுப் போன இடத்திலிருந்து பற
பிறந்ததன் பொருளறிந்து பற

பற பற
இறக்கை வீசி வீசி
பற பற

அடிவானம் தொட விரியும் இறக்கை
துருவங்கள் தொட நீளும் இறக்கை
பிரபஞ்ச வெடிப்பு தேடும் இறக்கை

வீசி வீசி
பற
வீசி வீசி
பற

புதிதாய் வந்த விடுதலை கொண்டு
பறந்து பறந்தே மரணம் வரை
பற

புவியீர்ப்பு விசைக்கு
உடல் பணியும் வரை
பற.

பறந்து திரியும் வாழ்வறியா
குண்டுசட்டி குதிரையோட்டிகள்
தலைவன் துதியோதி
அதே
வட்ட பாதையில்
அதே
வாழ்க்கையில்.

அறிந்திருக்கவில்லை
அந்த அவர்கள்
குண்டுசட்டியின் சிறுவட்டம் தாண்டி
விரிந்திருக்கும்
பிறிதொரு வாழ்தலின் உன்னதம்.

அவர்கள்

என்றும் போல்
என்றும் போல்
என்றும் போல்

மூடராய்.

Saturday, October 22, 2005

கணவன் !

மாலை சாயும் வேளையானால்

முகம் கழுவி

பவுடர் பூச வேண்டும்.

காடான கூந்தலை

பிடித்துக் கட்டி

ஒரு கொத்துபூக்களை

அணிய வேண்டும்.

புருவம் திருத்திய

நெற்றியில் குங்குமம்

துலங்க வேண்டும்.

பட்டாம்பூச்சியாக

வெட்டும் இமைகளின் அடியில்

மை தீட்ட வேண்டும்.

உதடுகளில் மட்டுமல்ல -

வெட்டிய கூர் நகங்களில் கூட

சாயம் தீட்ட வேண்டும்.

வியர்த்துப் போன அக்குளில்

கமகம நறுமண திவலைகள்

அடிக்க வேண்டும்.

எல்லாம் செய்து

மகாலட்சுமியாக போக வேண்டும்

படுக்கை அறைக்கு.

ஆங்கே காத்திருப்பான் -

வளையம் வளையமாக

ரசித்து விடும் புகைமண்டலத்தினுள்

நாற்றமெடுக்கும் வாயுடன் -

கணவன்.. .. .

Monday, October 17, 2005

தண்டனை....

தனியாக வந்த பொழுது
நீர் எமக்கு அனுசரணையாயிருந்தீர்
பசி தாகமென்ற தவிப்புகளை
அமைதி கொள்ளச் செய்தீர்
பின் வழிகாட்டியாய்
சிந்தனைகளுக்கு
வண்ணம் பூசும் ஓவியனாய்
பல்வேறு அவதாரமெடுத்தீர்
பல்வேறு தருணங்களில்.

மெல்ல மெல்ல கற்று தேர்ந்து
தனித்தியங்கும் தன்மையுற்றதும்
அறிந்து கொண்டோம் -
நீர் காட்டித்தந்த
வழித்தடங்கள் பலவும்
எங்கும் செல்லாதவையென்று.
நீர் சுற்றி வளைத்து
போட்டுத்தந்த பாதைகளனைத்திற்கும்
நேர்வழி கண்டுகொண்டோம் இன்று.

உன் பிரம்மாண்ட நிழலில்
இருண்மை அப்பிய மலர்த்துளிகளில்
இன்று சூரியம் வழிகிறது
வலிக்க வலிக்க சூல் கொள்கிறது
எம் கர்ப்ப மூளைகள்.
உம்மை கடும்விசாரணை செய்து
வீதியில் நிறுத்தி கேள்விகேட்க
எண்ணிய பொழுதிலே
நீர் விலகிக் கொண்டீர்
மிகைபீடங்களில் -
புன்னகைத்தமர்ந்து
கேள்விகளுக்கப்பாற்பட்ட ஓர் இறைத்தூதனாய்
எமக்கெட்டாத தூரத்தில்.

உம்மை
விசாரிப்பதோ
கேள்விகேட்பதோ
பண்பாடற்ற செயலியாய்
பதிவு செய்யப்படும்
வரலாற்றில்.

எம்மால் முடிந்த
எளிய தண்டனைவொன்றை செய்வோம்
உமக்கு
பீடங்களற்ற சிலையொன்றை வைப்போம்
மிக அதிகமாக மாசுபடும் வீதியொன்றில்.

Sunday, October 16, 2005

கதவுகள் திறக்கின்றன.......

முறிந்த சிறகு
தேவையற்று கிடக்கிறது
தெருவை வீட்டிற்கு சொல்லும்
திண்ணைகளொழிந்த வீதியில்.

பூட்டிய
கதவுகளின் தோரணை
தொடங்கியதன்று.

தன்னுள்
விரியக் காத்திருக்கும்
உள்வெளியை
இறுக்கிப் புழுக்குகிறது
சன்னல்.

புதிய மலர்வுகளின்
வாழ்துடிப்பை
ஏந்திவரும் காற்றை
வீதியில் நிறுத்துகிறது
குளிர்மி.

முன்னறிவிப்பில்லா
வருகைகள்
முற்றிலும் மறுக்கப்படும்.
தேவையான பதில்
கதவு சொல்லும்.
மேலதிக தகவலை
கதவிடுக்கு உள்வாங்கும்.

செய்திகள்
தொடர்புகள்
சித்திரங்கள்
நூலகங்கள்
எவற்றிற்கும்
கதவுகள் விரிவதில்லை
அவைகளுக்கென
தனித்தடங்களுண்டு
நிர்ணயிக்கப்பட்ட
கட்டணத்தில்.

ஒரு நாளின்
சொற்ப சமயம்
திறந்து மூடும்
பணிகள் நிமித்தம்
பள்ளி நிமித்தம்
சென்றுவர.

மற்றைய நேரத்தில்
விட்ட மூச்சையே
திரும்பப் பிடித்து
சுவாசித்துக் கிடக்கும்
இந்த
மௌன கதவு.

எப்பவும்
அடைந்தே கிடக்கும்
இந்த வீட்டுச் சிறை
சலித்து நகரும்
தெருப்பிச்சையின் அதிசயமாய்
கண்முன்னே விரிகிறது
பூட்டிக் கிடந்த கதவு.

வெளியேறுகிறான்
முறிந்து கிடந்த
சிறகு மாட்டி
காற்றில் மிதந்து செல்லும்
ஒருவன்.

Tuesday, September 27, 2005

இறப்பதினால் ஆய பயன்....

நண்பனே நாமிருவரும்
எப்பொழுதாவது
சந்தித்துக் கொண்டிருக்கிறோமா?

நமக்குள்
தீர்க்கவியலாத சிக்கல்கள்
ஏதுமுண்டா?

என்னை கொல்வதற்கு
உனக்கு
என்ன காரணங்கள் உண்டு?

உனக்கென நியாயங்களிருக்கலாம்.

உன் குழந்தைகள்
ஏதோ ஒரு வீதியுத்தத்தில்
என் நாட்டு குண்டுகளில்
வீழ்ந்திருக்கலாம்.

உன் மனைவியை
என் நாட்டின்
யாரோ ஒரு வீரன்
பாழ்பண்ணியிருக்கலாம்.

உன் அழகிய வீட்டின் சுவர்கள் மீது
கரி பூசியிருக்கலாம்
வெடித்துச் சிதறிய குண்டுகள்.

உன் இனிமையான தோழன்
ஒருவனின் கால்களை
என் நாட்டு டாங்கிகளேறி
சிதைத்திருக்கலாம்.

உன் எல்லாத் துயரங்களின்
அடையாளமாக என்னை
இருத்தி வைத்திருக்கிறாய்.

உன் கையிலுள்ள துப்பாக்கியில்
எத்தனை எதிர்பார்ப்புகள்
மரணிக்கப் போகின்றன தெரியுமா?

மகன் திரும்பப்பிரார்த்திக்கும்
ஒரு தாயின் பிரார்த்தனைகள்
தோல்வியடைந்துவிடும்

இரவில் குட்டிக் குட்டிக் கதைகள்
கேட்கக் காத்திருக்கும்
என் சிறு குழந்தைகள்
இனி ஒருபோதும்
தேவதைக் கதைகளை
கேட்கவே போவதில்லை.

இரவின் மௌனத்தில்
காதலின் மொழி பேசிய
என் மனைவியின் அன்பு
இனி உறைந்து போய்விடலாம்.

இதெல்லாம் எனது வருத்தமில்லை
நண்பனே.
என் பரிதாபத்தைப் படமெடுத்து
நான் சார்ந்த அனைத்தையும்
அவமானப்படுத்துகிறாயே
அதை மட்டும் நிறுத்திக் கொள்

சுட்டு விடு.
ஒரே குண்டில்
ஒரே துளைத்தலில்
நான் சாகும்படி சுட்டுவிடு.

நண்பனே
எந்தக் கணக்கானாலும்
என் மரணத்துடன்
நீ சமாதானமாகி விடு.
இல்லையெனில் என்ன பயனுனக்கு
நான் சாவதால்?

Thursday, September 22, 2005

என்னைத் தேடி

பல முகங்கள் தேடி
தன் முகம்
இழந்து விடுவேனோ
பயம் தான் விரட்டுகிறது

தன் முகம் தேடி
அவ்வப்போது அலைச்சல்

வைத்த இடத்தில்
கண்ட பழைய முகத்தில்
வைரத்தின் ஜொலிப்பு
கொஞ்சம் குறைந்ததாய்
அடிக்கடி ஒரு குடைச்சல்

சொந்த முகத்திற்கு
பட்டை தீட்ட
சில பழைய முகங்களும்
பல பக்க முகங்களும்
தேவைதான்

சொந்த முகம்
பட்டை தீட்டிய பின்னும்
நம் முகமாய் இருக்குமென்றால்

Monday, September 19, 2005

ஓர் இறைவனின் சோகம்

ஓர் இறைவனின் சோகம்.


இயற்கையேற்க
மறுக்கும் விளக்கத்தில்
சிக்கித் தவிக்கும்
பிறப்பு

இறையேற்க
மறுக்கும் மனிதர்கள்
மத்தியில் வாழ்ந்த
வாழ்க்கை

இரக்கமற்றவர்கள்
மறுத்த நீதியால்
சிதைந்த உடலுகுத்த
உதிரத்தால் மரணம்

வடிந்த ரத்தம் ஏந்தப்பட்டது
ஒரு அன்பான பெண்ணினுடைய
மற்றுமொரு
நம்பிக்கையாளனுடைய கோப்பைகளில்.

புலம் பெயர்ந்த
கோப்பைகள்
நிழலுலகின்
இருண்ட வீதிகளில்
தொலைந்தே போய்விட்டது
நம்பிக்கையாளர்களின்
மீண்டும்
ஒரு தேடலுக்காக.

குறியீடுகளில்
புதைந்து போன
வரலாற்று மோசடிகளில்
அனைத்தையுமிழந்துவிட்டு
நான் மட்டுமே மிஞ்சினேன்
இறைவனாக உயர்த்தப்பட்டு

ஒரே வித்தியாசம்.

ஒரே வித்தியாசம்


அவளை விட
உயர்ந்தவள் தானென்று
நிறுவுவதில்
அதீத கவனம் கொள்கிறாய்.

பூவும் பொட்டும் வைப்பதும்
தாலி கட்டுவதும் கட்டாததும்
அதிக வித்தியாசப்படுத்துவதில்லை.

பணிகள் நிமித்தம்
தேவைகள் நிமித்தம்
எல்லாவிடத்தும் போய்வருவதில்
என்ன பெரிய வித்தியாசமிருக்கப் போகிறது?

ஒன்றில் மட்டும்
உன்னிடம் அவள் தோற்றுப்போவாள் -
பகட்டாகவும் படோடபமாகவும்
மணச்சடங்கு இல்லங்களில்
உனக்குக் கிடைக்கும் வரவேற்பு
அவளுக்குக் கிடைக்கப் போவதில்லை தான்.

என்றாலும் உனக்குத் தெரியுமா -
நீ அறியாத
வித்தியாசமொன்று உண்டு என்பதை.

பூசணிக்காயையும் எலிகளையும் கொண்டு
சிந்தெரல்லாவிற்கு
தேர் கொடுத்த தேவதையாக
வருடத்திற்கொரு மாதம்
புலம் பெயர்ந்த உன் புருஷனை
உனக்குத் தருவது போல்
அவளுக்குத் தராத
அந்த இறைவன் தான்
அந்த வித்தியாசமென்று?

Sunday, September 18, 2005

மௌனம் துற.....

மௌனம் துற....

உன் மௌனம் காண்பதற்கு
விலைமதிப்பற்றது தான்
என்னருகே நீயிருக்கையிலேயென்று
என்றோ ஒரு நாள் உன்னிடம்
சொன்னேனென்பதற்காக
இன்று கண்டங்கள் இடைவெளியில்
மீண்டொருமுறை தொலைபேசியில்
மௌனம் காட்டும் உன் முயற்சியை
விலைமதிப்பற்றதென்று
சொல்ல இயலவில்லை அன்பே!

மின்னல் வேகத்தில்
கம்பிகளுக்கிடையே நகர்ந்திடும்
துடிப்புகளில்
விலை நிர்ணயிக்கப்படுகிறது
உன் மௌனத்திற்கு.

ஆதலால் அன்பானவளே
மௌனம் துற
கண்டங்கள் இணையட்டும்.

நிழல்கள்.

நிழல்கள்.
***

1.

உன் தாவணி
பிடித்து
நீ தவிர்க்க நினைத்த
வெய்யில்
உன் கைகளை
மாலையாக்குகிறது
என் நிழலுக்கு....
***

2.
மாலை நேர
இருட்டை விரட்ட
சன்னல் கதவுகளைத் திறந்தேன்.
வெளிச்சமாக உள்ளே
நுழைந்தது
மாடியில் பாடம் படிக்கும்
உன் நிழல்.....
***

3.
நிழல்கள் மெலிந்து போனது -
இலையுதிர் காலத்தில்
மொட்டை மரம்.
***

4.
மழை ஓய்ந்த நேரத்து
வெய்யிலில்
சூடாக என் தேகம்.

எனக்கும் சேர்த்து
நடுங்குகிறது
ஓடும் நீரில்
என் நிழல்....
***

5.
எப்போதும்
என்னை ஒட்டிக் கொண்டிருக்கும்
நிழலே
நீ எங்கே தூங்குவாய்?
என் படுக்கையின் கீழா?
***

6.
என்னைப்
புதைக்க
இருளிலே
தூக்கிச் செல்லுங்கள்.
என் நிழலுக்குத்
தெரிய வேண்டாம்
இனி
ஒருபோதும் பிறப்பில்லை
அதற்கென்று.........
***

7.
விறகு கட்டைகள்
அடுக்கி
துணி போர்த்து
நீயும் நானும்
கட்டிய வீட்டின்
நிழல்
மொட்டை மாடியில்
இன்னமும் இருக்கிறது -
ஒதுங்க ஆள் இல்லாமல்.
***

8.
நீயும் நானும்
தட்டுத் தடுமாறி
ஒரு குடையினுள்
ஒட்டிக் கொள்ள
தடுமாறுகையில்
பிணக்கில்லாமல்
ஒன்றாகிப் போயிருந்தது
நம் நிழல்கள்.....
***

9.
முட்டாள் நிழலே!
எனக்கே இடமில்லாத
அவள் பிடிக்கும்
குடையினுள்
நீ ஏன் நுழைய
முயற்சிக்கிறாய்?
***

10.
எழுந்து நிற்கும்
ஒவ்வொரு பொருளோடும்
ஒட்டுதல்.

ஆன்மாவோடு
அலையும்
மனிதனை மட்டுமல்ல -
ஜடத்தையும் கூட
அண்டி நிற்றல்.

எஜமானனின்
அத்தனை பராக்கிரமத்துக்கும்
கொடுப்பது,
எல்லோருக்கும் போல
ஒரு புறகோட்டு வடிவம்.

ஒரு துண்டு வெளிச்சம் -
தீக்குச்சி முனை
அண்ட வெளியின்
அணு உமிழல்
ஒரு கீற்று வெளிச்சம் -
ஒரு துண்டு வெளிச்சம்
வழி மறிக்கும்
ஒரு வடிவம் போதும் -
நிழலாக.

Thursday, September 01, 2005

அன்பானவளுக்காக

1.
எதிரெதிரே அமர்ந்து
ஒருவர் கண்ணுக்குள்
மற்றவர்
உற்று நோக்குவதல்ல........

அருகருகே அமர்ந்து
தொலைதூரத்திலுள்ள
இலக்கை
இணைந்து நோக்குவதே

காதல்........


2.
என்
மிகச்சிறந்த
கவிதைகளை
நான் என்றுமே
வெளியிடப் போவதில்லை...

அவை
உனக்காக எழுதப்பட்ட
காதல் கடிதங்கள்....


3.
பல ஆண்டுகளாக
எனக்காக
கவிதையே எழுதவில்லையே
என்று அங்கலாய்க்கிறாய் நீ...

இத்தனை நாட்களும்
உன்னோடு
நான் பேசிய பேச்சுக்களையெல்லாம்
என்னவாக நினைத்தாய்?


4.
உனக்கு
கொலுசு அணிந்து
அழகு பார்க்க
மனம் துடிக்கிறது.

பின்னர்
நீ பேசுவதில்
கவனம் கொள்ள
இயலாதென்பதால்
வாங்கிய கொலுசுகள்
இன்றும் சிணுங்குகின்றன
என் மனதினுள்...

5.

சொற்களில்
புதைந்த காதலை
தேடச் சொல்லி
கவிதை தருவேன்......

நீ
காதலைக் காட்டி
சொற்களை
தேடச் சொல்வாய்......

வழக்கம்போல
இன்றும்
எனக்கு
தோல்வி தான்.....

6.
உன்
காதலுக்கான
காத்திருப்பிற்கு
காலக்கெடுவுகள்
எல்லைகள்
விதிக்க முடியாது...

மரணம் கூட
உன் காதல்முன்
வெறும் அரைப்புள்ளி தான்...

7.
வியப்பாக இருக்கிறது
முக்கடல் கூடும்
சங்கமம்
எத்தனை சிறியதென!!!

நீயும் நானும்
இணைந்து நின்று
கடல் பார்த்தபொழுது

8.
எத்தனை எத்தனை
பெணகளை நேசித்திருக்கிறேன் -
நீ அருகிலிருந்து
என் தலையில்
கொட்ட கொட்ட...

ஸ்டெஃபி கிராபிலிருந்து
சானியா மிர்சா வரை...

அருந்ததி ராய் தொடங்கி
சில்வியா பிளாத் வரை...

ரேகா முதல்
சிம்ரனின் இடை வரை...

அருகே இருந்த வரைக்கும்
அனைவரையும்
காதலிக்க அனுமதித்தாய்...

விலகி நிற்கையிலே
யாரையும் காணவியலாது
கண் மறைக்கிறது
உன் வடிவின் பிரம்மாண்டம்...

காதலியே
நீ எப்போதும்
என்னருகிலேயே இருந்து விடேன் -
உலகின் அழகுப் பெண்களெல்லாம்
பாவமில்லையா?
9.
உனக்கான
என் காத்திருத்தலில்
காலம் வீணாகியது...

எனக்கான
உன் காத்திருத்தலிலும்
காலம் வீணாகியது...

இன்று
காலம் காத்திருக்கிறது -
நமக்கான காதலை
கையில் வைத்துக் கொண்டு ....

10.
என்றோ எழுதியதை
எடுத்துப் படிக்கும்
இந்தக் கணத்தில் -
இந்த சிறுபிள்ளைத்தனத்தை தாண்டி
எத்தனை தூரம்
வந்து விட்டோமென்றெண்ணி
வியர்க்கையில்

மீண்டும்
அந்த சிறுபிள்ளைகளின்
காலத்திற்குள் பயணப்பட
புகைப்படத் தொகுப்புக்குள்ளே
முகம் புதைத்து கிட ---

அன்பானவளே
தலையில் நரைத்திருக்கும்
அந்த ஒற்றை முடியைப்
பிடுங்கி எறிந்த பின்.

Sunday, August 28, 2005

தனிமை

ஒராயிரம் மனிதர்கள் மத்தியிலும்
என்னைத் தனித்தவனாக
வேறாருடனும் ஒட்டச் செய்யாமல்
தான் மட்டும் ஒட்டியிருக்கும் உறவு.
ஆளரவமற்ற பெருஞ்சாலைப் பயணத்தில்
ஆயிரமாயிரம் மனிதர்களை
சுற்றிலும் நிற்கவைத்துப் போகும்
புன்னகையுடன்.
எந்தப் பேரங்களுக்குமிடமில்லாது
தன் போக்குக்கு வந்து போகுமதை
இப்பொழுதெல்லாம்
கேள்வி கேட்பதை நிறுத்திவிட்டேன்.
அருகில் அது வீற்றிருப்பதைக் காணதவர்கள்
சட்டென்று விரைந்து விலகி
தூரப்போய்த் திரும்பி கலவரப்படும் பொழுது
வீற்றிருக்குமோ அருகே இந்தத் தனிமை?

Friday, August 26, 2005

அடிமையாய்

விலக்கி வைத்த
கனியை உண்ட பாவம்
எல்லைகளற்று
விரிந்து கிடக்கின்றது

கனியைக் காட்டித் தந்த
சர்ப்பமோ
கால்கள் போனாலும்
ஊர்ந்து பிழைக்கும் வலியை
கழட்டிப் போட
கற்றுக் கொண்டு விட்டது

விழுங்குமுன்னே
மாட்டிக் கொண்ட ஆதாம்
தண்ணீர் குடிக்கும் பொழுதெல்லாம்
தொண்டையில்
ஏறி இறங்கிக் கொண்டிருக்கும்
ஒரு ஆப்பிளோடு
தப்பிப் பிழைத்துக் கொண்டார்

விலக்கப்பட்ட கனியும் கூட
விமோசனம் பெற்றுவிட்டது
தினம் தினம்
உண்ணச் சொல்லும்
மருத்துவனின் தயவோடு...

விழுங்கித் தொலைத்த
ஏவாள் மட்டும்,
வயிற்றினுள் திணிக்கப்பட்ட
கர்ப்பப் பையிடம்
இன்றளவும் அடிமையாய்...

Sunday, July 24, 2005

வார்த்தைகள்

வார்த்தைகள்
கை தேர்ந்த
முகமூடியாளர்கள்.

ஒரே சமயத்தில்
ஒன்றாக, பலவாக
பிறப்பெடுக்கும்.

நுகர்வோர் தரமறிந்து
சேவகம் செய்யும்
கை கட்டி.

தடுக்கினால்
குழியும் பறித்து விடும்
பலர் முன்னிலையில்.

இந்த வார்த்தைகளிடம்
கொஞ்சம் எச்சரிக்கையோடு இருங்கள்.
தனியே ஒன்று;
கூடினால் இன்னொன்று -
வேடமிடுவதில்
இவைகளும் மனிதர்ககள் தான்.......

Friday, July 22, 2005

ஞானம்

எனக்கு
எல்லா முகங்களும்
தெரியும்.

எனக்கு
எல்லா பெயர்களும்
தெரியும்.

ஆனாலும்
எல்லோரையும்
'நண்பனே' என்றுதான்
விளிக்கிறேன்.

மரியாதையின்
பொருட்டு மட்டுமே
அல்ல.

எந்தப் பெயருக்கு
எந்த முகம் என்ற
ஞானம்
இல்லாததினாலும் தான்.....

Saturday, July 09, 2005

கால்கள்

சாலையோரம்
கழிவோடு கழிவாக
அமர்ந்திருக்கிறான் -
அங்கு வந்து செல்லும்
பல கால்களையும்
பார்த்துக் கொண்டே.....

வளர்ச்சியை முடித்ததும்,
இன்னும் வளருகின்றதும்,
வளராமல் சூம்பிப் போனதும்
எனப் பலப்பல
கால்கள்
அவன் கவனம் கருகின்றன.....

சாதியைத் தேடாத
பார்வையால்
கால்களைப்
பார்த்துக் கொண்டிருக்கிறான்.

சில கால்களின்
வசீகர அழகு
அவன் உத்தேசத்தை
மறக்கடிக்கும் -
பசியை மறக்க வைக்கும்
புகை வலிப்பைப் போன்று...

எல்லாக் கால்களையும்
கவனிப்பது
அவன் உத்தேசமில்லை -

நீர் வற்றிய குளத்து
கொக்கைப் போல
அவன் கவனமெல்லாம்
அணி செய்யப்பட்ட
கால்களைத்
தேடிக் கொண்டிருக்கும்....

இன்றைய
இரவுப் பொழுதிற்கு
இரை கிடைக்குமா -
இந்தக் கால்களில்
ஒன்றிலிருந்து?

அரக்கப் பசியுடன்
கால்களை
கவனமாகப் பார்த்துக் கொண்டிருந்தான் -
பக்கத்தில்
வேலையற்றுக் கிடந்தன
ஊசியும், நூலும்.....

Friday, July 08, 2005

காதலியாகிவிடு மனைவியே.......

எனக்குப் பிடிக்குமென்று
கசங்காத
பருத்திப் புடவைகளையே
எப்பொழுதும் கட்டி வருவாய் -
காதலித்த காலத்தில்.

இன்றுமெனக்கு
பருத்திப் புடவைகளையே
பிடிக்கிறது -
உனக்குத் தான்
வியர்வை படிந்த நைட்டியே
உலகமாகி விட்டது
எப்பொழுதும்.

மனைவியாக
ஏவல் செய்கிறாய் -
தேநீரும், செய்தித்தாளும் தலைமாட்டில்,
இட்டிலியும், சட்டினியும் மேசை மீது.
காதலியாக செய்த
கடமைகள் மட்டும்
குளிர்சாதனப் பெட்டியின் ஆழத்திலே.

நீ
காலையில் உடுத்திப் போகும் ஆடை
மாலையில் வந்து பார்க்கும் முன்னே
அழகாக மடித்து
அலமாரி உள்ளே போய்விடும்
நினைவுப் பெட்டகங்களில் தொங்கும்
நம் கல்லூரிக் காதல் நாட்களைப் போல...

காதலியாக இருந்த பொழுது -
ஒருநாள் மறந்தாலும்
சினந்து காதைத் திருகுவாய்
'இன்று ஏன் என்னை நேசிப்பதாக'
சொல்லவில்லையென்று.

இன்று வருடத்திற்கு
ஒருமுறையேனும் சொல்லப் போகையில்
நெற்றிக்கண் திறக்காத குறையாய்
கடிந்து பேசுகிறாய்
'பொறுப்பில்லாத மனுஷ’னென்று.

மனைவியாக
நீ
இருந்தது போதும் -
பருத்திப் புடவை கட்டிய
காதலியாக இன்று மட்டும் வா.

உன் காதோரத்தில்
'நான் உன்னை நேசிக்கிறேன்'
என்பதாகக் கிசுகிசுக்க வேண்டும் -
உன் பிறந்த நாளான
இன்று மட்டுமாவாது.....

Wednesday, June 29, 2005

பசுவதை

கட்டாக்காலி மாடு
நடுவீதியில் -
இரைமீட்டிக் கழிக்கும்.
பிளாட்பாரத்து வாசி
வாழ்க்கையைப் போல.

மடிவற்றிய மாடுகள்
நடுத் தெருவில் சோரமுற்று
சுமந்து கொண்டு வந்தால்
வீட்டுக்குள் அன்பாக சேர்ப்பு.

மடியில் கனமுள்ள மாடுகள்
நன்றாகக் கவனிக்கப் படும் -
சத்து ஊசிகள் குத்தப் பட்டு.
இல்லையென்றால் -
அனாதை ஜீவனம்.

சுவரொட்டி உரித்து...
பந்தக்கால் வாழை திருடி...
எச்சில் தொட்டியில் பிச்சையெடுத்து...
ஏதோ ஓர் வகையில்
வாழ்க்கை ஜீவனம்...

இங்கு....
பசுவதையென்பது
கழுத்தை அறுப்பது
மட்டும் தான்.

Saturday, June 25, 2005

நேர்துருவ காதல்.....

இல்லாத உறவை
நமக்குள் நட்டு
காதலுக்கும்
நட்புக்குமான
எல்லைகளை
ஆக்ரமித்தான்
மிகை கண்டிப்புகளால்

பூதாகரமாய்
பூத்து சொறியும்
மலர்களின் கீழே
நட்பு கிடக்கிறது -
காதலின் மணத்துடன்.

பகிர்வதற்கியலா
நேர் துருவமாய்
பிறந்து தொலைத்தோம் -
வெந்து வெந்து
மடிந்து கொண்டிருக்கும்
ஊனை
உண்டு கொண்டிருக்கிறான்
அவன்....

Tuesday, June 14, 2005

இறந்த காலத்திற்கு வயதில்லை....

சுனாமி பொங்கிய கடலின் கரையாய் மனதினுள்; சிதைந்த எண்ணங்கள் எழுந்தது அவனுள். வருடங்கள் கடந்த பின்பும், அவளைப் பார்க்கும் ஆசையில் புறப்பட்ட இந்த பயணம் குடைந்து கொண்டே இருந்தது.

பையில் முகவரி எழுதிய தாள் கனத்தது.

“எவிடயானு சாரே?”

தன்னை யாரும் கவனித்தார்களா என்ற முனைப்பில் அவன் இயங்கிக் கொண்டிருக்க மீண்டும் ஒருமுறை கேட்டு கவனம் கவர்ந்தான் வாகன ஓட்டி.

பதில் சொல்வதை விட எளிதான வழியாக முகவரி தாளை அவனிடம் கொடுத்து விட்டு இன்னும் சரிவாக தன்னை இருக்கையில் பதித்துக் கொண்டான். உடலைத் தளர்த்தி சாய்ந்து கொண்ட தருணத்தில், மனம் கிளர்ந்தெழுந்து தன் போக்கில் பிரயாணப்படத் தலைப்பட்டது.


‘நீயும் நானும் பயணித்த சாலைகள்
பயனற்றுப் போக
பக்கத்திலே புதிய சாலைகள்
கன்யாகுமரியையும், காஷ்மீரையும்
இணைப்பதற்கு...
நீ பூப்பறித்த தோட்டங்கள்
இன்று,
வாகனங்களுக்கு எரிபொருள்
ஊற்றும் நிலையமாக
புன்முறுவலுடன் நிற்கிறது.. ..
நீ சிலாகித்து பரவசப்பட்ட
கர்த்தரின் சிலையோ
மறைந்து விட்டது -
பலமாடி வணிக வளாகத்தின்
பின்னே. . . .
நீ குதூகலித்துப் பார்த்த
தாமிரபரணி ஆற்றுப் பாலத்தின் வழியே
பேருந்துகள் பயணிப்பதில்லை
இப்பொழுதெல்லாம்...
அவை மாற்றுப் பாதையில்
வழுக்கிக்கொண்டு
விலகிப் போகின்றன. .
நீ கவிதை எழுதிய
காய்ந்துபோன மரம்
வெட்டப்பட்டு விட்டது. .. .. ..’

“சாரே, ஸ்தலம் வந்நூ”

ஒரு கவிதை மனதினுள் புரண்டெழுவதற்குள் அவள் வீடு வந்துவிட்டதா?

புறப்பட்ட வேகம் இப்பொழுது தளர்ந்து, தான் செய்வது சரியா என்ற மறுவிசாரணையில் மனம் அல்லல்பட்டுக் கொண்டிருந்தது. கொஞ்சம் ஆசுவாசப்படுத்தி சமாதானம் செய்து கொள்ள அவகாசம் தேவைப்பட்டதாக சொல்லிக் கொண்டே, வெண்சுருட்டைத் தேடினான்.

“சாரே, வேறெந்து வேண்ட?”

வெண்சுருட்டைப் பற்ற வைக்க நெருப்பு கொடுத்துக் கொண்டே, பெட்டிக்கடைக்காரன் பேச்சுக் கொடுத்தான். மீண்டும் முகவரித் தாள் சட்டைப்பை விட்டு விடுதலையடைந்தது தற்காலிகமாக.
‘பேசாமல் செல்வியையும் கூட்டிட்டு வந்திருக்கலாம்...’ முகவரி விசாரிப்புகளைத் தவிர்த்திருக்கலாம் - மனைவியை அழைத்து வந்திருந்தால். இத்தனைக்கும் அவர்கள் நெருங்கிய தோழிகள். அதுவே கூட காரணமாக இருக்குமோ, அவளைத் தவிர்த்தது?

“இங்க பாருங்க, எங்காயாச்சும் போகணும்னா, சொல்லுங்க, மாமா பையனைக் கூட்டிக்கிட்டுப் போச்சொல்றன்”

“எனக்கெங்கயும் போவேண்டியதில்லை. ஆளை கொஞ்சம் தனியா வி;டறீயா?” காரணமற்ற எரிச்சல். எதனால்?

கேள்விகளுக்கு எப்பொழுதும் விடைதேடுவது வழக்கமல்ல என்பதால் கோபங்களைச் சுமந்து திரிவதில்லை. அவ்வப்பொழுது ஒரு கத்தலோடு கரைந்து போய்விடும். முதுகிற்க்குப் பின்னால் குசுகுசுவென இயங்கிக் கொண்டிருப்பார்கள் மனைவியும் பிள்ளைகளும். சட்டென்று திரும்பினால் நாக்கை கன்னத்தினுள் திணித்து இளக்காரப் புன்னகையை மறைப்பார்கள். அது தான் எல்லை. தாண்டக்கூடாது.

மனைவியையும் அழைத்து வந்திருக்கலாம். கொஞ்சம் இளக்காரப் பேர்வழிதான் என்றாலும், நேராக இந்நேரம் அவளுடைய வீட்டிற்கே கூட்டிட்டுப் போயிருப்பாள். ஓருவேளை அவளுடைய கணவன் இருந்திருந்தால் கூட தவறாகப் பட்டிருக்காது. தவறாக நினைக்கக் கூடுமோ? இத்தனை காலத்திற்குப் பின்னும் மனம் புகைமூட்டம் நீங்கி ஒளி பெற்றிருக்காதா?

இருக்காது.

இத்தனை வருடங்களுக்குப் பின்னும், அவள் எப்படி இருப்பாள் என்று பார்க்கும் ஆவல் தன்னிடத்திலே தோன்றும் பொழுது, அவன் மட்டும் தன் சந்தேகங்களை மாற்றிக் கொண்டிருக்க முடியுமா?

‘உன்னை எங்களுக்கு நன்றாகத் தெரியும். ஆனாலும் நீ என் மகளைத் தொடர்பு கொள்ளாதே - எந்த வகையிலும்...’

அவளின் அம்மாவின் கடிதம்.... கடிதம் பிரிக்கப்படும் வரை ஒரு படபடப்பு இருந்தது. ஆவல் இருந்தது. படித்த பின் இறுக்கம். என்ன நடக்கிறது? அவள் அம்மா கடிதம் எழுதுகிற அளவிற்கு என்னாயிற்று? நகர மறுத்த சிந்தனைகளைக் கட்டி இழுத்து வந்தவனிடம் “என்னடா திகிலடிச்சு நிக்கற?” என்ற மனைவிக்கு அக்கடிதத்தைப் பதிலாகக் கொடுத்தேன்.

“அடடா, நமக்கு உதவ வந்தவளுக்கு இப்படி ஒரு நிலையா?” ஒரு பெருமூச்சோடு முடித்துக் கொண்டாள். திருப்தியோ?

அத்துடன் அந்த உறவிற்கு ஒரு இடைவெளி விடப்பட்டது. கடைசியாக ஒருமுறைப் பார்த்து சொல்லிக் கொண்டுகூட பிரிய முடியவில்லை. திருமண நாளில் விடைபெற்றதே கடைசி சந்திப்பாகிவிட்டது. அப்பொழுது பார்த்த அவள் உருவம் மனதில் நிலைத்து உறைந்து போனது.
பெட்டிக் கடைக்காரன் முனைப்புடன் சொல்லிய வழி காதில், மனதில் உள்வாங்கப் பட்டதா என்ற பிரக்கியம் இல்லாமலே, அந்த இடம் விட்டு நகர்ந்தான். எங்கும் அதிகம் நில்லாதே என்ற மனப்பிராண்டல். இப்பொழுது அவள் வீட்டிற்குப் போகவேண்டும் என்ற ஆவல் பெரிதும் வடிந்து போயிருந்தது.

மெதுவாக நடக்க ஆரம்பித்தான். இன்னும் கொஞ்சம் கால அவகாசம் எடுத்துக் கொள்ளலாம். தப்பில்லை. அவசரமுமில்லை. புகை வலிப்பு தெம்பைக் கூட்ட பழைய நினைவுகள் திமிறிக் கொண்டு நிலத்தகடுகளாய் அசைந்து பொருந்தின.

இப்பொழுதும் அவள் கவிதை எழுதுவாளா?

‘எத்தனை கூட்டத்தின் நடுவேயும்என் மீது ஒரு கண் வைத்திருப்பாய் -என் மௌனங்களோடுநான் பேசாமல் அமர்ந்திருப்பதைக் கண்டுபுன்னகை ப+ப்பாய் -நான் நானாக இருக்கிறேன் என்று..’
கடைசியாகப் படித்தது. அவள் எழுதியது. இப்பொழுது அவளுக்கு இந்த கவிதை எழுதும் சுதந்திரம் இருக்குமா?

அவள் வீடு எதிரே வந்து, வெண்சுருட்டிற்கு முற்றுப்புள்ளி வைத்தது. தயங்கிய சில விநாடிகளி;ல் இதயம் ஒரு மராத்தான் ஓட்டமே ஓடி முடித்திருக்கும்.

“யார் வேண்டும்?”

தட்டுதலுக்காகவே காத்திருந்தது போல கதவு அவள் குரலில் பேசிக் கொண்டே திறந்தது.
நான் அவளைப் பார்த்த கடைசி தினத்தினின்றும் கூடுதலாக ஒரு தினம் கூட கழிந்திராது போன்று அதே பழைய அவளாக என் முன் நின்றாள்.

இது அறிவு பூர்வமாக சாத்தியமில்லையே என்ற மனதர்க்கத்தை வெட்டிக் கொண்டு, நிதானிக்க அவகாசம் கொடாது கடந்த காலத்தினுள் தூக்கி எறியும் குரலில் கேட்டாள்

“யார் வேண்டும் உங்களுக்கு?”

“அம்மா? ”

“அம்மா இல்லை. அப்பாவை கூப்பிடுகிறேன். ஓரு நிமிடம்...”

அவள் திரும்பி உள்ளே சென்றாள். ஓரு நிமிடத்திற்கும் குறைவான கணத்தில் மனம் முடிவெடுத்தது.

திரும்பி நடந்தேன் தயக்கமின்றி. தங்குமிடம் திரும்பியதும், மனைவியின் - கோபமா, ஆதங்கமா என்று இனம் பிரிக்க அவசியமில்லாத - கண்டனக் குரல் எழும்பியது

“எங்க போயிட்ட, சொல்லாம, கொள்ளாம? கொஞ்சம் கூட பொறுப்பில்லையே, வந்த இடத்தில கூட.. இங்க உனக்காக எத்தனை மணி நேரம் அவளை காக்க வைத்திருந்தேன் தெரியுமா?”

அதிக நேரம் அவஸ்தையாக்;காமல் மகனிடமிருந்து விடை கிடைத்தது “கமலா ஆண்ட்டி வந்திருந்தாங்கப்பா...”

நான் ஆடிப் போவேன் என்று எதிர்பார்த்த மனைவி அசந்து போனாள் என் அமைதியைக் கண்டு.

“ மகனே, அவள் அங்கிளைத் தான் பார்த்திருப்பாள், நான் இருந்திருந்தால்;. இப்ப அவள் என்னையேப் பார்த்துப் போயிருப்பர்ள் - நான் அவளைப் பார்த்து வந்த மாதிரி...”

அவனுக்குப் புரிந்திருக்க வாய்ப்பில்லை.

அப்படியே இருக்கட்டும்...

Saturday, June 11, 2005

குழு இயக்கத்தில் சுயம் இழந்தவனே....

நான் கர்வப்படவில்லையென்றால்
நான் நாமாக இருப்பதில்
நான் என்ன பயன் பெறும்.......?

நான் நாமுடன் இணைகையில்
நான் நமக்கு அடக்கம்......!
நான் நாமில் அடங்கியதால்
நான் இல்லையென்று
நாம் கூறினால்,
நாமினால்
நான் என்ன பயன் பெறும்?

நான் நானை மறந்து
நான் நீயை
நான் ஆக நினைப்பதுவா
நான் நாமில் அடங்கிய பயன்?

நான் நீயாக இருக்கும் நாம்
நான் நானை இழந்து
நான் நாமாகும்.

நான் நானாக இல்லையென்றால்
நான் நாமாகவும் இல்லை.
நான் நானாக இருக்கையில்
நான் தான் நாம்.

மீண்டும் -

நான் கர்வப்படவில்லையென்றால்
நான் நாமாக இருப்பதில்
நான் என்ன பயன் பெறும்.......?

கன்னிமேரியும், கவிக்கோவும் - ஒரு பார்வை...

கன்னி மேரியும், கவிக்கோவும் - ஒரு பார்வை...

சமீபத்தில் இணையத்தில் உலாவிக் கொண்டிருந்த பொழுது, மரத்தடி யாஹு மடலாடற் குழுவில் நடக்கும் சில விவாதங்களை வாசிக்க நேர்ந்தது. அதில் கவிக்கோ அவர்கள் எழுதிய கஜல் கவிதைகள் என்ற தொகுதியிலிருந்து ஒரு கவிதையை எடுத்து சடையன் சாபு மரத்தடி நண்பர்களின் இலக்கிய ரசனைக்கு வைக்க, விளைவு எதிர்பார்த்ததற்கு நேரிடையானது. அந்தக் கவிதையை சொற்குவை என்றும், ஆபாசமானது என்றும், ரசனையற்றது என்றும் விமர்சித்தனர் மரத்தடி நண்பர்களுள் சிலர். கவிதையைப் புரிந்து கொள்ள மறுத்து அல்லது இயலாது - குறுகிய உள்நோக்கோடும், நேர்மையற்ற முறையிலும் விவரித்து எழுதிய நண்பர்களுக்கு விளக்கம் அளிப்பது தமிழ்க் கவிதைகளின் ஆர்வலன் என்ற முறையில் எனது மற்றும் கவிதை நேச நெஞ்சங்களின் கடமையும் ஆகிறது. மரத்தடி நண்பர்களுக்காக எழுதிய விரிவான விளக்கம், மரத்தடியிலே முடங்கிப் போய்விடக் கூடாது என்பதனால், துவக்கு வாசகர்களுக்காக கீழே தருகிறோம்...

(துவக்கு இதழ் ஆசிரியரின் அனுமதியோடு.....)

ஐயா! ஆணி, முள்
ஏதாவது பிச்சை போடுங்கள்
கர்ப்பமாயிருக்கிறேன்
என்ற குரல் கேட்டது
வெளியே வந்து பார்த்தேன்
கன்னி மேரி !
*******************

இது தான் அந்தக் கவிதை....

இனி இந்தக் கவிதை என்ன சொல்ல வருகிறது...

இயேசுவை கட்டி வைத்து அடிக்கிறார்கள். தடுக்க முடியவில்லை. கண்ணீர் பெருகுகிறது. கை வலித்து காவலர்களே ஓய்ந்து, சோர்ந்து போகும் நேரம். ரோம் கவர்னரின் மனைவி இரக்கத்துடன் ஒரு துண்டை கொடுக்க அதனைக் கொண்டு சிந்திக்கிடக்கும் ரத்தம் முழுவதையும் துடைத்து எடுக்கிறார். அந்த கணத்தில், அந்தத் தாயின் மனம், பிரார்த்தனையில் ஈடுபடாமலா போயிருக்கும்? நிச்சயமாக ஈடுபட்டிருக்கும். அது போலவே, சிலுவையில் அறையப்பட்டு, தூக்கி நிறுத்தப்பட்ட போதும், சோகமே வடிவமாக, காலடியில் நிற்கின்றார். எத்தனை எத்தனை பிரார்த்தனைகள் மனதில் ஓடியிருக்கும்?

இது பழையது.

அந்தக் கால மனிதர்கள் எல்லோருமே காட்டுமிராண்டிகள் - நாகரீகமற்றவர்கள். அவர்களிடையே, இயேசு போன்ற ஒரு இறைத்தூதர் மாட்டிக் கொண்டது அவஸ்தை தான். ஆனால், இப்பொழுது இயேசு பிறந்திருந்தால், நாமெல்லாம் எப்படி எப்படி நல்லத் தனமாக நடந்து கொண்டிருப்போம்? எத்தனை இனிமையாக நடந்து கொண்டிருப்போம்?

பார்க்கலாமா ?

ஓர் ஓவியர் இயேசு கிறிஸ்துவை ஓவியமாகத் தீட்டினார் - ஆமாம் - நவீன யுகத்து ‘ஹிப்பி’ மாதிரி தலை முடியை பரப்பிக் கொண்டு, சிகரெட் புகைப்பது போன்று, ஒரு குறுநகையுடன் சித்தரிந்திருந்தார். கடும் எதிர்ப்பு கிளம்பிய பொழுது, அது எனது கருத்து சுதந்திரம் - இதில் தலையிட உங்களுக்கு உரிமை கொடுத்தது யார்? என்று பதில் கேள்வி எழுப்பினார்.
கன்னி மேரி இதைக் கண்டிருந்தால், அவர் நினைத்திருப்பார் முட்கிரீடம் சூட்டிய யூதாக்கள் ஆயிரம் மடங்கு மேல் என்று.

விஞ்ஞானிகள் என்ன சும்மா இருப்பார்களா? Reconstruction of Christ என்று பெயரிட்டு, ஒரு தலையை வடிவமைத்து, எல்லோரும் பார்த்துக் கொண்டிருக்கும் கருணை ததும்பும் கண்களைத் தூக்கி தூரப்போட்டு விட்டு, அலை அலையான நீண்ட கேசத்தைத் தூக்கி எறிந்து விட்டு, மந்தமான, பிரகாசமில்லாத ஒரு மனித முகத்தைக் காட்டி, இது தான் இயேசு என்றார்கள். எல்லோர் மனதிலும் அன்பு ததும்பும் கண்களைக் கொண்டு நீங்கா இடம் பெற்ற அந்த நம்பிக்கைச் சித்திரத்தை சிதைக்கும் வன்முறையில் இறங்கியது - விஞ்ஞானம். உண்மையைத் தெளிவிக்கிறோம் (!!??) என்ற பெயரில் நம்பிக்கைகளைச் சிதைப்பது எந்த விதத்திலும் நன்மை பயக்காது. ஆனாலும், அதில் ஒரு உற்சாகம் - ஆனந்தம். குரூர திருப்தி.

கன்னி மேரி என்ன நினைத்திருப்பார்? சிலுவையில் அடிபட்டு சிதைந்தது உடல் மட்டும் தானே என்று...

Dan Brown எழுதிய ‘The Da Vinci Code’ என்ற புனை நாவலின் கதைக்கருவே - இயேசு மரிக்கவில்லை. தப்பிப் பிழைத்தார். மணந்து கொண்டார். சந்ததிகள் உண்டாக்கினார். இன்றளவும் அந்த சந்ததிகள் வாழ்கின்றனர் என்ற ரீதியில் கதை போகும். திகைத்துப் போயின தேவாலயங்கள். நீண்ட மௌனத்திற்குப் பிறகு அறிக்கை வெளியிட்டனர் - புனைந்து எழுதப்பட்ட அந்த புத்தகத்தை வாசிக்க வேண்டாம் என்று. எழுத்து சுதந்திரம் எந்த மட்டுக்கும் நீளலாம் என்று தங்களுக்கென எந்த ஒரு வரைமுறையின்றி இயங்கிக் கொண்டிருக்கும் கதை புனைபவர்கள் ஒரு புறமென்றால், அதை மறுத்து, எதிர்ப்புத் தெரிவிக்க வேண்டிய தேவாலயங்கள் நீண்ட மௌனம் காத்தது பலரது மனதை புண்படுத்தியிருக்கிறதென்றால், பெற்றெடுத்த ஒரு அன்னையின் மனம் எத்தனை தூரம் வேதனைப்பட்டிருக்கும்?

இது இப்படி என்றால், கிறிஸ்துவை அடித்து துவைத்து இம்சப்படுத்துவதை தரமான ஒளி-ஒலி பதிவோடு காட்டி, மக்களின் மனதை உருகச் செய்து, காசு பார்த்தது அதை விட கொடுமையல்லவா? இயேசுவின் வாழ்க்கை சித்திரவதை செய்யப்படுவது மட்டுமா? தன்னுடைய சொந்த வியாபாரத்திற்காக எல்லா மக்களும் மதிக்கும் ஒரு இறை தூதரையா அப்படிக் காட்ட வேண்டும்?

பலபேரால், அடித்து அவமானப்படுத்தப்படும் காட்சியை கண்டு மனம் களிக்கவா செய்யும் - ஒரு தாய்க்கு.? துடிக்க அல்லவா செய்யும்? ஆணி அடித்த வேதனையை விட இது கொடூரம் அல்லவா?
இவையெல்லாவற்றிற்கும் மகுடம் வைத்தாற் போன்று ஒரு ஆராய்ச்சியின் மூலம் புத்தகம் ஒன்று வந்திருக்கிறது - Is Jesus Lived in India என்று. கதையல்ல - நாவலல்ல - ஆராய்ச்சிப் புத்தகம். இயேசு இறக்கவில்லை. கொலைகார பாதகர்களின் கண்ணில் மண்ணைத்தூவி, தன் சீடர்களின் உதவியோடு, இந்தியாவின் காஷ்மீரத்திற்கு ஓடிப்போனார் என்றும், அங்கேயே மரித்துப் போனார் என்றும் அங்கு அவருக்கு கல்லறை இருக்கிறது என்றும் எழுதியுள்ளார். எல்லாம் சரித்திரத்தில் நிகழ்ந்த சில நிகழ்வுகளை ஆதாரமாகக் கொண்டு, ஊகம் செய்யப்பட்டவை.

என்ன அவசியம் வந்து விட்டது - ஆராய்ச்சியை உறுதியாக செய்து, இறுதியான தீர்க்கமான முடிவுக்கு வரவேண்டும் என்ற நிலைக்கு முன்பே அதைப் புத்தகமாகக் கொண்டு வந்து காசு பார்த்து விட வேண்டும் என்று?

இதையெல்லாம் பார்த்த மேரி அன்னை முடிவே கட்டி விட்டார் - அன்று மரண தண்டனை விதித்த யூதர்கள் எத்தனையோ மேல் என்று. இந்த நவீன யுகத்தைக் கண்டு கோபமுற்று இந்த உலகின் அநாகரிகத்தைக் கண்டிக்க முயன்று, கவிதை எழுதியவர் - ஆபாசமாக எழுதுகிறார் என்று சொன்னால், அது அதிசயமாகத் தான் இருக்கிறது. கவிதையின் சின்ன சின்ன நெளிவுகளைக் கூட காண மறுக்கச் செய்தது எது என்று தான் !? கவிக்கோவின் உண்மை பெயரும் அது சார்ந்த மதமுமா? அப்படி இருக்காது, இருக்கக் கூடாது என்றே பிரார்த்திக்கிறேன். அது உண்மையென்றால், அதனால் சிறுமை கவிக்கோவிற்கு அல்ல.

இ¦தையே வாலி எழுதியிருந்தால் - என்ற கேள்வி எழுப்பப்பட்டுள்ளது - வாலி என்ன, யார் எழுதியிருந்தாலும், இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் இறந்து போன, உலகின் மூன்றில் இரண்டு பங்கு மக்களால் மதிக்கபெறும் ஒரு நபரை, நாகரீக உலகின் அனுகூலங்களைக் கொண்டு, அநாகரீகமாக விமர்சித்து அதன் மூலம் சம்பாதனை செய்யும் அவலத்தை சாடுவதற்கு சாதி, மதம் இதெல்லாம் தேவையில்லை அன்பரே...

ஆம், அன்று முட்களாலும் ஆணியாலும் இம்சித்து சிலுவையில் அடித்தார்கள். இன்று நாம் நாகரீகமாக கருத்துச் சுதந்திரம், எழுத்துச் சுதந்திரம், வியாபார உரிமை என்றெல்லாம் கூறி, அவர் நினைவுகளை கண்டம் துண்டமாக வெட்டி கூறு போட்டு விற்கிறோம்.

கன்னி மேரி இன்று நம்மிடையே பிச்சை கேட்டு நிற்கிறார் - தன் கருவிலிருக்கும் இயேசு மிகக் குறந்த துன்பத்துடன் சிலுவையிலே அறையப்படட்டும் - ஆணி , முள் கொடுங்கள் என்று.

நியாயந்தானே?

நட்புடன்
நண்பன்

(நன்றி - துவக்கு மின்னிதழ் - www.thuvakku.da.ru)

Friday, June 10, 2005

கடவுளைக் காட்டு......

கடவுளைக் காட்டு
என்று ஒரு போர் -
நண்பர்களுக்குள்...

நம்பிக்கையின்
எல்லையில் நிற்கிறார்
கடவுள்.

நம்பிக்கைகள்
உண்டாவது
முயற்சியால்!

முயற்சிக்க வேண்டுமே
ஓர் மனதின்
சிந்தனை -
அங்கே
கடவுளின் வாசம்....

சிந்தனை எழுவது
என் தலையில் -
மூளையின்
மெல்லிய திசுக்களில்....

திசுக்கள்
துடித்தால் தான்
சிந்தனை.

ஓர் துடிப்பை
தூண்டியவர்
கடவுள்...


துடிப்பது
உண்டானது
பிறப்பின்
நியதி.

பிறப்பிற்கு
நியதி
வைத்தவன் யார்?
அவர் தானே -
கடவுள்?

கடவுளைக் காட்டு
என்ற போரின் விவாதம்
சூடாக தொடர்ந்தது
நண்பர்களுக்குள்.


பக்கத்து பள்ளியில்
இறைவணக்கப் பிரார்த்தனை -
'என் மதம் எனக்கு....
உன் மதம் உனக்கு.......'

பயங்கள்....

பயங்கள். . . . . . .

வெளிச்சமற்ற இரவில்
சில நிழல்கள்
தொடர்கின்றன

இருக்காது என்றே
அமைதிப் படுத்தி
நடக்கிறேன்

நிழல்கள்
நடந்து நடந்து
சப்தமெழுப்புகின்றன -
திரும்பிப் பார்க்கச் சொல்லி.

நின்று
திரும்பிப் பார்த்து
நிழல்களை
கண்டிக்க ஆசைதான்.

எத்தனை
கோணத்தில் திரும்பினாலும்
நிழல்களை மட்டும்
காணமுடியவில்லை.

நிழல்களின்
சப்தம் மட்டும்
கேட்டுக் கொண்டே தான்
இருக்கின்றது -
மனதினுள்.

Thursday, June 09, 2005

வீடு

வீடு கட்டிய அனுபவத்தைப் பற்றியது...


வீடு

உணவிற்கும்
உயிர்பிழைத்தலுக்குமிடையேயான
துரத்தலும், விரைதலுமான ஓட்டமாக
தூக்கமும், நானும் நடத்தும்
ஒர் இடையறா போராட்டத்திற்கிடையே
நிகழ்கிறது
வீட்டுச் சுவர்களிடம்
விரல்கள் நடத்தும் விசாரணை....

அடிவாரத்தில் மூழ்கப்போகும்
ஒரு கல்லே
குங்குமம் சார்த்தப்பட்டு
மாலை போடப்பட்டு
பொரிகடலை, தேங்காய், வாழைப்பழம் தரப்பட்டு
தற்காலிகத் தெய்வமாகி
துவங்கி வைத்த வீடு அது...

அதுவரையிலும்
அறியப்படாத வாஸ்துவும்
விலாவரியாக விசாரணைக்குள்ளாகி
சகல சம்பத்துகளுக்குமிடமின்றி
கொஞ்சமே கொஞ்சமாக மாற்றி வைத்தும்
நீங்காத சிற்சில மனசஞ்சலங்களுக்கு
சமாதான சாந்திகள் பல செய்யப்பட்டு
வளர்த்தி நிற்கவைக்கப்பட்ட வீடு அது....

வகைவகை காய்கறி
இனிப்புகளுடன் தந்த விருந்தை
உண்டு களித்த சிலர்
'அப்படி இருந்திர்க்கணும்
இப்படி இருந்திர்க்கணு'மென்ற
விமர்சனங்களைப் புறந்தள்ளி
பின்னும்
என் நேசத்திற்குரிய வீடு அது....

உயிர் மூச்சைத் தவிர
மற்றவை அனைத்தையும்
மூடிக்கொண்ட உலகம் துயிலும்
இரவின் மௌனத்தில்
வீட்டுச் சுவற்றைக் கேட்டுக்கொண்டிருக்கிறது
என் விரல்கள் -
"கீறல்கள் ஏதும் விழுந்து
காயம்பட்டாயா" என்று...

என் அன்பில் நெக்குருகி நிற்கும்
அந்த சுவற்றிடம் சொல்லவில்லை -
ஒருமுறை இழந்து விட்டால்
மீண்டொருமுறை
அதனைப் போல மற்றொன்றை
கட்டித்தரும் தெம்பில்லாத
எனதிந்த இயலாமை தான்
இந்தப் பாசமென்று.....

நான்.......

நான் ...

எப்படி அறிமுகப்படுத்திக் கொள்வது?

கவிதைகளின் ரசிகன்
என்றே அறிமுகப்படுத்திக் கொள்கிறேன்...

ஆனால்
கவிதை மட்டுமே
எனது தளமென்று
எண்ணி விட வேண்டாம்....

விவாதத் தளங்களும்
பிடித்தமானவையே....

நட்புடன்.....

நண்பர்கள் சொல்கிறார்கள்

CSM - உலகச் செய்திகள்

GF - உலகச் செய்திகள்